Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2
Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2
Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2
Ebook180 pages1 hour

Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழம் பெரும் இதிஹாஸமான இராமாயணத்தைப் படிப்பதால் வரும் பயன்களை,

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் பட்டியலிட்டுக் கூறி இருக்கிறார். நூலாசிரியர் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் இரண்டாம் பாகத்தில் சித்ரகூடத்தை அடைதல், பரதன் வருகை, பரதன் குஹன் சந்திப்பு, பரதன் இராமன் சந்திப்பு உள்ளிட்ட ஆறு அத்தியாயங்களில் மிக மிக சுவையான விவரங்களைத் தருகிறார்.

இராமனின் உறுதி, பரதனின் பாசம், குஹனின் ராம பக்தி, ஜாபாலியின் நாஸ்திக வாதம், அனசூயை - சீதை சந்திப்பு ஆகியவற்றில் வேறெங்கும் காண முடியாத பல விஷயங்களை ஒருசேர இதில் படித்து மகிழலாம். இராமாயண வெண்பா, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண நூல்களிலிருந்தும் பல குறிப்புகளை இதில் காணலாம். இந்த நூல் குடும்பத்தினர் அனைவரும் படிப்பதற்கு ஏற்றது. நண்பர்களுக்கும் இளம் வயதினருக்கும் பரிசாகக் கொடுக்க ஏற்ற நூல் இது.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580166709879
Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2

Read more from R. Seshadrinathan

Related to Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2

Related ebooks

Reviews for Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2 - R. Seshadrinathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இராமாயணம் அயோத்யா காண்டம் - வால்மீகி - பாகம் 2

    Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2

    Author:

    ஆர். சேஷாத்ரிநாதன்

    R. Seshadrinathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-seshadrinathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    1. சித்ரகூடத்தை அடைதல்

    2. தசரதன் மரணம்

    3. பரதன் வருகை

    4. பரதன் குஹன் சந்தித்தல்

    5. பரதன் இராமன் சந்திப்பு

    6. தண்டகாரண்யத்தை அடைதல்

    பிற்சேர்க்கை

    முன்னுரை

    வணக்கம்.

    கொரோனா கால கட்டத்தில் எங்கள் குடியிருப்பில் நோய் பாதிப்பினாலும் ஊரடங்கினாலும் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை.

    அப்பொழுது, இருக்கும் நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்க முடிவெடுத்து வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் படைத்த இராமாயணத்தைத் தொகுத்து முகநூலில் வெளியிடத் தீர்மானித்தேன்.

    அது என்ன தொகுத்து வழங்குவது? அந்த மூவரும் ஏற்கனவே காவியத்தைப் படைத்து விட்டனர்... அதில் மேற்கொண்டு நமக்கு வேலையில்லை. ஆனால், வால்மீகியின் ஸ்லோகங்களிலும், கம்பனின் கவிதைகளிலும், துளசிதாஸரின் தோஹாக்களிலும் ஓராயிரம் விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

    மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு அவைகள் புலப்படுவதில்லை. அதற்கு உபன்யாசகர்கள், உரையாசியர்கள், பேராசிரியர்கள், சான்றோர்களின் உதவி அவசியம் தேவை. அத்தகையோரின் உரைகள், புத்தகங்கள், கட்டுரைகள், காணொளிகள் ஆகியவைகளின் மூலம் நான் தெரிந்து கொண்ட சுவையான விஷயங்களைக் கதையுடன் சேர்த்துத் தருவதே தொகுப்பதாகும்.

    பால காண்டத்தை ஏற்கனவே தொகுத்து வழங்கிவிட்ட நிலையில் தற்போது வால்மீகியின் அயோத்யா காண்டத்தைத் தொகுத்து வழங்கியுள்ளேன். முதல் பாகத்தைத் தொடர்ந்து இப்போது இந்த இரண்டாம் பாகம் வெளி வருகிறது.

    இதற்கு உதவியாக இருந்த அனைத்து உரையாசிரியர்கள், சான்றோர்கள் எல்லோருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தத் தொகுப்பை நூலாக வெளிவர தனது நேரத்தை ஒதுக்கிப் பேருதவி செய்து வரும் எனது சம்பந்தியும், எழுத்தாளரும் எனது குருநாதருமான திரு. ச. நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கட்டுரைகள் இணைய தளத்தில் வெளி வந்த நாட்களில் உடனுக்குடன் அதைப் பாராட்டி என்னை ஊக்குவித்த வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூலில் உள்ள பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    அனைவருக்கும் ஶ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, அன்னை சீதாதேவியாரின் அருள் பரிபூரணமாக சித்திக்க ஶ்ரீ ராமரையும் அன்னை சீதாதேவியையும் வேண்டுகிறேன்.

    நன்றி.

    ஆர். சேஷாத்ரிநாதன்

    சென்னை

    12-5-23

    அணிந்துரை

    பழம் பெரும் பாரத இதிஹாஸமான இராமாயணத்தைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கைகூடும் என்பதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் பட்டியலிட்டுக் கூறி இருக்கிறார்.

    நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

    வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்

    நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

    சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.

    அழிவில்லாத அரக்கர் சேனை சாம்பலாய் நசித்துப் போக வெற்றி மாலை அணிந்த இராமபிரானது புய வலிமையை கூறுவோர்க்கு அவர்கள் நாடிய சகல பொருள்களும் கைவசமாகும். மனத்தெளிவும் புகழும் உண்டாகும். அவர்களுக்கு மோட்சத்தை அடைவதற்கு ஏற்ற வழியை உண்டாக்குகின்ற நறுமணமுள்ள அழகிய தாமரையில் வாழும் லக்ஷ்மியும் அருள் பார்வை புரிவாள்.

    மனித வாழ்க்கையில் ஒருவருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

    ராம நாமம் மிருதசஞ்சீவினி மந்திரமாக ஆன்றோரால் சொல்லப்படுகிறது. மரிக்கப் போன சீதா பிராட்டியாருக்கு தஞ்சமாகவும், கடலைத் தாண்டும் ஆஞ்சநேயருக்கு பாஹு பலமாகவும், விபீஷணன் போன்ற சரணாகதர்களுக்கு ஆத்ம பலமாகவும் சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்து புதிய ஜீவனைத் தந்த சஞ்சீவினியாகவும் விளங்கியது ஷடாக்ஷரியான மஹா மந்திரம் ஶ்ரீ ராம மந்திரம்.

    சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது.

    ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

    கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

    ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

    கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

    ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

    அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன் என்ற இந்த ஸ்லோகத்தின் ஆழ்ந்த பொருள் ஆதி கவியை வணங்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறது.

    24000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்றுப் பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

    ஆனால் இந்த வேக யுகத்தில் இராமாயணத்தில் வால்மீகி மஹரிஷி பொதிந்து வைத்துள்ள இரகசியங்களை அறிய அதில் ஈடுபாடு கொண்டு ஆராய்ந்து நல் முத்துக்களைத் தரவல்ல ஒருவரின் துணை தேவையாக இருக்கிறது.

    இந்தச் சமயத்தில் தான் திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்களின் கட்டுரைகள் நமக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்து நம்மை மகிழ வைக்கிறது.

    பால காண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் - முதல் பாகம் ஆகிய இரு நூல்களைத் தொடர்ந்து இந்த அயோத்யா காண்டம் இரண்டாம் பாகம் வெளி வருகிறது.

    இந்த இரண்டாம் பாகத்தில் இராம, லக்ஷ்மணர், சீதா தேவி ஆகியோர் சித்ரகூடத்தை அடைதல், தசரதன் மரணம், பரதன் வருகை, பரதன் குஹன் சந்திப்பு, பரதன் இராமன் சந்திப்பு, தண்டகாரண்யத்தை அடைதல் ஆகிய ஆறு அத்தியாயங்களில் மிக மிக சுவையான விவரங்களை அறிகிறோம்.

    இராமனின் உறுதி, பரதனின் பாசம், குஹனின் ராம பக்தி, ஜாபாலியின் நாஸ்திக வாதம், அனசூயை - சீதை சந்திப்பு ஆகியவற்றில் வேறெங்கும் காண முடியாத பல விஷயங்களை ஒருசேரப் படித்து மகிழ முடிகிறது.

    தனது அருமையான ஆய்வினால் பல்வேறு இரகசியங்களை அவர் தொகுத்துத் தந்திருக்கும் விதம் பயனுள்ளது; பாராட்டுக்கும் உரியது.

    வால்மீகி ராமாயணத்தை மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களையும் நன்கு பயின்றுள்ள அவர் இராமாயணம் பற்றி அவற்றிலிருந்து குறிப்புகளைத் தருவதோடு சிறந்த வேத விற்பன்னர்களின் கருத்துக்களையும், ராமாயணத்தை ஆழ்ந்து படித்த அறிஞர்களின் கருத்துக்களையும் தனது ராமாயணக் கட்டுரைகளில் ஆங்காங்கே தருவது வழக்கம்.

    இது பல இராமாயணங்களை ஒருசேரப் படித்தது போன்ற உணர்வையும் பல சிறந்த உபந்யாசகர்களின் கருத்துக்களை கேட்டது போலவும் அமைகிறது.

    இதுவரை படித்திராத நுட்பமான விஷயங்களைப் படிக்கும் போது நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    ஒரு சமர்ப்பண மனோ பாவத்துடனும் ராம பக்தியுடனும் சமுதாயத்திற்கு அவர் தந்திருக்கும் இராமாயணக் கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். தம் தம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

    காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

    அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன். மேலும் பல நூல்களையும் படைத்து பாரத தேசத்தின் மஹிமையையும் மாண்பையும் உலகிற்குப் பறைசாற்ற எல்லாம் வல்ல இராம பிரானை வணங்கித் தொழுகிறேன்.

    அன்பன் ச. நாகராஜன்

    பங்களூர்

    12-5.23

    1. சித்ரகூடத்தை அடைதல்

    பாத்வாஜர் ஆசிரமத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை அவரை வணங்கி விடை பெற்று அங்கிருந்து சித்ரகூடத்திற்குக் கிளம்பினர் ராம, லக்ஷ்மணன், சீதை முதலானோர்.

    மூவரும் காட்டு வழி நடக்கத் தொடங்கினர். லக்ஷ்மணன் முன்னே செல்ல பின்னே ராமன் செல்ல இடையில் சீதை சென்றாள். அதுவரை சீதை காட்டையே பார்த்ததில்லை. எனவே அழகிய மரங்களையும் செடி கொடிகளைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தாள். பின் இயற்கை எழில் கொஞ்சும் சித்ரக்கூட மலை அடிவாரத்தை அவர்கள் அடைந்தனர். அங்கு மகரிஷி வால்மீகியைக் கண்டு வணங்கினர். வால்மீகியே அவர்களுக்கு தங்கும் இடம் ஒன்றைக் குறித்துக் கொடுத்தார். பிறகு அவர்கள் அங்கு தங்க முடிவு செய்து ஒரு பர்ணசாலை ஒன்றை அமைத்தனர். அந்த ஆசிரமத்தைச் சுற்றி புண்ணிய நதி ஒன்று ஓடியது. ராமர் அதன் அருகில் அமர்ந்து தவம் போன்றவற்றை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். இவ்வாறாக சில நாட்களில் அயோத்தியை விட்டு விட்டு வந்த துக்கத்தை மறந்துபோய் இன்பமுடன் அவர்கள் வாழத் தொடங்கினர். இராமன் அங்கு இருக்கும் விஷயத்தை குஹன் தெரிந்து கொண்டான்.

    இது இப்படி இருக்க அயோத்தி நோக்கி திரும்பிய சுமந்திரன் ராமனை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் மீண்டும் திரும்பி குஹனிடம் வந்தான். குஹனிடம் தனது ஆற்றாமையத் தெரித்தான். குஹன் அவரைச் சமாதானம் செய்து இராமன் சித்ரக்கூட மலையின் அடிவாரத்தில் நலமுடன் இருப்பதாகச் சொல்லி சுமந்திரனைச் சமாதானப்படுத்தி மீண்டும் அயோத்திக்கு அனுப்பிவைத்தான்.

    மனம் கனக்க, அயோத்தி நோக்கி சுமந்திரன் பிரயாணமானான்.

    2. தசரதன் மரணம்

    மறுநாள் சுமந்திரன் அயோத்தி வந்து சேர்ந்தான். ஊர் மகிழ்ச்சியின்றிக் காணப்பட்டது. சூன்யமாக, அமைதியாக இருந்த ஊரைக் கண்டு, சுமந்திரன் யோசித்தான். இது என்ன? இராமரைப் பிரிந்த துக்கம் என்ற அக்னி இந்த ஊர், யானைகள், குதிரைகள், ஜனங்கள், ஊர் தலைவர்கள், எல்லோரையும் ஒட்டு மொத்தமாக தகித்துச் சாம்பலாக்கி விட்டதா?

    சீக்கிரமாக ஓடக்கூடிய குதிரைகளைத் தட்டி வேகமாக ஓட்டிக் கொண்டு நகர வாசலில் நுழைந்தான். சுமந்திரனைக் கண்டதும், நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ஜனங்கள் ஓடிவந்து எங்கே இராமன்? என்று ஆவலுடன் கேட்டனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1