Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhakku Mandrathukku Vandha Deivangal!
Vazhakku Mandrathukku Vandha Deivangal!
Vazhakku Mandrathukku Vandha Deivangal!
Ebook172 pages48 minutes

Vazhakku Mandrathukku Vandha Deivangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்தர்கள் தெய்வத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும், தெய்வம் பக்தர்கள் மீது கொண்டுள்ள அன்பும் கருணையும் அலாதியானவை. அல்லும் பகலும் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் தன் பக்தனுக்கு ஓர் இன்னல் என்றால், தெய்வம் சும்மா இருக்குமா? அப்படி, அருணகிரி-முருகன், ஆதிசங்கரர்-சரஸ்வதி, சுந்தரமூர்த்தி நாயனார்-சிவபெருமான், பாவாஜி-வேங்கடவன், கச்சியப்பர்-முருகன், தருமி சிவன், தாமாஜி-விட்டலன், பவபூதி-சரஸ்வதி, திருநீலகண்டர் - சிவன், யமுனை கண்ணன், திரௌபதி - கிருஷ்ணன், பிரகலாதன் திருமால், சங்கரர் - லஷ்மி தேவி, கம்பர் கலைவாணி என்று பக்தர்களுக்காக வழக்குமன்றத்துக்குத் தெய்வங்கள் வந்த கதைகள் மிகவும் சுவாரசியமானவை.

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580158910563
Vazhakku Mandrathukku Vandha Deivangal!

Read more from Kalki Kuzhumam

Related to Vazhakku Mandrathukku Vandha Deivangal!

Related ebooks

Reviews for Vazhakku Mandrathukku Vandha Deivangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhakku Mandrathukku Vandha Deivangal! - Kalki Kuzhumam

    A drawing of an elephant holding a book and a lotus flower Description automatically generated

    வழக்குமன்றத்துக்கு வந்த தெய்வங்கள்

    அருண் சரண்யா

    C:\Users\Mm2\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\Kalki Group_Without_Year_Tamil.jpg

    https://kalkionline.com/

    அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வழக்குமன்றத்துக்கு வந்த தெய்வங்கள்

    Vazhakku Mandrathukku Vandha Deivangal!

    Author:

    அருண் சரண்யா

    Arun Saranya

    Illustrations:

    வேதகணபதி (வேதா)

    Source:

    கல்கி களஞ்சியம்

    Publisher:

    கல்கி குழுமம்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalki-novels

    பொருளடக்கம்

    1. அருணகிரிக்கு அருளிய ஆறுமுகன்!

    2. நீதி சொன்ன நாமகள்!

    3. சாட்சிக்கு வந்த கோபாலன்

    4. அடிமையின் தொண்டன்!

    5. வேழமாய் வந்த வேங்கடவன்!

    6. சபையில் நடந்த நாடகம்!

    7. இலக்கணம் காட்டிய இளமுருகன்!

    8. நெற்றிக் கண் திறந்தது!

    9. பொருள் தந்தான்; அருள் புரிந்தான்!

    10. அலட்சியம் செய்தார்; அமிர்தத்தை இழந்தார்!

    11. ஒரு சொட்டுத் தேன்துளி!

    12. இளமை திரும்பியது!

    13. கௌதமி பிறந்தாள்!

    14. சாட்சி சொன்ன தாழம்பூ!

    15. அடங்கிய வெள்ளம்!

    16. காண்டீபனுக்கு வந்த கர்வம்!

    17. அபயம் அளித்த அச்சுதன்!

    18. வரம் பாதிக்காத வதம்

    19. தங்க மழை பொழிந்தது!

    20. சிலம்பால் பெற்ற சிறப்பு

    1. அருணகிரிக்கு அருளிய ஆறுமுகன்!

    சூழும் இருளைத் துரத்தி அடிக்கும் அக்னித்தலம். கோபுரத்தின் மீது ஏறி நின்ற அந்த இளைஞன் மனத்தில், துன்பம் மட்டுமே சூழ்ந்து இருந்தது.

    பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோயிலுக்குப் பல கோபுரங்கள். அவற்றில் ஒன்று வல்லாள மகாராஜன் கோபுரம். அதை எழுப்பிய மன்னன் பெயரால் அறியப்பட்ட கோபுரம். அதன்மீது நின்ற இளைஞனின் பெயர் அருணகிரி. வாழ்க்கையில் அவன் புரிந்த தவறுகள் ஒன்றா, இரண்டா?

    முத்து என்ற பெயர் கொண்ட தாசியின் வயிற்றில் பிறந்தவன் அருணகிரி. அவனுக்கு ஆதி என்ற பெயரில் ஒரு மூத்த சகோதரியும் இருந்தாள்.

    ஏழு வயதானபோது முத்து இறந்தாள். இறப்பதற்கு முன் மகளை அருகில் அழைத்தாள். ‘அருணகிரியின்மீது தொடர்ந்து நீ பாசத்தைப் பொழிய வேண்டும். அவனது மகிழ்ச்சிதான் உன் வாழ்க்கையின் முக்கிய லட்சியமாக இருக்க வேண்டும்’ என்று உறுதிமொழி பெற்றாள். அதன் பின்னரே அவளது சுவாசம் நின்றது.

    அருணகிரி சிறுவனாகவே இருந்தவரை சகோதரிக்கு எந்த பிரச்னையும் இல்லை. இனிப்பான தின்பண்டங்கள், எளிய உடை இவற்றிலேயே திருப்தி அடைந்தான். ஆனால், அவன் இளைஞன் ஆனவுடன் நிலைமை மாறியது.

    இளமையில் மனச் சலனங்கள் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவன் சலனங்களை மனத்தோடு வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. உடல்வேட்கை தீர, விலை மாதரை நாடினான். தீரக்கூடிய வேட்கையா அது? அக்காள் இதுகுறித்து அறியாமல் இல்லை. ஆனால், அவள் அறிவுரையைக் கேட்க அருணகிரி தயார் இல்லை.

    வீட்டில் உள்ள பணத்தை எல்லாம், அக்காவுக்குத் தெரிந்தும் தெரியாமலும், கையாடத் தொடங்கினான். நாட்கள் கடந்தன. தவறான உறவுகளில் சுகத்தோடு சோகமும் தானே வரும்! அருணகிரி நோய் வாய்ப்பட்டான்.

    ஒருநாள்...

    தம்பியின் முகத்தில் காணப்பட்ட வருத்தத்தைப் பொறுக்க முடியாமல், என்னடா செய்வது? வீட்டில் பணமே இல்லை. அதனால்தான் உனக்கு விருந்து படைக்க முடியவில்லை என்றாள்.

    அதைவிடு. எனக்கு உடனடியாக பெண் சுகம் வேண்டும். வீட்டிலோ கால் பணமும் இல்லை. அதுதான் துக்கமாக இருக்கிறது என்றான்.

    சகோதரி அதிர்ச்சி அடைந்தாள். ஒரு தம்பி பேசும் பேச்சா இது? கொதித்தாள். வெறிபிடித்தாற்போல் கத்தினாள்: பரத்தையருக்கு அளிப்பதற்கு நம் வீட்டில் பொற்காசு இல்லை. ஒரேயொரு மாற்று வழிதான் உள்ளது. நாம் இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம் தந்தை ஒருவராக இருக்க வாய்ப்பில்லை. தாயின் குலவழக்கம் அப்படி. எனவே என்னை அடைந்து முடிந்த சுகத்தைப் பெற்றுக்கொள்.

    அருணகிரிக்கு அளவிட முடியாத அதிர்ச்சி. தனது கேவலமான வாழ்க்கை இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. அண்ணாமலையாரின் கோயிலை நோக்கி ஓடினான். கோபுரத்தின்மீது ஏறினான்.

    ஆறுமுகப் பெருமானே, பெரும் பாவங்களைப் புரிந்துவிட்டேன். ஆறாத் துயரத்தில் இருக்கிறேன். இனியும் உயிர்வாழ விருப்பம் இல்லை என்று கூறியபோது, அவன் உடல் நடுங்கியது. ஆம். அவன் கோபுரத்தின்மீது ஏறியது, தற்கொலை செய்துகொள்ள.

    கோபுர உச்சியிலிருந்து குதித்தான். புவிஈர்ப்பு அவனைக் கீழே இழுத்தது. ஆனால்... ஆனால்... அவன் உடல் பூமியைத் தொடவில்லை. முருகப்பெருமான் அவனைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார்.

    எனக்கா இந்தப் பேரருள்? அருணகிரியின் தொண்டையிலிருந்து ஒரு விம்மல் வெடித்தது.

    பெருமானே... நான் வாழத் தகுதியற்றவன் என்றபோது, அவர் கண்களிலிருந்து நீர் இடையறாமல் வெளிவரத் தொடங்கியிருந்தது.

    எதனால்?

    என் இறந்த காலம் அவலமானது. அவமானங்கள் நிறைந்தது.

    அதைவிடு. உன் வருங்காலம் பொருள் மிக்கதாக இருக்கும்.

    பொருள்மீது உள்ள பற்று நீங்கி விட்டது ஐயனே என்றபடி தலைகுனிந்தான்.

    நான் அர்த்தம் மிகுந்த வாழ்க்கை என்ற பொருளில் கூறினேன் என்று புன்னகையுடன் பதிலளித்தார் முருகப்பெருமான்.

    அருணகிரிநாதர் முகத்தில் ஆனந்த பரவசம். எனக்காகவா இங்கு எழுந்தருளினீர்கள்?

    இங்கு மட்டுமா? உனக்காக அரச மன்றத்துக்குக்கூட வருவேன்.

    என்ன கூறுகிறீர்கள்?

    உரிய காலத்தில் விளங்கும்.

    அருணகிரியின் வாயைத் திறந்த முருகப்பெருமான், தன் வேலினால் அவன் நாக்கில் பிரணவத்தை எழுதினார். ஜபமாலை ஒன்றை அணிவித்தார். பின் ஜோதியாய் மறைந்தார். அருணகிரிநாதர் குமரனின் புகழ் பாடத்தொடங்கினார்.

    ‘முத்தைத்தரு பத்தித்திரு நகை அத்திக்கிறை சக்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர என ஓதும்!’ என அவர் பாடப்பாட, அவர் உடலைப் பற்றிய நோய் ஓடியது. அன்று முதல் அருணகிரிநாதரின் தோற்றத்தில் ஒரு மாறுதல். நெற்றியில் திருநீறு. கழுத்திலே முருகன் வழங்கிய ஜபமாலை. கோவணம் மட்டுமே உடை.

    அருணகிரிநாதரின் புகழ் பரவியது. அது மன்னன் பிரபுடதேவராஜனின் காதுகளையும் எட்டியது.

    அந்த நாட்டில் வசித்த பண்டிதர் ஒருவருக்கு இது மகிழ்ச்சியைத் தரவில்லை. தன்னை ஒரு மாபெரும் தேவி உபாசகர் என்று காட்டிக்கொண்டவர் அவர். தனக்கு தேவி தரிசனம் அளிப்பதாக கூறி மற்றவரின் மதிப்பைப் பெற்றவர். அந்த மற்றவரில் மன்னனும் ஒருவன்.

    பண்டிதரே, அருணகிரிநாதர் குறித்து கேள்விப்பட்டீர்களா? அவரை நம் அரசவைக்கு அழைத்து கௌரவித்தால் என்ன? என்றான் மன்னன் ஒருநாள்.

    சாமர்த்தியமாகச் செயல்பட்டார் சம்மந்தாண்டார். (அதுதான் அந்தப் பண்டிதரின் பெயர்) மனத்தில் பொங்கிய பொறாமைத் தீயை மறைத்துக் கொண்டார்.

    நிச்சயம் கெளரவிக்கலாம். அப்படியே அவருக்குக் கிடைத்த முருகப்பெருமானின் தரிசனம் உங்களுக்கும் கிடைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளலாம்.

    மன்னன் கண்களாலேயே பண்டிதரைப் பாராட்டினான். திருவண்ணாமலை ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அவரை வரச்செய்தான் மன்னன்.

    பண்டிதரும் வந்திருந்தார். ‘இன்றோடு அருணகிரியின் புகழ் ஒடுங்கிவிடும்’ என்ற வஞ்சக எண்ணம் பண்டிதரின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

    அருணகிரிநாதரை வாய் நிறைய வரவேற்ற மன்னன், அவரை அமரச்செய்தான். அருகிலேயே

    Enjoying the preview?
    Page 1 of 1