Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindutwa Sirukathaigal
Hindutwa Sirukathaigal
Hindutwa Sirukathaigal
Ebook238 pages2 hours

Hindutwa Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதி வரும் தீவிரமான எழுத்தாளர். இவரது கட்டுரைகள் தொடர்ந்து விவாதத்தை எழுப்பியவண்ணம் உள்ளவை.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580118802081
Hindutwa Sirukathaigal

Related to Hindutwa Sirukathaigal

Related ebooks

Reviews for Hindutwa Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindutwa Sirukathaigal - Aravindan Neelakandan

    http://www.pustaka.co.in

    ஹிந்துத்துவ சிறுகதைகள்

    Hindutwa Sirukathaigal

    Author:

    அரவிந்தன் நீலகண்டன்

    Aravindan Neelakandan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/aravindan-neelakandan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நன்றி

    www.tamilhindu.com

    பொருளடக்கம்

    அமுதம்

    தமஸோமா…

    கரங்கள் (அறிவியல் புனைகதை)

    கல் (அறிவியல் புனைகதை)

    சுமைதாங்கி

    யாதுமாகி…

    விலக்கப்பட்ட மலர்

    சாட்சி

    பால்

    மதம்

    திருப்பலி

    இனிப்பு

    அமுதம்

    யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!

    கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின்வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின்ஒலிகள் அடுத்த சில நொடிகளுக்கு நிசப்தமாகி மீண்டபோது அவைதாறுமாறான கீச்கீச்சுகளுடன் சிறகடிக்கும் படபடப்பொலிகளாக மாறியிருந்தன.பச்சை போர்த்திய மர உச்சிகளின் மேல் இளநீல வெளியில் பறவைகள் விரிந்துசிதறின.

    காலை அப்போதுதான் மெதுவாகப் பரந்துகொண்டிருந்தது.

    ஆதியமலப் பிரானய்யங்கார் என்கிற திருவடிப்பிள்ளை ஊருக்குஒதுக்குப்புறமான அந்தக் காணியில் அமைந்திருந்த மண் குடிலின் உள்ளிருந்துவாசலுக்கு வந்தார். நெற்றியில் திருமண், காதுகளில் துளசி இலைகள். மிகவும்மெலிந்த தேகத்தில் கண்கள் மட்டும் தீர்க்கமான தெளிவுடன் இருந்தன.கருமையான உடலில் எளிய பருத்தி வெள்ளை அங்கவஸ்திரம்.

    அவரை அழைத்த காளிங்கன் கட்டுமஸ்தான உடலுடன் கையில் வேலுடன்நின்றிருந்தான். அச்சுத ராமராயரின் அந்தரங்கச் சேவகன். விஜயநகர வீழ்ச்சிக்குப்பிறகு தென்பாண்டி மண்டலத்தில் சிற்றரசர்களாகக் கோலோச்சும் பல நாயக்கதளபதிகளில் அச்சுத ராமராயர் முக்கியமானவர். அவர் ஆள் அனுப்பியிருக்கிறார்என்றால் விஷயம் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

    வரவேணும். அடியேன் குடிலுக்கு எழுந்தருளியது அடியேன் பாக்கியம்.இப்போதான் நித்யானுஸந்தானத்தை முடிச்சேன். ஒரு நிமிஷம் இருங்கோ.தீர்த்தமும் துளசி பத்ரமும் வாங்கிக்கோங்கோ…

    இடைமறித்தான் காளிங்கன்.

    விளையாடுகிறீரா? தொழுவக்குடிகளை தர்மானுசாரங்களுக்கு எதிராக கலகம்விளைவிக்கத் தூண்டியிருக்கிறீரென்று உம்மை உடனடியாக அழைத்து வரஆணையாகியிருக்கிறது ஓய். பிராமணர் என்றுகூட பார்க்காமல், உடனேவராவிட்டால் பிணைத்து அழைத்து வரவும் உத்தரவாகியிருக்கிறது.

    பிரானய்யங்காருக்குப் புரிந்தது. திருமலையாப்பிள்ளை விவகாரம் வெளியிலேவந்துவிட்டது. எம்பெருமான் விளையாடுகிறான்.

    இதோ வருகிறேன். சொந்த சக்தியிலேயே வந்துவிடுகிறேன். உங்களுக்கு ஏன்சிரமம்? விண்ணகர அமுதத் தடாகம்தானே...

    ஓம் என்று உறுமியபடி குதிரையில் தாவி ஏறினான் அவன்.

    தென்னந்தோப்புகள் ஊடே பாம்பாக நெளிந்த பாதைகள் வழியாகவும் பின்னர்மாட்டுவண்டித் தடத்தின் செம்புழுதித் தடவீதி வழியாகவும் குதிரையைப்பின்தொடர்ந்து நடந்தார், பிரானய்யங்கார்.

    விண்ணகர அமுதத் தடாகம்.

    அமுதத் தடாக மண்டபம் வந்துசேரும்போது முன்மதியம் வந்து வெயிலேறஆரம்பித்துவிட்டது.

    அமுதத் தடாகம் வழக்கம் போலவே வறண்டு இருந்தது.

    கருடன் அமுதத்தைக் கொண்டு இந்த வழியாக ஆகாய மார்க்கமாக வந்தபோதுஇந்திரன் கருடன் மீது வஜ்ஜிரத்தை வீசினான். வஜ்ரம் வருவதைக் கண்டகருடன் உடனே விஷ்ணுவை தியானம் செய்ய, விஷ்ணு அவனுக்காகஎழுந்தருளி வஜ்ராயுதம் அவனுடைய சிறகில் ஒரு தூவலை மட்டுமேவிழும்படியாகச் செய்தருளினார். அது சமயம் அமிர்த கலசம் சிறிதே அசையஅதிலிருந்து ஒரு துளி இங்கு விழுந்து ஒரு தடாகமாகிவிட்டது. ஆகா இனிஉலகில் சாவே இல்லாமல் ஆகிவிடுமே என்று கருடன் மீண்டும் விஷ்ணுவைவேண்ட அந்தத் துளி மீண்டும் அப்படியே அமிர்த கலசத்துக்குள் போய்விட்டது.அன்றிலிருந்து எத்தனையோ மழை வந்தாலும் இந்தத் தடாகம் வறண்டேதான்இருக்கும். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறான். அவன்திருநாமம் புள்ளுக்கருளிய ஸ்ரீ தேவி பூதேவி சமேத புள்ளியூர் விண்ணகர நம்பி.

    தடாகத்தின் கிழக்குப் பகுதியில் அந்தக் கல்மண்டபம் இருந்தது. அதற்குவெளியே ஐவர் குடை பிடிக்க, அந்த நிழலில் அந்தணாளர்கள் கூட்டமாகநின்றுகொண்டிருந்தனர்.

    அவர்களுக்கு சிறிது தூரத்தில் மரியாதையுடன் அகத்துடையார்கள்நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இரு சேவகர்கள் குடைபிடித்துக்கொண்டிருக்க, பெரும்பாலானோருக்கு அந்த நிழல் போதுமானதாகஇல்லாமல் வெயிலுக்கும் நிழலுக்குமாக முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

    பதினாறு கல்தூண்களிலும் கருடன் கலசத்துடன் வரும் காட்சிகளும் இந்திர கர்வபங்கமும் காட்டப்பட்ட அமுதத் தடாக மண்டபத்தில் மையமாக பட்டு ஜரிகைபோர்த்திய மர ஆசனம் போடப்பட்டு அதில் அச்சுத ராமராயர் அமர்ந்திருந்தார்.அவருக்குப் பின்னால் மண்டபத்துக்கு வெளியே இருபது வீரர்கள் பூரணஆயுததாரிகளாக நின்றுகொண்டிருந்தார்கள். சற்று தொலைவில் ஒரு வெள்ளைக்குதிரையை இரு சேவகர்கள் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அச்சுதராமராயருடன் புள்ளியூர் நம்பி விண்ணகர தலைமை பட்டரும் வந்திருப்பதுதெரிந்தது. சிவப்பான உடலில் உயர்தரப் பட்டு அங்கவஸ்திரம் பூணூலுக்குமேலாகப் படர்ந்து, வெயிலில் இங்கு வரை பிரகாசித்தது.

    அச்சுத ராமராயருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கட்டுமஸ்தான உடலில்ஆங்காங்கே விழுப்புண் தழும்புகள். உடலின் மீது பட்டு அங்கவஸ்திரம்அநாவசியமாகக் குறுக்காகக் கிடந்தது. தங்க ஆபரணங்கள் மின்னின.நெற்றியில் திருமண் தீர்க்கமாக இருந்தது. கண்கள் குறுகி ஏறக்குறையகோடுகளாக மாற அவர் பிரானய்யங்கார் வருவதையே கூர்மையாகப்பார்த்துக்கொண்டிருந்தார்.

    மண்டபத்துக்கு வெளியே ஒரு மரத்தூண் ஏற்படுத்தி அதில் இருபத்தைந்துவயதான ஓர் இளைஞன் கட்டப்பட்டிருந்தான். அவன் தலையில் புழுதிபடிந்திருந்தது. உடலெங்கும் ஆங்காங்கே தோல் உரிந்துதொங்கிக்கொண்டிருந்தது. அழுக்கான ஒரு கோவணத்தைத் தவிர வேறெந்தஆடையும் அவன் அணிந்திருக்கவில்லை. அருகே புளியம் விளாறுகளுடன்வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவ்விளாறுகளில் ஆங்காங்கே சதைத்துணுக்குகள் ஒட்டியிருந்தன.

    பிரானய்யங்காரைக் கண்டவுடன் அந்த இளைஞனின் தலை ஒரு நொடி நிமிர,இருவர் கண்களும் சந்தித்தன. மீண்டும் அவன் தலை தொய்ந்து கவிழ்ந்தது.அந்த இளைஞன் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை தவழ்வதாகத்தோன்றியது அவருக்கு.

    பிரானய்யங்கார் கண்களில் நீர் நிரம்பியது.

    காளிங்கன் கல்மண்டபத்துக்கு வெளியே நின்று அரைவரை குனிந்து, திருமேனி திருவுளப்படி ஆதியமலப் பிரானய்யங்காரை அழைத்துவந்திருக்கிறேன் அடியேன் என்று தண்டம் சமர்ப்பித்தான்.

    அதைப் புறக்கணித்து பிரானய்யங்காரின் வணக்கங்களை எதிர்பார்த்து அச்சுதராமராயரின் முகம் உயர்ந்தபோது -

    பிரானய்யங்கார் அந்த இளைஞன் முன்னாக சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கிக்கொண்டிருந்தார்.

    பிராமணர்கள் நின்ற பகுதிகளிலிருந்து ‘ஹா ஹா’காரங்கள் வெளியாயின. ‘குலத்துரோகி’ என ஒரு பருமனான வயோதிக பிராமணர் சப்தமாகவேசொன்னார். அவர் காதுகள் சிவந்து வெடவெடத்தன. தொடர்ந்து ‘நீசன்’,‘பாஷாண்டக்காரன்’ என வசைகள், வாய்களுக்குள் ஒலிக்க ஆரம்பித்தன.ஆனால் அவை அச்சுத ராமராயர் காதுகளில் விழும்படியான உத்தேசத்துடன்கூறப்பட்டன.

    அச்சுத ராமராயரின் முகத்திலும் சினம் படர்ந்தது. ஆனால் ஒரே நொடிக்குள்ளாகஅது வெளிக்குத் தெரியாமல் அடங்கியது. என்ன இருந்தாலும் பிராமணர்.ஆத்திரம் கொண்டால் கதை வேறுமாதிரி ஆகிவிடும். இன்றில்லாவிட்டாலும்இன்னொரு நாள். அவர் கண்கள் இப்போது அகத்துடையார்கள் பக்கமாகச்சென்றது.

    அகத்துடையார்கள் கண்களில் வெறி உக்கிர உச்சமாகத் தாண்டவமாட அவர்கள்தங்களை கஷ்டப்பட்டு அடக்குவது தெரிந்தது. அச்சுத ராமராயரின் முகம்உடனடியாக திருப்தி அடைந்து, முகத்தில் புன்முறுவலின் முதல் வரி தொடங்கி,அதுவும் அடங்கியது. கற்சிலைக்கொப்ப அவர் அமர்ந்திருந்தார்.

    பிரானய்யங்கார் மண்டபத்துக்குள் காலடி வைக்க முற்பட்டபோது காவலன்வேல் அவரைத் தடுத்தது.

    அங்கேயே நிற்க வேணும். நீர் மண்டபத்துக்குள் பிரவேசிக்குமளவுஆசாரசீலரல்ல ஆசாரஹீனராகிவிட்டீர் என்பது இவ்விண்ணகர பூசுரர்களானவேத விற்பன்னர்கள் அபிப்பிராயம்! என ஓர் அதிகாரி சொன்னார்.பிராமணர்கள் கூட்டத்திலிருந்து ஆமோதிக்கும்விதமாக ஒலிகள் கிளம்பின.பிரானய்யங்கார் எவ்வித மாற்றமும் காட்டாத முகத்துடன் அக்கல்மண்டபத்தின்வெளியிலேயே நின்றார்.

    வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

    அச்சுத ராமராயரின் குரல் கேட்டதும் அங்கிருந்த அத்தனை ஒலிகளும்அடங்கின.

    பிரானய்யங்கார், நீர் உயரிய பிராமணோத்தமர்களின் குலத்தில் வந்தவர்.உம்முடைய பாட்டனார் வைணவ திவ்ய கிரந்தங்களுக்கு அருளிய பாஷ்யங்கள்இன்றும் பிரசித்தம். நீரும் சிலகாலம் முன்னால்வரை மிகுந்த ஆசாரசீலராகவேஇருந்திருக்கிறீர். அப்படி இருக்க நீர் சாதியனுஷ்டானங்களை மீறி இப்படிமிலேச்சரினும் கீழாக, தொழுவக்குடிகளுடன் சல்லாபித்தமைக்கும் அவர்களைஇவ்விண்ணகரத்துக்குள் பிரவேசிக்கச் செய்தமைக்கும் என்ன நியாயம்சொல்லப் போகிறீர்?

    பிரானய்யங்கார் அமைதியாகச் சொன்னார் - பாகவத நியாயம்.

    அதென்ன நியாயம்? கேலியாக எழுந்தது ராயரின் குரல், திலகாஷ்ட மகிஷபந்தனமா?

    எழுந்து அடங்கிய சிரிப்புக் கனைப்புகள்.

    அவருக்குப் பின்னால் பட்டரும் அவருடன் நின்றிருந்த சில பிராமணர்களும்ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டு மீண்டும் நிமிர்ந்து பிரானய்யங்காரைப்பார்த்தனர்.

    யதிகட்கெல்லாம் தலைவனாம் உடையவரும் ஆழ்வார்களும் காட்டியநியாயம்.

    பட்டர், அச்சுத ராமராயரிடம் தலைகுனிந்து வாய்பொத்தி ஏதோமுணுமுணுத்தார்.

    பிரானய்யங்காரே! எதுவானாலும் நீர் பிராமணர். எனவே இனி விண்ணகரபூசுரர்களான வேத வித்துகள் உம்மை விசாரிப்பார்கள். யாம் இறுதித் தீர்ப்பைமட்டுமே வழங்குவோம்! என்று கூறிய அச்சுத ராமராயர், நாடகம் பார்க்கும்ஓய்வுத்தளர்ச்சியுடன் ஆசனத்தில் சாய்ந்தார். பட்டர் முன்னகர்ந்தார்.

    இதோ இக்கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனை உமக்குத் தெரியுமா?

    ஆம்.

    யார் இவன்? இவன் குலமென்ன?

    என் ஆச்சாரியர். எம்பிரான் மார்பில் திகழும் தாயாரின் புதல்வர் இவர்.திருக்குலத்தார்...

    மீண்டும் முணுமுணுப்புகள் எழுந்தன. புருவங்கள் நெரிந்தன. இந்தக்கோடாலி காம்பைக் கல்லாலடித்து… என்கிற வார்த்தைகள் தெளிவாகக்கேட்டன. அச்சுத ராமராயர் மட்டுமே அமைதியாக இருந்தார்.

    பட்டர் கேட்டார், இதற்கு என்ன சாஸ்திர சம்மதம்?

    ஆழ்வார்கள் மூலம் எம்பிரான் சொன்னது.

    என்ன ஓய் கதை விடுகிறீர்...

    "இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்

    தொழுமினீர் கொடுமின் கொண்மினென்று நின்னொடுமொக்க

    வழிபடவருளினாய்போல் மதிள்திருவரங்கத்தானே…"

    ஓஹோ அப்படிப் போகிறதா கதை… அதனால்தான் இழிகுலத்தானிடம்போனீரோ!

    ஸ்வாமி தவறாகப் புரிந்துகொண்டீர்… அதனால்தான் இழிகுலத்தானானஎன்னை எம்மனார் ஏற்றுக்கொண்டு பழமையான வைணவ கிரந்தஇரகசியங்களை அருளிச்செய்தார்.

    கொப்பளிக்கும் அக்னித் தடாகத்தில் பெரும் பாறாங்கல் விழுந்ததுபோலவெறுப்பலைகள் அனலாகப் பரவின. டேய்…! பட்டர் மரியாதை, போலிபவ்யம், நிதானமெல்லாம் விட்டு கோபத்தால் தீப்பிழம்பெனப் படபடத்தார்.

    நீ பிறந்ததால் தானடா இந்த வேதோத்தமர்களின் குலம் இழிகுலமாகிவிட்டது.வேத அந்தணர்களையா இழிகுலம் என்றாய்?

    பகவத்பாகவத சேஷத்வத்துக்கு அநுகூலமான ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம்என்பது, அங்ஙனமல்லாதது நிக்ருஷ்டம் என்பதும் நிச்சயிக்கப்பட்டதல்லவாஸ்வாமி…

    பட்டருக்கு சட்டென ஒன்று புரிந்தது.

    நடப்பது விசாரணையல்ல. இவனது துன்மித்தக் கருத்துகளைப் பரப்ப இதனைஅவன் பயன்படுத்துகிறான் துஷ்டன். மகா துஷ்டன். மிகவும் சாமர்த்தியமாகஅமைதி குலையாமல் எதிர்கொள்ள வேண்டும். தன் வைராக்கியத்தின் கடைசித்துளியையும்விட்டு, ஆத்திரத்தை உள்ளிழுத்து வெளிக்கு அணைத்தார்.

    தன்மேல் வரவழைத்துக்கொண்ட சாந்த பாவனையால் உடல் சிறிது நடுங்கஅமைதி ததும்பும் குரலில் சொன்னார், பிரானே நீர் கிரந்தங்களையும்திருமாலைகளையும் இஷ்டப்படி வியாக்யானம் செய்யக் கூடாது. கொடுமின்கொண்மின் என்றால் பகவத் ஞானத்தை அபேஷித்துக் கேட்டால்கொடுங்கோள் என்னும் ப்ரஸாதிக்கில் ப்ரஸாதராங்கோள் என்றுதான்சொல்லியிருக்கிறதே அன்றி அவாளகத்துக்குச் சென்று ஜலத்தை கொள்ளச்சொல்லவில்லை காணும். அத்துடன் தொழுவக்குடி சென்று அவன் உண்டசேடத்தை உண்டீரென்றும் கேட்டோம். நாளைக்கு ‘கொடுமின் கொள்மின்’என்னதால் பொண் கொடுக்கவும் சொன்னான் நம் நம்பி என்பீரோ?

    இம்முறை வெறுப்பு கலந்த இகழ்ச்சியான சிரிப்பலைகள் வெளிப்படையாகவேஎழுந்தன.

    "ஸ்வாமி பெண்ணும் ஜலமும் போஜனமும் பகவத் ஞானத்தைக் காட்டிலும்உயர்ந்ததோ..? அதனை அவரிடமிருந்து பெறலாமென்னால் விவாஹ சம்பந்தம்கொடுத்தலும் கொள்ளலும் என்ன தவறு? ஆம் ஸ்வாமி, அடியேன் அவருடையதிருமாளிகையில் உண்டேன்.

    போனகம் செய்த சேடம்

    தருவரேல் புனிதமன்றே

    என அவர் சேடத்தையே நான் உண்…"

    இனியும் என்ன வேண்டியிருக்கிறது? சட்டென ஆசனம் விட்டு எழுந்தார்அச்சுத ராமராயர். அது டக டகவெனும் சத்தத்துடன் பின்னகர்ந்தது. ஆனால்பிராமணனாகப் பிறந்துவிட்ட இந்த பாஷாண்டியைக் கொல்ல ஆணையிட்டுநான் ப்ரம்மஹத்தி கொள்ளத் தேவையில்லை. பட்டரே... ஏற்கெனவே என்புத்திரன் வேறு… என்று சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு…

    வேகமாக நடந்து தன் புரவியில் ஏறித்தட்டினார். புரவி நடன மாதுவின் அரங்கவருகைபோல் மெல்ல சிங்காரமாக நடந்தது. குடைகளை ஏந்தியவாறு சேவகர்நடந்தனர். மெதுவாக அவர் சென்று மறையும்வரை அங்கு எதிர்பார்ப்புகள்கலந்த கனமான ஓர் அமைதி நிலவியது.

    ஏதோ ஆணைக்குக் காத்திருந்ததுபோல விண்ணகர ஆலய மணி முழங்கியது.

    பட்டர் கண்ணசைத்தார்.

    அகத்துடையார்கள் அந்த இளைஞனை வெறியுடன் முரட்டுத்தனமாகஇழுத்தார்கள். சதையில் கயிறுகள் இன்னும் நெறிந்து இரத்தம் சன்னமாகத்தெறித்தது. எவனோ வாளால் பிணைத்திருந்த கயிறுகளை அசிரத்தையாகவெட்டினான். அதில் அந்த இளைஞனின் கருந்திரளான சதைத்துண்டு ஒன்றும்சேர்ந்து வெட்டுப்பட்டு வீழ்ந்தது. ஏற்கெனவே புழுதி அடர்ந்து படிந்தஉடலிலிருந்து தாராளமாகவே வெளிவந்த இரத்தம், உடற்புழுதியிலும்தரைப்புழுதியிலுமாகப் படர்ந்து நிதானமாகப் பெருக, அவனை தரதரவெனவீதியுடன் சேர்த்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். வீதியெங்கும் இரத்தம்சிதறிச் சிதறித் தெறித்தது.

    இப்போது பிராமணர்களின் கும்பல் பிரானய்யங்காரைச் சூழ்ந்தது.இளைஞனான ஓர் அந்தணன் அவரை அடிவயிற்றில் கால் முட்டியால் ஓங்கிஉதைத்தான். அவர் அப்படியே முன்பக்கமாகச் சரிந்தார். ஒரு வயதான பிராமணர்அவர் முதுகில் காறித்துப்பிவிட்டு அகன்றார். சிறிது தொலைவிலிருந்து ஒருவன்ஒரு கல்லைத் தூக்கி அவர் மீது எறிந்தான். அது அவர் கண்ணில் பட்டு அவர் கண்உடனே கலங்கி இரத்த நிறமானது, அவர் கண்ணைப் பற்றியபடி கீழே மல்லாக்கவிழுந்தார். கற்கள் இப்போது சரமாரியாக அவர் மீது விழ ஆரம்பித்தன.

    முந்தையநாள் மழைநீர் எங்கும் போகாதபடி ஊரின் அனைத்துப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் தெருவெல்லாம்சாக்கடையாக்கியிருந்தன. பழமையான ஊர் என்பதற்கு அந்தக் கோயில்கோபுரம் மட்டுமே சாட்சியாக இருந்தது. ஆனால் கோயில் சுவர்களில்ஷகீலாவின் அனுபவங்களும், வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்தும்கன்வென்ஷன்களும், புரட்சி அண்ணன், புரட்சி அக்கா, புரட்சி அய்யாஇன்னபிற புரட்சியினர் அனைவரும் அவரவர் சின்னங்களும் ஒட்டியும்தொங்கியும் நிரப்பியிருக்க, அவர்களை சமதர்ம சமபாவ அத்வைதானுபவபாவனையுடன் ஒரு கோமாதா இலாகவமாகக் கிழித்து உண்டுகொண்டிருந்தாள். ஆங்காங்கே அவள் போட்ட சாணியும் மழைநீருடன் கலந்துசின்னச் சின்ன குட்டைகளாகத் தேங்கியிருந்தன.

    கோயில் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1