Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akkini Kunjondru
Akkini Kunjondru
Akkini Kunjondru
Ebook89 pages37 minutes

Akkini Kunjondru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு வாசகர்களுக்கு, இந்த தொகுப்பில் நான்கு குறு நாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் வாசிப்பிற்கு உகந்ததாகவும் நேரத்திற்கு தகுதியானதாக்கவுமிருக்கும் என்று உத்தரவாதம் உண்டு. படிக்கவும். விமர்சிக்கவும். நன்றி

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580147210714
Akkini Kunjondru

Read more from G. Shyamala Gopu

Related to Akkini Kunjondru

Related ebooks

Reviews for Akkini Kunjondru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akkini Kunjondru - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அக்கினி குஞ்சொன்று

    Akkini Kunjondru

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    உணர்வுடன் இயைந்த பயணம்

    அக்கினிக் குஞ்சொன்று

    கண்ணகியின் பயணம்

    மனிதம்

    மாயப் பிறப்பறுத்தால்...

    உணர்வுடன் இயைந்த பயணம்

    பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம் பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.

    இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம், காது குத்து மொட்டை சடங்கு போன்ற சுபகாரியங்களுக்கும் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளுக்குமானதாக இருக்கும்.

    அடுத்த கட்டமாக நம் ஊரில் நடக்கும் தேர் திருவிழாவிற்கானதாக இருக்கும். குறைந்தது பத்து நாட்களுக்கு வெளியே தெருவிலே ஏகக் கொண்டாட்டமாக இருக்கும்.

    வேண்டுதல்கள், காணிக்கை செலுத்துதல், பரிகார பூஜை என்று ஆன்மீகம் சார்ந்ததாகவும் சில நேரங்களில் நாம் பிரயாணிப்பது உண்டு.

    குடும்பத்துடன் விடுமுறையை ஓய்வாக கழிப்பதற்கு சுற்றுலா செல்வதும் உண்டு.

    நாலு இடங்களுக்கு போக வேண்டும். நான்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும். நான்கு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி பயணம் மேற்கொள்வது ஒன்று உண்டு.

    இத்தகைய பயணம் என்பது வீட்டுக் கவலையற்ற, நல்ல பொருளாதார நிலை, நல்ல உடல் நலம் என்பதை பொறுத்தே மேற்கொள்ளக் கூடிய ஒன்று. எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால் எல்லோருக்கும் அதுப் போல போவதற்கு இயல்வதில்லை. மனதிற்குள் அதற்கான சிறு ஏக்கம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிலருக்கு சில நேரங்களில் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்ப்பதுண்டு. அதைப் போல எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

    எங்கேயோ போவதற்கு கிளம்பி, எங்கே போவது என தெரியாமல், எதையோ பார்த்து,

    எதையெதையோ செய்து என்று ஒரு அதிரி புதிரியான ஒரு பயணமாக இருந்து விடக் கூடாது. மனசிற்கு நிறைவைக் கொடுக்கக் கூடியதாக. வாழ்நாள் காலமெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தகுதியான, அடுத்தவருக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளக் கூடிய வகையில் இருக்கக் கூடிய ஒரு பயணத்தை திட்டமிடுதல் வேண்டும்.

    அதனால், நம் பயணத்தை எங்கே தொடங்குவது என்பதை விட எதன் அடிப்படையில் தொடங்குவது என்று தீர்மானித்துக் கொள்ளுதல் நலம். நானும் அதைப் போல தீர்மானித்தேன். பண்டைய தமிழகத்தின் வளமை மிக்க சரித்திரத்தைப் பின்புலமாக கொண்ட அமர காவியமான கல்கியின் பொன்னியின் செல்வனே அன்றி எது நம்மை மனம் நிறைய வைக்கும்? வந்தியத்தேவனின் பாதையில் மட்டுமன்றி சோழனின் சரித்திரம் சொல்லும் இடங்களையும் பயணித்தேன். என்னுடன் என் கணவரும் அவர் சகோதரியும் என் தோழியுமானவளும் உடன் வந்தார்கள்.

    சிதம்பரம் மேலக்கடம்பூர், கீழக்கடம்பூர், திருப்புறம்பயம் சாட்சிநாதர் கோயில், பிரதீபவியின் பள்ளிப்படை கோயில் என வந்தியத்தேவனுடனும் ஆழ்வார்க்கடியானுடனும் பயணித்து தாராசுரம் பழையாறை திருசக்திமுற்றம், பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோயில் மேற்றளி எனப்படும் கைலாசநாதர் கோயில், பிரும்ம நந்தீஸ்வரர் கோயில் வடதளி எனப்படும் தர்மபுரீஸ்வரர் கோயில் தென்தளி எனப்படும் பரசுநாதசாமி கோயில், கீழ்தளி எனப்படும் சோமேஸ்வரர் கோயில் கும்பகோணம் அரசலாற்ரங்கரை, என குந்தவையுடனும் வானதியுடனும் உரையாடி விட்டு நந்திபுர விண்ணகரத்தில் செம்பியன் மாதேவியாரை, ஆழ்வார்க்கடியானுடன் நானும் தரிசித்து விட்டு ராஜராஜனின் பள்ளிப்படை கோயிலில் கண் கலங்க நின்று விட்டு, பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் ராஜேந்திர சோழனுடன் வணங்கி விட்டு திருவையாறில் வந்தியத்தேவனுடன் நானும் நந்தினியை கண்டு மலைத்துப் போய் நின்று விட்டு நாகப்பட்டினத்தில் ராஜாராஜா சோழன் தங்கியிருந்த புத்த விகாரை பார்த்து விட்டு, கோடியக்கரையில் குழகர் கோயிலில் திருவிடங்கரை கண்டு வணக்கம் சொல்லி விட்டு பூங்குழலியிடம் என்னையும் இலங்கைக்கு படகில் கொண்டு போக வேண்டிக் கொண்டால் விசா இல்லாமல் அங்கே போக முடியாதே என்று அவள் கை விரிக்க, அன்று வந்தியத்தேவனைக் கொண்டு சென்றாயே என்று கேட்டதற்கு அன்று நான் இந்த பரந்து பட்ட சோழ சாம்ராஜ்யத்தின் மகாராணி ஆச்சுதே என்று பொய்க் கோபம் காட்டிட, வேதாரண்யம் திருவாஞ்சியம் நாச்சியார்கோயில் பூம்புகார் தரங்கம்பாடி திருக்கடையூர் திருநள்ளாறு ஒப்பிலியப்பன் என நான்கு நாட்கள் முடிந்து தஞ்சையை நோக்கிக் கிளம்பினேன்.

    போகும் வழியில் திருப்புறம்பயம் என்னும் ஊரில் பொன்னியின் செல்வனில் வரும் கங்க மன்னன் பிரதீபவியின் பள்ளிப்படைக் கோயிலையும் சாட்சிநாதர் கோயிலையும் பார்த்து விட்டு தஞ்சை செல்லலாம் என முடிவெடுத்து அந்த கிராமத்து சாலையில் வண்டியை திருப்பினோம்.

    நாங்கள் போன போது மாலை மணி ஐந்தரை. சாதாரண கிராமத்து மண்சாலை. சாலையின் இருபுறமும் பச்சைபசேல் என்று விளைந்து நிற்கும் நெற்பயிர்கள். பாலைப் பிடித்திருந்த நெற்கதிரின் வாசமும், கிராமத்து மண்சாலையில் தூறல் விழுந்ததினால் உண்டான மண் வாசமும், சாணி வாசம், ஆட்டாம்புழுக்கை வாசனை என்று மொத்தமும் கிராமத்தின் மண் வாசனை காற்றில் பரவியிருந்தது. மூக்கை விரித்து காற்றை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டேன். அப்பா...! மாசு மருவில்லாத காற்று. மாலையும் இரவும் சந்திக்கப் போகும் அந்திப் பொழுது. இளம் வெளிச்சம். பகலெல்லாம் இரையெடுக்க சென்றிருந்த பறவைகள் திரும்ப தங்கள் இடத்திற்கு வந்து அடையும் கண் கொள்ளாக் காட்சி. பட்சிகளின் ஒலி அந்த அமைதியான பிரதேசத்தில் மிகுந்த சப்தமாகவே ஒலித்தது.

    தஞ்சையில் தளிக்குளத்தார் கோயில்,

    Enjoying the preview?
    Page 1 of 1