Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1
Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1
Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1
Ebook147 pages52 minutes

Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580151008247
Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1

Read more from S. Nagarajan

Related to Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1

Related ebooks

Reviews for Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1 - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும், கட்டுரைகளும் பாகம் – 1

    Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum Katturaigalum Part - 1

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சகுந்தலா பாரதி - என் தந்தை

    2. யதுகிரி அம்மாள் - பாரதி நினைவுகள்

    3. என் கணவர் - செல்லமா பாரதி

    4. வெ.சாமிநாத சர்மா - நான் கண்ட நால்வர்

    5. ரா.அ.பத்மநாபன் - பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

    6. அமுதன் - பாரதியார் பிறந்த நாள்

    7. வ.ரா. - மகாகவி பாரதியார்

    8. P. Mahadevan - Subramania Bharati - Patriot and Poet

    9. ரா.அ.பத்மநாபன் - பாரதியார் கவிநயம்

    10. கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் - கண்ணன் என் கவி

    11. பி.ஸ்ரீ. - பாரதி நான் கண்டதும் கேட்டதும்

    12. கல்கி - பாரதி பிறந்தார்

    13. பெ.நா.அப்புஸ்வாமி - பாரதியை ஒட்டிய நினைவுகள்

    14. பெ.நா.அப்புஸ்வாமி - பாரதியை ஒட்டிய நினைவுகள்

    15. விஜயா பாரதி - ‘பாரதியாரின் Annotated Biography (With a National Historical Background) ’

    16. ஏ.கே.செட்டியார் - குமரி மலர் கட்டுரைகள் - 1

    17. ஏ.கே.செட்டியார் - குமரி மலர் கட்டுரைகள் - 2

    18. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் - 3

    19. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் - 4

    20. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 5

    21. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6

    22. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 7

    23. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 8

    24. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 9

    25. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 10

    26. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 11

    27. உ.வே.சாமிநாதையர் -பாரதியார் பற்றி நினைவு மஞ்சரி

    28. ஹரிகிருஷ்ணன் - பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள்!

    29. சின்ன அண்ணாமலை - சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

    30. எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு : சென்று போன சில நாட்கள்

    என்னுரை

    பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

    சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.

    அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.

    பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.comஇல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பே இந்த நூல்.

    இதை பாரதி அன்பர்கள் படித்தால் ஒரு பேரின்பத்தை அடைவது நிச்சயம். மூல கட்டுரைகளையும் நூல்களையும் வாங்கிப் படிப்பதும் நிச்சயம்.

    இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

    இந்தத் தொடர் வெளிவந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தைக் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

    பங்களூர் ச.நாகராஜன்

    3-3-2022

    1

    சகுந்தலா பாரதி - என் தந்தை

    பாரதி இயல்

    பாரதி இயல் இன்று ஒரு பெரும் துறையாக ஆகிவிட்டது! இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அபாரமான அபூர்வமான மேதையான அவர் தொடாத துறை இல்லை; தீர்க்க தரிசனத்துடன் பிரம்மாண்டமான ஒரு பாரதத்தை அவர் தன் மனக் கண்களால் கண்டார்.

    சிறுகச் சிறுக அவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு சிறிய அளவில் மஹாகவி பாரதியார் கவிதைகள், மஹாகவி பாரதியார் கதைகள், மஹாகவி பாரதியார் கட்டுரைகள் என்று அப்போது கிடைத்த அவரது படைப்புகளுடன் வெளி வந்த மூன்று தொகுப்புகளைக் கண்டே அறுபதுகளில் அனைவரும் அசந்து போயிருந்தார்கள்.

    இன்றோ! அவரது பன்முகப் பரிமாணம் அடங்கிய அனைத்துப் படைப்புகளும் பரந்த அளவில் கிடைத்துள்ளன. அவை அவர் எந்த அளவு பன்முகப் பரிமாணம் கொண்ட மாமேதை என்பதை உணர்த்துகின்றன.

    அவரைப் பற்றிய சுவையான நூல்கள் ஏராளம், கட்டுரைகள், கவிதைகளோ பல்லாயிரம். பின்னாளில் கிடைத்த மஹாகவியின் சில நூல்களும் கூட வெளியிடப்பட்டுள்ளன.

    இவற்றில் முக்கியமானவற்றைத் தொகுத்துத் தந்தால் அவரைப் பற்றி அறிய ஒரு சரியான வழிகாட்டியாக அந்த நூல் அமையும்.

    அந்த முயற்சியில் ஆசை கொண்டு ஆரம்பிக்கும் ஒரு சிறிய முயற்சி; நல்ல முயற்சி இது.

    நூல்கள், முக்கிய கட்டுரைகள், கவிதைகளின் பட்டியலை ஆரம்பிப்போமா?

    1.என் தந்தை

    பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பதிப்பை பாரதி தமிழ்ச் சங்கம், கல்கத்தா இதை வெளியிட்டது.

    பாரதி நினைவுக்குச் சங்கம் செய்யும் பணியைப் பாராட்டும் வகையில் தான் திருமதி சகுந்தலா பாரதி அவர்கள் இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்களுக்கு நல்கினார்கள் என்றே நம்புகிறோம். என்று பாரதி தமிழ்ச் சங்கம் அறிமுக உரையை வழங்குகிறது.

    88 பக்கங்கள் அடங்கிய நூலில் ஏராளமான அற்புதமான சம்பவங்களை எளிய நடையில் சகுந்தலா பாரதி தெரிவிக்கிறார். அவர் தரும் சில தகவல்கள்:-

    க்ஷத்திரியனைப் போன்ற வீர மரணத்தை அவர் விரும்பினார்.

    என் தந்தையார் தேசத்தின் மீதுள்ள அன்பிற்கு அடுத்ததாக என் மீது பிரியம் செலுத்தினார்.

    எங்கள் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கம்,

    நிவேதிதா தேவியார் தாம் இமயமலைக்குச் சென்றிருந்த போது அங்குள்ள மரத்தின் இலையொன்றைக் கொண்டு வந்திருந்ததை தன் ஞாபகார்த்தமாக அளித்திருந்தார். அதை என் தாயார் தன் நகை (இல்லாத) பெட்டியில் வைத்திருந்தார்.

    முதல் ஐந்து பக்கங்களில் ஏராளமான தகவல்களில் மேலே கண்டவை சில.

    முழுப் புத்தகமும் பாரதியார் பற்றிய ஒரு தங்கச்

    Enjoying the preview?
    Page 1 of 1