Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inimealthan Irukkirathu
Inimealthan Irukkirathu
Inimealthan Irukkirathu
Ebook203 pages2 hours

Inimealthan Irukkirathu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903714
Inimealthan Irukkirathu

Read more from Pattukottai Prabakar

Related to Inimealthan Irukkirathu

Related ebooks

Related categories

Reviews for Inimealthan Irukkirathu

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inimealthan Irukkirathu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இனிமேல்தான் இருக்கிறது

    Inimealthan Irukkirathu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    இனிமேல்தான் இருக்கிறது பாகம் - 2

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ப்ரியா வெகு லாவகமாக கண்ணிமை முடிகளை பிரஷ் செய்து கூர் தீட்டினாள். கண்ணாடியில் ஜன்னல் தெரிந்தது. இறங்கப் போகிற இந்தியன் ஏர்லைன்ஸ் அவளைக் காதுகளைக் பொத்திக் கொள்ளச் செய்தது.

    ஏர்போர்ட்டுக்கு இவ்வளவு சமீபமாக ஏன் வீடு கட்டித் தொலைத்தீர்கள் டாடி? - என்று இந்த அத்தியாயத்திற்குள் ப்ரியா கேட்கத்தான் போகிறாள்.

    ப்ரியாவை. வர்ணிப்பதற்கு முன்பு அந்த ட்ரெஸ்சிங் டேபிள் கண்ணாடியின் சிகப்பு, லிப்ஸ்டிக்கால் ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்டிருப்பதை எழுத்துக் கூட்டிப் படித்தோமென்றால் தமிழில் ‘நான் உன்னை நேசிக்கிறேன் தாஸ்', என்று அர்த்தம் வரும். இதே வாக்கியத்தை தலையணையைத் திருப்பிப் போட்டாலும் சந்திக்கலாம். குளியலறையில் சோப் ஸ்டாண்ட் அருகிலும் சந்திக்கலாம்.

    இப்போது ப்ரியா தன் மெரூன் நிற சூரிதாருக்கு மேட்ச்சாக தன் விரல் நகங்களில் முதலில் ரிமூவர் உபயோகித்து வெளிறின ரோஜா நிறத்தைத் துடைத்துவிட்டு மெரூன் நிற நெய்ல் பாலீஸ் பூசிக் கொள்கிற வினாடியில் ஒரு பட்டன் மறந்தோ அல்லது வேண்டுமென்றே பொருத்தப்படாததில் விம்மும் இளமையின் அடையாளங்கள் லேசாகத் தெரிகின்றன. கண்ணாடியிலும்.

    மேற்கொண்டு அல்லது கீழ் கொண்டு விவரிக்கத் தடையாய்ப் போனது அந்த கிக், கிக்... கிக், கிக்கும் டெலிபோன்.

    ப்ரியா ஹியர் என்றாள் கன்னத்தோடு அணைத்துக் கொண்டு...

    குட் ஈவினிங் மை ஸ்வீட் டால் என்று சொல்லும் உரிமை தாஸிற்குத் தான் இருக்கிறது. எனவே தாஸ்.

    தாஸ் உன் பங்ச்சுவாலிட்டியை எப்படிப் பாராட்டறது? ஆறு மணிக்கு மீட் பண்றதாப் பேசினோம். அஞ்சு மணிக்கே போன் செய்றியே...

    அது வந்து ப்ரியா... ஒரு சின்ன சிக்கல்

    எங்கேர்ந்து பேசறே தாஸ்? அதை முதல்ல சொல்லு

    என் வீட்லேர்ந்து

    என்ன மேட்டர்?

    சொன்னா கோவிச்சுக்கிவியே.

    நான் கோவிச்சிக்கிட்டா உனக்குப் பிடிக்குமே. சொல்லுப்பா.

    இன்னிக்கு நம்ம ப்ரோக்ராமை கேன்சல் பண்ணிடலாமா?

    நோ! என்றாள்.

    இல்லைம்மா, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு. டெல்லிலேர்ந்து எங்க அத்தை வந்திருக்காங்க.

    வாஜ்பாயே வந்திருந்தாலும், நம்ம ப்ரோக்ராம் கேன்சலாகிறது நடக்காது மை பாய். வி ஆர் கோயிங். யு ஆர் கமிங்.

    கொஞ்சம் புரிஞ்சுக்க ப்ரியா. நான் அவங்களை அழைச்சுக்கிட்டு ஒரு மேரேஜ் ரிசப்ஷன் போக வேண்டியிருக்கு.

    நோ. நீ போகலை.

    என் டாடியோட உத்தரவும்மா.

    இது காதலியோட உத்தரவுப்பா.

    ப்ளீஸ்டா; இந்த ஒரே ஒரு தடவை விட்டுடேன். இனிமே கேன்ஸல் செய்யவே மாட்டேன்.

    நடக்காது. நடக்காது. ஏய் தாஸ், டெல்லிலேர்ந்து உன் அத்தை மட்டும்தான் வந்திருக்காளா, இல்லை அத்தைப் பொண்ணு கீதாவும் வந்திருக்காளா?

    ரெண்டு பேரும்தான்.

    அதானே பார்த்தேன். அன்னைக்குத்தான் ஏர்போர்ட்ல ஒரு தடவை வழியனுப்பறப்ப பார்த்தேனே... அவ வழியறதும்... உனக்கு கண்ணு பிரகாசமாறதும்...

    சீச்சீ. அவளுக்கு கல்யாணம் நிச்சயமாய்டுச்சி ப்ரியா. அமெரிக்க மாப்பிள்ளை.

    அதனால அவ கல்யாணமாகிப் போறதுக்குள்ளே கடைசி கடைசியா...

    டோண்ட் டாக் ரப்பிஷ்!

    ஆம்பளைங்களைத் தெரியும்ப்பா. கீதாவும் வரலைன்னா நீ ரிசப்ஷனுக்கு வர்றதா ஒத்துக்கிட்டிருக்க மாட்டே... கிட்டத்தில சைட் அடிக்கணும். உரசணும். முடிஞ்சா...

    பொம்பளை பேசற பேச்சா இது?

    ஆமாம். சந்தேகமுள்ள பொம்பளை பேசற பேச்சுதான்.

    உன் சந்தேகத்தை எப்படிப் போக்கறதுன்னு புரியலையே...

    நிரூபி. உனக்கு கீதா மேல் சபல்ஸ் இல்லைன்னு நிரூபி.

    எப்படி?

    சொன்னபடி வந்து

    ஓக்கே. நான் உன்னை. எப்படி லவ் பண்றேன்னு புரிய வக்கிறதுக்காகவாவது வர்றேன். அத்தையை எப்படியோ சமாளிச்சுக்கறேன். ஸோ, வீ மீட்.

    கரெக்டா ஆறு மணிக்கு.

    யெஸ்.

    பாகீஸ் பேண்ட் போடாதே. உனக்கு எடுப்பா இல்லை.

    கவசம் இல்லாம வா.

    ச்சீ! என்று வைத்தாள்.

    ஹேண்ட் பாக் மாட்டிக் கொண்டு, கப் போர்டில் இருந்து மேட்ச்சாக செருப்புகள் எடுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட ப்ரியாவின் வெட்டிவிடப்பட்ட ஷாம்பூவால் பூவாக்கப்பட்ட முடிக்கற்றைகள் கொஞ்சம் முன் தோளிலும் மீதி முதுகிலும் அலைந்தன. உருண்டையான முகம். சற்றே அகலமான நெற்றியில் சிறிய. மின்னும் பொட்டு. வரைந்த புருவங்களின் வரவேற்பு வளைவுகள். துடிக்கும் பட்டாம்பூச்சியின் சிறகுகளாய் இமைகள், ஒற்றை மூக்கில் ஒற்றைக்கல் வைரம், வரிகள் இல்லாத கீழுதடு. புன்னகைக்கு மெருகு சேர்க்கும் ஒரு தெற்றுப் பல். முத்தமிடும் போது தாஸிற்கு அது ஒரு இடைஞ்சல்.

    ப்ரியா கார் சாவி எடுத்துக் கொண்டு ஸ்லாப் என்று அறைக் கதவைச் சார்த்தி மாடிப்படிகளில் தத்தித் தத்தி அலுமினிய கைப்பிடியில் ரேகைகள் பதித்து, ஹாலைக் கடக்கும்போது, தாயம்மா, எனக்கு ராத்திரி சாப்பாடு வேணாம்.

    வெளியே புல்வெளியில் மடியில் நாயுடன் ஷேர் மார்க்கெட் பற்றிய விவாதத்தில் தன் நண்பருடன் ஈடுபட்டிருந்த அருணாசலம், ப்ரியா, ஒன் மினிட் என்றதும் ஸ்டார்ட் செய்த என்ஜினை அணைத்துவிட்டு நீல மாருதியில் இருந்து வெளிப்பட்டு அவரை நோக்கி வந்தாள். எதிர் நாற்காலி நண்பர் டீ பருகிக் கொண்டு பாக்கெட் கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்.

    என்ன டாடி?

    பெங்களூர்ல ஒரு இண்டஸ்ட்ரியல் ட்ரேட் ஃபேர் ரெண்டு நாள் கழிச்சு, நீயும் வர்றியா? உனக்கும் டிக்கெட் போடச் சொல்லட்டுமா ப்ரியா?

    போர் டாடி. நான் வரலை.

    தாஸையும் கூட அழைச்சுட்டு வர்றதுன்னாலும், போரா?

    ப்ரியா, வாவ்! என்று விழி விரித்தாள். தாஸையும் கூட்டிட்டுப் போறதுன்னா டபுள் ஓக்கே. ரெண்டு பேருக்கும் டிக்கெட்ஸ் ஏற்பாடு பண்ணிடலாம் டாடி.

    தாஸை கேக்க வேணாமா நீ?

    அவசியமில்லை. சந்தோஷமா வருவார் என்றபோது தாழ்வாகப் பறந்து கடந்த விமானத்தைப் பார்த்தாள். ஏர்போர்ட்டுக்கு இவ்வளவு பக்கத்தில ஏன் வீடு கட்டினிங்க டாடி? என்றாள்.

    நான் வாங்கினப்போ மனை சீப்பா கிடைச்சது. ஓக்கே... புறப்பட்டுக்கிட்டிருந்தே லேட் பண்ணிட்டனா? போய்ட்டு வா என்ற அருணாசலம், எவ்வளவுப்பா வருது? என்றார் நண்பரை.

    அவர் தன் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு, இருபத்தி ரெண்டு பர்ஸெண்ட் வொர்க் அவுட் ஆகுது என்றபோது - ப்ரியாவின் நீல மாருதி ட்ரிடெண்ட் ஹோட்டலைத் தாண்டிவிட்டது.

    *****

    2

    கண்ணபிரான் காரை நிதானமாக ஓட்டினார். அருகே ஆறு இஞ்ச் டெலிவிஷனில் நிர்மலா பெரியசாமி செய்தி வாசித்துக் கொண்டிருக்க... விரைந்து கொண்டிருந்த கட்டிடங்களின் உடம்புகளில் நியான் விளையாட்டுக்கள். முன் நெற்றியில் விழுந்து ஒரு கற்றை நரை கலந்த முடி காரின் அசைவுக்கு ஆடிக் கொண்டிருந்தது.

    அப்புறம்? என்றார்.

    அங்கேர்ந்து நேரா லண்டன். அங்கே ஒரு வாரம் தங்கினேன்.

    கலை நிகழ்ச்சியாக்கும்?.

    "ஆமாம் என்றவள் அவருக்கு அரை இஞ்ச் அருகில் அமர்ந்து சிக்லெட் மென்று கொண்டிருந்தாள் ரோஸ் லிப்ஸ்டிக் பூசின உதடுகளால். அவளின் டாப்ஸ் இறுக்கமாக இருந்ததால். கண்ணபிரானுக்கு ஏ.சி மீறி புழுக்கமாக இருந்தது. முழங்கால் வரை வந்த ஸ்கர்ட் 'v' என்று பிரிந்த இடத்தில் பளீர் என்று சிவந்த தேகம். தேகப் பயிற்சி செய்யும் தேகம். தாகம் ஏற்படுத்தும் தேகம்.

    சூர்யா, நான் புரியாமத்தான் கேக்கறேன் - உனக்குத் தெரிஞ்சது ஒரே கலை. அதை மேடையில பத்தாயிரம் ஜனங்க நடுவில் நிகழ்ச்சி நடத்த முடியாதே.

    போங்க சார் என்று செல்லமாக ஒரு பக்கத்து மீசையை இழுத்தாள்.

    சாயம் போய்டும், தொடாதே. நான் சீரியஸா கேக்கறேன். கலைக்குழுவில் நீயும் எதுக்காகப் போனே? ஒரு பிரபல நடிகைன்னாலும் ஒத்துக்கலாம்.

    பிரபலமோ, இல்லையோ சினிமால வந்த மூஞ்சின்னாலே மக்களுக்கு ஒரு மயக்கம்தான். ஒவ்வொரு ப்ரோக்ராம்லயும் எனக்கு ஒரு டான்ஸ் கொடுத்துடுவாங்க

    நீ டான்ஸ் கூட ஆடுவியா?

    இருபத்தி நாலு படத்தில ஆடியாச்சு. புதுசா கேக்கறிங்களே...

    நான் படமே பார்க்கிறதில்லை. நான் பார்க்கற படங்களே வேற. காஸ்ட்யூம் செலவே இல்லாத படங்கள். அப்படி எதுவும் நீ நடிச்சிருக்கியா?

    சேச்சே. கோடி கொடுத்தாலும் மாட்டேன். உவ்வே...

    அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க. இப்ப டான்ஸ் ஆடறதில்லையா?

    மூணு வருஷமாச்சு. விட்டுட்டேன்.

    விலகிட்டியா, விலக்கிட்டாங்களா?

    தோண்டிக் தோண்டிக் கேப்பிங்களே... கொஞ்சம் இடுப்பு பெரிசாய்டுச்சி. அதனால ஃபீல்டு எனக்கு டாட்டா காமிச்சிடுச்சி.

    அதனால என்ன கெட்டுப் போச்சு இப்ப, அதான் அமோகமா சம்பாதிக்கிறியே பாரிஸ், லண்டன்னு பறந்து...

    சார், எதுக்காக என்னைக் கூப்பிட்டனுப்பினிங்க? சொல்லுங்க.

    கண்ணபிரான் போக்குவரத்து குறைந்த சாலையில். ஓரத்தில் நிறுத்தி எஞ்சின் அணைத்து, உள் விளக்கு போட்டு அவளைப் பார்க்கும்படி அமர்ந்து கொண்டார்... டேஷ் போர்டு திறந்து ஒரு கவர் எடுத்தார். கோட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டு அவள் கூந்தலுக்குள் ஊதினார்.

    சூர்யா நளினமாக இருமிவிட்டு கைக்குட்டையால் வாயை ஒற்றிக் கொண்டாள்.

    இவர் லெஃப்டினண்ட் அஜய் ஷர்மா என்றார் கண்ணபிரான் கவரில் இருந்து எடுத்த புகைப்படத்தைக் காட்டி.

    அதில் இராணுவ உடையில், பதக்கங்கள் சகிதமாய் முரட்டு மீசையுடன் இருந்த அஜய் ஷர்மாவுக்கு மாறு கண் இருப்பது தெரிந்தது.

    இவருக்கு உலகத்திலேயே பிடிச்சது ரெண்டு விஷயம்! ஒண்ணு - ஜின்.

    ரெண்டு - பெண் கரெக்டா? என்றாள் சூர்யா.

    கரெக்ட். சூர்யான்னா இந்த இராணுவ அதிகாரி அப்படி ஏங்கணும்.

    செய்துடலாம். எங்கே தங்கியிருக்கார்?

    தனி பங்களால் பயங்கரமான பாதுகாப்புக்களோட.

    தனியாவா?

    ஆமாம்.

    அட்ரஸ்?

    போட்டோ பின்பக்கம் இருக்கே - போன் நம்பர் அவரோட தினசரி நடிவடிக்கைகள், பழக்கங்கள் கூட குறிச்சிருக்கேன்.

    போதும். நான் பார்த்துக்கறேன் மத்ததெல்லாம்.

    வெரிகுட்.

    திட்டம் என்ன சார்?

    அது இப்ப சொல்ல முடியாது. நீ அவரோட நெருக்கமா பழகி சகஜமா அவர் வீட்டுக்குள்ளே போய்ட்டு வர முடியற அளவுக்கு வந்ததும் சொல்றேன்.

    "ஓக்கே. ஆனா பெரிய ஆதாயம் இல்லாம

    Enjoying the preview?
    Page 1 of 1