Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vijaya Deepam
Vijaya Deepam
Vijaya Deepam
Ebook155 pages1 hour

Vijaya Deepam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகத்தின் மகோன்னதமான சிறப்பை சேர, சோழ, பாண்டியர் வரலாற்றை ஊன்றிப் படிப்பதன் மூலம் அறியலாம். பிற்காலச் சோழரின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவன் விஜயாலயன். விஜயாலயனைப் பற்றிய கதையோ நாவலோ தமிழில் இல்லை என்ற குறையைப் போக்க பிற்கால சோழ சரித்திரத்தின் மூலத்தைப் பற்றி ஆய்வு செய்து இந்த நாவலை நூலாசிரியர் படைத்துள்ளார். ஏராளமான சுவையான உண்மைச் செய்திகளுடன் கற்பனை கலந்து சுவையான திருப்பங்களுடனும் நிகழ்வுகளுடனும் இந்தச் சரித்திர நாவல் படைக்கப்பட்டுள்ளது. நிருபதுங்கவர்ம பல்லவன், ப்ருத்விமாணிக்கம், விஜயாலயன், மாயப்பாண்டியன், வரகுண பாண்டியன் போன்ற சரித்திர நாயக நாயகியருடன் கற்பனைப் படைப்புகளான பிட்சு, விமலதேவி, குள்ள சிவம் ஆகியோர் படிப்போரது உள்ளத்தைக் கொள்ளை கொள்வர். படித்து மகிழலாம்; நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580151009863
Vijaya Deepam

Read more from S. Nagarajan

Related to Vijaya Deepam

Related ebooks

Related categories

Reviews for Vijaya Deepam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vijaya Deepam - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விஜய தீபம்

    (சரித்திர நாவல்)

    Vijaya Deepam

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாவது பதிப்பின் முன்னுரை

    1. இரண்டு நிலவுகள்

    2. மல்ல சபை

    3. இவரும் மன்னரே!

    4. பேரரசருக்குச் செய்த பெரும் பிழை

    5. பயங்கரியின் சபதம்

    6. மயங்கிய மங்கை

    7. குள்ள சிவத்தின் பயணம்

    8. ப்ருதிவிமாணிக்கம்

    9. கன்னியும் காவலும்

    10. கண்களின் சந்திப்பு

    11. பிட்சுவின் சதித்திட்டம்!

    12. பிட்சுவின் கெஞ்சல்

    13. பூம்புகார் காவல்!

    14. பாண்டியன் தந்த பிரமிப்பு

    15. பயங்கரியின் பரிசு

    16. புகார் போர்

    17. சிவிகைக்குள் இருந்த ஸ்படிகம்

    18. பிட்சுவின் போர்க்குரல்

    19. தஞ்சைப் போர்!

    20. நிசும்பசூதனி ஆலயம்

    21. முடிவுரை

    இரண்டாவது பதிப்பின் முன்னுரை

    தமிழகத்தின் மகோன்னதமான சிறப்பை சேர, சோழ, பாண்டியர் வரலாற்றை ஊன்றிப் படிப்பதன் மூலம் அறியலாம்.

    பிற்காலச் சோழரின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவன் விஜயாலயன்.

    ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றிய பல நாவல்கள், கதைகள் தமிழில் உண்டு.

    ஆனால் சோழர் எழுச்சிக்குக் காரணமாக அமைந்த விஜயாலயனைப் பற்றிய கதையோ நாவலோ இல்லை என்ற மனக்குறையில் சோழ சரித்திரத்தின் மூலத்தைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.

    ஏராளமான சுவையான செய்திகள் கிடைத்தன. அதன் விளைவே இந்த சரித்திர நாவல்.

    2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது நண்பர் திரு சுவாமிநாதனால் விநாயகா பப்ளிகேஷன்ஸ் மூலமாக அச்சிடப்பட்டு வெளி வந்தது. பின்னர் டிஜிடல் பதிப்பாக லண்டன் திருமதி நிர்மலா ராஜு தனது நிலா பப்ளிஷர்ஸ் மூலமாக இதை வெளியிட்டார்.

    ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில் அச்சுப் பதிப்பாகவும் மின்னணுப் பதிப்பாகவும் இதைப் படிக்க விரும்புவோரின் விருப்பத்திற்கிணங்க இந்த நாவல் இப்போது மீண்டும் வெளியிடப்படுகிறது.

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறுபதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நாவலைப் படித்துப் பாராட்டி தக்க ஆதரவைத் தந்த அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    நன்றி.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    10-5-2023

    1. இரண்டு நிலவுகள்

    வசந்த காலம்! சித்திரை மாதம். பௌர்ணமி தினம். சூரியன் அந்தி வானத்தில் மறைய பூரண சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களைப் பாலாய் பொழியத் தயாராகிக் கொண்டிருந்த சந்தியா காலம்.

    காஞ்சி மாநகரம் எழில் ததும்ப விழாக் கோலம் பூண்டிருந்தது. வானளாவிய மதில் சுவரும் ஆறு போல அகன்ற தெருக்களையும் சித்திர விசித்திர மாளிகைளையும் உடைய பல்கலை நகரம் எனத் தமிழ்ப் புலவர்கள் புகழ்ந்து வியந்த அதே காஞ்சி! விழாக் கோலம் ஆரவாரம். எங்கும் மகிழ்ச்சி; உற்சாகம்.

    நான்கு திசைகளிலும் இருந்த அகன்ற கோட்டை வாயில்கள் யார் வேண்டுமானாலும் உள்ளே தயங்காமல் வரலாம் என்பதைப் பறை சாற்றுவது போலத் திறந்து கிடந்தன.

    கோட்டையின் உச்சியில் பறந்து கொண்டிருந்த சிம்மக் கொடி காற்றிலே ஆடி அசைந்தது. வருக வருக என வருவோரை வரவேற்பது போல இருந்தது.

    புத்த பிட்சுகள், சமணர்கள், காபாலிகர்கள், வீர சைவர்கள், வைணவர்கள், பாசுபதர்கள், சாக்தர்கள், போர்வீரர்கள், குடிமக்கள் என்று மக்கள் கூட்டம் சாரிசாரியாகச் சாலை வழியே வந்து கொண்டிருந்தது.

    இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தவாறே விஜயாலயன் கோட்டைக்குள்ளே மதில் சுவரை ஒட்டி இருந்த துர்க்கை அம்மன் கோவிலின் வாயிலில் நின்று கொண்டிருந்தான்.

    இருபத்திநான்கு வயதிருக்கும். அசாதாரணமான ஒளி சிந்தும் கண்கள், அற்புதமான வீர வதனம், திரண்ட தோள்கள். உரமேறிய கைகள். அளவெடுத்த உடல் அமைப்பு.

    அவன் அருகே சென்றோர் ஒரு கணம் வைத்த விழி எடுக்காமல், அவனைப் பார்த்து விட்டு ஒருமுறை பார்த்தது போதாது என்று இன்னும் பலமுறை பார்த்தவண்ணம் இருந்தனர்.

    தோளிலே சிறிய கம்பும் அதிலே முடிந்திருந்த சிறு துணி முடிப்பும் அவன் வெளியூரிலிருந்து வந்ததைச் சுட்டிக் காட்டின.

    தன்னைப் பார்த்து ரசித்தோரை இதழ்களில் ஒரு புன்னகை நெளிந்தோட அவன் பார்த்தான்.

    திடீரென்று கோவில் அருகே சலசலவென சத்தம் கேட்கவே விஜயாலயன் சத்தம் வந்த திக்கை நோக்கினான். அங்கே அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட சிவிகைகள் இரண்டு வந்து கொண்டிருந்தன.

    யாரோ அரசகுல மகளிர் வருகிறார்கள்போல இருக்கிறது என்று எண்ணிய விஜயாலயன் கோவிலின் உள்ளே கர்ப்பகிரகம் அருகே சென்றான்.

    ஆனால் சில நொடிகளிலேயே கூட்டம் முழுதும் கோவிலுக்கு உள்ளே வரத் துவங்கியதும் அவன் திகைத்தான்.

    கூட்டத்தில் ஒருவருக்கொருவர் பேசியதிலிருந்து சிவிகையில் கொடும்பாளூர் வேளாளரின் குலக்கொழுந்தான விமல தேவி என்னும் பேரழகு படைத்தவளை பல்லவப் ப்ருத்விமாணிக்கம் தன் சொந்தப் பெண்ணைப்போல வளர்க்கிறார் என்றும் வருகின்ற சேனை வீரர்கள் பாதுகாவலர்களைப் பார்த்தால் பல்லவ பட்டமகிஷியாரே கோவிலுக்கு அவருடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் விஜயாலயன் அறிந்து கொண்டான்.

    வருகின்ற பல்லவப் பேரரசியையும், பேரழகி விமலதேவியையும் பார்க்கவே கூட்டம் கோவிலுக்குள் நுழைகிறது என்பதும் அவனுக்குத் தெளிவாகியது.

    யார் கண்ணிலும் படாமல் ஒதுங்க நினைத்து கோவிலுக்குள் வந்தால் அங்கேயே மொத்தக் கூட்டமும் வந்து விட்டதே!

    அவன் துர்க்கை சந்நிதியில் பயபக்தியுடன் துர்க்கையை வணங்கி நின்றான்.

    காவல் வீரர்கள் கோவிலுக்குள் சந்நிதியில் இருந்தவர்களை அப்படியே இருக்க வைத்து விட்டு வெளியில் இருந்த கூட்டத்தை அகற்றத் தொடங்கினர்.

    சிவிகைகள் கோவில் வாசலில் இறக்கி வைக்கப்பட்டன.

    அதிலிருந்து மக்கள் எதிர்பார்த்தபடியே பல்லவப் பேரரசி ப்ருத்விமாணிக்கமும், அவருடன் எழில் கொஞ்சும் ஆரணங்கான விமலதேவியும் வெளி வந்தனர்.

    விமலதேவியின் எழிலைப் பார்த்த சந்திரனின் பிரகாசம் குறைந்தது. வெட்கப்பட்ட சந்திரன் மேகங்களினூடே ஒரு கணம் மறைந்தான்.

    பளீரென மின்னல் வீசியது போன்ற உணர்வை விஜயாலயன் உணர்ந்தான். ஒரே சமயத்தில் எப்படி இரு நிலவுகள் தோன்ற முடியும்?

    சாந்தமான முகத்துடன் தெய்வீகக் களையுடன் பேரரசி ப்ருத்விமாணிக்கம் மெதுவாக நடந்து வர இளமைத் துள்ளலுடன், தன் மான் போன்ற கண்களை நாலாபுறமும் ஓடவிட்டவாறே விமலதேவி நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு கணம் விமலதேவியின் பார்வை விஜயாலயன் மீது பட்டு நின்றது.

    அற்புதமான அந்த வாலிபனை நன்கு பார்த்த விமலதேவி திடீரென்று வெட்கப்பட்டுத் தன் பார்வையை வேறு திசையில் செலுத்தினாள்.

    இதைக் கண்ட பேரரசி விமலதேவியின் பார்த்த திசையிலிருந்த விஜயாலயனைப் பார்த்தாள். பல்லவ தேசத்தில் இப்படிப்பட்ட பிள்ளைகள் இருப்பதால்தான் இதன் புகழ் பெருகிப் பரவுகிறது என்று நினைத்த அவர் விமலவல்லி வெட்கப்பட்டு பார்வையை மாற்றியதைக் கவனித்தார்.

    பருவ வயதில் இந்த மனம் என்ன பாடுபடுகிறது என்று நினைத்த பேரரசி, அடி பெண்ணே! இந்த தேவியின் வரலாறு தெரியுமா? என்றார்.

    அரசியாரின் கையைப் பிடித்துக்கொண்ட விமலாதேவி சொல்லுங்கள் கேட்கிறேன் என்று கெஞ்சினாள்.

    சும்பநிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தனர். பிரம்மாவிடம் யாராலும் சாகடிக்கப்படக்கூடாது என்று கோரிய அவர்கள் பெண்ணைத் தவிர யார் மூலமும் மரணம் வரக்கூடாது என்று வரமும் வாங்கினர்.

    இடைமறித்த விமலாதேவி கோபமான குரலில். பெண் என்றால் இளப்பமா என்ன? என்றாள்.

    அப்படிக் கேள், என் கண்ணே! நீ கோபப்பட்டபடியே தன் சக்தியைக் காண்பிக்க ஈஸ்வரியே காளியாக அவதரித்தாள். பேரழகுடன் தோன்றிய அவளை மணக்க விரும்பிய அசுரரிடம் தன்னைப் போரில் வென்றால் மணக்கிறேன் என்று நிபந்தனை இட்டாள். பெண் தானே என்று போரிட வந்த சும்ப நிசும்பரை அழித்தாள் தேவி. அந்த தேவியின் உருவமே இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

    ஆஹா! அற்புதமான கதை! என்றாள் விமலவல்லி.

    நன்றாக வேண்டிக்கொள்! ஒரு நல்ல வீரபுருஷனான அரசன் உனக்குக் கணவனாக வர வேண்டும் என்று வேண்டிக்கொள் என்று அரசி சீண்டவே, விமலதேவி அரசியைப் போங்கள் என்று வெட்கத்துடன் செல்லமாகக் கட்டிக் கொண்டாள்.

    டாண் டாண் என்று மணி அடிக்கவே தீபாராதனை துவங்கியது. அதே சமயம் கண்டாமணியின் மேலிருந்த புஷ்பங்கள் இரண்டு மணி அசைந்து ஆடிய வேகத்தில் பறந்து வந்தன.

    ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1