Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mysore Puli Thippu Sulthan
Mysore Puli Thippu Sulthan
Mysore Puli Thippu Sulthan
Ebook261 pages1 hour

Mysore Puli Thippu Sulthan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் ராஜ்ய சுல்தான் திப்புவின் ஆட்சியை அகற்றிவிட்டு, ஆங்கிலேயர்கள் மைசூர் ராஜ்யத்தை, தங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வரசெய்யும் முயற்சிகள் ஒருபக்கம்! பழைய மைசூர் ராஜ்ய உரிமையாளர்களான உடையார் ராஜபரம்பரையை ஆட்சி பீடத்தில் அமரவைக்க மந்திரி பூர்ணய்யா செய்யும் முயற்சிகள் ஒரு பக்கம்! திவானாக உள்ள மீர்சடக் திப்புவை வீழ்த்தி தான் சுல்தானாக செய்யும் முயற்சிகள் மற்றொரு பக்கம்! என்று மூன்று விதமான முயற்சிகளை பலவிதமான எதிர் முயற்சிகள் செய்தும் முடியாத நிலையில் திப்புவின் வீழ்ச்சி பற்றி ஆதாரமான குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய சரித்திர நாவல்தான் இந்த “மைசூர்புலி திப்புசுல்தான்” நாவல்.

சரித்திர ஆதாரங்களுடன் கதையாக எழுதப்பட்டுள்ள இந்த நாவல் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக தொய்வில்லாமல் செல்லும். திப்புசுல்தானின் வீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பதை படித்து அறிய உங்களை நாவலுக்குள் நுழைய அழைக்கின்றேன்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580147407856
Mysore Puli Thippu Sulthan

Read more from M. Madheswaran

Related to Mysore Puli Thippu Sulthan

Related ebooks

Related categories

Reviews for Mysore Puli Thippu Sulthan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mysore Puli Thippu Sulthan - M. Madheswaran

    https://www.pustaka.co.in

    மைசூர் புலி திப்புசுல்தான்

    Mysore Puli Thippu Sulthan

    Author:

    மு. மாதேஸ்வரன்

    M. Madheswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-madheswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத வற்றாத வள நதியாம் காவிரி அன்னை, திருவரங்கத்தை இருபுறமும் அரண்கட்டிச் செல்வது போலவே மைசூர் நாட்டின் தலைநகராம் ஸ்ரீரங்கப்பட்டினத்தையும் அரவணைத்து, இயற்கையான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தாள். சலசல வென்ற ஓசையுடன் பாறைகள் நிறைந்த இடத்தில் வேகமாக சுழித்தோடும் காவிரி அன்னை அளித்த பாதுகாப்புடன், கம்பீரமான அகன்ற மதில்களும் அளித்த பாதுகாப்பில் ஸ்ரீரங்கப்பட்டினம் இருந்தது.

    ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திலிருந்து வைகறை பூஜையின்போது ஒலிக்கப்பட்ட காண்டா மணியின் சப்தம் கோட்டை மதிற்சுவற்றைக் கடந்து, காலைப் பொழுதின் குளிருக்கு சுணங்காமல் காவிரியில் நீராடிக் கொண்டிருந்த மக்களின் செவிகளில் விழவே அவர்கள் தங்களை மீறிய சக்தியுடன் ஸ்ரீரங்கா! ஸ்ரீரங்கா! என்று சொல்லிக்கொண்டே தண்ணென்ற காவிரியின் நீரில் மூழ்கி எழுந்தார்கள்.

    ஆலயமணியின் சத்தத்துக்கு போட்டியாக, கோபுரத்தில் இருந்த புள்ளினங்கள்ளின் கீச்கீச் சென்ற சப்தமும் கேட்டது. மைசூர் நாட்டின் சுல்தான் பகதூர் திப்புவின் அரண்மனை முகப்பில் இருந்த பரந்த மைதானத்தில், ஆஜானுபாகுவான மல்லக ஜட்டிகள் படைகளின் அணிவகுப்பை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்கள்.

    படைப் பிரிவுகளின் தலைவர்கள் இருந்தாலும் அரண்மனை மல்லக ஜட்டிகள் விசேஷ அதிகாரம் பெற்றிருந்தார்கள். வாரம் ஒரு நாள் திப்புசுல்தான் காணும் இந்த அணிவகுப்பு, வெறும் பார்வைக்காக மட்டுமல்லாமல், வீரர்களின் திறமைகளை சோதிக்கும் சோதனைக் களம் என்றும் கூறலாம்.

    வீர விளையாட்டுகளைப் பார்ப்பதுடன், தானே வீரர்களுடன் கடும் கானகம் சென்று, பிடித்துக் கொண்டுவந்த வேங்கைகளின் சீற்றத்தைக் காண; தன் பரம வைரிகளாக எண்ணும் ஆங்கிலேயக் கைதிகளை நிராயுதபாணிகளாக புலிகளுடன் மோதச் செய்து, அவர்களின் மரண அலறல்களைக் கேட்பது திப்புவுக்கு சலிக்காத ஒன்று.

    ஆயிற்று இன்னும் சிறிது நேரத்தில் சுல்தான் வந்து விடுவார். மல்லக ஜட்டிகளின் தலைவன் பொம்மு வீரண்ணா சுறு சுறுப்புடன் செயல்பட்டான். அணிவகுப்பு தயார் நிலையில் இருந்தது. முன்னணியில் மல்லக ஜட்டிகள் திறந்த மார்புடன், இடுப்பில் ஜட்டிகளுடன் எமகிங்கரகள் போல் நின்றிருந்தார்கள். ஒவ்வொருவரும் வெறும் கைகளினாலேயே ஒரே சமயத்தில் நான்கு பேரை சமாளிப்பார்கள். கரணை, கரணையான உடம்பின் செழுமை காண்பவர்களை கதிகலங்க வைக்கும். மல்லக ஜட்டிகளில் பெரும்பான்மையோர் இந்துக்களே!

    திப்புசுல்தான்! மந்திரி பூர்ணய்யா, திவான் மீர்சடக், தளபதி யாசீன்கான் உடன்வர கம்பீரமான நடையுடன் அரண்மனை படிகளில் இறங்கி அணிவகுப்பின் முன்னால் வந்து நின்றதும், அதுவரை அசைவில்லாமல் பொம்மைகள் போல் நின்றிருந்த வீரர்களின் வாழ்த்துக் கோஷம் ஒரே சீராக ஒரு முறை எழுந்து அடங்கியது, சுல்தான் பகதூர் ஜிந்தாபாத் என்று.

    அணிவகுப்பை பார்த்துக்கொண்டு வலம் வந்தான் திப்பு. அன்றைய அணிவகுப்பு அவனுக்கு திருப்தியாக இருந்தது. அதைவிடவும் அன்று புலிகளுடன் வெறும் கைகளுடன் மோத மூவர் இருந்தது அவன் மகிழ்ச்சியை அதிகரித்தது. காரணம்!

    திப்புசுல்தான் மதுவிலக்கில் தீவிரமாக இருந்தான். மைசூர் ராஜ்யத்தில் பகிரங்க மது விற்பனை இல்லை. ஆங்காங்கே மறைமுகமாக கடத்திக்கொண்டு வரப்படும் நாட்டுச் சரக்குடன், வெள்ளைக்காரர்களின் சீமைச் சரக்கும் விற்கப்படும். அவ்விதம் மது கடத்தி விற்பவர்கள் மாட்டிக்கொண்டால் விசாரணையின்றி புலிகளுக்கு தீனியாக்கப்படுவார்கள். அவர்களை புலிகள் பாய்ந்து சின்னா பின்னமாக்கும் காட்சியை கண் குளிரக் கண்டு மகிழும் எண்ணம்தான்! இந்த மதுவிலக்கு விஷயத்தில் திப்பு மிகவும் கண்டிப்புடன் இருந்தான்.

    அணிவகுப்பை சுற்றிக்கொண்டு முதல் வரிசைக்கு வந்தான் திப்பு. மல்லக ஜட்டிகளின் தலைவனான பொம்மு வீரண்ணாவுக்கு அடுத்து நின்ற உபதலைவன் பஸ்வன்னா கடும் குழப்பத்தில்லிருந்ததால் சுல்தான் பகதூர் தன்னருகே வந்ததையுணராமல் வழக்கமாக குனிந்து சலாம் செய்யாமல் வாளாயிருந்து விட்டதால் சினமடைந்த திப்பு,

    அரே பஸ்வண்ணா உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம். சுல்தான் பகதூர் வர்ரது தெரிஞ்சும் சலாம் செய்யலே என்று அவன் கையைப் பிடித்து இழுத்து மல்யுத்த முறையிலே வீசவே பஸ்வண்ணா மணலிலே குப்புற வீழ்ந்தான்.

    அவன் எழுவதற்குள் தனது பட்டாக் கத்தியை உருவிக்கொண்டு அவன் நெஞ்சின் மீது காலை வைத்து விட்டான் திப்பு. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட பூர்ணய்யாவும், வீரண்ணாவும் திகைத்து நிற்க. திவான் மீர்சடக் மட்டும் கண்களில் விஷமத்தனம் பளிச்சிட மனப்பூரிப்புடன், திப்புவை நோக்கி,

    சர்கார் இந்த பஸ்வண்ணாவை புலிங்களுக்கு தீனியா போட்டுடலாம். சர்க்காரோட பட்டாக் கத்தி புனிதமாகவே இருக்கட்டும் என்று தூண்டுகோல் போட்டான். அதில் வெகு காரணங்கள் புதைந்திருந்தது. அது மந்திரி பூர்ணய்யாவுக்கும், பொம்மு வீரண்ணாவுக்கும் தெரியும். பூர்ணய்யா முன்னே வந்து,

    சர்க்கார் மன்னிக்கனும் பஸ்வண்ணா மல்லக ஜட்டிகளிலே சிறந்த வீரன். ஒரு தடவை அவன் புலி வேட்டையிலே சர்க்காரோட உயிரைக் காப்பாத்தியிருக்கான்.

    அதுக்காக சுல்தானுக்கு சலாம் செய்யாம இருக்கலாமா! இது என்னை அவமானப் படுத்தற மாதிரிதானே.

    இல்லை ஹுசூர்! நிச்சயமாக இல்லே! பஸ்வண்ணாவுக்கு ஒரு பிரச்சனை அது அவன் மனசை குழப்ப, சர்க்கார் வந்ததை அவன் கவனிக்கலே

    இது வெறும் சப்பைக்கட்டு பூர்ணய்யா.

    இல்லை ஹுசூர் நான் சொல்றது நிஜம். அது விஷயத்தை சர்க்கார்கிட்டே தனியா சொல்லுறேன். எனக்காக பஸ்வண்ணாவை மன்னிச்சிடுங்க சர்க்கார் என்று பூர்ணய்யா திவான் மீர்சடக்கை பார்த்தவாறே கூறினார்.

    மீர்சடக்கிற்கு ஆத்திரம்! தானாக வந்த அருமையான சந்தர்ப்பத்தை இந்த மந்திரி கெடுத்துவிடுவான் போலிருக்கேன்னு. அத்துடன் பஸ்வண்ணாவின் குழப்பதிற்குண்டான காரணம் பூர்ணய்யாவுக்கு எப்படித் தெரியும். எவருக்கும் தெரியாமல் தானே செய்தோம் என்று எண்ணி, மேலும் விடாமல் மறுபடியும்,

    சர்க்கார், மந்திரி பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறார். சர்க்காருக்கு சலாம் செய்யாத யாரும் துனியாவிலே (உலகத்திலே) உசிரோட இருக்கக் கூடாது. இது அல்லாவையே அவமதிச்சது போலத்தான்.

    வேண்டுமென்றே மீர்சடக் அல்லாஹ் பெயரைக் குறிப்பிட்டான். இதுதான் திப்புவை கட்டுப்படுத்தும் மந்திரம். என்னதான் மற்ற மதத்தவர்களுக்கு திப்பு தொல்லைகளைக் கொடுக்கவில்லை என்றாலும்! அல்லாஹ் ஒருவரே உயர்ந்தவர் என்று மார்க்கத்தில் பற்றுடையவன்.

    திவான் நீ சொல்றது சரிதான். இருந்தாலும் மந்திரி வார்த்தைக்கும் மதிப்பு கொடுக்கணும். அவர் சொன்னதைப் போல பஸ்வண்ணா தெரியாம தப்பு செய்திருந்தா அல்லாஹ் அவனை காப்பாத்தட்டும் ஒரு குத்துவாளை மட்டும் அவன்கிட்டே குடுத்து புலி வட்டத்திலே விடுங்க. அவனே பிடிச்சுகிட்டுவந்த புலிகிட்டே சண்டை போட்டு அவன் ஜெயிக்கட்டும்.

    நியாயமற்ற தீர்ப்பு என்றாலும் திப்புசுல்தானின் முடிவை எதிர்த்துப் பேசும் தைரியம் யாருக்கு உள்ளது. எதிர்த்துப் பேசுபவர்களின் கதி புலிக்கூட்டத்தின் இடையில் நிராயுதபாணியாக நிற்பதுதான். ஏதோ இந்த அளவுக்கு ஒரு குத்து வாளாவது பஸ்வண்ணாவுக்கு கிடைத்தது. பஸ்வண்ணா நல்ல வீரன்தான் என்றாலும் மூன்று தினங்களுக்கு முன் வேட்டையில் அவனால் பிடித்து வரப்பட்ட புலியைப் பார்க்கும்போதே பயங்கரம். அதனுடன் மோதி வெற்றி காண்பதா. பஸ்வண்ணாவின் கதை முடிந்து விட்டது என்றே எல்லோரும் முடிவு கட்டிவிட்டார்கள்.

    அணிவகுப்பு கலைக்கப்பட்டது. புலி வட்டத்தைச் சுற்றி எல்லோரும் இடம் பிடித்தார்கள் அதில் அனுதாபப்பட்டவர்கள்தான் அதிகம். பட்டாளத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து இருந்தாலும், முஸ்லிம்களே அதிகம் அவர்களில் பலருக்கு மல்லக ஜட்டிகளின் பிரத்தியேக அதிகாரத்தில் கசப்பு இருந்தாலும் பஸ்வண்ணாவைப் பொறுத்தவரையில் அவன் நல்லவன் என்ற அபிப்ராயம் உண்டு. எனவே பஸ்வண்ணாவுக்கா இந்த கதி என்று மனதில் வருத்தப்பட்டார்கள்.

    முப்பது அடி ஆழமும் ஐநூறு அடி சுற்றளவும் உள்ள புலிவட்டம். மனிதனும், புலியும் மோதும் காட்சியைக் காண தயாராகிவிட்டது. இன்று ஒரே ஒரு புதுமை மட்டுமே! அது சிறு குத்துவாள்! நிராயுதபாணியாக இல்லாமல் சிறு குத்துவாளுடன் பஸ்வண்ணா புலிவட்டக் குழிக்குள் நின்றிருந்தான். அவன் மனதிலே இதற்கு காரணமான மீர்சடக்கின் மேல் அளவில்லாத குரோதமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டிருந்தது. அத்துடன் ஸ்ரீரங்கநாதா இந்த மைசூர் ராஜ்ஜியத்தை துரோகிகளிடமிருந்து காப்பாற்ற பூர்ணய்யாவுக்கு துணை செய்யும் தனக்கு வெற்றி அளிக்க வேண்டும் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டான்.

    பஸ்வண்ணாவின் வீரம் எத்தகையது என்று பூர்ணய்யாவுக்கும் பொம்மு வீரண்ணாவுக்கும் நன்கு தெரியும். ஏன் திப்பு சுல்தானுக்கும் மீர்சடக்கிற்கும் கூடத் தெரியும். அதனால்தான் மீர்சடக் பூர்ணய்யாவின் ஒரு கை போன்ற பஸ்வண்ணாவை ஒழிக்கத் திட்டம் போட்டான். அன்றைய மைசூர் அரசியல் சதுரங்கத்திலே திப்பு சுல்தானை வீழ்த்திவிட நடக்கும் சதிகளிலே திப்பு வீழ்ந்து விடக்கூடாது என்பதில் பூர்ணய்யா கவனமாக இருந்தார்.

    திப்புவை வீழ்த்திவிட்டு பழைய உடையார்கள் பரம்பரை அரசு கட்டில் ஏற வேண்டுமென்று, ஒரு முக்கியமானவருடன் இணைந்து செயல்பட்டாலும், அதற்குறிய காலகட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். சற்று அசந்தாலும் மீர்சடக் அரசைக் கைப்பற்றி விடுவான். அவனை முறியடிப்பது சுலபம்தான். என்றாலும் அவனிடம் அரசு போய்விடக் கூடிய அத்தனை நிலைகளையும் பூர்ணய்யா தகர்த்து வந்தார். ஹைதர் அலியிடம் நன்மதிப்பை பெற்றிருந்தது போலவே திப்புவிடவும் மிகச் சாதுர்யமாக நடந்து கொண்டிருந்தார்.

    இப்பபேர்பட்ட ஒரு சிக்கலான நிலைமையில் நல்ல வீரமும் திறமையும் உடைய பஸ்வண்ணாவுக்கு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் நிச்சயம் ஒரு கை உடைந்தது போலதான். இது மீர்சடக்கிற்கு சாதகமாகி விடும் என்பதால் மந்திரி பூர்ணய்யா மானசீகமாக ஸ்ரீரங்கநாதனிடம், பஸ்வண்ணாவின் உயிரைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்து கொண்டார். அவர் மட்டுமல்லாமல் வேறு பல நல்ல உள்ளங்களும்கூட ஸ்ரீரங்கா, ஸ்ரீரங்கா என்றும், அல்லாஹ் பிஸ்மில்லா என்றும் சொல்லிக் கொண்டேயிருந்தது.

    புலிவட்டக் குழியில் நின்றிருந்த பஸ்வண்ணா மன உறுதியுடன் நின்றிருந்தான். எத்தனையோ புலிகளை சாமர்த்தியமாகப் பிடித்தவன்தான். ஆனால் அதனுடன் தனியாக நேருக்கு நேர் மோதுவதென்பது இதுவரையில் ஏற்படாத புதிய அனுபவம். மீர்சடக் செய்த காரியத்தை நினைக்க, நினைக்க அவனுக்கு ஆக்ரோஷம் ஏற்பட்டது.

    திப்புசுல்தான் தனக்குரிய ஆசனத்தில் வந்து அமர்ந்ததும், எழுந்து நின்றவர்கள் அமர்ந்தார்கள். திப்பு கையை உயர்த்தியதும், புலிவட்டச் சுவற்றிலுள்ள இரும்பு கம்பிகளான கதவு திறக்கப்பட்டவுடன் பயங்கரமாக உறுமிக் கொண்டு புலி வெளியே பாய்ந்து வந்தது.

    ஆறு அடி நீளமுள்ள அந்த வரிப் புலி பாய்ந்து வந்த வேகத்தை கண்டதுமே பலர் நடுங்கி விட்டார்கள். திப்புவுக்குகூட, அதன் தோற்றம் சற்று கிலியை உண்டாக்கிவிட்டது. வரிப்புலியும், மனித புலியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள!

    2

    மல்லக ஜட்டிகளின் உபதலைவன் பஸ்வண்ணா தன் உயிருக்காக புலியை எதிர்க்க தயாராகிவிட்டான். அவனாக தயாராகிவிட்டான் என்று சொல்வதைவிட பழைய உடையார் ராஜ பரம்பரை மீதுள்ள விசுவாசம் அவனைத் தயாராக்கி விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

    பயங்கரமாக உறுமிக்கொண்டு வெளியே வந்த புலி தன் எதிரே நிற்கும் மனிதனைக் கண்டதும் பதுங்கியது. அதன் பதுங்களிலேயே அது பாயப் போகும் வேகத்தைக் கணக்கிட்டுக் கொண்ட பஸ்வண்ணா, புலி பாய்ந்தவுடன் குனிந்து சட்டென்று ஒதுங்கிக் கொண்டான். அதே வேகத்தால் பாய்ச்சல் வீணாகிப் போனதால் கீழே விழுந்த புலியின் மீது பாய்ந்து அதன் கழுத்தை ஒரு கையால் வளைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலது கையிலிருந்த கத்தியை பாய்ச்சுவதற்குள் புலி திமிரவே தூக்கி வீசப்பட்டான்.

    வேறு எவராக இருப்பினும் அந்த வீசலில் கீழே விழுந்து அடிபட்டிருக்க வேண்டியதுதான். ஆனால் மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்றவனாதலால், தனக்கு அடிபடாத வகையில் விழுந்ததோடு உடனே எழுந்து நிற்கவும் செய்தான். புலியின் போக்கில் மூர்க்கம் காணப்பட்டது. முதல் பாய்ச்சலில் தப்பினாலும் இனி தப்பிக்க முடியாது என்பது போல் அதன் பார்வை இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் நெஞ்சில் திகில்தான் நிரம்பியிருந்தது. மீர்சடக்கிற்கு மட்டுமே உள்ளூர மகிழ்ச்சி. திப்பு சுல்தானுக்கு, தான் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படவே செய்தது.

    மறுபடியும் பாய்ந்த புலியிடமிருந்து வாகாக விலகிய பஸ்வண்ணா தனக்கு மிக அருகாமையில் புலி விழுந்து எழுவதற்குள் பாய்ந்து தரையுடன் சேர்த்து அமுக்கிக் கொண்டான். ஒரே நேரத்தில் மூன்று பேரை சமாளிக்கும் ஆகிருதிதான் என்றாலும் புலிக்கு அவன் கணம் பெரிதாக இல்லை. சிலிர்த்தெழ முயற்சி செய்யவே கிடைத்த அவகாசத்தில் புலியின் வலது பின்னங்கால் தொடையில் குத்துவாளை ஆழமாக பாய்ச்சிவிட்டான்.

    குத்துப்பட்டதால் மேலும் ஆக்ரோஷமடைந்த புலி உருமிக்கொண்டு திமிரவே மறுபடியும் வீசியெறியப்பட்டான். குத்து வாளை கெட்டியாக பிடித்திருந்ததால் கையுடனே வாள் வந்து விட்டது. குத்துப்பட்டதால் சேர்ந்த வலியுடன் புலி அவன் மீது பாய்ந்துவிட்டது. பசுவண்ணாவின் கதை முடிந்துவிட்டதென்று ஐயோ வென்ற கூக்குரல் எழுந்தது. தன் மீது பாய்ந்த புலியை இடக்கையால் தடுத்தவனின் வலது கை, குத்து வாளை அந்தப் பெரிய கொடூரமான ஜீவனின் கழுத்தில் வாகாக இறக்கிவிட்டது.

    வலிதாங்காமல் புலி முன்னங்கால்களால் அறைந்ததால் பஸ்வண்ணாவின் இடது தோளில் பெரும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. மார்பிலும் புலியின் நகம் பட்டு நிறைய கீரல்கள். அனைத்தையும் பல்லைக் கடித்து சகித்துக் கொண்டு ஸ்ரீரங்கா என்று சொல்லியவாறே மேலும் இருமுறை புலியின் கழுத்தில் குத்துவாளைப் பாய்ச்சவே புலி துடித்து உயிரை விட்டது.

    எல்லோருக்குமே நிம்மதி. திப்புவுக்கும் பெரும் பாரம் குறைந்தது போல் இருந்தது. அல்லாவே பஸ்வண்ணாவைக் காப்பாற்றி விட்டதாக எண்ணி,

    "பூர்ணய்யா! பஸ்வண்ணா பலே ஆளுதான். அவனுக்கு ரெண்டாயிரம் *பகோடா கொடுத்து, வைத்தியர்கிட்டே அனுப்பு. அந்த மது வித்தவனுங்களை புலி வட்டத்திலே தள்ளிட்டு வந்து என்னை பாரு" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் திப்பு.

    சுல்தான் அரண்மனைக்குப் புறப்பட்டதும் பஸ்வண்ணாவை சிகிச்சைக்காக வைத்தியரிடம் அனுப்பிவிட்டு, கைதிகளை புலிவட்டத்தில் தள்ளவும் ஏற்பாடு செய்துவிட்டு சுல்தானைக் காணப் புறப்பட்டார் பூர்ணய்யா.

    திவான் மீர்சடக்கின் முகம் சிறுத்து விட்டது. பஸ்வண்ணாவை ஒழித்துவிட போட்ட திட்டம் தோல்வி. மேலும் பூர்ணய்யா பார்த்த பார்வை தான் செய்த வேலையை அறிந்து கொண்டது போலத் தோன்றியது. தளபதி யாசீன்கான் அருகில் வரவே,

    யாசீன் நாம் செய்த காரியம் எவருக்குமே தெரியாதே!

    தெரியாது ஹுசூர். நம்ம ஜும்ரா சிப்பாய்ங்க ரொம்ப கமுக்கமா செஞ்சிருக்காங்க.

    "பூர்ணய்யா ஒரு மாதிரியா பாக்கறான் யாசீன்.

    Enjoying the preview?
    Page 1 of 1