Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramanin Moganam
Ramanin Moganam
Ramanin Moganam
Ebook415 pages2 hours

Ramanin Moganam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைக்கு தீப்தி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, மகன் அனிருத்துடன் தில்லியில் வாசம். அவளை சிறு வயதில் மணந்து பின் பிரிந்து சென்ற கணவன் ராஜீவலோச்சன் எதிர் வீட்டில் குடி வருகிறான். அவனுடன் அவன் மகள் நம்ரதாவும். அனிருத்தும் நம்ரதாவும் நட்பை தாண்டிய உணர்வில் இருப்பவர்கள். இந்த நாலு பேரின் உணர்வுகளும் உறவு சிக்கல்களும் அதன் விடையும் விரிவாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கும் இந்த நாவல் நல்லதொரு முடிவைத் தருகிறது.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580147210496
Ramanin Moganam

Read more from G. Shyamala Gopu

Related to Ramanin Moganam

Related ebooks

Reviews for Ramanin Moganam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramanin Moganam - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராமனின் மோகனம்

    Ramanin Moganam

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    தலைநகர் தில்லியின் மார்கழி மாதம் கடும் குளிரில் எங்கே உறைந்து போய் விடுவோமோ என்று நடுங்கிக் கொண்டே எழுந்தாள் தீப்தி. மணி ஆறு ஆகி விட்டிருந்தது. அவளை அடித்து எழுப்பிய அலாரத்தை பதிலுக்கு தலையில் ஒரு தட்டு தட்டி அடக்கினாள். குளித்து புடவை உடுத்திக் கொண்டு சமயலறைக்கு வந்தவள் பில்டரில் மூன்று ஸ்பூன் காப்பித் தூளைப் போட்டு கெட்டிலில் கொதித்துக் கொண்டிருந்த சுடுதண்ணியை எடுத்து ஊற்றி பில்டர் தலையில் மூடியால் நங்கென்று ஒரு தட்டி தட்டினாள்.

    தினம் அது தலையில் இப்படி தட்றியே. அதுக்கு வலிக்கப் போறதும்மா பாவம் என்று பின்னால் இருந்து குரல் கேட்டது.

    திரும்பிப் பார்க்காமாலே தெரியும் அவளுடைய அருமருந்தன்ன ஆருயிர் புதல்வன் அனிருத் தான் என்று. இந்த பெரிய வில்லா வீட்டில் இருப்பது அவனும் அவளும் தானே.

    கொஞ்சம் இரு. பால் காஞ்சிப் போச்சு. டிகாசனும் இறங்கிடும். சூடா ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போவியாம் என்றவாறே பளபளவென்று துலக்கி வைத்திருந்த பித்தளை டபரா செட்டை எடுத்து கலந்து வைத்திருந்த காப்பியை இளம்சூட்டிற்கு ஆற்றி மகனிடம நீட்டினாள். வீட்டோடு மோனல் என்னும் இளமங்கை வேலைக்கு இருந்தாலும் இந்த காப்பியை மட்டும் அவளாகவே கலந்து கொள்வாள். அதை மட்டும் அவளால் விட்டுக் கொடுக்க முடியாது.

    அம்மா, உன்னாலே இன்னும் இந்த பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்று தன் கையில் இருந்த பித்தளை டபரா செட்டைக் காட்டினான்.

    எதுக்கு மாத்திக்கணும்?

    அது சரி என்று ஆமோதித்தான் புன்னகையுடன்.

    ஊரை மாற்றலாம். பேரை மாற்றலாம். ஆளை மாற்ற முடியாது இல்லே

    ஏன் மாற்ற முடியாது? நீ மாறலியா என்ன?

    மாறித்தான் போயிருக்கேன் என்றாள் ஆழ்ந்த சிந்தனையுடன்.

    தன்னுடைய ஒற்றைக் கேள்வி அவளை எங்கோ அடிமனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற எண்ணங்களை, அவள் வேதனைகளை குத்தி கிழித்து அவள் சிந்தனைகளை வெளியே கொண்டு வந்து முகத்தில் அப்பி விட்டதை உணர்ந்து கொண்டவன் அவளை மெல்ல அணைத்தான். அந்த சிறு செய்கை ஆயிரம் யானையின் பலத்தை அவளுக்கு கொடுப்பதை, எப்போதும் போல இப்போதும் உணர்ந்து கொண்டவள் அவன் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொண்டாள்.

    அவளைத் தன் தோளுடன் அணைத்துப் பிடித்தவன் நீ என் தங்கை மாதிரி ஒரு உணர்வு எற்படுகிறதும்மா என்றான் ஆழ்ந்த உணர்ச்சி நிறைந்த குரலில்.

    ஆமாம். நீ தான் என் தலைக்கு மேலே உசந்துட்டியே என்று அவனருகில் நின்று எம்பி காட்டினாள்.

    அதனால் தானா? என்றான் அவளை ஆழமாகப் பார்த்தவாறே.

    அந்த பார்வை அவளை என்னவோ செய்தது. எப்படிப் பார்க்கிறான் இவன் அப்பாவைப் போலவே! மனதின் அடிவரை ஊடுருவி செல்லும் பார்வை. அங்கே என்ன இருக்கிறது என்று அறிந்து கொண்டு விடும் பார்வை. தன்னை எப்போதுமே பலகீனப்படுத்தி விடும் பார்வை. இந்த பார்வைக்குப் பயந்து தானே...! வேண்டாம். வேண்டாம்.

    என்னைக்கு நீ டவுசரில் இருந்து பேன்ட்க்கு மாறினியோ அன்னையிலிருந்து இதைத் தான் சொல்லிண்டு இருக்கே அனி

    ஆமாம் என்று அவள் உச்சந்தலையில் முகவாய் பதித்து ஒரு அழுத்து அழுத்தினான்.நான் தானேம்மா உன்னை பாத்துக்கணும். நமக்கு என்ன அப்பாவா இருக்கார் என்றான்.

    இல்லாத ஒன்னைப் பத்தி எதுக்கு பேசுவே? அதுவும் காலங்கார்த்தாலே என்றவளின் குரலில் சிறு எரிச்சல் இருந்தது.

    அது அவன் அறிந்தது தான். இருவருக்குமிடையில் இல்லாமல் போன அப்பா என்னும் ஒரு கேரக்டர் சிந்தனையிலும் இருக்கவே கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும் தாயின் போக்கு எப்போதும் போல இப்போதும் அவனுக்கு புரியாதது தான். மீறி ஏதேனும் கேட்டால் உனக்கு இதை எல்லாம் புரிஞ்சிக்க வயசுப் பத்தாது என்ற ஒற்றை வரி பதில் தான் எந்நாளும். தாயிடமிருந்து மட்டுமல்ல, தாயின் பெற்றோரான தாத்தா பாட்டியிடமிருந்தும் தான்.

    அது போகட்டும். தாத்தாவும் பாட்டியும் எப்போ வருவாங்க?

    தாத்தாவுக்கு லீவ் கிடச்சா வரேன்னு சொன்னார்

    அது தான் எப்போ?

    நீ தான் அவரிடம் கேளேன்

    ஆகட்டும் என்றவன் அப்போது தான் அவளைக் கவனித்தான்.என்ன காலங்காலையில்... கண்களில் ரசனையுடன் புடவை உடுத்திக் கொண்டு. எங்கே கிளம்பிட்டே?

    இன்னும் கொஞ்ச நேரத்தில் பஜனை கோஷ்டி வந்துடும், நம் வீட்டு வாசலுக்கு வரும் போது நானும் அவுங்களுடன் சேர்ந்து கொள்வேன் என்று புன்னகைத்தாள் அவன் ரசனையைக் கண்டு.

    இந்த பனியில் பஜனையா?

    மார்கழி மாசம் தானே பஜனை பண்ண முடியும்?

    உனக்குன்னு சேர்ந்திருக்காங்க பார். அவுங்களை சொல்லணும்

    "இந்த தில்லியில் ஆர். கே. நகரில் அயோத்தியா கேட்டட் கம்மூயூனிடி என்னும் இந்த தனிச்

    சமூகத்தில் பஜனை நடப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை அனிருத்"

    என்னைக் கூப்பிடாத வரைக்கும் சரி தான் என்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

    அப்படி தப்பிச்சிக்க முடியாது அனி. கடைசி ரெண்டு நாள் ராதா கல்யாணம் இருக்கு. நல்ல வேளையா சனி ஞாயிறில் தான் வருகிறது. அதனால் நீ கண்டிப்பா வந்தே ஆகணும்

    ராதா கல்யாணமா? என்றவன் அதற்கு மேல் நிற்க நேரமில்லாமல் கிளம்பினான். சரிம்மா. நான் கிளம்பறேன்

    அவன் வெளியே போய் பைக் எடுக்கும் சத்தமும், அருகில் பஜனை கோஷ்டியாரின் இசையும் பாடலும் கேட்கவே, தீப்தி வீட்டைப் பூட்டிக் கொண்டு தயாராக இருந்தாள். அவளருகில் வந்த கூட்டத்தில் இவளை நன்கு அறிந்த ரகோத்தமன் தலையை ஆட்டி அவளை வரவேற்றார். அவர் தான் ஆர்கனைசிங் கமிட்டி சேர்மன். இவளும் அவருடன் போய் சேர்ந்து கொண்டாள்.

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா. கிருஷ்ணா கிருஷ்ணா, ராம ஹரே ராமா, ஹரே ராம் ஹரே ராமா

    உற்சாக மிகுதியில் பகத்வீர்சிங் எகிறி குதித்து ஆடிக் கொண்டிருந்தார். நம்மூரில் இசைக் கருவிகளை இசைத்து பாடிக் கொண்டே நடந்து வருவது தான் பஜனை கோஷ்டியாரின் வழக்கம். ஆனால் இங்கே பலதரப்பட்ட மாநில, இன, மொழி, மதம், கலாச்சார மக்களும் இணைந்து வாழ்வதால் இந்த பஜனையும் கூட அதைப் போலத் தான் கலந்து கட்டி கதம்பமாக இருக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் ஐந்து நிமிடம் நின்று தனி ஆவர்த்தனம் நடக்கும். கிருஷ்ணன் உன்னியின் ஜேசுதாஸ் பாடல்கள் அவசியம் இருக்கும். ரகோத்தமனின் மகன் ரங்கனின் சம்பிரதாய பஜனைப் பாடல்கள், சமயத்தில் தீப்தியின் தோடாயா மங்களம் ரங்கனுடன் இணைந்து இருக்கும். தீப்தியின் பாரதியாரின் தனி பாடல்கள் வேறு என அமர்க்களமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காலையில் அதகளப்படும்.

    தில்லியின் ஆர். கே. நகரில் மிக உயர் வகுப்பினரின் குடியிருப்பான அயோத்தியா கேட்டட் கம்யூனிட்டி என்னும் இந்த பகுதி கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலபரப்பில் சுமார் நாற்பத்தி ஐந்து வில்லா வீடுகள், கம்யூனிட்டி ஹால், ஒரு இன்டர்நேசனல் பள்ளியுடன் நடுவில் மிகப் பெரிய விளையாட்டு மைதானம், இரண்டு நீச்சல் குளம் என்று சகல வசதிகளுடன் கூடியது. அதிலும் தீப்தியின் வில்லா சொந்தமாக அவர்களுக்கான நீச்சல்குளம் செர்வன்ட் குவார்டர்ஸ் இரண்டு கார் பார்கிங் வசதிகள் உள்ளடக்கி கோடிகணக்கான ரூபாய் பெறுமானமுள்ள வீடு. எதிர் வரிசையில் ஐந்தும் இவள் வரிசையில் ஐந்தும் என மொத்தம் பத்து வீடுகள் மட்டும் இதைப் போல மிக உயர்தர வசதிகள் கொண்ட அதிக விலை வில்லாக்கள். எதிர்வீடு மட்டும் இன்னும் காலியாகவே இருக்கிறது. அனில் ஷர்மா என்னும் பிகாரி விற்று விட்டுப் போய் விட்டார் என்று கேள்வி. அதை தமிழகத்தை சேர்ந்த ஓரு தொழிலதிபர் தான் வாங்கியிருப்பதாக ரகோத்தமன் சார் சொன்னார். ஆனால் இன்னும் யாரும் குடிவரவில்லை.

    சுதந்திரத்திற்கு முன்பு நம்ம தஞ்சை ஜில்லா கும்பகோணத்தை சேர்ந்த ராமபத்ரன் என்னும் ராணுவ தளவாடங்கள் தொழில் செய்து கொண்டிருந்தவருக்கு சொந்தமான இந்த பகுதியில் ஒரு ராமர் மடம் இருந்தது. வருடாவருடம் சீதா கல்யாணம், ராமநவமி, மார்கழி பஜனைகள் அதைத் தொடர்ந்து ராதா கல்யாணம் என்று பக்தியுடன் இருந்த இடமானதலால், இங்கே பத்திரம் பதிந்து கட்டிடம் கட்டும் போதும், வருடந்தோறும் அதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அதை ஒரு ஷரத்தாகவே எழுதி விட்டிருந்தார் அவர்.

    அதற்கேற்றார் போல் ரகோத்தமன் என்னும் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி மன மகிழ்ச்சியுடன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டார். சிரமம் பாராமால் மிகவும் விமரிசையாகவே செய்வார். இந்த கால பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் தெரிந்து கொல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் பெரியவர்கள் மிகவும் உற்சாகமாக கலந்து கொள்வார்கள். சிறுவர்களுக்கு இன்றைய பப், பார்ட்டிக்களுக்கு இது ஒரு நல்ல மாற்று என்ற வகையில் மிகவும் பிடித்தமான ஒன்று தான். போதாக்குறைக்கு ராதா கல்யாணத்திற்கு அவரவரின் பாரம்பரிய உடை உடுத்திக் கொண்டு மிகவும் கெத்தாக இளமை பொங்க ஒரே ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் அயோத்தியா.

    பஜனை கோஷ்டி ராமர் மடம் வந்து சேரவும் மணி எட்டைத் தொடவும் சரியாக இருந்தது. அதுவரை உற்சாகமாக மெய் மறந்து ஆடிப் பாடிக் கொண்டிருந்த சொற்ப கூட்டம் அப்போது தான் தங்கள் அன்றாட வேலைகள் நினைவிற்கு வந்து அரக்க பறக்க கிளம்பி வேக வேகமாக நடக்கத் தொடங்கினார்கள் அவரவர் வீடு நோக்கி. ஓய்வு பெற்ற ஒரு சிலர் மட்டும் அங்கேயே அமர்ந்து சுடச்சுட ஒரு காப்பியைக் குடித்து விட்டு ஊர் நியாயம் பேசி விட்டுத் தான் போவார்கள்.

    ராமர் மடத்தின் படியில் அமர்ந்து கொண்ட ரகோத்தமன் தீப்தியைப் பார்த்துக் கேட்டார். என்னம்மா, ஆபிஸ் கிளம்பனுமா?

    ஆமாம் அங்கிள்

    அவரருகே அமர்ந்திருந்த குனால் கோஷ் பார்லிமென்ட் செசன் முடிஞ்சாச்சு போல? என்று கேட்டார்.

    நல்லவேளை நவம்பர் மாசம் தொடங்கி டிசம்பர்ல பத்து பதினஞ்சு தேதிக்கு முடிச்சிடரா இல்லையா தீப்தி

    ஆமாம். அதனால் தான் கொஞ்சம் நிதானமாக இருக்க முடிகிறது என்றாள் தீப்தி.

    நீ வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் செக்ரட்டரியா இருக்கே. உனக்கு இன்னும் பதட்டம் தான் என்றார் குணால்.

    ஐ. ஏ. எஸ் என்றால் சும்மாவா? என்றார் ரகோத்தமன் பெருமையுடன்.

    புன்னகைத்துக் கொண்டாள் தீப்தி. அவள் கையில் ராமர் மட ஊழியர் ஜெயசிங் கொண்டு வந்த காப்பிக் கோப்பையை வாங்கிக் கொண்டாள். என்றைக்காவது தான் இதுப்போல ஆற அமர நின்று பேசுவது அவளால் இயலும். ரகோத்தமன் சொன்னதைப் போல பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்து இபோது தான் அப்பாடா என்றிருக்கிறது. இனி வீட்டிற்குப் போய் அலுவலகத்திற்கு கிளம்பத் தான் சரியாக இருக்கும். ஒரு தயிர் சாதம் போதும். காப்பி போடும் போதே இன்னொரு அடுப்பில் சாதம் வைத்து விட்டாள்.

    அனிருத் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் பட்டமேற்படிப்பு முதலாம் ஆண்டு மாணவன். தாயைப் போல ஐ.ஏ.எஸ் செய்வதில் அவனுக்கு விருப்பமில்லை. அவனுடைய தந்தையைப் போல பெரிய தொழிலதிபராக வருவானோ என்றால் அதிலும் இஷ்டமில்லை. அவன் விருப்பம் எல்லாம் சர்வ தேச பொலிடிகல் ஜர்னலிசம் தான். விசுவல் கம்யூனிகேசன் போக சொன்னாள். சினிமா எடுப்பதில் பெரிய ஆர்வமில்லை என்று மறுத்து விட்டான். இந்த இருவத்தியொரு வயதில் உலக அரசியல் அத்துப்படி. கொஞ்சமா கம்யூனிசத்தில் ஈடுபாடு வேறு. அடிக்கடி செமினார் அது இது என்று சுற்றிக் கொண்டிருப்பவன். படித்துக் கொண்டே ஜியாலஜிகல் சர்வே அனலிஸ்ட் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதி கணிசமான தொகையை பாக்கெட் மணியாக பெற்று விடுவான்.

    இன்று வெள்ளிக்கிழமை. தீப்தி வீட்டிற்கு வரவும் செர்வன்ட் குவார்டர்சில் இருந்து மோனல் வரவும் சரியாக இருந்தது. அவளுக்கு வேலை சொல்லி விட்டு அவளும் தயாரானாள். காரை மோனலின் கணவனும் இவள் அலுவலக டிரைவருமான வினய் தயாராக போர்டிகோவில் நிறுத்தினான். எதிர் வீட்டில் லாரியில் சாமான்கள் வந்து இறங்கியது. நாலைந்து ஆட்கள் சரசரவென்று சாமான்களை இறக்க, பார்த்து பத்திரமா இறக்கு. விலை ஜாஸ்தியான பொருள் என்றும் லெப்டில் திரும்பு, ரைட்டுல வா என்றும் சத்தமிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தவாறே தன் காரில் போய் ஏறி விட்டாள் தீப்தி.

    வாசல் வரை இவர்களை வழி அனுப்ப வந்த மோனல் எதிர் வீட்டில் நின்று கொண்டிருந்த லாரியையும் சாமான்களை ஆட்கள் இறக்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் தீப்தியிடம் மா, அந்த வீட்டுக்கு ஆள் வந்துட்டாங்க போலிருக்கு என்றாள் உற்சாகமாக.

    அதுக்காக அந்த வீட்ல போய் நின்னு வம்பு வளக்காம வீட்ல இரு என்று அதட்டினான் வினய்.

    பாருங்க மா, நான் எத்தனை வீட்டுக்கு வம்புக்கு போயிருக்கேன் என்றாள் மோனல்.

    உங்க பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும் என்று புன்னகைத்தவாறே வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

    எப்போ பார்த்தாலும் உம் பொண்டாட்டியை இப்படி திட்டிக்கிட்டே இரு. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் உன்னை விட்டுட்டுப் போய்டப் போவுது

    இதுக்கு அவ்வளவு தூரம் எல்லாம் தெரியாதும்மா

    போகாதுங்கறியா?

    பட்டிக்காட்டு அனாதைக் கழுதைம்மா இது. நான் பாவம் பாத்து கட்டிக்கிட்டு வந்தேன். சொன்ன பேச்சைக் கேட்டுக்கிட்டு ஒழுங்கா இருன்னா இருக்கும்

    பட்டிக்காடா இருந்தாலும் அவளுக்கும் ஒரு சுய மரியாதை இருக்கும் இல்ல

    அவளைத் திரும்பி பார்த்தவனின் கண்களில் அப்படி ஒரு வியப்பு. என்ன சொல்கிறாள் இந்த அம்மா? சாதாரணமாக கணவன் தன் மனைவியை ஒழுங்குபடுத்துவதைத் தானே நான் செய்தேன். இதில் என்ன சுயமரியாதை கிடக்கிறது. இவள் என்னன்னவோ சொல்கிறாள்? மோனலுக்கு அதெல்லாம் தெரியாது. ஏனெனில் அவள் படிக்காதவள். படித்த பெண்கள் தான் இதைப் போலவெல்லாம் யோசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

    இவனுக்கு புரியவில்லையா அல்லது புரியாததைப் போல நடிக்கிறானா என்று சிறு எரிச்சல் வந்தது அவள் கண்களில். ஆண்கள் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தில் திடப்பட்டுப் போனவனால் வேறு எதைப் போல சிந்திக்க முடியும்? அதிலும் குழந்தையில்லாதது வேறு அவளிடத்தில் இவனுக்கு ஏற்பட்டிற்கும் இளக்காரம் இப்போதெல்லாம் குரோதமாக வெளிப்படுவதை சில சமயங்களில் தீப்தியே உணரத் தான் செய்வாள். இவன் சொல்வதைப் போல மோனல் ஒரு அனாதைப் பெண் என்பதால் இவனிடம் அடங்கிப் போகிறாளா அன்றி குழந்தையின்மைக்கு தான் தான் காரணம் என்று நினைத்து அடங்கிப் போகிறாளா என்று தெரியாது. ஆனால் வினயை கண்டால் கொஞ்சம் பயம் கலந்த பாசம் தான் அவளுக்கு என்று நினைத்துக் கொண்டவள் காலையில் நமக்கு எதற்கு இந்த தேவையில்லாத நினைவுகள் என்று தன்னைத் தானே தலையில் தட்டிக் கொண்டாள்.

    மாலையில் வீட்டிற்கு திரும்ப வந்து கதவைத் திறந்து விளக்கைப் பொறுத்தியவள் தன் மனதைப் போல வீடும் வெறிச்சென்று இருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள். யாருக்காக இதெல்லாம் என்று மனசு அலைபாயும். எதையோ தேடும். பதினேழு வயசா? உன்னால் அதைப் போல செய்ய அன்றைக்கு முடிந்தது. இன்றைக்கு முடியுமா? எங்கே செய்து தான் பாரேன். மனசு கறுவத் தான் செய்தது. யாரிடம் கோபம் கொள்வது? விதியைத் தவிர வேறு என்ன? உடையை கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே தன் அறையில் நாற்காலியில் சாய்ந்தாள்.

    இன்னும் அனிருத்தை காணவில்லை. தாமதமாகத் தான் வருவான். காலையிலேயே சொல்லி விட்டுப் போய் விட்டான். வெள்ளி சனிக்கிழமைகளில் தாமதமாக வர அனுமதிப்பவள் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இரவு தாமதத்தை அனுமதிக்க மாட்டாள். அவளுக்கும் மறுநாள் காலை வேலைக்கு கிளம்புவது கஷ்டமில்லையா! அனிருத்தும் தாயைப் புரிந்து கொண்டு ஞாயிறு அவுட்டிங்கை கட்டாயமாக தவிர்த்து விடுவான்.

    மாஜி, காப்பி கொண்டு வந்திருக்கிறேன்

    ம் கண்களைத் திறக்கவில்லை தீப்தி.

    மோனல் அவளருகில் வந்து காப்பியைக் கையில் கொடுத்தாள்.

    வெச்சிட்டுப் போ

    தலையை அமுக்கி விடறேன் என்றவாறே தீப்தியின் நெற்றியை வருடினாள். அப்படியே மெல்ல பிடித்து விட்டாள். இதமாக இருந்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது தலைவலியின் வீரியம் குறைந்ததினாலா அன்றி தன்னிரக்கத்தில் அமிழ்ந்து கிடந்த தன்னை இந்த சிறிய செய்கை இளக்கி விட்டதாலா என்று புரியவில்லை. ஆனாலும் இதமாக இருந்தது மோனலின் வருடலும் பிடித்து விடலும்.

    காப்பியைக் குடிங்க என்றவாறே கோப்பையை எடுத்து அவள் கையில் குடித்தாள்.

    தீப்திக்குமே மனசு லேசானாதால் மறுப்பேதும் சொல்லாமல் காப்பியாயிக் கையில் வாங்கி

    அருந்த தொடங்கினாள். கோப்பையை அருகில் உள்ள டீப்பாய் மீது வைக்கவும் மோனல் மீண்டும் அவள் தலையை முதுகை அழுத்தி விட்டாள்.

    உன் கை பார்க்க முரடாயிருக்கு. ஆனால் பிடித்து விட்டால் ரொம்ப மென்மையா இதமா இருக்கு மோனல். அது எப்படி?

    முரட்டுத்தனமும் வைராக்கியமும் மனசுல தான் இருக்கணும். கையில இருக்கக் கூடாதுன்னு எங்க அப்பா சொல்வாறு மா

    ஏன்?

    நம்மளை அறியாமல் கை நீட்டிடோம்னா எதிராளி ஒரே அறையில செத்துப் போயிறக்கூடாது இல்லையா?

    அது சரி. அப்படி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமா என்ன?

    ஏன் வராம?

    யாரிடம் வரும் மோனல்? பதிலை தெரிந்து கொண்டே கேள்வியைக் கேட்டாள்.

    வேறு யாரு? என் புருஷன் கிட்ட தான்

    ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் நீ அவரை அடிச்சிடுவியா? கேட்டவள் புன்னகைத்தாள்.

    அது பாவம்மா. வெளியே தெருவுல வேலைக்கு போற மனுஷன். அதுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கும். நான் வீட்ல தானே இருக்கறேன். என்னிடம் காட்டாம கோபத்தை வேறு யாரிடம் காட்டும்? போனால் போவட்டும் என்று விட்டுடுவேன்

    அவள் சொன்னது உண்மை தான். அலுவலகத்தில் தன்னை ஒத்தவர்களிடம் சகஜமாக, அதிகாரிகளிடம் தரை வரை தாழ்ந்து பணிந்தும் தான் இருப்பான் அவன். வீராப்பு எல்லாம் மனைவியிடம் மட்டும் தான். அவனுக்கும் வேறு யாரிடம் தன் பௌருஷத்தை காட்டிக் கொண்டு விட முடியும்?

    உனக்கு கோபமே வராதா?

    யார் சொன்னது? நல்லா கோபம் வரும். ஆனால் நமக்கு சமமானவங்க கிட்டத் தான் கோபப்படனும்னு எங்க அம்மா சொல்லும்

    உன் புருஷன் உனக்கு சமமான ஆளு இல்லையா?

    ஊஹூம் என்று அவள் புன்னகைத்தாள்.

    இல்லையா? என்று வியப்பைக் காட்டினாள் தீப்தி.

    ஊஹூம். இல்லை. ஆண்கள் எப்போதுமே பெண்களுக்கு சமமானவர்கள் இல்லை என்று எங்க அம்மா சொல்வாங்க. நமக்கு இருக்குற பலம் அவுங்களுக்கு கிடையாது. அது உடம்புலயும் சரி. மனசுலயும் சரி

    இப்படி நெனச்சிக்கிட்டா நாம நிம்மதியா இருப்போம். உங்க அம்மா சரியாத் தான் சொன்னாங்க என்றாள் தீப்தி.

    மா, சப்பாத்தியும் சப்ஜியும் வெச்சிருக்கேன். நான் கிளம்பறேன்

    வீட்ல போய் சமைக்கணுமா?

    ஆமாம். இதே சப்பாத்தி இதே சப்ஜி தான்

    அதை இங்கேயிருந்தே கொஞ்சம் கொண்டு போகலாமில்லே. வீட்ல வேற போய் இதையே செய்வானேன்?

    அதை விட உனக்கு என்ன வேலை என்று கேட்கும் என் புருஷன் என்றவாறு கிளம்பினாள் மோனல்.

    அவள் போனதும் உடை மாற்றிக் கொண்டு கீழே வரவும் அனி வரவும் சரியாக இருந்தது. ஹெல்மெட்டை அதன் இடத்தில் வைத்தவன் முதுகுப்பையைக் கழட்டி சோபாவில் போட்டவாறே ஹாய் மா என்றான்.

    கைகால் அலம்பிண்டு வா அனி. சாப்பிடலாம். பசிக்கிது

    இன்னும் சாப்பிடலையா? என்றவாறே கைக்கால் கழுவிக் கொண்டு அவளெதிரே சாப்பிட அமர்ந்தான் அனிருத். பார்வை துருதுருவென அலையவே,

    என்ன விஷயம் அனி என்று கேட்டாள் தீப்தி.

    மா...

    என்ன ஒரே எக்சைட் ஆ இருக்கே அனி என்றாள் வியப்புடன்.

    எதிர்த்த வீட்டில் குடி வந்திருப்பவர்களைப் பார்த்தாயோ?

    இல்லையே

    சாயங்காலமே அவங்க வந்தாச்சு

    நீ சொல்லியிருந்தால் ஆர்த்தி எடுத்திருப்பேன் அனி என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

    நம்ம வீட்டுக்கு வரும் போது எடு. இப்ப வேண்டாம் என்றான் அவனும் இலகுவாக.

    அதுவரைக்கும் தாங்குவியா?

    கேலி கூடிப் போச்சு உனக்கு

    நீ பண்ற அக்கப்போரைப் பார்த்தால் நாளைக்கு விடியக்காலமே ஆரத்தி எடுக்கணும் போலிருக்கே

    மா

    அவனை குறுகுறுவென பார்த்தவளின் கண்களில் கேலி இருந்தது. ரொம்ப அழகா?

    ரொம்பவே என்றவனின் குரலும் பார்வையும் ரசனையில் மின்னியது.

    சூப்பர். நீயும் தான் பாவம் எத்தனை நாள் போரடிச்சிண்டு இருந்தே என்றாள் உண்மையான அக்கறையுடன்.

    உதடு பிதுக்கி தோள்களைக் குலுக்கிக் கொண்டான் அனிருத்.

    நீ இப்ப தானே உள்ளே வரே?என்றவளின் குரலில் சிறு சந்தேகம் இருந்தது.

    வீட்டுக்குள்ள இப்போத் தான் வரேன் கண்களின் ஓரம் சிரிப்பால் இடுங்கியது.

    உன் பிரென்ஸ் பாத்துட்டு வரியாக்கும் என்றாள் அவளும் புன்னகையுடன்.

    நம்ம கம்யூனிட்டியில இது தான் பேச்சும்மா. பொம்மை மாதிரி இருக்காளாம்

    பொம்மை தானேன்னு காக்கா தூக்கிண்டு போய்டப் போறது. பாத்து...பத்திரமா இருக்க சொல்லு

    என்னைத் தாண்டி ஒரு காக்காவும் வராது

    அது சரி என்றவளின் குரல் கேலியில் மின்னியது. நீயே காக்கா தானே என்றது பார்வை.

    மறுநாள் காலை தீப்தி பஜன் கோஷ்டி வருவதற்கு முன்பு வாசலில் தயாராக நின்றாள்.

    மா, நானும் வரேன் அவசர அவசரமாக வந்து சேர்ந்து கொண்டான் அனிருத்.

    நீயா?

    ஏன் இப்படி கண்ணை விரிப்பே. நீ தானே சொன்னே. சனிக்கிழமை...ராதா கல்யாணம்

    அது இன்னைக்கு சாயங்காலம்

    இப்போ என்னம்மா? என்று சிணுங்கினான். அவசர அவசரமாக அவன் பார்வை எதிர்வீட்டு வாசலில் நிலைக் குத்தி நின்றது.

    ஓஹோ, அப்படியா? என்னடா இது எலி அம்மணமா போறதேன்னு நெனச்சேன். சரி தான் என்று உதடு விரியாமல் சிரித்தாள் தீப்தி.

    எதிர்வீட்டு கதவு திறந்தது. ஒரு சிறு பெண் பதினெட்டு வயதிருக்கும் போனி டைலும் சல்வார் கமீசும் போட்டு தலையை நன்றாக மூடிக் கொண்டு வந்தாள். இவர்களோடு சேர்ந்து கொண்டாள். ரகோத்தமன் அந்த பெண்ணை தீப்திக்கு அறிமுகப்படுத்தினார்.

    இவள்... என்று அவர் ஆரம்பிக்கும் முன்பாக

    நம்ரதா. புதுசா குடி வந்திருக்காங்க. அப்பாவும் பொண்ணும் மட்டும் என்றான் அனிருத்.

    பாத்துக்கோ தீப்தி. மீத விவரமும் அவனே சொல்வான் என்று சொன்னவர் புன்னகையுடன்

    அங்கேயிருந்து நகர்ந்தார்.

    நம்ரதா தீப்தியின் அருகில் வந்தாள். தீப்தி அவள் கையைப் பற்றிக் கொண்டாள் மிகவும் சிநேகமாக. பதிலுக்கு அந்த சிறு பெண்ணும் அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

    அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு என்னவோ நினைத்துக் கொண்டார் போல உங்களை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்றாள் தெள்ளத் தெளிவாக தமிழில்.

    என்னையா? இருக்காதே

    இல்லை. உங்களைத் தான். நான் பார்த்திருக்கேன் என்றாள் நம்ரதா ஆணித்தரமாக.

    எங்கே ஏது எப்படி என்று மேற்கொண்டு கேட்பதற்குள் பஜனையின் வால்யூம் கூடவும் மேற்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருக்காமல் முன்னால் நகர்ந்து விட்டாள் தீப்தி.

    ஹாய் அனிருத்.

    ஹாய் நம்ரதா.

    இருவரும் சகஜமாக பேசிக் கொள்வதற்கு இருவருக்கும் இந்த பஜனை ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்து விட்டது.

    ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே இருவருமே பாடல்களில் ஒரு காதையும் ஒருவரிடம் ஒருவர் மற்றொரு காதையும் வைத்துக் கொண்டு நடந்தார்கள்.

    பஜன் ராமர் மடத்தின் வாசலுக்கு வந்த போது தீப்தியின் தனிப்பாடலுக்கு எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். தீப்தியும் மெய் மறந்து தன் பதவியை மறந்து படிப்பை மறந்து தன் நிலை மறந்து ஊனுருக உயிருருக திருப்பாவையின் ஒரு பாடலை பாடினாள்.

    "ஆயர்குலத்தினில் தோன்றும் அணி விளக்கை

    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

    தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினால் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.

    பாடி முடித்து கண்களைத் திறந்தவள் எதிரே ராமர் மடத்தின் வாயிலில் நின்றவனை கண்டாள். மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு இவளையேப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தாள். யாரை இனி இந்த வாழ்நாளில் பார்க்கவே பார்க்க மாட்டேன் என்று சபதமெடுத்துக் கொண்டு வந்தாளோ, வாழ்ந்தாளோ அவனைப் பார்த்தாள்.

    அவன் தான் ராஜீவலோச்சன்.

    2

    அன்று சனிக்கிழமையாதலால் பஜனை முடிந்து எல்லாரும் அரக்க பறக்க போய் விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். பனித்துளியை தலைமீது வைத்துக் கொண்டு கனம் தாங்காமால் தலை சாய்ந்து நிற்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1