Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abimanavalli
Abimanavalli
Abimanavalli
Ebook373 pages2 hours

Abimanavalli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக் கலையிலும், சிற்பக் கலையிலும் தேர்ச்சி பெற்ற நர்த்தகியாக காட்டப்படும் அபிமானவல்லி எதிர்மறை பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

காஞ்சியில் மகுடாபிஷேகம் செய்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது என திடீர் திருப்பங்களுடன் அமைந்துள்ளது. ஆதித்த சோழன் மகன் கன்னர தேவன் ஆன்மிகத்தில் ஈடுபட்டது; நம்பி, குறளப்பர் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தது போன்ற நிகழ்வுடன் சுவாரசியம் தரும் நுால்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580158910701
Abimanavalli

Read more from Kalki Kuzhumam

Related authors

Related to Abimanavalli

Related ebooks

Related categories

Reviews for Abimanavalli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abimanavalli - Kalki Kuzhumam

    அபிமானவல்லி

    கி.ராஜேந்திரன்

    ஓவியம்: லதா

    https://kalkionline.com/

    அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அபிமானவல்லி

    Abhimanavalli

    Author:

    கி.ராஜேந்திரன்

    K. Rajendran

    Illustrations:

    லதா

    Source :

    கல்கி களஞ்சியம் 1983

    Publisher:

    கல்கி குழுமம்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalki-kuzhumam

    பொருளடக்கம்

    யானைப்பாகன்

    பல்கலைச் செல்வி

    அந்தப்புரத்தில் ஆதித்தன்

    அறங்கூர் அவை

    ஓவியக் கூடம்

    தப்பிய கைதி

    பேராசு பிறந்தது!

    தமிழ்ப்பள்ளி

    பிரியாவிடை

    சுரங்கப்பாதை!

    ஒற்றாடல்

    ஆலோசனை மண்டபம்

    குறளப்பர்

    வரவேற்பு

    ராஜோபசாரம்

    மந்திராலோசனை

    வெற்றித் திலகம்

    பல்லவேந்திரர்

    அவசரத் தூதன்

    போர் முரசு

    வீரமும் வஞ்சமும்

    புறா விடு தூது

    வெற்றித் திருமகள்

    போர்க்களம்

    செம்பியன் தமிழவேள்

    அத்தியாயம் 1

    யானைப்பாகன்

    ஆடு மாடுகளை மேய்க்கலாம்; சந்தைக்கு ஓட்டிப் போகலாம்; ஆனால் ஒரு யானைக் கூட்டத்தை வழிநடத்திச் செல்வதென்றால்... அந்தப் பெரும் பிரயாசையான காரியத்தில் ஈடுபட்டிருந்தான் விக்கியண்ணன். அவனுக்கு உதவியாளர்கள் பலர் இருக்கத்தான் செய்தனர். ஆனாலும் ஒவ்வொரு யானைக்கும் ஒருவர் என்ற கணக்கில் இல்லை. அவ்வாறிருக்க யானை மந்தையை நிர்வகித்து ஊர் விட்டு ஊர் அல்ல, நாடு விட்டு நாடு அழைத்துப் போவதென்றால் இலேசானதா? சாலையை அடைத்துக் கொள்ளாமல் அவை ஒன்றன் பின் ஒன்றாகச் சென்றபோதிலும் புழுதி மண்டலம் புகையாகச் சூழ்ந்தது. அசைந்து அசைந்து முன்னேறியபோது, கண்டாமணிகளின் ஓசை ‘டிங் டாங்’ கென்று பெரிதாக ஒலித்தது; சீராகவும் இருந்தது. அந்த மணி ஓசையின் தாளகதி சற்றே மாறினால்கூட விக்கியண்ணன் விழித்துக் கொள்வான். யானைப்பாகர்களில் யாரோ ஒருவன் நீண்ட பயணத்தின் அலுப்பை மாற்றத் தனக்குத் தானே உற்சாகமூட்டிக் கொண்டு, இன்னொரு பாகனுடன் யானைப் பந்தயம் நடத்துகிறான் என்பது புரியவும், சட்டென்று தனது யானையைத் திருப்பிக்கொண்டு வந்து அவர்களை அதட்டி அடக்குவான். ஒழுங்காக வருமாறு கண்டிப்பான்.

    சில சமயங்களில் அந்த நெடுஞ்சாலையில் தேர்கள் வரும். பல்லக்குகள் எதிர்ப்படும். குதிரைகளின் மேல் வீரர்களும் வணிகர்களும் செல்வார்கள். அப்போதெல்லாம் முன்னதாக யானை மீது ஆரோகணித்துச் செல்லும் விக்கியண்ணன் பின்னால் வருவோருக்குச் சைகை காட்டுவான். அந்தச் சைகையை மற்றவர்களும் பின்பற்றி, தொடர்ந்து செய்து, கடைசி யானைப்பாகன் வரை எச்சரித்து விடுவார்கள். வழியில் கடக்க நேர்ந்த ஊர்களில் வீட்டு வாசல்களில் பெரியவர்களே ‘ஆ’வென்று வாயைப் பிளந்து கொண்டு நின்றார்கள் எனில் சிறுவர்களோ முதலில் ஏற்பட்ட பிரமிப்பு நீங்கியதும் கூச்சலிடவும் துள்ளிக் குதிக்கவும் ஆரம்பித்தார்கள். உள்ளூர பயமிருந்தாலும் தங்களை வீரர்களாகக் காட்டிக்கொள்ள யானை ஊர்வலத்தை நெருங்கினார்கள். பெரியவர்களின் பிடியிலிருந்து திமிறி விடுவித்துக் கொண்டு ஓடி வந்தார்கள். சில பிள்ளைகள் கடந்து செல்லும் யானைகளை ஒன்று, இரண்டு, மூன்று என எண்ண ஆரம்பித்து வேறு பலர் அவர்களுடன் சேர்ந்துகொள்ளவும் அது படைவீரர்கள் ஒருசேர எழுப்பும் வாழ்த்தொலிகள் போல யானைகளின் மணியோசைக்கும் மேலாகப் பேரொலியாகக் கேட்டது. இப்படி அவர்களால் நூற்றி எட்டுவரை எண்ண முடிந்தது. அம்மா! என்று அதிசயித்து, நூற்றி எட்டு! என்று வியப்புடன் மறுமுறை சொன்னார்கள்.

    இளம் சிறார்களின் உற்சாகத்தால் யானைகள் பாதிப்புக்கு உள்ளாகாது இருக்க வேண்டுமே என்றும் யானைகளால் சிறுவர் சிறுமியருக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டு விடக் கூடாதே என்றும், விக்கியண்ணன் கவலைப்பட்டான். கடைத் தெருக்களைக் கடக்க நேர்ந்தபோதுதான், அவனுக்குச் சோதனைகள் நிறைய ஏற்பட்டன. சந்தடி மிகுந்த அப்பகுதிகளில் பொறுமையோடும், கவனமாகவும் அவர்கள் செயல்பட வேண்டியிருந்தது. ஆனால் வணிகர்களோ யானைகள் வருகின்றன என்றால் வியாபாரம் நிறையவே நடக்கும் என்பதால் ஊர்வவலத்தை வரவேற்கவே செய்தனர். நூறு யானைகளுக்குத் தீனி போடுவதென்றால் கரும்பும் கொள்ளும் தேங்காயும் மற்றவைகளும் கொஞ்சமாகவா தேவைப்படும்! ஊருக்கு வெளியே கொண்டுபோய் நிறுத்துமாறும் தேவையானவற்றைத் தாங்கள் வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பதாகவும் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்து சொன்னார்கள். அதுமட்டுமல்ல. யானைகளைப் பராமரித்தபடியே ஊர் விட்டு ஊர் நடத்திச் செல்லும் பாகர்கள் நீண்ட காலம் மனைவி மக்களைப் பிரிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பரிசாக விலையுயர்ந்த பொருள்களை வாங்கிச் செல்ல விரும்புவார்கள். அவர்களிடம் யானையைக் கட்டுப்படுத்தும் ஆயுதப் பணம் மட்டுமின்றிப் பொற்காசுப் பணமும் மடியில் கனக்கும்.

    வெட்ட வெளித் திடலில் யானைகளுக்கு ஓய்வும் உணவும் அளித்து, பாகர்கள் தாங்களும் சிரம பரிகாரம் செய்து கொள்ளும்போது ஊர் மக்கள் வந்து குழுமுவார்கள். பாகர்களைப் பார்த்து, இந்த யானைகள் எங்கிருந்து வருகின்றன? எங்கே போகின்றன? எதற்கு? என்றெல்லாம் கேட்பார்கள்.

    எங்களுக்கு ஒன்றும் தெரியாது; தலைவனைக் கேளுங்கள் என்று பாகர்கள் விக்கியண்ணனைக் காண்பிப்பார்கள். விக்கியண்ணனோ, சோழ நாடு சோறுடைத்து என்பது தெரியாதா? அதிலும் இந்த ஆண்டு அமோக விளைச்சல். யானை கட்டிப் போரடித்தால்தான் சரிப்படும் அதற்காகத்தான் இந்த யானைகள் என்பான். வேறு ஊரில் இன்னொரு விதமாகப் பேசுவான்: தஞ்சையில் ஒரு தனவணிகர், நோயுற்றிருக்கும் தன் மகன் பிழைத்தெழுந்தால் நூற்றி எட்டு ஆலயங்களுக்கு அத்தனை யானைகள் தருவதாக நேர்ந்து கொண்டார் என்றும் இறைவன் வரமருளவே பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்க அவர் சார்பில்தான் பல இடங்களுக்குச் சென்று யானைகளை வாங்கித் திரட்டி ஓட்டிப் போவதாகவும் கூறுவான்.

    இதைக் கேட்டுச் சிலர் நிஜமென்றே நம்பி இந்த அதிசயத்தைத் தமக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளத் திரும்புவார்கள். வேறு சிலர் சிரிப்பார்கள். ஐயா! தலைமைப் பாகரே! உண்மையைச் சொல்ல மனமில்லை என்றால் கூறிவிடலாமே! எதற்குக் கட்டுக்கதை? என்பார்கள்.

    கட்டுக்கதை என்று தோன்றினால் விட்டுத் தள்ளுங்கள். எதற்கு என்னைக் குட்டு உடைக்கச் சொல்கிறீர்கள்? என்பான் விக்கியண்ணன்.

    அப்படியென்றால் குட்டு ஒன்று இருக்கிறதா?

    குட்டு இருந்தாலும் அதை என்னால் பிட்டு வைக்க முடியாது. ஏனென்றால் எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது என்று கூறியபடியே விக்கியண்ணன் ஒரு கரும்பைக் கூரிய கத்தியால் வெட்டிச் சீவிக் கடித்து மென்று சாறு பருகுவான்.

    எப்படி மறைக்க முடியும்? எத்தனை நாளைக்கு? என்று கூட்டத்திலிருக்கும் ஒருவன் கேட்டுவிட்டு, ஏதோ பெரிய யுத்தம் வரும் என்று மகாராஜா எதிர்பார்க்கிறார். அதற்கு ஆயத்தம் செய்து கொள்கிற முகமாகத்தான்...

    இதோ பாருய்யா! வதந்திகளைப் பரப்பி மக்களைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு என்றால் சரி, நான் தடுக்கவில்லை. ஆனால் மன்னரின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்தால் என் பெயரை இழுக்காதே. இத்தனை சாட்சிகள் இருக்கிறார்கள் என்று சுற்றிலுமிருந்த மற்றவர்களைக் கைவீசிக் காட்டுவான் விக்கியண்ணன்.

    இதைக் கேட்டதும் ‘நமக்கெதற்கு வீண் வம்பு’ என்று எண்ணியவர்களாகப் பலர் மெல்ல நழுவிவிடுவார்கள்.

    கூடியவரையில் விக்கியண்ணன் பெரிய ஊர்களைத் தவிர்த்து அவற்றைச் சுற்றிக் கொண்டு போக வழியிருந்தால் அவ்வாறே செய்தான். பலவீனமான பாலங்கள் என்று தோன்றினால், நதிக்கரையோ ஆறோ, நீரில் இறங்கிக் கடந்தான். இதனாலெல்லாம் பயண தூரம் அதிகமாயிற்று; தாமதமாகவும் செய்தது. அதுபற்றி அவன் கவலைப்படவில்லை. ‘அவசரமேதுமில்லை. எப்படியோ பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்தான் போலும். ஆனால் அவனுடன் வந்த மற்ற யானைப் பாகர்களுக்கு நீண்ட பயணம் அலுப்பைத் தந்து, தாமதங்கள் வெறுப்பையும் கொடுத்தன என்பது அவ்வப்போது எழுந்த முணுமுணுப்புக்களிலிருந்து தெரிந்தது.

    விக்கியண்ணா! தஞ்சைக்கு இன்னும் எவ்வளவு தூரம்?

    நெருங்கிவிட்டோம். இன்னும் பத்து காத தூரம்தான்.

    நாளை மாலைக்குள் போய்விடலாமா தலைவரே?

    தலைநகரை நெருங்க நெருங்க ஒவ்வொரு கணமும் ஒரு நாழிகையாக அவர்களுக்குத் தோன்றுகிறது என்பதைப் புரிந்து கொண்டான் விக்கியண்ணன். காதலியை அல்லது மனைவி மக்களைக் கட்டி அணைக்க வேண்டும் என்ற ஆவல் துடிப்பு அவர்களிடம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போவதை உணர்ந்து அனுதாபப்பட்டான்.

    ***

    வானில் திட்டுத் திட்டாக மிதந்த மேகக் கூட்டங்கள் மீதாக முழு நிலவு வெகுவேகமாகப் பாய்ந்து பயணப் பட்டுக்கொண்டிருந்தது. தென்றல் போர்வையாக உடலை அணைத்தது. சுழித்தோடும் ஆற்று வெள்ளத்தில் குதித்து நீந்திக் குளித்துக் கரையேறி இருந்ததால் பயணக் களைப்பு பெருமளவு குறைந்திருந்தது. பாகர்களில் பலர் அளவாக மது அருந்தி நிறைவாக உண்டு நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள். மதுவைத் தொடவும் விரும்பாத விக்கியண்ணனோ முக்கால் வயிறு நிரம்பியதுமே இலையை விட்டு எழுந்து விடுவான். குறைவாகச் சாப்பிடுவது விழிப்புடனிருக்க உதவும். யானைகள் கூடத் திருட்டுப் போகக் கூடும்! இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்னாயிற்றே! வெட்ட வெளியில் புல் தரையில் பட்டு விரித்துப் படுத்தான். மெத்தென்றிருந்தது. இரவின் அமைதியைக் குலைத்து எப்போதேனும் ஒரு யானை தும்மும்; அல்லது ஒரு கோட்டான் அலறும். ஆனால் பாகர்களில் யாரும் உறக்கம் கலையவில்லை. ‘தலைவன் இருக்கிறான் பார்த்துக்கொள்வான்’ என்ற தைரியம் குறட்டை ஒலியாக எழுந்தது.

    தலைக்கு அடியில் கைகளைக் கோர்த்துக்கொண்டு நிலாவின் ஓட்டத்தைக் கவனித்தவாறே கடந்த சில மாதங்களின் அதிசய அனுபவங்களை எண்ணிப் பார்த்தான் விக்கியண்ணன். பொறுக்கு மணிகளான ஐம்பது வீரர்களுக்குத் தலைமை ஏற்று விக்கியண்ணன் உடனே சேர நாட்டுக்குப் பயணப்பட வேண்டும் என்று நான்கைந்து திங்கள்களுக்குமுன், இதேபோன்ற ஒரு பௌர்ணமி இரவில் உத்தரவிட்டார் சோழ தேசத்தின் மாமன்னர் ஆதித்தன். சேரமான் தாணு ரவிக்குத் திருமந்திர ஓலையும் அதில் கண்டிருந்தபடி பரிசுப் பொருள்களையும் கொடுத்து அனுப்பினார். சேரமான் இவர்களை வரவேற்று, பரிசில்களையும், அவர்கள் ஏறி வந்திருந்த உயர்தர அராபியக் குதிரைகளையும் ஏற்றுக் கொண்டான். சோழ மன்னரின் ஓலையைப் படித்த பின், இவர்களுக்கு உடையும், உணவும், உறைவிடமும் தந்ததுடன் சிறந்த யானைப் பரகர்களாக விளங்கப் பயிற்சி பெறவும் ஏற்பாடுகளைக் கவனித்தான். விழிஞத்துக்கருகே இவர்கள் படைவீட்டில் தங்கியிருந்து, கானகங்களில் யானைகளைப் பிடிப்பது எப்படி; அவற்றை அடக்கி ஆண்டு பழக்குவது எவ்வாறு; கட்டளைகளுக்குக் கீழ்ப்படியச் செய்வது எங்ஙனம் என்றெல்லாம் தெரிந்து கொண்டனர். யானைப் பராமரிப்பு பற்றியும் போர் யானைகளாக அவற்றை உருவாக்குவது குறித்தும் அறிந்து கொண்டார்கள். யானைகளின் அன்பைப் பெறுவது வெகு சுலபம் என்றும் அவற்றுடன் உரையாடுவது கூடச் சாத்தியம் என்றும் புரிந்தது. யானை மீதிருந்து போர் புரியும் கலையையும் கற்றார்கள். பயிற்சி முடிந்த பிறகு அவர்கள் அனைவரையும் அழைத்துக் கௌரவித்தார் சேரமான் தாணு ரவி. பிறகு ஆதித்தன் கேட்டிருந்த நூற்றி எட்டு யானைகளைத் தவிர வேறு சில பரிசில்களும் தந்து அவர்களை அனுப்பி வைத்தார்.

    ‘எதற்காக இத்தனை யானைகள்? ஏன் எங்களுக்குத் தீவிரம் பயிற்சி?’ என்று யோசித்தான் விக்கியண்ணன். ‘ஒருவேளை இந்த ஊரைச் சேர்த்த ஒருவர் சொன்னது போல் யுத்தம் வருமோ? யார் படையெடுக்கப் போகிறார்கள்? மாமன்னர் ஆதித்த சோழனைத் தாக்கும் துணிவு எவருக்கு உண்டு?’

    சேரநாட்டில் பயிற்சி பெற்ற ஐம்பதின்மரும் சோழ தேசத்தில் வேறு பலருக்கும் ஆசிரியர்களாய் இருந்து கற்றுத் தர வேண்டி இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது. அதன் பிறகு என்ன நேரும்? விக்கியண்ணனால் அனுமானிக்க முடியவில்லை. மாமன்னருடைய மனத்தின் அடித்தளத்தில் என்ன திட்டம் இருக்கிறதோ யார் கண்டது?

    ஒரு மேகத்திரையிலிருந்து வெளிப்பட்ட முழு மதி அவன்மீது நிலவைப் பொழிந்தது. நிலைவாசல் திரையை விலக்கிக் கொண்டு வரும்போது அபிமானவல்லியின் அழகும் இதைப்போல்தான், இல்லை. இதைவிடவும் சாந்தியுடன் பிரகாசிக்கும் என்று எண்ணினான். அப்போது தண் நிலவில் குளித்துக் கொண்டிருந்த போதிலும், தென்றலும் குளிர்வித்த போதிலும் அவன் உடலெங்கும் அனலாய்ச் சூடேறியது.

    தன்னுடன் வந்த வீரர்கள் சேர நாட்டில் தங்களைக் சுட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் காதலிகளை ஏற்றதையும், விலைமகளிரை நாடியதையும் அவன் அறிவான். அவ்வாறிருந்தும் இப்போது தஞ்சைத் தலைநகரை நெருங்கும்போது அவர்கள் விட்டுப் பிரிந்து வந்த காதலியருக்காகவோ, மனைவியருக்காகவோ ஏங்கினார்கள். ஆனால் அவனோ, இதில் மட்டும் மற்றவர்களிடமிருந்து தனித்து நின்றான். சுயகட்டுப்பாட்டுடன் விளங்கி, பின்னால் காதலியைத் தழுவும்போது ஏற்படும் இன்பம் பலமடங்கு அதிகமானது என்று நம்பினான். சகாக்களுடைய பரிகாசத்தை அவன் பொருட்படுத்தவில்லை. ஆகக்கூடி அவனுடைய ஆர்வம் இப்போது தஞ்சை திரும்புகையில் எத்தகையதாக இருக்கும்!

    ‘அபிமானவல்லி! என் கண்ணே! இதோ வந்து கொண்டே இருக்கிறேன்; இன்னும் ஒரே ஒரு பகல் போதுதான்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

    ***

    மறுநாள் மாலை அவர்கள் பயணம் தஞ்சையின் எல்லையில் முடிவுற்றது. இவர்கள் வருவது பற்றி முன்கூட்டியே தூது சென்றிருந்ததால் உயர் அதிகாரிகள் சிலர் எதிர்கொண்டனர். நகருக்குப் புறம்பாகப் புதிதாக உருவாகியிருந்தது, ஒரு நீண்ட நெடும் யானை கட்டும் தெரு. பொறுப்பாக யானைகளை ஒப்படைத்துவிட்டு, அவற்றை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதையும் விளக்கி சொன்னான் விக்கியண்ணன். மறுநாள் அதிகாலை மன்னர்பிரானைச் சந்திக்க வேண்டுமென்பதால் இன்றிரவே நகருக்குள் புகுந்துவிடத்தான் ஆர்வமாக இருப்பதை வெளியிட்டான். சம்மதம் கிடைத்ததன் பேரில் விரைந்தபோதிலும் தஞ்சைக் கோட்டையை நெருங்கு முன் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் மகாராஜா அவனுக்கு வழங்கிக் கௌரவித்திருந்த புலி இலச்சினையைக் காட்டியதும் திட்டி வாசல் திறந்து கொண்டது.

    விக்கியண்ணனை அறிந்தவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். புறநகர்ப் பகுதியில் யானை கட்டுந் தெருவில் தளபதிகள் கேள்விகளைக் கேட்டுக் குடைந்தது போலவே, இங்கும் அவன் நண்பர்களான வீரர்களும், அதிகாரிகளும் அவனுடைய பயண அனுபவங்கள் பற்றியும், பயிற்சி குறித்தும் ஆர்வமுடன் கேட்டு அவனைத் தாமதப்படுத்தினார்கள். தன் பரபரப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களில் சிலருடன் உணவு விடுதிக்குச் சென்று விருந்துண்டும் உரையாடியும் மகிழ்வித்தான். விடைபெற்றுப் புறப்பட்டான்.

    ‘முதலில் வீடு திரும்ப வேண்டாமா?’ என்ற எண்ணத்தைக் கணப் பொழுதில் எளிதாக ஒதுக்கிவிட்டு விரைந்தான். அவன் கண்கள் எந்த மாளிகையைக் காண ஏங்கினவோ, அது தென்பட்டபோது இரவு வெகுநேரமாகி விட்டதால் ஓரிரு நுந்தா விளக்குகளைத் தவிர மாளிகையில் இருளே சூழ்ந்திருந்தது. அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. வாசல் பக்கம் சென்று கதவு தட்டுவதானால்தானே நேரமும் காலமும் பார்க்க வேண்டும்! அந்த மாளிகையின் எந்தப் பக்கத்தில் அபிமானவல்லி கண்ணயர்வாள் என்பது அவனுக்குத் தெரியும். வீதியில் நடமாட்டமில்லை என்பதைச் சுற்று முற்றும் ஒருமுறை பார்த்து நிச்சயப்படுத்திக்கொண்ட அவன், தன் கரத்திலிருந்த நீண்ட வேலுடன் வேகமாய் ஓடி அதைத் தரையில் ஊன்றி, அதன் உந்து விசையினால் லாகவமாக எம்பி உயர்ந்து, நெடிய மதிலின் மறுபுறத்துக்குத் தாவினான். சாலையில் வேல் விழும் ஓசையும் இவன் இலைச் சருகுகள் மீது குதித்த சத்தமும் எழ, யார் அங்கே! என்ற அதிகாரக் குரல் கேட்டது. மர நிழலில் பதுங்கி அமைதி காத்தான். காவலர் இருவரில் ஒருவன் எழுந்து நின்று மூன்று திக்கிலும் கண்ணோட்டம் விடவும், இன்னொருவன் எலியோ பூனையோ என்று அலட்சியமாகக் கூறி தாயமுருட்டவும் நிலவொளியிலும் நுந்தா விளக்கொளியிலும் ஆட்டம் தொடர்ந்தது. ஒலி யெழுப்பாது மெல்ல நகர்ந்து அப்பால் சென்று சரசரவென்று ஒரு மரத்தில் ஏறினான். கிளையில் ஊர்ந்தான். ஒரு கொடியைப் பற்றி இழுத்து அதன் உறுதியைச் சோதித்துவிட்டு ஊசலாய்ப் பயன்படுத்திச் சற்றுத் தொலைவிலிருந்த மேன்மாடத்தினுள் குதித்தான்.

    நிலவொளி நிலைவாசவில் தொங்கிய மெல்லிய திரைச் சீலையை வைடூரிய நிறத்தில் ஒளிரச் செய்யவும் அதன் பின்னால் கரு நிழலாய்க் கட்டில் தெரிந்தது.

    அத்தியாயம் 2

    பல்கலைச் செல்வி

    திருப்புறம்பயத்தில் ஒரு கற்றனி எழுப்புவதென மாமன்னர் ஆதித்தன் தீர்மானித்தபோது, அப்பணியை மேற்பார்வையிட விக்கியண்ணனை அனுப்பினார். தமக்குப் போரில் மாபெரும் வெற்றியையும் சோழ ராஜ்யத்தையும் ஈந்த திருப்புறம்பயம் ஈசனுக்குத் தாமே அருகிலிருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசைதான் ஆதித்தனுக்கு. ஆனால் அரசாங்க அலுவல்கள் அவரைத் தஞ்சைக்கு மட்டுமின்றிப் பிற இடங்களுக்கும் அடிக்கடி ஈர்த்தன. புதிதாக உருவாகியிருந்த சோழ ராஜ்யத்தை உறுதியான கரத்துடன் நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆகவே விக்கியண்ணன் அவர் பிரநிதியாகச் சென்றான்.

    அங்கேதான் முதன் முதலாக அபிமானவல்லியைச் சந்தித்தான் விக்கியண்ணன். தகப்பனும் பெண்ணுமாக ஒரு பெரிய பாறைமுன் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு தூணை எவ்விதம் செதுக்கலாம் என்று தீவிரமாக விவாதித்துச் கொண்டிருந்தனர். கோயில் பணி தொடங்கியதுமே நாளா திசைகளிலிருந்தும் சிற்பிகள் திருப்புறம்பயத்துக்கு வந்து சேர்ந்தனர். கொங்கு நாட்டிலிருந்து வந்த சிலருள் இருவர்தான் தந்தையும் மகளுமான இவர்கள். குதிரை ஏறி வந்த விக்கியண்ணனைக் கவனிக்காமலேயே இருவரும் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். இது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. தொண்டையைக் கனைத்தான். பலனில்லை. அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் தன் பதவியை மதிக்கவேண்டாமா என்று நினைத்தான் விக்கியண்ணன். ஆனால் அதேசமயம் கடமையில் அவர்களுடைய மன ஈடுபாடு அவனை நிதானிக்கச் செய்தது. பேசுவதை நிறுத்தி அந்தப் பெண் ஒரு காவிக் கட்டியை எடுத்துக்கொண்டு அந்தப் பாறை மீதாக வலக்கரத்தை ஓட விட்டாள். நான்கைந்து கோடுகளில் தூண் வடிவம் தோன்றிவிட்டது. மேலும் சில கை அசைவுகளில் அதில் செய்யப்பட வேண்டிய சித்திர வேலைப்பாடுகள் தெரிந்தன. கீழ்ப் பகுதியில் அவளது வளைக்கரம் ஒரு மந்திர மாயம்போல் இயங்கவும் கணபதி புலனானார். அவள் ஆற்றலை அச்சரியத்துடன் உணர்ந்து இமை கொட்டாமல் குதிரைமீது அமர்ந்திருந்தான் விக்கியண்ணன்.

    எதிரெதிர்ப் பக்கங்களில் கணபதியையும் முருகனையும் செதுக்கலாம். மற்ற இரு திசைகளில் ரதி மன்மதன் உருவாகட்டுமே என்றாள்.

    என்ன, ரதி. மன்மதனைப் பிரித்து ஒருவருக்கொருவர் கோபத்துடன் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கலாம் என்கிறாயே? உரக்கக் கேட்டவாறே விக்கியண்ணன் குதிரையை விட்டிறங்கினான்.

    அந்தப் பெண் சரேலென்று திரும்பிப் பார்த்தாள். ‘யார் என்னுடன் விவாதத்துக்கு வருவது?’ என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை. விக்கியண்ணனோ சற்றும் எதிர்பாராத அளவில் ஓர் அழகுக் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளானான். அந்த எழிலின் வீரியத்தைத் தாங்கும் சக்தியைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளச் சற்றுநேரம் பிடித்தது அவனுக்கு. அதன் பின்னர்.

    Enjoying the preview?
    Page 1 of 1