Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Harshavardhanar – Part 3
Harshavardhanar – Part 3
Harshavardhanar – Part 3
Ebook519 pages3 hours

Harshavardhanar – Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வடபாரதத்தில் மெளரியர்கள், மற்றும் இந்தியாவின் பொற்காலம் என்றழைக்கப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்கு இணையாக; வர்த்தன மன்னர்களில் சிறப்பாகத் திகழ்ந்தவர் “பரமபத்தாரக மகாராஜாதி ராஜர் என்றழைக்கப்பட்ட “ஹர்ஷவர்த்தனர்” ஆவார். இவர் தான் வர்த்தனராஜ்யத்தை சாம்ராஜ்யமாக்கியவர். கி.பி.606 முதல் கி.பி.647 வரை “ஹர்ஷவர்த்தனர்” சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்ததாக சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது. இந்த வர்த்தன சாம்ராஜ்யத்தை “ஹர்ஷவர்த்தனர்” தன் பதினாறாவது வயதில் தவிர்க்க முடியாத அசாதாரண நிலையில் வர்த்தனராஜ்ய மன்னராக முடிசூட்டிக்கொண்டது முதல் ஆறு ஆண்டுகளிலே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் சிறப்பு - பெருமை எத்தன்மையுடையது என்பதை விவரிக்கும் முகமாக உருவானதுதான் இந்த சரித்திர நாவல்.

சரித்திர நாவல்களுக்கே உரிய இலக்கணங்கள் என்று உருவாக்கப்பட்டவைகளிலிருந்து இந்த சரித்திர நாவல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும். தேவையற்ற அதிகப்படியான வர்ணனைகள், சிருங்கார ரசங்கள் வார்த்தை ஜாலங்களுடன் கூடிய சலிப்படைய வைக்கும் உரையாடல்கள் என்று அதிகம் இருக்காது. கதையுடன் ஒட்டிய அளவிலே இருக்கும் என்பதுடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கதைப்போக்கு செல்லும். படிக்க சலிப்பாகி பக்கங்களைத் தள்ளிவிடும் நிலை ஏற்படாது. ஒருபக்கத்தைக்கூட தள்ளிவிட முடியாத அளவில் சம்பவங்களின் சேர்க்கை இருக்கும். வர்ணனைகள், சிருங்கார ரசம், வார்த்தை ஜாலங்களுடன் எனக்கு எழுதவராது என்பதல்ல.

“ஹர்ஷவர்த்தனர்” வாழ்க்கையே 16 வயது முதல் போராட்டம்தான். அடுத்தடுத்து வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்கள்; பெரும் போர்கள் என்று 16 வயதில் பட்டத்திற்கு வந்தது முதல் நிற்கவே நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்த நிலையால் சரச சல்லாபங்களை அதிகம் சேர்க்க என்மனம் ஒப்பவில்லை. இனிகதைக்குள் நுழையலாம்! வாருங்கள்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580147407683
Harshavardhanar – Part 3

Read more from M. Madheswaran

Related to Harshavardhanar – Part 3

Related ebooks

Related categories

Reviews for Harshavardhanar – Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Harshavardhanar – Part 3 - M. Madheswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹர்ஷவர்த்தனர் - பாகம் 3

    Harshavardhanar – Part 3

    Author:

    மு. மாதேஸ்வரன்

    M. Madheswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-madheswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    அத்தியாயம் - 36

    அத்தியாயம் - 37

    அத்தியாயம் - 38

    அத்தியாயம் - 39

    அத்தியாயம் - 40

    அத்தியாயம் - 41

    அத்தியாயம் - 42

    அத்தியாயம் - 43

    அத்தியாயம் - 44

    முடிவுரை

    ஹர்ஷர் தொடர்பான புத்தகங்கள்

    ஹர்ஷவர்த்தனர் கால அட்டவணை

    வர்த்தன வம்சவழி அட்டவணை

    பிற்கால குப்தர்களின் வம்சவழி அட்டவணை

    மௌகாரிகர் வம்சவழி அட்டவணை

    வலபியின் மைத்ரேகர்களின் வம்சவழி அட்டவணை

    சாளுக்கிய வம்சவழி அட்டவணை

    பல்லவ வம்சவழி அட்டவணை

    ஹர்ஷவர்த்தனர் தொடர்பான முக்கிய நிகழ்ச்சிகளின் கால அட்டவணை

    அத்தியாயம் - 1

    மனிதன் நினைப்பது நிறைவேறுவதில்லை! ஆனால் நினைக்காமலும் அதைப் பற்றிய எண்ணம்கூட இல்லாத காரியங்கள் எதிர்பாராமல் நிறைவேறி மாபெரும் வெற்றியையும் கொடுத்துவிடுகிறது. இது விதியின் செயல் என்றும் இறைவன் செயல் என்றும் சான்றோர்கள் கூறியுள்ளார்கள். என்னதான் நாத்திகவாதம் செய்தாலும் இது போன்ற எதிர்பாரா சம்பவங்கள் நடைபெறும் போது ஆச்சர்யப்படவே வைக்கின்றது. அப்படித்தான் இப்போது ஹர்ஷவர்த்தனருக்கும் ஏற்பட்டிருக்கும் நிலை. தான் தானேஸ்வர இராஜ்ய மாமன்னராகியதுடன் ஆறு ஆண்டுகளில் தானேஸ்வர இராஜ்யத்தை குப்தர்களின் இராஜ்யத்திற்கு இணையான அளவுக்கு உருவாக்குவோம் என்று நினைத்தறியாத வர்த்தன இளஞ்சிங்கம் இன்று மகதத்தின் தலைநகராகிய மகத்தான பெருமை மிக்க பாடலிபுத்திரத்தின் கொலுமண்டபத்திலே மணம் முடித்து பரமபத்தராக மகாராஜாதிராஜா ஹர்ஷவர்த்தனராகிவிட்டார். இது விதியின் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்!

    வர்த்தன சாம்ராஜ்ய பரமபத்தராக மகாராஜாதிராஜாவாக முடிசூட்டிக் கொண்ட ஹர்ஷவர்த்தனருக்கு வர்த்தன சாம்ராஜ்ய மகாசாமாந்தாக்களும் சாமாந்தா மற்றும் சிற்றரசர்களும் ஏராளமான பரிசுப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தார்கள். பாடலிபுத்திரக் கொலுமண்டபம் வெகுகாலத்திற்குப் பிறகு மிகவும் கலகலப்பாக இருந்தது. மகத மன்னராகிய மகாசாமாந்தா பூர்ணவர்மர் முகத்தில் பெருமிதம் பொங்க அமர்ந்திருந்தார். இருக்காதா என்ன! வடநாவலந்தீவவின் வர்த்தன சாம்ராஜ்யாதிபதியை மருமகனாக பெற்ற பெருமை முகத்தில் பளிச்சென்று தெரிந்தது. வஞ்சகமே உருவான கௌடா எனும் வங்க மன்னன் சாமாந்தா சசாங்கன் கூட தன் பழைய எண்ணங்களை விட்டொழித்து இந்த இடைக்காலத்தில் வர்த்தன இராஜ்யத்தின் நலம் விரும்பும் நல்லவனாகவே நடந்து கொண்டான்.

    வர்த்தன சாம்ராஜ்யத்தின் விரிவை எவராலும் தடை செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மற்றவர்களும் வர்த்தன சாம்ராஜ்யத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். மணவினை முடித்து பரமபத்தராக விருது சூட்டிக் கொண்ட ஹர்ஷர் பாடலிபுத்திர அரசவையின் அரியணையில் பட்டமகிஷியுடன் வீற்றிருக்க அரசவைக்கவிஞர் முதல் வாழ்த்துக்கவி கூறி முடித்ததும் மற்றும் உள்ள கவிஞர்கள் தங்களின் கவித்திறமையை காட்டினார்கள்.

    அடுத்து அனைவரும் இராஜ தம்பதிகளுக்கு ஆசி கூறி முடித்தவுடன் வருகை புரிந்த மன்னவர்கள் பரிசுப்பொருள்களை வழங்க, அவை மலை போல் குவிந்தது. பொன்னும், மணியும், அணிகலன்கள், நவரத்தினங்கள், அலங்காரப் பொருள்கள் என்று அவற்றின் ஒளியால் கொலுமண்டபமே ஜாஜ்வல்யமாக ஜொலித்தது. அந்த ஜொலிப்பின் பிரதிபலிப்பால் ஹர்ஷரின் முகமும் பட்டமகிஷியின் முகமும் வானவில்லின் வர்ண ஜாலங்களைப் போல் காண்பவர்கள் கண்களைக் கவர்ந்தது. இந்திரனும் இந்திராணியும் வீற்றிருப்பது போன்று தேவேந்திரசபை போலவே பாடலிபுத்திர கொலுமண்டபம் காட்சியளித்தது. மேன்மாடத்தில் இருந்து இராஜ்யஸ்ரீ தன் உயிர்த்தோழிகளுடன் இந்த இனிய காட்சிகளைக் கண்டு மனம் பரவசமுற்றாள். அவள் மட்டுமா! அன்று பெருமிதம் கொள்ளாதோர் எவரும் இல்லை. தான் புகுந்த வீடாகிய மௌகாரிகளின் குலக்கொழுந்தை தன் தமையன் மணம் புரிந்து பட்டமகிஷியாக்கிக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியுற்றாள்.

    வடமேற்கு படையெடுப்பால் இணைந்த அரசர்களுக்கும் அன்றே மகாசாமாந்தா, சாமாந்தாவாக நியமனம் செய்ய வேண்டிய நிகழ்ச்சியும் இருந்தது. அத்துடன் புதிதாக நேபாள மன்னரும் மகாசாமாந்தாவாக நியமனம் ஆவதுடன் வங்க மன்னன் சசாங்கனையும் மகாசாமாந்தாவாக நியமனம் செய்ய ஹர்ஷர் முடிவு செய்திருந்தார். எனவே வாழ்த்து, ஆசிகள் வழங்கப்பட்டு உடன் அளிக்கப்பட பரிசுப்பொருள்களை வீரர்கள் எடுத்துச் சென்று பாதுகாப்பான பெரிய அறையில் வைத்தனர். ஹர்ஷர் கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார்:

    வர்த்தக சாம்ராஜ்யத்தின் மகாசாமாந்தாக்களே! சாமாந்தாக்களே! இராஜாக்களே! பிரதானிகளே! அனைவருக்கும் எம்முடைய வணக்கம். எம் மண விழாவுக்கும் பரமபத்தராக முடிசூட்டு விழாவுக்கும் வருகை புரிந்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்றைய நாள் வர்த்தன சாம்ராஜ்யத்திற்கு உன்னதமான நாளாகும். மகத இளவரசி வர்த்தன மகாராணியாராக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் யாமும் வர்த்தன சாம்ராஜ்ய பரமபத்தராக மகாராஜாதிராஜாவாக முடிசூட்டிக் கொண்டோம். அத்துடன் நம்முடைய நட்பை நாடி வருகை புரிந்துள்ள நேபாள மன்னர் ஹம்சவர்மருக்கு மகாசாமாந்தாவாக நியமனம் அளிப்பதுடன் கூர்ச்சரத்து மன்னர் இரண்டாவது தத்தா அவர்களுக்கும், கௌடா தேசத்து மன்னர் சசாங்கன் அவர்களுக்கும் மகாசாமாந்தாவாக நியமனம் அளிக்க உத்தேசித்துள்ளோம் என்றவுடன் மாபெரும் கரகோஷம் எழுந்ததுடன் சசாங்கனின் மெய் சிலிர்த்தது. ‘ஆகா! ஹர்ஷரின் பெருந்தன்மை எத்துணை பெருமை வாய்ந்தது!’ என்று எண்ணி மற்றவர்கள் வியப்புற்றார்கள்.

    ஹர்ஷர் தொடர்ந்து பலருக்கும் எம்முடைய அறிவிப்பு வியப்பாகத் தோன்றக்கூடும். வங்க மன்னரும் மகாசாமாந்தாவா என்ற எண்ணமும் ஏற்படும். அவர் எம்மிடம் சரணடைந்த போதே அவரிடம் தெரிவித்தோம். அவர் விரும்பினால் அவரின் நல்ல செயல்கள் மூலம் மகாசாமாந்தாவாகலாம் என்று. அதே போல் அவர் இந்த இடைக்காலத்தில் நன்முறையில் செயல்பட்டு எம்முடைய அபிமானத்தையும் பெற்றுவிட்டார். எனவே அவருக்கு மகாசாமாந்தாவாக நியமனம் அளிப்பதை சபை வரவேற்று அங்கீகரிக்கும் என்று நம்புகின்றோம் என்று கூறியதும் மறுபடியும் கரகோஷம் முன்னிலும் பலமாக எழுந்தது.

    ஏற்கனவே தயாராக இருந்த நியமனப் பாத்திரங்கள் ஹர்ஷரின் கையொப்பத்துடனும் வர்த்தன சாம்ராஜ்ய முத்திரையுடனும் பொற்தட்டில் வைக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் ஹர்ஷர் தம் கையாலேயே வழங்கி கௌரவப்படுத்தினார். எதிரியையும் மன்னித்து கௌரவப்படுத்திய ஹர்ஷரின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டச் செய்தார்கள்.

    இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியில் நாளந்தாவின் தலைமை பிட்சு சீலபத்திரர் தம் உதவியாளர்களுடன் ஒரு ஓரமாக நின்றிருந்தார். அவரை பாணர் பெருமான் கூட கவனிக்கவில்லை. இராஜ்யஸ்ரீயும், பூர்ணவர்மரும் கூட உள்ள மகிழ்ச்சியால் கவனிக்கவில்லை. ஆனால் ஹர்ஷர் உரை நிகழ்த்த எழுந்து நின்ற போது மக்களுடன் நின்றிருந்த சீலபத்திரரை கவனித்துவிட்டார். உரை முடித்து நியமனப் பத்திரங்களை வழங்கி முடித்த உடனே அரியணை மேடையிலிருந்து இறங்கி சீலபத்திரரை நோக்கிச் சென்றார்.

    மாமன்னவர் ஏன் திடீரென்று அரியணை மேடையை விட்டிறங்கிச் செல்கின்றார் என்று புரியாமல் இருந்த அனைவரும் ஹர்ஷரின் செயலை கண்டதும் பிரம்மிப்படைந்தார்கள்.

    சீலபத்திரரை நெருங்கிய ஹர்ஷர் அவரின் இரு கரத்தையும் பிடித்து அவரை அரியணைப் படிகளின் அருகில் அழைத்து வந்ததும் தம் மகிஷியை நோக்க, அவரின் பார்வையிலேயே அவரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பிரபாவதிதேவி உள்ளம் பெருமிதப்பட படிகளில் இறங்கி வந்து மாமன்னரின் அருகில் நின்றதும் இருவருமாக குனிந்து சீலபத்திரரின் கால்களை தொட்டு வணங்கினார்கள்.

    வணங்கிய இருவரையும் சீலபத்திரர் தம் கரங்களை அவர்களின் சிரசின் மேல் வைத்து புத்தம் சரணம்! சர்வ மங்களமும் உண்டாகட்டும். அருகப்பெருமானின் அருளாசி பூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று ஆசி கூறினார்.

    அவருக்கு தக்க ஆசனம் அளிக்க உத்தரவிட்ட ஹர்ஷர் சீலபத்திரரை யாரும் கவனிக்காததை எண்ணி சற்று மனவருத்தம் அடைந்தார். எனினும் எவரையும் குற்றம் கூற முடியாதே! தாமேகூட கோலாகல நிகழ்ச்சியில் சீலபத்திரரை மறந்துவிட்டோமே என்று வருந்தினார்.

    ஹர்ஷரின் செயல் அனைவரையும் பிரம்மிப்படையச் செய்ததுடன் வியப்பையும் நெகிழ்வையும் ஏற்படுத்திவிட்டது. ஒரு சாம்ராஜ்யாதிபதி எளிய ஒரு புத்த பிட்சுவுக்கு எவ்வளவு கௌரவம் அளித்துள்ளார் என்று நினைத்தார்கள். ஆனார் ஹர்ஷரோ சீலபத்திரரை போதிசத்துவரின் திரு உருவமாகவே கருதினார் என்பதை அவர்கள் எப்படி அறிய முடியும்!

    கொலுமண்டபத்து நிகழ்ச்சிகள் யாவும் முடிந்துவிட்ட பின் மாமன்னர் தம் மகிஷியுடன் மக்களின் தரிசனத்துக்காக அரண்மனையின் உப்பரிகையில் நின்று மக்களுக்குத் தரிசனம் அளித்தார். இரதியும் மன்மதனும் போலிருந்த இருவரையும் கண்ட மக்கள் உற்சாகத்தில், மகிழ்ச்சியில் பெரும் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினார்கள். மக்கள் தரிசனம் முடிந்ததும் இராஜ தம்பதிகள் அரண்மனையிலேயே இருந்த சிவாலயத்திற்குச் சென்று சிவ தரிசனம் செய்தார்கள். விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. இடைக்காலத்தில் மகத மன்னர் பூர்ணவர்மர் புத்தமதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்ட போதும் சர்வ மதக் கொள்கையுடையவராகவே இருந்ததால் அரண்மனை சிவாலயத்தில் நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற்று வந்தது. பூர்ணவர்மர் சிவாலய பூஜைகளை தடை செய்யவில்லை.

    மகாசாமாந்தாக்கள், சாமாந்தாக்கள், இராஜாக்கள் மற்றும் பிரதானிகள், பிரமுகர்கள் யாவரும் விருந்து மண்டபம் நோக்கிச் சென்றார்கள். மகத தானேஸ்வர பரிசாரகர்கள் தங்களின் திறமையை விருந்தில் காட்டியிருந்தார்கள். பெண்கள் அனைவருக்கும் வேறு இடத்தில் விருந்து ஏற்பாடாகியிருந்தது. விருந்தினர்கள் இதுவரை சுவைத்தறியாத விருந்தை உண்டு மகிழ்ந்து திரும்பினார்கள்.

    ஆலய தரிசனம் முடித்து வந்த இராஜ தம்பதிகளும் முக்கியமானவர்களுடன் விருந்தை உண்டு முடித்ததும் மகிஷி இராஜ்யஸ்ரீ, பவளவல்லி, பத்மாவதியுடன் அந்தப்புரம் சென்றதும் ஹர்ஷர் தம்முடைய இருப்பிடத்திற்கு தன் நிழலான விக்கிரகேதுவுடன் வந்துவிட்டார்.

    தலைமை அமைச்சர் மல்லிகார்ஜுனர் மற்றுமுள்ள முக்கியஸ்தர்களுடன் இரவு சடங்குக்குறிய ஏற்பாட்டைச் செய்யத் தொடங்கினார்கள். அந்தப்புரத்தில் வர்த்தன மகாராணியார், வல்லி முதலான பெண்டிர்களால் வம்புக்கிழுக்கப்பட்டு கேலியும், விளையாட்டுமாக பெண்களின் பொழுது இனிமையாகக் கழிந்தது. ஹர்ஷர் மிக முக்கியஸ்தர்களான உபயன், அட்சயன், சாபாரி விக்கிரகேது மற்றும் பாணர் பெருமானுடன் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.

    சீலபத்திரர் மாமன்னர் தம்பதிகளுக்கு ஆசி அளித்த உடனேயே தம்முடைய உதவியாளர்களுடன் நாளந்தாவுக்கு புறப்பட்டுவிட்டார். அவரிடம் ஹர்ஷர் நாளந்தாவுக்கு வருவதாகக் கூறினார். மிகுந்த சந்துஷ்டியுடன் சீலபத்திரர் நாளந்தா திரும்பினார். மறுநாள் முழுவதுமே மணவிழா முடிசூட்டு விழாவுக்கு வந்த முக்கியமானவர்கள் விடைபெற்றுக் கொண்டு செல்வார்கள் என்பதால் அவர்களை பேட்டி கண்டு விடை கொடுத்து அனுப்பி வைக்கும் பணி மாமன்னருக்கு சரியாகப் போய்விடும். அதற்குப் பிறகு நாளந்தா சென்றுவிட்டு கன்னோசி திரும்பியதும் சாபாரியுடன் தம் மகிஷியை அழைத்துக் கொண்டு விந்தியமலையில் உள்ள சாபாரியின் இடத்திற்கு சென்றுவர மனதில் திட்டம் வைத்திருந்தார்.

    கனோஜ் சென்றதும் கூட உடனே விந்தியம் புறப்பட முடியாது. மற்றும் சில ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். விந்தியம் செல்லும் திட்டம் முக்கியமாக சாபாரி விக்கிரகேதுவுக்காகத்தான். தன்னுடன் புறப்பட்டு வந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகியும் சாபாரி விக்கிரகேது தன் கிராமத்துப் பக்கம் செல்லவே இல்லை. ஹர்ஷருடனேயே அவரின் நிழலாகவே இருந்து வருகிறான். ஆனால் ஹர்ஷர் அவ்வப்போது சஞ்சாரக்கள் மூலமாக சரபகேதுவுக்கு அவரின் மைந்தனான விக்கிரகேதுவைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்துக் கொண்டேதான் இருந்தார்.

    விக்கிரகேதுவும் தன் கிராமத்தை மறந்துவிட்டான் என்று சொல்லும்படியாகவே இடைவிடாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. பழைய விக்கிரகேதுவா அவன்! இல்லையே! மாமன்னரின் ரகசி நியுக்தா சாபாரி என்ற புதிய பெயருடன் நல்ல வாள் வீரனுமாகிவிட்டானே. அடடே! எத்தனை போர்கள்! அவற்றில் எவ்வளவு சாகசங்கள் நிகழ்த்தி முக்கியமானவனாகிவிட்டானே.

    ஆதவன் அஸ்தமித்ததும் பாடலிபுத்திரம் விளக்குகளால் ஜெகஜ்ஜோதியாக ஜொலித்தது. அரண்மனையிலும் ஜொலிப்புக்கு குறைவில்லை என்பது போல் ஜொலிப்பு பிரகாசமாகவே இருந்தது. மாமன்னரின் மணவிழாவின் நிறைவுச் சடங்குக்கான ஏற்பாடுகள் முடிவுற்று தயார்நிலையில் இருந்தது.

    இராஜ புதிய தம்பதிகள் மங்கள நீராட்டம் முடித்து ஆலய தரிசனமும் செய்த பின் சற்றே உணவருந்தியதும் சடங்குக்கென பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் ஹர்ஷர் வந்தார். அறையின் அலங்காரம் கண்களைப் பறிக்கும்படியாக வெகு பிரமாதமாக இருந்ததைக் கண்ணுற்ற ஹர்ஷர் மனதில் நிறைவான மகிழ்ச்சியுடன் நிலா முற்றத்தில் வந்து நின்றார்.

    சுக்லபட்சத்து நிலவு சற்றே கூனல் விழுந்த முதுகைப் போல குறையாகத் தென்பட்டது வானில். குறைநிலா என்றாலும் கூட நிலவின் ஒளி அரண்மனை விருட்சங்களின் இடையில் ஆங்காங்கே குறைவாகவே விழுந்து கொண்டுதான் இருந்தது. குறை நிலவைக் கண்டு கொண்டிருந்த ஹர்ஷர் முழு நிலவு அறைக்குள் வருவதை பெண்களின் சிரிப்பொலியாலும் முழுமதியாளின் கால் தண்டைகள் எழுப்பிய இனிய சங்கீத ஓசையாலும் அறிந்து கொண்டு திரும்பினார். திரும்பியவரின் சித்தமே செயலற்று நின்றுவிட்டது.

    அப்படியே பிரம்மித்து நின்றுவிட்டார். கால்கள் நகரக்கூட மறுத்துவிட்டது. ‘ஆகா! இது என்ன மண்ணுலக மங்கையா! மண்ணுலகத்திலும் இப்பேற்பட்ட பேரழகு இருக்க முடியுமா! இருக்காது. இது விண்ணுலக மங்கையேதான். தவறிப்போய் மண்ணுலகுக்கு வந்திருக்க வேண்டும்.’

    தன்னுடைய மணவாளரின் நிலை அறிந்து பிரபாவதி களுக்கென்று சிரித்தபடியே ஹர்ஷரின் அருகில் வந்தாள். இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அருகில் வந்தவளையே கண்கொட்டாமல் பார்த்தாரே அன்றி ஏந்திழையாள் மென்மையாக சிரித்ததை அவரின் செவிகள் உணரவேயில்லை.

    அருகில் வந்து நின்ற பேரழகு பெட்டகத்தின் எந்த அழகைக் கவனிப்பது எதை விடுவது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிய ஹர்ஷரின் காலை அந்த பூவிழியாள் தொட்டு வணங்கியதும்தான் உடல்சிலிர்க்க தன்னிலை அடைந்த ஹர்ஷர் தொட்டு வணங்கிய அஞ்சுகத்தை அள்ளியெடுத்தார்.

    ‘அடடா! என்ன இது! சற்றும் கனமே இல்லையே? பூக்களை அள்ளியது போல இத்துணை இலேசாக இருக்கின்றாள்’ என்று எண்ணியவர் பூக்குவியலான பிரபாவை கைகளால் ஏந்திக் கொண்டே பஞ்சணையை அடைந்தார். அறையிலிருந்த சரவிளக்குகள் ஏற்கனவே செம்மையான பிரபாவின் முகத்தை மேலும் செம்பவழ நிறமாக்கி பளிச்சென்று காட்டியது. முகத்தின் செம்மை அதிகமா? பவள இதழின் செம்மை அதிகமா? என்று ஹர்ஷரால் வித்தியாசம் காண முடியவில்லை.

    பஞ்சணையில் அமர்ந்து பூங்கொடியாளை தன் மார்பில் சாய்த்துக் கொண்ட ஹர்ஷர் அவளின் உடலிலிருந்தும் சூடியிருந்த மலர்களிலிருந்தும் எழுந்த நறுமணத்தால் மெல்ல தன்னை மறக்கலானார். பாவைக்கு மட்டுமென்ன, மணவாளரின் உறுதியான கரங்களால் வாரி எடுக்கப்பட்ட உடனேயே தன்னிலை மறந்துவிட்டாள்.

    அவளின் பூங்கரத்தை பிடித்துக் கொண்டே ஹர்ஷர் தேவி! என்று மெல்ல அழைத்தார்.

    ஹும் என்ற சிறு ஒலி எங்கோ இருந்து வருவது போலத்தான் வந்தது.

    மறுபடியும் ஹர்ஷர் தேவி! என்றழைத்தார்.

    பாவைக்கு உரையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும் நாணம் பேச்சைத் தடை செய்துவிட்டதே. தலையில் சூடியிருந்த மலர்களை பழிக்கும் முகமாக பாவையின் உடலே பூங்கொத்து புஷ்பக்குவியல் தானே!

    தன்னிலை மறந்த இருவரின் மீதும் காமன் முன்னமேயே அசோகம், முல்லை, மா, நீலோற்பலம், அரவிந்தம் ஆகிய மலர்களால் பக்குவமாக சேர்த்து வைத்துள்ள மலர்கணையை கரும்பு வில்லில் பூட்டி சமயமறிந்து விடுவித்தான். அந்த மலர்க்கணை இருவரையும் தாக்க இருவருமே தம் நிலை மறந்துவிட்டனர்.

    மலர்க்கணையின் தாக்குதலால் நிலைகுலைந்த ஹர்ஷர் பாவையை நெருக்கமாக அணைத்துக் கொண்டதுடன் கைகளோ துஷ்டத்தனம் செய்ய துவங்கிவிட்டது. இந்த துஷ்டத்தனம் பிடிக்காத குறை நிலவோ மேகத்திற்குள் நுழைந்து கொண்டது. பாவைக்கோ இந்த துஷ்டத்தனம் உவகையையே அளித்தது. இனி என்ன.. இளசுகள் சுகம் காணட்டுமே!

    அத்தியாயம் - 2

    மூடிய அறையிலே ஏக்கமுற்ற இரு உள்ளங்கள் காமனின் மலர்க்கணையால் தன்னிலை மறந்துவிட்டு இன்பமெனும் நுழைவாயிலைத் திறந்து உள்ளே நுழைய சமயம் பார்க்க, ஹர்ஷரின் கரங்கள் செய்த துஷ்டத்தனத்தைக் கண்ட நிலவு மங்கை நாணமுற்று மேகத்திற்குள் மறைந்து கொண்டாள் என்றால் அறையில் இருந்த மங்கையோ நாணத்தை விட்டுவிட்டு அந்த ஆடவனின் விருப்பத்திற்கேற்றவாறு வளைந்து கொடுக்கின்றாளே அன்றி விலகவில்லையே! அவளே விரும்பி மேலும் தன்னை அந்தக் குறும்புக்காரனோடு ஒன்றிக் கொள்கின்றாளே! இது என்ன விசித்திரம்!

    ஆம், விசித்திரம்தான். விசித்திரத்தை ஏற்படுத்துவதற்கென்றே காத்திருந்தவன் போல செய்வதையும் செய்துவிட்டு இந்தக் காமன் நம்மை தர்மசங்கடமான நிலையில் விட்டுவிட்டு எங்கோ போய் மறைந்து கொண்டானே.

    சாத்திய அறையைவிட்டு நம் கண்ணில் படாமல் எப்படி மறைந்திருப்பான்? அறையில் எங்கும் காணவில்லை. அப்படியென்றால் அந்த இரு உடல்களினுள்ளும் நுழைந்து உள்ளத்தை அடைந்திருப்பானோ. ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் பார்க்கின்றோம் என்பதையே இருவரும் கவனிக்கவில்லையே. கவனித்திருந்தால் ஹர்ஷர் நம்மை பார்க்கவிட்டிருப்பாரா? அவர் மட்டுமே கண்டு இரசிக்க வேண்டிய அழகுகளை நாம் பார்க்க அனுமதிப்பாரா? நிச்சயம் அனுமதிக்கமாட்டார். ஆனால் அவர்தான் தன் நினைவையே இழந்துவிட்டாரே. என்றாலும் நாம் பார்ப்பது பண்பாடாகாது. எனவே நாம் சென்றுவிடலாம். இளம் சிட்டுக்கள் இன்ப வானிலே சிறகடித்து பறந்து மகிழட்டும். இரு மீன்களும் இன்பத் தடாகத்திலே நீந்தி மகிழட்டும். வண்டு தன் மனம் நிறைவடையும் வரை மலரின் தேனை சுவைத்து இன்புறட்டும்.

    காலை பொழுது புலரும் முன்பே விழித்துக் கொண்ட வர்த்தன சாம்ராஜ்யத்து மகாராணி இரவு முழுவதும் நடந்தவைகளை எண்ணிப் பூரிப்படைந்ததுடன் நாணமும் அடைந்தாள்.

    ‘அப்பப்பா! இவர் எவ்வளவு பொல்லாதவர்! என்ன பாடு படுத்திவிட்டார்!’ என்று நினைத்தாலும் அந்தப் பாட்டில் தானும் மதிமயங்கிவிட்டோமே என்று எண்ணவும் சிரிப்பு வந்துவிட்டது. பலமாக சிரித்தாள். மணவாளர் விழித்துக் கொள்வாரே என்று எண்ணி சத்தம் வெளியே வராமல் சிரித்தபடியே மணவாளர் முகத்தை மங்கிய விளக்கின் ஒளியிலேயே கவனித்தாள் பிரபாவதி.

    இரவெல்லாம் விழித்தது சரஸ சல்லாபத்தில் ஈடுபட்டுவிட்டு விடிய இரு ஜாமம் இருக்கும் போதுதான் இருவரும் கண்ணயர்ந்தார்கள். ஹர்ஷரின் வலது கரம் பிரபாவின் இடையை அணைத்துப் பிடித்திருந்தது. எனவே மெல்ல கரத்தை விளக்கிய பிரபா கரத்தை பஞ்சணையில் மேல் இருக்கும்படி வைத்துவிட்டு பஞ்சணையிலிருந்து அசைவில்லாமல் இறங்கி ஹர்ஷரின் இரு கால்களையும் தன் இரு கைகளால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

    அந்தப்புரத்தை அடைந்ததும் வல்லியும் மற்றவர்களும் இன்னமும் உறங்கிக் கொண்டே இருப்பதைக் கண்ணுற்று அவர்கள் விழிப்பதற்கு முன் நீராடிவிட்டு வந்துவிடலாம் என்று புறப்பட்டவளை சட்டென்று இரு கரங்கள் இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டது.

    திகைத்துப் போன பிரபாவை வல்லி, திருட்டுக் கள்ளி! நான் உறங்கிவிட்டேன் என்று நினைத்தாயோ? என்றவாறே அணைத்துக் கொள்ள, இரவு ஹர்ஷர் மேல் தான் இருந்தது போல் இப்போது வல்லியின் மேல் விழுந்து கிடந்ததை எண்ணியதும் நாணம் முகத்தை செம்மையாக்கிவிட்டது.

    வல்லியின் பேச்சுக் குரலில் மற்றவர்களும் விழித்துக் கொள்ள பாவம் பிரபா! அவர்களிடம் வசமாக சிக்கிக் கொள்ள, ஆளுக்கொரு கேள்வி கேட்டு அவளைத் திணறடிக்க, கடைசியில் இராஜ்யஸ்ரீதான் மகளுக்கு துணைவர நேரிட்டது.

    அடீ பெண்களா! ஏன் குழந்தையை வாட்டுகின்றீர்கள்? என்று இராஜ்யஸ்ரீ கேட்க ஆமாம், அது ஒன்றும் அறியாக் குழந்தை. இவர்கள் பெரிய கிழவி என்று வல்லி சொன்னதும் பெண்களின் சிரிப்பொலி மற்றவர்களையும் எழுப்பிவிட கலகலப்பாகிவிட்டது.

    மறுபடியும் இராஜ்யஸ்ரீயே வல்லி! பிரபா நீராடிவிட்டு வரட்டும். நாமும் நீரோட்டம் முடிந்து சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம் என்றவுடன்

    ஆம்.. ஆம்.. நான் கூட மறந்துவிட்டேன். அம்மா மகாராணியாரே! விரைவில் நீராட்டத்தை முடித்துக் கொண்டு லக்ஷ்மிகரமாகப் போய் உன் மணவாளரை எழுப்பு. பாவம்! அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார் என்று மேலும் கேலி செய்தாள் வல்லி.

    தோழியர்கள் வந்துவிடவே பிரபாவதி நீராட்டத்திற்குச் சென்றாள். பிரபாவதி சென்ற பின் இராஜ்யஸ்ரீ வல்லி! அநியாயத்திற்கு நீ பிரபாவைக் கேலி செய்கின்றாய். அவள் வர்த்தன சாம்ராஜ்யத்தின் மகாராணி என்பதை மறந்துவிட்டாயா? என்றாள் சிரித்துக் கொண்டே.

    இளவரசி! பிரபா வர்த்தன சாம்ராஜ்யத்தின் மகாராணியாக இருக்கலாம். ஆனால் எனக்கு சகோதரர் மனைவிதான். உங்களுக்கு மகள்தான். ஆகவே கேலி செய்ய உரிமையுண்டு. என்ன அக்கா! நான் சொல்வது சரிதானே? என்று பத்மாவிடமும் சகோதரி! நான் சொல்வது சரிதானே? என்று மாளவராணி சந்திராவதியிடம் கேட்கவே இருவரும் வல்லியின் கேள்விக்கு ஆம் என்றே பதில் சொன்னார்கள்.

    அம்மா வல்லி! உன்னிடம் பேச்சில் வெல்வது என்பது நடக்கக்கூடிய காரியமா? பாவம் சேனாபதியாரே! திணறும் போது நான் என்ன செய்ய முடியும்? என்று இராஜ்யஸ்ரீ சொல்லும் போதே

    நீ சொல்வது உண்மைதான் தங்கையே! பாவம் சேனாபதியார் என்று கூறியவாறே ஹர்ஷர் நின்றிருந்தார்.

    ஹர்ஷரை கண்டவுடன் பஞ்சணையிலிருந்து எழப் பார்த்த மாளவ ராணியை சகோதரி! நீங்கள் எழ வேண்டாம். அமர்ந்தே இருங்கள். இது அந்தப்புரம். மாமன்னர் என்ற மரியாதையெல்லாம் இங்கு கிடைக்காது. எதிர்பார்க்கவும் கூடாது. சரிதானே மூத்த சகோதரியாரே? என்றார் ஹர்ஷர் வல்லியிடம்.

    நான் அல்ல மூத்த சகோதரி. இங்கே எல்லோரையும்விட மூத்தவர் பத்மாவதி அக்காதான். எனவே நான் இரண்டாவது சகோதரிதான். அது சரி, உங்கள் மகிஷியார் வந்து தங்களைத் துயிலெழுப்பாமல் எப்படி தாங்களாகவே எழுந்து வரலாம்? என்று வல்லி கேட்கவே திகைப்புற்ற ஹர்ஷர்

    நானாகவே எழுந்து வந்தது தவறா சகோதரி? சம்பிரதாயமெல்லாம் நான் அறியாதது என்றார் ஹர்ஷர். உண்மையிலேயே மகிஷியார்தான் எழுப்ப வேண்டும் என்பது சம்பிரதாயமோ என்றுதான் கருதினார்.

    ஆனால் பெண்கள் வேடிக்கை செய்கின்றார்கள் என்பதை அவர் எப்படி அறிய முடியும்? புதுமணத் தம்பதிகளை சகோதரிகளும், மைத்துனர்களும் வேடிக்கை செய்வது சம்பிரதாயம் தானே.

    ஹர்ஷர் வல்லியின் கேலியைப் புரிந்து கொள்ளாமல் அப்பாவியைப் போல கேட்டதும் வல்லி தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆம் சகோதரரே! தவறுதான். லக்ஷ்மிகரமாக எங்கள் மகாராணியார் வந்து திருப்பள்ளியெழுச்சி பாடிய பின்தான் தாங்கள் விழித்து முதலில் உங்கள் மகிஷியின் திருமுகத்தைத்தான் காண வேண்டும்.

    எங்காவது வெளியிடங்களுக்கு செல்லும் போது என்ன செய்வது சகோதரி? என்றார் ஹர்ஷரும்.

    மானசீகமாக நினைத்து தரிசனம் செய்ய வேண்டும். அல்லது மகிஷியின் ஓவியத்தை எழுதி வைத்துக் கொண்டு உடன் எடுத்துச் சென்று கண்டு மகிழ வேண்டும்.

    அப்படியானால் சேனாபதியார் அப்படித்தான் செய்கின்றாரோ? என்று ஹர்ஷர் கேட்டவுடன் சற்று அசந்த வல்லி உடனே இந்தச் சம்பிரதாயமெல்லாம் மாமன்னருக்குதான். மற்றவர்களுக்கு இல்லை என்றதும்தான் வல்லி இதுவரையிலும் தன்னை நன்றாக கேலி செய்திருக்கின்றாள் என்பதைப் புரிந்து கொண்டார் ஹர்ஷர்.

    இதை நான் ஒப்பிக் கொள்ளமாட்டேன் சகோதரி! அதென்ன எனக்கு மட்டும் ஒரு சம்பிரதாயம்.. இனிமேல் அனைவருக்குமே இதுதான் சம்பிரதாயம் என்று அறிவிப்பு செய்துவிடுகின்றேன் என்று ஹர்ஷர் கூறியதும் இராஜ்யஸ்ரீ,

    அனைவருக்கும் என்பதைவிட சேனாபதியாருக்கு மட்டும் என்று ஆணையிட்டுவிடுங்கள் அண்ணா! அதுவே போதும். சேனாபதியார் மட்டுமே இந்த வாயாடியிடம் சிக்கிக் கொண்டு விழிப்பதைப் போலவே தினமும் இவள் முகத்திலேயே விழிக்கட்டும் என்று இராஜ்யஸ்ரீ சொல்லியதும் ஹர்ஷர் உட்பட அத்தனை பெரும் சிரித்துவிட்டார்கள்.

    மாளவ ராணிக்கு பிரம்மிப்பாகவே இருந்தது. ஏனெனில் மாமன்னராக இருந்ததும் சற்றும் கர்வமோ ஆணவமோ இன்றி சகஜமாகப் பேசுகின்றாரே என்று வியந்தாள்.

    நீராட்டம் முடித்து உண்மையிலேயே லக்ஷ்மிகரமாக ஆனால் அலங்காரம் எதுவுமில்லாமல் பூரணசந்திரபிம்பம் போல் முகலாவண்யத்துடன் கரு மேகக் கூந்தல் வாரி முடிக்கப்படாமல் கட்டுக்கடங்காத கடல் அலை போல் முழந்தாளை ஒட்டி நிற்க வந்து நின்ற தம் மகிஷியை கண்டதும் ஹர்ஷரும் கூட வியப்படைந்து சிலையாகிவிட்டாரே. அவரை மட்டுமா அந்த தேவ சௌந்தர்யம் மயக்கியது? பெண்களையும் கூட அல்லவா சேர்த்து மயக்கிவிட்டது.

    தாழை மடலைப் பழிக்கும் சருமத்தின் மென்மையும், சந்தனத்தை ஒளிமங்கச் செய்யும் நிறமும், நீலோற்பலத்தை வென்றுவிட்ட கருவண்டுக் கண்களும், கோவைக் கனியின் நிறத்தோடு போட்டியிடும் செம்பவள உதடுகளும், அதற்கிடையில் பளீரென்று ஒளிவிடும் பாண்டிய நாட்டு முத்துக்கள் போன்ற பல் வரிசையும், வலம்புரிச் சங்கையொத்த கழுத்தும், முற்றிலும் உடையணியாததால் மூடியிருந்த சீலையின் மறைவையும் மீறித் தெரியும் ஸ்தனங்களின் திண்மையும், முழங்காலுக்கு மேலேயே சுற்றியிருந்த சீலையும் நின்றுவிட்டதால் கெண்டைக்கால்கள் மற்றும் செம்பஞ்சு போன்ற பாதங்களும் ஹர்ஷரை நிலைகுலையைச் செய்துவிட்டது.

    தன் மணவாளரை எதிர்பாராததால் குறைந்த உடையோடு வந்துவிட்ட பூம்பாவையோ நாணத்தால் மெய்சிலிர்த்துவிட்டாள். இத்தனை பெண்களுக் கிடையில் திடீரென்று செயலிழந்துவிட்ட ஹர்ஷரை இராஜ்யஸ்ரீயின் குரல் நினை உலகிற்கு கொண்டு வந்தது.

    அண்ணா! தாங்களும் நீராட்டம் முடித்துவிட்டு வந்துவிட்டால் எல்லோரும் சேர்ந்தே உணவருந்தலாமே என்று கூறியவுடன் சட்டென்று தன்னிலையடைந்த ஹர்ஷரும் சற்றே நாணமுடன் நீராட்டத்திற்குப் புறப்பட்டுவிட்டார்.

    தோழிகள் பிரபாவுக்கு அலங்காரம் தொடங்க பெண்கள் அனைவரும் நீராட்டம் முடிந்து வந்தவுடன் மன்னரும் வந்துவிட்டார். மன்னருடன் அட்சயனும் உபயன், மாதவகுப்தர், வீரமார்த்தாண்டர், நிழல் சாபாரியும் வந்து மாமன்னருக்காக காத்திருக்க, மாமன்னரும் நீராட்டம் முடித்து சர்வலங்கார பூஷிதனாக அரண்மனை விருந்து மண்டபத்திற்கு வந்துவிட்டார்.

    விருந்து ஆரம்பமாகியது. மாமன்னருக்கு இன்று பணி அதிகம். விருந்தினர்கள் விடைபெறுவதால் அவைகளுக்கு தனித்தனியாக பேட்டியளிப்பதுடன் அரசியல் நிலவரங்களையும் ஆலோசனை செய்த பின் விடையளிக்க வேண்டும். எனவே உணவு முடித்ததும் ஆண்கள் அனைவரும் ஆலோசனை மண்டபத்திற்குப் புறப்பட்டார்கள்.

    மாமன்னர் வருவதற்கு முன்னமே தலைமை அமைச்சர், பாணர், சுபந்து ஆகியோர் ஆலோசனை மண்டபத்தில் கூடிவிட்டார்கள். மாமன்னர் ஆலோசனை மண்டபத்தில் நுழைந்ததும் வணக்கம் செலுத்த வணக்கத்தை ஏற்றுக்கொண்ட ஹர்ஷர் ஆசனத்தில் அமர்ந்ததும் மற்றவர்களும் ஆசனத்தில் அமர்ந்தார்கள்.

    பின் மகாசாமாந்தாக்கள், சாமாந்தாக்கள், இராஜாக்கள் ஆகியோர் வரிசையாக வரவழைக்கப்பட்டார்கள். ஒவ்வொருவருடனும் ஹர்ஷர் விரிவாக அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனைகள் செய்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் மற்றும் மதப்பிரச்சனைகள் குறித்தும் தெளிவான ஆணைகள் அறிவுரைகள் வழங்கினார் ஹர்ஷர்.

    பலர் ஹர்ஷரை தம் நாட்டிற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்ட ஹர்ஷர் தக்க சமயத்தில் வருகை புரிவதாக உறுதி கூறி விடையளிக்கவே ஒவ்வொரு தேச மன்னர்களும் தத்தம் பரிவாரங்களுடன் பாடலிபுத்திரத்திலிருந்து புறப்பட்டார்கள். வரும் போது இருந்ததைப் போலவே ஒவ்வொரு மன்னர்களையும் கௌரவமாக அனுப்ப மகத மன்னர் பூர்ணவர்மர் ஏற்பாடு செய்திருந்தார்.

    வர்த்தன சாம்ராஜ்யத்தில் இணைந்துவிட்ட அத்தனை தேச மன்னர்களும் மனநிறைவுடன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் உரிய கௌரவத்தையும் மரியாதையையும் ஹர்ஷர் அளித்தது அவர்களுக்கு மனநிறைவை அளித்ததுடன் சிறப்பானதொரு மாவீரனான ஹர்ஷரை பெருமையுடன் நினைக்கவும் செய்தார்கள்.

    அன்றைய நிலையில் மகாசாமாந்தாவாக நியமிக்கப்பட்டவர்கள் தட்சசீல வீரமார்த்தாண்டர், மாளவ மாதவகுப்தர், கூர்ச்சர இரண்டாவது தத்தா, காமரூப பாஸ்கரவர்மர், நேபாள மன்னர் அம்சவர்மர், கௌடாவின் சசாங்கன், மகதத்தின் பூர்ணவர்மர் ஆகியோர். காஷ்மீரத்தை நட்பு நாடாக மட்டுமே ஏற்றுக்கொண்டார். சாமாந்தாக்களான வைசாலி, குசி, அயோத்தி, சகாலா, ஆரோர், பாரியாத்ரா, பர்வதா மற்றும் இராஜாக்களான ஜலந்தரா, ஸ்ருக்கனா, பிரம்மபுரா, மதிப்புரா, கோவிசனா, அஹிச்சித்ரா, கபிலவஸ்து, பிலோ ஷன்னா, கௌசாம்பி ஆகியவர்களையும் ஹர்ஷர் காலை முதலே வரவேற்று அவர்களுடன் உரையாடி மகிழ்வோடு வழியனுப்பினார்.

    வங்கதேச மன்னனோடு சற்று நேரம் விரிவாகவே உரையாடினார். அதைப் போலவே காஷ்மீர நேபாள மன்னர்களோடும் விரிவாக உரையாடினார். ஆலோசனைகளுக்கு உதவியாக மல்லிகார்ஜுனரோடு பாணர், சுபந்து மற்றும் மகாசாந்தி விக்கிரகா அதிகிரிதாவான (போர் அமைச்சர்) அவந்தி அட்சயனும் மகாபலதிக்கிரிதா (மகாசேனாதிபதி) பண்டி உபயதத்தனும் பெருமளவு உதவியாக இருந்தார்கள்.

    பூர்ணவர்மர், மாதவகுப்தர், வீரமார்த்தாண்டர் தவிர மற்ற அனைத்து மகாசாமாந்தாக்களும் சாமாந்தாக்கள் மற்றும் இராஜாக்களும் விடைபெற்றுக் கொண்டு சென்ற போது ஆதவன் அஸ்தமித்து

    Enjoying the preview?
    Page 1 of 1