Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengalum Ambani Thaan
Neengalum Ambani Thaan
Neengalum Ambani Thaan
Ebook141 pages48 minutes

Neengalum Ambani Thaan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு கட்டுரையோ, அல்லது கதையோ படித்தேன் என்றால், ஏதாவது ஒரு வரி என் மனதிற்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கி விடும். அந்த தாக்கத்தை, ஒரு தாயின் வயிற்றில் கரு வளர்வது போல, அதை வளர்த்து அதை படைப்பாக பதிவிட்டால்தான் எனக்கு உறக்கமே வரும். அப்படி உருவான கட்டுரைகள்தான் தன்னம்பிக்கைக் கட்டுரைகளாக இந்த புத்தகத்தில் வெளியாகி உள்ளது.

Languageதமிழ்
Release dateNov 4, 2023
ISBN6580170710300
Neengalum Ambani Thaan

Related to Neengalum Ambani Thaan

Related ebooks

Reviews for Neengalum Ambani Thaan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengalum Ambani Thaan - K. Asokan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீங்களும் அம்பானி தான்

    (தன்னம்பிக்கைக் கட்டுரைகள்)

    Neengalum Ambani Thaan

    Author:

    கே. அசோகன்

    K. Asokan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-asokan

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    1. அடையாளம்

    2. காசு, பணம், துட்டு

    3. விமானி

    4. சிரிப்பாலே உயர்வோம்

    5. சிறந்த புகைப்படக்காரர் ஆக புகழ் பெற வேண்டுமா?

    6. தவிர்க்க வேண்டிய பணியாளர்கள்

    7. தன்னம்பிக்கை நாயகி பிரியங்கா சோப்ரா

    8. தொழில் முனைவோரா?

    9. நல்ல தலைவனாக!

    10. நிறுவனத் தலைவர்களுக்கு டிப்ஸ்

    11. நீங்களும் அம்பானிதான்!

    12. பணக்காரர்களின் பாராட்டும் குணங்கள் பத்து!

    13. பயனுள்ள நூல்கள் பத்து

    14. பொறாமை

    15. மன அழுத்தமா? குறைப்பதற்கான வழிகள்

    16. மனவலிமை அதிகப்படுத்தும் வழிகள் பத்து

    17. முந்திரிக் கொட்டையாயிரு

    18. மேலாளர்ன்னா எப்படி இருக்கணும்?

    19. கற்றது கையளவு, கல்லாதவை உலகளவு

    20. வேலைக்கு அடிமை நீங்களா?

    21. ஜப்பானியர்களின் நல்ல பழக்கங்கள்

    22. வருமான வரி சிலத் தகவல்கள்

    23. முகமூடிகள்

    24. பில்கேட்ஸ் பேவரைட் புத்தகம்

    25. வேலையைச் சுலபமாக செய்ய

    26. வெற்றி - தன்னம்பிக்கை

    27. கிருஷ்ணா

    28. படைப்புத் தடை

    29. பொன் விலங்கு

    30. தற்பெருமை

    31. உணவுக் கலாச்சாரம்

    32. கிழியும் சேலை கிழியா பாட்டு

    33. தப்பு கூடத் தப்பில்லேதான்

    34. செமையான சாப்பாடு

    35. பதவி

    36. புள்ளிகள்

    வாழ்த்துரை

    கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்பது பழமொழி. எதுவும் தெரியாமல் பிறந்த நாம் அறிஞனாகப் படிப்பு மிக அவசியம். பல்வேறு துறை சார்ந்தத் தகவல்களை இதுபோன்ற கட்டுரை நூல்கள் மூலம் எளிதில் பெற்றுவிடலாம்.

    பல்வேறு கட்டுரை நூல்களைப் படித்து படைப்பாளராகவோ, பேச்சாளராகவோ மாறித் தனித்திறமைகளை மெருகேற்றிக் கொள்ளலாம். உலக அறிவைப் பெற்றுத் தருவதும் இந்த கட்டுரை நூல்கள் தான். அந்த வகையில் கவிஞரும், கதை எழுத்தாளரும். கட்டுரை ஆசிரியரும் ஆகிய கே. அசோகன் அவர்கள் எழுதிய நீங்களும் அம்பானி தான் எனும் கட்டுரை நூல் பல்வேறு விதமான ஆய்வுகளைச் செய்து எழுதிய கட்டுரை நூலாகவே எனக்குத் தோன்றுகிறது

    இந்த நூலில் அடங்கி இருக்கும் 36 கட்டுரைகளை வாசிக்கிற போது, பொது அறிவுச் சார்ந்த, தன்னம்பிக்கைச் சார்ந்த, ஆலோசனைச் சார்ந்த, புத்திமதி சார்ந்த, தனிமனித ஒழுக்க முறை சார்ந்த, பல்வேறு கட்டுரைகள் பல பரிமாணங்களில் அலசி ஆராயப்பட்டு இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

    சிந்தனையைத் தூண்டும் சிறந்த நூல் என்று சொல்லலாம். அத்தனைக் கட்டுரைகளும் வாழ்வியலை செம்மைப்படுத்துகிற, நெறிப்படுத்துகிற கட்டுரையாகவே நூலில் பதிந்து கிடக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம்.

    வெற்றியாளர்களின் அனுபவங்களை வாசிக்கிற போது தன்னம்பிக்கையின் அளவீடு உயர்ந்து கொண்டே போகிறது. உழைப்பு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கிற போது நமக்குள் இருக்கும் சோம்பேறித்தனம் அதல பாதாளத்தில் வீழ்ந்து விடுகிறது.

    இளைய தலைமுறைகளைச் சாதனையாளர்களாக மாற்ற முயற்சிக்கும் அரிய முயற்சி தான் இந்த கட்டுரை நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    படிக்கப் படிக்க புதுமை, விறுவிறுப்பு. மொத்தத்தில் இது ஒரு சிறந்த அறிவு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

    வாழ்க வளர்க.

    என்றும் அன்புடன்

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    9746486845

    என்னுரை

    சிறுவயதில் என்னைப் பிடிப்பதென்றால் ஒன்று நூலகத்தில், இல்லையென்றால் ஏதாவது ஒரு திரையரங்கிற்குள்... ஒளிந்து கிடப்பது எனக்குள் இருக்கும் பழக்கம்.

    நூலகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் வளர்ந்ததால்தான், இன்று இரண்டாவது புத்தகத்திற்கு ஆசிரியனராக வளர்ந்துள்ளேன் என்பதைக் கூறுவதில் பெருமைக் கொள்கிறேன்.

    ஆரம்ப காலத்தில் கவிதைப் புத்தகங்களை அதிகமாக படித்து வந்தேன். அப்படி ஒரு நாள் தாய் மண் என்ற இலக்கிய பத்திரிகையில் ஒரு கவிதையைப் படித்து, அதன் ஈர்ப்பால் நானும் ஒரு கவிதை எழுதி, அதனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் திரு.அரு.அருமைநாதன் அவர்களை சந்தித்துக் கவிதையைக் காட்டிய பொழுது, அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தமும் செய்தார். பின்னர் எங்கு இலக்கிய கூட்டம் நடந்தாலும் அதில் கலந்து கொண்டு. அங்கேயே அப்பொழுதே தலைப்பினை அவர் தர, உடனடியாகக் கவிதை எழுதி படிப்பேன். அவரும் என்னை மேலும் உற்சாகப்படுத்தினார்.

    அதேபோல என் தம்பி மௌனம் ரவி நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் கவிதை, கதை என எழுதி என்னை மெருகேற்றிக் கொண்டு வரும் பொழுதுதான், உதயம் ராம் என்ற நண்பர் அறிமுகம் கிடைத்தது. அவர் தமது உதயம் என்ற கையெழுத்துப் பத்திரிகையிலும், பின்னர் உரத்தச் சிந்தனை என்ற பத்திரிகையிலும், வாசகர் சந்திப்பிலும் கலந்து கொள்ளச் செய்து ஊக்கப்படுத்தி என்னை எழுத்தாளராக மாற்றிய பெருமை அவரையேச் சாரும். மேலும் கவிதைகளுக்காக வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதனில் பல படைப்புகளைப் பதிவிட்டேன், சிறுகதைகள்.காம் மற்றும் பிரதிலிபி ஆகிய வலைத்தளங்கள் என்னை மேலும் ஊக்குவித்தன. பிரதிலிபி தளம் எனக்கு எழுத்தாளர் என்ற அடையாள அட்டையை வழங்கி உற்சாகப்படுத்தியது.

    ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு கட்டுரையோ, அல்லது கதையோ படித்தேன் என்றால், ஏதாவது ஒரு வரி என் மனதிற்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கி விடும். அந்த தாக்கத்தை, ஒரு தாயின் வயிற்றில் கரு வளர்வது போல, அதை வளர்த்து அதைப் படைப்பாகப் பதிவிட்டால்தான் எனக்கு உறக்கமே வரும்.

    அப்படி உருவான கட்டுரைகள்தான் தன்னம்பிக்கைக் கட்டுரைகளாக இந்த புத்தகத்தில் வெளியாகி உள்ளது. நீங்களும் படித்துப் படைப்பாளர் ஆகலாம் தானே. படியுங்கள். சாதனைப் படையுங்கள். மேலும், என்னுடைய படைப்புகளுக்கு ஊக்கமளித்துவரும், எனது மனைவி அ. சகுந்தலா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

    நன்றியுடன்,

    அன்புடன்

    கே. அசோகன்.

    1. அடையாளம்

    ஒரு வளைவு, ஒரு மூக்குக் கண்ணாடி வரைந்து வைத்தால், நமக்கு நினைவுக்கு வருவது, மகாத்மா காந்தியாகத்தான் இருக்கும், மற்றொருவரை மனதில் நிறுத்த இயலாத சரித்திரச் சின்னமாக இந்த அடையாளம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    வெண்தாடி, ஒரு கைத்தடி இவற்றின் அடையாளம்தான் தந்தை பெரியார் என்கிறோம். ஒரு தொப்பி, ஒரு கைத்தடி, ஹிட்லர் மீசை இவைகளின் அடையாளம்தான் நகைச்சுவை ஜாம்பவான் சார்லிச் சாப்ளின் என்கிறோம்.

    இளைய சமுதாயத்தினரிடையே ஆண், பெண் இருபாலாரிடையே காதலென்ற அரும்பு மலர்ந்தவுடனே, அவர்களின் நெஞ்சில் நிழலாடுவது, தன் காதல் மனைவிக்காக எழுப்பிய பளபளக்கும் வெண்மைநிற பளிங்கு கற்களாலான தாஜ்மகால் வந்தே நிற்கும்.

    புத்தரென்றவுடன் போதி மரமும், சிலுவை என்றவுடன் ஏசுபிரானும் முன்னே வந்து நின்று சரித்திரத்தின் சுவடுகளாக இன்னமும் நம் வாழ்வில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    இப்படி மிகச் சிறந்த அடையாளங்களில் மூழ்கி திளைத்து வருகின்ற சமுதாயத்தில், வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்...?

    உயர்படிப்புகளான டாக்டர், இன்ஜினியர், கணிப்பொறியியலில் பலகலைகள் கற்று, அதன்பின் வெளிநாட்டிற்குப் பறந்துச் சென்று பணமீட்ட வேண்டுமெனப் பதறுகிறார்களேத் தவிர, மேற்காணும் அடையாளங்களில் இன்றளவும் வாழ்ந்து வரும் அவர்தம் காட்டியப் பாதையில் இளைஞர்கள் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

    உயர்படிப்பு முடித்தவடன் உயர்பதவியில்

    Enjoying the preview?
    Page 1 of 1