Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Upanidatha Thendralum Vedha Mazhaiyum
Upanidatha Thendralum Vedha Mazhaiyum
Upanidatha Thendralum Vedha Mazhaiyum
Ebook219 pages1 hour

Upanidatha Thendralum Vedha Mazhaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே பார்மிசை ஏதொரு நூல் இதுபோலே - என்று பாரதி ஏன் இந்து மத உபநிஷதங்களைப் புகழ்ந்தான்? என்பதை அந்த நூல்களைப் படித்தால்தான் புரியும். எழுந்திரு! விழித்திரு! குறிக்கோளை அடையும்வரைநில்லாது செல்மின் (Arise! Awake! Stop not till the goal is reached) என்ற உபநிஷத வாக்கியத்தை ஏன் விவேகானந்தர் தன்னுடைய தாரக மந்திரமாகக் கொண்டார் என்பதை அறியவும் உபநிஷதங்களைப் பயிலவேண்டும்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580153509279
Upanidatha Thendralum Vedha Mazhaiyum

Read more from London Swaminathan

Related to Upanidatha Thendralum Vedha Mazhaiyum

Related ebooks

Related categories

Reviews for Upanidatha Thendralum Vedha Mazhaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Upanidatha Thendralum Vedha Mazhaiyum - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உபநிடதத் தென்றலும் வேத மழையும்

    Upanidatha Thendralum Vedha Mazhaiyum

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!

    2. உபநிஷத அற்புதங்கள் – 1

    3.உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

    4.உபநிஷத அற்புதங்கள்–Part 3; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

    5.வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்!

    6.காந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்!

    7. த… த… த… தேசிய கீதம் ஆக்கலாமே!

    8. 108 உபநிஷத்துகளின் பட்டியல்

    9.ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல்

    10.வரருசி தமிழனா? க-ட-ப- யாதி எண் முறையை அவர் கண்டுபிடித்தாரா?

    11.சம்ஸ்கிருதம் என்னும் சமுத்திரம்!

    12.மர்மத் தவளைகள்; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்

    13.வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2

    14. காடுகள் பற்றி ரிக் வேத கவிதை – கொஞ்சம் என் சுய சரிதை

    15.ரிக் வேதத்தில் குழப்பத்தை உண்டாக்கும் ‘மனு’க்கள்!

    16.ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம்

    17. வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு அறிஞர்கள்!

    18.வானவியல் முறையில் வேதத்தின் காலம்!

    19.ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி ராபின்ஸனின் சுவையான கதை

    20. ‘நாங்கள் ரிஷிகள் ஆகவேண்டும்’ – ரிக் வேதத்தில் கோரிக்கை

    21.ரிக்வேதத்தில் வைரஸ் நோய் தீர்க்கும் மந்திரம்?

    22.ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -1

    23. ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-2

    24. ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 3

    25.ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4 (Post No.10,212)

    26.அழியாத மா கவிதை -ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை!

    27.கிரிப்பித் முகத்திரை கிழிந்தது! அழியாத மா கவிதை -ரிக் வேதக் கவிதை! – பகுதி 2

    28. அழியாத மா கவிதை -3, ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை - 3

    29. தமிழில் ரிக் வேதக் கவிதைகள் -Part 1

    30.தமிழில் ரிக் வேதக் கவிதைகள் - 2

    முன்னுரை

    பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

    பார்மிசை ஏதொரு நூல் இதுபோலே - என்று பாரதி ஏன் இந்து மத உபநிஷதங்களைப் புகழ்ந்தான் ? என்பதை அந்த நூல்களைப் படித்தால்தான் புரியும். எழுந்திரு! விழித்திரு! குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்மின் (Arise! Awake! Stop not till the goal is reached) என்ற உபநிஷத வாக்கியத்தை ஏன் விவேகானந்தர் தன்னுடைய தாரக மந்திரமாகக் கொண்டார் என்பதை அறியவும் உபநிஷதங்களைப் பயிலவேண்டும். மஹாத்மா காந்தி ஏன், ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் முதல் ஸ்லோகத்தைப் பாராட்டிப் பரப்பினார் ? ஆதி சங்கரர் ஏன் முதல் பத்து உபநிடதங்களுக்கு விரிவான உரை எழுதினார் ? இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் ‘சத்யமேவ ஜயதே’ (வாய்மையே வெல்லும்) என்ற உபநிஷத வாக்கியத்தை சின்னங்களில் ஏன் பொறித்தனர்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்க உபநிடதங்களைக் கற்கவேண்டும்.

    சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய பகவத் கீதைப் பேருரையிலும் நிறைய உபநிடத மேற்கோள்களைக் காணலாம். நான் பெரிய தத்துவ விஷயங்களை விட்டுவிட்டு ஒரு முகவுரையை மட்டுமே எழுதியுள்ளேன். உபநிடதத்தில் வரும் த...த..த... கதையை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய மைத்ரீம் பஜத பாடலில் காணலாம். அதை எம்.எஸ்.சுப்புலட்சுமி மூலம் ஐ.நா. சபையில் பாடவைத்து உபநிடத ஸம்ஸ்க்ருதச் சொற்களை உலகம் முழுதும் பரவச் செய்தார். காலத்தால் அழியாத மா கவிதை அது.

    இந்த நூலின் இரண்டாவது பகுதியாக, மேலும் பல வேதம் தொடர்பான எனது கட்டுரைகளைச் சேர்த்துள்ளேன். வேதத்தில் இன்னும் புரியாத சொற்கள் எவ்வளவு என்பதை பேய்கள் பற்றிய 4 கட்டுரைகளைப் படித்தால் புரியும். விசுவாமித்திரர்- நதிகள் உரையாடல் கவிதை, காட்டுராணி பற்றிய ரிக் வேத கவிதைகளை முன்னரே எழுதி வெளியிட்டு இருந்தாலும் இப்பொழுது விரிவான வியாக்கியானத்துடன் சேர்த்துள்ளேன். 108 முதல் 121 வரையுள்ள உபநிடதங்களின் பட்டியலை மட்டுமே தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளேன்; விரைவில் அவைகளையும் விரிவாகக் காண்போம்.

    என்னுடைய பிளாக்கில் கட்டுரைகள் வெளியான தேதிகளும், கட்டுரைகளின் வரிசை எண்களும் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கும். உங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக எனது ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்து இருக்கிறேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எழுதவும்.

    புஸ்தகங்களை வாங்கிப் படித்து ஆசிரியர்களை ஊக்குவியுங்கள் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். படித்து மகிழுங்கள்; உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்,

    நவம்பர் 2022

    1.ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!

    நூறு ஆண்டுகளுக்கு முன் எல்லா இந்துக் குழந்தைகளுக்கும் வீட்டிலுள்ள பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நிறைய நீதிக் கதைகள் சொல்லுவார்கள். இவ்வாறு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியவுடன் இரவு நேரம் ஆகிவிட்டால் குழந்தைகள் தாமாகவே அவர்களிடம் செல்லுவர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நல்ல பாடல்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுப்பர். ஒரே ஸ்லோகத்தில் ராமாயணம், பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றையும் கற்றுத்தருவர்.

    18 புராணங்கள், 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், தமிழில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நூல்கள் ஆகியவற்றுக்கான பாடல்களையும் மாணவர்கள் அறிவர். பாடல் வரிகள் என்பன பத்திரிகைகளில் உள்ள துணைத் தலைப்பு அல்லது பெரிய தலைப்புகள் போன்றன. சிறு வயதிலேயே இவைகளைப் பயிற்றுவித்தால் அதை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.

    இந்தவகையில் ஏக ஸ்லோக (ஒரே பாட்டில்) ராமாயணம், ஏக ஸ்லோக பாகவதம், ஏக ஸ்லோக மஹாபாரதம் என்பன முக்கியமானவை.

    ஏக ஸ்லோக ராமாயணம்

    ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

    வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

    வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

    பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

    பொருள்: ஆதியில் ராமன் காடு செல்லல்

    பொன் மானைக் கொல்லல்

    சீதா தேவி கடத்தல்

    ஜடாயு இறத்தல்

    சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

    வாலீ அழிவு,

    கடல் தாண்டல்

    இலங்கை எரிப்பு

    பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

    இதுவே ராமாயணம்

    ஏக ஸ்லோக பாகவதம்

    ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

    மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

    கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

    சைதத் பாகவதம் புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

    பொருள்: ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

    கோபியர் வீட்டில் வளர்ப்பு

    மாயா உருவ பூதனையின் அழிவு

    கோவர்த்தன மலையின் உயர்வு

    கம்ச, கௌரவர்கள் அழிவு

    குந்தீ மகன் காப்பு

    இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

    ஏக ஸ்லோக மஹாபாரதம்

    ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

    த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

    லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

    பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம், ஹ்யேதன் மஹா பாரதம்

    பொருள்: ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

    அரக்கு மாளிகை எரிப்பு

    சூதாட்டத்தில் நாடு இழப்பு

    காட்டில் சுற்றல்

    மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

    ஆநிரை கவர்தல்

    போரில் அழிவு

    சமாதான உடன்படிக்கை மீறல்

    பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

    இதுவே மஹா பாரதம்

    2. உபநிஷத அற்புதங்கள் – 1

    12-3-1995- முதல் சுமார் ஓரிரு மாதங்களுக்கு உபநிஷத புத்தகங்களில் இருந்து சில நோட்ஸ்- Notes எடுத்து வைத்திருந்தேன். சில ஆராய்ச்சி யாளர்களுக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில் அவற்றை அப்படியே தருகிறேன். இது மதம் அல்லது தத்துவ விஷயங்களைப் பற்றியது அல்ல. பொதுவான, சுவையான விஷயங்கள்.

    1.சாந்தோக்ய உபநிஷத்

    வெளி நாடுகளில் முதல் பெயர்/ First name or fore name, குடும்பப் பெயர்/surname என்று இரண்டு பெயர்கள் இருக்கும். அமெரிக்கர்களுக்கு நடுப் பெயரும்(Middle name) உண்டு. இந்த வழக்கம் வேத காலம் முதல் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது மாறி வெறும் ஜாதிப்பெயரை குடும்பப் பெயர் இடத்தில் எழுதும் வழக்கம் தோன்றிவிட்டது சாந்தோக்ய உபநிடதத்தில் உத்தாலக ஆருணன் என்ற பெயரைக் காண்கிறோம் உத்தாலகன் என்பது அவருடைய பெயர் (முதல் பெயர்). ஆருண என்பது குடும்பப்பெயர். அதாவது ஆருணன் மகன் உத்தாலகன்.

    24 வயதுவரை படிப்பு!

    2.சாந்தோக்ய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்பவரைப் பற்றி பேசப்படுகிறது. அவர் உத்தாலக ஆருணனின் மகன். 24 வயதில் வேதம் முழுதும் படித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதில் கவனிக்க வேண்டியது 24 வயது வரை கல்வி. அநேகமாக ஐந்து வயதில் அவருடைய அப்பா குருகுலத்தில் (ஸ்கூலில்) சேர்த்திருப்பார். ஆக 19 வருடம் குரு வீட்டில் தங்கிப் படித்திருக்கிறார். என்ன ஆசர்யம் பாருங்கள். ஒரே குருவிடம் 19 வருஷம் கல்வி!

    அபூர்வ சக்தி

    3.இவ்வளவு வருஷம் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் பிரம்மசர்யம் அனுஷ்டித்தால் அவர்களுக்கு மந்திர சக்தி, அபூர்வ சக்திகள் வந்துவிடும். 12 ஆண்டுகளே போதும், அபூர்வ சக்திகள் பெற என்பது சுவாமி விவேகாநந்தரின் அருள் வாக்கு.

    4.இயற்கை உவமைகள்

    சாந்தோக்ய உபநிஷத்தில் இயற்கை நடனமாடுவதையும் படித்து இன்பமுறலாம்.

    தேனீ—தேன் உவமை

    ஆறு – கடல் உவமை

    மரம் -- சத்து உவமை

    ஆலமரம் – விதை உவமை

    உப்பு – நீர் உவமை

    குருடன் -- குரு உவமை

    எவ்வளவு இயற்கையோடு இயைந்த வாழ்வு!

    இயற்கையுடன் இணைந்து விட்டால் புத்தகமே வேண்டாம். அதை விட நிறைய ஞானம் பெறலாம் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் (William Wordsworth):

    One impulse from a vernal wood

    May teach you more of man,

    Of moral evil and of good,

    Than all the sages can.

    5.விஞ்ஞான சோதனைச் சாலை!

    இந்த உபநிஷதத்தில் நாம் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் சோதனைச் சாலையில் Laboratory என்ன செய்கிறோமோ அதை குரு சொல்லித் தருகிறார்.

    தம்பி, கொஞ்சம் உப்பைக் கொண்டு வா. அந்த கோப்பையில் உள்ள தண்ணீரில் போடு. உப்பு எங்கே போனது?

    தம்பி, அந்த ஆலமர பழத்தைக் கொண்டுவா. அதைப் பிரி. சிறு விதைகளைப் பார்க்கிறாயா? இவ்வளவு பிரம்மாண்டமான மரத்தை அது எப்படி உண்டாக்கியது?

    இப்படி கேள்விகளை எழுப்பி பிரம்ம ஞானத்தைப் போதிக்கின்றனர் ரிஷிகள்!

    இதை ஆங்கிலத்தில் -- Socratic Method -- சோக்ராடிக் மெதட் என்று சொல்லுவார்கள். அதாவது சாக்ரடீஸ் என்ற அறிஞர் உருவாக்கியது என்று.

    சாக்ரடீஸ், இதை நமிடம் கற்றுக் கொண்டார் என்பது மேல் நாட்டு மக்களுக்குத் தெரியாது! சாக்ரடீஸ், அலெக்சாண்டர் ஆகியோர் இந்து சந்யாசிகளிச் சந்தித்தது பற்றி சுவாமி விவேகாநந்தரும் பரமஹம்ச யோகாநந்தாவும் எழுதி இருப்பதை ஏற்கனவே கொடுத்து விட்டேன்.

    6.கடோபநிஷத்

    இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது. உலகிலேயே

    Enjoying the preview?
    Page 1 of 1