Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eerppu
Eerppu
Eerppu
Ebook79 pages30 minutes

Eerppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உன்னதமான டாக்டர் தொழிலை பணத்திற்காக மட்டும் இல்லாமல் சேவை நோக்கில் செயல்படும் லலிதா. அரும்பாவூர் செல்லும் லலிதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? உயர்வான விவசாய தொழிலில் ஈடுபடும் பரந்தாமன் யார்? லலிதாவிற்கு யார் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது? படிப்போம் ஈர்ப்பு

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580147408317
Eerppu

Read more from M. Madheswaran

Related to Eerppu

Related ebooks

Reviews for Eerppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eerppu - M. Madheswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஈர்ப்பு

    Eerppu

    Author:

    மு. மாதேஸ்வரன்

    M. Madheswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-madheswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    503 எண், சென்னை, திருச்சி, திருவள்ளூர் விரைவு பேருந்து பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் நின்று சில பயணிகளை உதிர்த்துவிட்டு பறந்தது. உதிர்த்து விடப்பட்ட பயணிகளில் டாக்டர் லலிதா M.S, F.A.G.E., F.I.C.A.,(U.S.A)வும் ஒருத்தி.

    தனக்கு முற்றும் புதியதான ஊரில் நின்று கொண்டிருந்த அவருக்கு தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரெனத் தன் தோழியான டாக்டர் கலாவதி முன்புபோய் நின்றால் அவள் எப்படி ஆச்சரியப்பட்டு திகைத்து நிற்பாள் என்பதை நினைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட அந்த சிரிப்பு உடனே வியப்பாக மாறியது!

    காரணம்! தான் யாரைத் திகைக்க வைக்க வேண்டுமென எண்ணி வந்தாளோ, அந்த கலாவதி சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தாள். லலிதாவை கலாவும் கவனித்து ஆச்சரியத்துடன் அவள் அருகில் வந்து,

    வரவேண்டும் அறுவை சிகிச்சை நிபுணர் அவர்களே எப்படி என் நினைவு வந்து புறப்பட்டு வந்துவிட்டீர்கள். என கிண்டலாக கேட்டுவிட்டு,

    என்னடீ ஒரு கடிதம்கூட போடாமல் திடும்முன்னு வந்து நிக்கறே.

    அரும்பாவூர்லே திடீர்னு உனக்கு முன்னாலே நின்னு உன்னை அதிர்ச்சியடைய வைக்கனும்னு நெனச்சேன். ஆனா இப்படி வழியிலேயே சந்திப்பேன்னு நெனக்கலே ஆமா நீ எங்கடீ இந்தப் பக்கம்.

    திருச்சி போயிருந்தேன்டி, சொந்தக்கார பேஷன்ட் ஒருத்தருக்கு மேஜர் ஆபரேஷன். அவரை கூட்டிட்டுப்போய். சர்ஜன்கிட்டே காட்டி நர்ஸிங் ஹோமிலே அட்மிட் செய்துட்டு வர்றேன். நீ வர்ரது தெரிஞ்சிருந்தா உன்கிட்டே கன்ஸல்ட் செய்திருக்கலாம்.

    ஆமாடி நானே ரொம்பவும் ஸ்டெயினா இருந்திச்சின்னுதான் ரெஸ்டுக்காக அரும்பாவூர் வர முடிவுசெஞ்சேன்.

    அப்ப ஒரு மாசம் இருப்பியா.

    நோ நோ ஒரு வாரம்தான் லீவு கெடச்சிருக்கு. அதுவே பெரிசு.

    ஏண்டி உங்க நர்ஸிங் ஹோமிலே எப்பவுமே டாக்டர்ங்களோட ஒத்துழைப்பு தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும்.

    பெரிய நர்ஸிங் ஹோம்! எப்பவுமே டாக்டர்களோட ஒத்துழைப்பு தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும்.

    லலிதா வா கடைக்குப்போய் கொஞ்சம் சாமான்களும் பழங்களும் வாங்கிட்டு வந்திடலாம்.

    இருவரும்போய் தேவையான சாமாங்களை வாங்கிவரவும், அரும்பாவூர் வழியாக பூலம்பாடி செல்லும் பேருந்து நிலையத்தில் வந்துநிற்கவும் சரியாக இருந்தது. உடனே காத்திருந்த கூட்டம் வண்டியை மொய்த்துக் கொள்ள.

    ஏண்டீ கலா இந்தக் கூட்டத்திலே எப்படிடீ பஸ்ல ஏறி அரும்பாவூர் போறது. பேசாம டாக்ஸியிலே போயிடலாமா!

    அதெல்லாம் தேவையில்லே லலிதா நமக்கு உட்காரவே பஸ்ஸில் இடம் கிடைக்கும் பாரேன்.

    டாக்டர் கலாவதி, தோளில் சற்றே பெரிதான ஒரு பையுடன் இருக்கும் பெண்ணுடன் நிற்பதைப் பார்த்த பேருந்து ஓட்டுனர் தனக்குப் பின்புறம், இருவர் அமரும் சீட்டை ரிஸர்வ் செய்துவிட்டார்.

    ஒரு வழியாக கூட்டம் முண்டியடித்து ஏறி ஓய்ந்த பின் கலா, லலிதாவுடன் பேருந்தின் முன்புற வாயில்வழியாக ஏறி பயணிகளை ஒதுக்கிக் கொண்டு முன்புற சீட்டில் உட்கார்ந்து ஓட்டுனரிடம்,

    அண்ணா இது என் பிரண்டு டாக்டர் லலிதா M.S. மெட்ராஸ்ல பெரிய டாக்டர், அமெரிக்காபோய் மேல் படிப்பு படிச்சிட்டு வத்திருக்கா.

    வணக்கங்க என்று டிரைவர் சொல்ல லலிதாவும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு கலாவைப் பார்க்க.

    லலிதா அவர் எங்க சொந்தம். எனக்கு அண்ணன்முறை. என்னைப் பாத்ததும் சீட் பிடிச்சி வச்சிட்டார் பார்த்தியா பஸ்ல அண்ணன் இருந்ததாலதான் நமக்கு உட்காரவே இடம் கெடைக்கும்னு சொன்னேன். அதுமட்டுமில்லே இந்த பஸ்லே வர்றவங்களுக்கு நான் டாக்டர்ங்கற முறையிலே தெரிஞ்சவளா இருக்கறதாலே அவங்க எழுந்து நின்னுகிட்டு எனக்கு இடம் கொடுத்துடுவாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1