Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kantha Peruman Saritham
Kantha Peruman Saritham
Kantha Peruman Saritham
Ebook511 pages2 hours

Kantha Peruman Saritham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான், உயிராய் நேசித்து வணங்கித் துதிக்கும் என் தந்தை... உலகிற்கே அம்மையப்பராய்த் திகழும் எம்பெருமான் ஈசனின் உத்தரவின்படி, என் சிறு வயது முதலே நான் உருகித் துதித்த, மனதிற்குள் மிக நெருக்கமாய் உணர்ந்து வணங்கிய, "சின்னண்ணா” என அன்புடன் நான் அழைக்கும், என் மானசீகத் தந்தையாம் ஸ்கந்தப் பெருமானையும், "பெரியண்ணா " என்று தொழும் விக்னேஷ்வரப் பெருமானையும் பற்றி நான் படித்த, உணர்ந்த, செவிவழிச் செய்தியாகக் கிடைத்த, புராணங்களில் போதிக்கப்பட்ட அற்புதச் சரிதத்தை, உங்களுடன் பகிர்வதில் பெருஉவகை அடைகிறேன்!

சகல உயிர்களையும் உருவாக்கியவரும். அந்தமிலாதொரு ஆதியாகவும்... பஞ்சபூத சொரூபமாகவும்... அனைத்திற்கும் காரணகர்த்தாவும்... எவரிடமிருந்து பிரபஞ்சங்கள் தோன்றி ஒடுங்குகிறதோ அவரும்... ஞானத்தை அளித்துத் திருவருள் அளிப்பவரும்... அளவிட முடியா ஆனந்தத்தை நல்குபவரும்... மூன்று வேதங்களுக்கு மூலகாரணமாகவும், அவற்றை முகங்களாகவும் கொண்டவரும்... மூவுலகையும் ஆனந்த மயமாக்கும் அற்புதப் புருஷராகவும். முக்காலத்திலும் அழிவில்லாது, உலகத்திற்கே மகாபிரபுவானவரும்... ஆதி அந்த மின்றி முடிவற்ற பிரம்மம் எனப்படுபவருமான எம்பெருமான் மகாதேவரிடம் இருந்து வெளிப்பட்ட தேஜஸ் எனப்படும் அக்னிப் பொறிகள் இணைந்து, அக்னியின் உருவமாய்த் தீமைகளை அழித்து நன்மை பயப்பவருமாக, வீரம், விஜயம், தைர்யம், ஞானம், அருள், ஆற்றல், வீர்யம், பகை கடிதல், கருணை, நேர்மை என, அனைத்துக் குணங்களும் நிரம்பிய ஸ்ரீ கந்தப் பெருமானின் திருஅவதார நிகழ்வையும், அவருடைய சரிதத்தின் பெருமையையும்...

விக்னங்கள் அகற்றும் விக்னராஜனாய் விளங்கும்... துஷ்டச் செயல்களையும், இடையூறுகளையும் நீக்கும் ஏக தந்தராய்த் திகழும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் திரு அவதாரச் சிறப்பையும் உங்கள் முன் அளிப்பதில், மகிழ்ச்சியில் மனம் விம்மித்தணிகிறது. சிவபெருமானுடைய நெற்றிக்கண் தேஜஸாம் அக்னியிலிருந்து பிறந்தவரும்... சரவணப் பொய்கையில் தோன்றிய வரும்... உமாதேவியின் மைந்தராய்ப் பிரகாசிப்பவரும்... அசுரர்களை அழிக்க அவதரித்த சூரசம்ஹாரரும்... போர் முனையில் வீரதீரம் புரிந்த கதிர்வேல் முருகனாய் ஆற்றல் வாய்ந்தவரும். சக்திவேல், வஜ்ராயுதம் முதலிய பெரும் ஆயுதங்களை ஏந்தியவரும் ஆகிய கார்த்திகேயனின் அருட்சரிதம் கூறித் தமிழில் கந்த புராணம் உரைத்த கச்சியப்ப சிவாச் சாரியாரின் திருப்பாதங்களைப் பணிந்து, இச்சரிதத்தை உங்கள் முன் அளித்திருக்கிறேன்.

தமிழர் தெய்வம் என்று போற்றப்படும் குமரக்கடவுள், தமிழின் வடிவமாகவே திகழ்கிறார். அதனாலேயே, தமிழ் மொழியும் தெய்வத் தமிழாக விளங்குகிறது. அதனாலேயே ஞால் மளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்கிறார் சேக்கிழார்.

ஞானம், சக்தி, ஆத்மா இவற்றின் வடிவாய் விளங்கும் சுப்ரமணியராய்... பகைவர்களைப் பூண்டோடு அழிப்பதில் ஸ்கந்தனாய்... நெருப்பில் தோன்றியதால் அக்னிபூதனாய்... கார்த்திகை நட்சத்திரத்தின் மைந்தரானதால் கார்த்திகேயனாய்.., வைகாசி விசாக நாளில் இனித்ததால் விசாகனாய்... ஆறு முகங்களைக் கொண்டதால் சண்முகனாய். பச்சிளம் பாலகனாக ஒளிர்வதில் குமரனாய்... நாணல் புதரில் தோன்றியதால் சண்முகனாய்... வேலாயுதம் ஏந்தியதால் கதிர்வேலனாய்... சித்தர் குகையில் ஒளிர்ந்த குகனாய்... வண்ண மயிலை வாகனமாய்க் கொண்டதில் சிகி வாகனனாய்... எங்கும் வியாபித்து அருள்வதால் முருகப் பெருமானாய் .... கங்கையைத் தாயாய் வரித்ததில் காங்கேயனாய்... அழகின் திருஉருவாய் அருள்வ தால் சிங்காரவேலராய்... தேவர்களைக் காத்ததால் தேவ சேனாபதியாக விளங்கும் எம் ஆதர்ச சகோதரர் ஸ்ரீ கந்த சுவாமியின் திருப்பாதார விந்தங்களை வணங்கி, இந்தச் சரிதத்தைத் துவங்குகிறேன்!

முருகன் - முருகன் எனும் சொல்லுக்கு, அழகன் என்று பொருள். அழகு என்பதன் உட்பொருள், அன்பு, கருணை, வீரம், மனோபலம், பக்குவம், நேர்மை இவற்றை அருளும் நிலை என்பதை, அந்த இறை சக்தியிடம் உணர்கிறேன் நான்!

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலமும், முருகனின் இருப்பிடம் என்று ஆன்றோர் கூறுவர். மலை போல் உயர்ந்த உள்ளமும், கந்தப் பெருமானின் அகப்பீடம் என்பதை உணர்ந்தவர் கோடி!

அப்பா! அம்மா! ஈசனே... அன்னையே! நீங்கள் இருவரும் என்னை ஆசிர்வதித்து, எம் இரு விழிகளாக விளங்கும், இரு இறை சகோதரர்களின் உன்னதச் சரிதத்தை, அற்புத வரலாற்றை, எளிமையாய்... எனக்குத் தெரிந்தவரையில் - நான் அறிந்தவரையில் தொகுத்து வழங்க, அருள்புரிய வேண்டுகிறேன்!

இந்தச் சரிதம் பிறக்க உதவிய என் அம்மையப்பருக்கும், சிறக்க உதவிய கந்தபுராணம், விநாயகர்புராணம், அறுபடை வீடு முதலான ஆன்மிகக் களஞ்சியங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்!

நட்புடன் - உமா பாலகுமார்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118503844
Kantha Peruman Saritham

Read more from Uma Balakumar

Related to Kantha Peruman Saritham

Related ebooks

Reviews for Kantha Peruman Saritham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kantha Peruman Saritham - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    கந்தப் பெருமான் சரிதம்

    Kantha Peruman Saritham

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அகிலத்தின் அன்னை பார்வதி தேவி அவதாரம்

    2. ஆலமர் செல்வனின் அற்புதக் கருணை வடிவம்

    3. இமாசலப் பர்வதத்தில் ஈசனின் பாதம்

    4. அம்மையப்பராம் சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணம்

    5. முழு முதற்கடவுள் விநாயகர் புராணம்

    6. கந்தப் பெருமானின் கவின்மிகு அவதாரம்

    7. நவரத்தின தேவிகளிலிருந்து நவ வீரர்கள் தோற்றம்

    8. சரவணப் பொய்கையில் சோமாஸ்கந்தரின் தரிசனம்

    9. பாலமுருகனின் திருவிளையாடலும், விசுவரூப தரிசனமும்!

    10. பிரணவப் பொருள் உரைத்த தகப்பன் சுவாமி வடிவம்

    11. முருகப் பெருமானின் மகாத்மியம்!

    12. தேவசேனாபதியை மணாளனாக வரித்த தேவியர் ரூபம்!

    13. அசுரர்களின் அட்டகாசங்களால் எழுந்த போர் முழக்கம்!

    14. தாரகாசுரன் - கிரெளஞ்சக அசுரன் சேனை வதம்!

    15. தேவகிரிப் பட்டணம் - ஆலயம் நிர்மாணம்

    16. தேவசேனாபதியின் தென்திசைப் பயணம்!

    17. அசுரர்களின் தோற்றமும், அசுர காண்டமும்!

    18. தேவர்களை அழிக்கப் புறப்பட்ட அசுரர் கூட்டம்!

    19. அகத்திய முனிவரின் அத்தியாவசியப் பயணம்!

    20. வீர மஹேந்திர காண்டம்

    21. தேவசேனாபதியின் யுத்த காண்டம்!

    22. கார்த்திகேயப் பெருமானின் ஹேமகூடம்!

    23. பானுகோபன் படையெடுப்பும் த புறமுதுகிட்டு ஓடுதலும்!

    24. முருகப் பெருமானின் போர் முழக்கம்!

    25. சத்ரு சம்ஹாரர் - சூரபன்மன் நேர்முகம்!

    26. பானுகோபன் - இரண்டாம் நாள் மாய யுத்தம்

    27. இரணியன் - அக்னிமுகன் - தர்மகோபன் வதம்!

    28. பானுகோபன் - சிங்கமுகன் - வதம்

    29. திருச்செந்தில் வேலவனின் சூரசம்ஹாரம்!

    30. தேவசேனாபதி - தேவயானை திருமணம்

    31. வடிவேலன் - வள்ளி சுயம்வரம்

    32. கந்த புராணம் - கா கார்த்திகேயனின் கவிதைச் சரிதம்

    33. அறுபடைவீடு மகாத்மியம்

    34. திருக்குமரன் எழுந்தருளியுள்ள திருத்தல தரிசனம்

    35. சுப்ரமணியப் பெருமானின் திரு உருவத் தத்துவம்

    36. திருக்குமரன் அருளும் பரிகாரத் தலங்களின் விவரம்

    37. சண்முகப் பெருமானின் சடாட்சரம் - சரவணபவ ஓம்

    38. கந்தப் பெருமானின் விரத மகத்துவம்

    39. வேல் - பன்னிருகரம் - ஆறுமுகம் - தத்துவார்த்தம்

    40. ஆறுமுகப் பெருமானின் அடியார்கள் மகத்துவம்

    41. பாலசுப்ரமணியரின் பாடல் கவசம்

    42. என்னுரை - அண்ணா எனும் ஆருயிர் இறைசக்தி

    முன்னுரை

    நான், உயிராய் நேசித்து வணங்கித் துதிக்கும் என் தந்தை... உலகிற்கே அம்மையப்பராய்த் திகழும் எம்பெருமான் ஈசனின் உத்தரவின்படி, என் சிறு வயது முதலே நான் உருகித் துதித்த, மனதிற்குள் மிக நெருக்கமாய் உணர்ந்து வணங்கிய, சின்னண்ணா என அன்புடன் நான் அழைக்கும், என் மானசீகத் தந்தையாம் ஸ்கந்தப் பெருமானையும், பெரியண்ணா என்று தொழும் விக்னேஷ்வரப் பெருமானையும் பற்றி நான் படித்த, உணர்ந்த, செவிவழிச் செய்தியாகக் கிடைத்த, புராணங்களில் போதிக்கப்பட்ட அற்புதச் சரிதத்தை, உங்களுடன் பகிர்வதில் பெருஉவகை அடைகிறேன்!

    சகல உயிர்களையும் உருவாக்கியவரும். அந்தமிலாதொரு ஆதியாகவும்... பஞ்சபூத சொரூபமாகவும்... அனைத்திற்கும் காரணகர்த்தாவும்... எவரிடமிருந்து பிரபஞ்சங்கள் தோன்றி ஒடுங்குகிறதோ அவரும்... ஞானத்தை அளித்துத் திருவருள் அளிப்பவரும்... அளவிட முடியா ஆனந்தத்தை நல்குபவரும்... மூன்று வேதங்களுக்கு மூலகாரணமாகவும், அவற்றை முகங்களாகவும் கொண்டவரும்... மூவுலகையும் ஆனந்த மயமாக்கும் அற்புதப் புருஷராகவும். முக்காலத்திலும் அழிவில்லாது, உலகத்திற்கே மகாபிரபுவானவரும்... ஆதி அந்த மின்றி முடிவற்ற பிரம்மம் எனப்படுபவருமான எம்பெருமான் மகாதேவரிடம் இருந்து வெளிப்பட்ட தேஜஸ் எனப்படும் அக்னிப்.

    பொறிகள் இணைந்து, அக்னியின் உருவமாய்த் தீமைகளை அழித்து நன்மை பயப்பவருமாக, வீரம், விஜயம், தைர்யம், ஞானம், அருள், ஆற்றல், வீர்யம், பகை கடிதல், கருணை, நேர்மை என, அனைத்துக் குணங்களும் நிரம்பிய ஸ்ரீ கந்தப் பெருமானின் திருஅவதார நிகழ்வையும், அவருடைய சரிதத்தின் பெருமையையும்...

    விக்னங்கள் அகற்றும் விக்னராஜனாய் விளங்கும்... துஷ்டச் செயல்களையும், இடையூறுகளையும் நீக்கும் ஏக தந்தராய்த் திகழும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் திரு அவதாரச் சிறப்பையும் உங்கள் முன் அளிப்பதில், மகிழ்ச்சியில் மனம் விம்மித்தணிகிறது.

    சிவபெருமானுடைய நெற்றிக்கண் தேஜஸாம் அக்னியிலிருந்து பிறந்தவரும்... சரவணப் பொய்கையில் தோன்றிய வரும்... உமாதேவியின் மைந்தராய்ப் பிரகாசிப்பவரும்... அசுரர்களை அழிக்க அவதரித்த சூரசம்ஹாரரும்... போர் முனையில் வீரதீரம் புரிந்த கதிர்வேல் முருகனாய் ஆற்றல் வாய்ந்தவரும். சக்திவேல், வஜ்ராயுதம் முதலிய பெரும் ஆயுதங்களை ஏந்தியவரும் ஆகிய கார்த்திகேயனின் அருட்சரிதம் கூறித் தமிழில் கந்த புராணம் உரைத்த கச்சியப்ப சிவாச் சாரியாரின் திருப்பாதங்களைப் பணிந்து, இச்சரிதத்தை உங்கள் முன் அளித்திருக்கிறேன்.

    "மணித்தர் பத்தர் தமக்கெனியோனே

    மதித்த முத்தமிழ்ப் பெரியோனே"

    என்று, அருணகிரிநாதர் முருகவேளைத் தமிழ்க் கடவுளாகவே பாடியுள்ளார்.

    தமிழர் தெய்வம் என்று போற்றப்படும் குமரக்கடவுள், தமிழின் வடிவமாகவே திகழ்கிறார். அதனாலேயே, தமிழ் மொழியும் தெய்வத் தமிழாக விளங்குகிறது. அதனாலேயே ஞால் மளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்கிறார் சேக்கிழார்.

    ஞானம், சக்தி, ஆத்மா இவற்றின் வடிவாய் விளங்கும் சுப்ரமணியராய்... பகைவர்களைப் பூண்டோடு அழிப்பதில் ஸ்கந்தனாய்... நெருப்பில் தோன்றியதால் அக்னிபூதனாய்... கார்த்திகை நட்சத்திரத்தின் மைந்தரானதால் கார்த்திகேயனாய்.., வைகாசி விசாக நாளில் இனித்ததால் விசாகனாய்... ஆறு முகங்களைக் கொண்டதால் சண்முகனாய். பச்சிளம் பாலகனாக ஒளிர்வதில் குமரனாய்... நாணல் புதரில் தோன்றியதால் சண்முகனாய்... வேலாயுதம் ஏந்தியதால் கதிர்வேலனாய்... சித்தர் குகையில் ஒளிர்ந்த குகனாய்... வண்ண மயிலை வாகனமாய்க் கொண்டதில் சிகி வாகனனாய்... எங்கும் வியாபித்து அருள்வதால் முருகப் பெருமானாய் .... கங்கையைத் தாயாய் வரித்ததில் காங்கேயனாய்... அழகின் திருஉருவாய் அருள்வ தால் சிங்காரவேலராய்... தேவர்களைக் காத்ததால் தேவ சேனாபதியாக விளங்கும் எம் ஆதர்ச சகோதரர் ஸ்ரீ கந்த சுவாமியின் திருப்பாதார விந்தங்களை வணங்கி, இந்தச் சரிதத்தைத் துவங்குகிறேன்!

    முருகன் - முருகன் எனும் சொல்லுக்கு, அழகன் என்று பொருள்.

    அழகு என்பதன் உட்பொருள், அன்பு, கருணை, வீரம், மனோபலம், பக்குவம், நேர்மை இவற்றை அருளும் நிலை என்பதை, அந்த இறை சக்தியிடம் உணர்கிறேன் நான்!

    மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலமும், முருகனின் இருப்பிடம் என்று ஆன்றோர் கூறுவர்.

    மலை போல் உயர்ந்த உள்ளமும், கந்தப் பெருமானின் அகப்பீடம் என்பதை உணர்ந்தவர் கோடி!

    சண்முகரின் திருமந்திரம், சரவணபவ எனும் சடாட்சரமாக விளங்க, தமிழ் வளர்த்த பெருமான் என்றும் அகத்திய முனிவர் கந்தப் பெருமானை வர்ணித்ததை எண்ணி மெய்சிலிர்க்கிறது.

    ஒருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்

    சுருதிமெய் யோகம் சொல்லியது ஒருமுகம்…

    அருள் பெறும் மயில் மீது அமர்ந்தது ஒருமுகம்…

    வள்ளி தெய்வானையை மருவியது ஒருமுகம்...

    தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்பது ஒருமுகம்...

    சூரனை வேலால் துணித்தது ஒருமுகம்...

    ஆரணம் ஓதும் அருமறை யடியார்

    தானவர் வேண்டுவ தருவது ஒருமுகம்!

    - பாலன் தேவராய சுவாமிகள்

    அப்பா! அம்மா! ஈசனே... அன்னையே! நீங்கள் இருவரும் என்னை ஆசிர்வதித்து, எம் இரு விழிகளாக விளங்கும், இரு இறை சகோதரர்களின் உன்னதச் சரிதத்தை, அற்புத வரலாற்றை, எளிமையாய்... எனக்குத் தெரிந்தவரையில் - நான் அறிந்தவரையில் தொகுத்து வழங்க, அருள்புரிய வேண்டுகிறேன்!

    இந்தச் சரிதம் பிறக்க உதவிய என் அம்மையப்பருக்கும், சிறக்க உதவிய கந்தபுராணம், விநாயகர்புராணம், அறுபடை வீடு முதலான ஆன்மிகக் களஞ்சியங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்!

    நட்புடன்,

    - உமா பாலகுமார்

    1. அகிலத்தின் அன்னை பார்வதி தேவி அவதாரம்

    மேரு மலையின் வடபகுதியில், மகா கைலாய மலை எனும் திருக்கைலாய பர்வதம், வெள்ளி மலையாக, ஈசனின் திருமுகத்துடன் அமைந்துள்ளது.

    மூவுலகிற்கும் அதிபதியானவரும்... பிறைசூடிய பெருமானும்... வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவரும். இந்திராதி தேவர்களால் வணங்கப்படுபவரும்... ஆதி அந்தமிலாதவருமான எம்பெருமான் ஈசன், அந்தக் கைலாய பர்வதத்தில் ரத்தின மாளிகையில் இதழ்கள் விரித்த செந்நிற ஆம்பல் மலருக்கு நிகரான இருபத்தைந்து முகங்களுடனும், ஒளி மயமான ஐம்பது திருக்கரங்களோடும் ஸ்ரீ மகா சதாசிவ மூர்த்தியாய், அன்னை தாட்சாயணி தேவியோடு வீற்றிருந்தார்.

    ஒரு நாள்... அன்னைக்கோ மனதில் வெகு நாளைய ஆதங்கம்... அதுவே வார்த்தைக் குமுறலாக வெளிவந்தது.

    ஈசனின் திருவடிகளைப் பணிந்தவர், "தேவாதி தேவா! என் மனம் அமைதியின்றித் தத்தளிக்கிறது. இந்த உலகையே படைத்து, காத்து, அழித்து, அருளி, மறைத்து, ஐந்தொழில் புரிந்து, உலகையே உய்விப்பவரான உங்களின் சொல் மீறி என் தந்தை வீட்டிற்குச் சென்று அவரால் அவமதிக்கப்பட்டு, அந்த யாகத்தையும், தட்சனையும், வீரபத்ரரால் தாம் அழித்தாலும், தம்மை மதியாத தட்சனின் மகள் என்ற தாட்சாயணி எனும் பெயரும் இப்பிறவியும் எனைப் பெரும்பழிக்கு ஆளாக்குகின்றன.

    இந்த அவச்சொல்லிலிருந்து விடுபட்டு எனக்கு ஆறுதல் நல்கி, வேறு பிறவி எடுத்து உங்களை அடையும் பாக்கியத்தை எனக்கு அருளுங்கள்! எனப் பணிந்து வேண்டினார்.

    சகல லோக நாயகியான சக்தி தேவியின் வேண்டுகோளைக் கேட்ட எம்பெருமானுக்கோ மென்முறுவல் முகத்தில்!

    தம் ஆதர்ச பத்தினியை அன்புடன் நோக்கியவர், சகியே! இந்த ஆசை உன்னுள் உறுதியும், பூர்த்தியும் அடையக் காரணம், இவ்வுலகத்திலுள்ள நம் குழந்தைகளாகிய அனைத்துயிர்களின் நன்மையும், மேன்மையும் மட்டுமே!

    உன் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். மலையரசனாகிய பர்வதராஜன் இமவான், பத்ம தடாகத் தீர்த்தக் கரையில் எனைக் குறித்து தவமியற்றி வருகிறான்!

    அகிலாண்ட ஈஸ்வரியாகிய உன்னையே தன் புதல்வியாக அடைந்து, எனக்கு மணம் செய்து கொடுத்து மகிழ வேண்டும் என்பது, அவனுடைய நீண்ட நாளைய தவம்! அவன் மனைவி மேனையும், பித்ருக்களின் மனத்திலிருந்து தோன்றி, உன் திருவடிகளையே தியானித்துப் போற்றி வணங்கி வருகிறாள்!

    அந்த மலையரசனுக்கும் மேனைக்கும் புத்திரியாய் அவதரித்து, அவர்களை நற்பயன் அடையச் செய்து வளர்ந்து வா! என்று பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்!

    அன்னை பராசக்தியோ, அளவற்ற ஆனந்தத்துடன் மகா தேவரைப் பணிந்து விடைபெற்றார்.

    அப்போது, அங்கு பர்வதராஜன் இமவான், அரச போகங்களைத் துறந்து, தவக்கோலம் புனைந்து, அந்த மலையில் கடுந்தவம் புரிந்து வந்தான்.

    நீண்ட காலத் தவத்திற்குப் பிறகு, ஒரு நாள், மானசரஸ் எனும் தடாகத்தில் இறங்கி உடல், மனம் புனிதமாக்கிக் கரையேறுகின்ற பொழுதில், அத்தடாகத்தில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரின் மேல், அழகிய சின்னஞ்சிறு சிசுவாய், இந்த உலகத்திற்கே தாயாகிய ஜெகன்மாதா, ஈசனின் சரிபாதியாகிய தேவி சயனித்திருக்கக் கண்டு பிரமிப்பும், ஆனந்தமும் அடைந்தான்.

    அங்கு, சிறு மழலையாய், கன்னங்குழியச் சிரித்த அன்னையை இரு கைகளாலும் வாரி எடுத்து வணங்கி, மார்போடணைத்து, அரண்மனைக்கு எடுத்துச் சென்றான்.

    மன்னரின் வருகை அறிந்து வரவேற்க வந்த மேனை, அவர் கரங்களில் தவழ்ந்த சிறு குழந்தையைப் பரவசத்துடன் ஏந்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டு, கண்ணே ! என் பிள்ளைக்கலி தீர்க்க வந்துவிட்டாயா? என் நெஞ்சோடு அணைக்க, தாய்மைப் பூரிப்பில் பால் சுரக்க ஆரம்பித்தது.

    உலகிற்கே படியளக்கும் நாயகியாம் தேவி, தம் அன்னை மேனையிடம் பாலருந்த, ஈசன் தம்மீது கொண்ட கருணையை எண்ணி, இமவான் மகிழ்ச்சிப் பரவசம் அடைந்தார்.

    வானில் சஞ்சரிக்கும் தேவர்களும், சித்தர்களும் மலர்மாரி பொழிய, நான்முகன், திருமால், அஷ்டதிக்குப் பாலகர்களும் வருகை தந்து, புவன மாதாவின் திரு அவதாரத்தைத் தரிசித்து ஆசி கூறிச் சென்றனர்.

    பர்வதராஜனின் அரண்மனையே விழாக்கோலம் பூண, பார்வதி! என அம்மகாசக்திக்குப் பெயரிட்டு அளவிட முடியாத அன்பும், பாசமுமாக வளர்க்க ஆரம்பித்தனர்.

    பெயர் சூட்டும் வைபவமும், உணவூட்டும் விழாவும், ஆலயத் தரிசனமும் பெரிய திருவிழாவைப் போன்று நிகழ, நிறைமதி போன்ற பேரழகும், பொலிவுமாக அன்னை வளர, கண்ணனும், கருத்துமாய்ப் பேணி வளர்க்க, ஐந்து வயது நிரம்பியது.

    சகல உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை அடைய, தவம் செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்ட அன்னை பார்வதி, தம் உள்ளக் கிடக்கையைத் தந்தையிடம் வெளிப்படுத்தினார்.

    ஈசன் திருவருளால் பிறப்பெடுத்து, ஐந்து வயதிலேயே அறிவும், ஆற்றலும் மிகுந்து விளங்கிய தன் மகள் பார்வதியின் எண்ணம் புரிந்தாலும், சிறு வயதிலேயே, சிரமம் மிகுந்த தவ வாழ்க்கையை அவள் மேற்கொள்வதை, அன்னை மேனை தடுத்தார்.

    அவள் தவம் புரியக்கூடாது எனத் தடுக்க, உமா என்று கூறிட அன்றிலிருந்து அன்னைக்கு உமா எனும் பெயரும் தேவி பிரணவமாக வழங்கலானது.

    வனத்தில் தவம் புரிவதன் பலனாய் வரும் பாதகங்களைத் தந்தை விவரிக்க, தான் வணங்கும் அந்தப் பரமனுக்கே, தன்னைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக உரைத்துப் பிடிவாதமாக இருந்தார் அன்னை!

    தம் அருமை மகளின் ஆசையை நிறைவேற்றத் திருவுளம் கொண்ட மலையரசன், அவர் தவம் புரியத் தேவையான குடில் ஒன்றை இமயமலைச் சாரலில் அமைத்து, பணிவிடை செய்து கவனிக்க தோழிப் பெண்டிரையும் அனுப்பி வைத்தார்.

    ஒரு இனிய நாளில், பார்வதி தேவி, அனைவரிடமும் விடை பெற்று, ஈசனைத் தியானிக்க தபோவனம் சென்று எம்பெருமானை நோக்கித் தவம் புரிய ஆரம்பித்தார்.

    2. ஆலமர் செல்வனின் அற்புதக் கருணை வடிவம்

    பரமேஸ்வரன், வெள்ளியங்கிரியான, திருக்கயிலை மலையில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, தட்சிணாமூர்த்தியாய் உருவெடுத்து, சனகாதி முனிவர்களும், பிரம்ம புத்திரர்களுமாகிய, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும், ஞான உபதேசமும், வேத அத்யயனமும் புரிந்து வந்தார்.

    சின் முத்திரை தரித்து சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்தையும் ஈசன் உபதேசிக்க, இறைவனும், இறைவியும் தவத்தில் ஆழ்ந்துவிட அவரால் படைக்கப்பட்ட சகல ஜீவராசிகளும், யோகமார்க்கத்தையே தமக்கு உரிதாய் ஏற்றுக்கொண்டன. குழந்தை உற்பத்தியும் நின்று போனது.

    அப்போது அசுரர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. காசியப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த அசுரன் சூரபன்மன் என்பவன், தன் ஆளுகைக்குள் மூன்று லோகங்களையும் ஆட்படுத்தித் தேவர்களைப் பெரிதும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான்.

    தன் வீரர்களுடன் பானுகோபன் என்பவனை அனுப்பி, இந்திரன் மகன் ஜெயந்தனைச் சூரபன்மன் சிறைப்பிடிக்க, தேவலோகத்தையும், தேவர்களையும் பாதுகாக்க, தேவேந்திரன், தேவர்கள் புடைசூழச் சென்று கைலாசநாதரை நோக்கிக் கடுந்தவம் புரிய ஆரம்பித்தனர்.

    இறைவனோ ஞானோபதேசத்தில் ஆழ்ந்திருக்க, அப்போது மனோவதிப் பட்டணத்தில் வீற்றிருக்கும் பிரம்மதேவரைச் சென்று கண்டு வணங்கிய இந்திரன், தான் வந்த காரணத்தை விளக்கினான்.

    சிவபெருமானிடமிருந்து சக்தி வாய்ந்த வரங்களைப் பெற்ற சூரபன்மன், அனைத்துத் தேவர்களையும் தோற்கடித்து, அனைத்து ஜீவராசிகளுக்கும், மகரிஷிகளுக்கும் துன்பம் விளைவிப்பதை விவரித்து ஒரு முடிவை வேண்டி நின்றான்.

    பிறகு அனைவருமாகத் திருமாலிடம் சென்று முறையிட, வைகுண்ட வாசனோ, ஈசனை அவமதித்த தட்சன் யாகத்தில் நாம் பங்கெடுத்ததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு திரிபுர அசுரர்களை தம் புன்னகையால் அழித்தவரும் அவரே! நஞ்சுண்டு உலகிற்கு நன்மை செய்தவரும் அவரே! ஆகையால் சூரபன் மனையும், சிங்கமுகாசுரனையும், தாரகாசுரனையும் வதைக்க சர்வேஸ்வரனாலேயே முடியும். அவரை வணங்கி ஆராதித்துத்தவம் புரிவோம்... என்றுரைத்து அனைவரோடும் இணைந்து ஆராதனைகள் புரிந்தார்.

    அனைவரும் பல காலம் தவம் புரிய, அவர்களின் தவத்திற்கு மெச்சி, மகேஸ்வரன் ரிஷபாரூடராய் கஜட்டரி தரித்த திருக்கோலத்துடன் காட்சியளித்தார்.

    தன் புன்னகையே பேரொளியாகி உலக இருள் நீக்கி, பரந்தாமா! நான்முகனே! இந்திராதி தேவர்களே! உமது தவம் எதைக் குறித்து என நான் அறியலாமா? என்று எல்லாம் உணர்ந்த பொருள் பொதிந்த புன்னகையுடன் வினவினார்.

    பிறகு மகாவிஷ்ணு, அனைத்தையும் எடுத்துரைக்க, எனக்கு விரைவில் ஒரு மகன் தோன்றுவான், அவன் வீரம், விஜயம், தைர்யம் அனைத்திலும் சிறந்து விளங்கி, திருக்குமரனாய், பகை விலக்கி அசுரர்களை மாய்த்து அனைவரின் துன்பங்களையும் போக்குவான்... என ஆசிர்வதித்து மறைந்தார்.

    சிவமும், சக்தியும் பிரிந்திருப்பதால், உலகில் போகங்கள் அனைத்திலும் ஜீவராசிகள் விரக்தியடைந்திருப்பதை உணர்ந்த திருமால், அதை நீக்க ஒரு உபாயம் செய்தார்.

    மன்மதனை அழைத்து, கயிலையில் தவம் புரியும் ஈசனின் யோக நிஷ்டை கலைத்து, இமயத்தில் தவம் புரியும் பார்வதி தேவியோடு இணைத்து வைக்க, பஞ்ச புஷ்ப பாணம் விட்டு காம இச்சை தூண்டி, தவத்தைக் கலைக்கும்படி கோரினார்.

    முதலில் தன்னால் பரமனை நெருங்க முடியாது எனப் பயந்து மறுத்த மன்மதன், பிறகு அவர் கோரிக்கையை ஏற்று, காம்பாணத்தோடும், கரும்பு வில்லோடும், மலரம்புகளோடும் சென்று பாணங்களைப் பூட்டி வில்வளைத்து, இறைவன் திருமேனி மீது பிரயோ கித்தான்.

    ஈசனின் நிஷ்டை கலைந்து ரெளத்ரமாகி, நெற்றிக் கண் திறந்துவிட அதிலிருந்து வெளிப்பட்ட அக்னி, இமைக்கும் பொழுதில் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது.

    கைலாயம் முழுவதும் புகை விரளிப்பரவ, இறைவனையே மோகம் கொள்ளச் செய்ய முனைந்த காமதேவனாகிய மன்மதன் சாம்பலாகி விட, காமதகன மூர்த்தியாய், மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்தார் எம் ஈசன்!

    மன்மத சம்ஹாரம் முடித்து எம்பெருமான் காட்சியளிப்பார் என எதிர்பார்த்த அயன், மால், தேவர்கள் ஏமாற்றமடைந்து ஈசனைக் குறித்துத் தியானித்தார்கள்!

    அதை உணர்ந்த எம்பெருமான் நீலகண்டர், நந்திதேவரை அழைத்துக் கொடிய அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகி, தங்களைக் காக்கக் கோரித்தஞ்சமடைந்திருக்கும் பிரம்மாதி தேவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு பணித்தார்.

    பிரம்மாதி தேவர்கள் அனைவரும் பக்தியுடன் பரமனை வணங்கித் துதித்து, தம் குறை கூறி, அக்குறையை நீக்க வல்லே முருகப்பெருமான் எப்போது அவதரிப்பார் என்று தொழுது வேண்டினர்.

    மகாதேவர், பெரும் முறுவலுடன் அவர்களை நோக்கி, உங்கள் கோரிக்கை, விருப்பங்கள், விரைவிலேயே நிறைவேறும்! இனி நீங்கள் அஞ்ச வேண்டாம் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று அருளினார்.

    பிறகு, நீங்கள் அஞ்சி நடுங்கும் அந்தச் சூரபன்மன், நீண்டகாலம் எனை நோக்கிக்கடுந்தவம் புரிந்தான். தனக்கு அமரத்துவம் வேண்டி, தேவர்களால், மும்மூர்த்திகளால், அசுரர்களால் எனக்கு மரணம் நிகழக்கூடாது. தங்கள் உடலிலிருந்து தோன்றும் தேவன் ஒருவனாலேயே எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும். தங்களுடைய ஆணையின் பேரில் எனை அழிக்க வரும் அவர் எனை ஆட்கொண்டு என்னைத் தன்னோடு தரித்துக் கொள்ள வேண்டும் எனக் கோர... யாமும் அவ்வரத்தை வழங்கினோம், விரைவில் அது ஈடேறும்! என ஆசி வழங்கினார் சர்வேஸ்வரன்!

    அதைக் கேட்டதும் பரவசத்துடன் ஈசனை வணங்கிய இந்திராதி தேவர்கள், ஐயனே, தாங்கள் அறியாதது இப்பூவுலகில் ஏதுமில்லை. தங்களை மணக்கத் தவமியற்றி, இமாசலப் பர்வததில் அன்னை பார்வதிதேவி காத்திருக்கிறார்கள் அவர்களை உபரவிலேயே மணம் புரிந்து, குமரனை அருளி, எம் துயர் தீர்க்க வேண்டும் இறைவா எனப் பிரார்த்தனை செய்தனர்.

    அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஜெகதீசன் வாக்களித்ததும், தேவர்கள் விடைபெற, மன்மதனின் மனைவி ரதிதேவி கண்ணீருடன் ஓடி வந்து ஈசனைப் பணிந்து, காம்தேவனை உயிர்ப்பித்து அருளுமாறு கதறி வேண்டினாள்.

    அதற்கு எம்பெருமான், பெண்ணே ! மனம் வருந்தாதே! உன் நாயகன் எனக்கு ஒரு பாதகம் செய்தான். அதனால் விதிக்கப்பட்ட தண்டனை மாற்ற முடியாது! உன் கற்பின் நல்லொழுக்கம் எனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதால், நான் மீண்டும் உன் கணவனை உயிர்ப்பித்துத் தருகிறேன்! ஆனால், அதற்கு நீ சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். கூடிய விரைவிலேயே நான் தேவியை மணம் புரியவிருக்கிறேன்! அத்திருமணத்தில், உன் கணவனை உயிர்ப்பித்துத் தருவேன்! எனத் திருவாய் மலர்ந்தருளினார்!

    3. இமாசலப் பர்வதத்தில் ஈசனின் பாதம்

    சிவபெருமான், இமாசலப் பர்வதத்தில் கடுந்தவம் புரியும் மலையரசன் மகள் உமாதேவியை, மணமுடிக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, தம் தேவிக்கு அருள் செய்ய விரும்பிப் புறப்பட்டாலும், அவருடைய தவத்தின் மகிமையைப் பரிசோதித்துப் பார்க்க எண்ணினார்.

    உடனே ஒரு மென்முறுவலுடன், கம்பீரமும், அழகும், ஆண்மையும் நிறைந்த தம் திரு உருவத்தை மாற்றி, வயதான கிழவராக மாறினார்.

    சதை சரிந்து பருத்த உடலும், சுருங்கிய தோஷம், வெளுத்து நரைத்த சிகையும், மீசையும், தளர்ந்த தேகமுமாய், சூலமே கைத்தடியாக மாற முதியவர் வேடம் தாங்கி, பார்வதி தேவியின் ஆசிரமத்திற்குச் சென்றார் பரமேஸ்வரன்!

    அங்கு, ஆசிரமத்தில் தவம் புரியும் அம்பிகையைத் தரிசித்து விட்டு, முனிவர்கள், யோகிகளும் மன மகிழ்ச்சியோடு வெளியேற, கிழ வேதியர் உருவத்தில் ஈசன், தேவியின் தவச் சாலைக்குள் நுழைந்தார்.

    அன்னை ராஜராஜேசுவாரியும், முதியவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று. முகமலர்ச்சியுடன் உபசரித்து, தகுந்த ஆசனமளித்து அமரவைத்துப் பக்தியோடு வணங்கினார்.

    தேவியை ஆசிர்வதித்த எம்பெருமான், பெண்ணே ! சகல சௌபாக்யங்களும் நிறைந்து அழகாய்த் தோற்றமளிக்கும் நீ, இவ்வயதில் ஏனம்மா தவம் புரிய வந்தாய்?

    பர்வதராஜனின் தவப் புதல்வியான நீ அரச போகம் விட்டு தன்னையே ஏன் வருத்திக் கொள்கிறாய்? தவ ஒழுக்கங்களினால் உயர்ந்து விளங்கும் நீ, உலகிற்கே அன்னை போன்றவள்! யாரையோ கணவராகத்தரிக்க எண்ணி இத்தவம் மேற் கொள்கிறாயாமே... யாரம்மா அது? ஒன்றும் அறியாதவர் போல் வினவினார்.

    அதைக் கேட்டதும், பார்வதிதேவியோ நாணம் மிகுந்து, தலை குனிந்து, முதியவரின் கேள்விக்கு எப்படி நேரிடையாகப் பதில் சொல்வது என்ற தயக்கத்துடன், அருகில் நின்ற தம் தோழிகளான ஜெயை, விஜயை இருவரிடமும் கண் ஜாடையில், தம் தவம் பற்றி உரைக்கும்படி பணித்தார்.

    அவர்களிருவரும் யானைப் பணிந்து, ஐயா! இமவான் மகள் பார்வதி தேவியாகிய எங்கள் தலைவி, இப்பிரபஞ்சத்திற்கே ஆதிமூலமாய் விளங்கும் முக்கண் முதல்வராகிய பரமேஸ்வரனைத் தம் கணவராக வரிக்கவே தவமியற்றி வருகிறார். ஆனால் சகல லோக நாயகரான ஈசன், எங்கள் தலைவிக்கு மட்டும் காட்சியளித்து வரமளித்து அவரை ஏற்காமலிருக்கிறார். நீங்களோ வயதில் முதிர்ந்தவர்! எம் தேவி பரமனுடன் இணைய நீங்கள்தான் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினர்.

    அதைக் கேட்டதும், எம்பெருமான், அம்மா! உன் நோக்கம் உயர்ந்ததுதான்! ஆனால் அது சாத்தியமா? எளிதில் அடைய முடியாத, அரி, அயனால் கூட அடி முடி காண முடியாதவரை எண்ணி ஏன் மயங்குகிறாய்? நீயோ அழகு மிகுந்தவள் ஆனால் அந்தப் பரமசிவனோ மயானத்தில் குடி கொண்டிருப்பவன்! பாம்புகளை ஆபரணங்களாகச் சூடியவன். பூதகணங்களால் சூழப்பட்டு. ருத்ர வடிவு கொண்டு, புலித்தோல் ஆடை அணிந்து காட்சியளிப்பவன் அவனையா அடைய விரும்புகிறாய்?

    பெண்கள், தங்களுக்கு உரிய நாயகரைத் தேர்வு செய்யும்போது, அழகு, அறிவு, செல்வம், எல்லாம் பார்த்துதானே மணக்க விரும்புவர். நீ தேர்ந்தெடுத்திருப்பவனோ பித்தன் போன்று விரிசடையுடனும், முக்கண்களுடனும் அலைபவன்! அவன் எப்படி உன் அழகிற்குப் பொருத்தமாவான்? உன் முடிவை மாற்றிக்கொள்

    நான்தான் உனக்குத் தகுதியான மணவாளன்! நான் கிழவன்தான், ஆனால், சிவனை விட உனக்குத் தகுதியானவன்! நான் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்! அஷ்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பதில் எனக்கு நிகர் யாருமில்லை! தோற்றத்திலும், அழகிலும் அவனை விட நானே சிறந்தவன் என நீயே புரிந்து கொள்வாய் நீயே ஆலோசித்து ஒரு முடிவெடுத்து உன் தந்தையிடம் பேசி, என்னையே கணவனாக ஏற்றுக்கொள்!

    கண்களில் குறும்பும், கிண்டலும் மிளிர மொழிந்த ஈசன், சிறுமுறுவலுடன் தேவியின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

    அதைக் கண்டதும், இருகரம் கொண்டு செவி மூடிக்கோபத்தில் குமுறிய அன்னை, தோழியரிடம் திரும்பினார்.

    இந்தக் கிழவரை, அவரது உருவம் கண்டு பக்குவமான முதியவர் என நினைத்து ஏமாந்து போனேன். இந்தக் கயவன் ஒரு அசுரனாகத்தான் இருக்க முடியும்! என் முன் தகாத வார்த்தைகள் பேசும் இவரை வெளியே போகச் சொல் நிர்குணனான எம் ஈசன் எங்கே... முக்குணங்களுக்கும் எட்டாத, அஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவராக விளங்கும் சர்வேஸ்வரன் எங்கே... இந்தக் கிழவர் எங்கே! சிவச் சின்னங்களாகிய திருநீறும், ருத்ராட்சமும் தரித்தும் சிவப் பரம்பொருள் பற்றி அறியாமல் இகழ்ந்து பேசும் இவருடன் பேசுவது கூட மகாபாவம்... உடனே இவரை இவ்விடம் விட்டு வெளியேற்றுங்கள்! ரெளத்ரத்துடன் மொழிந்த அன்னை பார்வதி, தானே அவ்விடம் விட்டு வெளியேற முற்பட்டார்.

    அன்னை புவனேஸ்வரியின் மன உறுதியும், மாறாநேசமும் கண்டு தனக்குள் ரசித்த எம்பெருமான், பார்வதி நீ எங்கும் போக வேண்டாம்... நான் போகிறேன். உனக்கு வேண்டும் வரம்கேள்... உடனே அருள்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளி, தன் உண்மையான உருக்காட்டி ரிஷபாரூடராய்த் தேவிக்குத் திவ்ய தரிசனம் தந்தார்.

    அந்த நிமிடமே அன்னை லலிதாம்பிகைக்கு மெய்சிலிர்க்க, இதுவரை தன்னிடம் முதியவராக வாதிட்டவர், கைலாசநாதரே என்றுணர்ந்து பதறி இறைவன் தாள் பணிந்தார்.

    "சுவாமி! தம்மை அறியாமல் ஏதேதோ உரைத்து விட்டேன்! என்னை மன்னியுங்கள்! பக்தர்களின் உள்ளக் கவலைகளை எல்லாம் நீக்கும் தயாபரா! உங்கள் பக்தையான என் கோரிக்கையையும் ஏற்று எனை ஏற்க வேண்டும்! ஞானத்தில், தபோ நிலையில் சிறந்த முனிவர்கள் கூட தங்கள் மாயையை உணர்ந்ததில்லை! நான் எப்படி அறிவேன்? எனப் பிரார்த்தித்தார்.

    பார்வதி! உன் மன உறுதியைச் சோதிக்கவே இவ்வேடத்தில் வந்தேன்! உனக்கு என் மீதுள்ள அன்பும், நேசமும் உணர்ந்து மெய்சிலிர்த்தேன்! இனி நீ தவம்புரிய அவசியமில்லை, அரண்மனைக்குச் செல்! நாளையே நான் உனை மணம் புரிய அங்கு வருவேன்! உன் பெற்றோர் சம்மதத்துடன் தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் முன்னிலையில் உன்னைத் திருமணம் புரிந்துகொள்வேன் என்று வரமளித்து விட்டு மறைந்தார்.

    மாநிலம் போற்றும் மலைமகள், பெரும் மகிழ்வுடன் பிறை சூடிய பெம்மானையே தியானித்தவாறு, அரண்மனை திரும்பினார்.

    அங்கு தன் மகளுக்கு ஈசன் காட்சியளித்து வரமளித்ததை அறிந்த இமவானும், மேனையும் மிகவும் மகிழ்ந்தனர்.

    4. அம்மையப்பராம் சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணம்

    திருக்கைலாயம் திரும்பிய ஈசன், சப்த ரிஷிகளைத் தியானத்தில் நிலைநிறுத்த, உடனே அவர்களும் பரமேஸ்வரரைக்காண ஆவலுடன் விரைந்து வந்து, இறைவன் முன்பு தொழுது நமஸ்கரித்தனர்.

    பிரபோ! தாங்கள் எங்களை அழைத்த காரணத்தை கூறிக் கட்டளையிடுங்கள்! உடனே செய்து முடிக்கிறோம்! என்று மகிழ்ச்சி யுடன் வேண்டினர்.

    "ரிஷிகளே! பர்வதராஜனுடைய புதல்வி

    Enjoying the preview?
    Page 1 of 1