Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhamey Vadivaai... Sri Saratha Devi
Santhamey Vadivaai... Sri Saratha Devi
Santhamey Vadivaai... Sri Saratha Devi
Ebook156 pages47 minutes

Santhamey Vadivaai... Sri Saratha Devi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்னை சாரதா தேவி , ஆன்மிகவாதியும், இராமகிருஷ்ணரின் மனைவியும் ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

சாரதா ஒரு இந்திய கிராமத்துப் பெண்ணாக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். சிறுவயதில், சாரதா-அப்போது சாரதாமணி என்று அழைக்கப்பட்டார்- பாரம்பரிய இந்து நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டார். பெரும்பாலான கிராமப்புற பெண்களைப் போலவே, அவர் எந்த முறையான கல்வியையும் பெறவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு சேவை செய்ய கற்றுக்கொண்டார், ஏனெனில் அவர் தனது தாய்க்கு ஒரு பெரிய குடும்பத்தை நடத்தவும், தனது இளைய சகோதரர்களை கவனித்துக் கொள்ளவும் உதவினார். 1864 ஆம் ஆண்டு பயங்கரமான பஞ்சத்தின் போது, ​​சாரதா தனது குடும்பத்தினர் பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்குவதைப் போல இடைவிடாமல் பணியாற்றினார். அவர் வழக்கமாக வழிபடும் காளி மற்றும் லட்சுமி தெய்வங்களின் களிமண் மாதிரிகளில் ஆர்வமாக இருந்தார் . அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தியானம் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது, மேலும் பாரம்பரிய கணக்குகள் அவரது மாய தரிசனங்களையும் அனுபவங்களையும் விவரிக்கின்றன.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580158910903
Santhamey Vadivaai... Sri Saratha Devi

Read more from Kalki Kuzhumam

Related to Santhamey Vadivaai... Sri Saratha Devi

Related ebooks

Reviews for Santhamey Vadivaai... Sri Saratha Devi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhamey Vadivaai... Sri Saratha Devi - Kalki Kuzhumam

    சாந்தமே வடிவாய்... ஶ்ரீ சாரதா தேவி

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஓவியம்: தமிழ்

    https://kalkionline.com/

    அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாந்தமே வடிவாய்... ஶ்ரீ சாரதா தேவி

    Santhame Vadivaai… Sri Saratha Devi

    Author:

    திருப்பூர் கிருஷ்ணன்

    Thiruppur Krishnan

    Illustrations:

    தமிழ்

    Source :

    கல்கி களஞ்சியம் 2018

    Publisher:

    கல்கி குழுமம்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalki-kuzhumam

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம்17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 1

    மகளே! தொடர்ந்து தியானம் செய். தியானம் உன் மனத்தை அமைதிப்படுத்தும்.

    அமைதி எல்லாச் செயல்களிலும் வலிமையை ஏற்படுத்தும். தியானம் செய்யச் செய்ய,

    எந்த வேலை செய்தாலும் கூடவே தியானமும் செய்து கொண்டிருக்கும்

    மன நிலையை நீ அடைவாய். ஒரு கணமும் தியானம் செய்யாதிருக்க உன்னால்

    இயலாது போகும். அப்போது நிரந்தர அமைதி உன்னிடம் நிலவும்.

    அந்த நிலையே நீ அடைய வேண்டியது.

    - அன்னை சாரதா தேவி.

    பஞ்ச தவம்

    அன்னை சாரதா தேவி அப்படி ஒரு முடிவெடுப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. பஞ்ச தவம் செய்ய அல்லவா அவர் முடிவு செய்திருக்கிறார்? பஞ்ச தவத்தின் நெறிமுறை பற்றி நினைக்கும்போதே நெஞ்சில் நடுக்கம் தோன்றுகிறது. அதை அவர் உடல் தாங்குமா?

    ‘குருதேவர் ஸித்தி அடைந்துவிட்டால் என்ன? என்னளவில் அவர் என் முன்தான் எப்போதும் இருக்கிறார். குருதேவர் அருளால் நான் பஞ்ச தவம் செய்வேன். வெற்றி பெற்று இறையருளைப் பெறுவேன்!’ அன்னை முடிவெடுத்து விட்டார்.

    அவர் பஞ்ச தவம் செய்ய முடிவெடுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. உலக நன்மை ஒரு காரணம். குருதேவர் மறைந்தபின் விவேகானந்தர் உள்ளிட்ட அவரது சீடர்கள் பசியில்லாமல் வறுமையில்லாமல் வாழ வேண்டும் என்று. விரும்பிய அவரின் தாய் மனம் ஒரு காரணம்.

    பஞ்ச தவத்தின் காரணமாக குரு தேவரின் பூரண அருளையும் ஆசியையும் பெற்று, அவர் வழிகாட்டிய சீடர்களுக்கு தான் வழிகாட்ட வேண்டிய கடமை இருக்கிறதே? அதற்குத் தவத்தின் மூலம் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் ஆழ்மனம் கருதியிருக்கலாம்.

    இவையெல்லாம் ஒருபுறம் இருக்க உண்மையிலேயே. ஓர் ஆவியின் தொந்தரவிலிருந்து அவர் விடுபட விரும்பினார் என்பதும் ஒரு காரணம்தான். அன்னை காமார்புகூரில் வாழ்ந்தபோது சுமார் பத்து வயதுடைய ஒரு சிறுமியின் ஆவி அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    அந்தச் சிறுமி காவியுடை உடுத்தியிருப்பாள். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பாள். கூந்தல் எப்போதும் பின்னப்படாத விரிந்த கூந்தலாகத்தான் இருக்கும். அன்னை நடக்கிறபோது முன்னால் நடப்பாள். இல்லாவிட்டால் பின்னால் நடப்பாள். இப்படி அந்தச் சிறுமியின் ஆவி அவரைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஏன் அது தன்னைத் தொடர்கிறது என்று அன்னைக்குத் தெரியவில்லை.

    அன்னை காசி சென்றபோது அங்கே நேபாள நாட்டு சன்னியாசி ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் இந்த ஆவி தொடர்தல் தொடர்பான பிரச்னையைச் சொல்லிக் கருத்து கேட்டார். அந்த நேபாளத் துறவி, பஞ்ச தவம் செய்தால் அது விலகி விடும் என உபாயம் கூறினார்.

    தவிர, சில சமயங்களில் நீண்ட தாடியுடைய ஒரு துறவி அன்னை முன் திடீரென்று தோன்றி ‘பஞ்ச தவம் செய்!’ என ஆணையிடுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் தாம் பஞ்ச தவம் செய்துவிடுவது நல்லது என அன்னைக்குத் தோன்றியது. ஆனால், அன்னையின் முடிவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் அச்சத்தில் உறைந்தார்கள். பஞ்ச தவத்தின் நெறி முறைகள் அப்படி.

    பஞ்ச தவம் என்பது ஐந்து நெருப்புகளின் இடையே நிகழ்த்தும் தவம். நான்கு திசைகளிலும் ஆறடி இடைவெளிகளுக்கு இடையில் நான்கு இடங்களில் பெருந்தீயை மூட்டுவார்கள். கொதிக்கின்ற கடும் வெயிலில் அந்த நெருப்புகளின் நடுவே உள்ள பகுதியில் அமர வேண்டும். மேலே சுட்டெரிக்கும் சூரியனும் ஒரு நெருப்பாகக் கருதப்படும். ஆக ஐந்து அக்னிகளின் இடையே நிகழ்த்தும் கடும் தவம் அது. உடல் வெந்து கருகக் கூட வாய்ப்புண்டு.

    ஏழு நாட்கள் இப்படித் தவத்தில் ஈடுபட வேண்டும். பஞ்ச தவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள் சொற்பம்தான். நெருப்பின் சூடு தாங்காமல் தவித்துக் கைவிட்டவர்களே பலர். இத்தகைய கடும் தவத்தில் யாரும் ஈடுபடவே தயங்குவார்கள். ஆனால் அன்னை முடிவெடுத்து விட்டால் யாரால் அந்த முடிவை மாற்ற இயலும்?

    அந்தத் தவத்தைப் பற்றிப் பின்னாளில் அன்னை சொன்னார்:

    ‘நாற்புறமும் மூட்டப்பட்ட நெருப்பின் நடுவே போய் உட்கார்ந்தேன். மனத்தில் அச்சம் இருந்தது. மேலே சுட்டெரிக்கும் சூரியன். சுற்றிலும் தகிக்கும் நெருப்பு. அக்னியின் தணலைப் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும். தவங்களிலேயே கடுமையான தவம். மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டேன். குருதேவரைப் பிரார்த்தித்தேன். அடுத்த கணம் அற்புதம் நிகழ்ந்தது. என் அச்சம் விலகியது மட்டுமல்ல. அக்னியின் வெப்பம் மறைந்தே விட்டது. ஏழு நாட்கள் வெயில் தொடங்கி வெயில் மறையும் மாலைப் பொழுது வரை அந்தத் தவத்தை எளிதாக நிகழ்த்தினேன். அக்னியின் நடுவில் போய் அமர்ந்ததும் குரு தேவர் நினைவில் நான் உலகை மறந்து விடுவேன்! உலகை மறந்தவர்களை உஷ்ணம் என்ன செய்யும்?’

    ‘பஞ்ச தவத்தின் மூலம் என்னென்ன பலன்கள் கிடைத்தன அம்மா?’ ஒரு சீடர் ஆவலாகக் கேட்டபோது அன்னை சொன்னார்:

    ‘கிடைக்காத பலன் என்று எதைத்தான் சொல்ல முடியும்? குருதேவரின் அருள் பூரணமாகக் கிட்டியது. ஆன்மிக ஆற்றல்கள் பலவும் கிட்டின. அதெல்லாம் இருக்கட்டும். நான் நல்ல சிவப்பாக இருப்பேன் தெரியுமா? பஞ்ச தவத்தின் சூட்டில் தான் என் மேனி இப்படிக் கரிபோல் கறுத்துவிட்டது!

    சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தார் அன்னை.

    சுந்தர காண்டத்தில் அனுமன் மூட்டிய நெருப்பு இலங்கையைச் சுட்டாலும் சீதாப் பிராட்டிக்குக் குளிர்ந்தே இருந்ததல்லவா? அதுபோல அனைவரையும் சுடும் அக்னி, அன்னை சாரதையை மட்டும் சுடாமல் தண்ணென்றிருந்தது. அன்னை 1893-இல் நீலாம்பர் முகர்ஜி என்ற அன்பரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது இந்தக் கடுமையான பஞ்ச தவத்தைச் செய்து முடித்தார்.

    குருதேவரின் மனைவி என்ற தகுதியும் பெருமையும் போதாதா அன்னைக்கு? பின், அன்னை ஏன் இத்தகைய கடுமையான சோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்? அன்னை விளக்கினார்:

    ‘சிவபெருமானை அடைவதற்காக, பார்வதிதேவியே தவம் செய்யவில்லையா? தவம் செய்யச் செய்யத்தான் ஆன்மிக ஆற்றல்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1