Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jayakanthanin Velivaratha Sirukathaigal
Jayakanthanin Velivaratha Sirukathaigal
Jayakanthanin Velivaratha Sirukathaigal
Ebook135 pages1 hour

Jayakanthanin Velivaratha Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன்னைச் சுற்றி பேசப்படும் பேச்சுக்கள், நிகழும் செயல்கள் ஆகியவற்றை வறட்டுத்தனமான ஒரு பத்திரிகை செய்தியாக ஆக்கி விடாமல் அவற்றிலிருந்து தானும், பிறரும் கற்றுக்கொள்ள வேண்டியதை எண்ணி ஒரு தமிழ் எழுத்தாளராக இவ்வுலகுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

அப்படி தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவரது மூலமாக எனக்கு சில வருத்தமான உண்மைகள் புலனாகிறது. அவை என்னவென்றால், இலக்கியம் வளம் மிகுந்த நாகரீகம் உள்ள தமிழினம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொடுமையினும் கொடுமையாக யார் யாரெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களே விழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை இச்சிறுகதை எடுத்துக் காட்டுகின்றன.

இக்கதாசிரியர் 1950 களின் நடுவில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி 2003 வரை 'ஹரஹர சங்கரா' என்ற குறுநாவலுடன் தனது இலக்கிய பயணத்தை முடித்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

அவரது கதைகள் அனைத்தையும் படித்ததில்லை என்றாலும், ஒருசில கதைகள் மற்ற கதைகளுக்கு வழிகாட்டியாக அமைந்து குழப்புவதை களையும் வல்லமை உள்ளதாக கருகிறேன்.

உதாரணமாக, இன்றைய சமூகத்தில் வர்க்கப் போர் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சதி வலையில் வருங்கால மானுடகுலம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவர் எழுதிய 'ஆயுத பூஜை' அத்தாட்சியாகும். அந்த கதையில் குடும்பம், காமக்களிப்பு, தேங்காய் உடைப்பு இவற்றுக்கெல்லாம் விடை தரும் ஒரு புதிய மனிதனை உருவாக்கியிருந்தார்.

பொழுது போக்குப் பத்திரிகைகள் அத்தகைய புனித மனிதர்களின் புதிய படைப்புக்கு எக்காலத்திலும் இடம் தரா என்றும் சொல்லவும் வேண்டுமோ? அதைப்போலவே இவற்றில் இடம் பெற்றுள்ள பல கதைகளும் அத்தகைய வெகுஜனங்களின் விருந்து ஆகா!

- ஜெ.ஜெயஸிம்ஹன்

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580103904928
Jayakanthanin Velivaratha Sirukathaigal

Read more from Jayakanthan

Related to Jayakanthanin Velivaratha Sirukathaigal

Related ebooks

Reviews for Jayakanthanin Velivaratha Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jayakanthanin Velivaratha Sirukathaigal - Jayakanthan

    http://www.pustaka.co.in

    ஜெயகாந்தனின் வெளிவராத சிறுகதைகள்

    Jayakanthanin Velivaratha Sirukathaigal

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கண்ணம்மா

    தத்துவம் + உடல் + உறவு!

    லட்சியச் சிலுவை!

    திருடன்

    பெண்

    தேரைப்பழி

    தீபம்

    இசையும் இசைவும்

    வேலை கொடுத்தவன்

    ரயில் மறுபடியும் வரும்

    உள்ளே புகுமுன்...

    தண்டபாணி ஜெயகாந்தன் (ஏப் 24. 1934 – ஏப் 8. 2015) அவர்களின் Obituary - இரங்கற்பா என்பது எழுதப்பட்டு விட்டது. இனி ஒரு நொடி கூட அன்னாரின் வாழ்க்கைக்குள் செலுத்தப்பட இயலாது.

    உலகத்தில் எத்தனையோ பேர் தோன்றுகிறார்கள். மறைகிறார்கள். இந்த நியதிக்கு கட்டுப்படாத தத்துவம் இதுவரை நான் அறிந்து எதுவும் இல்லை. ஆனால், தான் தோன்றுவதற்கும் மறைவதற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றாப் புகழையடைத்தும் மறையா மாண்பு குறித்தும் சில எண்ணங்களைக் கொண்டும் செயலை சிந்திக்க வைப்போர் ஒரு சிலரே!

    அப்படிப்பட்ட நபர்களை அவர்களது புறத்தோற்றங்கள் கொண்டு மட்டும் இன்னார் என்று தீர்மானித்துவிட இயலாது.

    ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக எக்காலத்திலும் திகழும் கிரேக்கப் பேரறிஞர் சாக்ரட்டீஸ், இறுதியில் தண்டனைக்குள்ளான கைதிதான்.

    அற்பக் காசை இகழ்ந்துரைத்த ஏசுபிரான் இறுதியில் இகழ்ந்துரைக்கப்படும் ஒரு கைதிதான்.

    மாமன்னர் ஜாரும், மகாகவி பாரதியாரும் மகாத்மா காந்தியும் இவ்வுலகில் சிறைவாசத்தை அனுபவித்தவர்கள்.

    இந்த சிறைவாசம் என்பதை இக்கதாசிரியர் நன்கு உணர்ந்திருந்தார். மேற்சொன்னவர்களுக்கு மரம், இரும்பு போன்றவற்றால் ஒரு சிறையை கற்பனை செய்து அதனுள்ளிருந்து தங்களது விடுதலை யாகத்தை எண்ணிப் பார்க்க இயலும்.

    ஆனால் நான் அறிந்தவரை இக்காதசிரியர் உடல் நமக்கொரு சுமை என முனிபவர். இந்த எலும்புகளாலும், நரம்புகளாலும், தசைகளாலும் கட்டப்பட்ட இந்த கூட்டுக்குள்ளிருந்து உயிர் எளிதில் விடுதலை அடைய வேண்டும் என்ற வேட்கை உடையவர். அதனால்தான் என்னமோ இவர், இவரது தந்தையையோ இவரது மூதாதையர்களோ இந்தியச் சுதந்திரப் போரின் தியாகிகள் வம்சாவழியில் சேர்ந்தவர்கள் அல்லர்.

    இக்கதாசிரியரின் தந்தை ஒரு தீயணைப்புப் பணியாளராக ஆங்கில அரசுக்கு கட்டுப்பட்டு பணிபுரிந்தவர். அவரது தந்தை கழனி வாழ் உழவர். இவரது வாழ்க்கை அவர்களது தொடர்ச்சியே. ஆனால், அரசுப் பணியோ, கழனியோ இவருக்கு காத்திருக்கவில்லை. காத்தும் கிடக்கவில்லை. ஆகையால் இவர் உலகத்தில் சஞ்சரித்து உண்மைகளை தேட ஆரம்பிக்கிறார்.

    தன்னைச் சுற்றி பேசப்படும் பேச்சுக்கள், நிகழும் செயல்கள் ஆகியவற்றை வறட்டுத்தனமான ஒரு பத்திரிகை செய்தியாக ஆக்கி விடாமல் அவற்றிலிருந்து தானும், பிறரும் கற்றுக்கொள்ள வேண்டியதை எண்ணி ஒரு தமிழ் எழுத்தாளராக இவ்வுலகுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

    அப்படி தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவரது மூலமாக எனக்கு சில வருத்தமான உண்மைகள் புலனாகிறது. அவை என்னவென்றால், இலக்கியம் வளம் மிகுந்த நாகரீகம் உள்ள தமிழினம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொடுமையினும் கொடுமையாக யார் யாரெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களே விழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை இச்சிறுகதை எடுத்துக் காட்டுகின்றன.

    இக்கதாசிரியர் 1950 களின் நடுவில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி 2003 வரை 'ஹரஹர சங்கரா' என்ற குறுநாவலுடன் தனது இலக்கிய பயணத்தை முடித்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

    அவரது கதைகள் அனைத்தையும் படித்ததில்லை என்றாலும், ஒருசில கதைகள் மற்ற கதைகளுக்கு வழிகாட்டியாக அமைந்து குழப்புவதை களையும் வல்லமை உள்ளதாக கருகிறேன்.

    உதாரணமாக, இன்றைய சமூகத்தில் வர்க்கப் போர் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சதி வலையில் வருங்கால மானுடகுலம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவர் எழுதிய 'ஆயுத பூஜை' அத்தாட்சியாகும். அந்த கதையில் குடும்பம், காமக்களிப்பு, தேங்காய் உடைப்பு இவற்றுக்கெல்லாம் விடை தரும் ஒரு புதிய மனிதனை உருவாக்கியிருந்தார்.

    பொழுது போக்குப் பத்திரிகைகள் அத்தகைய புனித மனிதர்களின் புதிய படைப்புக்கு எக்காலத்திலும் இடம் தரா என்றும் சொல்லவும் வேண்டுமோ? அதைப்போலவே இவற்றில் இடம் பெற்றுள்ள பல கதைகளும் அத்தகைய வெகுஜனங்களின் விருந்து ஆகா!

    இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு 20 வயது இளைஞரால் எழுதப்பட்டு அக்காலத்தில் தோன்றி கிட்டத்தட்ட மறைந்த மறக்கப் பட்ட பத்திரிகைகளில் வெளிவந்தவையாகும்.

    அக்காலம் என்பது யாதெனின் Madras என்று 1600களில் Francis Day என்பவரை ராஜாவாக ஏற்றுக்கொண்ட இந்தியர்களின் நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகில் இரண்டு கோட்டைகள், கிழக்குக் கடற்கரையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்டது. கடலூரில் செயின்ட் டேவிட் கோட்டையைக் கண்ட இவ்வாசிரியர் பின்னர் தன்னந்தனியாக இந்த மாநகரத்தையும் இதன் பிரம்மாண்டத்தையும் யார் துணையுமின்றி வாழ வரும் பொழுது பெரும் அனுபவங்கள் கதையாக இதில் மலர்ந்துள்ளன

    இச்சிறுகதைகள் இதுவரை அவரது தொகுப்பில் இடம் பெறாதவை. இவற்றை இன்றைய வாசகர்கள் படிப்பது நாளைய லட்சிய மனிதர்களை உருவாக்கும் என்று நம்புகிறேன்.

    அன்புடன்

    ஜெ.ஜெயஸிம்ஹன்

    *****

    கண்ணம்மா

    1

    ரிக்ஷாக்கார மாணிக்கம் மடி நிறைய சில்லறை குலுங்க, மனசில் மகிழ்ச்சி துள்ள ரிக்ஷவை இழுத்துக் கொண்டு தன் குடிசை இருக்கும் சிறிய சந்தில் திரும்பும் போது...

    'டொடக்' கென்று ஒரு கல்லில் சக்கரம் இடறியது. நின்றான்.

    டேய்... இந்த கண்ணம்மா குட்டி எப்பிடிக்கிறாடா... சும்மா லட்டுதான்...

    ஒனக்குத் தெரியாதா? இப்ப குட்டி நம்ம கையிலதா இருக்கா

    நெசமாவா?

    சத்தியமா - இன்னிக்கு மத்தியானம்கூட... ஹஹஹ... இன்னாத்தே சொல்றது போ... அவ ஒடம்புதான் எப்படிக்கீது தெரியுமா? அப்பிடி சும்மா ரெண்டையும் புடிச்சிக் கடிச்சி முழங்கிடலாமான்னு... ஹெஹ்ஹ்ஹே...

    டேய்... நீ படா கைகாரனாகிறியே... ஷோக்கான நாட்டுக் கட்டை நைனா... அப்புறம் சொல்லு... கடிச்சி முழங்கினியா?

    போடா சோமாறி... முழுங்கவே... சும்மா கடிச்சிக்கேனேன்... அப்புறம்...

    'தடதட'வென ரிக்ஷா அதிர்ந்தது. மாணிக்கத்தின் உடல் முழுதும் துடித்தது. சத்தத்தைக் கேட்டதும், முனை வீட்டின் திண்ணையிலிருந்த தட்டியை விலக்கி ஏழுமலை எட்டிப் பார்த்தான். சாராய போதையில் அவன் கண்கள் சிவந்திருந்தன.

    அவன்தான்டா போறான் என்று குரல் ரகசியம் பேசியது. அதைக் கவனிக்காதவன் போல் நடந்தான் மாணிக்கம்.

    ஏ! பாஞ்சாலிப் பொண்ணு. ஆளுக்கு இன்னம் ரெண்டு போடு என்று உரத்த குரலில் குழறிய ஏழுமலையின் குரல் மாணிக்கத்தின் பிடரியில் அறைவது போல் ஒலித்தது.

    ரிக்ஷா அவன் குடிசையின் முன் நின்றது.

    ***

    2

    மாணிக்கம் நாட்டுப்புறத்தான் நல்லவன். அவனுக்கேற்ற அவன் மனைவி கண்ணமாள் பறைச் சேரியில் பேரழகி.

    மாணிக்கத்தின் மேல் கொண்டிருந்த ஆசையினால் ஊர் நாட்டாண்மைக்காரனுக்கு வாழ்க்கைப்பட இருந்தவள் - இரவோடு இரவாய் மாணிக்கத்துடன் ஊரைவிட்டு ஓடி வந்துவிட்டாள். ஆறு மாசத்துக்கு முந்திதான்.

    கண்ணம்பாள் நல்ல ஆகிருதி, கருகருவென்ற மேனி; ரவிக்கை இல்லாத புஜங்கள்; மேலாக்கினுள் அடைபடாமல் விம்மி நிமிர்ந்து பக்கவாட்டில் பிதுங்கித் தெரியும் மார்பு; இறுகிச் சிறுத்த இடை, முழங்காலுக்கு கீழே கொஞ்சம் இறங்கிய புடவை; நடக்கும் போது - வெள்ளிக்காப்பிட்ட பாதங்கள் பூமியில் படிந்து பரந்து உயரும் போது -

    Enjoying the preview?
    Page 1 of 1