Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jananamum Maranamum
Jananamum Maranamum
Jananamum Maranamum
Ebook98 pages33 minutes

Jananamum Maranamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களின் கதை. இது நம்ம வீட்டில் நடந்துளதே... இது அந்த வீட்டில் நடந்ததே என எண்ண வைக்கும் கதைகள்.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580154009752
Jananamum Maranamum

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Jananamum Maranamum

Related ebooks

Reviews for Jananamum Maranamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jananamum Maranamum - Tamilselvan Ratna Pandian

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஜனனமும் மரணமும்

    சிறுகதைகள்

    Jananamum Maranamum

    Sirukadhaigal

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காதல் மாறாது

    2. காதல் வாகனம்

    3. இதுதான் காதல்

    4 இயற்கையின் திருவிளையாடல்

    5. குழந்தைப்பேறு

    6. கஞ்சா

    7. அசோக சக்ரா

    8. ஜனனமும் மரணமும்

    9. பெரியவர்

    10. பூரி

    11. ஐந்து லட்சம் ரூபாய்

    12. காதலர் தினம்

    13. பழி பாவம்

    14. ப்ரியாவும் மினிப்ரியாவும்

    15. கடத்தல்

    16. துகிலி

    17. நான்கு விழிகள்!

    18. துரை

    19. அம்மாவின் சிரிப்பு

    20. டெல்ஃபின் (Delphin)

    21. கல்யாண நாள்

    22. குடும்பம்

    23. பசங்க

    24. இஸ்திரி

    25. இளையமதி

    26. வெடுக் வெடுக் வெகுளி

    27. கல்யாணத்திற்கு பிறகு

    28. சிறுமியின் கனவு

    29. புதுக்கார்

    30. அவளைத் தொடர்ந்த கண்கள்

    1. காதல் மாறாது

    தினமும் பெருங்களத்தூரிலிருந்து பீச் வரை ரயில் பிடிக்க போகும்போது அந்தக் கடையைத் தாண்டித்தான் போகவேண்டும் மாதுளா. பிளஸ் 2 முடித்த பிறகு கல்லூரி போகும் வசதி குடும்பத்தில் இல்லாததால் பாரிஸ் கார்னர்ல ஏதோ ஒரு செட்டித் தெருவுல வக்கீலுக்கு ASDF அடித்துக்கொண்டு இருக்கிறாள் பச்சைத்தாள்களில். சாதாரண சேலையில் அசாதாரண அழகி அவள். பின்னல் பாம்பு மாதிரி முதுகில் இடுப்புக்குக் கீழ் வரை படரும்.

    ஒரு தெத்துப்பல் முகத்துக்கு கூடுதல் அழகு. கண்ணழகு கவிஞனால்கூட பாடமுடியாது... நான் எம்மாத்திரம்? நாசி... கொஞ்சம் உள்வாங்கியதுபோல கூர்மையாக... காது... ஆப்பிளை இரு கூறாக்கி இந்த பக்கம் ஒன்று அந்த பக்கம் ஒன்று... அப்படியே பார்த்துக்கொண்டே நிற்கலாம் போன்ற அழகு. இப்படி ஏழைப்பட்ட குடிசையில் எப்படி மாணிக்கம் மலர்ந்தது. கடவுளுக்கே வெளிச்சம்.

    பூர்ணன்... அந்தக்கால ரவிச்சந்திரன் லுக்... ரயிலடிக்குப் போகும் பாதையில் வாடகைக்கு ஒரு சின்ன பாத்திரக்கடை போட்ட திருநெல்வேலிக்காரன். சிறிய கடைதான். அவனும் ஊர்ல கல்லூரி படிக்க வசதியில்லாமல் 17 வயதில் பாண்டி பஜார் பாத்திரக்கடைகளில் மக்களுக்கு பாத்திரங்களைக் காட்டி முதலாளியிடம் அடிபட்டு, திட்டு வாங்கி உடல், மனம் எல்லாம் மரத்துப்போய் ஜென் நிலைக்கு வந்த பையன். இப்போது மீசை நன்கு வளர்ந்த இளைஞன். கடைக்கு வரும் இளம்பெண்களின் ஹீரோ. மாதுளா போகும் நேரம் அவனுக்குத் தெரியுமாதலால் அந்த நேரம் மட்டும் கடகடவென வாடிக்கையாளர்களை அனுப்பிவிட்டு வலது சுட்டுவிரல் நகத்தைக் குறைத்துக் கொண்டிருப்பவன். அவள் ஒருமுறை முகத்தைத் திருப்பிப் பார்த்தால் போதும் அன்று முழுதும் காதல் பாட்டுகளை முணுமுணுத்துக்கொண்டே ஜாலியான மூடில் இருப்பான். அவளுக்கும் இவன்மேல் ஒரு கண். இவனுடைய சுறுசுறுப்பு, வியாபார கலகல பேச்சு அந்த ஏரியாவிலேயே பிரசித்தம். கல்யாணப் பேச்சு மட்டும் எடுத்தால்,

    இருபது பெண்களாவது ‘நான்... நான்’ என பஸ்ஸில தீபாவளி நேரம் ஸீட்டுக்கு முந்துறதுபோல முந்துவர்.

    காலச்சக்கரம் கோடிக்கணக்கில் நிமிடங்களை விழுங்கியது. கடனுக்கு பாத்திரம் வாங்கிய நிறைய வீடுகள் ‘இந்த மாசம்... அடுத்த மாசம்...’ என வக்கீல் வாய்தாபோல இழுத்தடித்து சிலர் வீடுகளையே மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். சிலர் லோக்கல் ஆதரவில் வெளியூர் இளைஞனான பூர்ணன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினர். இதற்கிடையில் பழைய லஞ்ச் பாக்ஸ் ரயில்ல மறந்துபோய் புதுசு வாங்க வந்த மாதுளா பத்து நிமிடத்தில் தன் உள்ளத்தைத் திறக்க... பூர்ணன் சம்பூர்ணனாகி... முழுதும் சரணடைந்தான். இவ்வளவு பக்கத்தில் நிலவைப் பார்த்தால் உங்கள் கண் என்ன ஆகும்... அதே நிலை... கனவில் இப்போதெல்லாம் தினமும் மாதுளா. அவள் கனவில் பூர்ணன்.

    தினமும் கண்களின் இரு நொடி சந்திப்புகளில் திருப்தியடைந்தனர் இருவரும். மாதுளா வீடு வரை செய்தி பரவ... தங்கள் ஏழ்மையில் யாருக்கும் சீர்செய்து கல்யாணம் பண்ணி கொடுக்க இயலாத நிலையில் பூர்ணன் மாதிரி நல்ல பெயர் வாங்கிய இளைஞன் மாப்பிள்ளையாக வந்தால் கசக்கவா செய்யும் என்ற மனநிலை மாதுளா வீட்டில். இவள் புகைப்படத்தை ஆதிச்சநல்லூரில் வசித்த பெற்றோரிடம் காட்டி சம்மதம் பெற்றான் பூர்ணன். அவன் சம்பாத்தியத்தை பெரிதும் நம்பியே

    Enjoying the preview?
    Page 1 of 1