Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaalam Thappamal Paathukko!
Thaalam Thappamal Paathukko!
Thaalam Thappamal Paathukko!
Ebook97 pages37 minutes

Thaalam Thappamal Paathukko!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போட்டி மிகுந்த இந்த உலகில் வாழ்க்கையில் துடிப்புடன் நல்ல முறையில் முன்னேற வழிகாட்டும் உத்திகள் ஏராளம். வெற்றி அடைவதற்கான உத்திகளைக் கூறும் நூல் இது!

ராபர்ட் க்ரீன் எழுதிய சக்தி பெற 48 விதிகள் வெற்றி பெறுவதற்கான நவீன உத்திகளைக் கூறும் ஒரு புத்தகம். . இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகமும் சில விதிகளைப் பற்றியும் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. இது காட்டுவது வெற்றிக்கான புதிய உத்திகள். நமது அறம் சார்ந்த அறிவுரைகளும், வெற்றி உத்திகளும் கூட கதைகள், கட்டுரைகள் வாயிலாக இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. இவை என்றும் நிலைத்திருக்கும், அறம் சார்ந்த வெற்றிக்கான, பழைய உத்திகள்! ஆக பழையதும் புதியதுமான வெற்றி உத்திகளைச் சுட்டிக் காட்டி விளக்கும் புத்தகம் இது.

இதன் ஜீவநாடியாக அமைவது ‘தாளம் தப்பாமல் பாத்துக்கோ’ என்ற கட்டுரை! நூலில் உள்ள சில அத்தியாயங்கள் மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! சரணாகதி உத்தியைக் கையாள் : பலவீனத்தைச் சக்தியாக மாற்று! எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் - அடுத்தவரை பலி கொடுத்தாவது! செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு சக்தி பெற 48 விதிகள் : ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள நூல்! ஒரு அறிமுகம்! மர்பி விதி ஔவையார் லா! (Law) வள்ளுவர் ரூல்!!(Rule) பாரதியார் ஃபார்முலா!!! (Formula)

ரஷிய சூத்திரங்கள்!
Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580151010771
Thaalam Thappamal Paathukko!

Read more from S. Nagarajan

Related to Thaalam Thappamal Paathukko!

Related ebooks

Reviews for Thaalam Thappamal Paathukko!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaalam Thappamal Paathukko! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தாளம் தப்பாமல் பாத்துக்கோ!

    Thaalam Thappamal Paathukko!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!

    2. யாரை எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்து கொள் - தவறான மனிதரைக் கோபத்திற்குள்ளாக்காதே!

    3. சரணாகதி உத்தியைக் கையாள்: பலவீனத்தைச் சக்தியாக மாற்று!

    4. எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் - அடுத்தவரை பலி கொடுத்தாவது!

    5. செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு!

    6. இலவச உணவை இகழ்ந்து ஒதுக்கு!

    7. கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!

    8. சக்தி பெற 48 விதிகள்: ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள நூல்! ஒரு அறிமுகம்! - 1

    9. சக்தி பெற 48 விதிகள்: ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள நூல்! ஒரு அறிமுகம்! - 2

    10. பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி?

    11. மர்பி விதி – Murphy’s Law!

    12. மர்பி விதி போல உள்ள இன்னும் பல விதிகள்!

    13. ஔவையார் லா! (Law) வள்ளுவர் ரூல்!!(Rule) பாரதியார் ஃபார்முலா!!! (Formula)

    14. ரஷிய சூத்திரங்கள்!

    15. எதிரிகளை ஒழிக்க வழி!

    16. சுவரின் மறுபக்கம்!

    17. அந்த நல்ல காரியம் நடக்காதா? யார் சொன்னது? அது நடக்கும்; நடந்தே தீரும்!

    18. இறப்பதற்கு முன்னர் ஸ்டீவ்ஸ் ஜாப்ஸின் அற்புத அறிவுரை!

    19. ஃப்யூஸ் போன பல்புகள்!

    20. தாளம் தப்பாமல் பாத்துக்கோ!

    முன்னுரை

    கிடைத்தற்கரிய மனிதப் பிறவி பெற்ற ஒவ்வொருவரும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து தன் முத்திரையை இந்த மண்ணுலகில் பதிக்க வேண்டியது அவசியம்.

    போட்டி மிகுந்த இந்த உலகில் வாழ்க்கையில் துடிப்புடன் நல்ல முறையில் முன்னேற வழிகாட்டும் உத்திகள் ஏராளம்.

    இதை வாழ்ந்து காட்டிய பெரியோர்களும் ஏராளம்.

    இந்த வகையில் வெற்றிக் கலை பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளைக் கடந்த 50 ஆண்டுகளாகப் பல்வேறு பத்திரிகைகளிலும் இணையதள ப்ளாக்குகளிலும் எழுதி வந்துள்ளேன். அந்தக் கட்டுரைகளில் சிலவற்றின் தொகுப்பாக வெற்றிக் கலை, வெற்றிக்கலை உத்திகள், வெற்றிக்குத் திருக்குறள், முன்னேறவும், முன்னேற்றவும் சில கதைகள், சம்பவங்கள், கருத்துக்கள் ஆகிய புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

    இப்போது மலர்வது தாளம் தப்பாமல் பாத்துக்கோ! - வெற்றி உத்திகள் – பழையதும் புதியதும்!! என்ற இந்தப் புத்தகம்.

    ராபர்ட் க்ரீன் எழுதிய சக்தி பெற 48 விதிகள் வெற்றி பெறுவதற்கான நவீன உத்திகளைக் கூறும் ஒரு புத்தகம்.

    இது சர்ச்சைக்கு உள்ளான புத்தகம்; இந்தக் காலத்திற்கேற்ற பல வழிமுறைகளை இது முன் வைப்பதால் கடுமையாக விமரிசிக்கப்பட்ட புத்தகமும் கூட. இது அமெரிக்காவில் சிறைகளில் தடை செய்யப்பட்ட புத்தகம். ஆனால் பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.

    இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகமும் சில விதிகளைப் பற்றியும் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. இது காட்டுவது வெற்றிக்கான புதிய உத்திகள். இந்த விதிகளைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.

    நமது அறம் சார்ந்த அறிவுரைகளும், வெற்றி உத்திகளும் கூட கதைகள், கட்டுரைகள் வாயிலாக இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. இவை என்றும் நிலைத்திருக்கும், அறம் சார்ந்த வெற்றிக்கான, பழைய உத்திகள்!

    ஆக பழையதும் புதியதும் கலந்த இந்தப் புத்தகத்தின் ஜீவநாடியாக அமைவது ‘தாளம் தப்பாமல் பாத்துக்கோ’ என்ற கட்டுரை!

    மேலே கூறியுள்ள புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் அனைத்தையும் படித்து நமது திறனுக்கும் அறிவுக்கும் லட்சியத்திற்கும் உரித்தான ஒரு பாதையை நமக்கென நாம் வகுத்துக் கொண்டால் திருப்திகரமான, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை அமைவது நிச்சயம்.

    இந்தக் கட்டுரைகளை லண்டனிலிருந்து வெளியாகும் www.tamilandvedas.com தளத்தில் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    நூற்றுக்கும் மேற்பட்ட எனது நூல்களை தரத்துடன் அழகுற டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA இந்த நூலையும் வெளியிடுகிறது. இதன் உரிமையாளர் டாக்டர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேயர்கள் வழக்கம் போல தங்கள் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன்; வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    நன்றி.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    19-2-2024

    1. மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!

    நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.

    அதில் ஒன்று: மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! – என்பதாகும்.

    இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.

    அது இதோ:

    குட்டி ஆமை ஒன்று மலை மீதும், சமவெளி மீதும், அதில் அருகில் பாய்கின்ற நதியிலும் விளையாடுவது வழக்கம்.

    நல்ல புத்திசாலி ஆமை அது.

    ஒரு நாள் அந்த ஆமை மலையிலிருந்து கீழே வந்த போது யானை ஒன்று எதிர்த்தாற் போல வந்தது.

    ஆமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த யானை, குட்டி ஆமையே, வழியிலே வராதே. என் காலில் அகப்பட்டால் நீ மிதிபட்டுச் சாவாய் என்று கூறியது.

    ஊம். உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு என்று கூறியது ஆமை.

    யானை சிரித்தது.போ, போ

    Enjoying the preview?
    Page 1 of 1