Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manimudiyum Udaivaalum
Manimudiyum Udaivaalum
Manimudiyum Udaivaalum
Ebook277 pages1 hour

Manimudiyum Udaivaalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன்னியின் செல்வனில சொல்லப்பட்ட பாண்டியர்களின் உடைவாளும், ரத்தின ஆரத்திற்கு பதிலாக பாண்டிய மணிமுடியும் இன்றைக்கு என்ன நிலையில் எங்கே உள்ளது என்பதற்கான தேடல்.

Languageதமிழ்
Release dateNov 26, 2022
ISBN6580147208657
Manimudiyum Udaivaalum

Read more from G. Shyamala Gopu

Related to Manimudiyum Udaivaalum

Related ebooks

Related categories

Reviews for Manimudiyum Udaivaalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manimudiyum Udaivaalum - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மணிமுடியும் உடைவாளும்

    Manimudiyum Udaivaalum

    Author:

    G. ஷியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    என்னுரை

    வரலாற்றுப் புதினம் எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருக்கும் சுலபமாக ஒரு முடிவை சொல்லிவிடலாம். ஆனால் சரித்திரக் கதைகளை இவ்விதம் முடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. உசிதமும் ஆகாது. சரித்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள். - ஆசிரியர் கல்கி.

    பொன்னியின் செல்வன் தொடரின் முகவுரையில் இப்படி எழுதியிருப்பார் ஆசிரியர் கல்கி. இந்த கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும், ஆற்றலிலும், ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல மகோன்னதமான நவீனங்களை எழுதி தமிழகத்திற்கு மேலும் தொண்டு செய்வார்கள்.

    இதில் எந்த வகையிலும் நான் வரவில்லை. எனக்கு அந்த தகுதியும் இல்லை. ஆனால் ஒன்று. ஆசிரியர் கல்கி தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டு சென்றது என்னாலும் கூட நடந்தேறியது என்று. ஆம். நானும் சோழ தேசத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த வரலாற்று புதினத்தை புனைந்திருக்கிறேன்.

    ஆசிரியர் அகிலனின் வேங்கையின் மைந்தன் என்னும் புதினத்தில் ஈழத்துப் போரில் பாண்டிய மன்னன் ஒருவன் இழந்த மணிமுடியையும், உடைவாளையும் பற்றி எழுதி இருப்பார். பாண்டியன் ஈழத்து மகிந்தரிடம் தோற்றது. பாண்டியனின் மணிமுடியை மகிந்தர் கொண்டு சென்றது. அதை பராந்தகன், சுந்தர சோழன் மட்டுமன்றி ராஜராஜன் முதலானோர் தேடியது. இறுதியில் வேங்கையின் மைந்தனான ராஜேந்திரனின் காலத்தில் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ அதை மீட்டுக்கொண்டு வந்தது. அவனுக்கே ராஜேந்திரன் தன் மகள் அருள்மொழியை திருமணம் செய்து வைத்தது என்று விரிவாக எழுதியிருப்பார்.

    அதே ஆசிரியர் அகிலன் அவர்களின் கயல்விழி என்னும் வரலாற்று புதினத்தில் இடைக்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்னும் மன்னன் சோழர்களின் அரசனான மூன்றாம் ராசராசனை பழையாறை வரை விரட்டி சென்று ஒடுக்கி தனக்கு கப்பம் கட்ட வைப்பான். இவன் காலத்திற்குப் பிறகு பாண்டியர்களின் எழுச்சியும், சோழர்களின் வீழ்ச்சியும் ஆரம்பமாகும். இந்த புதினத்தில் சோழர்களால் கைப்பற்றப்பட்ட மணிமுடியும் வைரங்கள் பதித்த உடைவாளையும் பற்றி ஒன்றுமே எழுதியிருக்க மாட்டார். கோடிட்டுக்கூட காட்டியிருக்க மாட்டார் ஆசிரியர் அகிலன் அவர்கள்.

    இந்த பெரிய ஜாம்பவான்கள் என்னைப்போல எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு இத்தகைய சரித்திர இடைவெளியை விட்டு சென்றிருக்கிறார்கள். வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பதைப்போல இந்த விடுபட்டுப்போன மணிமுடியும் உடைவாளையும் தேடிக்கொண்டு இத்தகைய சரித்திரத்தின் இடுக்குகளில் நான் பிரயாணப்பட்டதில் என் கற்பனையை பரிபூரணமாக ஓட விட்டிருக்கிறேன்.

    சோழ மக்கள் நாங்கள் உடலால்தான் உன்னிடம் தோற்றோமே அன்றி எங்கள் சரித்திரத்தை மாற்றி எழுதிட உன்னால் முடியாது என்று சவால் விடுகின்றனர்.

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதை நான் அடைந்தே தீருவேன். வரலாற்றை மாற்றியே தீருவேன் என்று சுந்தர பாண்டியன் சபதமிட எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னால் மணிமுடியும் உடைவாளையும் கொண்டு போக முடியாது என்று சோழ மக்கள் சவால் விடுகிறார்கள்.

    பதிமூன்று தலைமுறையாக மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இந்த மணிமுடியும் உடைவாளையும் தேடிக் கொண்டிருக்கிறான். அதை அவன் அடைந்து எடுத்து சென்று தன் சபதத்தில் வெற்றி அடையவிடக் கூடாது என்று சோழர்களின் வாரிசுகள் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பாண்டிய அரசர்களின் அட்டவணையில் சுந்தர பாண்டியன் பதிமூன்றாவது மன்னன். எனவே மூன்றாம் ராசராசனை எதிர்த்த சுந்தர பாண்டியன் இந்த காலக்கட்டத்தில் மாறனாக வருகிறான்.

    அநபாய சோழனின் உதவிக்கு, பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையராக, இன்றைய அநபாயனின் தந்தை பேராசிரியர் அமுதவாணனும், தெலுங்கு சோடர்கள் என்னும் சோழர்களும், மாறனின் உதவிக்கு ரவிதாசனும், ஈழத்து விஜயபாகுவின் மகள் விஜயலக்ஷ்மியும், பாண்டிய ஆபத்துதவிகளும் துணை நிற்கின்றனர்.

    இதனிடையே, இன்றைய அநபாயனின் இந்நாள் காதலியான காயத்ரியும், அவள் குடும்பத்தினரும் மட்டும் கதை மாந்தர்கள். கற்பனைப் பாத்திரங்கள்.

    பாண்டியர்களின் மணிமுடியை பாண்டியனின் பதிமூன்றாம் ஜென்மமான மாறன் எடுத்தானா? அல்லது சோழர்களின் இன்றைய வாரிசான அநபாயன் அதை முறியடித்தனா? இதைதான் புதினமாக புனைந்திருக்கிறேன்.

    தோளுக்கு வளர்ந்த பிள்ளையை மட்டும் தன் பிள்ளை என்று தகப்பன் சொல்வதில்லை. தவழ்ந்து வந்து தன் கால்களைக் கட்டிக்கொள்ளும் குழந்தையும் தன் பிள்ளை என்றே உச்சி முகரும் தகப்பன்கள் அல்லவா ஆசிரியர் கல்கியும், ஆசிரியர் அகிலனும்.

    இந்த கதையை விறுவிறுப்பாக கொண்டுசெல்ல முயன்றிருக்கிறேன். நிறைகள் இருந்தால் அது வரலாற்றுப் புதினம் எழுதி சோழர்களை நம் கண்முன் கொண்டுவந்து இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் கல்கி அவர்களையும், ஆசிரியர் அகிலன் அவர்களையும் சாரும். குறைகள் இருப்பின் அது முற்றும் முடிய என்னை மட்டுமே சாரும்.

    G. சியாமளா கோபு

    15.06.2020

    சென்னை-119

    1

    அமெரிக்காவின் மிகப் பழமையானதும், புகழ் பெற்றதுமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சரித்திர ஆராய்ச்சி பிரிவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் ஆராய்ச்சியை அங்கே சமர்பித்துக் கொண்டிருந்தார்கள். எள் விழுந்தால் எண்ணை எடுத்து விடலாம் அத்தனைக் கூட்டம். ஆனால் அத்தனை பெரிய கூட்டமும் அமைதியாக இருந்தது. இன்று சமர்பிக்கப்போகும் கட்டுரைகள் அனைத்தும் உலகளாவிய நாடுகளின் வரலாற்றின் எச்சங்களைப் பற்றியது. எப்போதுமே வரலாறு என்பது கற்பனைக் கதைகளையும் மிஞ்சிவிடக்கூடிய அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது தானே! கதை கேட்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது!

    பிரிட்டன் நாட்டை சேர்ந்த மாணவன் ஒருவன் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நாட்டு வாணிபர்கள் எந்தெந்த நாட்டிற்கு வாணிகம் செய்ய சென்றார்கள். அதற்கான பாதை எது? பயணத்தின் முடிவில் எந்தெந்த நாடுகளை கைப்பற்றிக் கொண்டார்கள். சூரியன் தோன்றி மறையும் அளவிற்கு பிரிட்டிஷ் நாடு எவ்வாறு பரந்து விரிந்து இருந்தது என்று விளக்கிவிட்டு அமர்ந்தான்.

    இன்னொரு மாணவன் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ரோம் நாட்டிற்கும், கீழை ஆசிய நாடுகளுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் இருந்த வாணிபத்தொடர்புகள் சோழ தேசத்தை கைப்பற்றி, யவனர்கள் அரசாள முயன்றதையும் அதற்காக ரோம படைத்தளபதி டைபீரியஸ் சோழ தேசம் வந்ததைப் பற்றியும் அரசை கைப்பற்றி விடக் கூடிய செல்வாக்கும், படைபலமும் கொண்டிருந்தனர் யவனர்கள் என்றும், பின்பு சேர நாட்டிலிருந்து வாசனை திரவியங்கள், மசாலா சாமான்கள் ஏற்றுமதியையும் பதிலுக்கு ரோமர்களின் பட்டு சல்லாத் துணிகளைப் பண்டமாற்று செய்துகொண்டதைப் பற்றியும் விளக்கினான்.

    இறுதியாக எழுந்த அநபாயன், தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை அறிமுகப்படுத்தினான். அதை விவரிக்கும் விதமாக தொண்டையை கனைத்துக்கொண்டு பேச தொடங்கினான். என் நண்பர் பிரிட்டிஷ் நாடு எங்கெல்லாம் வியாபாரம் செய்தது என்று சொன்னார். நான்கு நூற்றாண்டுகள் வரலாறு. அதை நான் மதிக்கிறேன். ரோம வரலாறு ரெண்டாயிரம் வருடங்கள் தமிழகத்துடன் வியாபாரம் செய்ததைப் பற்றி அவர் விளக்கினார். நான் அதை இன்னும் விரிவாக சொல்கிறேன் என்றவாறு கூட்டத்தை ஒரு பார்வைப் பார்த்தான்.

    அமைதியாக இருந்த கூட்டம் அவன் சொல்லப்போவதைக் காது கொடுத்து கேட்க தயாராகவே இருந்தது. அது அவனுக்கு திருப்தியைத் தரவே தன் பேச்சைத் தொடர்ந்தான் அநபாயன்.

    உலக நாடுகளின் சரித்திரங்களையும், இலக்கியங்களையும் கிறிஸ்து பிறப்பிற்கு முன், கிறிஸ்து பிறப்பிற்கு பின் என்றுதான் இரண்டாக பகுப்பார்கள். ஆனால் தமிழ் அரசுகள் மட்டும் தங்கள் மொழியால் அதாவது சங்க காலத்திற்கு முன்பு, சங்க காலத்திற்கு பின்பு என்று இரண்டாக பகுக்கிரார்கள். ஏனெனில் தமிழனின் வாழ்வும், அரசியலும், அரசுகளும் எங்கள் மொழியை மையம் கொண்டதாக இருப்பதால்தான் இன்னும் எங்கள் மொழி சாகாமல் தினந்தோறும் செழித்து ஓங்குகிறது.

    உங்கள் மொழியைப் பற்றிய ஆராய்ச்சியா உங்களுடையது? என்று இடைமறித்தார் பேராசிரியர் ஒருவர்.

    இல்லை. இது எங்கள் நாட்டைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சிதான்.

    அதைப் பற்றி பேசுங்கள்.

    எத்தனையோ ஆண்டு காலங்கள், கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வருட பழமையான இந்த மொழியின் சரித்திரம்தான் எங்கள் நாட்டின் சரித்திரம்.

    ஓகே. சரி மேலே சொல்லுங்கள்.

    பிரிட்டிஷ் நண்பர் சொன்னதைப்போல தமிழர்களும் வாணிபத்திற்காக கடல் கடந்து இரு வழி பயணம் செய்த திரை மீளர்கள் தான். இன்றைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தெட்டு நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அநேக நாடுகளில் தமிழர்கள் பூர்வ குடிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்ட்ரேலியா, மெக்சிகோ, இந்தோ பசிபிக் கடல் பிரதேசங்களில் தமிழ் கூறுகள் காணப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஆயி என்னும் பழங்குடியினர், தமிழர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் கடல்வழியாக பயணப்பட்டு அங்கே குடியேறியவர்கள்.

    நீங்கள் உங்கள் சப்ஜெக்டை விட்டு வெளியே போறீங்க.

    இல்லை. இத்தனை நாடுகளுக்கு கடல் கடந்து வாணிகம் செய்தாலும், பிரிட்டிஷாரைப் போல நாங்கள் எந்த நாட்டையும் அடிமைப்படுத்தவில்லை. கைபற்றிக்கொள்ளவும் இல்லை.

    நாங்கள் வீரர்கள் பிரிட்டிஷ் மாணவன் சத்தமிட்டான்.

    தென்கிழக்கு ஆசியாவின் அலெக்சாண்டர் என்று போற்றப்பட்ட எங்கள் முன்னோடி ராஜேந்திர சோழன் எத்தனை நாடுகளை விஜயம் செய்தார். ஆனால் எந்த ஒரு நாட்டிலிருந்தும் ஒரு கைப்படி மண்ணும் கொண்டு வந்தவரில்லை. இதுதான் வீரம். நாங்கள் பெருந்தன்மையுடன் கூடிய விவேகத்தையே வீரம் என்போம்.

    சரி. உங்களின் ஆராய்ச்சி என்ன? இந்த மன்னர்களைப் பற்றியதா?

    ஆமாம். இந்த மன்னர்கள் பற்றியதுதான். பல நாடுகளுக்கு சென்று போரிட்டு மன்னர்களின் கிரீடங்களையும், ஏராளமான பொன் வெள்ளியையும் கொண்டுவந்து தங்கள் நிலவறை பொக்கிஷ சாலைகளில் கொட்டி வைத்திருந்தனர்.

    இப்போதும் அவைகள் இருக்கிறதா?

    இப்போதும் இருப்பதாக சொல்லுகின்ற ஒரு செப்புப் பட்டயம் உண்டு. ஆனால் அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

    ஏன் அப்படி?

    ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாரிடம் இந்த செப்புப் பட்டயத்தின் சாராம்சம் இருக்கிறது. அதை அவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அதை அரசாங்கத்தால் கைப்பற்ற முடியாதா?

    நிச்சயமாக முடியாது.

    அப்படி கூட உண்டா?

    அந்த குடும்பத்தின் வாரிசுகள் யார் எவர் என்று வெளியே தெரிவதில்லையே. கிளை கிளையாக பிரிந்துக் கிடக்கிறார்கள். அதில் முக்கியமானவர் யார்? அவரிடம் இந்த பட்டயம் இருக்கிறதா? அந்த பட்டயம் சொல்லும் செய்தி என்ன? அந்த நிலவறை எங்கே இருக்கிறது? என்றெல்லாம் இன்னும் மர்மமாகத்தானிருக்கிறது.

    இன்றைக்கு இருக்கும் ஹை-டெக் உலகில் மண்ணிற்கு அடியில் புதைந்துகிடக்கும் பொருட்களை கண்டுபிடிக்க முடியாதா என்ன?

    நீங்கள் நினைப்பதைப் போல அது ஒரு சுரங்கமோ, கட்டிடமோ அல்லது நிலவறையாகவோ இருந்தால் கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் அது எங்கே எப்படி இருக்கிறது என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்கு ஒரு சிறு தடயம்கூட நம்மிடம் இல்லை.

    ஓ…! ஹோ என்று சோர்ந்தது கூட்டம்.

    நீ சொல்வதை எப்படி நம்புவது?

    எதை?

    மண்ணுக்கடியில் இருக்கும் பொக்கிஷசாலை என்று ஒன்று உண்டு என்பதை எப்படி நம்புவது?

    சொல்கிறேன். அதற்கு நீங்கள் தமிழக சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

    ஓகே என்று ஆர்பரித்தது கூட்டம்.

    நல்லது என்றவன் பழைய தமிழ்நாட்டின் வரைபடத்தை போட்டான். "இதுதான் பழைய தமிழ்நாடு. இது சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூன்று ராஜாக்களால் ஆளப்பட்டு வந்தது. இதில் முக்கியமானவர் விஜயாலய சோழர். இவர் தொடங்கி முன்னூறு ஆண்டுகள் மொத்த தமிழகத்தையும் ஆண்டது மட்டுமல்லாமல், அக்கம் பக்கம் இருக்கும் சாளுக்கியர்கள், ராஷ்ட்ரகூடர்கள், கோசலர்கள் என்று வடக்கே இமயமலை வரை சென்றது மட்டுமன்றி கடல் கடந்து இன்றைய இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் என்று தெற்காசிய நாடுகள் என அத்தனை நாடுகளை அடக்கி தங்கள் வியாபாரத்தை மட்டும் அங்கே நிலைநாட்டிக் கொண்டு அவரவர்களை அவர்களே ஆண்டுக்கொள்ள சொன்ன பேராண்மையினர் இவர்கள்.

    இதில் சோழர்களுக்கும், மதுரையை தலைநகராகக் கொண்ட பாண்டியர்கள் என்னும் மன்னர்களுக்கும்தான் அடிக்கடி யுத்தம் வந்தது. பாண்டியனுக்கு உதவியாக இலங்கை மன்னன் வீரபாகு சண்டைக்கு வருவான். பல நாட்டு மன்னர்களை வெற்றிக்கொண்டு பொன், வெள்ளி மட்டுமன்றி அந்த மன்னர்களின் வைரம், வைடூரியத்தால் ஆன கிரீடங்கள், வாட்கள் அத்தனையையும் கொண்டுவந்து இந்த பொக்கிஷ சாலையில் வைத்தார்கள் சோழர்கள்."

    மதுரையின் பாண்டியர்கள் முன்னூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தாலும் சோழர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்து எறிந்து தங்கள் நாட்டை மீட்டுவிட வேண்டும் என்ற சுதந்திர வேட்கை அவர்களுக்கு வழி வழியாக இருந்துகொண்டே இருந்தது. அதில் முக்கியமானவன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். இவன் சோழ மண்ணின் கடைசி மன்னனான மூன்றாம் ராஜராஜானை வென்று சோழர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

    என்று ஆர்பரித்தனர் கூட்டத்தினர்.

    எப்படி? எப்படி? என்று பரபரத்தார்கள்.

    ஒரு பெண்ணால் என்று நிறுத்தியவன் கூட்டத்தினரின் நாடித்துடிப்பை எகிற வைத்தான்.

    பெண்ணாலா?

    இதுவும் பெண்ணால் தானா?

    ஆம்.

    காதலா? என்று ஒரு பேராசிரியர் கேட்டார்.

    இல்லை. பரம்பரை பெருமை பேசியதால் என்றான் புன்னகையுடன்.

    அது ஒரு குற்றமா? என்று அவரே அதிசயப்பட்டுக் கொண்டார்.

    குற்றமாகித்தான் போச்சு.

    என்ன என்று விளக்கமாக சொல்லுங்களேன்.

    அநபாயன் கூட்டத்தினரின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டு நிதானமாக கதையை சொல்லத் தொடங்கினான். கதையல்ல. தமிழகத்தை ஆண்ட முன்னோர்களின் சரித்திரத்தை சொல்லத் தொடங்கினான். மாறவர்மன் சுந்தரபாண்டியன், ஒரு சோழ இளவரசியை வம்படியாக திருமணம் செய்து தங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தான். அந்த இளவரசி பாண்டியனின் அரண்மனையைப் பார்த்து சிரித்தாள். இதுதான் உங்கள் பாண்டிய மன்னர்களின் அரண்மனையா? ஹா, இது எங்கள் சோழ அரண்மனையின் குதிரை லாயத்தை விட சிறியது என்று கேலி செய்தாள்.

    ஆத்திரம்கொண்ட சுந்தரபாண்டியன் அந்த இளவரசியின் பிறந்த வீடான கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனையை இடித்து தரை மட்டமாகி அங்கே கேழ்வரகை விதைத்து விட்டான்.

    கேப்பையை விதைத்தால் அது தவறா? என்று ஒரு மாணவன் கேட்டான்.

    விளை நிலத்தில் கேப்பையை விதைத்தால் அது தானியமாக விளைந்து வீடு வந்து சேரும். இதுவே வாழும் வீட்டை இடித்து அங்கே கேழ்வரகை விதைத்தால் அந்த இடம் பாழாகிப்போகும். இந்த செயலுக்கு இனி இந்த வம்சம் பூண்டோடு ஒழியும் என்றும், இந்த இடத்தில் புல் பூண்டும் முளைக்காது, முள்ளும் கொருக்கும் மட்டுமே முளைக்கும் என்றும் அர்த்தம். இது ஒரு வன்மம் கலந்த சாபம். சாபமே கொடியது. அதிலும் வன்மம் கலந்தால் எப்படி இருக்கும்! என்று அவனுக்கு விளக்கினான் அநபாயன்.

    ஓ விபரீதமான விஷயம்தான் என்று கூட்டமே ஒப்புக்கொண்டது.

    "அதற்குப் பிறகு சோழப் பேரரசு எழுச்சி பெறவேயில்லை. கிட்டத்தட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1