Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Bothai
Kaadhal Bothai
Kaadhal Bothai
Ebook102 pages37 minutes

Kaadhal Bothai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, கல்வி, ஒற்றுமை, எளிமை, நேர்மை போன்ற உயர் குணநலன்களைச் சிறப்பிக்கும் குட்டிக் கதைகள். முதியோர் துயரம், கணவன் மனைவி இல்வாழ்க்கை, இந்த ஜெனரேஷன் பிரச்னைகள், போன ஜெனரேஷன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதலைத் தொடும் வரிகள்

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580154008474
Kaadhal Bothai

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Kaadhal Bothai

Related ebooks

Reviews for Kaadhal Bothai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Bothai - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் போதை

    Kaadhal Bothai

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காதல் போதை

    2. அன்பு

    3. மஞ்சப்பையும் கிழிஞ்ச கால்சராயும்

    4. என்ன பிடிக்கும்?

    5. சண்டை

    6. வீடு

    7. அம்மாவும் திவசமும்

    8. கஞ்சன்

    9. அழகியின் பார்வை

    10. வாழும் வரைப் போராடு

    11. மாம்பழம்

    12. வேலை... காதல்... பிறகு?

    13. கிளைக் காதல்

    14. வாழ்க்கை வரம்

    15. மனம் வலித்த தருணங்கள்

    16. மன வலிமை

    17. அப்பா ஏன் இப்படி?

    18. புதுமைப்பெண்

    19. வீடு

    20. உயரங்கள்

    21. சேகரும் அலியாபட்டும் பின்னே எரிச்சலும்...

    22. நண்பன்

    23. முதுகில் அழுக்கு

    24. அன்பு

    25. ஆசை ஆசையா சினிமா

    26. மகளும் தந்தையும்

    27. மனிதத்தின் நிறம்

    28. சிற்றாள்

    29. முகம்

    30. குழந்தையும் மணலும்

    1. காதல் போதை

    சென்னை மேடவாக்கத்துக்குத் தெற்கே வேங்கை வாசலில் வானளவிய கட்டிடங்களில் ஒன்றில் குடி போனேன். நான் 28 வயது எம்பீஏ ஐஐஎம் ஆமதாபாத்... 6 அடி...அந்தக்கால ரோஜா பட அரவிந்தசாமி போல மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். ஸ்டார்ட் அப் கம்பெனியில் இரண்டாவது ஆள். கொஞ்சம் பங்கும் சம்பளத்தோடு உதிரியாக வருடா வருடம் கிடைக்கும். நான் இல்லையெனில் எம்டிக்குக் சார்ஜில்லாத அலைபேசி நிலைமை. பரிதவித்து விடுவார்.

    அம்மா எனக்காக மருமகளை ஜோஸியரிடமும் கோவில்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார். ஏண்டா அசமஞ்சம்... ஒரு பொண்ணைக் கூட காதலிக்க வக்கில்லாமல் எங்க உயிரை வாங்குறே ன்னு பெருமையாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் சொல்வார்.

    முதல் மாடியில் க்ளப்ஹவுஸ்... சிறுவர் விளையாடுமிடம்... கொறிக்க, பருக, சிறு உணவகம் உண்டு. மூன்றாம் மாடியில் சின்ன கேளிக்கை அறை. குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட வசதியாக இருக்கும். எதிர் வீட்டு குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தனர். அங்குதான்... அ...வ...ளை..ப் பார்த்தேன். இதயம் தட தட வென ஸதாப்தி ரயில் மாதிரி ஓட... குளிர்சாதன அறையிலும் உஷ்ணம் கூடியது... என் கண்கள் காதுகள், மூக்கு, வாய், தலை, உடல் கைகள் எல்லாம் அவளை அப்படியே முழுங்கின... அவள் முழுங்கின பனிக்குழைவு (ஐஸ்க்ரீம்) என் தொண்டையைக் குளிரூட்டியது. வெண் பளிங்குத் தரையில் கறுப்புக் கோலிக் குண்டு இங்கும் அங்கும் ஓடுவது போன்ற விழிகள். வெங்காயச் சருகு நிற ஆடை. மேட்ச்சாக ஒரே ஒரு பிளாட்டின செயின் அவள் அழகை மேலும் கூட்டியது என்றால் மிகையில்லை.

    அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவன் ஏன் இப்படி முழுங்குறது மாதிரி பார்க்கிறான் என்று. இவள் போகாததனால் யார் யாரோ உலக அழகியாகின்றனர். அது நிச்சயம். மணிக்குடுவை உடல் என்று வர்ணிப்பரே... அதை விட கொஞ்சம் மெல்லியவள். நாசுக்காக இடது கை டிஸ்யூவால் அவ்வப்போது தன் ரோஜா உதடுகளை ஒற்றிக் கொண்டாள்.

    பேருக்குத்தான் சாப்பிட்டு முடித்தேன்.

    எதிர்வீட்டக்கா (நன்றிக்கா) என்னை அறிமுகம் செய்து வைத்தார் வளன் எம்பீஏ ஐஐஎம் என்று. அவள்... இனியா… எதிராஜில் மூன்றாம் வருடம் கணிதமாம். சொந்தமாம். வீடு நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகிலாம். இருவரும் புன்னகைத்துக் கொண்டோம். எனக்கு பேச்சே வரல என்பது நிஜம். அவளாவது பேசியிருக்கலாமேன்னு தோணுது. அவள் நான் பேச ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்திருக்கலாம். சான்ஸ் அவுட்.

    வேறு எங்கும் பார்க்க சந்தர்ப்பம் வரவில்லை. நாலு மாதம் கழித்து எதிர் வீட்டுக்கு மீண்டும் அவள் வந்திருந்த போது என்னையும் அந்தக்கா அழைத்திருந்தார். அந்தக்காவுக்கு என் மீது நல்ல அபிப்ராயம் என்று நினைக்கிறேன். நிறைய பேசினோம். சினிமா, மால், புத்தகங்கள், எனது வேலை, அவளது எம்எஸ்ஸி முதலாமாண்டு... என. அந்தக்கா அருமையான காப்பி போட்டுக் கொண்டு வந்து பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் நீட்டினார்.

    இந்த மாதிரி காப்பி நான் குடித்ததே இல்லை. சுவையா சூடாக இருந்தது. இனியா பார்த்த பார்வையோ காப்பியை விட போதையாக இருந்தது. அடுத்து இருவரும் பெஸண்ட் நகர் பீச்சில் ஞாயிறன்று சந்திக்கலாம் என முடிவு பண்ணினோம்.

    அவள் போன பின்பு நாக்கில் தங்கிய காப்பியின் சுவையை விட அவளைப் பற்றிய நினைவுகளே மேலோங்கி இருந்தது.

    அம்மாவுக்கு ஃபோன் பண்ணி உங்க மகன் அசமஞ்சமில்லைம்மா என்றேன்.

    2. அன்பு

    அம்மா வாசுகி, அகத்தியனுக்கான மதிய உணவை டப்பர்வேர்ல நிரப்பிக் கொண்டிருந்தார். கீழே கலந்த முருங்கைக்காய் சாம்பார் சாதம் நடுவில் நிறைய தேங்காய்த் துருவல் சூழப்பட்ட சின்னச் சின்ன பீன்ஸ் முக்கால் வேக்காட்டில் மேலே இரண்டு அப்பளம். பெயருக்கு இரு பூண்டுத் துண்டு ஊறுகாய். (எழுதும் போதே

    Enjoying the preview?
    Page 1 of 1