Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanasthi
Maanasthi
Maanasthi
Ebook104 pages35 minutes

Maanasthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிகழ்கால சம்பவங்கள், நாட்டு நடப்பு, குடும்ப இயல்புகளைக் கொணரும் சிறுகதைகள்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580154011101
Maanasthi

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Maanasthi

Related ebooks

Reviews for Maanasthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanasthi - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மானஸ்தி

    (30 சிறுகதைகளின் தொகுப்பு)

    Maanasthi

    (30 Sirukadhaigalin Thoguppu)

    Author:

    தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    பொருளடக்கம்

    1. கல்லூரி ஆசை

    2. நிலையான செல்வம்

    3. அவளுடைய நான்

    4. புள்ளிக்கோலம்

    5. பொங்கல் சீர்

    6. பதினைந்து வயது

    7. ஆசை ஆசை

    8. தயக்கமென்ன

    9. ஆண்களின் சொர்க்கம் (Gents paradise)

    10. மனசும்... வயிறும்...

    11. அட... இவரா...

    12. ஓட்டுனர்

    13. ராக்காயி

    14. விவாகரத்து

    15. சாப்பாடு

    16. பண்டிகை

    17. வேம்பரசி

    18. ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!

    19. கல்யாணம்

    20 நிர்வாகம்

    21 பதின்ம வயதினிலே

    22. முன் ஜென்மம்

    23. அக்கா தம்பி மற்றும் தாத்தா

    24. ஜெனி

    25. ஓட்டல்

    26. வித்யாவின் விவேகம்

    27. தொடர் கொலைகள்

    28. அம்மா கை மணம்

    29. மாசாணம்

    30. மானஸ்தி

    1. கல்லூரி ஆசை

    பிளஸ் டூ பாஸானவுடனே சேகரைச் சென்னைல பாண்டிபஜார்ல ஒரு பாத்திரக்கடையிலே சேர்த்து விட்டார் சேகரின் அப்பா. பிளஸ் டூல 1980 களில் 75 சதம் எடுத்தாலும் வீட்டு நிலையைக் காரணம் காட்டி சம்பாதிப்பதற்காக நெல்லை எக்ஸ்பிரஸில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் ஏற்றி விட்டார். சேகரின் கல்லூரி படிப்பு கனவு அந்த ரயிலிலேயே விலகி விலகிப் போனதோ?குடும்பத்துல இதுவரை டிகிரி யாரும் படிச்சதில்லை. தான் முதல்முதலா டிகிரி படிக்கலாம் என நினைத்திருந்த சேகர் ஆசை மனதில் ஆற்று வண்டல் மேலாக படிந்து விட்டது.

    கடைல கால் கடுக்க வேலை. ஆனால் இரவு வயிறு நிறைய சாப்பாடு போட்டு அங்கேயே தங்க வைத்தனர். மாதம் 50 ரூபாய் வீட்டுக்கு மணியார்டர் பண்ண முடிந்தது. சுற்றிலும் திருநெல்வேலி மாவட்ட சிறுவர்கள். எல்லா பசங்களும் எட்டு, பத்து, பிளஸ் டூ ஃபெயில் என வகைவகையா இருந்தனர். சேகர் மட்டுந்தான் பிளஸ் டூ. அவன் மார்க் கேட்டு கடைப்பையன்களிலிருந்து முதலாளி வரை வாயைப் பிளந்தனர். முதலாளி நடுநிலைப்பள்ளி முடித்தவுடனே கள்ள ரயிலில் வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வந்தவராச்சே.

    இவனது கணக்கு அறிவைப் பார்த்து சீக்கிரமாகவே கல்லாக்காரர் இல்லாத போது அங்கே உட்கார வைக்கப்பட்டான். இவனது நேர்மை, உழைப்பு புரிந்து கொள்ளும் திறமை காரணமாக சீக்கிரமாகவே தனியாக ஒரு சிறிய பாத்திரக்கடை வளர்ந்து வந்த பெருங்களத்தூர் ஏரியாவில் ரயில்வேஸ்டேஷனுக்கு மேற்கே வலது பக்க தெருவில் ஒரு பத்துக்கு பதினாறு வாடகைக்கடையில் ஆரம்பிக்க உதவியது. பழைய முதலாளியே வந்து சந்தோஷமாக திறந்து வைத்தார்.

    கல்யாணம்...

    குழந்தை...

    வியாபார முன்னேற்றம்...

    எல்லாம் சிறப்பாக நடந்தேறின. மனைவியும் நெல்லை மாவட்டத்துக்காரியே. சேகருக்கு பக்கபலமாக கடையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டாள். ஓரளவு சேமிப்பும் வங்கில போட முடிந்தது. பக்கத்திலே நெலம் ஏதும் சல்லிசா வந்தா வாங்கிப் போடுங்கன்னு நச்சரித்துக் கொண்டிருந்தாள். நல்ல யோசனைன்னு அவள் முதுகைத் தட்டினான் சேகர். பார்த்துக்கொண்டிருந்த மகன் சிரித்தான். பக்கத்திலே ஓடின மின்சார வண்டியும் தன் பங்குக்குக் கனைத்தது.

    ம்... நானு தபால் மூலமா பீ ஏ படிக்கலாம் னு பார்க்கிறேன்... தெனமும் ரெண்டு மணி நேரம் பகல்ல நீ கடையைத் பாத்துக்கணும்... சரியாசேகர் மனைவி கண்களில் ஆச்சரியங்கள் தோரணம் கட்ட சேகரை நிமிர்ந்து பார்த்தாள்.

    ஆமா... இந்த படிக்கிற ஆசை நெதமும் ராத்திரி ராத்திரி கனவுல எந்த ரூபத்லயாது வருது... சிரித்தான் சேகர். மனைவியும் மகனும் கூட சேர்ந்து சிரித்தனர். கடையைப் பார்த்துக்கொள்ள உதவிக்கு தனது பெற்றோரையும் கூட்டிவந்தான் சேகர். சனி ஞாயிறு கோச்சிங் கிளாஸ் ஒரு கல்லூரியில் நடந்தது. அவனது கல்லூரிக்கனவு இவ்விதமாக பலித்தது. ஒவ்வொரு முறை கல்லூரி படிகளில் ஏறும்போதும் தன்னை மிக உயர்வாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்தான் சேகர். வகுப்பில் முதல் ஒரு வாரம் அவனை நினைத்து மனதுக்குள் சிரித்தவர்கள் எல்லாம் அவனது ஞாபகசக்தி புரிதல் கண்டு வியந்தனர். வகுப்பில் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் அவனிடம் இருந்தன. ஆசிரியர்கள் தினமும் பாராட்டினர்.

    மூன்றாவது வருட தேர்வுகளில் ஒரு பாடத்தைக் தவிர மீதி எல்லாம் முடிந்தது. நல்லா எழுதியிருந்தான் சேகர். அடுத்த நாள் கடைசி தேர்வு. அன்று மூட் அவுட் அவனுக்கு. நாளையோடு கல்லூரி நாட்கள் முடிந்து விடுமோ... முகத்தில் கவலைக் குறிகள் தண்ணீர் தேங்கிய குட்டை போல காட்சியளித்தன. மனைவிக்கு அவன் மூஞ்சைப் பார்க்க சகிக்கல. மகனும் அமைதியா அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    ரொம்ப வருத்தப்படாதீங்க... உங்க ஆசைப்படி டிகிரி வாங்கி யாச்சு...அதுவும் குடும்பத்திலேயே முதலாக...நானும் பிஏ சேர்றேன்...எனக்கு பாடம் சொல்லிக் குடுங்க...நா எக்ஸாம் எழுதப் போகையிலே விடுறதுக்கு வாங்க...இன்னும் கொஞ்ச வருஷத்துல மகனும் போக ஆரம்பிச்சுடுவான்... புன்னகைத்தாள் மனைவி. சேகர் உண்மை நிலையை உணர ஆரம்பித்தான்...ஆமா...தான் நினைச்சதை சாதிச்சாச்சு...அதை நினைச்சு சந்தோஷப்படுறது தான் நல்லது. முகத்தில் ஓரளவு தெளிவு பிறக்கலாயிற்று. அவள் கைகளை ஆசையோடு பற்றிக் கொண்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1