Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3
Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3
Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3
Ebook134 pages37 minutes

Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொங்குமண்டல சதகத்தில் உள்ள பாக்களையும் அது கூறும் வரலாறுகளையும் விவரித்து முதல் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் 32 வரலாறுகளும் அடுத்த பாகத்தில் 35 வரலாறுகளும் விவரிக்கப்பட்டன. இந்த மூன்றாம் பாகத்தில் மீதியுள்ள வரலாறுகள் விவரிக்கப்படுகின்றன.

இந்த பாகத்தில் அகத்தியர் காவிரியை உற்பத்தி செய்தது, திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீக்கியது ஆகிய வரலாறுகள் உள்ளன. அத்துடன் கரூர் என்று இன்று வழங்கப்படும் திரு ஆநிலை, திரு அவிநாசி, பேரூர், துடியலூர் ஆகிய தலங்களின் மகிமைகளும் அற்புத வரலாறுகளும் விவரிக்கப்படுகின்றன. அடுத்து அதியமான், ஓரி, பவணந்தி முனிவர், படிக்காசுப் புலவர் ஆகியோரது வரலாறுகள் உள்ளிட்ட பல சிறந்த புலவர்கள், மன்னர்கள், வீரர்கள் ஆகியோரின் சரித்திரமும் விளக்கப்பட்டுள்ளது. தமிழர் படித்து பெருமைப்படத்தக்க விதத்தில் உள்ள தமிழ்ப் புலவர்கள் மற்றும் மன்னர்களின் வாழ்க்கையில் நடந்த வியத்தகு சம்பவங்களை அனைவரும் படிக்கலாம்; பிறருக்குப் பரிசாகவும் கொடுத்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580151010587
Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3

Read more from S. Nagarajan

Related to Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3

Related ebooks

Reviews for Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part - 3 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள்! பாகம் - 3

    Kongumandala Siddhargal, Pulavargal, Thalangal! Part – 3

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    என்னுரை

    முதல் பகுதி

    கொங்குமண்டல சதகம் நூல் அமைப்பு, நாடு, எல்லை, நதி, மலை

    1. கொங்குமண்டல சதகம் - முதல் ஐந்து பாடல்கள்

    2. கொங்குமண்டல சதகம் - பாடல்கள் 6 & 7

    இரண்டாம் பகுதி

    சித்தர்கள், மகான்கள்

    3. காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு மண்டலத்திலேயே!

    4. திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய பாடல்!

    மூன்றாம் பகுதி

    தலங்கள்

    5. பிரமனின் படைப்புத் தொழிலை காமதேனு செய்த தலம் கருவூர் திரு ஆநிலை

    6. பேரூர்த் தாண்டவமூர்த்தி!

    7. பட்டிப் பெருமான் பள்ளனான கதை!

    8. சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு

    நான்காம் பகுதி

    புலவர்கள், மன்னர்கள்

    9. கொங்குப் புலவர் சபை!

    10. தமிழ் ஔவைக்கு நெல்லிக் கனி தந்த வள்ளல் அதிகமான்!

    11. தமிழுக்குக் கொடுத்த ஓரி!

    12. வையாவிக்கோப் பெரும் பேகன்!

    13. பவணந்தி முனிவரை நன்னூல் இயற்ற வேண்டிய சீயகங்கன்!

    14.புலவரின் தாயார் முதுகில் ஏறிய புலவர்! கொங்கு நாட்டின் மீது தொண்டை நாடு செய்த சோதனை!

    15. தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம் செய்த ஆணூர்ச் சர்க்கரை!

    16. மூன்று மன்னர்களைத் திகிலடையச் செய்த வாணனைப் பிடித்த சூரிய காங்கேயன்!

    17. சோழனை விரட்டிய வாலிப வீரன் மன்றாடி!

    18. சிங்களரை எதிர்த்து ஓடவிட்ட கோப்பணனின் வீரம்!

    19. இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்!

    20. பொருள் தராத உன்னைக் கடைவிதியில் விலை கூறி விற்பேன் - புலவரின் தைரியம்!

    21. பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்!

    22. முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன்

    23. வாரணவாகனனையும் வென்ற வாரணவாசி?!

    24. படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்!

    25. தன் பெயரையே விருதுப் பெயராகக் கொடுத்த உத்தமச் சோழன்!

    26. ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!

    27. தவம் நிதம் நோற்கும், அவநிதன் முதலிய அரசர் ஆளும் கொங்கு மண்டலம்!

    பிற்சேர்க்கை

    கொங்குமண்டல சித்தர்கள் - பாகம் 3

    கொங்குமண்டல சித்தர்கள் - பாகம் 1

    கொங்குமண்டல சித்தர்கள் - பாகம் 2

    என்னுரை

    தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

    தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் வாய்ந்த சரித்திரம், பல வரலாறுகளைக் கொண்டது.

    கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு கார்மேகக் கவிஞர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

    கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

    சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1923ஆம் ஆண்டில், ருத்ரோத்காரி வருடம் சித்திரை மாதம், திருச்செங்கோடு விவேக திவாகரன் பத்திராதிபர் திரு தி.அ. முத்துசாமிக் கோனாரால் பல கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு ஆராய்ந்து நூதனமாக எழுதிய உரை முதலியவற்றோடு பழயகோட்டை ராய்பஹதூர் ஶ்ரீமான் நல்லதம்பிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியாரவர்கள் விருப்பத்தின் படி கொங்குமண்டல சதகம் சென்னையில் பதிப்பிக்கப் பெற்றது.

    இந்தப் பழைய நூலின் பிரதி ஒன்று எனக்குக் கிடைத்தது.

    அதை அடிப்படையாகக் கொண்டு அதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்து எழுதினேன்.

    இந்த அரும் முயற்சியில் ஈடுபட்டு ஒரு நல்ல நூலை ஆய்வு செய்து நமக்கு வழங்கிய திரு தி.அ. முத்துசாமிக் கோனாருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

    இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் இன்னும் 35 வரலாறுகள் வெளியிடப்பட்டது.

    இப்போது மீதியுள்ள பாடல்கள் முப்பத்திமூன்றுடன் காப்பு, அவையடக்கம், ஆக்கியோன் உள்ளிட்ட மூன்று பாடல்களுடன் சேர்த்து 36 பாடல்கள் இந்தக் கடைசி பாகத்தில் வெளியாகிறது.

    முதல் இரு பாகத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் முதல் குறிப்பு மற்றும் அவை குறிக்கும் வரலாறுகள் எவை என்பதை அறிய விரும்புவோருக்காக அவை இந்த புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

    நூலில் பாடல்கள் ஒன்று முதல் நூறு வரை வரிசையாக தரப்படவில்லை. மாறாக சித்தர்கள், மகான்கள், தலங்கள், புலவர்கள், அரசர்கள் என்ற வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்று பாகங்களையும் இணைத்துப் பார்த்தால் நூலில் உள்ள பாடல்களை வரிசையாகப் பெறலாம்.

    இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

    முதல் இரு பாகங்களை டிஜிடல் வடிவமாக வெளியிட்ட பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA இந்த மூன்றாம் பாகத்தையும் வெளியிடுகிறது. நூல் வெளியிடுவதில் தனக்கெனத் தனி ஒரு இடம் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது

    Enjoying the preview?
    Page 1 of 1