Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaigaraiyin Thaamarai...
Vaigaraiyin Thaamarai...
Vaigaraiyin Thaamarai...
Ebook277 pages2 hours

Vaigaraiyin Thaamarai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாலை மயங்கி இருள் கமிய தொடங்கி இருந்தது. ஊதல்காற்று இப்போது குளிர்காற்றாகி சுமியின் மெல்லிய தேகத்தை நடுக்க தொடங்கி இருந்தது. கைகளை நெஞ்சின் குறுக்கே மடித்து கொண்டு உடன் நடந்து வந்தாள். சத்யன் இருகைகளையும் பான்டின் பாக்கெட்டில் செருகி கொண்டவனாக நடந்து கொண்டிருந்தான். சத்யனின் அருகாமை ஊதக்காற்று போல உடலும் மனமும் குளிர தேவைபட்டாலும் அவள் வீட்டாரின் நினைவு மாலை வெய்யிலின் சூட்டை போல பின்னனியில் அவளை மருட்டி கொண்டிருந்தது. இதோ இது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. அது நமக்கு பிடித்தும் இருக்கிறது. ஆனால் இதற்கு ஆயுசே கிடையாது என்பதும் புரிந்தே தான் இருக்கிறது "அமலாவை என்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது சுமி" நிமிஷ நேரத்தில் மூன்று உலகையே சுற்றி வந்து விடக்கூடிய ஆற்றல் உடைய மனது இந்த ஒரு வார்த்தையில் கைலாயத்தின் ஜில்லென்ற பனி சிகரங்களுக்கு இடையே சென்று பனியை வாரி வாரி தன் மேல் போட்டு கொண்டது போலிருந்தது சுமிக்கு

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580147208662
Vaigaraiyin Thaamarai...

Read more from G. Shyamala Gopu

Related to Vaigaraiyin Thaamarai...

Related ebooks

Reviews for Vaigaraiyin Thaamarai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaigaraiyin Thaamarai... - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வைகறையின் தாமரை...

    Vaigaraiyin Thaamarai...

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 1

    லேசான தூறல் மழையாக வலுக்கும் முன்பு பணி புரியும் பள்ளிக்கு சென்று சேர்ந்து விட வேண்டிய அவசரத்தில் இருந்தாள் சுமித்ரா எம்.ஏ.எம்.பில். பி.எட். இது மழைக்காலம் இல்லை. என்றாலும், என்னவோ அவ்வப்போது மழை நச் நச் என்று தூரிக்கொண்டும், சமயத்தில் வலுத்து பெரு மழையாக பெய்து கொண்டும் இருந்தது. தென் மேற்கு பருவக்காற்று திசை மாறி வீச தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் முன்பே இந்த பிராந்தியத்தில் சிலு சிலுவென காற்றும் தூறலும் மனதிற்கும் உடலுக்கும் இதமாக தான் இருந்தது. வானம் தலையை தொட்டு விடும் உயரத்தில் இருந்தது. இத்தகைய தருணங்களில் கையை உயர்த்தி, எம்பி குதித்து வானத்தை தொட்டு விட மனதின் உள்ளே எழும் ஆவலை எப்போதும் போலவே இப்போதும் அடக்கி கொண்டாள் சுமி.

    வேண்டாம். பள்ளிக்கு நேரமாகி விட்டது.

    சின்னமனூரை கடந்து மேகமலையின் பின்னாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் மைய பகுதியில் இருந்த சிறு நகரான குறிஞ்சிவாடியில் அரசு உதவி பெறும் கான்வென்டில் தான் சுமித்ரா ஆங்கில ஆசிரியையாக இரண்டு வருடங்களாக பணியாற்றி கொண்டிருக்கிறாள். இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி. அந்த பிராந்தியத்தில் உள்ள ஒரே மேனிலை பள்ளி ஆதலால் சற்றே அதிகப்படியான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்க்கை இருந்தது.

    பள்ளியின் அருகிலேயே குடி இருக்க வீடு கிடைக்காததாலும், அப்படியே கிடைத்தாலும் அது அவளுடைய சுதந்திரத்தையும் தனிமையையும் பாதித்து விடக்கூடும் என்று நினைத்ததாலும் பள்ளியை விட்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தாள்.

    அன்று விடியும் முன்பே மழை தூற தொடங்கி இருந்தது. ரசாயை இன்னும் நன்றாக இழுத்து போர்த்தி கொண்டு காலை நேர உறக்க சுகத்தை தொடர்ந்தவள் வழக்கத்தை விட தாமதமாகவே எழுந்தாள்.

    எப்போதும் பள்ளி சமயத்திற்கு வரும் சிற்றுந்தை பிடிக்க முடியாது. நேரமாகி விட்டதால் அது போய் விட்டிருக்கும். பாதையின் இறக்கத்தின் முடிவில் உள்ள சாலையில் வரும் ஜீப்பில் தொற்றி கொண்டு புளிமூட்டை போல அடைபட்டு கொண்டு போவது என்பது அவளால் இயலாது.

    வேறு என்ன செய்யலாம் என்று ஒரே ஒரு நிமிடம் யோசித்தவள் சட்டென்று முடிவு எடுத்தவளாக வீட்டை விட்டு வெளியே வந்து கீழ் நோக்கி சாலைக்கு செல்லாமல் நேர் மேலே ஏறி குறுக்கு வழியில் நடந்து செல்ல தொடங்கி விட்டாள்.

    அந்த பிரதேசம் முழுதும் சிறு மற்றும் பெரு தேயிலை எஸ்டேடுகளாக பிரிந்து கிடந்தது. அது தனியார் இடம் என்பதால் அவரவருக்கு ஏற்றார் போல் பாதை வகுத்து கொண்டிருந்தார்கள். வெளியாட்கள் வேலையாட்கள் சமயத்தில் அந்த பாதைகளை பயன்படுத்தி கொள்வது உண்டு. கூலியாட்கள் கிடைக்காத காலகட்டமாதலால் எஸ்டேட் ஓனர்களும் அவர்களை பகிரங்கமாக பகைத்து கொள்வது கிடையாது.

    இப்போதும் அது போல ஒரு எஸ்டேட்டை கடந்து தான் சுமித்ரா செல்ல வேண்டும். அவள் மேட்டின் மேல் ஏறி எஸ்டேட் சாலையை அடைந்த போது அவள் பள்ளி மாணவிகள் சிலரும் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

    இவளை கண்டதும் உற்சாகமாக முகமன் கூறியவர்கள் அவளுடன் இணைந்து நடக்க தொடங்கினார்கள். ஆள் அரவமற்ற அந்த சின்ன மண்சாலை முழுவதையும் அடைத்தவாறு தங்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்தபடி அந்த பிரதேசத்தையே வெளிச்சமாக்கி கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

    அவர்கள் பின்னாலேயே ஒரு கிராமத்தான் பசு மாட்டை கயிறால் கட்டி கையில் பிடித்து கொண்டு நடந்து வந்தான் மாட்டை ஒட்டியவாறு. அதன் கன்று துள்ளி கொண்டே வந்தது. அதன் வாலின் குஞ்சம் அடிக்கடி பக்கவாட்டில் அடித்து கொண்டே இருந்தது. திடீர் திடீர் என்று முன்னே நடந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஓடி ஒரு துள்ளி துள்ளி அவர்களை போக்கு காட்டியது. அதன் அழகான மூக்கும் கண்களும் அதன் வாலின் குஞ்சமும் மாணவிகளுக்கு ரொம்ப ரசனையை ஏற்படுத்தியிருந்தது.

    அடுத்த முறை இங்கே வரட்டும். அப்படியே அதன் கழுத்தை கட்டி பிடித்து நிறுத்தி விட வேண்டும்

    அப்போது...!

    ஒரு கார் பின்னால் இருந்து திடீரென்று ஒலி எழுப்பவே துள்ளி குதித்து சாலையின் இருபுறமும் ஒதுங்கி கொண்டார்கள்.

    அதே நேரம் அந்த மாடு மா என்று பெருங்குரல் எடுத்து அலறியது. சின்ன கன்னு குட்டியோ திசை அறியாது இவர்கள் மேல் வந்து முட்டி கொண்டு துள்ளி ஓடியது.

    அது நேராக சுமியின் பக்கமாகவே வந்து அவளை இடித்து கொண்டு சுற்றி ஓடியது. எங்கே அது அந்த வண்டியில் அடிபட்டுவிடுமோ என்று பதட்டமாகி போனது சுமித்ராவிற்கு. அந்த வண்டியின் திடீர் ஒலியினால் அந்த பிராந்தியமே சிறிது நேரம் ரகளையாக இருந்தது.

    அந்த பசுமாடு எங்கே நம் மேல் வந்து முட்டி விடுமோ என்று பயந்து சுமி ஒதுங்கிய வேகத்தில் ஒரு கல்லின் மேல் ஏற முயன்று நிலை தடுமாறி அந்த வாகனத்தின் மேலேயே விழுந்தாள்.

    இதை சற்றும் எதிர்பாராத அந்த வாகன ஓட்டி வண்டியை விட்டு கீழிறங்கி கதவை மிகுந்த சத்தத்துடன் அறைந்து சாற்றினான். வண்டியின் மேல் விழுந்து எழுந்து மீண்டும் தடுமாறி அதன் மேலேயே விழுந்தவளை இடது கையால் அவள் புஜத்தை பற்றி நன்றாக நிமிர்த்தி நிற்க வைத்தான் அந்த நெடியவன்.

    சுமித்ராவே நல்ல உயரம். அவளே நன்றாக நிமிர்ந்து பார்க்க வேண்டிய உயரத்தில் இருந்தான் அவன். கண்கள் சிவந்து இருந்தது. கோவத்தில் கன்னத்தின் பக்கவாட்டு தசை துடித்து கொண்டிருக்க அவளை நன்றாக உற்று பார்த்து சீறினான்.

    காலங்காலையில் என்ன மாய்மாலம் வேண்டி கிடக்கிறது. ஒழுங்காக நிற்க கூட முடியாதது போல

    காலை இல்லை என்றால் மாலையானால் பரவாயில்லையா?

    என்ன?

    சுதாரித்து கொண்டவள் பதிலுக்கு சீறினாள். மாயமாலமாமே, மாய்மாலம்.

    போங்க. போங்க. காலங்காலையில் வேலையை பார்த்து கொண்டு.

    நானா வந்து இடித்தேன்?

    அப்போ நானா வேண்டும் என்று வந்து விழுந்தேன்

    அவள் வேண்டும் என்றே வண்டியில் வந்து விழவில்லையே. தான் திடீரென்று ஒலி எழுப்பவும் தானே நிலை தடுமாறி போனாள் என்று கண் இமைக்கும் நேரம் நியாய புத்தி சொன்னாலும் அவனுக்கு ஏற்கனவே இருந்த எரிச்சலில் அதை ஒப்பு கொள்ள மனமற்று அவளை முறைத்தவாறே தொடர்ந்தான்.

    என்னவோ உங்க வீட்டு சாலை போல நெனப்புல போறீங்க

    என்னவோ நீங்க மட்டும் உங்க வீட்டு சாலை போல எரிச்சல் படறீங்க

    யார் வீட்டு சாலையாக இருந்தால் என்ன? இப்படியா பிறருக்கு வழி விடாதவாறு அடைத்து கொண்டு செல்வது

    அது தப்பு தான். நீங்கள் தான் ஆகட்டும், கொஞ்சம் மெல்லமாக ஒலி எழுப்பி இருந்திருக்கலாம் இல்லே?

    நான் என்ன மாட்டு வண்டியா ஓட்டிகிட்டு இருக்கேன்

    ஏன், மாட்டு வண்டி ஓட்டுறவன் மனுஷன் இல்லையா? அப்படி இளக்காரமாக பேசறீங்க

    சரிம்மா தாயே, நானும் இனி மாட்டு வண்டிக்காரன் போல ட்ரியோ ட்ரியோ ன்னு ஒலி தருகிறேன்.

    தன்னெதிரில் குனிந்து கரம் குவித்து நின்ற அந்த நெடியவனை தலையில் முண்டாசு கட்டி,கையில் குச்சி வைத்து கொண்டு மாட்டு வண்டி ஓட்டுவது போன்ற கற்பனையில் அவளுக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல்,

    போங்க சார் வேலையை பார்த்து கொண்டு என்றாள் மீண்டும்.

    அதற்குள் மற்ற மாணவிகளும் அருகில் வந்து விட பேச்சை நிறுத்தினாள் சுமித்ரா..

    என்னாச்சு மிஸ்? அடி பட்டுருச்சா? சார் என்ன சொல்கிறார்? என்று ஆளாளுக்கு கேட்டு கொண்டே சிலர் அவளை அடி பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்கவும் சிலர் எங்கள் மிஸ்சை என்ன சொல்றே என்பதாக அவனை முறைத்து கொண்டும் நின்றார்கள். சுமித்ரா அவர்களை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

    கமான் கேள்ஸ், நமக்கு ஸ்கூலுக்கு நேரமாயிற்று. காலங்காலையில் தேவை இல்லாதவர்களிடமும் வேலை இல்லாதவர்களிடமும் நின்று பேச நமக்கு நேரம் இல்லை. போவோம் வாருங்கள்

    நிமிடத்தில் தன்னை வேலையற்றவன் என்று மாணவிகள் முன்பு சொல்லி சென்றது உள்ளூர எரிச்சலை கிளப்பினாலும், அவள் அழைத்ததும் அவள் பின்னால் ஆட்டு குட்டி போல செல்லும் அந்த மாணவிகளையும் அவர்களை அவ்வாறு வழி நடத்தி செல்லும் அந்த நிமிர்வான நேரான பார்வையுடன் நடந்து செல்லும் ஆசிரியையும் நின்று ரொம்ப நேரம் யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் அவன்.

    என்ன...! அவளை பார்த்தால் பின் இருபதுகளில் இருப்பாள் போலும். ஆனால் அவள் நடை உடை பாவனை அவளை அந்த மாணவிகளுக்கு ஒப்பவே நினைக்க தோன்றியது அவனுக்கு. ஏனெனில் தோற்றத்தில் நல்ல மிடுக்கும் உடையில் கண்ணியமும் இருந்த போதும் முகத்தில் இளமையும் துறுதுறுப்பும் பிரகாசமும் அவளை மற்றவர்கள் மத்தியில் தனித்தே காட்டியது.

    அந்த மாணவிகள் அவளை சுற்றி பேசி கொண்டும் அவள் ஏதோ பேச அதற்கு பலமாக சிரித்து கை தட்டி ஆரவாரம் செய்து கொண்டும் போனார்கள்.

    ஒருவேளை தன்னை தான் கமென்ட் அடித்து சிரிக்கிறார்கள் போலும். அந்த இளமை பட்டாளத்தின் உற்சாகத்தில் பங்கு கொள்ள முடியாத அவன், தன் இளமை காலத்தை நினைத்து கொஞ்சம் ஏக்கத்துடனே சென்றான். 

    மாட்டை ஒட்டி கொண்டு வந்தவன் கைகளுக்கு அது அடங்காமல் துள்ளி கொண்டே இருந்தது. ஹேய், ஹேய், என்று அவன் குரல் கொடுத்து கொண்டே இருந்தான். மெல்லமாகவே அவைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த சிறிய மண்சாலையில் அவர்களை ஓவர் டேக் பண்ண முடியாமல் அவர்கள் பின்னாகவே சிறிது நேரம் ஊர்வலம் போகும்படியாயிற்று அவனுக்கு.

    இன்று காலையில் இருந்து அவன் எரிச்சலுக்கு காரணமானவளை என்ன செய்வது என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தவன் போல ஒரு நீண்ட ஒரு பெருமூச்சிற்கு பிறகு மெல்லமாக காரை செலுத்தி அவர்களை கடந்து போனான்.

    பிளஸ் டூ வகுப்பறையில், மதிய உணவிற்கு பிறகு சுமித்ராவின் ஆங்கில வகுப்பு நடந்து கொண்டிருந்தது. துணை பாடத்தில் இருந்து தி லாஸ்ட் லீப் என்ற பாடத்தை மாணவர்களை ஒவ்வொருவராக வரிசைவாரியாக எழுந்து படிக்க வைத்து கொண்டிருந்தாள். மதிய உணவிற்கு பிறகு யாருக்கும் ஏற்படும் சிறு உறக்கத்தை களையவும் அதே நேரம் வாய் விட்டு படிக்கும் போது உச்சரிப்பு சரியாக அமையவும் என்பது அவளுக்கு அவளுடைய சங்கரன் வாத்தியார் சொல்லி கொடுத்த பால பாடம்.

    இந்த டெக்னிக் எப்போதும் அவளுக்கு சரியாக கை கொடுக்கும். எந்த மாணவனும் தூங்கவோ கவனம் சிதறவோ செய்யாமல் இருக்க இது உதவியாக இருக்கும். இப்போதும் அதுவே தான் நடந்து கொண்டிருந்தது. திக்கி திணறி என்றாலும் எழுத்து கூட்டியாகிலும் படித்து கொண்டிருந்தார்கள்.

    கடைசி பெஞ்ச் தொடக்கத்தில் இருந்த அமலா தேவியின் முறை வரும் போது அவள் எழுந்து கொள்ளவில்லை.

    திடீரென்று படிப்பு சங்கிலி அறுபடவும் அது யாரால் என்று அனைவரும் திரும்பி பார்ப்பதை கூட உணராமல் எதிலோ அவள் கவனமாக இருந்தாள்.

    அமலா...!

    அமலா... எங்கே கவனமாக இருக்கிறாய்?

    பக்கத்தில் அமர்ந்திருந்த கஸ்தூரிமான் அவள் விலாவில் தட்டியது கூட தெரியாமல் எங்கோ நினைவாக இருந்தாள். அவள் கண்கள் மட்டும் தாழ்ந்து கையில் இருந்த புத்தகத்தில் இருந்தது. அவள் அருகில் வந்து நின்று சுமி திரும்ப அழைத்த போதும் அவள் தன்னிலைக்கு வந்தாளில்லை. இழுத்து பிடித்த பொறுமை காற்றில் பறந்து விட அவளை நெருங்கி அவள் கையில் இருந்த புத்தகத்தை பிடிங்கினாள் சுமித்ரா. இழுத்த வேகத்தில் அதன் உள்ளே இருந்து ஒரு புகைப்படம் பறந்து சுமியின் காலின் கீழே விழுந்தது. தன்னிச்சியையாக குனிந்து அந்த புகைப்படத்தை பார்த்தவள் கண்களில் சிவப்பு ஏறியது.

    அது...!

    காலையில் வழியில் சுமித்ராவுடன் தகராறு செய்த அந்த நெடியவனின் புகைப்படம். எதிரே நிற்பவரை எலும்பு வரை ஊடுருவுவது போன்று கண்களில் தீட்சன்யத்துடன் ராணுவ உடையில் வானத்திற்கும் பூமிக்குமாக உயரமாக அந்த உயரத்தை இன்னும் அதிகபடுத்துவது போன்று நிமிர்வோடு இருந்தான். சதுரமான முகம், அளவோடு நறுக்கப்பட்டிருந்த மீசை, அடர்த்தியான தெளிவான புருவம். பார்க்க, பார்க்க திரும்பி பார்க்க கூடிய முகம் தான். அவனை பார்த்தால் முன் முப்பதுகளில் இருப்பான் போல இருந்தது.

    அமலாவை விட இரண்டத்தனை வயது உடைவன் அவன். அவன் புகைப்படத்தை இவள் ஏன் வைத்திருக்கிறாள் என்று ஒரு சின்ன சம்சயம் ஏற்பட்ட போதும் அது தனக்கு அவசியமில்லாத விஷயம் என்பதால் அவனை பற்றி மேற் கொண்டு விசாரிக்க தற்போது தேவையில்லாமல் அமலாவை நோக்கினாள்.

    அமலா சுமித்ராவின் பார்வையை சட்டை செய்தாள் இல்லை.

    சுமித்ராவிற்கு இப்போது அதிகமாகவே கோபம் வந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பவனுக்கும் அமலாவிற்கும் என்ன உறவு வேண்டுமானால் இருந்து விட்டு போகட்டும். அதற்காக வகுப்பறையிலா...?

    அமலாவின் அருகில் இருந்த மற்ற மாணவர்களுக்கு இது ஏற்கனவே தெரியும் போலும். அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். ஆனாலும் ஆங்கில மற்றும் அவர்கள் வகுப்பு ஆசிரியையும், அவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பபடுகிற வளுமான சுமி இந்த நிகழ்வை எப்படி கையாளுவாள் என்ற குறுகுறுப்புடன் அவளையே பார்த்து கொண்டிருந்தார்கள்.

    எல்லோர் பார்வையும் அவள் மேல் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த சுமி பொறுமையுடனே இருந்தாள். கத்தி மேல் நடப்பது போன்றது இத்தனை பதின்பருவ மாணவர்களிடம் பழகுவது. ஜாக்கிரதையாக தான் கையாள வேண்டும். பொதுவாகவே தான் கரும்பலகையில் திரும்பி நின்று ஏதேனும் எழுத வேண்டி நேரிட்டால் தன் பின்னழகை கமென்ட் பண்ணுவதோ அல்லது அவர்கள் கவனம் சிதைவதோ கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் சுமி புடவையின் முந்தானையை மிக நீளமாகவே விட்டு அதையும் ஒற்றையாக இடது கையால் பிடித்து கொண்டு தான் திரும்பி நின்று எழுதுவாள்.

    அதற்குள் சுதாரித்து கொண்ட அமலா தட்டு தடுமாறி எழுந்து நின்றாள்.

    உன் கவனம் எங்கே இருக்கிறது அமலா?

    அமலா பதிலேதும் சொல்லாமலும் சுமியின் முகத்தை நேரிடையாக பார்க்காமலும் மௌனமாகவே நின்றாள். தான் செய்தது தவறு என்பது புரிகிறதா இல்லையா இந்த பெண்ணிற்கு என்று இப்போது சுமிக்கு தான் குழப்பமாகி போனது. மேற்கொண்டு அவளிடம் ஏதும் பேசாமல் அவளை அமர சொல்லி கை அசைத்து விட்டு மேல் கொண்டு வகுப்பை நடத்த தொடங்கினாள்.

    ஊரின் நடுவில் இருந்த அந்த குளத்தின் கரையில் அரசமர நிழலில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு பள்ளி முடிந்து சுமி வந்த போது அவளுடைய உற்ற தோழியும் கெமிஸ்ட்ரி ஆசிரியையுமான கல்பனா இவளிடம் விரைந்து வந்து அருகில் நின்று கிசு கிசு குரலில் மெல்ல சொன்னாள்.

    சுமி , உன் வகுப்பில் கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருப்பாளே அமலா, அவள் சரியாக வகுப்பை கவனிக்காமல் விட்டேற்றியாக இருக்கிறாள். அவளால் அவள் அருகில் இருக்கும் மாணவர்களும் கவனம் சிதறுகிறார்கள்.

    ம்...

    நானும் ஒவ்வொரு முறையும் பொறுமையுடன் நடந்து கொள்கிறேன். அவளுக்கு என்னை கண்டால் மிகவும் எகத்தாளமாக இருக்கிறது

    சரி. இப்போது அதற்கு நான் என்ன செய்வது?’

    ஏற்கனவே தனக்குள் கனன்று கொண்டிருக்கும் எரிச்சலை மறைக்க முயற்சிக்காத குரலில். அந்த குரலில் அமலாவை பற்றி புகார் கூற வந்த கல்பனா அரண்டு போனாள்.

    "என்னப்பா இப்படி அலுத்துக்கறே. அமலா உன் வகுப்பு ஆயிற்றே என்று சொன்னேன்.

    சாரி கல்பனா, எனக்கும் அவளை என்ன செய்வது என்று ஒன்னும் புரியவில்லை

    சரி விடுப்பா. நம்ம குமார் சாரிடம் சொல்லுவோம்

    ம்… அது தான் சரி

    கல்யாண குமார் அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். திருமணம் ஆன முதல் சில வருடங்களிலேயே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு அவர் மனைவி இறந்து போனாள். ஒரே ஒரு மகன் ஊட்டி

    Enjoying the preview?
    Page 1 of 1