Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal
Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal
Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal
Ebook157 pages57 minutes

Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூலில் யானை பற்றி பல சுவையான கதைகளும் உண்மைச் சம்பவங்களும் இருக்கின்றன. இதற்கு முன்னால் வெளியிடப்பட்ட எனது நூல்களிலும் கிளி, காகம், பருந்து, ஆந்தை முதலிய பறவைகள் பற்றி கதைகள் இருக்கின்றன. வாகனம், பறவைகள் சகுனம் பற்றிய எனது நூலில் பல கதைகள் உள்ளன. நாள்தோறும் வெளிவரும் நாளேடுகளிலும் பிராணிகளைப் பற்றிய செய்திகளை வெளியிட பத்திரிக்கைகள் தயங்குவதில்லை. ஏனெனில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் இதில் ஈடுபாடு இருக்கிறது.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580153509088
Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal

Read more from London Swaminathan

Related to Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal

Related ebooks

Reviews for Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுவையான யானை பூனை கதைகள், உண்மைச் சம்பவங்கள்

    Suvaiyana Yaanai Poonai Kathaigal, Unmai Sambavangal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஒரு யானையின் சோகக் கதை!

    2. ஜெயலலிதா சொன்ன யானைக் கதை

    3. ‘டான்ஸ்’ ஆடிய யானை கதை!

    4. யானைப் பாகன் பிரம்மம்!

    5. சிலப்பதிகாரக் கதை: கோழி - யானை சண்டை

    6. நன்றியுள்ள யானையும், குடிகாரப் பாம்பும்!

    7. யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’!

    8. யானைக் காப்பி:கோப்பை £30 பஞ்ச கவ்யம் என்றால் என்ன?

    9. யானை பற்றிய நூறு பழமொழிகள்

    10. ஒரு பூனைக் கதை சொல்லவா?

    11. யானை அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும்! மலைப் பாம்பு?

    12. இரண்டு ராஜா ராணி கதைகள் குதிரைக்கு குர்ரம்

    13. கிளிக்குப் பயிற்சி தருவது எப்படி? பறவையும் கைதியும்

    14. பாரசீகக் கிளி செய்த தந்திரம்!

    15. நன்றியுள்ள தமிழன்; நன்றியுள்ள நாய்

    16. தேக்கடி ராஜா கதையும் டார்ட்போர்ட் டால்பின்களும்

    17. கதை கேட்ட நாயை அடி!

    18. நாலு வரிப் பாட்டில் 2 கதைகள்! ஐயர் கதையும் குரங்கு கதையும்!!

    19. நோஞ்சான் குதிரை மூலம் லிங்கன் சொன்ன புத்திமதி!

    20. நாய் வாலால் கடிக்கட்டுமே!

    21. பெண்ணை எதிர்பார்த்து புலியிடம் சிக்கிய ஆசிரியர்

    22. குழந்தையும் குட்டி நாயும் குணத்தால் ஒன்று! அறிவியல் தகவல்!!

    23. யானையின் எடை என்ன? அவுரங்கசீப்பை அசத்திய படகுக்காரன்!

    24. யானைக்கு 45 தமிழ் சொற்கள்

    25. யானைக்கு தோல்வி! பூனைக்கு வெற்றி!!

    26. தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா 5800 கிலோ!!

    27. பல்லவ கீரிட அதிசயம்

    28. கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை!

    29. இரு கை யானை - மாக்ஸ்முல்லர், கால்டுவெல், ஜி.யு.போப் மீது அறிஞர் கடும் தாக்கு

    30. பிராணிகளுக்குக் கடிகாரம் பார்க்கத் தெரியுமா?

    31. பனங்காட்டு நரியும், பணம் காட்டும் நாயும்

    32. குருவியிடம் பாரதியார் கேட்ட கேள்விகள்

    33. சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

    34. இயற்கை போதிக்கும் 13 பாடங்கள்

    35. ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்

    36. கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

    முன்னுரை

    இந்த நூலில் யானை பற்றி பல சுவையான கதைகளும் உண்மைச் சம்பவங்களும் இருக்கின்றன. இதற்கு முன்னால் வெளியிடப்பட்ட எனது நூல்களிலும் கிளி, காகம், பருந்து, ஆந்தை முதலிய பறவைகள் பற்றி கதைகள் இருக்கின்றன. வாகனம், பறவைகள் சகுனம் பற்றிய எனது நூலில் பல கதைகள் உள்ளன. நாள்தோறும் வெளிவரும் நாளேடுகளிலும் பிராணிகளைப் பற்றிய செய்திகளை வெளியிட பத்திரிக்கைகள் தயங்குவதில்லை. ஏனெனில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் இதில் ஈடுபாடு இருக்கிறது.பிராணிகளை வைத்து நடத்திய சர்க்கஸ் காட்சிகள் இப்போது தடை செய்யப்பட்டுவிட்டன. நான் சிறுவனாக இருந்த போது பார்த்த கிளி சர்க்கஸ் போன்றவற்றை இப்போது குழந்தைகளிடம் சொன்னால், ஏதோ அலாவுதீனும் அற்புத விளக்கும் அல்லது கல்லிவர்ஸ் டிராவல்ஸ் கதை போல இருக்கும். யானை, புலி சிங்கம் செய்யும் சர்க்கஸ்களும் பழம் கனவுகளாகி விட்டன. உலகம் முழுதும் டால்பின்களை வைத்து செய்த டால்பின், (KILLER WHALES) கில்லர்வேல் வித்தைகள் இப்போது இல்லை. அந்தக் காலத்தில் பல நூறு ஆண்டுகளாக திருக்கழுகுக் குன்ற கோவிலுக்கு வந்து சாப்பிட்ட கழுகுகளும் இப்பொது வருவதில்லை; வேத காலத்தில் அற்புதமான சோமரச மூலிகைகளையும் பருந்துதான் கொண்டுவந்து கொடுத்தன. இதை என்ன என்று எவராலும் விளக்க முடியவில்லை நன்றியுள்ள நாய்கள் செய்த கதைகள் ஒரு நூல் முழுதும் எழுதும் அளவுக்குக் கிடைக்கின்றன. ஊர்ப்பெயர்களில் உள்ள பறவை, மிருகங்களைப் பற்றிக் கேட்டால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை சொல்லுவார்கள். பிராணிகள் பற்றிய பழமொழிகளும் அவை உணர்த்தும் கருத்துக்களும் ஏராளம். நான் பத்தாண்டுக்கும் மேலாகத் தொகுத்த கதைகளும் உண்மைச் சம்பவங்களும் என் பிளாக்கில் வெளியான தேதியுடன் இங்கு அச்சாகியுள்ளன படித்து மகிழுங்கள் சநதேகம் தெளிய எனக்கு எழுதுங்கள். இந்த நூலிலேயே எனது தொடர்பு முகவரிகள் கிடைக்கும்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர், 2022

    1. ஒரு யானையின் சோகக் கதை!

    1907ஆம் அண்டு வெளியான தமிழகம் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு சம்பவத்தை கீழே காண்க. இதே போல உ.வே.சாமிநாத அய்யர் எழுதிய ஒரு யானையின் கதையை முன்னரே எழுதியுள்ளேன்.

    உணர்ச்சிமிகுந்த யானை

    சுமார் 20 வருஷங்களுக்கு முன், வடவாற்காடு ஜில்லாவில் வெங்கட்ட பெருமாள் ராஜா என்று ஒரு ஜெமீந்தார் இருந்தார். அவர் தமக்கு ஜெமீன் அதிகாரம் கிடைத்தவுடன் மிக ஒளதாரியமாகக் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார். தன்னைச் சுற்றிலும் யானை, குதிரை சிப்பந்திகள், பரிவாரங்கள் முதலான ராஜ சின்னங்களை சூழ வைத்துக்கொண்டார். அவைகளில் கிழ யானை ஒன்று உண்டு. அதன் பெயர் சுந்தர கஜ ராஜா.

    அந்த யானை அவர் தகப்பனாருக்கு கண்ணுக்கு கண் போன்றது. ஜமீன் யானை என்பதால் அதை எல்லோரும் செல்லம் கொடுத்து வளர்த்துவந்தார்கள்.

    இப்படியாகச் சுக ஜீவனம் கொஞ்ச காலம் நடந்தேறிய போது, ஜெமீன்தாருக்கு கஷ்டகாலம் உண்டாய்விட்டது.

    'பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்' --என்னும் பழமொழி போல இவருக்கு துர்பாக்கிய காலம் அடுத்தடுத்தது வந்தது. மித மிஞ்சிய செலவும் வீண் படாடோபமும் இவரைக் கெடுத்தது போதாதென்று மழையின்மையும் பஞ்சமும் உண்டாயிற்று; இவைகளால் ஜமீன்தார் அதிகக் கடன்பட்டு, சொத்தையுமிழந்து வறுமை கூர்ந்து, ஒரு நாடோடிக் குடியானவனைப் போல எளிய வாழ்க்கையில் அமர்ந்துவிட்டார். லாயத்த்திலுள்ள குதிரைகள் விற்கப்பட்டன. கொட்டிலில் பசு முதல் சகல மிருகங்களும் கடனுக்கீடாக வேறு கை ஏறிவிட்டன.வாங்குவார் யாருமின்மையால் சுந்தர கஜராஜா மட்டும் லாயத்திலேயே நின்றது. அதனையும் போஷிக்க வகை அறியாத ஜெமீன்தார் யானையைத் தன கிராமங்களில் ஒன்றில் ஓட்டிவிட்டார். இவ்வாறு தெய்வமே துணை என்று விரட்டிவிடப்பட்ட சுந்தர கஜராஜா அக்கிராமத்தின் கிருபைக்குப் பாத்திரமாகி வயிறார உண்ணாமல் வருந்தியது.

    அக்கிராமத்தில் ஒரு மூலையிலுள்ள தடாகத்தின் கரையில் ஒரு புளிய மரம் இருந்தது. அதன் நிழலே யானைக்குப் புகலிடமாகியது.அந்த யானை அல்லும் பகலும் வெயிலால் உலர்ந்து பணியால் நனைந்து வாடியது. தனது அந்திம காலத்தில் தனக்கு வந்த பெரும் துன்பத்தை எண்ணி வருந்தியது அதனைக் கொஞ்சுவாருமில்லை; அதனைத் தட்டிக்கொடுத்து இனிய வார்த்தை சொல்லுவாருமில்லை.

    அரிசிக் கவளமும், வெல்லமும், கருப்பம் கழியும் கண்ணில் படவில்லை காட்டுப்புல்லும் ஓட்டத்தண்ணியுமின்றி உணவும் நீரும் கண்டிலது. இவ்வாறு சுந்தர கஜ ராஜா அல்லலுற்று நிற்கும்போது அது தன் எஜமானனை வெறுத்துக் கொண்டதாக ஒரு அறிகுறியும் தென்படவில்லை. இதுவும் விதி வசமே என்று தன் கஷ்டத்தை எண்ணி வருந்தி வந்தது. வழக்கமான உணவும் கவனிப்பாருமின்றி உடலும் மனமும் வாடியது.முன்னிருந்த யானையின் சாயையோ இது என்று கண்டோர் கூறும் வண்ணம் சுந்தர கஜ ராஜா ஒடுங்கிவிட்டது.

    இவ்விதம் இரண்டு வருஷங்கள் சென்றன.அப்போது ஜெமீந்தார் பத்னி வெகுகாலமாய் புத்திர சந்தானமில்லாதிருந்து ஒரு அழகிய குழந்தையைப் பெற்று எடுத்தாள்.அக்குழந்தைக்கு நாம கரணம் செய்யவேண்டிய நாள் வந்தது. அப்போது ஜெமீன் யானை இல்லாமல் சரிப்படவில்லை. உடனே இரண்டு யானைப்பாகர்களை அழைத்து அந்த கிராமத்திற்குச் சென்று சுந்தர கஜ ராஜாவைக் கொண்டுவரும்படி ஜெமீந்தார் உத்தரவு கொடுத்தார். அவ்வாறே அவர்கள் சென்று, யானை மீது அம்பாரி சேர்ப்பித்து, மஹமல் பட்டு மெத்தையிட்டு,, வெள்ளி மணிகள் கோத்த

    Enjoying the preview?
    Page 1 of 1