Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sagaram
Sagaram
Sagaram
Ebook223 pages1 hour

Sagaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடந்து சென்ற காலம் நிகழ் காலத்தின் காலைப் பிடித்திழுத்து அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் ராயசத்தை ஏன் செய்கின்றது என்பது புரியாத புதிர். சாகரம், வெளி, விசாரணை, நேயம் ஆகிய கதைகளில் நடமாடுபவர்கள் அவ்வளவு எளிதாக மரபுடன் கைகுலுக்க விரும்பும் பிரகிருதிகளாகத்தம்மை இனங்காண ஒப்புக்கொள்வதில்லை என்பதை இத்தொகுதியில் வாசகர் உய்த்துணர முடியும். "1965" குறியீடாக வெளிப்பட்ட ஒரு மிகப் பெரிய சமூக அரசியல் மாற்றத்தையும் அதை மக்கள் எதிர்கொண்ட விதத்தையும் தவிர தனிமனித பலவீனங்கள் சரித்திரத்தின் உண்மை முகத்தை வேறு திசைக்குக் கொண்டு சென்றதையம் சுட்டிக் காட்டுகிறது. நவீனத்துவத்தின் பல்வேறு முகங்கள் கற்பனை வெளியைக் கடந்து சென்று நிலை நாட்டும் பிரமிப்பு நிறைந்த தோற்றங்களை ஒரு கூறாகக் கானல், காரணம் என்னும் இரு கதைகளில் காணலாம்.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580163109580
Sagaram

Read more from Cyndhujhaa

Related to Sagaram

Related ebooks

Reviews for Sagaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sagaram - Cyndhujhaa

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சாகரம்

    சிறுகதைகள்

    Sagaram

    Sirukathaigal

    Author:

    ஸிந்துஜா

    Cyndhujhaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/cyndhujhaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சாகரம்

    1965

    நிறுத்தத்துக்கு அப்பால் செல்ல முடியாத ரயில்

    விசு, நரசு, பரசு, சரசு

    விசாரணை

    நேர்

    நேயம்

    கானல்

    அடுத்த தடவை

    திறல்

    போர்வை

    காரணம்

    புஜ்ஜியின் உலகம்

    வெளி

    தோள்

    நன்றி

    இக்கதைகளை வெளியிட்ட கணையாழி, வடக்கு வாசல், தினமணி கதிர், வலம், சங்கு, நவீன விருட்சம் ஆகிய இதழ்களுக்கும் திண்ணை இணைய இதழுக்கும் நன்றி.

    சாகரம்

    மாரிமுத்து குஞ்சம்மாவின் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அது பொக்கை வாயைத் திறந்து சிரித்து கொண்டு இருந்தது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தா கொடுத்தது.

    அவன் யார் தெரியறதா? என்று குஞ்சம்மா கேட்டாள்.

    பட்டுப் பாட்டி ஒரு கையைப் புருவத்துக்கு மேல் வைத்து நிழல் பண்ணிக் கொண்டு பார்த்தாள்.

    தெரியலையே. புதுசான்னா இருக்கான். யாரு?

    புதுசா வேலைக்கு சேந்திருக்கான். மாரின்னு பேரு. கொளஞ்சியோட பேரன்.

    கொளஞ்சியா? யாரு?

    ஐயோ பாட்டி! திருவையாத்துல உன்னோட வேலைக்காரன்னு. நீதான சொல்லுவே. நாலு ஆள் வேலய அவன் ஒண்டியாவே செஞ்சுடுவான்னு.

    அப்படியா?

    ஆமா. கிண்டனாட்டம் இருப்பன். வேளைக்கு ரெண்டாழாக்கு சாதத்தையும் குழம்பையும் விட்டுண்டு வண்டிக்காரனாட்டம் பெசையாம நன்னா சாப்பிடுவன். நீ உன் மாமியாரோட வயல் பக்கம் போறப்ப எதுத்தாப்ல வந்துட்டான்னா ஓரமா ஒதுங்கிண்டு ‘சிரத்தியாரே’ன்னு வாயைப் பொத்திண்டு நிப்பன். அந்தக் கிழவியும் ராட்ச்சசியாச்சே. ஆத்துலயும் வெளிலயும் அவளைப் பாத்தா எல்லாருக்கும் பயந்தானே! ஷவரம் பண்ணிண்ட தலைக்கு மேல முட்டாக்க இழுத்து விட்டுண்டு தள்ளி நில்லுடான்னு அதட்டிண்டே போவள்’ன்னும் ஒரு நா சொன்னியே!

    ஆமா, ஆமா. அஞ்சு பிள்ளைகள், மூணு மாப்பிள்ளைகள் நடமாடிண்டு இருந்த ஆத்துல அவ மாத்திரந்தானே புருஷாளாட்டம் இருந்தா!

    அப்பல்லாம், உன் காலத்தில இப்படி வேலைக்காராள அதட்டி உருட்டறத சகஜமா எடுத்திண்டு எல்லாரும் இருந்திருக்காளே பாட்டி?

    ஆமா. இப்படியே கொஞ்ச மனுஷாளைத் தள்ளித் தள்ளி வச்சே நாம எல்லாரும் நம்மளையே ஒரு நாதி இல்லாம இப்பத் தள்ளி வச்சிண்டுட்டோமே! அதுதானே காலத்தோட கோலங்கறது! வாழ்க்கையே ஒரு சக்கரம்னுதானே சொல்லறா? மேல இருந்தது கீழ வரது. ரொம்பப் படுத்தியிருந்தா பாதாளத்துக்குள்ளேயே கொண்டு போய் விட்டுடறது. கொளஞ்சியோட பேரனா இவன்? பொட்டுண்டு எப்பிடி அவனோட ஈஷிண்டு இருக்கு பாரேன். கொளஞ்சி தவறிட்டான் இல்லியோ?

    ஐயோ பாட்டி. அவன் நன்னாதான் இருக்கான். நாலு மாசம் மின்னாலே வந்து உன்னைப் பாத்தானே பாட்டி? அம்பது வருஷத்துக்கு மின்னால பொன்னு மாமி வளைகாப்புக்கு எங்கம்மா என்ன கலர் புடவை ரவிக்கை போட்டுண்டு இருந்தான்னு பளிச்சின்னு உனக்கு ஞாபகம் இருக்கு. மூணு தல மொறையா யார் யார் என்ன தேதில, கிழமைல, எத்தனை மணிக்குப் பொறந்தான்னு அப்பிடி ஒரு மொபைல் அல்மானாக்கா இருக்க. இந்த நாலு மாசம் மட்டும் ஞாபகத்தில இல்லியா?

    பட்டுப் பாட்டி கரைத்து வைத்த வெல்லப் பானகம் உதட்டில் பட்டது போலச் சிரித்தாள்.

    அப்போது குஞ்சு உள்ளே ஒரு நிமிஷம் வந்துட்டுப் போயேன் என்ற அவள் தாயார் குரல் கேட்டது.

    மறுபடியும் பட்டு தனியாக விடப்பட்டாள். வாசலில் போட்டிருந்த ஈஸிசேரில் இன்னும் கொஞ்சம் காலை நீளப் பண்ணிக்கொண்டு சாய்ந்தாள். வாசலில் இருந்த வேப்ப மரத்திலிருந்தும், நடையில் தழைத்திருந்த நித்தியமல்லிக் கொடிகளிலிருந்தும் கூட்டிலிருந்து வெளிப்பட்ட பறவை போலக் காற்று வேகமாக ஓடி வந்தது. காலை எட்டுமணிக்கு இன்னும் வெயிலை வர விடாமல் பனி தடுத்துக் கொண்டிருந்ததால் காற்றில் சில்லிப்பு படர்ந்திருந்தது. ‘இதமாத்தான் இருக்கு’ என்று நினைத்த பட்டுவுக்குப் போன வாரம் ஒரு நாள் குஞ்சுவின் பெரிய பையன், ஸ்கூலில் ஐந்தாவது படிக்கிறான், பாட்டி, உனக்குக் குளிரலையா? என்று கேட்டது நினைவுக்கு வந்தது.

    ‘தொண்ணூறு வயசுக்காரின்னு கேக்கறான் கொழந்தை’ என்று பட்டு நினைத்தாள். நேக்குக் குளிர் விட்டுப் போயி ரொம்ப நாளாச்சுடா கண்ணா என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள். குழந்தை அவள் பேசியது புரியாமல் விழித்தான்.

    பட்டுவின் பார்வையில் மாரிமுத்து மறுபடியும் தென்பட்டான். இப்போது அவளுக்குக் கொளஞ்சியின் ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது. கொளஞ்சி போல இவனும் நெடு நெடுவென்று வளர்ந்திருக்கிறான். இப்போது இவனுக்குப் பதினைந்து வயது இருக்குமா? கொளஞ்சியைப் போலக் கறுப்பாக, உயரமாக, உடம்பில் தேவையான அளவுக்கு சதைப்பற்று வைத்துக் கொண்டு கட்டுமஸ்தாக... அறுபது வருஷத்துக்கு முன்பு பார்த்தவனுக்கும் இவனுக்கும் பெரிய வித்தியாசமில்லைதான்.

    ‘குஞ்சு சொன்ன மாதிரி அப்பப்போ ஞாபகம் நழுவிண்டுதான் போயிடறது’ என்று பட்டுவுக்குத் தோன்றிற்று. ஆனால் குஞ்சு ஞாபகப்படுத்திய பின் எழுபது வருஷத்துக்கு முன்னால் போய் நடந்ததையெல்லாம் நேற்று நடந்தது போல் காண்பிக்கிறது இந்த மனசும், மூளையும்.

    ***

    பதினைந்தாவது வயதில் பட்டு வேதபுரியைக் கைப்பிடித்து ‘திருவையாத்து ஆத்தில்’ காலெடுத்து வைத்தாள். திருவையாத்து சம்பந்தம் என்று வந்த வேதபுரியுடன் பட்டுவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. எல்லாருக்கும் அது திருவையாற்று அகம்தான். பனிரெண்டு வயதில் கல்யாணமான பட்டுவின் அம்மா இன்னும் தன் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்று ஈச்வர ஐயரைப் பிடுங்கி எடுத்து விட்டாள். பட்டுவுக்குப் பதிமூன்று வயதில் ஜாதகக் கட்டை எடுத்தார்கள். ஒன்றும் சரியாகத் திகையவில்லை.

    மகா ராஜபுரம் அப்படியென்ன பெரிய ஊரா? மொத்தமே இருநூறு வீடுகள் இருக்கும். எல்லோரும் ஊருக்குள்ளேயே உழன்று கொண்டிருப்பவர்கள். ஏழெட்டுக் குடும்பங்களிலிருந்து வெளியூருக்கு வேலைக்குப் போனார்கள்.

    ஊருக்குப் பெயர் வந்ததே ஒரு பெரிய வித்வானால்தான். விஸ்வநாத அய்யர் ராக ஆலாபனையில் கொடிகட்டிப் பறந்தார். உலகம் முழுக்க அந்தக் கல்பனா சங்கீதம் ஜனங்களை ஆகர்ஷித்தது. அவருடைய பையன் கூடப் பட்டுவுடன் காவிரிக்கரையில் சின்ன வயசிலிருந்தே விளையாடிப் பழகியவன். அவனுக்கு அப்பாவிடமே சிட்சை ஆயிற்று. ஈச்வர அய்யர் அவன் குரலைக் கேட்டுப் பிரமித்து இவன் ஒரு நாள் கான கலாநிதியாய் வருவான் என்று அவன் அப்பாவிடம் சொல்லி மாய்ந்து போனார். இரு குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் என்பதால் பட்டுவின் கல்யாணத்துக்கு சந்தானம்தான் வந்து பாடியது. அன்று வந்திருந்தவர்கள் எல்லோரும் அந்த இசையில் மதிமயங்கிக் கிடந்தார்கள் என்று பட்டுவின் மாமியார் வாலாம்பா அவளிடம் அதற்கப்புறம் ஒரு நாள் சொன்னாள்.

    உலக மகா யுத்தம் முடிந்து போய்விடும் என்று எல்லோரும் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஐந்து வருஷம் முடிந்து ஆறாவது வருஷத்திலும் அது கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. பட்டுவின் புக்ககத்தில் அவர்களின் சொந்த வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தது போக அவள் மாமனார் பிரகதீச்வரன் ஒரு கட்டிட சாமான்கள் கடையும் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று தங்கமென்ன, வெள்ளியென்ன என்று அந்தஸ்துடன் இருந்தவை தெருவுக்கு வந்து விட்டன. கூடவே இரும்பும், உருக்கும் இன்னபிற பொருள்களும் விலைகள் பிறழ்ந்து கடை கண்ணிகளைச் சிதறடித்தன. பிரகதீச்வரன் நிலமையைப் பார்த்து ஜாக்கிரதைப்படுத்திக் கொள்வதற்குள் பெரும் நஷ்டம் வந்து கடையை மூட வேண்டியதாயிற்று. சில ஆஸ்திகளை விற்றுக் கடன்களை அடைத்தார். அந்த ஒரு வருஷ மன உளைச்சலில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்ப் படுக்கையில் விழும்படி ஆகிவிட்டது.

    வீடு பெரிய சம்சாரத்தை அடக்கிக் கொண்டிருந்தது. வாலாம்பா, பிரகதீச்வரன், பட்டு, அவள் கணவன் அவனது தம்பிகள், அவர்களது மனைவிகள், தங்கைகள், அவர்களது கணவர்கள் என்று பெருங்கூட்டமாக வீடு திகழ்ந்தது. வாலாம்பாவின் பெண்களும் மருமகள்களும் பட்டுவின் பொது வேலைகளைக் குறைத்தார்கள்.

    ஆனால் சமையல் உள் பட்டுவின் கையில்தான் இருக்க வேண்டும் என்று வாலாம்பா சொல்லி விட்டாள். பெரிய வேலை விட்டது போ என்று மற்ற பெண்கள் தங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டதற்குக் காரணம் பட்டுவின் கைமணத்தை எல்லோரும் விரும்பினார்கள்.

    அந்தச் சமயத்தில் சமையல் உள் வேலைகளையும், குழந்தையையும் கவனித்துக் கொண்டு பிரகதீச்வரனுக்கு சிச்ருக்ஷை செய்ததெல்லாம் பட்டுதான். வேளா வேளைக்குச் சாப்பாடு கொடுப்பது, மறக்காமல் மருந்தைச் செலுத்துவது, அவர் அருகில் உட்கார்ந்து பாகவதம் படிப்பது, அவரை வெளித் திண்ணைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து வெளி ஜனத்தைக் காண்பித்து நாலு மனிதர்களைப் பார்த்துப் பேசுவதன் மூலம் அவர் மனதிலிருந்து ஒண்டித்தனத்தை மறக்கடித்து மாற்றுவது என்று உயிரை விட்டுச் செய்தாள். வாலாம்பா ஏதோ தானும் தன் புருஷனும் முந்தின ஜென்மத்தில் செய்த புண்ணியம்தான் இந்தச் சின்னப் பெண்ணை மருமகளாகக் கொடுத்து மகளைப் போல் பணிவிடை செய்ய வைக்கிறது என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லித் தீர்த்தாள்.

    பிரகதீச்வரனுக்கு உடல் நலிவு இன்னும் மோசமாக ஆரம்பித்த போதுதான் கொளஞ்சியைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். கொளஞ்சியும் அவன்

    அப்பாவுமாகக் கணபதி அக்கிரகாரத்தில் இருந்த பிரகதீச்வரனின் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கொளஞ்சி உயரமாக, கறுப்பாக இருந்தான். இருபது வயது இருக்கும். கறுப்பே அழகு, காந்தலே ருசி என்ற வார்த்தையை அவனைப் பார்த்துத்தான் சொன்னது போல இருந்தான். அகன்ற மார்பு, உறுதியான கை கால்கள் அடங்கிய வயிறு என்று உழைப்பின் வெளிப்பாடு அவன் உடலில் தெரிந்தது. ஐயாறப்பர் கோயிலில் வடக்குப் பிரகாரத்தில் சற்றுச் சிதிலமடைந்த ஒரு மதுரை வீரன் சிலையை சுவரில் சாய்த்து வைத்திருந்தார்கள். மதுரை வீரனின் பெரிய முறுக்கு மீசை அளவுக்கு கொளஞ்சி வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அசப்பில் கொளஞ்சி அந்த சிலை மாதிரிதான் இருக்கிறான் என்று பட்டு நினைத்தாள். பட்டு செய்து வந்த வேலைகளைக் கொளஞ்சி எடுத்துக் கொண்டான்.

    பிரகதீச்வரனைப் படுக்கையிலிருந்து தினமும் எடுப்பது, காலைக் கடன்களைக் கழிக்க உதவுவது, குளிப்பாட்டுவது, ஆடை அணிவிப்பது, உணவு தருவது, சக்கர நாற்காலியில் திண்ணைக்கு அழைத்துச் செல்லுவது போன்றவற்றை அவன் செய்தான். ஆஜானுபாகுவாக இருந்த கொளஞ்சியின் கையில் பிரகதீச்வரன் ஒரு குழந்தையைப் போல இருந்தார்.

    வீட்டில் அவரைப் பார்த்துக் கொண்டது போக கொளஞ்சி வீட்டு வேலைகளையும் தோட்டத்து வேலைகளையும் செய்தான். தென்னை மரத்திலிருந்து இளநீர் பறித்துப் போடுவதில் ஆரம்பித்து, செடி கொடி மரங்களிலிருந்து காய் பழங்கள் பறித்துப் போடுவது தேங்காய்கள் உரித்துக் கொடுப்பது, கடையிலிருந்து வரும் விறகுக் கட்டைகளைச் சீராய் உடைத்து அடுக்குவது, மரம் செடி கொடிகளுக்கு நீர் பாய்ச்சுவது கடை கண்ணிகளுக்குப் போய் மளிகை வாங்கி வருவது, வெளியூர் போகும் போது வண்டி கட்டிக் கொண்டு வருவது, கிணற்றுப்பக்கம் இருந்த கழிவறைச் சுவர்கள் உதிர ஆரம்பித்த சமயத்தில் கொத்தனார் வேலை செய்தது, மாதத்தில் சில நாட்கள் கணபதி அக்கிரகாரம் போய் வேலை பார்ப்பவர்களுடன் பொழுதைக் கழித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அறிவது என்று எல்லா வேலைகளிலும் பரவி இருந்தான். இதுதவிர வீட்டிலிருந்த குழந்தைகளுக்கானவற்றையும் அவனே கவனித்துக் கொண்டான்.

    எல்லா வேலைக்கும் அவன் பட்டுவின் உத்திரவை எதிர்பார்த்தான். இது வேதபுரியைச் சில சமயங்களில் கோபப்படுத்தினாலும் கூட, பிரகதீச்வரன் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. கணவர் போன பின்பு எல்லா வெளி வேலைகளையும் வாலாம்பாதான் கவனித்துக் கொண்டாள். திருவையாத்து நிலத்துக்கு வைத்திருந்த குத்தகைக்காரன் சாதாரணமாகவே வருஷா வருஷம் குத்தகைப் பணத்தைச் சரியாகத் தராமல் இழுத்தடிப்பதைப் பார்த்து அவனை நீக்கி, கணபதி அக்கிரகாரம் நிலத்தைப் பார்த்து வந்த கொளஞ்சியின் அப்பனிடம் திருவையாத்து நிலத்தையும் கொடுத்தாள்.

    பண வரவு செலவுகளை அவளே வைத்துக் கொண்டாள். வேலைக்குப் போய்ச் சம்பாதித்து வரும் பிள்ளைகளும் மாப்பிள்ளைகளும் சம்பளத்தை அவளிடம் கொடுத்து விட வேண்டும். வீட்டுப் பெண்கள் எல்லோருக்கும் அவரவர் திருப்திக்கு ஏற்ப துணிமணிகள், நகைநட்டுகள் எல்லாம் செய்து போட்டாள். கையில் காசு தாராளமாகப் புரளவில்லையே என்று ஆண்கள் அவள் பின்புறம் சலித்துக் கொண்டாலும் பெண்கள் வாலாம்பாவின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். ‘நிழல்ல இருக்க சௌகரியம் பண்ணிக் குடுத்துட்டா அப்பறம் வெய்யில்ல அலையறதுக்கு மனசு வராது’ என்று பட்டுவிடம் வாலாம்பா ஒருதடவை சொன்னாள்.

    எல்லோருக்கும் வருவது போல வாலாம்பாவையும் அழைத்துக் கொண்டு போக ஒருநாள் எமதர்மராஜன் வரத்தான் செய்தான். அவள் சாவதற்கு ஒரு மாதம் முன்பு வக்கீல் ரங்கசாமி அய்யங்காருக்குச் சொல்லி அனுப்பினாள்.

    அய்யங்கார் அவளைப் பார்த்து "உயில் எழுத என்ன அவசரம்? வாரத்துக்கு ஒரு தடவை அஞ்சு ஏக்கர் வயலைப் போய் ஒரு நடை பாத்துட்டு வரேன்னு அலுக்காம ஒண்டியா சுத்திப் பாத்துட்டு வரேள். வடக்கு மட விளாகம் தெருல பஞ்சுவய்யர் சம்சாரம் அனந்தியம்மா அம்பது வயசுக்குக் கிழவியாயிட்டா. அவளை மாதிரியா நீங்க கை

    Enjoying the preview?
    Page 1 of 1