Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Apoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal
Apoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal
Apoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal
Ebook425 pages2 hours

Apoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அபூர்வ ராமாயணத்தின் முதல் தொகுதியான காற்றின் குரல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது அதே வரிசையில் இரண்டாம் தொகுதியாக இந்த அனுமன் கதைகள் நூல் வெளிவருகிறது. (இன்னும் ஐநூறுக்கும் மேற்பட்ட ராமாயணச் சிறுகதைகள் அடுத்தடுத்த தொகுதிகளாக வெளிவரவுள்ளன.)
இந்த ‘அனுமன் கதைகள்' நூல் வெளிவரும் தருணத்தில், தமிழ் பி.ஏ. வகுப்பிலும் தமிழ் எம்.ஏ. வகுப்பிலும் எனக்குக் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைக் கற்பித்த என் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் திரு முப்பால்மணி அவர்களையும், அமரர் திரு பாஸ்கரதாஸ் அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
இந்தக் கதைகள் நடந்த சூழலுக்கும் கற்பனைக்கும் நான் பொறுப்பேற்றாலும் இக்கதைகளுக்கான கருக்கள், பல்வேறு ராமாயணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் ஏற்கெனவே உள்ளவைதான்.
ராமாயணத்தை விமர்சிப்பதோ கேள்வி கேட்பதோ என் நோக்கமல்ல. ஒரு ராம பக்தனாக இருந்து, ராமாயணம் சொல்லும் அறநெறிகளை விளக்குவதே என் நோக்கம்.
இந்நூலை வாசிப்பவர்களின் மனத்தில் அறநெறிகள் தூண்டப்பட்டு, அவர்கள் ராமன் காட்டிய வழியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள உத்வேகம் பெறவேண்டும் என்று ஸ்ரீராமபிரானைப் பிரார்த்திக்கிறேன்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580139006261
Apoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal

Read more from Dr. Thiruppur Krishnan

Related to Apoorva Ramayanam

Related ebooks

Reviews for Apoorva Ramayanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Apoorva Ramayanam - Dr. Thiruppur Krishnan

    https://www.pustaka.co.in

    அபூர்வ ராமாயணம்: தொகுதி – 2

    அனுமன் கதைகள்

    Apoorva Ramayanam : Volume 2

    Anuman Kadhaigal

    Author:

    டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்

    Dr. Thiruppur Krishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-thiruppur-krishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அனுமனின் அன்னை!

    2. திசை மாறிய காற்று!

    3. பாய்ந்தது தங்க அம்பு!

    4. ரத்தின மாலையின் கதை!

    5. காத்திருந்த காலங்கள்!

    6. சீதையைப் பார்க்க வந்தாள் பார்வதி!

    7. அங்கதன் கண்ட காட்சி!

    8. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை!

    9. அன்னையின் பாதக் கொலுசுகள்!

    10. ஓடி ஓடிப் பெற்ற ஞானம்!

    11. அனுமனை வணங்கினால் அச்சம் நீங்கும்!

    12. விரலில் நழுவும் மோதிரம்!

    13. சிரஞ்சீவி வரம்பெற்றான் அனுமன்!

    14. உள்ளம் மாறிய அனுமன்!

    15. அழிந்தது அனுமனின் அகந்தை!

    16. சேது பந்தனத்தின் பின்னணியில்...!

    17. முதுகில் சுமக்கும் பெருமிதம்!

    18. சம்பாதியின் கதை!

    19. முனிவர் கொடுத்த சாபம்!

    20. அறம் வெல்லும், பாவம் தோற்கும்!

    21. அனுமன் சொன்ன ஆறுதல்!

    22. ஜாம்பவான் இட்ட கட்டளை!

    23. ராவணன் தந்த விளக்கம்!

    24. அடையாளம் தந்த வெற்றி!

    25. காற்றில் கரையும் பதுமைகள்!

    26. வயதில் பெரியோர் வாழ்த்தட்டும்!

    27. அனுமன் கொண்டுவந்த அம்பு!

    28. வெற்றி தரும் வெற்றிலை மாலை!

    29. தெய்வத்தின் தெய்வம்!

    30. அன்னையின் கருணை!

    31. ஜெய் அனுமான்!

    32. அனுமன் அடைந்த ஆனந்தம்!

    33. அனுமன் கேட்ட வரம்!

    34. அந்த ஒரு கவளம்!

    35. அந்த ஒரு கிண்ணம்!

    36. ஸ்ரீராம ஆஞ்சநேய யுத்தம்!

    37. நிறைவேறிய வேண்டுதல்!

    38. இதயத்திலிருந்து குதித்த சிலைகள்!

    39. அவனல்லவோ சுந்தரன்!

    40. சீதாதேவியின் கடைசி வேண்டுகோள்!

    41. மீண்டும் மீண்டும் ராமபிரான்!

    42. பிரகலாதனின் சந்தேகம்!

    43. எழுதித் தீராத ராமன் புகழ்!

    44. அனுமன் பாடிய பாடல்!

    45. கண்ணனை வணங்கினான் அனுமன்!

    46. அனுமனும் கண்ணனும்!

    47. அனுமன் அழைக்கிறான்!

    48. கிணற்றுக்குள் மாருதி!

    முன்னுரை

    ஸ்ரீராமஜயம்!

    ராமாயணம் என்ற வற்றாத ஜீவநதியில் முங்கிக் குளிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த இதிகாசத்தில் சொல்லப்படாத அறநெறிக் கருத்து என ஒன்றுமில்லை.

    நம் பாரத தேசத்தின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பலப்பல நூற்றாண்டுகளாகக் கட்டிக் காத்துவரும் ஒப்பற்ற நூல் அது. இருள்சூழ்ந்த மனங்களில் ஒளியேற்றி வழிகாட்டும் உன்னதமான கைவிளக்கு.

    இந்த இதிகாசத்தில் மனந்தோய்ந்து வாழ்ந்தவர்கள் 96 வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்த என் தந்தை திரு. பி.எஸ். சுப்பிரமணியம் அவர்களும் 90 வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்த என் தாயார் திருமதி கே. ஜானகி அவர்களும்.

    அவர்களின் படைப்புத்தான் நான் என்பது மட்டுமல்ல, என் படைப்புகள் எல்லாமே ஒருவகையில் அவர்களின் படைப்புகள் தான். அவர்கள் விவாதித்த கருத்துகளும் என் மனத்தில் புகட்டிய நெறிகளுமே என் வாழ்வாகவும் என் நூல்களாகவும் பரிணமித்துள்ளன.

    அபூர்வ ராமாயணத்தின் முதல் தொகுதியான காற்றின் குரல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது அதே வரிசையில் இரண்டாம் தொகுதியாக இந்த அனுமன் கதைகள் நூல் வெளிவருகிறது. (இன்னும் ஐநூறுக்கும் மேற்பட்ட ராமாயணச் சிறுகதைகள் அடுத்தடுத்த தொகுதிகளாக வெளிவரவுள்ளன.)

    இந்த ‘அனுமன் கதைகள்' நூல் வெளிவரும் தருணத்தில், தமிழ் பி.ஏ. வகுப்பிலும் தமிழ் எம்.ஏ. வகுப்பிலும் எனக்குக் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைக் கற்பித்த என் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் திரு முப்பால்மணி அவர்களையும், அமரர் திரு பாஸ்கரதாஸ் அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

    இந்தக் கதைகள் நடந்த சூழலுக்கும் கற்பனைக்கும் நான் பொறுப்பேற்றாலும் இக்கதைகளுக்கான கருக்கள், பல்வேறு ராமாயணங்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் ஏற்கெனவே உள்ளவைதான்.

    ராமாயணத்தை விமர்சிப்பதோ கேள்வி கேட்பதோ என் நோக்கமல்ல. ஒரு ராம பக்தனாக இருந்து, ராமாயணம் சொல்லும் அறநெறிகளை விளக்குவதே என் நோக்கம்.

    இந்நூலை வாசிப்பவர்களின் மனத்தில் அறநெறிகள் தூண்டப்பட்டு, அவர்கள் ராமன் காட்டிய வழியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள உத்வேகம் பெறவேண்டும் என்று ஸ்ரீராமபிரானைப் பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,

    திருப்பூர் கிருஷ்ணன்.

    1. அனுமனின் அன்னை!

    அவள் ஓர் அப்சரஸ். புஞ்சிகஸ்தலை என்பது அவள் பெயர். ஒருநாள் வானுலகிலிருந்து கீழே பூமிக்கு இறங்கி வந்தாள் அவள்.

    அன்று அவளுக்கு மாபெரும் விபரீதம் ஒன்று நிகழக் காத்திருக்கிறது என்பதை அவள் அப்போது ஒருசிறிதும் அறியவில்லை. பூலோகத்தின் இயற்கைக் காட்சிகளை ரசிப்பதே அவள் நோக்கம்.

    அவள் வந்திறங்கிய கானகம் அடர்ந்தது. அழகியது. அங்கே நதியொன்று சலசலவென ஓடிக் கொண்டிருந்தது. தெளிந்த தண்ணீர். நதியில் குனிந்து தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் புஞ்சிகஸ்தலை. ஆகா. அவள்தான் எத்தனை அழகு.

    அப்சரஸ்களும் கந்தர்வ கன்னிகைகளும் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால் அவர்களிலெல்லாம் அதிக அழகு படைத்தவள் தானாகத் தான் இருக்கும்.

    இந்த எண்ணத்தில் அவள் மனத்தில் கர்வம் எழுந்தது. கர்வம் என்பது வாழ்வைக் கெடுக்கும் எதிர்மறைக் குணமாயிற்றே, நாம் கர்வப்படக் கூடாதே என்ற நினைவும் ஒரு கடுகளவு நேரம் அவள் ஆழ்மனத்தில் தோன்றி மறைந்தது. ஆனால் அந்த நினைவை அவள் அலட்சியப்படுத்தினாள்.

    அருகே செடிகொடிகளில் பூத்திருந்த மலர்க் கொத்துகளைப் பறித்துச் செண்டுபோல் கையில் வைத்துக் கொண்டவாறே, ஒய்யாரமாக நடந்து கானகத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினாள்.

    எங்கும் ரம்மியமான பசுமை. வசந்த காலத்தின் வருகை காரணமாக எல்லா மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. வண்ண வண்ண மலர்களால் கானகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மரக் கிளைகளில் மயில்களும் கிளிகளும் புல்வெளிகளில் மான்களுமாகக் கானகத்தின் எழில் அவளை வசீகரித்தது. இந்த அழகிய கானகத்தில் நடப்பதற்கேற்ற ஓர் அழகிதான் நான் என்றெண்ணியவாறே கர்வத்துடன் தொடர்ந்து நடந்தாள் அவள்.....

    யார் இது? வியப்போடு பார்த்தாள். அந்த அடர்ந்த கானகத்தில் ஒரு மரத்தின் அருகே இருந்த மேட்டுப்பாங்கான பகுதியில், ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். பத்மாசனமிட்டு, விழிகளை மூடி இறைவனையே தியானம் செய்தவாறு அவர் அமர்ந்திருந்த கோலம் மரியாதைக்குரியதாகவே இருந்தது. ஆனால் அவர் முகம்?

    அச்சு அசல் ஒரு குரங்கின் முகமாகவே இருந்தது அவர் முகம். வால் மட்டும் இருந்து விட்டால் அவர் குரங்கேதான். பின்னால் முதுகுப் புறத்தில் வால் இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை!

    இப்படி நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. தன் அழகால் விளைந்த கர்வம். எதிரே குரங்கு முகத்தோடு ஒரு முனிவர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த அவள் கலகலவென்று நகைத்தாள்.

    ஆனால் அந்த நகைப்பின் ஒலி அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் பிரகஸ்பதி என்ற பெயருடைய மாமுனிவர் என்பதை அவள் அறியவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அவருடைய குரங்கு முகம் மட்டும்தான்.

    தன் நகைப்பின் ஒலி கேட்டும் சலனமற்றிருந்த அவரைச் சலனப்படுத்தும் நோக்கத்தில், கையிலிருந்த பூச்செண்டை அவர்மேல் வீசி எறிந்தாள். ஆனால் அதுவும் அவரைச் சலனப்படுத்தியதாகத் தெரியவில்லை.

    அருகேயிருந்த மாமரத்தின் தாழ்வான கிளையிலிருந்து இரண்டு மாங்கனிகளைப் பறித்து அவர்மேல் வீசினாள். அப்போதும் அவரிடம் எந்த அசைவும் இல்லை.

    இதையெல்லாம் பார்த்தேனும் அவர் மிகுந்த தவ ஆற்றல் உடைய முனிவர் என்பதை அவள் ஊகித்திருக்க வேண்டும். ஆனால் அவள் அழகின் கர்வம் இது எதையும் சிந்திக்க விடாமல் அவரது முகத்தைப் பார்த்து நகைக்கவே அவளைத் தூண்டியது.

    கீழே குனிந்து ஒரு சிறிய கல்லை எடுத்தாள். ஏ குரங்கு முனிவரே! கண்விழித்து என்னைப் பாரும். என் அழகைப் பாரும்! என்றவாறே கல்லை அவர்மேல் வீசினாள்.

    அவளது துரதிர்ஷ்டம், அதுவரை விழிமூடி உள்முகமாகத் தியானம் செய்துகொண்டிருந்தவர், தன்மேல் கல் பட்டதும் கண்விழித்து அவளைப் பார்த்தார். தன் தவத்தைக் கலைத்தவள் அவள்தான் என்பதை உணர்ந்தார். ஏன் என்மேல் கல்வீசி என் தவத்தைக் கலைத்தாய்? என அவளை அதட்டினார்.

    அப்போதாவது அவளிடம் பணிவு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. விதி அவள் பிடரியை உந்தித் தள்ளியதால், மீண்டும் மீண்டும் அவரது குரங்கு முகத்தைப் பார்த்து நகைத்தவாறிருந்தாள். அட. குரங்கு முனிவருக்குக் கோபம் கூட வருகிறதே? என்று கிண்டல் செய்தாள்.

    குணமென்னும் குன்றேறி நின்றவர்களின் கோபத்தை ஒருகணம் கூடத் தாங்க முடியாது என்பது மெய்தானே? முனிவர் கடும் சீற்றமடைந்தார்.

    நீ அழகாய் இருக்கிறாய் என்பதால் அல்லவா என்னைக் குரங்கு எனக் கிண்டல் செய்கிறாய்? நீ அழகாய் இருப்பதற்கு நீ பொறுப்பா? அல்லது நான் குரங்குபோல் இருப்பதற்கு நான் பொறுப்பா? இயற்கை நடத்தும் விந்தையான விளையாட்டில் உனக்கு அழகு முகம் கிடைத்தது. எனக்குக் குரங்கு முகம் கிடைத்தது. அவ்வளவு தானே? என் முகத்தைப் பற்றி அக்கறை கொள்ளாமல், நான் ஓயாமல் தவம் செய்து என் ஆன்மாவை உயர வைத்தேன். என் முயற்சியின் பயன் என் தவ ஆற்றல். நீயோ இயற்கை கொடுத்த கொடையான உன் அழகைப் பற்றிய ஆணவத்தில் பெரியோர்களை மதிக்கக் கூட மறந்தாய். உன் அழகைக் குறித்து அதை உனக்கு வழங்கிய இயற்கை வேண்டுமானால் ஆணவம் கொள்ளலாம். நீ ஆணவம் கொள்ள அதில் என்ன இருக்கிறது? உன் அழகு என்பது உன் முயற்சியால் கிடைத்த விஷயம் அல்லவே? என்னைக் குரங்கு எனக் கிண்டல் செய்த நீ குரங்காகவே மாறக் கடவாய்! எனச் சபித்தார் அவர்.

    அவள் உடலில் கிடுகிடுவென மாற்றங்கள் நிகழத் தொடங்கின. அவள் பதற்றமடைந்தாள். ஓடோடிச் சென்று நதியில் மீண்டும் தன் முகத்தைப் பார்த்தாள். என்ன கொடுமை! அவளது அழகிய முகம் எங்கே? அதற்குப் பதிலாக குரங்கின் முகம் அல்லவா அவள் கழுத்துக்கு மேல் புதிதாய் முளைத்திருக்கிறது! அடடா! அந்த முனிவரின் முதுகிற்குப் பின்னால் வால் கூட இருக்குமோ என்றல்லவா நினைத்தாள்! இப்போது அவள் முதுகிற்குப் பின்னால் உண்மையிலேயே வால் முளைத்துவிட்டதே? அவள் தான் முற்றிலும் குரங்காக மாறிவிட்டதை உணர்ந்து அழலானாள்.

    இப்போது என்ன செய்வது? மீண்டும் வானுலகம் சென்றால் அனைவரும் எள்ளி நகையாடுவார்கள். இயற்கை கொடுத்த கொடையான அழகு குறித்து இறைவனுக்கு நன்றி பாராட்டாமல் ஆணவம் கொண்டோமே? அதற்குக் கிடைத்த தண்டனை இது! இனி மறுபடியும் தனக்குப் பழைய அழகு திரும்புமா?

    அந்த முனிவரையே சரணடைந்து சாப விமோசனம் கேட்டுப் பெறுவோம். நாம் உள்ளம் உருக மன்னிப்புக் கேட்டால் அவர் மன்னிக்க மாட்டாரா? இப்படி எண்ணிய அவள் முனிவரைத் தேடி ஓடினாள்.

    தவக் கோலத்தில் அமர்ந்திருந்த அவர், மீண்டும் கண்விழிக்கும் வரை பொறுமையாய் அவர் முன் கைகூப்பி அமர்ந்து காத்திருந்தாள்.

    நெடுநேரத்திற்குப் பின் அவர் கண்திறந்தார். தன் முன் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அவளைப் பார்த்து அவர் மனத்தில் பரிவு சுரந்தது. அவள் தன்னை மன்னித்துத் தனக்குச் சாப விமோசனம் அருளுமாறு கோரியதைக் கேட்டு அவர் உள்ளம் நெகிழ்ந்தது. அவர் கண்மூடி ஞான திருஷ்டியால் ஏன் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என ஆராய்ந்தார். அவர் முகம் பிரகாசமடைந்தது. பின் கண்திறந்து பேசலானார்:

    மகளே! நீ மன்னிப்பு வேண்டிய மறுகணமே மன்னிக்கப்பட்டு விட்டாய். என்னைச் சபிக்கத் தூண்டியதும் இறைவனின் திட்டம்தான். கவலை கொள்ளாதே. இந்த அடர்ந்த கானகத்தில் தனிமையான ஓர் இடத்திற்குச் செல். சிவபெருமானைத் தியானம் செய்து அவர் அருளை வேண்டு. அவர் விரைவில் உனக்குக் காட்சி தருவார். உனக்கான சாப விமோசனத்தையும் அருளுவார். எல்லோராலும் தொழப்படும் பேராற்றல் படைத்த பெருமகனுக்குத் தாயாகும் பாக்கியம் பெறப் போகிறாய் நீ. அதுபற்றி சிவபெருமானே உனக்கு விவரம் தெரிவிப்பார்!

    இதைக் கேட்ட புஞ்சிகஸ்தலை மன ஆறுதல் அடைந்தாள். முனிவரை வணங்கி விடைபெற்றுத் தனிமையான இடத்தை நாடிச் சென்றாள். அந்த முனிவரைப் போலவே சம்மணமிட்டு அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தியானம் செய்யலானாள்.

    நெடுநேரம் மன ஒருமைப்பாட்டோடு அவள் செய்த தவத்தை மெச்சி அவள் முன் தோன்றினார் சிவபெருமான். பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து சடையில் கொன்றை மலர் அணிந்து அவர் தோன்றிய காட்சியில் மெய்சிலிர்த்தாள் புஞ்சிகஸ்தலை. நடந்த சம்பவத்தைச் சொல்லித் தனக்குச் சாப விமோசனம் அருளுமாறு வேண்டினாள். அருள்பொங்கும் முகத்தோடு சிவன் பேசலானார்:

    "பெண்ணே! இனிக் கொஞ்ச காலத்திற்கு நீ குரங்காகவே இருப்பாய். அஞ்சனாதேவி என்ற நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். கேசரி என்ற வானரம் உன்மேல் காதல் கொள்ளும். வாயு பகவானின் அருளால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் என் அம்சம் உடையவனாகவும் மிகுந்த பராக்கிரமசாலியாகவும் திகழ்வான். அஞ்சனையின் புதல்வன் என்ற வகையில் அவன் ஆஞ்சநேயன் என்று அழைக்கப் பெறுவான். ராமாயணம் நிகழவிருக்கிறது. ராமபிரானுக்கு உற்ற தொண்டனாக விளங்கி மக்களால் தொழப்படும் தெய்வமாகவே மாறப் போகிறான் உனக்குப் பிறக்கப் போகும் மகன். அவனது தாய் என்ற வகையில் உன் கடமைகளை முடித்த பிறகு நீ மீண்டும் அப்சரஸாக வானுலகம் திரும்புவாய்!

    சிவபெருமானது அருள்மொழிகளைக் கேட்ட அவள் மிகுந்த மகிழ்ச்சியோடு எளியவளான இந்த புஞ்சிகஸ்தலையின் நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் சுவாமி என அவரை நமஸ்கரித்தாள்.

    இப்போது நீ செய்யும் நமஸ்காரம் புஞ்சிகஸ்தலையின் நமஸ்காரம் அல்ல, அது அனுமனின் தாயாகப் போகிற அஞ்சனாதேவியின் நமஸ்காரம்! எனச் சிரித்தவாறே சொல்லிவிட்டு மறைந்தார் சிவபெருமான்.

    2. திசை மாறிய காற்று!

    ராமன் திகைத்துப்போய் நின்றிருந்தான். என்ன செய்வது இப்போது? இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று ராமனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. அதனால் அவன் மனத்தில் கவலை எழுந்தது.

    அந்தப் பொன்மானின் மேல் அம்பெய்தபோது அது அம்பு பட்டுக் கீழே விழும் என்று மட்டும்தான் ராமன் எதிர்பார்த்தான். அது விழுந்தது மட்டுமல்ல, அதன் உடல் உருமாறி அங்கே ஓர் அரக்கன் தோன்றினான். அரக்கர்கள் எடுத்துக் கொண்ட மாயத் தோற்றம் உயிர்போகும் தறுவாயில் காற்றில் கரைந்து அவர்களின் உண்மையான உருவம் வெளிப்படுவது இயல்புதானே?

    அதுபற்றி ஒன்றுமில்லை. பொன்மான் ஓர் அரக்கனாகத் தான் இருக்க வேண்டும் என்று லட்சுமணன் சொன்னபோதே அப்படி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றுதான் ராமன் கருதியிருந்தான். இதோ லட்சுமணன் கூற்று நிரூபணமாகி விட்டது.

    ஆனால் உயிரை விடுகிற அரக்கன் உயிர் போகும் தருணத்தில் செய்த செயல்தான் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துவிட்டது. அவன் வெறுமே உயிரை விடாமல் சீதா லட்சுமணா என்று தன்னைப் போல் குரலை மாற்றிக்கொண்டு உரக்கக் கூவுகிறானே?

    பர்ணசாலையை விட்டு மானைத் துரத்திக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனாலும் இந்தக் குரல் கட்டாயம் பர்ணசாலையை எட்டியிருக்கும். என்ன குரல் இந்த அரக்கனின் குரல்! மாபெரும் முழக்கமல்லவா இது! காற்று வேறு நம் பக்கமிருந்து பர்ணசாலைப் பக்கம் வீசுகிறது. இந்தக் குரல் சீதையின் செவிகளை எட்டாதிருக்க வாய்ப்பே இல்லை.

    இதைக் கேட்கும் சீதை தன் கணவர் ஆபத்தில் சிக்கியிருப்பதாகத் தான் நினைப்பாள். அப்படியானால் உடனே லட்சுமணனை இங்கே அனுப்புவாள். என்னைக் காப்பாற்றும் எண்ணத்தில் லட்சுமணன் இங்கு வந்தால் சீதை பர்ணசாலையில் தனித்திருப்பாள். தனித்திருக்கும் அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது?

    ராமன் மனம் கிடுகிடுவென எல்லாவற்றையும் ஒரு கணத்தில் யோசித்துப் பார்த்தது. இந்தத் திட்டத்தில்தான் உயிர்போகும் தறுவாயில் அரக்கன் அப்படிக் கூவுகிறான் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

    சீதை இந்தப் பொய்க்குரலை நம்பக் கூடாது. அதற்கு ஒரே வழி, தானும் உடனே குரல் கொடுப்பதுதான். சீதா! நான் நலமாகத்தான் இருக்கிறேன். அரக்கனின் பொய்க்குரலை நம்பாதே! இதோ பர்ணசாலையை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன்! என்று இங்கிருந்தே தானும் தன்னால் இயன்ற அளவு ஓங்கிய குரலில் கூவினால்?

    ஆம். அப்படித்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் சீதை நான் நலமாக இருப்பதை அறிந்துகொள்வாள். லட்சுமணனும் அங்கேயே இருப்பான். இவ்விதம் முடிவெடுத்த ராமன் கலகலவென்று அரக்கனைப் பார்த்து நகைத்தான்.

    உன்னால் மட்டும்தான் என்னைப் போன்ற குரலில் உரக்கக் கூவ முடியுமா? இதோ நான் நலமாக இருக்கிறேன் என்ற விஷயத்தை நானே உரக்கக் கூவி அறிவிக்கப் போகிறேன். இதைக் கேட்கும் சீதையும் லட்சுமணனும் உன் குரலை நம்பமாட்டார்கள். என் குரலைத்தான் நம்புவார்கள். முதலில் என்னைப் போன்ற பொய்க்குரல் கொடுத்தது அரக்கனாகிய நீதான் என்பதையும் உரக்கக் கூவித் தெரிவிப்பேன்! சீதையைத் தனித்திருக்கச் செய்ய வேண்டும் என்ற உன் எண்ணம் பலிக்காது!

    இப்படி ராமன் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே அரக்கனான மாரீசன் கண்ணை மூடினான்.....

    வானிலிருந்து தேவர்கள் ஒவ்வொருவரும் பூமியில் நடக்கும் ராமாயண நிகழ்ச்சிகளை அக்கறையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் ராவண வதம் நிகழவேண்டும், தாங்கள் அனைவரும் ராவணனின் கொடுமையிலிருந்து தப்பித்து நிம்மதி அடையவேண்டும் என்பதே அத்தனை தேவர்களின் நோக்கம். தேவேந்திரனும் பூமியை ஆவலோடு பார்த்தவாறிருந்தான்.

    மாரீசன் சீதா லட்சுமணா என ராமனைப்போன்ற பொய்க்குரலில் கூவியதும் இந்திரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆகா. விரைவில் லட்சுமணன் ராமனைத் தேடி வருவான், அந்த நேரத்தில் ராவணன் முன்னரே திட்டமிட்டபடி சீதையைத் தூக்கிச் செல்வான், அப்படியானால் சீதையை மீட்கும் உத்தேசத்தில் ராவண வதம் நிகழ்ந்துவிடும் என்று எதிர்காலத்தைப் பற்றிக் கணக்குப்போட்ட இந்திரன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

    ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. ராமன், தான் நலமாக இருப்பது குறித்து உரத்த குரலில் முழங்க முடிவெடுத்துவிட்டானே? ராமன் குரல் கொடுத்தால் சீதையைத் தனியே விட்டுவிட்டு லட்சுமணன் ராமனைத் தேடி வரமாட்டானே? இப்போது என்ன செய்வது?

    உடன் சரஸ்வதிதேவியைப் பிரார்த்தித்தான் இந்திரன். வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் அன்னை சரஸ்வதி அவன் முன் காட்சி கொடுத்தாள்:

    தாயே! கும்பகர்ணன் என்றும் அழிவில்லாமல் வாழ விரும்பினான். நித்யத்வம் என்ற வரத்தைக் கேட்டான். ஆனால் தாங்கள் அவன் நாவைப் புரட்டி நித்ரத்வம் என்ற வரம் கேட்குமாறு செய்துவிட்டீர்கள். அழிவில்லாமல் நெடுநாள் வாழ நினைத்தவன், அதிகத் தூக்கத்தை வரமாகப் பெற்று அசைவில்லாமல் நெடுநாள் தூங்கலானான். அப்போது தாங்கள் உதவியதுபோல் இப்போதும் உதவவேண்டும். ஸ்ரீராமர் இப்போது வாய்திறந்து கூவினால் ராவண வதம் நிகழ மேலும் தாமதமாகும். இச்சூழலில் ராமன் அவ்விதம் கூவாமல் இருக்க என்ன செய்யலாம் எனத் தாங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்.

    சரஸ்வதி தேவி சற்றுநேரம் சிந்தித்தாள். பின் கனிவோடு பேசலானாள்:

    தேவேந்திரனே! ராமர் திருமாலின் அவதாரம். அது அவருக்குத் தெரியாது என்றாலும் நமக்குத் தெரியும். கடவுளின் நாவைப் புரட்டும் வேலையைக் கலைமகள் செய்யலாகாது. செய்யக் கூடாது. மேலும் ராமபிரான் தான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் அதைச் செய்துவிடுவார். யாராலும் அதை மாற்ற இயலாது. எனவே ராமர், தான் நலமாக உள்ளதாகக் கூவுகிறபடி கூவட்டும். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க இன்னொரு வழி இருக்கிறது. அதை நீ கையாள்வாயாக!

    இந்திரன் காதில் மட்டும் விழும்படியாக சரஸ்வதிதேவி அந்த வழி என்ன என்பதைச் சொல்லிக் கொடுத்தாள். அதைக் கேட்ட இந்திரனின் முகம் மலர்ந்தது. சரஸ்வதி தேவி இந்திரனுக்கு ஆசி கூறி மறைந்தாள்.

    இந்திரன் அடுத்த கணமே மேற்கொள்ள வேண்டிய செயலை எண்ணிக் கடும் பரபரப்படைந்தான். எங்கும் இருக்கும் வாயுதேவா. அருள்கூர்ந்து இப்போது என் முன் வந்து தரிசனம் தாருங்கள்! என்று வாயு பகவானை மனமாரப் பிரார்த்தித்து அழைத்தான். மறுகணம் வாயுதேவன் இந்திரன் முன்னிலையில் தோன்றினான்.

    வாயுதேவா! மாபெரும் பராக்கிரமசாலியான அனுமனின் தந்தையே! உங்கள் மகன் அனுமன் தன் வழிபடு தெய்வமான ராமபிரானைச் சந்திக்கும் காலம் மேலும் மேலும் தள்ளிப் போகிறதே? ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றால் தானே ராமனும் லட்சுமணனும் சீதையைத் தேடிப் போவார்கள்? அப்போதுதானே அனுமன் ராமனைக் கிஷ்கிந்தையில் காண இயலும்? ராம அனுமச் சந்திப்பு சீக்கிரம் நிகழ வேண்டுமல்லவா?

    ஆம் இந்திரா! மிக விரைவில் என் மகன் அனுமன், ராம தரிசனம் என்ற பாக்கியத்தைப் பெற்று ராமபிரானின் தொண்டனாக மாறவேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்!

    அப்படியானால் நான் சொல்கிற மாதிரி நீங்கள் இயங்கவேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும்!

    இந்திரன் வாயுபகவான் அடுத்த என்ன செய்யவேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தான். வாயுதேவன் மகிழ்ச்சியோடு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான்......

    ராமன் சீதா! நான் நலமாகத்தான் இருக்கிறேன். அரக்கனின் பொய்க்குரலை நம்பாதே! இதோ பர்ணசாலையை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன்! என்று தன் தாமரை இதழ்போன்ற உதடுகளைத் திறந்து உரத்த குரலெடுத்துக் கூவினான்.

    ஆனால் அதற்குள் அந்தப் பகுதியில் வீசிய காற்றின் திசை மாறியது. அதுவரை ராமபிரான் இருந்த பகுதியிலிருந்து சீதாதேவி இருந்த திசைநோக்கி வீசிய காற்று, இப்போது நேர்மாறாக சீதை இருந்த திசையிலிருந்து ராமன் இருந்த திசைநோக்கி வீசலாயிற்று

    பெரும் சூறைக்காற்றாகச் சுழன்றடித்தது அது. சீதையும் லட்சுமணனும் இருந்த பர்ணசாலையின் அருகிலுள்ள மரங்களின் கிளைகளைச் சடசடவென முறித்தது காற்று. உய்யென்ற சூறைக்காற்றின் சப்தமும் மரக்கிளைகள் முறியும் சப்தமும் பிற ஒலி அங்கே கேட்காதவாறு தடுத்துவிட்டன.

    ராமனின் குரலில் ஒலித்த வார்த்தைகளைக் காற்று அள்ளி எடுத்துக் கொண்டு நேர் எதிர்த் திசைக்குக் கடத்தியதால் அந்தக் குரல் சீதாதேவியின் செவிகளை எட்டவே இல்லை. சீதை கவலையோடு லட்சுமணனிடம் கூறலானாள்:

    லட்சுமணா! ஏற்கெனவே நம் இருவர் பெயர்களையும் உரக்கக் கூறி உன் அண்ணா குரல் கொடுத்ததைக் கேட்டாய் அல்லவா? இப்போது திடீரெனக் காற்று சுழன்றடிக்கிறது. அவரது தொடர்ந்த குரல்கள் நமக்குக் கேட்கவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் என் மனம் கவலையில் ஆழ்கிறது. என் வலக்கண் துடிக்கிறது. எனக்குக் கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. நீ உடனடியாக உன் அண்ணாவைத் தேடிச் சென்று காப்பாற்று! சீக்கிரம்!

    சீதை இவ்வாறு பேசியதைக் கேட்டான் இந்திரன். ‘ஆகா. இனி எப்படியும் லட்சுமணனை ராமபிரானை நோக்கி அனுப்பிவிடுவாள் சீதை. தனித்திருக்கும் சீதாதேவியை ராவணன் தூக்கிச் செல்வான். சீதையை மீட்க எண்ணும் ராமபிரான் ராவணனை வதம் செய்வார்’ என்று எண்ணமிட்ட அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தனக்கு உதவிய வாயுபகவானை அவனது கைகள் தொழுதன.

    3. பாய்ந்தது தங்க அம்பு!

    தாரை பெரும் திகைப்படைந்தாள். தன் கணவன் வாலியின் முகத்தில் தென்படும் பரபரப்புத்தான் அவளை அப்படி அளவுகடந்து திகைக்க வைத்தது.

    இத்தனை பரபரப்பாக இவர் எப்போதும் இருந்ததில்லையே? இன்று மட்டும் ஏன் இப்படி? யாரையோ எதையோ எதிர்பார்ப்பதுபோல் தவிக்கிறதே இவர் முகம். ஏதோ தவறான செயலில் இவர் ஈடுபடப் போகிறார் போல் தோன்றுகிறதே! கேட்டு விடுவோம்.

    தாரை ஒரு முடிவோடு தன் கணவனை மெல்ல அன்பு ததும்ப அழைத்தாள்:

    `பிராண நாதா!"

    தாரையின் அழைப்பைக் கேட்டு அவசர அவசரமாக அவளைத் திரும்பிப் பார்த்தான் வாலி. விரைவில் தான் நிகழ்த்தப் போகும் குற்றம் குறித்த முன்கூட்டிய குற்ற உணர்ச்சி அவன் முகத்தில் இருளாய்ப்

    Enjoying the preview?
    Page 1 of 1