Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatrodu Kaatraga
Kaatrodu Kaatraga
Kaatrodu Kaatraga
Ebook264 pages1 hour

Kaatrodu Kaatraga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சங்கரும் பிரியாவும். இது ஒரு காதல் திருமணம் என்னும் வதந்தியில் மனம் மறுகும் பிரியா. காற்றோடு காற்றாக நின்று ஆமாம் என்று போய்க் கொண்டே இரு. காற்றுக்கு எதிர்த்து நின்றால் இன்னும் குப்பைகளை வாரி நம் மேல் வீசும் இந்த உலகம் என்னும் சங்கரின் அட்வைசில் தெளியும் பிரியா. அதை சரியாக உணர்ந்த போது அவளுக்கு ஏற்பட்ட நிம்மதியும் வெற்றியும் தான் கதை.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580147208661
Kaatrodu Kaatraga

Read more from G. Shyamala Gopu

Related to Kaatrodu Kaatraga

Related ebooks

Reviews for Kaatrodu Kaatraga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatrodu Kaatraga - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காற்றோடு காற்றாக

    Kaatrodu Kaatraga

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    இன்று நல்ல முகூர்த்த நாள். அந்த கல்யாண மண்டபத்தில் அப்போது நடக்கவிருக்கும் தங்கள் மகளின் திருமணம் நல்லபடியாக நடந்தேற வேண்டுமே என்று பதைபதைப்பில் இருந்தனர் தேவராஜன் மாதவி தம்பதியினர்.

    காலையிலிருந்து, அவ்வப்போது, புது காதலியின் வெட்கத்தைப் போல வானம் தூறலாய் சிணுங்கிக் கொண்டிருந்தது. நடுநடுவே பம்மாத்துக் காட்டும் சம்மந்தியம்மாக்களை போல சட் சட்டென்று பெரும் மழையாக அடித்து கதிகலக்கிக் கொண்டிருந்தது.

    இந்த மழையினால் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களில் உள்ளூர்வாசிகள் கொஞ்சமும் வெளியூர் உறவினர்கள் கொஞ்சமுமாக ஒரு சுமாரான கூட்டமே கூடியிருந்தது.

    அய்யா நீங்க சொன்ன கணக்குக்கு ஏத்தாப்போல கூட்டம் இல்லைங்க. சாப்பாடு வீணாகி போயிராம. அரிசியை குறச்சிக்கிடவா? திருமண கூடத்தில் இருந்த கூட்டத்தில் ஒரு கண் வைத்தவராக கேட்டார் சமையல் காண்ட்ராக்டர்.

    ம். மழை விடாமல் பெஞ்சா என்ன பண்றது? தேவநாதன் சொல்ல.

    ஆமாங்க. நடுநடுவே கொஞ்சம் விடற மாதிரி இருந்தா கூட பரவாயில்லை. நீங்க சொல்ற மாதிரி விடாம பெஞ்சா உள்ளூர்காரங்களாலே கூட வர முடியாது என்று அவருக்கு அனுசரணையாக பதில் சொன்னார் அவர்.

    நீங்க அரிசியை குறச்சிருங்க சார் என்றாள் மாதவி சமையல்காரரிடம்.

    மழை மட்டும் தான் காரணமாக இருக்க முடியும் என்று வெளியே தெரிந்தாலும் தேவநாதனின் பெரியப்பா மகள் சுந்தரவல்லி அக்கா மட்டும் நொடிக்கொரு முறை கழுத்தை நொடித்து ம்..யாருக்கோ போட்ட முடிச்சு. அது தான் இல்லைன்னு ஆச்சுது. என் மவனுக்காவது அந்த முடிச்சைப் போட்டு வெச்சிருக்க கூடாதா இந்த கடவுள்? கடவுளுக்கும் கண் அவிஞ்சிப் போச்சு தான் போல. எப்படி நடக்க வேண்டிய கல்யாணம் எப்படி நடக்குது பாரு.? யாரு இதை எல்லாம் கேட்பது? என்று அங்கலாய்த்துக் கொண்டாள். தன் மனதிற்கும் காதிற்கும் மட்டும் கேட்பதாக பாவித்துக் கொண்டு அருகில் இருக்கும் உறவினர் அனைவரையும் கவனத்தையும் தன் பால் ஈர்த்துக் கொண்டாள்.

    நிச்சயிக்கப்பட்ட நாளில் நல்லபடியாக நடந்தேற வேண்டிய தங்கள் மகளின் திருமணம் ஏற்கனவே தடைப்பட்டது போதாதா? அதுவும் இதே போன்றதொரு மழையினால். மீண்டும் இந்த திருமண நாளில் மறுபடியும் மழையா என்று அலுப்பாக இருந்தது. அதற்கும் மேல் நல்லபடியாக நடந்தேறிட அவசியமான இத்திருமணத்திற்கு மனது படபடக்க காத்திருந்தார்கள் பெற்றோர் இருவரும்.

    கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை என்ற பழமொழியை பொய்யாக்கி விட்டிருந்த இந்த வருடம் ஐப்பசி அடைமழை கார்த்திகையிலும் நீடித்திருந்தது. மின்கம்பங்கள் தொலைப்பேசி கோபுரங்கள் என்றில்லாமல் நூறு வருட பழமையான மரங்கள் முதல் நேற்றைய குல்மொகர் மரங்கள் வரை வேரோடி பிடிங்கிக் கொண்டு தரையில் தலை சாய்த்தது வெறும் பத்து நாட்களுக்கு முன்பு தான் என்றால் நம்ப முடியாது. அவ்வளவு சேதாராம். ஆறுகளில் வெள்ளப் பேருக்கு. சாலைகள் துண்டிப்பு என்று மழைக்கே உண்டான சகல குணாதிசயங்களுடன் கூடிய ஒரு பெருமழை.

    அவ்வளவு ஏன் இன்றைய இந்த எதிர்பாராத திருமணமும் அந்த மழையின் விளைவு என்றால் யாரும் நம்பத் தான் மாட்டார்கள். இந்த மழை செய்த கோலம் எங்கோ திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையின் கிராமத்தைப் பூர்விகமாக கொண்ட தேவநாதன் குடும்பத்திற்கும் தஞ்சை ஜில்லா பட்டுக்கோட்டையின் அருகில் கிராமத்தில் இன்றும் வசித்து வரும் மகாதேவன் குடும்பத்தினருக்கும் முடிச்சைப் போட்டிருக்குமா?

    கெட்டி மேளம், கெட்டி மேளம் ஆளாளுக்கு நாதஸ்வர வித்வான்களைப் பார்த்து கையை உயர்த்தி ஜாடைக் காட்ட அதுவரை மெய் மறந்து வாசித்துக் கொண்டிருந்த வித்வான் மிகுந்த உற்சாகத்துடன் கெட்டி மேள முழக்கத்தை முழங்கி முடித்தார்.

    புது திருமண தம்பதியர் சங்கரும் மைத்ரேயி பாகம்பிரியாவும் பெற்றோர்கள் பெரியோர்கள் காலில் விழுந்து வணங்கி எழுந்தார்கள். திருமணம் சார்ந்த மற்றைய சடங்குகளும் நல்லபடியாக நடந்தேறியது பிரியாவின் தாய் மாதவிக்கு சற்றே ஆறுதலையும் மனநிறைவையும் கொடுத்தது.

    அப்பாடா, மழை சோதித்ததைப் போல நம்மை இறைவன் சோதிக்கவில்லை. கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது. இறைவா நன்றி தேவநாதனின் கரம் பற்றிக் கண்கள் கசிய மனதுருக சொன்னார் அவருடைய அண்ணன் கஜநாதன்.

    அதே உணர்வுடன் சங்கரின் தந்தை மகாதேவனின் கரம் பற்றி சற்றே உணர்ச்சிவசப்பட்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும். ரொம்ப நன்றி சம்பந்தி. சரியான நேரத்தில் உதவி செய்து எங்கள் மானத்தைக் காப்பாற்றினீர்கள். எங்கள் வாழ்நாள் உள்ளளவும் மறக்க மாட்டோம்

    இனி அதைப் போல பேசக் கூடாது. உங்களுக்கு ஒன்று என்றால் அது எங்களுக்கும் தான். அதை நினைவில் வையுங்கள்

    அய்யா, உங்களைப் போலவே உங்கள் மகனும் பெருந்தன்மையானவனாக இருப்பது ஆச்சரியம் இல்லை.

    இதில் என்ன பெருந்தன்மை? நம்மால் எந்த பெண்ணுக்கும் ஒரு அவச்சொல் வந்து விடக்கூடாது. அந்த அபவாதம் நமக்கு எதுக்கு? சொல்லுங்கள். போகட்டும் போனதையே பேசிக் கொண்டிருக்காதீர்கள் இருவரும்.

    அதுவும் சரி தான். ரொம்ப நன்றி சம்பந்தி

    பார்த்தீர்களா மீண்டும்....... சிரித்தவாறே கையை காட்டினார்.

    இனி இல்லை தேவநாதனும் புன்னகைத்தார்.

    சம்பந்தி, இன்றே சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறது என்றார் மகாதேவன்.

    ஆமாம். நாங்கள் சரியா செய்து விடுகிறோம் சம்பந்தி என்றார் கஜநாதன்.

    நானும் இங்கே இருந்து விடத் தான் நினைத்தேன். ஆனால் உங்களுக்கேத் தெரியும் இந்த புயல் எங்கள் தோட்டம் மொத்தத்தையும் சாய்த்து விட்டது. நாளை அரசாங்க ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் வரும் நேரம் நாம் இல்லையென்றால் தீர்ந்தது. அவ்வளவு தான்

    பரவாயில்லை சம்பந்தி. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி கொடுத்தார் தேவநாதன்.

    நாளை நீங்கள் அங்கே வரும் போது வரவேற்பு கொடுப்பதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக உங்கள் சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள். மாப்பிள்ளை வீடு பார்த்தது போலவும் ஆயிற்று. வரவேற்ப்புக்கு வந்தது போலவும் ஆயிற்று

    ஆமாம். எல்லோரையும் கூட்டிக்கிட்டு வற்றோம். கல்யாணத்துக்கு முன்பு மாப்பிள்ளை வீடு பார்க்கணும். எல்லாம் முடிச்சிட்டு இப்போது கூப்பிடறியே என்று எங்கள் தங்கை தான் புலம்பிக் கொண்டிருந்தாள்.

    சம்பிரதாயமா செய்வதற்கு நமக்கு மட்டும் ஆசையில்லையா என்ன! என்ற மகாதேவனை ஒத்தார் போல் சிறு மென்னகையுடன்

    அது தானே. எங்கள் வீட்டில் முதல் கல்யாணம். எங்களுக்கும் ஆசைகளும் கனவுகளும் எத்தனை இருக்கும்? என்றார் தேவநாதன்.

    ஏதோ இந்த மட்டும் எந்த குறையும் இல்லாமல் நிறைவாக நடந்து முடிந்ததே. அதுவே பெரிசு என்ற மகாதேவனுக்கு

    சரியாக சொன்னீர்கள். சிறப்பாக நடப்பதை விட நிறைவாக நடப்பது தான் முக்கியம் என்றார் கஜநாதன்.

    சொந்தக்காரர்கள் என்றால் ஏதாவது சொல்லனும்னு சொல்லுவாங்க. அதை எல்லாம் பொருட்படுத்தாதீங்க

    காதை மூடிக் கொண்டிருந்தாலும் கையை விலக்கி காதில் சொல்லத் தான் செய்கிறார்கள்

    கஜநாதனின் பேச்சிற்கு புன்னகைத்த மகாதேவன் கொறஞ்ச கால அவகாசத்தில் செய்வது என்றாலும் அதை சிறப்பாக செய்திட வேண்டும் அல்லவா! எற்பாடுகளை போய் பார்த்தாக வேண்டும் என்றார்.

    திருமணம் முடிந்து மதிய உணவிற்குப் பிறகு ஒரு பெரிய பேருந்தில் கிளம்பினார்கள் மணமகனின் உறவினர்கள். சங்கரின் பெற்றோர் ஒரு காரிலும் சங்கரின் தமக்கை லாவண்யாவின் மாமனார் மாமியார் மற்றொரு காரிலும் பின்னால் கிளம்பிப் போனார்கள்.

    லாவண்யா காரில் ஏறப்போனவள் தங்களை வழியனுப்ப நின்று கொண்டிருந்த சங்கரிடம் தம்பி, எதிர்பாராதவிதமாக இந்த திருமணம் முடிந்திருந்தாலும் இருவரும் ஏற்கனவே பழக்கமானவர்கள். இருந்தாலும்.....!என்ன சொல்றதுன்னு தெரியலை என்றாள் பரிதாபமாக.

    அக்கா புரியுதுக்கா என்றான் சங்கர் பரிவாக.

    சமாளிச்சிக்குவேன் என்று சொல்லியிருக்கே

    கவலைப்படாதே. சமாளிச்சிக்குவேன்

    உன்னை விட பெரிய படிப்பு, பெரிய பதவி. நல்ல அழகி, கொஞ்சம் திமிரும் தெரிகிறது. ஆனால் அது இந்த வயசுக்குரிய திமிரு தானே தவிர பெரிதாக கவலைப்பட ஒன்றும் இல்லை.

    உண்மை தான். பார்த்துக்கறேன்

    லாவு, நீ வேண்ணா உன் தம்பியோட ரெண்டு நாள் இருந்துட்டு வாயேன். நாங்க போய்க்கிறோம். மாதவன் காரின் முன் சீட்டில் அமர்ந்து இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் குரல் கொடுத்தான்.

    எங்க, ரெண்டு வார்த்தை பேச விட மாட்டீங்களே?

    ஏன் பேச விடாமல்? கார் கதவில் இருந்து கை எடு. கதவை மூடு. நாங்கள் போயிட்டு வரோம் சங்கர். உங்க அக்காவோட நாளை வந்து சேரு

    அவன் பொண்டாட்டியோட வந்து சேரட்டும். நீங்க என்னை கழட்டி விட்டுட்டு போகலாம்னு நினைக்காதீங்க.

    அது இந்த ஜன்மத்தில இல்லைடி சங்கரைப் பார்த்துப் புன்னகைத்தான் மாதவன்.

    அத்தான் நீங்க கிளம்புங்க கதவை மூட முயன்றான்.

    இருடா ஒரே ஒரு வார்த்தை சொல்லிடறேன்

    எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிடனுமா? உன் வீட்டுக்குத் தானே வரப்போறான்

    அங்கே எங்கே பேச முடியும்?

    விடுக்கா. சொல்லு. என்ன சொல்லணும்?

    தம்பி, நாங்களே பார்த்திருந்தால் கூட இத்தனை அருமையான மேன்மையான பொண்ணைப் பார்த்திருக்க மாட்டோம்.

    இவன் மட்டும் பார்த்தானா என்னா? ஏண்டா சங்கர் ஒருவேளை நீ தான் பார்த்துக்கிட்டியோ?

    ஐயோ அப்படி எல்லாம் இல்லை அத்தான் விளையாட்டுக்கு கேட்டதைப் போல கேட்டாலும் உண்மையில் உள்ளர்த்தத்துடன் தான் கேட்கிறாரோ என்று எண்ணி பதறினான்.

    அது தானே பார்த்தேன். நமக்கெல்லாம் ஏது அந்த சாமர்த்தியம்?

    ஓ, இதுக்கு சாமர்த்தியம் வேணுமா என்ன?

    "இல்லையா பின்னே! பாரு சங்கருக்கு யோகத்தை. பிரியா தானா வந்து மாட்டிக்கிட்டா. நான்

    வந்து உங்ககிட்ட மாட்டினது போல"

    நீங்க என்கிட்டே மாட்டிகிட்டீங்களா?

    விடு. இனி அதைப் பத்தி பேசி என்ன புண்ணியம்.? பொய்யாக நடித்து எல்லாம் மகாதேவருக்கு யோகம் தான் சங்கரைப் பார்த்து கண்ணடித்தான் மாதவன்.

    எங்க அப்பாவை வீணா எதுக்கு வம்புக்கு இழுப்பீங்க? அவனை புஜத்திலேயே ஒரு குத்து குத்தினாள்.

    உண்மையை சொன்னா அடி தான் வாங்கணும். சங்கரு, நல்லா பாத்து வெச்சிக்க. நாளை பின்னே உனக்கு உதவும்

    இருங்க உங்க பஞ்சாயத்தை அப்புறம் வெச்சிக்குவோம் என்று அவனை முறைத்தவள் மீண்டும் தம்பியிடம் தம்பி என்னவோ புத்தியா பொழச்சிக்கோடா. அவ்வளவு தான் சொல்லுவேன் என்றாள் பரிவுடன்.

    கவலைப்படாதேக்கா. புத்தியா பொழச்சுக்குவேன். நீ கிளம்பு. நாளை சந்திப்போம் என்றான் சிரித்தவாறே.

    அக்கா தம்பிக்குள் அது ஒரு பரியாச வார்த்தை. ஒரு விஷயத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு அதற்கு மேல் அதில் தங்களால் ஏதும் செய்திட இயலாத போது அப்படித் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொள்வதுண்டு. புத்தியா பொழச்சுக்கோ இப்போதும் அதைப் போலவே சொன்னவளும் கேட்டவனும் சிரித்துக் கொண்டார்கள்.

    ஆல் தி பெஸ்ட் டா

    உன் தம்பி யுத்தத்துக்கா போறான்? அவனை போய் பயமுறுத்திரியே? என்று மீண்டும் லாவண்யாவை நக்கலடித்து விட்டு கார் கிளம்புகையில் ஆல் தி பெஸ்ட் டா மச்சான் என்றான் ஆத்மார்த்தமாக.

    கல்யாண மண்டபத்தை காலி செய்து விட்டு உறவினர்கள் புடை சூழ புதுமணத் தம்பதிகள் மணமகள் பிரியாவின் வீட்டிற்கு வந்தார்கள். முறைப்படி ஆரத்தி கரைத்து வீட்டின் உள்ளே வரவேற்கபட்ட சங்கருக்கு தன் வீட்டார் யாரும் தன்னோடு வராமல் தான் தனியாளாக வந்து நிற்பது கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருந்தது.

    பிரியா வீட்டினருக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட தேதி, மண்டபம் உறவினர்கள் சமையல் என்று சகலமும் தயாராக இருந்தது. மாப்பிள்ளை மட்டும் கடைசி நிமிட மாற்றம். அதனால் அவர்கள் ஏற்பாடு செய்ததைப் போல திருமணம் மிகவும் விமரிசையாகத் தான் நடந்தது.

    ஆனால் சங்கர் வீட்டில் இது எதிர்பாராத திருமணம். எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஏற்பாடுகளும் அவசர கதியில் நடந்தது. லாவண்யாவும் மாதவனும் குழந்தைகளுடன் கடைசி நிமிஷத்தில் தான் வர முடிந்தது.

    எதிர்பாராத இந்த திருமணத்தை சரியாக செய்திடா விட்டாலும் நிறைவாக முடிந்த போதும்

    தங்கள் ஊரில் தன் ஒரே மகனின் வரவேற்பையாவது இதை விட பிரமாதமாக நடத்திட மகாதேவனுடன் சங்கரின் உள்ளூர் நண்பர்களும் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். அதனால் திருமணம் முடிந்ததும் எல்லோரும் சேர்ந்து கிளம்பிப் போய் விட்டார்கள். சங்கருக்கு ஏற்கனவே பழக்கமான மனிதர்கள் தானே! அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை. எந்த சூழலையும் இலகுவாக சமாளித்துக் கொள்ளக் கூடியவன் தான். ஆனால் இன்று.......? என்னவோ தன் தைரியம் தன்னை விட்டுப் போனதைப் போல இருக்கவே கொஞ்சம் படபடப்பாகவே உணர்ந்தான்.

    இந்த வீடு அவனுக்கு முற்றிலும் புதியது அல்ல. அதுவம் இந்த வரவேற்பறையும் இந்த சோபாக்களும் அவனும் பிரியாவும் நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பணியாற்றிய இடம் தான். என்ன, அப்போது தன்னுடன் ரமேஷோ அல்லது பைஜூவோ இருப்பது வழக்கம். இன்று தான் மட்டும் தனியாக. அதுவும் பிரியாவின் கணவனாக. இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக.

    காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது?

    உட்காருங்கள் மாப்பிள்ளை பெரியவர்கள் இருவரும் அமரும்படி வற்புறுத்தினார்கள்.

    அன்றைய நினைவில் பம்முவதா? அன்றி இன்றைய நிலையில் அமருவதா? என்று யோசித்தவாறு நின்றவன் எதேச்சையாக திரும்பி பார்த்தான்.

    சமையலறை வாயிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த பிரியாவின் பார்வையும் இவன் மேல் தான் இருந்தது. இந்த வீட்டு மாப்பிள்ளையாக உட்காரப் போகிறாயா? அல்லது என் கணவனாக நிற்கப் போகிறாயா? என்று இவனுடைய எண்ணம் அவளுடைய கண்களில் கேள்வியாக இருந்தது.

    அவனுடைய மனதை சொல்வது போல யாருடைய கைப்பேசியிலோ ரிங் டோன் அழைத்தது. நிக்கட்டுமா, போகட்டுமா....நீல கருங்குயிலே...

    எப்படி இவனுக்கு இயற்கையும் பக்கபலமாக ஒத்தாசை செய்கிறது என்று நினைக்கையில் அவள் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரைக்கேறி கண்களில் கொட்டியது பிரியாவுக்கு.

    சொல்லட்டுமா....தள்ளட்டுமா .சோலை இளங்குயிலே சங்கருக்கு சிரிப்பு வந்தது.

    கல்யாண வீட்டிற்கே உரிய சந்தடிகள் அடங்கி விட்டிருந்தது. உறவினர்களை பிரியாவின் தங்கை வைதேகி மதுப்பிரியாவின் தலைமையில் அருகாமை தங்கும் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடாகி இருந்ததால் வீடே நிசப்தமாக் இருந்தது.

    இரவிற்கான சம்பிரதாயங்களில் பிரியாவின் அருகில் அமர்ந்திருந்தவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. காலையில் மணவறையில் உற்றாரும் உறவினரும் கூடியிருக்கையில் அவள் கழுத்தில் தாலி முடியும் போது இருந்த தைரியம் இப்போது அவனை விட்டு அகன்றிருந்தது. தான் என்னவோ தப்பு செய்தவனைப் போல மனம் குறுகுறுத்தது.

    அது தானே. நான் என்ன தப்பு செய்தேன்? நான் எதற்காக பயப்பட வேண்டும்? இந்த திருமணம் எப்படி பிரியாவிற்கு எதிர்பாராததோ அதைப் போலத் தானே தானும் எதிர்பாராதது. அதற்கு நான் ஏன் குறுகுறுவென்று உணர வேண்டும்? நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான். முழு கவனத்துடன்

    Enjoying the preview?
    Page 1 of 1