Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1
Ebook247 pages1 hour

Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழம்பெரும் இதிஹாஸமான ராமாயணம் பற்றி தனது காவியத்தில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டுள்ளோர் படிக்க ஏற்ற நூல் இது. இராமாயணம் பற்றிய தொடர் வரிசையில், பால காண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் - இரு பாகங்களைத் தொடர்ந்து இந்த கம்பரின் அயோத்தியா காண்டம் முதல் பாகம் வெளி வருகிறது.

இந்த முதல் பாகத்தில் மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம். கைகேயி சூழ்வினைப் படலம், நகர் நீங்கு படலம் ஆகிய நான்கு படலங்கள் இடம் பெறுகின்றன. தசரதன், கூனி, கைகேயி, கோசலை, சுமத்திரை, இராமன், இலக்ஷ்மணன் உள்ளிட்டோர் பற்றி வேறெங்கும் காண முடியாத பல சுவையான விஷயங்களை ஒருங்கு சேர ஒரே இடத்தில் படித்து மகிழும்படி இந்த நூல் அமைந்துள்ளது.

நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் கவியரசர் கண்ணதாசன் ஈறாக பல நூல்கள் மற்றும் அறிஞர்கள் தம் மேற்கோள்களை சரளமாக இந்த நூலில் படித்து மகிழலாம். குடும்பத்தினர் படித்து மகிழ்வதோடு அனைவருக்கும் பரிசாகவும் அளிக்க உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580166709874
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1

Read more from R. Seshadrinathan

Related to Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1

Related ebooks

Reviews for Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1 - R. Seshadrinathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இராமாயணம் அயோத்தியா காண்டம் - கம்பர் – பாகம்1

    Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 1

    Author:

    ஆர். சேஷாத்ரிநாதன்

    R. Seshadrinathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-seshadrinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்ககம்

    என்னுரை

    அணிந்துரை

    அயோத்தியா காண்டம்

    1. மந்திரப் படலம்

    2. மந்தரை சூழ்ச்சிப் படலம்

    3. கைகேயி சூழ்வினைப் படலம்

    4. நகர் நீங்கு படலம்

    பிற்சேர்க்கை

    1. கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம்

    2. உதவிய இராமாயண நூல்களின் பட்டியல்

    என்னுரை

    வணக்கம்.

    மனிதகுலம் நன்றாக இருக்க வேண்டுமென்று பல்லாயிரம் வருடங்களாக நமது முனிவர்களும், ரிஷிகளும் பாடுபட்டு வந்திருக்கின்றனர்.

    இதற்குப் பரம்பொருள் வகுத்து, பிரபஞ்சத்தில் ஒலி அலைகளாக உலா வந்த கோட்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து, வேதங்களாகவும், உபநிஷத்களாகவும் உருவாக்கியவர் வேதவியாசர். அத்தோடு நில்லாமல் அவைகள் சாதாரண மனிதனைச் சென்றடைய அவர் பல முயற்சிகள் எடுத்தார்.

    எந்தவிதமான போதனைகளும் கதை வடிவிலும் பாடல் வடிவிலும் இருந்தால் அவை எளிதாக எல்லோரையும் சென்றடையும். வேதங்கள், மனிதகுலம் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது? என்பதைத் தானே தெரிவிக்கின்றன. அதைக் கதை வடிவில் எவ்வாறு சொல்வது? அதற்காக உருவான காவியங்கள்தான் இராமாயணம் மற்றும் மகாபாரதம். மனிதகுலம் எதைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது வால்மீகி எழுதிய இராமாயணம். எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்வது வேத வியாசர் எழுதிய மகாபாரதம். மீண்டும் மொழிப் பிரச்னையால் இந்தப் போதனைகள் சாதாரண மனிதனை அடைவதில் பல சிரமங்கள் இருந்தன.

    வால்மீகி மற்றும் வேதவியாசர் விட்ட பணியைத் துவங்கியவர்கள் காளிதாசர், கம்பர், துளசிதாசர் போன்ற மகான்கள். இவர்கள் அந்தக் காவியங்களை எல்லோரும் புரிந்து கொள்வதற்காக அவரவர் மொழிகளில் மொழிபெயர்த்து மனித குலத்திற்கான தங்கள் சேவையைத் தொடர்ந்தனர்.

    அந்த இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இன்னும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபன்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர்.

    இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பாலகாண்டத்தையும் வால்மீகியின் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கி உள்ளேன். அடுத்து கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளேன்.

    கம்பர் ஒரு மகாசமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர். ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன், சுந்தரசண்முகனார் கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை, அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன். அவர்கள் எல்லோருக்கும் எமது வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது தொகுப்புகளை எல்லாம் நூல் வடிவில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு பேருதவி செய்து வரும் எனது குருநாதர் திரு.ச. நாகராஜன் அவர்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனக்கு உறுதுணையாக இருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கட்டுரைகள் இணையதளத்தில் வெளிவந்த நாட்களில் உடனுக்குடன் அதைப் பாராட்டி என்னை ஊக்குவித்த வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டுவர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் ஶ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, அன்னை சீதாதேவியாரின் அருள் பரிபூரணமாக சித்திக்க ஶ்ரீ ராமரையும் அன்னை சீதாதேவியையும் வேண்டுகிறேன்.

    நன்றி.

    சென்னை

    14-5-23

    அன்புடன்

    ஆர். சேஷாத்ரிநாதன்

    அணிந்துரை

    உலகில் தோன்றிய ஆகப்பெரும் கவிஞர்களில் முன்னணியில் உள்ளோரில் முதல் வரிசையில் இடம்பெறுபவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

    இதை மஹாகவி பாரதியார்,

    "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

    வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

    உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை"

    என்று கூறுகிறார்.

    மஹாகவியின் வார்த்தைக்கு மறுப்பேது?

    கம்பனைப் பல்வேறு இடங்களில் பாராட்டி வியக்கும் மஹாகவி அதற்கான காரணத்தையும் தமிழச் சாதி என்ற கவிதையில் அருமையாகக் கூறிவிடுகிறார்.

    ‘எல்லையொன்றின்மை’ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

    பல்வேறு அறிஞர்களும் கம்பனைக் கற்க முயன்று அவனது ‘எல்லையொன்றின்மை’ (Infinity) என்ற மாபெரும் தன்மையால் தம் ஆயுள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றனர்.

    "சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொ(ல்)லினுள் ஜொலிக்கும் ஞான

    எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடு இகலும் சந்த

    மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ் கவி துறைகை போய

    வல் கண்ட புலவர் யார் இவ் வரகவி முடியக் கண்டார்?!"

    என்று இவ்வாறு ‘கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை’யில் கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை (தோற்றம் 1879 - மறைவு 1941) வியந்து கம்பனைப் பாராட்டுகிறார்.

    ஆனால் இந்த வேக யுகத்தில் நமக்கு கம்பனை இனம்காட்ட ஒருவர் வேண்டுமே!

    இந்த வகையில்தான், இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல்முத்துக்களைக் கண்டு, அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார். திரு.ஆர். சேஷாத்ரிநாதன்.

    இராமாயணம் பற்றிய அவரது தொடர் நூல்களில், பாலகாண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் - இரு பாகங்களைத் தொடர்ந்து இந்த கம்பரின் அயோத்தியா காண்டம் முதல் பாகம் வெளிவருகிறது.

    இந்த முதல் பாகத்தில் மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம். கைகேயி சூழ்வினைப் படலம், நகர் நீங்கு படலம் ஆகிய நான்கு படலங்கள் இடம் பெறுகின்றன.

    தசரதன், கூனி மந்தரை, கைகேயி, கோசலை, சுமத்திரை, இராமன், இலக்ஷ்மணன் உள்ளிட்டோர் பற்றி வேறெங்கும் காண முடியாத பல சுவையான விஷயங்களை ஒருங்கு சேர ஒரே இடத்தில் படித்து மகிழும்படி இந்த நூல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

    நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் கவியரசர் கண்ணதாசன் ஈறாக பல நூல்கள் மற்றும் அறிஞர்கள் தம் மேற்கோள்களை சரளமாக நூலாசிரியர் எடுத்துத் தருகிறார். வியக்கிறோம், மகிழ்கிறோம்.

    அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.

    இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும். தம் தம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், குழந்தைகளுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

    காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

    அவர் தம் இந்தத் தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.

    மேலும் அவர் பல நூல்களையும் படைத்து பாரத தேசத்தின் மஹிமையையும், மாண்பையும் உலகிற்குப் பறை சாற்ற எல்லாம் வல்ல இராமபிரானை வணங்கித் தொழுகிறேன்.

    பங்களூர்

    14-5.23

    ச. நாகராஜன்

    அயோத்தியா காண்டம்

    1. மந்திரப் படலம்

    கைகேயி ஒரு அறிமுகம்

    கம்பனின் அயோத்தியா காண்டத்தைத் துவங்கும் முன் உங்களுக்கு ஒரு முக்கியமான பாத்திரப் படைப்பைப் பற்றிச் சொல்லவேண்டும். - அயோத்தியா காண்ட நாயகி கைகேயியைப் பற்றி.

    அயோத்தியா காண்டத்திற்குள் நுழைவதற்கு முன், அதிகம் விவரிக்காமல் ஒரு வரியில் அந்தப் பாத்திரத்தின் தன்மையை, முக்கியத்துவத்தை உணர்த்திவிடுகிறான் கம்பன்.

    பாலகாண்ட முடிவில், இராமன் சீதையை மணமுடித்து மிதிலையில் ஒரு அரண்மனையில் நுழைகிறான். தம்பதியினரை வரவேற்க அன்னையர் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் வாயிலில் நின்றுகொண்டிருக்கின்றனர். இராமன் முதன்முதலில் யாரிடம் ஆசிவாங்க வேண்டும். பெற்ற தாய் கோசலை. அவளிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும். அல்லது, மூத்த பட்டத்து இராணி என்று பார்த்தாலும், கோசலை தான் முதலில் வந்தவள். ஆனால், இராமன், கோசலையிடம் முதலில் ஆசி வாங்கவில்லை. கைகேயிடம் முதல் ஆசி பெறுகிறான். பிறகுதான் கோசலை, சுமித்திரை இவர்களை வணங்குகிறான் என்பதே கம்பன் சொல்லும் ஒரு வரிச் செய்தி.

    கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்

    தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி

    ஆய தன் அன்னை அடி துணை சூடி

    தூய சுமித்திரை தாள் தொழலோடும்

    ஆக, கம்பன் தெரிவிக்கும் முதல் செய்தி இந்த அரச குடும்பத்தில் கைகேயிக்குத்தான் முன்னுரிமை.

    சொல்லாமல் சொல்லும் செய்தி அரண்மனையில் ஏதோ ஒரு சிக்கல். மனைவிகளுக்குள் ஏதோ ஒரு பனிப்போர் நடக்கிறது. ஆயிரம்தான் கைகேயி இராமன் மேல் அன்பு கொண்டிருந்தாலும், திருமணம் நடந்து முடிந்த கையோடு பெற்ற தாயிடம் முதலில் ஆசி வாங்குவதுதான் யாரும் எதிர்பார்த்த ஒன்று. கைகேயிடம் முதலில் ஆசி பெற்றது, சீதைக்கு இராமன் சொல்லாமல் சொல்லும் பாடம். யாருக்கு வீட்டில் அதிகாரம் அதிகம் இருக்கிறது என்று சீதைக்கு உணர்த்துகிறான். திருமணம் ஆன கையோடு, சீதைக்கு இதை எல்லாம் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இராமன் சொல்ல முடியாது என்பது மட்டும் அல்ல, கம்பனும் சொல்ல முடியாது.

    எனவே, சொல்லாமல் சொல்கிறான்.

    சீதை புரிந்து கொள்கிறாள். அவளுக்குப் புரிந்திருக்கும். பின்னால், பரதன் நாட்டை ஆள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று அறிந்தபோது, சரி வா போகலாம் என்று சீதை கிளம்பிவிட்டாள். காரணம், அவள் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும். இராமன் முன்பே கோடி காட்டிவிட்டான்.

    கைகேயிக்கும் கோசலைக்கும் இடையே உள்ள பனிப்போரைக் கம்பன் நேரடியாகச் சொல்லாமல் பல இடங்களில் பல குறிப்புகளால் உணர்த்துகிறான். கைகேயிக்கு அந்த குடும்பத்தில் அவளே உயர்ந்தவள் என்ற எண்ணம் உண்டு என்ற செய்தியும் தெரிய வருகிறது. அதற்கு ஒரு காரணம் கைகேயி, கேகயம் என்ற ஒரு பெரிய புகழ்பெற்ற நாட்டிலிருந்து வந்த மருமகள். கோசலையும் சுமித்திரையும் சிறிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

    கைகேயிக்கு முதல் வணக்கம் செலுத்தியதன் மூலம் சீதைக்கு இராமன் குறிப்புகளால் உணர்த்தியது என்னவென்றால் இந்த அரச குடும்பத்தில் கண்டிப்பாகக் கைகேயியை அனுசரித்து நடக்கவேண்டும். கைகேயி மனம் வாடினால் அவள் உடனே தசரதனிடம் அதை வெளிப்படுத்துவாள். காரணம், கைகேயி அவனுக்கு மிகப்பிரியமான மனைவி. தசரதன் அதனால் நிம்மதி இழந்தால், குடும்பம் நிம்மதி இழக்கும், அதனால் நாடு நிம்மதி இழக்கும். இந்த விஷயத்தைக் கைகேயியைத் தவிர அந்த குடும்பத்து அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் எல்லோரும் பொறுமை காக்கின்றனர் என்று குறிப்புகளால் உணர்த்துகிறான் கம்பன்.

    கோசலை இராமனைப் பெற்றவள். முதல் மனைவி. அவள் நினைத்தால் கைகேயியை வைத்து அந்த நேரத்தில் பிரச்சினை செய்து இருக்கமுடியும். ஆனாலும் கைகேயி குணம் அறிந்து அமைதி காத்தாள். ஆக கம்பர், இராமன் சீதையுடன் முதலில் கைகேயி காலில் விழுந்து வணங்கினான் என்ற ஒரு வரியில் நிறைய செய்திகளையும், எல்லோருடைய குணாதிசயங்களைப் பற்றியும் நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொன்னதுடன், கைகேயிக்கும் கோசலைக்கும் இடையே ஒரு பனிப்போர் உள்ளது என்ற ஒரு சிறிய ஆயுதத்தை வைத்து கூனி எப்படி கைகேயின் இதயத்தைப் பிளந்தாள் என்று பின்னால் சொல்லப்போவதற்கு ஒரு சைகை காட்டிவிட்டார். விளக்கங்கள் கொடுக்காமல் குறிப்புகள் மூலம் பல செய்திகளைச் சொன்ன கம்பன் நம்மை பிரமிக்க வைக்கிறான்.

    கம்பனின் அயோத்தியா காண்டத்திற்குள் நுழைவோம்.

    தசரதனின் முடிவு

    ஒரு நாள், மாலை நேரம், தசரதன் தற்செயலாகக் கண்ணாடியைப் பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குத் திகைப்பு. காரணம், அவன் கண்டது காதின் ஓரம் ஒரு நரை முடியை. உடனே அவனுக்கு ஒரு சிலிர்ப்பு. இதுநாள் வரை ஒரு நரை முடிகூட இல்லையே. இன்று தோன்றிய நரைமுடி எனக்கு என்ன செய்தி சொல்ல வருகிறது? என்று யோசனையில் ஆழ்ந்தான்.

    தசரதனுக்குச் செய்தி சொல்லுவதற்கு முன் கம்பன் அந்த நரைமுடி தோன்றியதன் காரணத்தைப்பற்றி என்ன சொல்லவருகிறார்?

    தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்

    ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்

    பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி

    ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்

    என்று பாடலைத் தொடங்குகிறார். அதாவது இராவணன் செய்த தீமைகள்தான் அப்படி ஒரு நரைமுடியாய்த் தோன்றியது என்று சொல்கிறார். அதனால் என்ன? அந்த நரைமுடியைப் பார்த்து தசரதன் எடுத்த முடிவுதான் இராவணனின் அழிவுக்குக் காரணம் என்று கம்பன் சொல்லுகிறார்.

    இதைக் ‘கேயாஸ் தியரி chaos theory குழப்பக்கோட்பாடு / ஒழுங்கீனக் கோட்பாடு’ என்று சொல்லுவர். அல்லது பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect) என்று சொல்லுவர். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது சூழ்நிலை, தொடர்ச்சியான சூழ்நிலைகள் அல்லது செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், அது கணிசமான விளைவை ஏற்படுத்தும், அது தொடங்கிய தனிமத்தின் நிலைமைக்கு ஒத்ததாகத் தெரியவில்லை. ஆரம்ப காரணமும் இறுதி விளைவுகளும் மட்டுமே பகுப்பாய்வு செய்யப்பட்டால், அவற்றுக்கிடையே அதிக தொடர்பு இருக்காது. இருப்பினும், சிறிய ஆரம்ப நடவடிக்கை மற்ற சிறிய விளைவுகளைத் தூண்டத் தொடங்கியது. ஆனால் அவை காலப்போக்கில் ஒட்டுமொத்த விளைவைக் கொண்டுள்ளன. விளைவு பின்விளைவு - இறுதி விளைவை எட்டியது.

    இந்தக் கோட்பாட்டிற்கும் நரைமுடிக்கும் என்ன தொடர்பு? நரை முடி பொதுவாகக் காது ஓரமாக / கன்னத் தொடக்கத்தில்தான் வரும். காரணம் அந்த நரைமுடியின் நோக்கமே

    Enjoying the preview?
    Page 1 of 1