Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponniyin Selvanum Naanum
Ponniyin Selvanum Naanum
Ponniyin Selvanum Naanum
Ebook76 pages20 minutes

Ponniyin Selvanum Naanum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன்னியின் செல்வனை யாரால் மறக்க முடியும்? படிக்கும் போது இந்த இடங்களை எல்லாம் பார்த்திட வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இல்லை. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய உணர்வுகளுடன் இயைந்த பயணத்தையும் அதன் மூலமும் என்னுள் கிளர்ந்த உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580147210545
Ponniyin Selvanum Naanum

Read more from G. Shyamala Gopu

Related to Ponniyin Selvanum Naanum

Related ebooks

Related categories

Reviews for Ponniyin Selvanum Naanum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponniyin Selvanum Naanum - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொன்னியின் செல்வனும் நானும்

    Ponniyin Selvanum Naanum

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    "பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?

    வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர்-கையகலக்

    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,

    வாளோடு முன் தோன்றி மூத்தக்குடி.

    புறப்பொருள் வெண்பாமாலை கி.பி.9ஆம் நூற்றாண்டு.

    பொருள்—

    மலை தோன்றி வயல் தோன்றா காலத்தே கையில் வில் வாளோடு முன்பு இருந்த ஆதிகுடிகள் தமிழர்கள். இத்தகைய தமிழர்களை ஆண்ட மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிசோழன் ஆண்ட சோழ தேசம் மட்டுமன்றி சங்கம் வளர்த்த பாண்டிய தேசமும் கடவுளின் சொந்த தேசமாக இன்றும் கொண்டாடப்படும் சேர தேசமும் கொண்டது பழைய தமிழகம்.

    நம் தமிழ் மொழியும், தமிழர்களும் நீண்ட நெடிய வரலாறு கொண்டவர்கள். நம் வாழ்க்கை முறை, மொழியின் தொன்மை, பண்பாடு ஆகியவை இயல்பிலேயே நமக்கு தன்னம்பிக்கையும், கர்வமும் தருபவை.

    நாம் கற்றவைகளையும் கேட்டவைகளையும் கண்ணால் பார்த்து கையால் தொட்டு உணர்வதைப் போன்ற சுகம் வேறு எதிலும் உண்டோ! பண்டைய தமிழகத்தின் வளமை மிக்க சரித்திரத்தைப் பின்புலமாக கொண்ட அமர காவியமான கல்கியின் பொன்னியின் செல்வனே அன்றி எது நம்மை மனம் நிறைய வைக்கும்? வந்தியத்தேவனின் பாதையில் மட்டுமன்றி சோழனின் சரித்திரம் சொல்லும் இடங்களையும் பயணித்தேன். உலகிற்கே எடுத்துக்காட்டான கலைகளையும் பண்பாட்டையும் கொண்ட நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை கண்டு, உணர்ந்து, மனம் உவந்து, நெகிழ்ந்து பயணப்பட்ட சுகத்தை என்னென்பது?

    வந்தியத்தேவனின் பாதையில் பொன்னியின் செல்வனின் கதை ஆரம்பிக்கும். அவன் பயணித்ததாக வர்ணிக்கப்பட்ட இடங்களில் என் பயணம் தொடங்கும். தொடரும். அன்றைய சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்பட்ட இடங்கள் இன்று சிறு சிறு கிராமங்களாக பழைய சரித்திரத்தின் எச்சங்களாக நின்று போய் விட்டிருக்கிறதே. அதன் சாட்சியாக அங்கே கோயில்கள் மட்டும் நம் சரித்திரத்தை இன்னும் நமக்கு விளக்கிக் கொண்டு காலம் கடந்தாலும் கரையாத கற்றளிகளாக நின்று கொண்டிருக்கிறதே. அதை நோக்கியே என் பயணத்தை ஆரம்பித்தேன்.

    ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட கோயில்களின் ஆன்மீக நம்பிக்கை சார்ந்த விவரங்கள் கூகுள் விக்கிப்பீடியாவில் படிக்க கிடக்கும். எனவே அதைப் பற்றி எழுதாமல் நம் பண்டைய சரித்திரத்தின் எச்சங்களாக, கலாச்சாரத்தின் நீட்சியாக, இன்றைக்கும் நின்று கொண்டிருக்கும் கோவில்களின் நம் உணர்வுபூர்வமான பிணைப்பை மட்டுமே எழுத தொடங்குகிறேன்.

    இது உங்களுக்கு ஒரு நிறைவை கொடுக்குமானால் அதுவே என் நோக்கம் நிறைவேறியதாக கொள்வேன். சோழ சரித்திரத்தில் ஆர்வமும், பொன்னியின் செல்வனின் கதை போன பாங்கில் விருப்பமும், படிப்பதில் ஆர்வமும் கொண்ட வாசகர்களுக்கு இந்த பயணக்கட்டுரை சுவையூட்டும் என்றே

    Enjoying the preview?
    Page 1 of 1