Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Enbathey Neeyallavo
Naan Enbathey Neeyallavo
Naan Enbathey Neeyallavo
Ebook500 pages3 hours

Naan Enbathey Neeyallavo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆண்களும் பெண்களும் ஒன்றாக படித்து, சேர்ந்தே வேலை செய்யும் இன்றைய நாளில், ஒவ்வொருவரும் தனக்கு தேவையானது எது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கரண் சிங்க்கு, தன்னுடன் பணியாற்றும் கல்யாணியிடம் காதலா நட்பா?, உயிர் தோழி பிரியாவிடம் நட்பா அல்லது காதலா? என்பதில் குழப்பம். கல்யாணியை திருமணம் செய்ய கரண்சிங் கேட்ட போது வீட்டில் வந்து பெண் கேட்டால் செய்து கொள்கிறேன் என்கின்றாள் காதலில் தெளிவில்லாமல்.

இதற்கிடையில் பிரியா தனக்கு கரணிடம் காதல் தான் என்பதிலும், பிரியாவின் அண்ணன் அருணுக்கு கல்யாணியிடம் காதல், காதல் மட்டுமே என்ற தெள்ளத் தெளிவும்..! கரண், கல்யாணியின் குழப்பமும், பிரியா அருணின் தெளிவும் இந்த நால்வருக்கிடையே உள சிக்கலும் அதன் தீர்வும் என்னவென்று பார்ப்போமா!

இனி கதைக்குள் போவோமா!

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580147210252
Naan Enbathey Neeyallavo

Read more from G. Shyamala Gopu

Related to Naan Enbathey Neeyallavo

Related ebooks

Reviews for Naan Enbathey Neeyallavo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Enbathey Neeyallavo - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான் என்பதே நீயல்லவோ

    Naan Enbathey Neeyallavo

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    அருணாச்சலத்தின் இன்னோவா வண்டி நீலாங்கரையில் சில்வர் சான்ட் அவின்யுவின் இடது புறத்தின் மத்தியில் உள்ள அந்த பெரிய பங்களாவின் கேட்டின் முன்னால் நின்று ஒரு ஹாரன் கொடுக்கவும் காவலாளி விரைந்து வந்து கேட்டை திறந்து விட்டு ஒரு சல்யூட்டை அடித்தான். வண்டி கேட்டைக் கடந்து உள்ளே போர்டிகோவில் நின்றது. இவன் வண்டியைக் கண்டதும் டிக்கியை திறந்து சாமான்களை எடுத்து வைக்க தோட்டக்காரனும் டிரைவரும் ஓடி வந்து நின்றார்கள். அது அவர்கள் பழக்கம். அவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப அவனும் வண்டி நிறைய சாமான்கள் கொண்டு வருவதும் வழக்கம் தான்.

    அதற்குள் இவன் வருகையை எதிர்நோக்கி இருந்த சங்கரும் அவர் மனைவி ஜெயந்தியும் வாசலுக்கே வந்து விட்டார்கள்.

    என்னடா இவ்வளவு சாமான்கள்? என்று கேட்டுக் கொண்டே பின்னால் வந்தாள் பிரியா என்கின்ற பிரியங்கா.

    அவளுக்கு பதில் சொல்லாமல் ஜெயந்தியைப் பார்த்து பெரிம்மா, நீங்க கேட்டு விட்ட இட்லி அரிசி ரெண்டு மூட்டை, பெரியப்பா உங்களுக்கு வாழப்பழம்... என்றவனை இடைமறித்து

    வாழைப்பழம் இல்லைடா. வாழைத் தார். அதுவும் ஒன்னில்லை. ரெண்டு என்றாள் பிரியா.

    சரி. பின்னே அவ்வளவு விளையுது அங்கே. பெரியப்பா இந்த பழம் மட்டும் தான் விரும்பி சாப்பிடுவார். நான் கிளம்பறப்போ அப்பா மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வந்து கொடுத்தாரு.

    எனக்கு ஒன்னுமில்லையா?

    ஏன் இல்லாமல்? நீ தான் அம்மாட்ட கேட்டிருந்தியே.

    திரட்டுப் பால்.

    ஆமாம் என்றவாறு தன் கைப்பையில் இருந்து எடுத்து நீட்டினான் அருண். பெரிம்மா நம்ம லக்ஷ்மி கண்ணுப் போட்டிருந்தது. சீம்பால் பீச்சும் போதே அம்மா பிரியாவுக்கு பிடிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாங்க. சரி திரட்டுப் பால் செஞ்சி கொடுங்க. நான் வேணா ஒரு நடை சென்னைக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வருகிறேன் என்றேன்.

    நீ...? எனக்காக? என்றவாறே அவன் கொடுத்த டப்பாவில் இருந்து ஒரு விள்ளல் திரட்டுப்பால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். நம்ம விசாலாட்சி சித்தி செய்யுற திரட்டுப்பாலுக்கு இந்த ஈரேழு உலகத்தில் ஈடு இணை எதுவுமில்லை.

    பெரியம்மா உங்களுக்கு காய்கறி கொடுத்து விட்டிருக்காங்க. நீங்க ஆசைப்படுவீங்கன்னு கொடியில விளைஞ்ச மிறி பாவைக்காய் தனியா ஒரு பையில இருக்கு.

    சாலாட்சிகுத் தான் தெரியும் யாருக்கு என்னென்ன பிடிக்கும்னு என்று மெச்சிக் கொண்டாள் ஜெயந்தி.

    ஏண்டா ஒரு பெரிய வண்டி நிறைய கொண்டு வந்திருக்கே! என்றார் சங்கர்.

    இவனும் சரி. உங்க தம்பியும் சரி. என்னைக்கு அவுங்க கொஞ்சமா கொண்டு வந்திருக்காங்க? என்றாள் ஜெயந்தி.

    நல்லவேளை இவன் டிரைவர் சீட்டை மட்டும் விட்டுட்டாங்க என்றார் சங்கர்.

    நல்லாப் பாருங்க அப்பா. அதில ரெண்டு கோழியை கட்டி விட்டுருக்கப் போறாங்க சித்தப்பா என்றாள் பிரியா.

    செய்யக் கூடியவன் தான் உன் சித்தப்பன்.

    பெங்களூருவில் வேலை பாக்கறதா சொல்லிட்டு எந்நேரமும் உன் அப்பனோட விவசாயம் தான் செஞ்சிக்கிட்டு இருக்கே போலிருக்கு என்றார் சங்கர்.

    வொர்க் அட் ஹோம் என்றாள் பிரியா.

    அவன் ஐ.டி யில் தானே வேலையா இருக்கான். அதென்னடா வொர்க் அட் ஹோம்.

    ஆமாம் பெரியம்மா. வருசம் பூரா விடுமுறையே எடுக்காமல் வேலை பார்த்தேன். இப்போ லீவு கிடைத்தது என்பதால் வீட்டுக்கு வந்தேன். அப்படியே என் வேலையையும் பார்த்துக்குவேன். அப்பாவுக்கும் கூட மாட ஒத்தாசைப் பண்ணறேன்

    அவன் கிராமத்திலே இன்னும் என்னென்னவோ செஞ்சிருக்கான் என்று சொல்லிக் கொண்டிருந்தான் என் தம்பி என்றார் சங்கர்.

    "ஊர் பசங்களை கூட வெச்சிக்கிட்டு ஏதேதோ செய்றான். சொல்றான். எனக்கு எதுவும்

    புரிவதில்லை என்று அத்தையும் அன்னைக்கு பேசும் போது சொன்னாங்க" என்றாள் ஜெயந்தி.

    அண்ணா, நீ பெரிய ஹீரோ தான் போ என்று கிண்டலாக சொல்வதைப் போல சிலாகித்துக் கொண்டாள் தங்கை பிரியா.

    வாசலில் நிற்க வெச்சே பேசிக்கிட்டு இருப்பீங்களா. நீயும் வந்த காலில் நின்னுக்கிட்டு இருக்கே. உள்ளே வா என்றாள் ஜெயந்தி.

    ஆமாமா. செருப்பைக் கழட்டுறியோ இல்லையோ காலைக் கழட்டி வெச்சிட்டு போ என்றார் சங்கர்.

    பெரிப்பா

    சிணுங்கியவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு மனைவியிடம் கேட்டார். உன் வீட்டுக்குள்ள வரணும்னா வேற காலோட தான் வரணுமா ஜெயா

    நக்கலு

    ச்சே. ச்சே. கிண்டலு

    "ஆரம்பிச்சிட்டாங்கடா இவுங்க அக்கப்போரை. கடி ஜோக்கு சொல்லி சொல்லி பிராக்டிஸ்

    ஆகிப் போச்சு. எங்க அம்மாவை நடுராத்திரி எழுப்பினா கூட ரெண்டு ஜோக்கு சொல்றேன்னு ரெண்டு காதையும் கடிப்பாங்க" என்று அலுத்துக் கொள்வதைப் போல நக்கலடித்தாள் பிரியா.

    அப்ப என் காது என்ன பாடுபட்டிருக்கும்னு நெனச்சிப் பார்த்தீங்களா ஒருநாளாவது?

    உம் என்று கணவரை முறைத்தவள் அருணிடம் திரும்பி இவுங்க வாயைப் பார்த்துக்கிட்டு நின்னா நின்னுக்கிட்டே தான் இருக்கணும். வா. போய் குளிச்சி கிளம்பு

    முதலில் ஒரு காப்பிக் கொடுங்க பெரியம்மா

    பிள்ளை வாய் திறந்து கேட்கற மாதிரியா வெச்சிக்குவே

    தம்பி, பாலை அடுப்பில் வெச்சிட்டுத் தான் வாசலுக்கு வந்தேன். நீ வா. சூடா காப்பித் தரேன்

    போடா போ. ஊர் கதை உலக கதை கேட்க எவ்வளவு இருக்கு உன் பெரியம்மாவுக்கு. போ. காப்பிக் குடிக்கிற சாக்கில உன்னைத் தள்ளிக்கிட்டு போகணும் அவளுக்கு

    முதல் தகவல் அறிக்கை என்றான் அருணும் கண் சிமிட்டியவாறே.

    சுடச்சுட செய்திகள் வாசிப்பது உங்கள் அன்பு நண்பன் அருணன் என்றாள் பிரியா.

    மீதிக்கதையை அங்கே போய் விடு என்றார் சங்கர்.

    டேய் அருண். நீ எங்கே போனாலும் சாயங்காலம் ஆறுமணிக்கு இங்கே வந்துடு. நாம வெளியே போகிறோம் என்றாள் பின்னால் இருந்து பிரியா.

    நானுமா வரணும்?

    கண்டிப்பா வரணும்

    நான் தரமணியில் இருக்கும் டாக்டர் சுவாமிநாதன் பவுண்டேசனில் ஒரு செமினாருக்கு வந்திருக்கிறேன். எப்போ முடியும்னு தெரியலை. எனக்காக காத்திருக்காதே

    ஏன் அருண் நீயோ ஐடிக்காரன். உனக்கும் சுவாமிநாதன் பவுண்டேசனுக்கும் என்ன சம்பந்தம்? அது விவசாயம் சார்ந்ததாச்சுதே என்றார் சங்கர்.

    ஆமாம் பெரியப்பா. அப்பாவுக்குத் தான் அழைப்பு வந்தது. அவரால் வர முடியவில்லை. எனவே நான் வந்தேன்

    உனக்கு என்ன புரியும்? என்று கவலையுடன் கேட்டாள் ஜெயந்தி.

    புரிஞ்சிக்க முயற்சிக்கிறேன்

    என்னவோ உங்க அப்பன் நிலத்தில் அரும்பாடுபட்டு உன்னை படிக்க வெச்சான் என்றார் சங்கர்.

    படிக்க வெச்சதில் என்ன குறையைக் கண்டுட்டீங்க? என்றாள் ஜெயந்தி.

    வெளிநாட்டுக்கும் தான் படிக்க போய் வந்தான் என்றாள் பிரியா.

    நீ பெரிய மல்டி நேசனல் கம்பனியில் வேலைப் பார்த்து கை நிறைய சம்பாதிப்பேன்னு உங்க அப்பாவுக்கு நெனப்பு என்றார் சங்கர்.

    நான் வேலை பார்த்துக்கிட்டுத் தானே இருக்கேன்

    நடுவுல இது என்ன விவசாயம் அது இதுன்னு?

    அப்பாவுக்கு வர முடியலை. அழைப்பை வீணாக்க வேண்டாமேன்னு நான் வந்தேன் என்றான் மீண்டும். அதற்கு மேல் இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல.

    சரி விடு அருண். மாலையில் அவசியம் சீக்கிரம் வந்து விடு. நாமிருவரும் வெளியே போகணும் என்றாள் பிரியா.

    அப்படி என்ன முக்கியமான பார்ட்டின்னு தெரியலையே. நீ திரும்ப திரும்ப கூப்பிடுவதைப் பார்க்கையில் எனக்கென்னவோ, பார்ட்டிக்கு என்னைக் கூப்பிடுவதைப் போல இல்லை என்றான் அவள் கண்களுக்குள் பார்த்தான் மையமாக.

    கரெக்ட் அருண். நானும் அதைத் தான் நெனச்சேன் என்றார் சங்கர்.

    பாரேன் சின்ன பையனாட்டம் எப்படி குஷியா என்னைக் கலாய்க்கிறாரு என்று தகப்பனை கிண்டலடித்தவள், அருணிடம் கேட்டாள். புரியுதுல்ல. அப்புறமும் எதுக்கு நொய் நொய்ன்னு கேட்பே?

    ஆமாம் அருண். நீயும் சித்த சிரமம் பாராமல் அவள் கூட போய்டு. அவள் எந்த பையனையாவது பார்த்தால் அது நமக்கு சரிப்படுமா இல்லையா என்று எங்களுக்கும் தகவல் சொல்ல ஒரு ஆள் வேணுமில்ல என்று மகளை கிண்டலடித்தார் சங்கர்.

    பார்ட்டி இல்லை அண்ணா. கல்யாண ரிசப்சன். சாயங்காலம் போனால் போதும். அதனால் நீ நிதானமாகவே வா. டென்சன் ஆகாதே

    அருணன் குளித்து, காலையுணவு முடித்து கிளம்பி வந்தான். வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையில் ஸெல்ப் டிசைனில் இடது பக்கம் அழகான எம்பிராயிடரி என அம்சமாக இருந்தான். வாயைப் பிளந்து கொண்டு நின்றார் சங்கர். என்னவோ தன்னையே முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்ததைப் போன்ற மாயத்தோற்றம் மனதில் வந்து போனது. தனக்கு ஒரு மகன் இல்லையே என்ற குறை தீர்ந்து போனது எப்போதும் போல இப்போதும்.

    அவர் திகைப்பையும் மகனின் அழகையும் ஒரு சேர கண்ட ஜெயந்தி தானும் சில நொடிகள் மெய் மறந்தவளாக நின்று விட்டு சுதாரித்துக் கொண்டவளாக குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போடணும். என் கண்ணே பட்டுடும் என்றாள்.

    என்ன அண்ணா, வேட்டி சட்டை?

    வர்றவங்க எல்லாரும் கிராமத்து ஆளுங்க. கிராம சுயவேலை வாய்ப்பும் கிராம பொருளாதாரமும் கிராம சபைகளின் அதிகார வரம்பு தான் செமினார். நான் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? தனித்துவமாக இருக்கிறேன் என்று ஆட் ஒன் அவுட்டாக இருக்கக் கூடாதில்லையா?

    அது சரி என்றாள் அவளுமே ரசனையுடன்.

    சரி நான் கிளம்புகிறேன் என்றவன் எனக்கு ஒரு ஆட்டோ புக் பண்ணிக் கொடு பாப்பா என்றான்.

    ஏண்டா, கார் எடுத்துப் போகலையா? ஜெயந்தி கேட்டாள்.

    இல்லை பெரியம்மா, நேற்று இரவு முழுவதும் வண்டி ஓட்டி வந்ததில் அலுப்பாயிருக்கு

    அது மட்டுமல்லாமல் இந்த ஈசியார் ட்ராபிக் பீக் அவரில் கடுப்பேத்தும் என்றார் சங்கர்.

    இரு. உனக்கு ஓலா ஆட்டோ புக் பண்ணித் தரேன் என்றவாறே தன் மொபைலில் தேடிக் கொண்டிருந்தாள். ஊஹூம். ஒரு ஆட்டோவையும் காணவில்லை என்றவள் இன்னும் ஆழ்ந்து தேடினாள். பீக் அவர்ஸ் அண்ணா

    ஐயையோ. இப்போ என்ன பண்றது? என்று பதறினான் அருணன்.

    அண்ணா ஷேர் வண்டி தானிருக்கு

    பரவாயில்லை. புக் பண்ணு. எனக்கு நேரமாகுது

    இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்துடும். உனக்கு செய்தியை பகிர்ந்திருக்கிறேன். மெயின் ரோடிற்கு போய்டு. உள்ளே வரும் நேரத்தை மிச்சம் பண்ணலாம்

    தம்பி, இரு வேட்டிக்கு மேட்சா செயினும் மோதிரமும் தருகிறேன் என்றவளை

    ம்மா, அவனே பறந்து கொண்டிருக்கிறான். நீ வேற என்று முறைத்தாள் பிரியா.

    ஒரு நிமிஷம் என்றவாறே ஏங்க பிள்ளைக்கு உங்க செயினைக் கழட்டிக் கொடுங்க அவரை நெருங்கி அவர் கழுத்தில் கிடந்த செயினைக் கழட்டப் போனாள்.

    அட, இரு இரு. அநியாயமா இருக்கே உன் அக்கப்போரு என்றவாறே அவர் தன் கழுத்து செயினைக் கழட்ட முனைந்தார்.

    பெரியப்பா நான் கல்யாணத்துக்கா போறேன்? செமினாருக்குப் போறேன் என்றான் அவன்.

    உங்க அம்மாவிடம் சொல்லுப்பா என்றார் அவர்.

    அண்ணா சாயங்காலம் நாம கல்யாண ரிசப்சனுக்குப் போகும் போது கண்டிப்பாக போட்டுக்கணும்

    அது சரி என்றவாறே வெளியே நடந்தான் அருணாச்சலம்.

    இவன் மெயின் ரோடை அடைவதற்கும் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. சரியான ட்ராபிக் டைம். வண்டிகள் இருபுறமும் கன வேகமாக பறந்து கொண்டிருந்தது. ஓரமாக நிறுத்திய வண்டியில் டிரைவருக்கு அருகில் முன்னிருக்கையில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு நேர் பின்னிருக்கையில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். இவன் இடதுபுறம் கதவைத் திறந்து அமர வேண்டி அவள் தள்ளி அமருவாள் என்று எதிர்பார்த்து சில நொடிகள் நின்றான். அவள் நகருவதாகத் தெரியவில்லை. குனிந்து அவளைப் பார்த்தான். அவளோ அவன் புறம் முதுகைக் காட்டியவாறு முகத்தை அப்புறம் திருப்பியிருந்தாள்.

    அவன் பார்க்கையில் லோ கட் நெக்கில் அவள் முதுகு தான் தெரிந்தது அவனுக்கு. வெள்ளை வெளேர் வெளுப்புமில்லாமல் கருப்புமில்லாத நல்ல ஆரோக்கியமான இளம் சிவப்பு நிறத்தில், முசுமுசுவென பூனை முடி மென்மையாக பரவியிருக்க முதுகின் உச்சியில் மெல்லிய தங்க சங்கிலி மின்ன, பெண்மையின் இளமை அவன் கவனத்தை ஈர்த்தது. இவன் பார்வையின் தீவிரமா அல்லது இயல்பாக பெண்களுக்கே உரிய யாரோ தன்னைப் பார்க்கிறார்கள் என்றதான தன்னிச்சையான ஜாக்கிரதை உணர்ச்சியோ அவளும் சட்டென்று திரும்பி பார்த்தாள்.

    அவன் பார்ப்பதைக் கண்டும் நகராமல் என்ன இவன் இப்படிப் பார்க்கிறான் என்ற மாதிரி ஒரு பார்வைப் பார்த்தாள் அவள். நீ யாரோ எவரோ நீ எப்படிப் பார்த்தால் எனக்கென்ன என்றதைப் போல ஒரு விட்டேத்தியான பார்வையுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    என்னடா இவள் என்று நினைத்தவன் கண்ணாடியை ஒரு விரலால் தட்டினான். அவள் நிமிர்ந்து பார்க்கவும் தள்ளி உட்காரு என்பதைப் போல ஜாடை செய்தான். அவளும் பதிலுக்கு தன் வலதுபுறம் கதவைப் பார்த்து இப்படி வந்து உட்கார் என்பதை ஜாடையால் காட்டினாள். ட்ராபிக்கில் எப்படி வலதுபுறம் திறக்க முடியும் என்ற சிறு யோசனையும் இல்லாமல் சொல்பவளை என்ன செய்வது என்று யோசனையுடன் சிறு கோபத்தை முகத்தில் காட்டினான் அருணன்.

    அதற்குள் டிரைவர் தன்மையாக அவளிடம் மேடம் கொஞ்சம் தள்ளி உட்காருங்க என்றான்.

    டிரைவர் சப்போர்ட்டுக்கு வரவும் ஒரு வெற்றிப் பெருமிதத்துடன் சட்டென்று அருணனும் கதவைத் திறந்தான். கதவில் சாய்ந்து கொண்டிருந்தவள் அப்படியே வெளியே சாய்ந்தாள். நல்லவேளையாக வெளியே நின்று கொண்டு ஒரு காலை வண்டியின் உள்ளே வைத்து கொண்டிருந்தவன் தொடையின் மீது சரிந்தவளை அப்படியே தன் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவனை அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு வழியில்லாமல் அவள் நகர்ந்து அமர்ந்தாள்.

    அவனும் பதிலுக்கு வார்த்தையாடாமல் வண்டியின் உள்ளே அமர்ந்து கொண்டான். ஆமாமாம். இருக்கையின் மீது கிடந்த அவள் துப்பட்டாவின் மீது தான். இப்போது அவள் முறை. அவனை ஒரு முறை முறைத்தாள். எதற்கு என்று யோசித்தவனின் விழிகள் அவள் விழிகளை தொடர்ந்து இருக்கையின் மீது கிடந்த துப்பட்டாவில் படவே சற்று நகர்ந்து தன் தொடையின் கீழிருந்த அவள் துப்பட்டாவை எடுத்து விட்டான்.

    இந்த பக்கம் வந்து உட்கார்ந்தால் என்ன? சுள்ளென்று கேட்டாள்.

    அவள் முறைத்த முறைப்பில், அந்த கண்களில் இருந்த வெட்டும் பார்வையில், இவள் காளிதேவி தான், நிச்சயம் மனுசப் பிறவி இல்லை என்ற முடிவிற்கு வந்திருந்தவன், திடீரென்று

    அவள் பேசவும் அவளை நிமிர்ந்து பார்த்தான். டிராபிக்கில் வலதுபுறம் திறக்க முடியுமா?

    அதுக்காக கண் மண் தெரியாமல் என் துப்பட்டாவில் தான் உட்காரனுமா?

    துப்பட்டாவில் தானே உட்கார்ந்தேன். என்னவோ உங்க மடியில உட்கார்ந்த மாதிரி அலட்டிக்கிறீங்க

    இந்த பதிலை எதிர்பாராததால், ஒரு பெண்ணிடம் அதுவும் ஒரு இளம் பெண்ணிடம் இப்படிக் கூட ஒருத்தன் பேசுவானா என்று திடுக்கிட்டவளாக என்ன சொல்வது என்று தெரியாமல் ஓஹோ என்றாள்.

    கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தன்னோடு படித்த, பழகிய பெண்களை அவரவர் வயதிற்குரிய மரியாதையுடனே நடத்தி பழக்கப்பட்டவன் இதோ இப்போது பேசியதைப் போல யாரிடமும் பேசி பழகியறியாதவன் அவன். ஆனால் இவளிடம் மட்டும் ஏன் இப்படி பேசினான்? முதலில் அவள் தான் மரியாதையில்லாமல் அவனிடம் பேசினாள். அது அவன் செருக்கில் குத்தி விட்டதோ? தெரியாது. தெரிந்து கொள்ள சமயமுமில்லை. கேலி தான் தொடர்ந்தது. ஆமாம். இப்போ என்ன செய்வே? என்ற கேலி இருந்தது அவன் கண்களில்.

    சரியான நாட்டான் என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

    நாட்டானா? அப்படின்னா என்ன?

    ம்... அர்த்தம் வேற சொல்றாங்க

    அவனுக்கு அதற்கு பொருள் தெரிய வேண்டும் என்பதை விட அவளிடம் வம்பு இழுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தன் கைப்பேசியை எடுத்து பிரியாவை அழைத்தான். பாப்பா, நாட்டான் அப்படின்னா என்ன அர்த்தம்? என்று அந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

    காலையில் நீ கிளம்பும் போதே சொன்னேன் வேட்டி சட்டையில் போகாதேன்னு. கேட்டியா என்று அவள் பதிலுக்கு கடுப்படித்தாள்.

    ஏன் என் வேட்டி சட்டைக்கு என்ன?

    இந்த சென்னையில் வேட்டி சட்டையில் இருப்பவனை நாட்டான் என்று தான் சொல்வார்கள்

    அப்படின்னா என்ன?

    நாட்டுப்புரத்தான்னு அர்த்தம்

    ஏன் நாட்டுப்புரத்தானுங்க தான் வேட்டி சட்டை போடுவாங்களா என்ன?

    இங்கே அப்படித் தான் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவள் யார் உன்னை அப்படி சொன்னது? என்று விவரம் கேட்டாள்.

    அதுக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் ம் என்று முனகினான்.

    பக்கத்துல யாராவது அழகான பெண் இருக்கிறாளா?

    உனக்கு எப்படித் தெரியும்?

    நீ வேலை மெனக்கெட்டு எனக்கு போன் பண்ணி அர்த்தம் கேட்டியே அதுக்குத் தான் கேட்டேன். ரொம்ப அழகோ?

    யாரு?

    உன் பக்கத்துல இருக்கும் பெண்?

    இவ்வளவு நேரமும், தன்னை நோக்கி முறைக்கும், லேசாக மையிட்ட, அந்த அகன்ற இரு விழிகளை மட்டும் பார்த்தவன், பார்த்துக் கொண்டிருந்தவன், பார்த்துக் கொண்டேயிருப்பவன், அவள் கேட்டதும் தான் அந்த பெண்ணை நன்றாகப் பார்த்தான். இளம் மஞ்சளில் வயலட் நிறத்தில் பூக்கள் போட்ட டாப்ஸ் வயலட்டில் பேன்ட்டும் இளமஞ்சள் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலியும் இடது கையில் கருப்பு பட்டையிட்ட லேடிஸ் வாட்ச்சும் இளம் பச்சை நிற ஹேண்ட்பேக் என்று நன்றாகவே இருந்தாள். மிகவும் நன்றாகவே.

    ஆமாம் என்றான் ரசனையுடன்.

    பாவம் அண்ணா. நீ ஒரு மக்கு அண்ணா. நான் கேட்டதுக்கு அப்புறம் தான் அவளை பார்த்தியாக்கும்

    ஹேய் எப்படி கூடவே இருந்து பார்த்ததைப் போல கரெக்டா சொல்றே?

    நான் கேட்டதும் உடனே பதில் சொல்லாமல் அவளை நீ பார்த்துக் கொண்டிருந்தது என் கண்ணுக்கு தெரிந்தது

    நீ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தான். போடி

    பார்த்துண்ணா. பத்திரமா வீடு வந்து சேரு. ஒரு ஆளை உனக்கு காட்டனும். நீ பாட்டுக்கு அந்த பொண்ணுக்கிட்ட அடிகிடி வாங்கிடாதே. அப்புறம் ஆஸ்பத்திரியிலோ போலீஸ் ஸ்டேசனிலோ போய் நின்னுடாதே

    ச்சே. ச்சே., அந்த அளவுக்கு போய்டாது

    நம்பிட்டேன் போ என்று சிரித்தாள் அவள்.

    ஆனாலும் என்று இழுத்தான் அவளைப் பார்த்துக் கொண்டே ரசனையுடன்.

    என்ன ஆனாலும்? என்று அவன் ரசனையை ரசித்தவளாக அவளும் புன்னகையுடன் கேட்டாள்.

    நீ சொன்ன மாதிரி... அங்கெல்லாம் போனாலும் தப்பில்லை சொன்னவனின் பார்வை முற்றும் தன்னருகில் அமர்ந்திருந்தவளின் முகத்தை அளந்து கொண்டிருந்தது. என்னவொரு மலர்ச்சியான முகம்.

    அவ்வளவு அழகா என்ன? என்றாள் கேலி போல என்றாலும் இளம் பெண்களுக்கே உரிய சிறு பொறாமை தொனிக்க.

    இவன் ஏதோ நம்மை பற்றித் தான் பேசுகிறான் என்பது புரிந்தவளாக தன்னை அவளுடைய கார்மேகக் கண்களால் முறைத்துக் கொண்டிருப்பவளை மேலும் வெறுப்பேற்றுவது கூடாது என்ற பொறுப்புணர்வுடன் ம் என்றான் அவன்.

    திருவான்மியூர் சிக்னலைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது வண்டி.

    டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்துங்க. நான் இறங்கணும் அவசர அவசரமாக சொன்னவளின் பதற்றம் அவருக்கும் தொற்றிக் கொள்ளவே வண்டியை இடதுபுறம் ஒடித்து பிளாட்பாரத்தை ஒட்டி நிறுத்தினார் அவர்.

    ஹல்லோ நகருங்க. இறங்கணும் என்றாள் அவனைப் பார்த்து.

    அந்த பக்கம் இறங்குங்க

    ட்ராபிக்கில் அந்த கதவை திறக்க முடியுமா? இறங்குங்க சார்

    உங்களுக்கு இப்போ புரிந்ததா? என்றவாறே இறங்கி நின்று கொண்டான்.

    கதவில் வைத்திருந்த அவன் கையை இடித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் நகர்ந்தவளுக்கு தன் உடல் அவன் மேல் உரசுமாறு தான் இறங்கி பிளாட்பாரத்தில் நின்றாக வேண்டியதாகிப் போயிற்று.

    அப்போதும் கதவில் இருந்த கையை எடுக்காமல், தன் மேல் உரசி சென்ற, பார்வைக்கு பஞ்சுப் பொதியாக இருந்தாலும் இரும்பை ஒத்தவளாக அதுவும் அப்போது தான் சுடச்சுட நெருப்பில் அடித்த இரும்பைப் போல தன்னை அனல் பறக்க தீண்டி விட்டு பிளாட்பாரத்தில் ஏறி நின்றவளை பார்த்தவாறே ஹல்லோ என்று அழைத்தான்.

    அவள் திரும்பிப் பார்க்கவும் நீ ரொம்ப அழகா இருக்கே என்றான். அப்போது தான் உரசி சென்ற அனலில் உருகிய மெழுகாக. அதீத ரசனையாக.

    ரசனையும் உருக்கமுமாக அவன் சொன்னதைக் காதில் வாங்கியவளுக்கு அவன் சொன்னது கருத்தில் ஏறி அதற்கு பதில் சொல்லும் முன்பு சட்டென்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு விடவே வண்டியும் விரைந்து நகர்ந்து விட்டது.

    திமிரைப் பார் என்று அவன் போன திசையில் சொன்னவள் நான் அழகாக இருக்கிறேனா என்று இவனைக் கேட்டேனா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

    ஆனாலும் அந்த இளம் பெண்ணின் மனதில் அந்த சில நொடி அவளையறியாமலே ஒரு சிறு கர்வம் ஏற்படத் தான் செய்தது.

    ஏனெனில்...!

    அவளை அழகென்று சொன்னவனும் ஸ்மார்ட்டாக இருந்தது தான். அழகானவன் ஆண்மையின் வனப்பத்துடன் இருப்பவன் தன்னை அழகி என்றது கர்வம் கொடுக்காதா என்ன! எத்தனை ஆளுமையாக இருந்தான் அவன். அதிலும் அந்த வேட்டியும் சட்டையும் அவன் வெண்ணிற பற்களுக்கு போட்டியாக டாலடித்ததே. பளிச்சிடும் கண்களின் பார்வை எத்தனை தன்னம்பிக்கை நிறைந்ததாக இருந்தது. மனதிற்குள் அவனை நினைத்து தன்னுள் எழுந்த ரசனையை மறைக்க இயலவில்லை அவளால்.

    ஆனாலும், ஒரு நொடிப் பொழுது வானில் கடந்து செல்லும் மேகம் போல இந்த ஒரு நொடியில் தன்னைக் கடந்து செல்பவனை அத்தனை நல்லவனாக நினைவில் கொள்வது தேவையில்லாதது என்று சடுதியில் தீர்மானித்தாள். எனவே, அவன் வாய் மட்டும் எப்படி எகத்தாளம் பேசுகிறது என்று காரணத்தை தேடித் பிடித்து நினைத்து அவனை கெட்டவனாகவே மனதில் நிறுத்திக் கொள்ள முயன்றாள் அவள்.

    மாலையில் செமினார் முடிந்து வந்திருந்த பெரியவர்களிடமும் அனுபவசாலிகளிடமும் பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் கிளம்ப வெகு நேரமாகி விட்டது. எல்லோரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு மெயின் ரோடிற்கு வந்த போது பிரியா அவனை அழைக்கையில் மணி மாலை ஆறு மணி முப்பது நிமிடங்கள்.

    நீ எங்கே இருக்கே?

    இப்போத் தான் செமினார் முடிந்து மெயின் ரோடிற்கு வந்தேன்

    என்ன அண்ணா? நீ எப்போ வீட்டுக்கு வந்து நாம் எப்போ ரிசப்சனுக்கு கிளம்பறது?

    இப்போ நான் என்ன பண்றது? என்று யோசித்தவன் நீ எங்கே போகணும்? என்றான்.

    நான் அடையாறுக்கு போகணும்

    ம்... நீயே போய்டு. என்னால் உனக்கு தாமதமாகி விடும்

    ஒன்னு பண்ணலாம் என்றவள் நீ அப்படியே கிளம்பி லீலா பேலஸ் வந்துடு. நானும் நேரா அங்கே வந்துடறேன்

    லீலா பேலஸ் ஆ

    ஆமாம். ஐயப்பன் கோயில் பக்கத்தில் ஒரு சாலை இருக்கும். அதன் உள்ளே வா

    அதுக்கு கேட்கலை. அது பைவ் ஸ்டார் ஹோட்டல். நான் வேட்டி சட்டையில் இருக்கிறேன். அது தான் எப்படின்னு?

    அதெல்லாம் பரவாயில்லை. நான் ஐயப்பன் கோயில் அருகில் நம்ம ஸ்விப்ட் காரில் காத்திருக்கிறேன். நீ முன்னால் வந்தால் நீயும் அங்கேயே காத்திரு

    சரி என்றவன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அவள் சொன்னதைப் போல ஐயப்பன் கோயில் வாசலில் காத்திருந்தான். அவளும் வந்தாள்.

    அம்மா இதை உனக்கு போட்டு விடச் சொன்னார்கள் என்று தன் கழுத்தில் போட்டிருந்த ஒரு தங்க சங்கிலியை கழட்டி அவன் கழுத்தில் போட்டாள். கையில் தங்க கங்கணம். விரலில் மோதிரம் வேறு.

    இந்தா தண்ணியும் துண்டும். முகத்தைக் கழுவி கொஞ்சம் பிரெஷ் பண்ணிக்கோ

    அம்மாவும் பொண்ணும் என்னை எதுக்கு இப்போ அலங்காரம் பண்றீங்க?

    கல்யாணத்துக்கு போறோம். பந்தாவா போக வேண்டாமா?

    உன் பிரென்ட் கல்யாணம் என்றவனை இடைமறித்து

    என் அண்ணன் இல்லே நீ என்றாள் பிரியா கர்வம் தொனிக்க.

    நீ தானே உன் ஆளைப் பார்க்கப் போறே?

    ஆமாம் என்றாள் கெத்தாக.

    நானா என் ஆளைப் பார்க்கப் போறேன். என்னை இத்தனை அலங்காரம் செய்வதற்கு?

    யாருக்குத் தெரியும்? ஒருவேளை உன்னோட ஆளை நீ இங்கே பார்ப்பியோ என்னவோ?

    ஆஹா. நல்ல கற்பனை என்று கிண்டலடித்தாலும் அவள் கொண்டு வந்திருந்த தண்ணீரை வாங்கி முகம் கழுவி துண்டினால் அழுந்த துடைத்து தலையை வாரி தன்னைத் தானே சற்று அலங்காரம் செய்து கொள்ளவே செய்தான்.

    அவனை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், அண்ணா ஆனாலும் நீ ரொம்ப கெத்து தான் என்றவாறே வண்டியைக் கிளப்பினாள்.

    நீ மட்டும் என்னவாம்? அழகாக இருக்கே

    நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் தான் உண்டு என்றாள் அவள்.

    நம்மை நாமே சொல்லவில்லை என்றால் வேறு யார் தான் சொல்வார்கள்? என்றான் பதிலுக்கு அவளைப் போலவே கெத்தாக.

    சிரித்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கி அவர்கள் தேடிக் கொண்டு வந்த ரிசப்சனுக்கு போனார்கள். அடித்தளத்தில் இடது கைப் பக்கம் இருந்த பெரிய ஹாலில் பாட்டும் ஆட்டமுமாக ஏக அமர்க்களமாக இருந்தது. அருகில் இருந்த மற்றொரு மேடையில் ப்ரீத்தி வெட்ஸ் மனோ என்ற பலகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    செம்ம கூட்டம் என்று மலைத்துப் போனான் அருணன்.

    அவன் கையைப் பற்றிக் கொண்டிருந்த பிரியா தன்னுடைய கூட்டாளிகளிடம் அவனைக் காட்டி என் அண்ணன் என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அவனை விட அவன் உடை தான் அவர்களை மிகவும் கவர்ந்திருக்கும் போலும். சில தோழிகள் அவனருகில் நெருங்கி நின்று அவனை ஆராய்வதைப் போலப் பார்த்தார்கள். வெரி கிராண்ட் என்றும் வெரி ஸ்மார்ட் என்றும் ஹொவ் ஹன்ட்சம் என்றும் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர்களாகவே ஒரு முடிவிற்கு வந்தவர்களாக ஆங்கிலத்தில் தங்களுக்குள் சிலாகித்துக் கொண்டார்கள்.

    அதற்குள் பிரியா ஒரு வட இந்திய நண்பனை அழைத்துக் கொண்டு வந்தாள். இவனை அவனிடம் அறிமுகப்படுத்தினாள். ஆங்கில்த்தில் இவன் தான் அண்ணா நான் சொன்னேனே என்னோட வேலைப் பார்ப்பவன் விகாஸ் என்று. அவன் தான் இவன் என்றாள்.

    இந்த விகாஸ் இவளுடைய டீம் லீட். எப்போதும் இவளருகில் வந்து நின்று எதையாவது பேசிக் கொண்டிருப்பான். இல்லையில்லை இவள் வேலையைக் கெடுத்துக் கொண்டிருப்பான். இவன் இம்சை தாங்க முடியவில்லை என்று புலம்புவாள் அவள்.

    அண்ணா. இவன் தான் அவன் என்று கோட் வேர்டில் சொல்லி விட்டு பார்த்துக்க என்றாள்.

    ஹல்லோ என்று விகாஸ் இவனிடம் கையை நீட்டினான். நீங்க எங்கே இருக்கீங்க? என்று கேட்டான். அருணனின் உடை அதைப் போல கேட்க வைத்தது அவனை.

    நான் போலீசிற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைச்சிரும். அதுவரை விவசாயம் என்றான் அலட்டிக் கொள்ளாமல் அவனை அளவெடுத்தவனாக.

    போலீஸ் என்றதும் விகாஸின் முகம் போன போக்கைப் பார்த்தவளுக்கு உள்மனசில் ஒரு திருப்தி உண்டானது. எத்தனை பாடுபடுத்தியிருக்கிறான் இவன்! இருடா இரு. உன்னை என் அண்ணன் என்ன செய்றான் என்பதை மட்டும் பார் என்று மனதிற்குள் கறுவிக் கொண்டாள் அவள்.

    போலீஸா? எங்க மாமா கூட போலீஸ் தான் என்று தான் அவனுக்கு பயந்தவன் இல்லை என்பதைப் போல சமாளித்துக் கொண்டவன், அருணின் ஜிம்பாடியை கண்களால் அளவெடுத்தவாறு எஸ்.ஐ. ஆ என்று கேட்டான்.

    ஊஹூம். ஐ.பி.எஸ்

    சிரியாமல் பொய் சொன்னவனைக் கண்டு தான் சிரிக்காமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டாள் பிரியா. அதுவும் விகாஸின் முகத்தைப் பார்க்க பார்க்க இன்னும் அவள் சிரிப்பு அடக்க முடியாததாக இருந்தது.

    டைரக்ட் ஐபிஎஸ் என்று உதடு பிதுக்கி புருவம் உயர்த்தியவனைக் காண்கையில் இனி இவன் நம் வம்பிற்கு வர மாட்டான் என்ற நம்பிக்கை உண்டானது பிரியாவிற்கு.

    அவனோடு இருந்த பிரியாவின் தோழிகள் அருணனின் அழகான ஆங்கிலத்தைக் கேட்டு அதிசயப்பட்டுத் தான் போனார்கள். விகாசிற்கு சொன்ன பொய்யை அவனுடன் இவர்களும் நம்பவே செய்தார்கள்.

    பிரியாவிடம் ஒருத்தி கேட்கவே செய்தாள். உன்னோட அண்ணன் டைரக்ட் ஐபிஎஸ் என்று சொன்னானே. உண்மையில் அதுக்கு தகுதியான ஆள் தான். என்னவொரு ஜிம்பாடி என்றாள் அவள்.

    அவள் தோழிகள் அவளை அழைத்தார்கள். பரிசு கொடுக்கப் போகும் வரிசையில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் அவள்.

    பிரியாவிற்கு முன்னால் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். அந்தபுறம் திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்ததால் அவள் முகம் இங்கே இருந்து பார்க்கும் அவனுக்குத் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் உடல் வடிவும், இடுப்பு வளைவும், கோல்டன் நிற உடலில் அடர் பச்சை நிற டிசைன் போட்ட ஆர்கான்சா சில்க் புடவையும் இளம் பச்சை நிற டிசைனர் ஜாக்கெட்டின் லோ கட் கழுத்தும், அதில் முசுமுசுவென்று பரவியிருந்த பூனை முடியும், காலையில் டாக்சியில் பார்த்தவளை நினைவுப்படுத்துவதாக இருந்தது. ஒருவேளை அவளாக இருக்குமோ என்று ஒரு சிறு அல்ப ஆசையுடன் இந்த பக்கம் திரும்ப மாட்டாளா என்ற ஏக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அருணன். நடுமுதுகில் தவழ்ந்து கொண்டிருந்த கருங்கூந்தலும், கழுத்தை தொட்டு ஆடிக் கொண்டிருந்த தொங்கட்டானும் என

    Enjoying the preview?
    Page 1 of 1