Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malaiyoram Veesum Kaattru
Malaiyoram Veesum Kaattru
Malaiyoram Veesum Kaattru
Ebook144 pages54 minutes

Malaiyoram Veesum Kaattru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீழக் கோம்பை மலைக் கிராமத்தில் வசிக்கும் கோம்பைக் கூட்டத்தாரின் சமூக பொருளாதார கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு தில்லியிலிருந்து வரும் சமூக நல இலாக்காவின் அதிகாரியான சிவபாலனுக்கும் கோம்பை கூட்டத்தின் மயிலம்மாளுக்கும் இடையே ஏற்படும் காதல், மயிலுக்கு மட்டுமன்றி அந்த கூட்டத்திற்கே தீங்கிழைக்கும் வேம்பன் அவன் கையாள் மூக்கன். இவர்களை சுற்றிய கதை. அந்த கூட்டத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் மயிலும் சிவபாலனும் ஜெயித்தார்களா அல்லது இவர்களுக்கு தீங்கிழைக்க நினைக்கும் இருவரும் ஜெயித்தார்களா என்பது கதை. மலைவாழ் மக்களின் சமூக அவலங்களின் ஊடாக மெல்லியதான ஒரு காதல் கதை இது!

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580147211163
Malaiyoram Veesum Kaattru

Read more from G. Shyamala Gopu

Related to Malaiyoram Veesum Kaattru

Related ebooks

Reviews for Malaiyoram Veesum Kaattru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malaiyoram Veesum Kaattru - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மலையோரம் வீசும் காற்று

    Malaiyoram Veesum Kaattru

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    சத்தியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் புஷ் என்று பெருமூச்சுடன் வந்து நின்றது ஈரோட்டிலிருந்து வந்த அரசு பேருந்து. வண்டி நிற்க கூட பொறுக்காமல் சில ஆண்கள் ரன்னிங்கில் இறங்க, அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பெண்களும் அடித்துப் பிடித்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை இறங்க விடாமல் கீழே நின்று கொண்டிருந்தவர்கள் முண்டியடித்து வண்டியினுள் ஏற முயன்றார்கள். ஒரே களேபரம் தான்.

    இத்தனை களேபரத்திற்கிடையிலும் நிதானமாகவே இறங்கினான் சிவபாலன். தன்னுடைய ஒரு சூட்கேஸ், அட்டைப் பெட்டி படுக்கை இவைகளை இறக்கி கீழே நடைமேடையில் வைத்தான். தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையை இழுத்து விட்டுக் கொண்டு மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். பேருந்து நிலையத்தில் தான் செல்ல வேண்டிய தாளவாடி பேருந்து மட்டுமன்றி வேறு பேருந்துகளும் ஏதுமில்லை.

    இவனைக் கண்டு விட்டு அருகில் வந்தான் ஒருவன். என்ன சார், எங்க போகணும்? என்று கேட்டான்.

    தாளவாடிக்கு போகணும்ங்க என்றான் சிவபாலன்.

    சத்தியமங்கலம் அடிவாரத்திலிருந்து நான்கைந்து கிலோமீட்டருக்குப் பிறகு தாளவாடி மலையேற வேண்டும். சத்தியமங்கலம் தாலுக்கா தலைநகர். எனவே அரசு அலுவலங்கள் நீதிமன்ற கிளைகள் என சகல வசதிகளும் நிறைந்த ஓரளவு பெரிய ஊர்.

    தாளவாடிக்கா? இனிமே பஸ் ஏதுமில்லையே. இனி நாளைக்காலை தான் என்று விவரம் சொன்னான் அவன்.

    நாளைக் காலையிலா? என்று திகைத்து நின்றான் அவன். வேற வழியில்லையா? என்று கேட்டான். தனியார் வண்டிங்க ஏதும் கிடைக்காதா?

    ஜீப்பு இருக்கும். மூவாயிரம் கேட்பாங்க

    ஓஹோ

    திகைத்து நிற்கும் சிவபாலனைக் கண்டு அவனாகவே மேலும் விவரம் சொன்னான். சில சமயம் மேலே போகும் ஜீப்புங்க இருக்கும். வெளியே போய் பாருங்க என்று.

    இத்தனை லக்கேஜை தூக்கிக் கொண்டு வெளியே போகணுமே என்று யோசித்துக் கொண்டிருக்கையில் நான் வேணா தூக்கியாரட்டா? என்று கேட்டான் அவன்.

    தன் வேலையை தானே செய்து கொள்ள வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டிருந்த சிவபாலன் வேண்டாம், வேண்டாம் என்று அவசர அவசரமாக மறுத்தான். கொஞ்ச நேரம் இதை பாத்துக்கங்க. நான் வெளியே போய் ஏதாவது ஜீப் இருக்கான்னு பாத்துட்டு வரேன்

    என்றான்.

    அதற்குள் டீக்கடை வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டு நின்ற ஒரு இளைஞனைக் கண்டு விட்டு ஏ பெருமாளு, வண்டி எடுப்பியா? என்று கேட்டான். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான்.

    சார் மேலே போகணுமாம். கூட்டிக்கிட்டுப் போ என்றவன் சிவபாலனிடம் திரும்பி சார் வாங்க. நானும் சாமானை எடுத்துக்கறேன். பெருமாளோட ஜீப்பில வைக்கிறேன். இப்போ அவன் வண்டி எடுப்பான் சார் என்றவாறே அட்டைப்பெட்டியை கையில் எடுத்துக் கொண்டான். கனமாக இருந்தது. தலையில் வைத்துக் கொண்டான். என்ன சார் வெச்சிருக்கீங்க. இம்மாம் கனம் கனக்குது

    புத்தகங்கள் தான்

    பெருமாள் ஜீப்பை எடுக்கவும் அங்கிங்கு நின்று கொண்டிருந்த சிலரும் வந்து ஏறிக் கொள்ளவே சிவபாலனும் நெருங்கி உட்கார்ந்து கொண்டான். சளபுளவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் அவரவர் இடம் வரவும் இறங்கிக் கொண்டு விடவே ஜீப்பில் பெருமாளையும் சிவபாலனையும் தவிர வேறு யாருமில்லை.

    இந்நேரத்துக்கு மேல அரசு பேருந்து ஏதுமில்லையே. இங்கே வேலை செய்றவங்க எப்படி வந்து போவாங்க? என்று பெருமாளிடம் கேட்டான் சிவபாலன்.

    மேலே வேலைக்கு செல்லும் அரசு அதிகாரிகள் எல்லாருக்கும் அவரவருக்கு அரசு வாகனம் உண்டாதலால் வசதியாக குடும்பத்துடன் கீழேயே தங்கிடுவாங்க

    இந்த ஊர்காரவங்க அவசர ஆத்திரத்திற்கு என்ன செய்வாங்க?

    அவுங்களுக்கு பஸ் வர நேரம் தெரியும் சார்

    என்னைப் போல மாட்டிக்கிட்டா?

    ஜீப்புல தான் போகணும்

    நல்லதா போச்சு. நீங்களும் இல்லைன்னா இவுங்க பாடு கஷ்டம் தான்

    ஆமாம் சார் என்றவன் "நீங்க தாளவாடி ஆஸ்பத்திரிக்கு போறீங்களா?’ என்று கேட்டான்.

    ஆஸ்பத்திரிக்கா? இல்லையே

    பொதுவா ஆஸ்பத்திரிக்குத் தான் அதிகாரிங்க வருவாங்க. அதான் கேட்டேன்

    தன்னைப் பற்றிய விவரம் அறிய முயல்கிறான் என்று புரிந்து நான் சமூக நலத்துறையில் வேலை செய்றேன். ஒரு தகவல் சேகரிக்க வந்திருக்கிறேன் என்றான் சிவபாலன்.

    சோசியல் செர்விஸ் என்பார்களே அதைப் போலவா? என்று தன் அறிவை வெளிக்காட்டினான் பெருமாள்.

    நான் சோசியல் செர்விஸ் செய்ய வரலை. இது வேற என்றான் தன்னைப் பற்றி

    மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்பதைப் போல.

    எல்லாரும் இறங்கிட்டாங்க என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் இவன் புறம் திரும்பி சார் எங்கே போகனும்? என்று கேட்டான் பெருமாள்.

    யாருமில்லையே. உனக்காக அவ்வளவு தூரம் வரணுமா என்ற அவன் பார்வையும் கேள்வியும் சிவபாலனுக்கு புரியவே தாளவாடி போகணும்னு சொன்னேனே என்றான் பதட்டமாகி.

    இல்லே சார், உங்க ஒருத்தருக்காக அம்மாம் தூரம் வரணும். வண்டியில டீசல் வேறு கொஞ்சமாத் தானிருக்கு

    பக்கத்தில பெட்ரோல் பங்க் இல்லையா?

    இருக்கு. முன்னூறு நானுறு ஆகும்

    அதை நான் தந்து விடுகிறேன் என்றான் சிவபாலன். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற பார்வையுடன்.

    அப்படின்னா சரி என்று தாளவாடியை நோக்கி வண்டியை செலுத்தினான் பெருமாள்.

    ஒரே நேரத்தில் பெருமாளின் வண்டியோட்டம் முன்னேயும் சிவபாலனின் மனவோட்டம் பின்னேயும் செல்லத் தொடங்கியது.

    சிவபாலன் வேலூரில் கிறிஸ்துவ மிசினரிகளால் நடத்தப்படும் கான்வென்டில் வளர்ந்தவன். அவனுக்கென்று சொல்லிக் கொள்ள அப்பா அம்மா கூடப் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர் என்று யாருமில்லை. கான்வென்டில் வளர்ந்த அவனுக்கு ஒருநாளும் இது குறையாக இருந்ததில்லை. அந்தளவிற்கு சிறப்பாகவே வளர்க்கப்பட்டான். நன்றாகப் படிக்கக் கூடிய அவனை கான்வென்ட்டை நிர்வகிக்கும் பாதர் சாமுவேலின் உடன் பிறந்த சகோதரி ரூபி ரூத் தன்னுடன் தில்லிக்கு அழைத்து சென்று விட்டாள். தில்லியில் ரூபியின் கணவர் தேவதாஸ் மத்திய அரசின் சமூக நலத்துறையில் ஒரு உயரிய பதவியில் இருப்பவர். ரூபி எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைமை செவிளியராக வேலை செய்கிறாள். பிள்ளைப் பேறில்லாத தம்பதியினருக்கு பிள்ளையைப் போல சகல சலுகைகளுடன் வசதிகளுடன் நன்றாகவே இருந்தான் சிவபாலன். அங்கேயே படித்து, பரீட்சை எழுதி மத்திய அரசின் சமூக நலத்துறையில் அதுவும் தேவதாஸின் கீழேயே வேலையும் கிடைத்து செட்டில் ஆகி விட்டான்.

    இப்போது அவனுடைய பாஸ் தேவதாஸ் எடுத்துக் கொண்டிருக்கும் புராஜெக்டின் ஒரு பகுதியாக மலை வாழ் மக்களில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவரின் வாழ்க்கை முறையும் சமூக பொருளாதார நிலைப்பாடும் அதில் அரசு மேற்கொள்ள வேண்டிய மேற்படி நடவடிக்கைகளையும் அதன் தேவைகளையும் கண்டறிவதற்கு அவன் இங்கே வந்திருக்கிறான்.

    இவனைப் போல இளம் அதிகாரிகள் வடக்கிழக்கு மாகாணங்களிளும் உத்ராகண்ட் மாநிலத்திலும் உள்ள மலை வாசதலங்களில் களப் பணிக்கு படை எடுத்திருக்கிரார்கள். இவன் தமிழன் என்பதால் இங்கே தாளவாடி மலைப்பகுதியில் தேவையேற்பட்டால் பந்திப்பூர் காடுகளில் வசிக்கும் மக்களை கண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு வந்திருக்கிறான் சிவபாலன்.

    2

    தாளவாடிக்கும் கர்நாடகத்தின் மைசூருக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியான எட்டுகட்டி கிராமம் இது. பந்திப்பூர் காடுகளின் மாதே கௌட ஹள்ளி தாண்டி உள்ளே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதி. சந்தனக்கடத்தல் வீரப்பனால் கூட இவர்கள் இருக்கும் பகுதிக்கு அத்தனை சுலபத்தில் சென்று வர முடிந்ததில்லை. ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1