Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2
Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2
Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2
Ebook522 pages2 hours

Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளர்க்கை மடமானி
பங்கயற்செல்வி பாண்டிமா தேவி’

என்று மங்கையற்கரசியாரைப் புகழ்ந்து பாடுகிறார், காழிப்பிள்ளையாரான திருஞானசம்பந்தர். அப்படியொரு பெருமை, மங்கையர்க்கரசியாருக்கு! வளவர் என அறியப்பட்ட சோழர்குலத்து இளவரசி, மதுரைக் கூன்பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியாகிறாள். சமணத்தில் மூழ்கிச் சைவத்தை மறந்துதுறந்த அவனைச் சைவத்துக்கு ஈர்க்கிறாள். அப்படிப்பட்ட மண உறவுகொண்டு நட்புடன் பழகிய சோழரும், பாண்டியரும் எப்படிப் பரமவிரோதிகள் ஆனார்கள்? சோழருக்கும் பாண்டியருக்கும் தீராப்பகை உருவான காரணத்தை இப்புதினத்தின் இரண்டாம் பாகத்து இடைச்செருகல் தெரிவிக்கிறது.

இப்புதினம் அருண்மொழித் தேவர், இராஜராஜசோழப் பேரரசராகத் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியபின்னர் தொடங்குகிறது. அவரது தமிழ்க்கனவையும், அவரது பேரரசு முழுவதும் தமிழன்னை கோலோச்ச, அதற்கு அவரது குரு கருவூர்த்தேவர் தீட்டிக்கொடுத்த திட்டத்தையும் விவரிக்கிறது.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580158910774
Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2

Read more from Kalki Kuzhumam

Related to Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2

Related ebooks

Related categories

Reviews for Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2 - Kalki Kuzhumam

    பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – பாகம் 2

    ஒரு அரிசோனன்

    ஓவியம்: தமிழ்

    அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு

    https://kalkionline.com/

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – பாகம் 2

    Ponniyin Selvanin Tamil Kanavu - Part 2

    Author:

    ஒரு அரிசோனன்

    Illustrations:

    தமிழ்

    Source:

    கல்கி களஞ்சியம் 2022

    Publisher:

    கல்கி குழுமம்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalki-kuzhumam

    பொருளடக்கம்

    திருப்பணித் துவக்கம்

    இடைச்செருகல் தொடர்ச்சி….

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அறிமுகம்

    ஆசிரியன் குறிப்பு: எனது முகநூல் நண்பர்களும், வாட்ஸ் அப் குழும உறுப்பினரும், இன்னும் சிலபலரும் என்னுடன் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களுக்குக் கொடுத்த விளக்கத்தை உங்களுக்கும் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நேரடியாகத் தொடர்புகொள்வதற்குப் பதிலாக, உங்களுக்குத் தோன்றும் நிறை, குறைகள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயங்களில் இறுதியில் கல்கி இணையத்தில் பதிந்தால் — என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் பெயரை என் புதினத்திற்கும் சூட்டிய கல்கி இணையத்தோருக்கு மகிழ்வுட்டும்; ஆசிரியனான எனக்கும், புதினத்தைப் படிக்கும் மற்றருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

    ‘ஏனைய்யா, ஒரு அரிசோனரே! சரித்திரக்கதை என்று சொல்லிவிட்டு, எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ எழுதினீர்? அதற்கு ஏதேதோ சமாதானமும் சொன்னீர்? பொன்னியின் செல்வன் என்று எங்களைத் தூண்டில்போட்டு இழுத்துவிட்டு, ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ் என்று மாடிக் கட்டிடத்தையும், தஞ்சைப் பெரியகோவிலையும் மட்டும் காட்டினால் போதுமா? எப்போதையா பொன்னியின் செல்வனைக் அறிமுகப்படுத்துவீர்? முதல்பாகமும் முடிந்துவிட்டது. பொன்னியின் செல்வனைக் காணவிடாது, இரண்டு கட்டுரைகள் எழுதிப் ‘போர’டிக்கிறீரே?’ என்று நீங்கள் அலுத்துக்கொள்வதுபோல எனக்கும் படுகிறது. அதற்குத்தான் இந்த அறிமுகம். .

    ‘இரண்டாம் பாகம்: அறிமுகம்:

    ஒரு பேரரசர் அரசவைக்கு வருகிறார் என்றால், அதை அறிவிக்கக் கட்டியங்காரன் தடபுடலாக அறிவிப்பதில்லையா? அதுபோல ‘பொன்னியின் செல்வர் வருகிறார்,’ என அறிவித்துத்தானே உங்கள் ஆவலைத் தூண்டமுடியும்? அதைத்தான் இப்பொழுது செய்கிறேன்.

    "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

    வரிவளர்க்கை மடமானி

    பங்கயற்செல்வி பாண்டிமா தேவி’

    என்று மங்கையற்கரசியாரைப் புகழ்ந்து பாடுகிறார், காழிப்பிள்ளையாரான திருஞானசம்பந்தர். அப்படியொரு பெருமை, மங்கையர்க்கரசியாருக்கு! வளவர் என அறியப்பட்ட சோழர்குலத்து இளவரசி, மதுரைக் கூன்பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியாகிறாள். சமணத்தில் மூழ்கிச் சைவத்தை மறந்துதுறந்த அவனைச் சைவத்துக்கு ஈர்க்கிறாள். அப்படிப்பட்ட மண உறவுகொண்டு நட்புடன் பழகிய சோழரும், பாண்டியரும் எப்படிப் பரமவிரோதிகள் ஆனார்கள்? சோழருக்கும் பாண்டியருக்கும் தீராப்பகை உருவான காரணத்தை இப்புதினத்தின் இரண்டாம் பாகத்து இடைச்செருகல் தெரிவிக்கிறது.

    அமரர் கல்கி அவரது அழியாக் காவியமான பொன்னியின் செல்வனில், அருண்மொழித் தேவர் அரியணையை விட்டுக்கொடுத்த காரணத்தை அழகுறத் தீட்டினார். ஆதித்த கரிகாலனின் இறப்பை நமது ஊகத்துக்கு விட்டுவிட்டார். ஆதித்தனின் இறப்பை ஏரணமூலம் இப்புதினத்தில் வரைந்துள்ளேன்.

    இப்புதினம் அருண்மொழித் தேவர், இராஜராஜசோழப் பேரரசராகத் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியபின்னர் தொடங்குகிறது. அவரது தமிழ்க்கனவையும், அவரது பேரரசு முழுவதும் தமிழன்னை கோலோச்ச, அதற்கு அவரது குரு கருவூர்த்தேவர் தீட்டிக்கொடுத்த திட்டத்தையும் விவரிக்கிறது.

    இரண்டாம் பாகத்தில் வரும் முக்கிய பாத்திரங்களை – வரலாற்று நாயகர்களையும், புனைவுப்பாத்திரங்களையும் — உங்களுக்குக் கட்டியங்காரனாக அறிமுகப்படுத்துகிறேன்.

    முதலில், அனைவரும் அறிந்த சோழப்பேரரசர் இராஜராஜர்; அவரின் தமிழ்க்கனவு, தமிழ்த்திருப்பணி இங்கு அறிமுகமாகிறது.

    அவரது குருநாதர், கருவூர்த்தேவர்; கருவூரார் என்றும் அழைக்கப்படுகிறார். ஒன்பதாம் திருமுறையில் அவரது பதிகங்கள் உள. தமிழ்த்திருப்பணித் திட்டத்தைத் தீட்டிக்கொடுக்கிறார்.

    மதுராந்தகன் என்ற இயற்பெயருடைய இராஜேந்திரன். எப்போரிலும் வெற்றிக் கன்னியைத் தழுவிய மாவீரன். தமிழ் மன்னரிலேயே மிகப்பரந்த பேரரசை நிறுவியவன்.

    ராமன் கிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய – இராஜராஜரின் திருமந்திர ஓலைநாயகமாகவும் (Chief Administrative Officer), பின்னர் இராஜேந்திரசோழ பிரம்மராயர் என்ற பட்டப்பெயருடன், படைத்தலைவராகவும் பணியாற்றியவன். புதினத்தில் சிவசங்கர சிவாச்சாரி என்ற புனைவுப் பெயர் கொடுக்கப்பட்டிருகிறது.

    குந்தவைப் பிராட்டியார், இராஜராஜரின் தமக்கையார்.

    குந்தவி, இராஜராஜரின் மகள், வேங்கை(வெங்கி)நாட்டு இளவரசன் விமலாதித்தனைக் காதல்மணம் புரிந்தவள். அவளது மகன் இராஜராஜ நரேந்திரன்; தெலுங்குப் பற்று நிறைந்தவன்.

    நிலவுமொழி, தமிழைப் பரப்ப இராஜராஜரால் வேங்கைநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவள்; முற்றிலும் புனைவுப் பாத்திரம்.

    பாண்டியமன்னன் அமரபுஜங்கன், பாண்டிநாட்டின்மீது அளவிலாப் பற்றுள்ளவன்; அவன் மகன் விக்கிரமன்.

    அமரபுஜங்கனின் மெய்காப்பாளன், பாண்டிய மெய்காப்பாளர்கள்; புனைவுப் பாத்திரங்கள்.

    இலங்கைமன்னன், நான்காம் மகிந்தன்.

    அத்துடன் இராஜராஜரின் தமையன் ஆதித்த கரிகாலன், அவனால் கொல்லப்பட்ட வீரபாண்டியன்; இடைச்செருகலில் மட்டும் வருவர்.

    இப்பகுதி நிகழும் சமயம்தான் பாண்டியருக்கும் சோழருக்கும் மீண்டும் போர் நிகழ்கிறது. அதற்கான காரணத்தையும், போருக்கு உங்களைக் கற்பனைக் குதிரையில் அழைத்துச்செல்கிறேன். நான் குறிப்பிடும் இடங்கள் தமிழகத்தில் உள்ளன. குறிப்பிடப்படும்ம் இடங்கள் கற்பனை அல்ல. ஆறு, குன்று, மறைவிடம் என்று குறிப்பிடப்படும் இடங்கள் இன்னும் உள்ளன.

    பல நிகழ்வுகளுக்கும், வரலாற்று நாயகர்களுக்கும், அவர்கள் தோன்றும், செய்யும் செயலுக்குச் சான்றுகள் கொடுத்துள்ளேன். ஏன் அப்படிப்பட்ட செயல்கள் நடக்கின்றன என்பது கற்பனையே!

    உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இராஜராஜருக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் தோன்றுகின்றன என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டால் ஈர்ப்ப்பு குறைந்துவிடும். அதற்காகவே, இந்தப் புதினம் ஒரு துப்பறியும் கதைபோலத் தொடரும்; தொடர்ந்து படிக்க உங்கள் ஆவலைத் தூண்டும் என்றே நம்புகிறேன்.

    முன்பே குறிப்பிட்டபடி புதினம் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பக்கத்து நியாயமும் எடுத்துச் சொல்லப்படுகிறது.

    ‘ஏ’ டைப் குணம் கொண்ட தந்தையும், தனயனும் இருந்தால் அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதை இராஜராஜர், இராஜேந்திரன் வாயிலாகச் சித்தரித்திருக்கிறேன்.

    கருவிலிருக்கும்போதே ஆசையுடன், பாசத்துடன் ஊட்டப்படும் தாய்மொழியைத், தன்மொழியான தமிழைத் தன் தனயன் வெறுத்தொதுக்கும் நிலையில் ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் இரண்டாம் பாகம் எடுத்துரைக்கிறது.

    அரசபோகத்தில் நாட்டமே இல்லாத ஒருவன், பல அரசபதவிகள் அவனைத் தேடிவந்தும், அரசிளங்குமரியை மணக்கும் சூழ்நிலையில் எப்படி நடப்பான் என்பதும் வியப்பைத் தரும். தன் விருப்பத்திற்கும், விசுவாசத்திற்கும் இடையில் ஊசலாடும் மனம் அவனை எவ்வழியில் நடத்திச்செல்லும் என்பதும் ஆர்வத்தைத் தூண்டும்.

    தன் நாட்டை விடுவிக்கப் போரிட முயலும் பாண்டியமன்னன் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான், ஒரு பேரரசனுக்கு எதிராக எப்படிக் காய்நகர்த்துகிறான் என்பதும் நமக்கு அவன்பால் பாராட்டையும், கருணையையும் கொண்டுசெல்லும்.

    இராஜராஜர் தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு சிந்தித்துத் தீர்வுகாண்கிறார், தமிழ்க்கலைகளை வளர்க்க எப்படித் திட்டமிடுகிறார் என்பதைக் காணும்போது அவர் எப்படிப் பேரரசரனார் என்று வியக்கமாட்டோம். அவருடைய குருபக்தி நம்மை மெய்சிலிர்க்கவைக்கும். மலைநாட்டுத் தமிழ்மொழி மலையாளமாக மாறிவரும் நிலைமையும் விவரிக்கப்படும். இன்னும் பலப்பல ஆர்வமூட்டும் நிகழ்வுகளைச் சரமாகக் கோர்க்கப்பட்ட, தமிழன்னைக்கு மாலையாக அமைகிறது இரண்டாம் பாகம்.

    தமிழன்னையுடன் அவளது பெருமைபொங்கும் பயணத்தில் பங்குகொள்ள அழைக்கிறேன்.

    இப்புதினத்தின் நிறை-குறைகளைக் கட்டாயம் கல்கி இணையத்தில் பதியுங்கள். ஒரு கலைஞனுக்கும், அவனை ஆதரிப்பவருக்கும், இரசிகரின் பாராட்டு, அவர்களின் சிணுங்கல்கள், முணுமுணுப்புகள்தான் மேலும் எழுத, பதிப்பிக்க ஆர்வமூட்டும்.

    திருப்பணித் துவக்கம்

    இரண்டாம் பாகத்தின் முக்கிய இடங்களும், கதாபாத்திரங்களும் இடங்கள்:

    சோழப் பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், வட இலங்கையும் அடங்கியது. தஞ்சாவூர் (தஞ்சை) தலைநகர்.

    பாண்டிநாடு: வெள்ளாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரிவரையும், வங்கக் கடலிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான அரசு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது. மதுரை தலைநகர்.

    வட சேரநாடு (குடமலை நாடு): மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்ட சேரநாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது.

    தென்சேரநாடு (வயநாடு): கொல்லத்தைத் தலைநகராகக் கொண்ட சேரநாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது.

    வேங்கைநாடு: வெங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கியநாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது.

    வட இலங்கை: சோழப் பேரரசால் நேரடியாக ஆளப்பட்டது. அனுராதபுரம், பொலனருவை போன்ற நகரங்களை உள்ளடக்கியது.

    ரோகணம்: இலங்கைச் சிங்கள மன்னனால் ஆளப்பட்ட தென் இலங்கைப் பகுதி.

    கருநாடு: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டைய கர்நாடக மாநிலம் சோழப் பேரரசுக்குக் கட்டுப் பட்டது.

    அரச பரம்பரைகளும், குலங்களும்:

    சோழ அரச பரம்பரை:

    இராஜராஜ சோழன்: சோழப் பேரரசர் (சக்கரவர்த்தி) ஆட்சிக்காலம் 985லிருந்து 1014 வரை இயற்பெயர் அருள்மொழி. பட்டப்பெயர்கள் திரிபுவனச் சக்கரவர்த்தி. அரசகேசரி.

    சோழ மகாதேவி: இராஜராஜ சோழனின் பட்டத்து அரசி.

    குந்தவைப் பிராட்டி: இராஜராஜ சோழனின் தமக்கை சோழப்பேரரசில் சக்கரவர்த்திக்கு அடுத்தபடி மிகவும் செல்வாக்கு உள்ளவர்.

    ஆதித்த கரிகாலன்: இராஜராஜ சோழனின் தமையன்.

    குந்தவி: இராஜராஜ சோழனின் மகள். கீழைச் சாளுக்கிய அரசன் விமலாதித்தனை மணந்தவள்.

    இராஜேந்திர சோழன்: இராஜராஜ சோழனின் மகன். பட்டத்து இளவரசன். இயற்பெயர் மதுராந்தகன். பட்டப்பெயர் கோப்பரகேசரி.

    திரிபுவன மகாதேவி: இராஜேந்திரனின் மூத்த மனைவி. பட்டத்தரசி.

    பஞ்சவன் மகாதேவி: இராஜேந்திரனின் இரண்டாம் மனைவி.

    வீரமகாதேவி: இராஜேந்திரனின் மூன்றாம் மனைவி.

    இராஜாதிராஜன்: இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் மூத்தமகன்.

    இராஜேந்திர தேவன்: இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் இரண்டாம் மகன்.

    வீரன் (வீரராஜேந்திரன்): இராஜேந்திரன்-வீரமகாதேவியின் மகன்.

    அருள்மொழிநங்கை: இராஜேந்திரன்-பஞ்சவன் மகாதேவியின் மகள், சிவசங்கர சிவாச்சாரியின் மனைவி

    அம்மங்கை: இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் மகள்.கீழைச் சாளுக்கிய அரச பரம்பரை

    கீழைச் சாளுக்கிய அரச பரம்பரை

    விமலாதித்தன்: கீழைச் சாளுக்கிய அரசன்

    குந்தவி: விமலாதித்தனின் பட்டத்தரசி. இராஜராஜ சோழனின் மகள்.

    இராஜராஜ நரேந்திரன்: விமலாதித்தன் குந்தவியின் மகன்.

    விஜயாதித்தன்: விமலாதித்தனுக்கும், அவனது இரண்டாம் மனைவிக்கும் பிறந்த மகன்.

    சக்திவர்மன்: விமலாதித்தனின் அண்ணன். அவனுக்கு முன் வேங்கைநாட்டை ஆண்ட அரசன்.

    பாண்டிய அரச பரம்பரை

    வீரபாண்டியன்: பாண்டிய அரசன் ஆதித்த கரிகாலனுடன் போரிட்டவன். 959ல் இறந்தான்.

    அமரபுஜங்கள்: பாண்டிய அரசன் வீரபாண்டியனின் பேரன். 1012ல் இறந்தான்.

    விக்கிரம பாண்டியன்: அமரபுஜங்கனின் மகன். இராஜேந்திரனுடனும், இராஜாதிராஜனுடனும் போரிட்டவன்.

    சேர அரசர்கள்:

    பாஸ்கர ரவிவர்மன்: வட சேரநாட்டு அரசன். மகோதயபுரத்திலிருந்து (திரிச்சூர்) அரசாண்டான்.

    இரண்டாம் பாஸ்கர ரவிவர்மன்: முதலாம் பாஸ்கர ரவிவர்மனின் மகன். உதகையில் கொலோச்சினான்.

    கோவர்த்தன மார்த்தாண்டன்: தேன் சேர நாட்டு அரசன். பாண்டிய அரசன் அமரபுஜங்கனின் நண்பன்.

    பிற முக்கிய பாத்திரங்கள்

    பிரம்மராயர் சிவாச்சாரி குலம்

    கருவூர்த்தேவர்: இராஜராஜ, இராஜேந்திர சோழர்களின் அரசகுரு

    சிவசங்கர சிவாச்சாரி: கருவூர்த்தேவரின் மாணவன். அவரின் மாற்றாந்தாயின் மருமகன். இராஜராஜரின் தமிழ்த் திருப்பணி ஆலோசகர். திருமந்திர ஓலைநாயகம். (முதல் பாகதில் வந்த ஈஸ்வரனின் மூதாதை.)

    சிவாச்சாரியின் முதல் மனைவி: பெயர் கொடுக்கப்படவில்லை.

    சிவாச்சாரியின் இரண்டாம் மனைவி: அருள்மொழிநங்கை, இராஜேந்திரனின் மகள்.

    வெற்றிமாறன் குலம்

    வெற்றிமாறன்: வீரபாண்டியனின் மெய்காப்பாளன் (முதல் பாகதில் வந்த அழகேசனின் மூதாதை)

    திருமாறன்: வெற்றிமாறனின் பேரன். அமரபுஜங்கனின் மெய்காப்பாளன்.

    காளையப்பன்: திருமாறனின் மகன் விக்கிரம பாண்டியனின் மெய்காப்பாளன்.

    வெற்றிவீரன்: திருமாறனின் தம்பி. விக்கிரம பாண்டியனின் முதல் மெய்காப்பாளன்.

    முருகேசன்: திருமாறனின் தம்பி. ரோகணத்தில் (தென் இலங்கை) மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் பொக்கிஷத்தின் காவலன்.

    நிலவுமொழி குலம்

    நிலவுமொழி: குலத்தலைவி (முதல் பகுதியில் வரும் காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதனின் குலமுதல்வி.)

    பொன்னம்பல ஓதுவார்: நிலவுமொழியின் தந்தை.

    தொண்டைமான் குலம்

    ஈராயிரவன், பல்லவராயர்: இராஜராஜ சோழனின் மையப் படைத்தலைவர், பல்லவ அரச பரம்பரை.

    பண்டைய நகர்களின் பெயர்கள்

    திருமயிலை: மயிலாப்பூர் சென்னையின் ஒரு பகுதி.

    தில்லை: சிதம்பரம்

    நெல்லை: திருநெல்வேலி

    உதகை: ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம்

    கச்சிப்பேடு: காஞ்சிபுரம்

    பொன்னமராவதி: வடபாண்டிய நாட்டின் தலை நகரம். தற்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது.

    பழையாறை: சோழர்களின் பழைய தலைநகரம். இப்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது.

    இடைச்செருகல்

    அ. சேவூர் அருகிலான மலைக்காட்டில் ஒரு குகை

    சித்தார்த்தி, வைகாசி 8 – ஜூன் 23, 959

    ¹

    ஏழையைப்போல அந்தக் குகையின் தரையில் படுத்துக்கிடக்கிறான் வீரபாண்டியன். மெதுவாக அவனுக்கு நினைவு திரும்புகிறது.

    சேவூரில் ஆதித்த கரிகாலனுடன் போரிட்டதனால் அவன் உடம்பெல்லாம் ஏற்பட்ட விழுப்புண்களிலிருந்து ஒழுகிய இரத்தம் கருப்பாக உறைந்து காயந்திருக்கிறது. அவற்றின்மீது ஆங்காங்கு பச்சிலைப் பற்று காணப்படுகிறது. இடது கண்ணின்மீது பச்சிலை வைத்து கட்டப்பட்டிருக்கிறது. துண்டிக்கப்பட்ட வலது மணிக்கட்டுக்கு மேல்

    ², இரத்தப் பெருக்கை நிறுத்தக் கட்டிய கட்டு செக்கச் செவேலென்று நனைந்துபோயிருக்கிறது. காய்ச்சலால் உடல் அனலாகக் காய்கிறது. அவனது வீரவாளும், மகுடமும் இரத்தக்கறைபடிந்த துணியில் அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன.

    முனகலுடன் கண் விழிக்கிறான், வீரபாண்டியன். சோழப் படைகளின் புதுத்தளபதியான – அபிமன்யுவின் வீரத்தை ஒத்த, பதினைந்தே வயதான ஆதித்த கரிகாலன்

    ³, புலிக்குட்டியைப்போல படைகளை நடத்திச்சென்று படைகளுக்குக்கொடுத்த வீர உற்சாகத்திற்கும் – அவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் – என்னதான் வீரத்துடன் போரிட்டாலும், பதில்சொல்ல இயலாதுபோனது இலேசாக ஞாபகத்திற்கு வருகிறது.

    இதற்கிடையில் இலங்கை அரசன் நாலாம் மகிந்தனுடைய உதவிப்படை சோழப்படையின் புலிவெறிக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கிச் சென்று தனியாகிவிட்டது. இந்நிகழ்வு பாண்டியப் படைகளுக்கு ஒரு கையை இழந்த மாதிரியாக இருந்ததும், சிறுவன் என்று எண்ணி ஆதித்த கரிகாலனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்ட தனது அதிகத் தன்னம்பிக்கையே தனக்கு எதிரியாக ஆகியதும், போர்த்திறமை அதிகமிருந்தாலும், ஆதித்த கரிகாலனின் வேகம், புதுவிதமான வாட்போர் தன் உடலில் அளவுக்கும் அதிகமான காயங்களை ஏற்படுத்தியதும், அதன் தாக்கத்தால் மயக்கமடைந்து குதிரையில் சாய்ந்ததும் கண்முன் நிழலாடுகிறது.

    ***

    நினைவு திரும்பியதால் உடலின் காய்ச்சலும், வலியும் மீண்டும் அவனை வெறியுடன் அணைத்துக்கொண்டு நரகவேதனையைத் தருகின்றன. பல போர்களில் விழுப்புண் ஏற்ற வீரபாண்டியனுக்கு வலி புதிதல்ல தான். ஆகவே, தன்னைச் சமாளித்துக்கொண்டு எழ முயல்கிறான்.

    அரசே! அசையாதீர்கள்! நான்தான் உங்களது மெய்காப்பாளன் வெற்றிமாறன். உங்கள் காயத்திற்குப் பச்சிலை மருந்துவைத்துக் கட்டியிருக்கிறேன். உங்களின் காய்ச்சலுக்கு கசாயமும் கொதிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். அதை அருந்தினால் உங்கள் காய்ச்சல் பறந்துவிடும். மதுரை திரும்பிவிடலாம், என்று வீரபாண்டியனை மெதுவாகத் தாங்கிப் படுக்கவைக்கிறான் அவனது மெய்காப்பாளர்களிலேயே வயதில் மிகவும் சிறியவனான வெற்றிமாறன்.

    ம்… தன்முன் தெரியும் மங்கலான உருவத்தைக் நோக்குகிறான், வீரபாண்டியன். பார்வை மங்கி இருப்பதும், ஒரு கண்ணை பச்சிலைப்பற்று மறைத்திருப்பதும் தெரிகிறது. தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிவைத்திருப்பது போலவும், ஒரு சுத்தியலால் நெற்றியில் அடிக்கடி அடிப்பதுபோலவும் உணர்கிறான். இருந்தாலும் தன்னைப் பற்றியும், தன் உடல் நோவைப் பற்றியும் கவனம் செலுத்துவதைவிட, தன் படைகளின் நிலையைப் பற்றிப் பேசுவதுதான், மீண்டும் போருக்குச் செல்வதுதான் முக்கியம் என்று வலுக்கட்டாயமாகத் தெம்பை வரவழைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்கிறான்.

    வெற்றிமாறா! நீ மட்டும்தான் இங்கே இருக்கிறாயா? மற்ற மெய்காப்பாளர்கள் ஐவரும் என்ன ஆனார்கள்? பாண்டியப் படைகளின் நிலை என்ன? இலங்கை அரசரையும் அவர் படைகளையும் மீண்டும் களத்திற்கு அழைத்துவரச் சென்ற ஓலைதாங்கி திரும்பி வந்தானா?

    தலையைக் குனிந்துகொள்கிறான், வெற்றிமாறன்.

    வெற்றிமாறா! நீ பாண்டிய வீரனடா, மதுரைத் தமிழனடா! நீ என்றும் தலை குனியக்கூடாது. சாவைக்கூட மகிழ்ச்சியாகத் தலைநிமிர்ந்து வரவேற்கவேண்டும். நீ தலைகுனியும்படி என்ன காரியம் செய்தாய்? மெதுவாக உறுமுகிறான், வீரபாண்டியன்.

    அரசே! இன்றுவரை மட்டுமல்ல, உடலில் உயிர் இருக்கும்வரை தலைகுனியும்படியான வேலையை உங்களது மெய்காப்பாளன் செய்யமாட்டான். உங்கள் உயிரைக் காப்பதுதான் என் பாக்கியம். நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் நான் என்ன பதில்சொல்வது, அரசே? ஆதித்த கரிகாலனின் தாக்குதலினால் மயங்கிக் குதிரையில் சாய்ந்த உங்களைப் பாதுகாப்பான மலைக்காட்டுக் குகைக்குக் கொண்டுவந்து சேர்த்த நான் ஒருவன்தான் மீந்திருக்கிறேன். மற்ற அனைவரும் நான் உங்களை மீட்டுச் செல்வதற்காகத் தங்கள் உயிரைக் கொடுத்து வீரசுவர்க்கத்தை எய்திவிட்டார்கள். அந்த வாய்ப்பை எனக்கு அவர்கள் கொடுக்க மறுத்ததுதான் என்னை வருத்தப்படச் செய்துவிட்டது. அரசே! ஆயினும் உங்கள் உயிரைவிட வீரசொர்க்கம் எனக்குப் பெரிதல்ல. உங்கள் பக்கத்திலேயே இருந்து, உங்கள் உயிருக்காக என் உயிரைக்கொடுக்கத் தயாராக இருப்பதே சொர்க்கத்தில் இருப்பதுபோலத்தான், அரசே! பொங்கும் ஆற்றாமையுடனும், அதே சமயத்தில் வீரப்பெருக்குடனும் பதிலிறுக்கிறான், வெற்றிமாறன்.

    என்ன என்னருமை நண்பனும் உன் தந்தையுமான வீரமாறன், உன் சிற்றப்பனான மதுரைமாறன், என்னை எடுத்து வளர்த்த செங்கழனித் தேவர், எனக்கு வாட்பயிற்சி கற்றுவித்த முதுகுடுமியார், உன் அண்ணன் நெடுமாறன் இவர்கள் எல்லாரும் எனக்காக உயிர் நீத்தனரா? எனக்கு முன்பே போரில் மார்பில் விழுப்புண் தாங்கி வீரசொர்க்கம் எய்தினரா? கோழையைப்போல நான் மட்டும் மயக்கநிலையில் உயிர் தப்பித்தேனே, இது என்ன கொடுமை? தாயே மீனாட்சி! சொக்கநாதா! உனக்குச் சொந்தமான பாண்டிநாட்டைச் சோழன் ஆள்வதா? ஆதித்த கரிகாலா! சோழச் சிறுவா! நீ அரியணை ஏறமாட்டாய்! என் உயிரைக்கொடுத்துச் செய்யும் வாக்குறுதி இது! என்று சொற்களைக் கடித்துத் துப்புகிறான் வீரபாண்டியன்.

    அரசே! உங்கள் வாக்குறுதி நிறைவேற என் உயிரையும் கொடுப்பேன்! என்று தன் வாளை உறுவி, கட்டைவிரலில் இலேசாகக் கீறுகிறான். வழியும் இரத்தத்தால் வீரபாண்டியனுக்குத் திலகமிடுகிறான் வெற்றிமாறன். வீரபாண்டியனின் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது.

    மதுரைக்கு உன் மாதிரியான வீரப் புதல்வர்கள்தான் வேண்டும், வெற்றிமாறா! நீ எனக்கு இன்னும் ஒரு சத்தியமும் செய்துகொடுக்க வேண்டும்! வீரபாண்டியனின் குரலில் அவனது காயங்களின் தாங்கவோண்ணா வலியின் தாக்கம் தெரிகிறது. மூச்சுவிட மிகவும் கஷ்டப்படுகிறான்.

    சொல்லுங்கள், அரசே! உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்! வீரத்துடன் முழங்குகிறான், வெற்றிமாறன்.

    அந்த சோழச் சிறுவனைப் பழிவாங்கும்வரை எக்காரணத்திற்காகவும் நீ உயிரை விடக்கூடாது. அதற்காக எந்த ஈனமான வேலையையும் நீ செய்யவேண்டும். இனிமேல் உன் உயிர் ஆதித்த கரிகாலனை அழிக்க மட்டுமே பயன்படவேண்டும், உன்னுயிரைக் கொடுத்து என்னைப் பாதுகாக்க நீ எடுத்த உன் வாக்குறுதியிலிருந்து உன்னை விடுவிக்கிறேன். உம்… என்று வலதுகையை நீட்டி உயர்த்திய வீரபாண்டியன் திடுக்கிடுகிறான். மணிக்கட்டுக்கு மேல் மொட்டையாகக் காட்சியளிக்கிறது அவனது வலது கை.

    சில வினாடிகளில் அவனிடமிருந்து ஒரு விரக்திச் சிரிப்பு உதிர்கிறது.

    உன்னிடமிருந்து உறுதியைக்கூடப் பெறமுடியாமல் செய்துவிட்டானா, அந்தச் சோழச்சிறுவன்? தழுதழுக்கிறது வீரபாண்டியனின் குரல்.

    பரவாயில்லை. இன்னும் இடது கை இருக்கிறதல்லவா? என்று இடது கையை உயர்த்தி, வாக்குறுதி செய் வெற்றிமாறா! எனது வலது கையாக ஆகி அந்தச் சோழச்சிறுவனைக் கொற்றவைக்குப் பலிகொடுப்பேன் என்ற வாக்குறுதியைக் கொடு! என்று இடது கையை நீட்டுகிறான்.

    வாளை மீண்டும் எடுத்துத் தன் வலது உள்ளங்கையைச் சற்று பலமாகக் கீறுகிறான், வெற்றிமாறன். இரத்தம் ஒரேயடியாக தாரையாகப் பெருகுகிறது. நீட்டப்பட்டிருந்த வீரபாண்டியனின் இடது உள்ளங்கையைத் தயக்கத்துடன் மிகவும் மெதுவாகக் கீறுகிறான். எறும்பு கடிப்பதைப் போன்ற உணர்வுதான் வீரபாண்டியனுக்கு ஏற்படுகிறது. அவனது உள்ளங்கையில் தாமரைப் பூவாகக் குருதி மலருகிறது. அவனது குருதியில் தன் குருதியைக் கலக்கும் வண்ணம் இறுகப் பிடிக்கிறான் வெற்றிமாறன்.

    அரசே! உங்களது இரத்தத்துடன் கலக்கும் என் இரத்தத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்! ஆதித்த கரிகாலனின் அழிவு என் கையால்தான்! வீரத்துடன் முழங்கினாலும், அவனது குரல் கம்முகிறது.

    வெற்றிமாறா! பாண்டிய மண்ணுக்குப் பெருமையைச் சேர்! வீரபாண்டியன் களைப்பில் கண்களை மூடிக்கொள்கிறான்.

    என் நாவு வரள்கிறது. சிறிது தண்ணீர் தருகிறாயா?

    அதுதான் அவன் கடைசியாகப் பேசும் பேச்சு என்று வெற்றிமாறனால் அறிந்துகொள்ள முடியவில்லை.

    இதோ, அரசே! அருகில் இருக்கும் மலையருவியில் உங்களுக்குத் தண்ணீர் எடுத்து வருகிறேன். அப்படியே உங்கள் காய்ச்சலுக்கு கசாயத்தையும் கொண்டுவருகிறேன். என்றவாறு அங்கிருந்து நகர்கிறான், வெற்றிமாறன். அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகுகிறது.

    தண்ணீர்க் குடுவையை ஒரு கையிலும், கஷாயச் சட்டியை ஒரு கையிலும் எடுத்துக்கொண்டு திரும்பும் வெற்றிமாறனின் காதில் குதிரைகளின் குளம்பொலி நாராசமாகப் பாய்கிறது. வேகமாக குகையை நோக்கி ஓடுகிறான். அவன் குகையை அடைவதற்குள் குதிரைகளின் குளம்பு ஒலிகள் நின்றுபோய், மீண்டும் ஆரம்பித்துச் செல்வது அவன் காதில் விழுகிறது.

    இனம் புரியாத அச்சத்துடனும் வேதனையுடன் குகையை அடைந்த அவனுக்கு, அங்கு கண்ட காட்சி இரத்தத்தை உறையவைக்கிறது.

    தண்ணீர்க் குடுவையையும், கஷாயச் சட்டியையும் எறிந்துவிட்டு, அரசே! உங்களுக்கா இக்கதி? இதற்காகவா என்னை உங்கள் உயிரைக் காக்கும் வாக்குறுதியிலிருந்து விடுவித்தீர்கள்? என்று அலறுகிறான்.

    குகையிலிருந்து குருதி சிறிய ஆறாக வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. குகையின் உள்ளே தலையற்ற வீரபாண்டியனின் உடல் முண்டமாகக் கிடக்கிறது. அவனது கழுத்தில் எப்பொழுதும் தொங்கும் பரம்பரைச் சொத்தான பெரிய முத்துமாலையோடு, சாத்திவைத்திருந்த மகுடமும், வாளும் காணப்படவில்லை⁴.

    அரசே, என்னை ஏன் வெளியே அனுப்பினீர்கள்? இதற்காகவா? என்று கதறியவாறே குகைக்கு இடப்பக்கம் சென்று கீழே குதிரைக் குளம்புகளின் சத்தம் வரும் திசையை நோக்குகிறான்.

    நூறடி கீழே செல்லும் மலைப் பாதையில் முன்செல்லும் குதிரையில் அமர்ந்திருக்கிறான், ஆதித்த கரிகாலன். அவனது கையில் தூக்கிப் பிடித்த ஈட்டி – அதில் வீரபாண்டியனின் தலை⁵ சொருகப்பட்டிருக்கிறது.

    ***

    1 இரண்டாம் பராந்தக சோழருடன் சேர்ந்து ஆதித்த காிகாலன் தலைமைதாங்கிய சோழப் படைகளும், வீரபாண்டியனின் பாண்டியப் படைகளும், அவனுக்குத் துணை வந்த நாலாம் மகிந்தனின் ஈழப் படைகளுக்கும் இடையே\ சேவூாில் நிகழ்ந்த போர் பொது ஆண்டு 959ல் நிகழ்ந்தது – சோழச் செப்பேடுகள்.

    2 இது என்னுடைய கற்பனையே! இதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை.

    3 அபிமன்யுவின் வீரத்தை ஒத்த ஆதித்த காிகாலன் பதினைந்து வயதிலேயே வீரபாண்டியனைத்

    தோற்கடித்துப் போர்க்களத்தைச் சுற்றியிருந்த மலைக்காடுகளுக்கு ஓடச்செய்தான் – சோழச் செப்பேடுகள்.

    4 "வீரபாண்டியனை வென்றபின், பாண்டியநாட்டின் சுதந்திர உாிமையை மறுக்க பாண்டியர்களின் மீன் அச்சு, மணிமகுடம், அாியணை, பரம்பரைச் சொத்தான முத்துமாலை இவைகள் கவர்ந்து

    கொண்டுவரப்பட்டன." — இரண்டாம் பராந்தக சுந்தரசோழாின் மெய்கீர்த்தி.

    5 ஆதித்த காிகாலனைப் பற்றிய கல்வெட்டுகள் ‘வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த காிகாலன்,’ என்று குறிப்பிடுகின்றன.

    இடைச்செருகல் தொடர்ச்சி….

    ஆ. கீழக் கடம்பூர் மாளிகை

    சுக்கில, ஐப்பசி 8 – அக்டோபர் 23, 969

    ...வீரபாண்டியனின் தலையை ஈட்டியில் சொருகிக்கொண்டு சென்று அதை வெற்றி ஊர்வலமாக தஞ்சைக்கு எடுத்துச்சென்றது மட்டுமல்லாமல், அதைத் தன் வெற்றிக்கு அறிவிப்பாக, பாண்டிநாட்டின் வீழ்ச்சிக்கான சின்னமாக கம்பத்தில் ஆதித்த கரிகாலன் நட்டுவைத்தது வெற்றிமாறனின் இரத்தத்தைக் கொதிக்கவைத்தது. காக்கைகளும் கழுகுகளும் வீரபாண்டியனின் மிச்சமிருக்கும் கண்ணையும் கொத்தித் தின்பது அவனுடைய கண்ணையே அவைகள் கொத்தித் தின்னுவதுபோல இருந்தது...

    ...இன்று எனக்கு வெற்றி கிட்டிவிடும். இதற்காக எத்தனை ஈனச் செயல்களைச் செய்யவேண்டி வந்தது? அரசரின் வெட்டப்பட்ட வலது கையிலிருந்த முத்திரை மோதிரத்தை உபயோகித்துப் பாண்டிநாட்டின் முத்துக்களைப் பெற்று, நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஐந்தாம்படைத் துரோகிகளைக் (தனக்கு உதவினாலும் அவர்களது நாட்டிற்கு அவர்கள் துரோகிதான் என்பது அவன் கருத்து!) கண்டுபிடித்து, அவர்களுக்கு அந்த முத்துகளைக்கொடுத்து, அவர்களின் பொருளாசையைப் பயன்படுத்தி, அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டி வந்திருக்கிறதே? அவன் மனம் தன் திட்டத்தையும், அது நிறைவேறும் அளவுக்கு வந்திருப்பதையும் நூறு தடவை திரும்பத் திரும்ப மனதில் ஒத்திகை பார்க்கிறது...

    ... தஞ்சையில் மிகவும் மதிப்பு வாய்ந்த ரவிதாச பஞ்சவ பிரம்மாதிராசர்⁷ நட்புக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாத்திரமானான். அதற்கு அவன் பாண்டிநாட்டிலிருந்து கொண்டுவந்த முத்துக்கள் பெரிதும் உதவின. அவர்கள் மூலமாக ஆதித்த கரிகாலனின் நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டான். தான் பாண்டிய நாட்டான், தனது எண்ணம் ஆதித்த கரிகாலனை அழிப்பது என்று மற்றவர்க்குத் தெரியாமல் நடந்துகொண்டான். அதற்காக எப்பொழுதும் ஆதித்த கரிகாலன் புகழை ரவிதாசனின் காது புளித்துப்போகும்வரை புகழ்ந்து தள்ளினான்.

    இதனால் இரகசியமாக இருக்கவேண்டிய ஆதித்த கரிகாலனின் தனிப்பட்ட போக்குவரத்து விபரங்களை அவனெதிரிலேயே அவர்கள் பேசத் தொடங்கினார்கள். ஆதித்த கரிகாலனுக்கு ஆடலிலும் பாடலிலும் வல்ல ஒரு பெண்ணுடன் நட்பு இருக்கிறது. அவளைச் சந்திக்க அவன் அடிக்கடி வந்துபோவான் என்று தெரிந்துகொண்டான். அவள் கோவிலுக்கு அருகிலுள்ள மாளிகையில் வசிப்பதையும் அறிந்துகொண்டான். மாறுவேடத்தில் சென்று அந்தப் பெண்ணின் வீட்டில் பணியாளனாகவும் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அடுத்தநாள் ஆதித்த கரிகாலன் வரப்போகிறான் என்ற சேதி தெரிந்தது.

    நடனமாடும் பெரிய மேடையை அலங்கரித்துக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மலர்களையும், மாலைகளையும் கட்டும் பொறுப்பு அவனுக்குக் கிடைத்தது. இருப்பினும் மாளிகைக்கு ஆதித்த கரிகாலன் எப்படி வருவான் என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.

    யோசித்தவாறே மேடையை அலங்கரிக்கும்போது யாரோ நடந்துவரும் சந்தடி கேட்டது. சட்டென்று அருகிலிருக்கும் மிகப்பெரிய பூக்கூடைக்குப் பின்னால் மறைந்துகொண்டான்.

    கதவு திறக்கும் ஓசை

    Enjoying the preview?
    Page 1 of 1