Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iru Kodugal
Iru Kodugal
Iru Kodugal
Ebook131 pages1 hour

Iru Kodugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466107
Iru Kodugal

Read more from G.A.Prabha

Related to Iru Kodugal

Related ebooks

Reviews for Iru Kodugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iru Kodugal - G.A.Prabha

    20

    1

    மூன்றாவது மணியோசையில் விழிப்பு வந்துவிட்டது.

    விழிப்பு என்பது இமை பிரியத்தான்.

    மனசு முதலிலேயே விழித்து விட்டது.

    சுற்றுப்புறங்களின் உயிர்த்தாளங்களில் நினைப்பை நழுவவிட்டு சும்மா படுத்திருப்பது சுகம்.

    ‘சிவ சிவ’ என்று சொல்லிக்கொண்டே படுத்திருப்பார் சிவகுரு.

    மனசு சிறிது நேரம் வெளியில் சுற்றிவிட்டு வரும்.

    இப்போதும் அப்படித்தான்.

    வெளியில் வாசல் தெளிக்கும் சப்தம். கிணிகிணியென்ற மணியுடன் சைக்கிள் செல்லும் ஓசை. பிள்ளையார் கோவிலில் பூஜை நடக்கும் மணியோசை. அதுதான் சிவகுருவை எழுப்பிவிட்டது.

    காலையில் இப்படி மணியோசை கேட்டு விழிக்கும் நாள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. அன்று முழுதும் உதடு எதானும் பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருக்கும். நல்ல வெய்யில் காலத்தில் மழை பெய்வது போல் ஒரு ஜில்லிப்பு. குளுமை. பழரசத்தில் மிதக்கும் ஐஸ்கட்டி கரைவது போல் நாட்களின் நகர்வதில் மனசு ஜில்லிப்புடன் நழுவும்.

    இப்படி நழுவும்போதெல்லாம் மனசுக்குள் முத்துக்குமார் முகம் வரும். ‘மாமா’ என்று முகம் முழுதும் புன்னகையுடன் வந்து நிற்கும் முகம். சிவபெருமானைக் கண்டது போல் சிலிர்த்துப் போகும்.

    இப்பொழுதும் அப்படித்தான்.

    பிறைசூடிய பித்தனின் முகமாய் அது மனசுக்குள் வந்து நின்றது. சிவகுரு அதன் குளுமையை கண்மூடி ரசித்தார்.

    மனசு மெல்ல, மெல்ல நகர்ந்தது.

    முத்துக்குமார், அவன் தாய் லட்சுமி, தந்தை பசுபதியை நன்றியோடு நினைத்து, மெல்ல நகர்ந்து மகள் நந்தினியிடம் நிலைத்தது. அவளையும், முத்துக்குமாரையும் மணக்கோலத்தில் இணைநிறுத்தி நெகிழ்ந்தது.

    பார்வதி - பரமேஸ்வரன் போல்...

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் போல்...

    "அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

    ஆலவாயாவதும் இதுவே!’’

    பதிகம் மனசுள் ஓடியது.

    இது கூடல் நகர். இந்த வீடு ஒரு இனிய இல்லம். ஒற்றுமையும், அன்பும் நிறைந்த அன்புறு சிந்தையராகி அடியவர்கள் நிறைந்த வீடு.

    தங்கைக்காக வாழும் அண்ணன். அண்ணன் நலம் விரும்பும் தங்கையும் பிரியாமல் சேர்ந்து வாழும் வீடு. குடும்பத்தின் மேன்மைக்கு பிரார்த்திக்கும், ஒற்றுமையை விரும்பும் அவரின் மனைவி பார்வதி.

    கலகலப்பான தங்கை மகன் முத்துக்குமார். அவனுக்காகவே வளரும் நந்தினி.

    இந்த வீடுதான் எத்தனை இனிமையாக இருக்கிறது. இது நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அந்த நீலகண்டன் அருள்புரியவேண்டும்.

    சிவகுரு கண் திறந்தார். எழுந்து கிழக்கு நோக்கி சூரியதரிசனம் செய்தார். எழுந்து மரக்கட்டிலை நிமிர்த்தி வைத்துவிட்டு, பின்பக்கம் கிணற்றடியில் நீர் இறைத்து முகம், கைகால் கழுவி, பல்துலக்கி சிவாய நம என்று சொல்லி நெற்றியில் திருநீறு இட்டார்.

    முன்கட்டு கடிகாரம் ஆறு என்றதும். பத்து நிமிஷம் தேவாரம் படித்து பின் காபி குடித்துவிட்டு, ஆபீஸ் ரூமில் உட்கார்ந்தால், ஒருமணி நேரம் எழுதுவார். சைவ சமய சிறப்புகள், கேள்வி-பதில்கள் எழுதி டேபிளில் வைத்துவிட்டால் அவரின் உதவியாளர் வெண்ணிலா அதை எல்லாம் அந்தந்த பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவாள்.

    இன்று எழுத அதிகமில்லை. நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் அனைத்தையும் எழுதி முடித்துவிட்டார். சில சமயம் குறிப்புகள் எழுதி வைத்தால் முத்துகுமாரே முழுதும் எழுதி அனுப்பிவிடுவான்,

    அன்றைய டேபிளில் குறிப்புகள் இருந்தது.

    காலை எட்டரை மணிக்கு ஆகாரம் அருந்துதல் - விருப்பமிருந்தால் என்றிருந்தது. சிரிப்பு வந்தது. முத்துக்குமாரும் இப்படி தினசரி குறிப்பு எழுதுவதும், விருப்பமில்லை என்று சிவகுரு அடிக்கோடு இடுவதும் வழக்கமாய் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சி.

    நந்தினி பிறந்த இரண்டாவது வருஷம் அவர் தங்கை லட்சுமியும், அவள் கணவனும் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயம்.

    தன் தங்கை படும் அவஸ்தை காணச் சகிக்காமல், அவள் உயிர் பிழைக்க வேண்டி கோவில், கோவிலாகப் போனார் சிவகுரு. அப்போதுதான் அவருடைய நண்பர் ஒருவர் கூறியபடி சிவதீட்சை வாங்கி இல்லறத்திலிருந்து விலகி இருப்பதாகவும், தங்கையும், அவள் கணவனும் பிழைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.

    அதற்கு முன்பு மனைவியிடம் சம்மதம் கேட்டார்.

    ஒரு குழந்தை போதும். இறைவன் தொண்டில் நீங்கள் ஈடுபட, உங்களை கவனிக்கும் தொண்டில் நான் ஈடுபட, அதுவே பெரும்பேறு என்றாள்.

    ஆனந்தமாய் தீட்சை வாங்கினார். தங்கையும், கணவரும் பிழைத்தார்கள். அன்றிலிருந்து காலை ஆகாரம் கிடையாது. பெரும்பாலும் இயற்கை உணவுதான்.

    லட்சுமி காய்கறிகளை பச்சையாக சேர்த்து ஒரு சாலட் செய்வாள். அத்துடன் ஒரு டம்ளர் மோர். சப்பாத்தி இதுதான் மதிய சாப்பாடு. இரவு பால், பழம், நடுவில் கொஞ்சம் கொஞ்சம் தேன் கலந்து எலுமிச்சம் சாறு.

    கல்லூரியில் தமிழாசிரியர். பாடம் நடத்தும்போது சோர்வு வந்துவிடும் என்பதால் லட்சுமி வற்புறுத்தி எலுமிச்சை சாறு குடிக்க வைப்பாள்.

    தங்கை சொல் தட்ட முடியாது.

    சிவகுரு தங்கையை நினைத்தபடி உட்கார்ந்து மிச்சம் எழுத வேண்டியவைகளை எடுத்து டேபிளில் வைத்தார்.

    எழுந்துட்டீங்களா - பார்வதி காய்ச்சிய பசும்பாலை கொண்டு வந்து நீட்டினாள்.

    ம். இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் என்றவர் பாலைக் குடித்தார். டம்ளரை பார்வதியிடம் நீட்டினார்.

    பாப்பா வந்தாச்சா? - பாப்பா என்று தங்கையைக் கூப்பிடுவார். கண்ணு என்று மகளை. லட்சுமி கணவர் வழி உறவினர் திருமணத்துக்கு போயிருந்தாள்.

    வந்துட்டா. ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஆயிருச்சு உங்களை எழுப்ப வேண்டாம்னு விட்டுட்டோம்

    "அடடா. இப்ப தூங்கிட்டிருக்காங்களா?’’

    ஆமா

    சரி. அப்புறமா பாக்கறேன்

    எதானும் பேசணுமா

    ஆமா பார்வதி. நந்தினிக்கு இந்த மே ல காலேஜ் முடியுது. உடனே கல்யாணம் பண்ணிடலாம் இல்லையே. இந்த மாசத்துல நிச்சயம் செஞ்சிட்டா அப்புறம் ஒரே மாசம்தானே

    நல்ல காரியம்தான்

    ‘‘யாருக்கு டாட் கல்யாணம்" - நந்தினி தூங்கி எழுந்த கோலத்தில் உள்ளே வந்தாள்.

    உனக்குத்தான்

    "ஓ! நோ. நா மேல படிக்கணும் டாட்’’

    ‘‘நல்லாயிருக்கு கழுதை வயசு ஆகப்போறது" -பார்வதி.

    "நோ. ஐ டோண்ட் லைக் மேரேஜ்’’

    ‘‘தமிழ்ல பேசுடி. தமிழாசிரியர் மகள். அது என்ன எப்பப்பாரு இங்கிலீஷ்?’’

    அய்! நல்லாயிருக்கே கதை. தமிழாசிரியர் தன் மகளை தமிழ் மீடியத்துல படிக்க வைக்காம. ஏன் இங்கிலீஷ் மீடியத்துல, கான்வெண்ட்ல படிக்க வச்சாரு

    ‘‘அட. நம்ம பொண்ணு பின்னாடி ஃபாரின் போகப்போறா. இங்கிலீஷ் கத்துக்கட்டுமேன்னுதான்"

    நானா! ஃபாரினா! எப்போ?

    "கல்யாணம் ஆனதும்’’

    "ஏன் ஃபாரின் மாப்பிள்ளையா பாக்கறீங்களா?’’

    "எதுக்கு பாக்கணும்?’’

    பின்ன

    "முத்துக்குமார் இருக்கறப்போ ஏன் வெளீல தேடணும்’’

    "போச்சு. அந்த அமுல் பேபியா!’’

    ஆமா

    அவனுக்கு மீசையே இல்லையேப்பா

    மூக்குக்கு கீழ இருக்கும் பாரு

    யாரங்கே. ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வா

    Enjoying the preview?
    Page 1 of 1