Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kamalam
Kamalam
Kamalam
Ebook214 pages1 hour

Kamalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீரான குடும்ப அமைப்பையும் சீர் குலைந்த அமைப்பையும் இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் பேசுகின்றன. அதனால், முரண்பட்ட இந்த நிலைகளை எழுதும் ஆசிரியரின் திறந்த மனத்தை (Unbiased) இக்கதைகள் சுட்டிக் காண்பிக்கின்றன. 'கமலத்'தில் வரும் கமலம், 'ஜீவ அம்சத்'தில் வரும் குஞ்சம்மா ஆகியோர் கணவன் என்ற பெயருக்காக ஆணுக்கு மரியாதை தர மறுத்துத் தம் சொந்தக் கால்களில் நிற்கிறார்கள். இருவரிடமும் அவர்களின் தைரியத்துக்கும் நிலைப்பாட்டிற்கும் உறுதியாகக் கூட நிற்பது குழந்தைகள் மீது கொண்ட பாசமும் அவர்களின் எதிர்காலம்மீது கொள்ளும் அக்கறையும் தான். ரோஸ்மேரியின் நாய்க்குட்டி., 'நாக்கு', 'ஏற்பாடு' ஆகிய கதைகளில் சீரான குடும்ப அமைப்பு எவ்வாறு மனித மனமாச்சரியங்கலற்ற வாழ்க்கையை உருவாக்கித் தருகின்றது என்பதைக் காணலாம். பொதுவாக ஸிந்துஜாவின் கதைகளில் விரவிக் கிடக்கும் புத்திசாலித்தனமான சம்பாஷணைகளை, இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ஒரு வாசகர் காண முடியும்.

புத்திசாலித்தனத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580163109581
Kamalam

Read more from Cyndhujhaa

Related to Kamalam

Related ebooks

Reviews for Kamalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kamalam - Cyndhujhaa

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கமலம்

    Kamalam

    Author:

    ஸிந்துஜா

    Cyndhujhaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/cyndhujhaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஏற்பாடு

    2. கமலம்

    3. குளந்தை

    4. சிரிப்பு

    5. சுவர்க் கோழி

    6. தருணம்

    7. தாமஸ் சார்

    8. நாக்கு

    9. பரவசம்

    10. புடவை

    11. புரியவில்லை

    12. புல்லுக்கும் ஆங்கே...

    13. மாயமான் வேட்டை

    14. மூலம்

    15. ரோஸ்மேரியின் நாய்க்குட்டி

    16. ஜீவ அம்சம்

    முன்னுரை

    இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பதினாறு கட்டுரைகளில் வளைய வருபவர்கள் படைப்புத் துறையில் தலைசிறந்த கலைஞர்களாகத் தம்மை நிறுவிக் கொண்டவர்கள். பொது மனிதர்கள் கொண்டாடும் ஜனரஞ்சகத்தை உயர்த்திப் பிடிக்காதவர்களாக அவர்களது நடமாட்டம் நிகழ்ந்து வந்துள்ளது. பெரும்பாலான இக்கலைஞர்களின் வாழ்க்கை தந்த கடும் துயரங்களையும் மனக் கஷ்டங்களையும் அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு சிகரத்தை அடைந்தார்கள் என்பதை இக்கட்டுரைகள் விவரிக்கின்றன.

    சமூகமும், அரசும், மதமும் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறும் குணம் மிக இயல்பாக இக்கலைஞர்களின் படைப்புகளில் வெளிவந்த வண்ணம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மீறலின் உள்ளோட்டமும் சுதந்திரத்தின் நாடி பிடித்துப் பார்ப்பதாக இருக்கிறது. நியமிக்கப்பட்ட விதிகளைக், கோட்பாடுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவதில் காலங்காலமாக மக்களிடையே ஒருவித மந்தைத்தனம் (block thinking) பரவியிருக்கிறது. ஆகவே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் சௌந்தர்யத்தைக் காண விரும்பாது கண்ணை மூடிக் கொள்வதில் சௌகர்யம் காண்பவர்கள் மீறலை அறியாதவர்கள். மீறல் அவர்களைக் கலவரப்படுத்துகிறது. சிலசமயம் முனகலாகவும் பல சமயம் பெரும் இரைச்சலாகவும் இந்த எதிர்ப்புக் குரல்கள் எழும்புகின்றன. வால்ட் விட்மன் ஒரு இளம் கவியாகத் தன் கவிதைகளை வெளிக்கொணர்ந்தபோது விமரிசகர்களிடமிருந்து எழுந்த வலுவான கண்டனக் கணைகள் அவரதுபடைப்புத் திறமையையே ஆழப் புதைத்திருக்க வேண்டும். ஆனால் விட்மன், ‘என் ஆன்மாவுக்குச் சரியானது என்று பட்டதை எழுதியே தீருவேன்’ என்று கலங்காமல் தன் படைப்புகளில் கவனத்தைச் செலுத்தினார். அவர் தினத்து பிரபல படைப்பாளியும் விமரிசகருமான எமர்சனின் ஆதரவுக் குரல் (ஒப்பிட முடியாத விஷயங்களை ஒப்பிட முடியாத மொழியில் சொன்ன கவி) ஒன்றே அவரை வழிநடத்திச் சென்றது. சிந்திக்கும் திறன் வாய்ந்த ஒரு கலைஞனின் சுய சிந்தனைப் பலத்தின் மூலம் ஒரு மீறல் நிகழும்போது இத்தகைய கலவரக் குரல்களால் அந்த மீறலின் சக்தியையும் உண்மைத் தன்மையையும் நசுக்கிவிட முடியாது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

    இந்தக் கட்டுரைத் தொகுதியில் இடம் பெறும் படைப்பாளிகள் எழுத்து, திரைப்படம் ஆகிய ஊடகங்கள் மூலம் தத்தம் தனித்தன்மையையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியவர்கள். கடுமையான உழைப்பும், உண்மையைத் தேடி அடையும் தரிசனமும் மட்டுமே தங்கள் படைப்புகளைக் காலங்கடந்து நிற்கச் செய்யும் வல்லமை பெற்றவை என்று உணர்ந்திருந்தார்கள். அவர்களின் தேடல்களின் முன்பு சுயநலமும், பொருள் ஆதாயமும் அர்த்தம் இழந்த சப்தங்களாக இருந்தன. அவர்களின் தேடல்களில் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் நாம் காண முடிகிறது. ஹெமிங்வே அவரது ‘சன் ஆல்சோ ரைசஸ்’ என்ற நாவலிலும் ‘டெத் இன் தி ஆஃப்டர்நூன்’ என்னும் கட்டுரைத் தொகுப்பிலும் எருதுச்சண்டை (bull fighting) பற்றி விஸ்தாரமாக எழுதினார். இதற்கு அடிப்படையாக அவர் ஸ்பெயினில் பங்குப்பெற்ற பல எருதுச்சண்டைகளின் அனுபவமே உறுதுணையாக இருந்தது. கற்பனையில் உருவாக்கப்படும் எழுத்துக்களை அவர் நிராகரித்தார். ‘எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ எனும் நாவலின் கடைசிப்பக்கத்தை 39 தடவை திருத்தி எழுதிய ஹெமிங்வே ஒரு நாவலை எழுதி முடித்தவுடன் படைப்பாளியைப் பொறுத்தவரை அது இறந்து விடுகிறது! என்றார். ஞானிகளுக்கான மனப்பாங்கை இந்த வரியில் ஒருவர் உணர முடியும்.

    தன்னைச் சார்ந்த உலகைப் பற்றிய முழுப் பிரக்ஞையுடன் எழுதும் ஒருவரால்தான் காலதேச அபிமானங்களைக் கடந்து உண்மையைத் தரிசிக்கும் ஒப்பற்ற படைப்பைத் தரமுடியும் என்பது வில்லியம் ஃபாக்னரின் இறவாத படைப்புகள் அடித்துக் கூறும் உண்மை. அமெரிக்காவை விட்டு பிரான்சில் அவர் குடியேறி எழுத்துப் பணியைத் தொடர்ந்தபோது அவருடைய ஞானத்தந்தையாக விளங்கிய ஷெர்வுட் ஆண்டர்சன், ஃபாக்னரிடம் அவரது சொந்த ஊரான மிசிசிப்பியின் சுற்றுப்புறங்களையும், அங்கு வாழும் மனிதர்களையும் பற்றி எழுதுவதுதான் அவரது எழுத்தைச் செழுமையாக்கும் என்று அறிவுறுத்தினார். ஃபாக்னர் தான் சிறு வயதில் சந்தித்த உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் பற்றியும், தான் பார்த்த கேட்ட சம்பவங்களை

    வைத்தும் எழுதிய படைப்புகள் அவரை நோபல் பரிசு பெறும் நிலைக்குக்கொண்டு சென்றன.

    கறுப்பினப் பெண் எழுத்தாளரான டோனி மாரிசன் கடந்து வந்த பாதை இன்னல்கள் நிறைந்ததாக இருந்தது. படிப்பு, வேலை, வாழும் வாழ்க்கை என்று எல்லா முனைகளிலும் தாக்கப்பட்டவர்களாய் இருந்த கறுப்பின மக்களின் துயரங்களை வெளியுலகின் மனசாட்சியை அசைத்துப் பார்க்கும் எழுத்துக்களை அவர் படைத்தார். கறுப்பின மக்களை ஒடுக்கித்தள்ளிப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசுகையில் இங்கு குடியரசுத் தலைவர் என்று அழைக்கப்படும் ஒருவர், முன்னெடுத்து வைத்த காலைப் பின்னுக்குத் தள்ளுவதில் குறியாக நிற்கிறார். இது மிகவும் ஆபத்தான செயல். மட்டமான முயற்சியும்கூட. அவரைப்பற்றிச் சிந்திக்கக்கூடாது என்றுதான் என்மனம் விரும்புகிறது. ஆனால் அதையும் மீறி அவரை நினைத்தாலே எரிச்சல் மண்டுகிறது என்றார் தைரியமாக.

    பெரும்பாலும் வெளியுலகின் அழுத்தம் தன்மீது படாது தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியவர் உலகப் புகழ் பெற்ற கவி எமிலி டிக்கின்சன். விஞ்ஞானத்தின் உண்மைகளுக்கு முன்னால் மதங்கள் போதிக்கும் கண்மூடித்தனமான கற்பனைகளை நிராகரித்து எமிலி டிக்கின்சன் தனது படைப்புகளை உருவாக்கினார். வால்ட் விட்மனின் நயமற்ற (disgraced) கவிதைகளை அவர் படிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டார்! ஆனால் இன்று இலக்கிய உலகம் இவ்விருவரையும் அருகில் அமர்த்தி உச்சத்தில் வைத்துப் பார்ப்பது இயற்கையின் விநோதங்களில் ஒன்றுதான்.

    உலகக் கலைஞர்களின் பின்புலத்தையும் அவர்களின் பன்முகத் திறமைகளையும் இக்கட்டுரைத் தொகுதி தமிழ் வாசகர்களுக்கு முன் வைக்கிறது. இக்கட்டுரைகளை எழுத்தாளர்களின் மறுபக்கம் என்ற தொடராக வெளியிட்ட அம்ருதா கலை இலக்கிய மாத இதழுக்கும், நண்பர் தளவாய் சுந்தரம் அவர்களுக்கும் என் நன்றி. என் எழுத்துக்களை அச்சு வடிவில் புத்தகமாகக் கொண்டுவரும் கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் நிறுவனத்துக்கு என் நன்றிகள் பல.

    ஸிந்துஜா

    பெங்களூரு.

    1. ஏற்பாடு

    மணி என்ன? என்று அப்பா கேட்டார்.

    எட்டரை என்றேன் நான்.

    இன்னும் அரை மணி ஆகுமா?

    ஆமா. ஒம்பது, ஒம்பதேகால் ஆயிடும்ப்பா என்றவாறு நான் என் வேலையைத் தொடர்ந்தேன்.

    நானும் அப்பாவும் செவ்வக அட்டைப் பெட்டிகளில் சாக்பீஸ் அடுக்கிக் கொண்டிருந்தோம். ஒரு பெட்டியில் நூற்று நாற்பத்தி நான்கு குச்சிகளை அடுக்க வேண்டும். என் தங்கை பிரேமா மரத் தட்டுக்களில் அன்று முழுவதும் வெய்யிலில் காய்ந்திருந்த. சாக்பீஸ்களை பத்துப்பத்தாகப் பிரித்து இரண்டு கைகளிலும் குவித்துத் தேய்த்துக்கொண்டு இருந்தாள். அச்சுகளில் இருந்து எடுக்கும்போது சாக்பீஸ்களுடன் ஒட்டிக்கொண்டு வரும் கரடு முரடுகள் அவ்வாறு தேய்க்கும்போது உதிர்ந்து விடும். அதற்குப் பின் சாக்பீஸ்கள் வழவழப்புடன் மின்னும். முத்தண்ணா நாங்கள் சாக்பீஸ் அடுக்கி முடித்த பெட்டிகளில் மரத்துகள்களை பரப்பிக் கொண்டிருந்தான். பெட்டிகள் வியாபாரத்துக்காக வெளியே போகும்போது உள்ளேயிருக்கும் சாக்பீஸ்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து உடைந்து போகாமலிருக்க இம்மாதிரி மரத்துகள்களைப் பரப்பியிட வேண்டியிருந்தது. அண்ணா முடித்து அனுப்பிய பெட்டிகளை அம்மா வாங்கிக்கொண்டு, அவற்றின் பக்கங்களை அளவாகக் கத்தரித்து வைக்கப்பட்டிருந்த பேப்பர் கட்டிங்குகளினால் பசையைப் போட்டு மூடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெட்டியையும் இவ்வாறு மூடி முடித்து அவற்றின் இரு பக்கங்களிலும், கம்பனி பெயர் தாங்கிய லேபில்களையும் ஒட்டுவது அம்மாவின் வேலைதான்.

    அண்ணாவின் பிசினஸ் ஆரம்பித்து இரண்டு வருடம்தான் ஆகியிருந்தது. பாக்டரியில் ஒரு ஆளைக் கூலி வேலைக்கு அமர்த்தியிருந்தது தவிர, மற்ற எல்லா வேலைகளையும் அண்ணா ஒருவனே கவனித்துக் கொண்டான். அதேபோல வீட்டில் இருந்து செய்யவேண்டிய பேக்கிங் வேலைகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். வெளி ஆட்களை வேலைக்கு வைத்து சம்பளம் எல்லாம் கொடுக்கும் அளவு இன்னும் பிசினெஸ் வளர்ந்து விடவில்லை.

    அப்பா அவருக்கு அருகில் இருந்த கூஜாவிலிருந்து நீரை எடுத்துக் குடித்தார். ஒவ்வொரு பெட்டியை முடித்ததற்குப் பிறகு அவர் ஒரு ஐந்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக்கொள்வார். அவருக்கு டி.வி.எஸ்.ஸில் வேலை. காலையில் ஒன்பது மணிக்கு ஆபிஸ் போனால் மாலை ஆறுமணிக்கு வீட்டுக்கு வருவார். நானும், பிரேமாவும் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தோம். நான் எஸ்.எஸ்.எல்.ஸி, பிரேமா எட்டாம் வகுப்பு. பள்ளிக்கூடத்திலிருந்து வந்து கொஞ்ச நேரம் விளையாடி விட்டு பின்பு வீட்டுப்பாட வேலைகளை முடித்து ஏழு மணிக்கு அப்பாவுடன் சேர்ந்து சாக்பீஸ் வேலைகளை கவனிப்போம். அண்ணாவின் பிசினெஸ் இது. பாக்டரியை அவன்தான் ஒற்றை ஆளாய் நடத்திக்கொண்டிருந்தான். தினமும் மாலையில் முன்தினம் தயாரான சாக்பீஸ் பெட்டிகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, ஊருக்குள் போய் அவனது வாடிக்கையாளர்களிடம் சப்ளை செய்துவிட்டு வரும்போது ஏழரை மணி ஆகிவிடும். வந்ததும் எங்களுடன் சேர்ந்து கொண்டு வேலை பார்ப்பான்.

    இப்பல்லாம் வேலை முடிய ரொம்ப நாழியாறது இல்லே? என்று அம்மா கேட்டாள்.

    ஆமாம். ரவிப் பயல் கொஞ்சம் சோம்பேறியா ஆயிட்டான் என்று அப்பா என்னைப் பார்த்துச் சிரித்தார்.

    அப்பா, நீங்க ஒரு பெட்டி போடறதுக்குள்ளே நான் ரெண்டரை பெட்டி போட்டுடறேன் என்றேன் பதிலுக்கு.

    டேய், எனக்கு வயசு அம்பது. உனக்கு பதினஞ்சு. அப்படீன்னா, நான் ஒரு பெட்டி போடறதுக்குள்ளே நீ மூணரைப் பெட்டியாவது போட்ருக்கணும் தெரியுமா? என்று மறுபடியும் சிரித்தார்.

    எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் கணக்கில் கொஞ்சம் வீக். அதனால் பிரேமாவை வம்புக்கு இழுத்தேன்.

    நான் என்ன பண்ணறது? இந்த பிரேமாதான் ரொம்ப ஸ்லோவா க்ளீன் பண்ணித் தரா.

    டேய், டேய். கொழந்தே எவ்வளவு அழகா வேலை பாக்கறா! சும்மா அவளை வம்புக்கு இழுக்காதே என்று முத்தண்ணா பிரேமாவுக்காக உருகிக்கொண்டு வந்தான்.

    டேய் ரவி அண்ணா நீதான் ஸ்லோ. நான் உடைக்காம குடுக்கற சாக்பீஸ்ல பாதியை வேகமா போடறேன் உடைச்சு அப்புறம் அதை சரி பண்ணி பெட்டிக்குள்ளே போடறதுனாலே உனக்கு டைம் ஜாஸ்தியாறது. சும்மா என் மண்டையைப் போட்டு உருட்டாதே என்று எனக்கு வலிப்புக் காட்டினாள் பிரேமா.

    போறும் உங்க சண்டையும் கூச்சலும் என்றாள் அம்மா. ஜானா இருந்த வரையிலும் எல்லாம் கிடுகிடுன்னு நடந்திண்டிருந்தது. இப்ப ஒரு கை குறைஞ்சு போனதுதான் காரணம்.

    ப்படி லா பாயிண்ட் எடுத்து வீசறா பாரு என்றார் அப்பா. ஆனால் அம்மா சொன்னது வாஸ்தவம்தான். மூன்று மாதத்துக்கு முன்பு ஜானா அக்காவுக்குக் கல்யாணமாகி அவள் கும்பகோணம் போய் விட்டாள். நான், அப்பா, ஜானா அக்கா மூவரும் பெட்டியில் சாக்பீஸ் அடுக்குவோம். அக்கா படு ஸ்பீடு. அம்மா அடிக்கடி சொல்வது போல அக்காவுக்கு கண் பார்க்கறதை கை செய்து விடும். அக்கா ஆபிஸ் வேலை, தையல் கிளாஸ், டைப்பிங் என்றெல்லாம் வெளியே எங்கும் போகவில்லை.பகல் பூராவும் ஏதாவது தலையணை புஸ்தகங்களை வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவாள். புஸ்தகப் பைத்தியம். அவள் மேலே படிக்காமல் போனதற்குக் காரணம் கூட இந்தக்கதைப் புஸ்தகப்பித்துதான் என்று அம்மா சொல்லுவாள். அதனால், மாலையில் பெட்டி தயார் செய்யும் வேலை ஆரம்பிக்கும்போது அவள் மிகவும் ஃ பிரெஷ் ஆக இருப்பாள். ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை எட்டு எட்டேகாலுக்கு முடிந்துவிடும். எட்டரைக்கு எல்லோரும் தட்டை வைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்து விடுவோம். இப்போது ஒன்பதரை மணிக்கு முன்னால், கடையைக் கட்டிமுடிக்க முடியவில்லை என்று நேற்றுக்கூட அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

    அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வேலை ஜாஸ்தியாகும் என்றான் முத்தண்ணா.

    எதுக்கு? என்று அம்மா கேட்டாள்.

    திண்டுக்கல்லேர்ந்து ஒரு பெரிய பள்ளிக்கூட ஆர்டர் நேர நம்பளுக்கே வரப் போறதுன் இன்னிக்கு ஜெயலக்ஷ்மிகாரர் சொன்னார். அவருக்கு நாம கமிஷன் குடுத்துடணும் என்று அண்ணா அப்பாவிடம்சொன்னான்.

    ஜெயலக்ஷ்மி ஸ்டோர்ஸ்தான் உள்ளூர்

    Enjoying the preview?
    Page 1 of 1