Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamilselvanin Thennaga Payana Katturaigal
Tamilselvanin Thennaga Payana Katturaigal
Tamilselvanin Thennaga Payana Katturaigal
Ebook148 pages35 minutes

Tamilselvanin Thennaga Payana Katturaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆசிரியரின் தென்னக பயணங்களில் கோவா, ஹம்பி, மந்த்ராலயா, சிருங்கேரி, ஜோக் அருவி, பேலூர், ஹளபீட், பத்மநாபபுரம், கீழடி, சித்தன்னவாசல், கழுகுமலை, ஊட்டி, மகாபலிபுரம், கங்கைகொண்டசோழபுரம், பிச்சாவரம் போன்ற 42 சுற்றுலா ஸ்தலங்களைப் பற்றிய விபரங்கள் அழகியபடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580154011057
Tamilselvanin Thennaga Payana Katturaigal

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Tamilselvanin Thennaga Payana Katturaigal

Related ebooks

Related categories

Reviews for Tamilselvanin Thennaga Payana Katturaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamilselvanin Thennaga Payana Katturaigal - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ்ச்செல்வனின் தென்னக பயணக் கட்டுரைகள்

    Tamilselvanin Thennaga Payana Katturaigal

    Author:

    தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    பொருளடக்கம்

    1. ஹம்பி

    2. பண்ணாரி& கூடுதுறை

    3. காளஹஸ்தி கோவில்... ஆந்திரா.

    4. வனதிருப்பதி

    5. கொற்கை

    6. துவார சமுத்திரம் (ஹளபீட்)

    7. பேலூரு

    8. ஆண்டாள் கோவில் தரிசனம்... ஸ்ரீ வில்லிபுத்தூர்...

    9. நல்லதங்காள்

    10. ராஜபதி

    11. சிதம்பரம் பிச்சாவரம்

    12. மூணாறு

    13. பொது

    14. கள்ளழகர்

    15. குலதெய்வக் கோவில் பயணம்

    16. எட்டையாபுரம்

    17. கோவா

    18. பழையாறை

    19. உடுப்பி

    20. மதுரை & வண்டியூர்

    21. கீழடி

    22.மாயூரம்

    23. சீர்காழி

    24. பத்மநாபபுரம் அரண்மனை

    25.மஹாபலிபுரம்

    26. கண்ணனூர் கேரளா

    27. மறையூர்

    28. ஊட்டி

    29. சுவாமி மலை

    30. கரிவலம் வந்தநல்லூர், சங்கரன்கோவில்.

    31. திருச்செந்தூர், உவரி, குலசை.

    32. திருச்செங்கோடு, நாமக்கல், பழனி.

    33. திருவொற்றியூர், சென்னை.

    34. தென்காசி

    35. சுசீந்திரம் கோவிலும்

    36. மந்த்ராலாயா

    37. கழுகுமலை முருகர்

    38. திற்பரப்பு நீர்வீழ்ச்சியும் மாத்தூர் தொட்டிப்பாலமும்...

    39. வட்டக்கோட்டை

    40. திருவரங்கம்

    41. ஒகனேக்கல்

    1. ஹம்பி

    வாழ்க்கையே ஒரு பயணம் என சொல்வார்கள். அந்தப் பயணத்துக்குள்தாம் எத்தனை எத்தனை பயணங்கள்? பயணங்கள் புத்துணர்ச்சி தரும். புது புது அனுபவங்கள் சீக்கிரமாகவே எதிர் கொள்வீர்கள். புது புது இடங்கள், மனிதர்கள், இயற்கைக் காட்சிகள், உணவு, மொழி, கலாச்சாரம் காண்பவர் மனசு பேரன்பு தளும்புவதாகவும், பெற்றோரைப் போல பரந்த மனதுடையவராகவும் விரிவடையும்.

    மலை, கடல், நீர்வீழ்ச்சி, பசும் வயல், புராதான கோவில்கள், டீ எஸ்டேட்கள், ஆறுதல் தரும் நதிகள்... நுணுக்கமான சிற்பங்கள், வித்தியாசமான மனிதர்கள்...

    ... பார்த்துக்கொண்டே இருக்கலாம் னு தோணும்.

    இந்த புத்தகத்தில் நான் போய் வந்த தென்னிந்திய சுற்றுலா தலங்களில் சிலவற்றை மட்டும் தொகுத்துள்ளேன். நான் எடுத்த படங்களைத் தவிர சில கூகுள் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்.

    முதலில் ஹம்பி, கர்நாடகா

    27.11.22 அன்று வெற்றிகரமாக பெங்களூர் மத்யமர் முகநூல் குழு நண்பர்கள் 20 பேரை ஓட்டல் விருந்தில் சந்தித்து விட்டு...14ம் நூற்றாண்டுக்கு பேருந்தில் சென்றேன்.

    ஆம்...

    ஹம்பி... ( விஜயநகர பேரரசின் தலைநகர்)

    விஜயநகரப் பேரரசின் தலைநகரைத் தலைக்கோட்டை போரில் தொலைத்து விட்டு மிச்சம் மீதி இருப்பதைக் காணலாம். மிஞ்சியதே இவ்வளவு அழகு எனில்...நினைத்தே பார்க்க முடியாத பேரழகாக அப்போது இருந்திருக்க வேண்டும் இம் மாபெரும் தலைநகர். மக்கள்தொகை அந்த காலத்திலேயே லட்சக்கணக்கில்! பாறைமலைகளும் துங்கபத்ராவும் இயற்கை அரணாக அமைந்திருந்த நகர்...

    நிறைய கோவில்களில் கோபுரமில்லை; மூல விக்கிரகங்கள் இல்லை... எல்லாவற்றையும் எதிரி அரசர்கள் இடித்து விட்டனர். சில இடங்கள் மேற்கூரையில்லா நாளந்தா இடிபாடுகளை நினைவு ‘படுத்தின’.

    என் கனவுப்பயணம் நிறைவேறியது அன்று.

    பெங்களூரிலிருந்து 330 கிமீ தூரத்தில் ஹோஸபேடே ( Hospet) நகருக்கருகில் 10 கிமீ தூரத்தில் அமைந்துளது. நான் ஹோஸபேடே நகரிலேயே தங்கிக் கொண்டேன். (அப்போதுதான் நகரின் இன்னொரு புறமுள்ள துங்கபத்ரா அணைக்கட்டைக் கண்டு களிக்க முடியும். ) உலக புராதன சின்னம். வாழ்நாளில் பார்த்தே ஆக வேண்டிய இடம். லோகல்...ஆட்டோவிலோ காரிலோ சுற்றிப் பாருங்கள். பரந்து விரிந்த நகரம். நடந்து சுற்றிபார்க்க இயலாது. அந்தக்காலத்தில் உலகிலேயே பீகிங்குக்கு அடுத்து பெரிய நகரமாம். கிபி 1336-1565...விஜயநகரப் பேரரசின் தலைநகர். ஹரிஹரர் புக்கர் இருவரால் புகழ் பெற்ற நகர். 16 சதுர மைல் பரப்பளவு. முக்கிய இடங்கள்:

    விருபாக்ஷா கோவில்

    விஜய விட்டலா கோவில்

    யோகநரசிம்மா கோவில்

    கணேஷா கோவில்

    கல்தேர்

    அச்சுதராயா கோவில்

    இடிந்த மார்க்கெட்

    யானைக் கொட்டில்

    தாமரை மஹால்

    சதுர வேலைப்பாடுள்ள கிணறு

    தர்பார்

    ஓவியங்கள், நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள்

    குளியல் வசதிகள்

    பர்ஸ்வநாத்தீர்த்தங்கரர் கோவில்

    துங்கபத்ரா நதி... இன்னும் நிறைய இடங்களைக் கண்டுகளிக்கலாம்!

    ஹோஸபேடே அருகில் துங்கபத்ரா அணையும் பார்க்க வேண்டிய அழகிய பரந்து விரிந்த இடம். ஜஸ்ட் 7 கிமீ தூரம் தான். அணைக்கட்டின் ஒரு பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. அணைக்கட்டுக்கு 28000 சதுர கிமீ பரப்பளவு இடங்களிலிருந்து நீர் சேகரமாகிறது எனில் கற்பனை பண்ணிப் பாருங்கள். உயரம் 162 அடி. நீளம் 2.45 கிமீ... ஏயப்பா... எம் புட்டு நீளம் என்கிறீர்களா... கடலைத் தேக்கி வைத்த அணை போல தோற்றம். பூங்காக்களும் அழகு.

    2. பண்ணாரி& கூடுதுறை

    8.11.23

    பண்ணாரி அம்மன்

    பாரியூர் அம்மன்

    பவளமலை முருகன்

    கூடுதுறை சங்கமேஸ்வரர்

    சங்ககிரி கோட்டை

    வெகுநாளாக பண்ணாரியம்மன்

    Enjoying the preview?
    Page 1 of 1