Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indira Bhoomi
Indira Bhoomi
Indira Bhoomi
Ebook228 pages1 hour

Indira Bhoomi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உங்கள் எழுத்து எளிமையாக இருக்கிறது என்று அடிக்கடி பலர் சொல்கிறார்கள். மென்னியை முறிக்கும் வகையில் எனக்கு எழுத வரவில்லை என்று நான் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். எளிதாக எழுதுவது என்பது கஷ்டமான காரியம் என்று ஹெமிங்வேயோ யாரோ சொன்ன ஞாபகம். எளிது, எளிமை என்பது ஏழ்மையல்ல என்று திரும்பச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. கூச்சல்களிலும், கோஷங்களிலும் எளிமை அடிபட்டுப் போகிறது. அப்போது நான் நினைத்துக் கொள்வதெல்லாம் 'கடலின் ஆரவாரமான வருகை வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் கட்டாயத்தை உள்ளடக்கியிருக்கிறது; ஆனால் ஆறு கரையை கடந்து செல்லும் போதும் நிசப்தத்தில் திளைத்துக் கொண்டுதான் போகிறது' என்னும் உண்மையைத்தான்.

இக்குறுநாவல்களில் பலசமயங்களில் உவகையும் கொண்டாட்டமும் சில நேரங்களில் துக்கத்தின் ரேகையும் படர்ந்திருப்பது தெரிகிறது. வாழ்க்கையின் அர்த்தத்தை இவ்வுணர்வுகள் தெரிவிக்க முனைவதாக எடுத்துக் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateMar 4, 2023
ISBN6580163109578
Indira Bhoomi

Read more from Cyndhujhaa

Related to Indira Bhoomi

Related ebooks

Reviews for Indira Bhoomi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indira Bhoomi - Cyndhujhaa

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    இந்திர பூமி

    Indira Bhoomi

    Author:

    ஸிந்துஜா

    Cyndhujhaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/cyndhujhaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    இந்திர பூமி

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    யாமம் கழிந்தொரு வைகறை

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஆலகாலம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    திரும்பி வரும் தருணம்

    வீடு

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    முன்னுரை

    உங்கள் எழுத்து எளிமையாக இருக்கிறது என்று அடிக்கடி பலர் சொல்கிறார்கள். மென்னியை முறிக்கும் வகையில் எனக்கு எழுத வரவில்லை என்று நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். எளிதாக எழுதுவது என்பது கஷ்டமான காரியம் என்று ஹெமிங்வேயோ, யாரோ சொன்ன ஞாபகம். ஒரு படைப்பாளியைப் பார்த்துவிட்டு அவர் ஏழை போலிருக்கிறது என்ற அர்த்தத்தில் எளிமையாக இருக்கிறார் என்று சொன்னவரைப் பற்றி ஒருமுறை தேவகோட்டை வா. மூர்த்தி என்னிடம் கூறினார். எளிது, எளிமை என்பது ஏழ்மையல்ல என்று திரும்பச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. கூச்சல்களிலும், கோஷங்களிலும் எளிமை அடிபட்டுப்போகிறது. அப்போது நான் நினைத்துக் கொள்வதெல்லாம் ‘கடலின் ஆரவாரமான வருகை வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் கட்டாயத்தை உள்ளடக்கியிருக்கிறது; ஆனால் ஆறு கரையை கடந்து செல்லும்போதும் நிசப்தத்தில் திளைத்துக் கொண்டுதான் போகிறது’ என்னும் உண்மையைத்தான்.

    இக் குறுநாவல்களில் நான் கடந்து வந்த பாதையின் தருணங்களைப் பார்க்கிறேன். பல சமயங்களில் உவகையும், கொண்டாட்டமும் சில நேரங்களில் துக்கத்தின் ரேகையும் படர்ந்திருப்பது தெரிகிறது. வாழ்க்கையின் அர்த்தத்தை இவ்வுணர்வுகள் தெரிவிக்க முனைவதாக எடுத்துக் கொள்கிறேன். இவற்றை வெளிப்படுத்த உதவிய கணையாழி, தாய் ஆசிரியர்களுக்கும், இப்போது தொகுப்பாகக் கொண்டு வரும் புஸ்தகா பதிப்பகத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பெங்களூர் ஸிந்துஜா

    ஜனவரி 2023

    இந்திர பூமி

    ஒன்று

    ரஜாயை விலக்கிவிட்டு ராஜாமணி படுக்கையிலிருந்து எழுந்தான். கைபேசியைத் தேடி நேரம் பார்த்தபோது எட்டு என்றது. மூடியிருந்த ஜன்னல் வழியாக வெளியே வெள்ளை வானம் தெரிந்தது. பதினோரு மணிக்கு முன்னால் இந்த ஊரால் சூரியனை எழுப்பிவிட முடியாது என்று இங்கு வந்தவுடன் தெரிந்துகொண்டான். தில்லிக்கு வந்திறங்கிய முதல் நாள் ஸ்டேஷனுக்கு வெளியே காலை பதினோரு மணிக்கும் வீசிய குளிர்க்காற்று ‘இங்கே எதுக்குடா வந்திருக்கே?’ என்று விரட்டுவதுபோல முகத்தின் மீது அறைந்தது. அவன் சொந்த ஊரில் வருடம்பூராவும் வெய்யில்தான். இரவில்கூட சூரியன் இருட்டில் மறைந்துகொண்டு நடமாடுகிறதோ என்பதுபோல அப்படி ஒரு தகிப்பு. ஆனால் இங்கே அதற்கு நேர்மாறாக அப்படி ஒரு குளிர். அவன் மதுரையிலிருந்து கொண்டுவந்த ஸ்வெட்டரைக் கண்டு அலட்சியமாகச் சிரிப்பதுபோல குளிர், துணியை ஊடுருவிக்கொண்டு சென்றது. வந்த ஒரு வாரத்தில் ஆபீஸில் அட்வான்ஸ் தந்ததை வைத்து இந்த ஊர்க்காரர்களைப் போல் சதா காலமும் கோட்டைப் போட்டுக்கொண்டு அலையாவிட்டாலும் அட்லீஸ்ட் இரண்டு முழுக்கை ஸ்வெட்டர்களை வாங்கிவிட்டான்.

    அவன் பிரஷ், பேஸ்ட், சோப்பு, துண்டு, மாற்று உடை என்று ஒரு படையையே திரட்டிக்கொண்டு விடுதியின் பாத்ரூம் பக்கம் படையெடுத்தான். ஒரு குளியலறை காலியாக இருந்தது. அப்போது கண்ணில் தென்பட்ட வேலையாள் பகதூரிடம் ‘வெந்நீர் குடு’ என்றான். பகதூர் கொண்டு வைத்த அரைப் பக்கெட் வெந்நீர், சுட வைத்தால்தான் வென்னீராகும் போல இருந்தது. குழாயிலிருந்து நீரைத் திறந்துவிட்டால் முழு வாளித் தண்ணீர் கிடைக்கும். ஆனால் அப்படி நிரப்பின தண்ணீரை வைத்துக்கொண்டு குளிக்க முயலுவது தற்கொலையில் ஈடுபடுவதற்குச் சமம். பகதூர் தீர்மானித்த தண்ணீர் அளவில் குளியலை முடித்துக்கொண்டு ராஜாமணி வெளியே வந்தான்.

    அறைக்குச் சென்றபோது இன்னும் தூங்கிக்கொண்டிருந்த சம்பத் அய்யங்கார் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான்.

    இந்த வாரம் டே டூட்டின்னு சொன்னியே? என்று கேட்டான் ராஜாமணி.

    இன்னிக்கி ஆபீசுக்குப் போகலே. நேத்தி ராத்திரி சியாமாவோட கோல்ஃப் பார்லே பார்ட்டி. சாணக்யபுரிலேர்ந்து இங்க வரதுக்கு ரெண்டு மணி ஆயிடுத்து என்று புன்னகை செய்தான்.

    ராஜாமணிக்கு அய்யங்காரின் மேல் பொறாமை ஏற்பட்டது.

    கவலைப்படாதே, சீக்கிரம் உனக்கும் கிடைக்கும் என்றான் சம்பத்.

    ஏதோ சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதுபோல அல்லவா சொல்லுகிறான்?

    அதுவரை நான் இங்கே இருந்தாத்தானே? என்றான் ராஜாமணி.

    சம்பத் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பிப் படுத்துக்கொண்டான். ராஜாமணி உடையணிந்து அறையை விட்டு வெளியே வந்து டைனிங் ஹாலுக்குச் சென்றான். சம்பத்திடம் அவன் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. இருபத்தி மூன்று வருஷங்கள் இருந்த ஊரிலிருந்து வந்து, இங்கு இரண்டு மாதங்கள்கூட இருக்க அவனுக்கு விருப்பமில்லை. தில்லி வெறுத்துவிட்டது. சே என்ன ஒரு சுவாரஸ்யமற்ற வாழ்க்கை!

    பரிமாறுபவர் வந்து சார், என்ன வேணும்? என்று கேட்டார்.

    என்ன இருக்குன்னு நான் உங்ககிட்டே கேக்கப் போறதில்லே என்றான் ராஜாமணி.

    மசால் தோசையா சார்? என்று அவர் கேட்டார் சிரித்தபடி. அங்கு ஞாயிறு - இடியாப்பம், உப்புமா, பூரி. திங்கள் - இட்லி வடை, செவ்வாய் - சப்பாத்தி சப்ஜி, புதன் - பரோட்டா வகையறா, வியாழன் - குல்ச்சா கடாய் சோலே, வெள்ளியன்று தோசை வகையறா. நாளை சனிக்கிழமை பொங்கல். அவனுக்கு மிகவும் பிடித்த அயிட்டம். இன்னும் இந்த ஊரில் எவ்வளவு ‘பொங்கல் தினங்கள்’ நான் தங்கப் போகிறேனோ? என்று நினைத்தான்.

    அவன் பஸ் ஸ்டாப்பை அடைந்தபோது ஏற்கனவே கூட்டத்தை அள்ளிக்கொண்டு வரும் பேருந்துகளுக்காகப் பெரிய கூட்டம் காத்திருந்தது.

    அடித்துப் பிடித்து ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு முறையும் பஸ்ஸில் இடம்பிடிப்பது பெரும் கலையாகிவிட்டது. மதுரையில் துவந்த யுத்தம் கற்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலையில் குளித்ததற்கும், சீரான உடை அணிந்ததற்கும் மரியாதை தரவேண்டியதில்லை என்பதுபோல அவன் அலுவலகத்துக்கு முன்னால் கசங்கியபடி பேருந்து அவனைக் கீழே தள்ளிவிடும். ஆட்டோவில் சென்றால் ராஜா மாதிரி இருக்கும். ஆனால் அலுவலகத்தில் அவனுக்கு சிப்பாயாக இருந்தால் போதும் என்கிற சம்பளத்தைத்தான் தந்தார்கள்.

    அப்போது அவனருகே ஹாய்! என்று குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான், சகுந்தலா. அவனது ஆபீசில் வேலை பார்ப்பவள்.

    குட்மார்னிங். எங்கே நம்ம ஆபீசா, இல்லே க்ளையண்ட் ஆபீசா? என்று கேட்டாள்.

    கோல் மார்க்கட் மேம் என்றான். அங்குதான் அவர்கள் அலுவலகம் இருக்கிறது.

    இன்னும் வெளி ஆடிட் கொடுக்கலையா? என்று கேட்டாள். நீங்க வந்து ஒரு மாசம் இருக்காது?

    ரெண்டு மாசம் ஆயாச்சு. வந்ததிலேர்ந்து ஆடிட் ரிப்போர்ட்களை எல்லாம் கம்பேர் பண்ணற வேலைதான். இனிமேதான் ஆடிட்டுக்கு வெளியே அனுப்பப் போறேன்னு கோவிந்தன் சார் சொல்லிருக்கார் என்றான் ராஜாமணி.

    அவர் ரொம்ப டீசன்ட்டான பாஸ் என்று சிரித்தாள் சகுந்தலா.

    அவனும் தலையசைத்தான்.

    சகுந்தலா அவனிடம், நான் கனாட் பிளேஸ் போறேன். ஆட்டோலே போயிடலாமா? வழியிலே கோல் மார்க்கட்லே இறக்கிவிடறேன் என்றாள்.

    ராஜாமணி இல்லே, தாங்க்ஸ்... என்று இழுத்தான். வண்டியிலிருந்து இறங்கும் போது அவளிடம் முழு சார்ஜும் கொடுக்க வேண்டாம் என்றாலும், பாதிப் பணமாவது கொடுக்க வேண்டுமே?

    நான் க்ளையண்ட் ஆபீசுக்கு போறதாலே ஆபீஸ்லே கன்வேயன்ஸ் வாங்கிப்பேன். கம் அலாங் என்று அவன் மறுமொழிக்குக் காத்திராமல் அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி உட்கார்ந்தாள். அவளுடன் அவனும் ஏறினான்.

    போகும்போது, மதுரைலே எங்கே உங்க வீடு? என்று கேட்டாள் சகுந்தலா.

    அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். அலுவலகத்தில் இரண்டொருமுறை பார்த்திருக்கிறான். ஆனால் அவளுடன் பேசுவது இதுதான் முதல் தடவை. தான் மதுரையைச் சார்ந்தவன் என்று அவளுக்கு எப்படித் தெரியும்?

    நம்ம ஆபீஸ்லே எல்லாரோட ஜாதகமும் எல்லாருக்கும் தெரியும் என்று அவள் சிரித்தாள். இன்னும் ஒரு மாசம் போனா நீங்க எனக்கு நோட்ஸ் குடுப்பேள்!

    அவள் சொல்வது உண்மைதான். அலுவலகத்தில் அவனது முதல் நண்பனாக அறிமுகமாகிப் பத்து நாளில் நெருங்கிப் பழகிவிட்ட சீதாராமன்கூட இதையேதான் அவனிடம் சொன்னான். சீதாராமன் மேலும் சகுந்தலாவுக்குக் கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது என்றும் அவனிடம் கூறியிருக்கிறான்.

    வசந்த நகர் என்றான் ராஜாமணி.

    அட, ரொம்ப நெருங்கின இடமாச்சே! எனக்குப் பழங்காநத்தம் என்று சகுந்தலா அவனை உற்று நோக்கினாள். ‘யூ ஆர் வெரி யங்.’ நான் உன்னை நீ என்றே கூப்பிடட்டுமா?"

    தாராளமா.

    இதை சீதாராமன் கேட்டா கொலைவெறி வந்துடும் அவனுக்கு என்றாள் சகுந்தலா. உன்னோட அவன் அலையறதை நான் பாத்திருக்கேன். அவன் உன்கிட்டே சொல்லிருப்பானே நான் டைவர்ஸீன்னு?

    சீதாராமனைக் காட்டிக்கொடுக்க வேண்டுமா என்று யோசித்தான் ராஜாமணி. ஆனால் சகுந்தலா தீர்மானமாகச் சொல்லுவதால் சீதாராமன் அவளைப் பற்றி மற்றவர்களிடம் இம்மாதிரி பேசுவது அவளுக்குத் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. மேலும் அவள் அவனுடைய ஊர்க்காரி. இப்போது வசதியாக அவனை அலுவலகத்தில் வேறு கொண்டுவிட்டுச் செல்லுகிறாள்.

    ராஜாமணி ஆமென்று தலை அசைத்தான்.

    அவன் கோமதியை வளைச்சுப்போட்ட மாதிரி என்கிட்டேயும் வாலாட்டலாம்னு நினைக்கிறான். யூஸ்லெஸ் பெக்கர். அவன் பெரியவருக்குச் சொந்தம்னா எனக்கென்ன ஆச்சு?

    ராஜாமணி திடுக்கிட்டு சகுந்தலாவைப் பார்த்தான். கோமதி அவர்கள் அலுவலகத்தில், பெரியவர் என்று அழைக்கப்படும் சீனியர் பார்ட்னரின் செகரட்டரி. அவளுக்கு நாற்பது வயதிருக்கும்.

    அவளையா?

    சகுந்தலாவுடன் இத்தகைய அலுவலக விஷயம் பற்றி விவாதிப்பது சரியாவென ராஜாமணிக்குத் தோன்றியது.

    நீங்க படிச்சு வளர்ந்தது எல்லாம் மதுரையில்தானா? என்று கேட்டான்.

    ஆமா. சி.ஏ. மதுரையிலேதான் முடிச்சேன். கல்யாணமாகி இங்கே வந்தப்போ ஒரு ஃபாரின் பேங்க்லே வேலை கிடைச்சது. ஆனா ஒரே வேலையை வருஷக்கணக்காப் பார்த்துப் போரடிச்சுடுத்து. அதனாலே அதை விட்டுட்டு ரெண்டு வருஷம் முன்னாடி இங்கே வந்து சேர்ந்தேன். நடுவிலே டைவர்ஸ். இனிமே ஊருக்குப் போக வேண்டாம்னு எங்கம்மாவைக் கூட்டிண்டு வந்துட்டேன் என்றாள் சகுந்தலா.

    அவன் அவளை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். அழகாக, களையாக இருக்கிறாள். சீரான உயரமும், அதற்கேற்ற உடற்கட்டும் அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் என்று நினைக்க வைத்தன. தூக்கி அடிக்கும் சிகப்புத்தோல் இல்லை. ஆனால் கண்ணை உறுத்தாத நிறம். முதல் தடவை பார்த்தபோது சல்வார் கமீஸில் இருந்தாள் என்று ஞாபகம் இருந்தது. இன்று புடைவையில். வெள்ளையில் கறுப்புப் புட்டா போட்ட ஸாரி, கறுப்பு ரவிக்கையில் இருந்தாள். நகை எதுவும் அணிந்திருக்கவில்லை. புன்னகை மட்டும் போதுமென்று நினைத்துவிட்டாள் போலிருக்கிறது.

    வண்டி ஒரு சிக்னலில் நிற்கும்போது அவள் ராஜாமணியிடம் அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டாள். பனிரெண்டாம் பிளாக்கில் அவன் இருக்கும் லாட்ஜ் பற்றிச் சொன்னான்.

    அதே ரோடுலே மேலே வந்தா ஆறு ஏ பிளாக் இருக்கு. அங்கேதான் எங்க வீடு. டாக்டர் சீமான்னு ஒரு கிளினிக் வரும். அதுக்கு நேர் எதிரே அறுபதாம் நம்பர் வீடு. மொதல் மாடிலே இருக்கேன் என்றாள்.

    ஆட்டோ ஆபீசை அடைந்தது. சீதாராமன் பாத்து வயிறு எரியட்டும் என்று சிரித்தபடி அவனுக்கு பை சொல்லிவிட்டுச் சென்றாள்.

    இரண்டு

    ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்தபோது பியூன் சபர்வாலைப் பார்த்தான். தினமும் அலுவலகத்தைச் சுத்தம் பண்ணுவதற்காக அவன் எட்டு மணிக்கே வந்துவிடுவானாம். அவன் பார்த்த மற்றொரு நபர் கோமதி. இவ்வளவு சீக்கிரம் அவள் வந்திருந்தது அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒருவேளை பெரியவரும் ஏதாவது அவசர வேலை என்று அலுவலகம் வந்திருக்கிறாரா? கோமதி யாருடனோ டெலிபோனில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவன் தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

    அப்போது சபர்வால் கையில் ஊதுபத்தியுடன் பெரியவரின் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். அவன் பின்னால் ராஜாமணியின் பார்வையும் சென்றது. உள்ளே கதவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கையில் ரிசீவரோடு சீதாராமன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சீதாராமன் போனைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான். உடனே ராஜாமணியின் பார்வை கோமதியின் மீது சென்றது. அவளும் போனைக் கீழே வைத்துக் கொண்டிருந்தாள். சகுந்தலா சொன்னது உண்மைதானா?

    வெளியே வந்த சீதாராமன், என்னடா ராஜா சீக்கிரம் வந்துட்டே? சட்டை, தலைமயிர் ஒண்ணும் கலையாம ஏதோ கார்லே வந்த மாதிரி இருக்கியே? என்று கேட்டான்.

    ராஜாமணி பதில் அளிக்காமல் சீதாராமனைப் பார்த்தான்.

    அவன் கண்களைச் சிமிட்டியபடி, "நான்தான் பாத்தேனே, சகுந்தலா வந்த ஆட்டோலேர்ந்து நீ

    Enjoying the preview?
    Page 1 of 1