Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிந்தனை சிறுகதைகள்
சிந்தனை சிறுகதைகள்
சிந்தனை சிறுகதைகள்
Ebook221 pages1 hour

சிந்தனை சிறுகதைகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இப்புத்தகத்தில் வெளிவந்துள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிந்தனையை தூண்டுவதாக அமைந்துள்ளன. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் போது ஒரே மாதிரி யோசிக்காமல் மாற்றி யோசிக்கும் போது அதற்கான தீர்வு எளிதாக கிட்டும், அது நிரந்தரமாகவும் இருக்கும்.இப் புத்தகத்திலுள்ள சிறுகதைகளிலும் அம்முறையே கையாளப்பட்டுள்ளது. நாம் ஒரு கோணத்தில் பிரச்சனைக்கான தீர்வு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் போது, விடை வேறுவிதமாக இருக்கும். அதுவே சரி என்று நமது மனதும் உடன்படும். அதுவே ஆசிரியரின் சிந்தனைக்கு கிடைத்த வெற்றி.

Languageதமிழ்
Release dateMar 6, 2023
ISBN9788179508435
சிந்தனை சிறுகதைகள்

Related to சிந்தனை சிறுகதைகள்

Related ebooks

Related categories

Reviews for சிந்தனை சிறுகதைகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிந்தனை சிறுகதைகள் - Sharada Prakash

    சிந்தனை சிறுகதைகள்

    சாரதா பிரகாஷ்

    GIRI

    Sindanai Sirukathaigal

    Sharada

    © 2023 GIRI அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை

    இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும். இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த  நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும், ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல.

    இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்பட நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.

    ISBN-13: 9788179508435

    ISBN-10: 8179508439

    கவர் வடிவமைப்பு: GIRI

    www.giri.in | sales@giri.in

    பதிப்புரை

    ‘சிந்தனை சிறுகதைகள்’ என்ற தலைப்பில் இப்புத்தகத்தில் வெளிவந்துள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிந்தனையை தூண்டுவதாகவே அமைந்துள்ளன.

    ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் போது ஒரே மாதிரி யோசிக்காமல் மாற்றி யோசிக்கும் போது அதற்கான தீர்வு எளிதாக கிட்டும், அது நிரந்தரமாகவும் இருக்கும்.

    இப் புத்தகத்திலுள்ள சிறுகதைகளிலும் அம்முறையே கையாளப்பட்டுள்ளது. நாம் ஒரு கோணத்தில் பிரச்சனைக்கான தீர்வு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் போது, விடை வேறுவிதமாக இருக்கும். அதுவே சரி என்று நமது மனதும் உடன்படும். அதுவே ஆசிரியரின் சிந்தனைக்கு கிடைத்த வெற்றி.

    இப்புத்தகத்தின் ஆசிரியர் திருமதி சாரதா பிரகாஷ் அவர்களின் சீரிய சிந்தனையும், சமுதாய அக்கறையும், விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் விஷய ஞானமும் வியக்க வைக்கிறது.

    மருந்தானது கசப்பாக இருந்தாலும் இனிப்பில் குழைத்துக் கொடுத்தால் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுமோ, அவ்வாறே பாரம்பரியம் கெடாமல் சொல்லப்பட்டுள்ள சீர்திருத்தக் கருத்துக்கள் அனைவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

    சிந்தனைகளை எழுத்துக்களாக வடிக்கும் சாமர்த்தியம், திறமை ஒரு சிலருக்கே உண்டு. அந்த வரிசையில் தன்னை நிரூபித்திருக்கும் ஆசிரியரை கிரி மனதார பாராட்டுவதோடு, வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

    ​ ​– பதிப்பகத்தார்

    * * * * *

    1. வாழு வாழவிடு

    சூரியக்கதிர்கள் கூட நுழைய முடியாத அடர்ந்த கானகம், அன்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து விலங்குகளும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. மரங்களிலிருந்த பறவைகளும் ‘கிறீச் கிறீச்’...என்று கத்தியபடி அவைகளை பின்தொடர்ந்தன.

    ‘இவை எல்லாம் எங்கு செல்கின்றன?’ என்று தெரியாமல் அதற்கே உரிய முழியுடன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்த ஆந்தை, அப்போது தாவிக் குதித்து சென்று கொண்டிருந்த ஒரு மானை மடக்கி விபரம் கேட்டது.

    உனக்குத் தெரியாதா? நாங்க எல்லாம் சிங்கராஜாவை பார்த்து எங்க குறைகளை தெரிவிக்க போறோம். மீட்டிங் இருக்கு. நீயும் வாயேன் என்று அது சொன்னதும், அவர்கள் பேசப் போவதைக் கேட்கும் ஆவலுடன் கூடவே பறந்து சென்றது ஆந்தை.

    அனைத்தும் சிங்கராஜாவின் குகையை அடைந்தன. வெளியே வந்த சிங்கராஜா, என்ன ஆச்சரியம்! இவ்வளவு காலையில் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கீங்க? என்று வினவ

    நாங்க எல்லாம் ரொம்பநாளா அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற வேதனைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கணும்னுதான் உங்ககிட்ட முறையிட வந்திருக்கோம் என்று கும்பலாகச் சொன்ன விலங்குகளைப் பார்த்து ஒவ்வொருத்தரா உங்க பிரச்சனைகளை சொல்லுங்க என்றது சிங்கராஜா.

    மான் முன்னே வந்து, வணக்கம் அரசே. எங்களோட அருமை தெரியாம எங்களை அழிக்கிற மனிதர்களிடமிருந்து எப்படி எங்களை காப்பாத்திக்கிறதுன்னு தெரியல. முற்றும் துறந்த முனிவர்னு சொல்றாங்க. ஆனா அவங்களுக்கு தியானம் பண்றதுக்கு எங்க தோல்தான் தேவைப்படுது. இதுல சில சமூக விரோதிகள் காட்டுக்குள்ளேயே வந்து, கடவுள் எங்களுக்கு தற்காப்பிற்காக கொடுத்த கொம்பிற்காகவும், மாமிசத்திற்காகவும் வேட்டையாடிட்டு போறாங்க. எப்போ மனிதர்கள் வருவாங்களோன்னு பயமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டது எலி. ராஜா, இந்த மனிதர்களை என்ன சொல்றதுன்னே தெரியல! மருத்துவபரிசோதனைக்கு மட்டும் அவங்களுக்காக நாங்கள் தேவைப்படுவோம். ஊசி மருந்து முதல் எல்லா மருந்துகளையும் எங்கமேல் தான் பரிசோதனை செய்யறாங்க. ஆனா வீட்டுல, நாங்க இருந்தா மட்டும் டென்ஷனாகி, ‘துணியை கடிச்சுடுவோம், திண்பண்டங்களை கொறித்து தின்னுடுவோம்’னு எங்களை விரட்டி அடிக்கிறாங்க. பொறி வச்சுப்பிடிச்சும் பூனைகளை வச்சும் கொல்றாங்க’ என்றது அது. அதை ஆமோதித்த பூனை எலி சொல்றது சரிதான். எங்களையும் மனுஷங்க, எலி பிடிக்கறதுக்குதான் வளர்க்குறாங்க! அவங்க ‘பெட்’ல ‘சோஃபா’ல கூட உட்காருவோம். என்னோட ‘பெட்’ செல்லம்னு தூக்கி கொஞ்சுவாங்க. ஆனா அவங்க வெளியே கிளம்பும் போது குறுக்கே வந்துட்டா மட்டும் ‘சகுனமே சரியில்ல. போன காரியம் உருப்பட்டா மாதிரிதான்’னு சொல்வாங்க" என்றது.

    சிங்கராஜா, அடுத்து யார் முறையீடு? என்று கம்பீரமாகக் கேட்டது. வாலை ஆட்டியபடி முன்னே வந்த நாய்க் குட்டி நாங்க விசுவாசமா மனுஷங்க வீட்டை காப்போம். அவங்களும் எங்கமேல் பாசமாவே இருப்பாங்க. பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட ‘எங்க நாய்க்குட்டியை நம்பி நாங்க 10 நாள் கூட வெளியூர் போவோம். அவ்வளவு பாதுகாப்பா வீட்டை காவல் காக்கும். ஒருத்தற உள்ளே விடாது’ என்பாங்க பெருமையாக. ஆனா எங்களுக்கு 6 அல்லது 7 வயசாயிட்டா ஊசி போட்டு எங்களை கொல்லவும் சிலர் தயங்கறதில்லை என்று கொன்னதும் அங்கே நிலவிய அமைதியை தன் பிளிறலால் கலைத்தது யானை. நாங்க இருந்தாலும் 1000 பொன், இறந்தாலும் 1000 பொன்னுன்னு சொல்வாங்க. அந்த பொன் மொழிக்கேற்ப வாழும் எங்களை இந்த மனிதர்கள் ஏமாத்தி குழிவெட்டி பிடிச்சு அல்லது காட்டுக்குள் வந்து சுட்டு கொல்றாங்க. தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக எங்களது தந்தங்களையும் வாலில் இருக்கிற முடியையும் பிடுங்கி ஆபரணங்கள் செஞ்சுக்கிறாங்க என்றது அது. கழுதை, எங்களை எப்போதுமே மனிதன் சுமை தாங்கியாத்தான் பார்க்கிறான். அவனோட சுமையை தாங்கும் எங்களிடம் கருணை காட்டாட்டாலும் யாராவது கர்ணகடூரமாக பாடினால் அதற்கு எங்களை உதாரணம் காட்டி கிண்டல் செய்கிறான் என்று சொல்லிவிட்டு லேசாக கனைத்தது. அடுத்தது நான்தான் பேசப்போகிறேன் என்ற தோரணையில் கிளையிலிருந்து தொங்கியபடி கீழே இறங்கிய பாம்பு, சிங்கராஜாவின் முன்பு படமெடுத்தாடியது.

    ரிலாக்ஸ்... நாகராஜ். இப்படி நின்னா எனக்கே பயமா இருக்கே! அதோட பாம்புன்னா படையும் நடுங்கும் என்பாங்களே! உனக்கென்ன பிரச்சனை? என்றது சிங்கம். பாம்பு, அரசே! எங்களை தெய்வம்னு கொண்டாடுறாங்க ஆனா அது எல்லாம் எங்களை கோயில்கள்ள கல்லுல பார்க்கற வரைக்கும்தான்! எதிரில பார்த்துட்டாலோ அடித்தே கொன்னுடுவாங்க. இதில் எங்கள் தோலுக்கு வேறு மவுசு இருப்பதால் பாம்பு பிடிப்பவர்களின் கையில் சிக்கிவிடும்போது எங்க கதி அதோகதிதான் என்று சொல்லி ‘புஸ்’ஸென்று பெருமூச்சுவிட்டது.

    அப்போது தாவிக் குதித்தபடி அங்கு வந்த குரங்கு, நாங்க அங்கும் இங்கும் குதித்தபடி செய்யும் சேஷ்டைகளைக் காட்டி காசு சம்பாதிக்க குரங்காட்டிகள் எங்களை பிடிச்சுட்டுப் போறாங்க. முரண்டினா அடிதான் என்றதும் யோசனையிலாழ்ந்த சிங்கராஜாவின் கண்களில் பட்டது காகம். அதன் பார்வையை புரிந்து கொண்டு கிளையிலிருந்து கீழே பறந்து வந்து உட்கார்ந்த காகம் இந்த மனிதர்களுக்கு தேவைப்பட்டால் எங்களை பித்ருக்களாக வழிபடுவர். ‘கா... கா’ன்னு அழைத்து, அழைத்து சோற்று உருண்டைகளை வைத்து நாங்கள் சாப்பிடுவதை அழகு பார்த்து விட்டு திருப்தியா போவார்கள். அதே சமயம் மொட்டைமாடியில் வடகம் காயப்போட்டிருக்கும் போது அதிலிருந்து நாங்கள் ஒன்றை எடுத்து விட்டாலும் ‘சனீஸ்வரனே துரப்போ’ என்று விரட்டுவார்கள். ஒரே மனிதனே எங்களை பித்ருன்னு சொல்வான். சனின்னும் சொல்வான்" என்றது இலக்கண சுத்தமாக. இவ்வாறு அனைத்து விலங்குகளின் குறைகளையும் கேட்ட சிங்கராஜா கம்பீரமான தனது ராஜநடையுடன் அங்கும் இங்கும் நடத்தபடி பேச ஆரம்பித்தது.

    நான் காட்டுக்கே ராஜா! ஆனா என்ன மட்டும் விட்டாங்களா? நான் சுதந்திரமா வேட்டையாட முடியலை. எனக்கு எப்ப பசிக்குதோ அப்ப வேட்டையாடி எனக்கு தேவைப்படும் மாமிசத்தை தின்பேன். ஆனா எங்களைப் பிடிச்சுட்டுப்போயி ஒருகூண்டுல அடைச்சுவைச்சு அவங்க போடற மாமிசத்தை சாப்பிட வைக்கிறாங்க மனுஷங்க. எங்களால சுதந்திரமா நடமாட முடியல. காட்டு ராஜாக்களான எங்களுக்கே இந்த கதின்னா உங்களையெல்லாம் பத்தி நினைச்சுக்கூட பார்க்க முடியல்லே என்றது. உடனே நரி எழுந்திருந்தது. இதுக்கெல்லாம் ஏதாவது செஞ்சே ஆகணும் என்ற  அதைப்பார்த்து சிங்கராஜா ‘கட்டுப்பாடு இல்லாத  நம்மையெல்லாம் மனுஷன் அடக்குறான். நாம வாழற இடத்துல அவங்க வந்து வீடுகட்டிகிட்டு ‘அவங்க இடத்துல நாம இருக்கோம்’னு சொல்லி நம்மள அழிக்கிறான். நாம தாகத்திற்கு குடிக்கிற நீர்நிலையையெல்லாம் அவன் தூர்த்து வீடுகட்டறதால நமக்கு அத்தியாவசிய தேவைகூட கிடைக்கிறதில்லே. இதுக்கெல்லாம் ஒரே வழிதான் இருக்கு. அவங்களை யெல்லாம் நம்ம இடத்துக்கு வரவழைக்கணும். அவங்க நமக்கு செஞ்சதையெல்லாம் நாம அவங்களுக்கு செய்யணும். ஒருநாள் அவங்க நம்மளைப் போல ஆனாதான் அவங்களுக்கு நம்மோட பிரச்சனை புரியும். இதுக்கு தந்திரபுத்தி அதிகமா இருக்கிற நரியே! நீ ஒருவழி சொல்லு. இப்ப கலைஞ்சுபோவோம். இதுதான் என்னோட தீர்ப்பு" என்று தீர்மானமாகச் சொல்லிற்று. அதற்கு சம்மதித்து அனைத்து விலங்குகளும் அமைதியாக கலைந்து சென்றன.

    அடடா! அப்படி நடந்தால் நிலைமை என்னவாகும்...! இறைவா! மனிதன் மனதிலுள்ள மிருகத்தன்மையை உடனே மாற்று. ‘வாழு! வாழவிடு’ என்ற மனப்பான்மையை அவனுக்கு ஏற்படுத்து! வையகத்தை காப்பாற்று!    

    * * * * *

    2. இதுவும் அதுவும்

    பாட்டி... நான் +2 தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கேன். கொஞ்சநேரத்தில் T.V. லேர்ந்தெல்லாம் என்னை பேட்டி எடுக்க வருவாங்க பாரேன்.

    ரொம்ப சந்தோஷம்மா! அம்மாகிட்ட சொல்லிட்டயா?

    இல்ல! அம்மா காலையிலேயே ஹாஸ்பிடல் கிளம்பிப் போயிட்டாங்க. முக்கியமான ஆபரேஷன் இருக்காம். 8 மணிநேரத்திற்கு யாரும் அவங்களை ‘டிஸ்டர்ப்’ பண்ணக்கூடாதுன்னு ஹாஸ்பிடல்ல சொல்றாங்க!!

    அப்பாகிட்ட ஃபோன் பண்ணி சொன்னியா?

    இல்ல பாட்டி. ஃபோன் Reach ஆகல. பரவாயில்ல பாட்டி! அதான் நீ இருக்கியே என்றபடி எழுந்தாள் மதுமதி.

    பாட்டி தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தாள். பாவம் இந்த குழந்தை இன்னிக்கு இவ்வளவு சந்தோஷமான சேதி சொல்றா. இதை அனுபவிச்சு பெருமைப் படவோ குழந்தையை பாராட்டவோ பெத்தவங்களுக்கு நேரமில்லை. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் குழந்தை 1st Rank  எடுத்துட்டு Rank card  காட்ட வருவா. ஆனா அப்பாவோ அம்மாவோ வந்திருக்கக்கூட மாட்டாங்க. எதிர்பார்த்து பார்த்து, நேரமாகி அப்படியே தூங்கிடுவா. நான்தான் கார்டை எடுத்து அவங்க வந்தப்புறம் காண்பிப்பேன். தூங்கும் குழந்தையை கிஸ் பண்ணிட்டு ‘அடுத்த நாளுக்கு ஒரு Gift வாங்கி அம்மா மறக்காம குழந்தைகிட்ட கொடுத்துடுங்க’ன்னு என்னிடம் சொல்வாங்க. நானும் கொடுப்பேன்.

    ஆனா அந்தக் குழந்தை ஏமாத்தத்தை எதுவும் வெளிக்காட்டிக்காம ‘அப்பாஅம்மாகிட்ட Thanks சொல்லிருங்க பாட்டி’ன்னு சொல்லிட்டு போயிடுவா. ஆனா முகத்தில சின்னதா தெரியும் ஏக்கத்தை என்னால் உணர முடிகிறது! என்பேத்திக்கும் எனக்கும் ஒரே மாதிரியா ஏக்க உணர்வு. நான் என் பெண்ணை மிஸ்பண்றேன். அவ அம்மாவை மிஸ்பண்றா. அவ்ளோ தான். பாட்டியின் சிந்தனையைக் கலைத்தது பேத்தியின் குரல் பாட்டி நான் சொன்ன மாதிரி Pressலேர்ந்து வந்திருக்கா. நீ வா... வந்து என்னோட உட்காரு.

    ...நான் எதுக்கும்மா! எனக்கு ஒண்ணும் தெரியாது

    இல்ல நீ வந்துதான் ஆகணும்.

    பேத்தியின் வற்புறுத்தலுக்காக பாட்டி வந்து உட்கார்ந்ததும், விதவிதமாக காமிராக்கள் ‘கிளிக்’கின. நிருபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியை கேட்க ஆரம்பித்தார்கள்.

    Congrats +2 தேர்விலே மாநிலத்திலேயே முதலாவதா வந்திருக்கீங்க. மேலே என்ன படிக்கப்போறீங்க. இங்கே படிப்பீங்களா, வெளிநாடு போவீங்காளா

    எந்த காலேஜில சேரப்போறீங்க?

    Parents எங்க? அவங்கள மிஸ் பண்றீங்களா என்று விதவிதமான கேள்விகள்! அனைத்துக்கும் சமாளிப்பாக பதில் சொல்லிவிட்டு எழுந்தாள் மதுமதி.

    இரவு 9 மணி. அம்மா வந்தாள். வீட்டில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பயம், ஏக்கம், குற்ற உணர்வு அனைத்தும் சேர்ந்து அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. பாட்டிவந்தாள்.

    என்னம்மா இன்னிக்கும் உன்னால நேரத்துக்கு வரமுடியலை. எப்பவும் வேலை வேலைன்னா எப்படிம்மா. உனக்கு என்னை பார்க்கறதுக்கே நேரமில்லை அப்புறம்தானே உன் பொண்ணைப் பார்க்கிறது. எப்போதும் பரிவுடன் பேசும் அம்மாவின் குரலில் தற்போது லேசான கண்டிப்பு தெரிவதை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழத் தொடங்கிவிட்டாள் அம்மா. "என்னம்மா நீயே இப்படி பேசற. வரமுடியலையேம்மா... அங்க போராடிக்கிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1