Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akanaanuru
Akanaanuru
Akanaanuru
Ebook811 pages3 hours

Akanaanuru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலக இலக்கியங்கள் அனைத்தும் கடவுளையும், மனிதனையும், இவை இரண்டையும் கலந்து பாடியுள்ளன. மனித வாழ்க்கை ஒன்றையே மையப்படுத்தி பாடிய இலக்கியம் சங்க இலக்கியமாகும்.

இவ்வாறு தனித்து நிற்கும் இதனை செவ்வியல் இலக்கியம் என்று கூறுவார்கள். இந்தியாவிற்கும் மற்ற மாநிலத்தவருக்கும் உலக மக்களுக்கும் வாழ்வியலை எடுத்துக் கூறும் பாடமாக அமைந்தது சங்க இலக்கியம். நெல்லுக்கு உப்பைப் பண்டமாற்றம் முறையில் விற்கப்பட்ட வணிக முறையை 60, 140, 390 ஆகிய பாடல்களில் காணலாம். உழவுத் தொழில் முடிந்த காலத்தில் கலப்பைகள் வீட்டில் உறங்குகின்றன. மழை பொழிவதும் நின்றுவிட்டது. குறுமுயலின் நிறம் போல முழு மதி தோன்றியது.

அது 6 புள்ளிகளுடன் வானில் தோன்றும் அறுமீன் எனப்படும். அந்த நாளை கார்த்திகை திருநாளாக தமிழக மக்கள் ஆடிப்பாடி கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் முறைப்படி இதுவே தமிழ் கடவுளான முருகனின் பிறந்த நாள் என்று எண்ணப்படுகிறது இதனை அகநானூற்றில் உள்ள 185வது பாடல் குறிப்பிடுகிறது.

மருத நில நாகனார் பாடிய அகநானூற்றுப் பாலைப் பாடலில் ஊராட்சி, நகராட்சிகளுக்கு அக்காலத்தே தேர்தல் நடைபெற்ற முறையை ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.

"கயிறுபிணிக் குழிசி ஓலை கொண் மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்"

கயிற்றால் கட்டப் பெற்ற குடத்தினுள்ளே. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர் பெயரை ஓலையில் எழுதி, தகுதியுடைய ஊர்ப் பொது வாக்காளர்கள் போடுவர். அதன்மீது இலச்சினை யிட்டு, அரக்கு வைத்து மூடியிருக்கும் அக்குடத்தை, தேர்தலை நடத்தும் ஆவண மக்கள் இலச்சினையை நீக்கி விட்டு உள்ளே கைவிட்டு ஓலைகளை எடுத்து எண்ணி முடிவு கூறுவர். குடத்தினுள் ஓலையை எடுக்க முயலுவது போலப் பருந்துகள் இறந்துபோன பெரு வீரர்களின் குடலை உருவி எடுக்கும்படியான பாழ்பட்ட பாலைநிலம் என்பது பாடற்கருத்து.

இத்தேர்தல் முறையைக் குடவோலை முறை என இடைக்கால உத்தரமேரூர்க் கல்வெட்டுப் போன்றவை விரிவாக எடுத்துரைக்கின்றன. இவ்வாறு தமிழர்கள் தொன்றுதொட்டுக் குடவோலை முறை மூலம் தேர்தல் நடத்திய விதத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலைக் கற்று தமிழர்களுடைய நாகரிகம் கலை, இலக்கியம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580144206864
Akanaanuru

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Akanaanuru

Related ebooks

Reviews for Akanaanuru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akanaanuru - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    அகநானூறு

    Akanaanuru

    Author:

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    களிற்றியானை நிரை

    பணிமிடை பவளம்

    நித்திலக்கோவை

    முன்னுரை

    உலக இலக்கியங்கள் அனைத்தும் கடவுளையும், மனிதனையும், இவை இரண்டையும் கலந்து பாடி யுள்ளன. மனித வாழ்க்கை ஒன்றையே மையப்படுத்தி பாடிய இலக்கியம் சங்க இலக்கிய மாகும்.

    இவ்வாறு தனித்து நிற்கும் இதனை செவ்வியல் இலக்கியம் என்று கூறுவார்கள். இந்தியாவிற்கும் மற்ற மாநிலத்தவருக்கும் உலக மக்களுக்கும் வாழ்வியலை எடுத்துக் கூறும் பாடமாக அமைந்தது சங்க இலக்கியம்.

    நெல்லுக்கு உப்பைப் பண்டமாற்றம் முறையில் விற்கப்பட்ட வணிக முறையை 60, 140, 390 ஆகிய பாடல்களில் காணலாம். உழவுத் தொழில் முடிந்த காலத்தில் கலப்பைகள் வீட்டில் உறங்குகின்றன. மழை பொழிவதும் நின்று விட்டது. குறுமுயலின் நிறம் போல முழு மதி தோன்றியது

    அது 6 புள்ளிகளுடன் வானில் தோன்றும் அறுமீன் எனப்படும். அந்த நாளை கார்த்திகை திருநாளாக தமிழக மக்கள் ஆடிப்பாடி கொண்டாடு கிறார்கள். தமிழர்களின் முறைப்படி இதுவே தமிழ் கடவுளான முருகனின் பிறந்த நாள் என்று எண்ணப்படுகிறது இதனை அகநானூற்றில் உள்ள 185வது பாடல் குறிப்பிடுகிறது.

    மருத நில நாகனார் பாடிய அகநானூற்றுப் பாலைப் பாடலில் ஊராட்சி, நகராட்சிகளுக்கு அக் காலத்தே தேர்தல் நடைபெற்ற முறையை ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.

    கயிறுபிணிக் குழிசி ஓலை கொண் மார்

    பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்

    கயிற்றால் கட்டப் பெற்ற குடத்தினுள்ளே. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர் பெயரை ஓலையில் எழுதி, தகுதியுடைய ஊர்ப் பொது வாக்காளர்கள் போடுவர். அதன்மீது இலச்சினை யிட்டு, அரக்கு வைத்து மூடியிருக்கும் அக்குடத்தை, தேர்தலை நடத்தும் ஆவண மக்கள் இலச்சினையை நீக்கி விட்டு உள்ளே கைவிட்டு ஓலைகளை எடுத்து எண்ணி முடிவு கூறுவர். குடத்தினுள் ஓலையை எடுக்க முயலுவது போலப் பருந்துகள் இறந்துபோன பெரு வீரர்களின் குடலை உருவி எடுக்கும்படியான பாழ்பட்ட பாலைநிலம் என்பது பாடற்கருத்து.

    இத்தேர்தல் முறையைக் குடவோலை முறை என இடைக் கால உத்தரமேரூர்க் கல்வெட்டுப் போன்றவை விரிவாக எடுத்துரைக்கின்றன. இவ்வாறு தமிழர்கள் தொன்றுதொட்டுக் குடவோலை முறை மூலம் தேர்தல் நடத்திய விதத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலைக் கற்று தமிழர்களுடைய நாகரிகம் கலை, இலக்கியம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    அகநானூறு

    களிற்றியானை நிரை

    காப்புச் செய்யுள்

    கடவுள் வாழ்த்து

    பாடாண் தினை

    பாரதம் பாடிய பெருந்தேவனார்

    கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்

    தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்,

    மார்பி னஃதே, மைஇல் நுண்ஞான்

    நுதலது இமையாநாட்டம், இகல்அட்டுக்

    மையது கணிச்சியொடு மழுவே, மூவாய்

    வேலும் உண்டுஅத் தோலா தோற்கே

    ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே

    செவ்வான் அன்ன மேனி, அவ்வான்

    இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று

    எரிஅகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை

    முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,

    மூவா அமரரும், முனிவரும், பிறரும்

    யாவரும் அறியாத தொன்முறை மரபின்

    வரிகிளர் வயமான் உரிவை தைஇய

    யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்,

    தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே

    அந்தணன் போல் உள்ள இறைவன் செவ்வானத்தைப் போல சிவந்த மேனி கொண்டவன். மாலை நேரத்துப் பிறைப் போல வெண்ணிறப் பற்களையும் தீயைப் போன்ற சடையையும் இளம்பிறை சூடிய தலையையும் கொண்டவன். தேவரும் முனிவரும் தோன்றும் முன் தோன்றியவன். புலியின் தோலை கட்டியவன். யாழ் போல் வேதம் இசைக்கும் நீலகண்டம் கொண்டவன். கார் காலத்தில் மலரும் கொன்றை மலர்களால் ஆன பூமாலையும் பூணூலையும் நெற்றியில் மூடாத கண்ணும், கையில் மழுப் படையும் கொண்டவன். மூன்று தலைகளையும் சூலப் படையும் காளை வாகனமும் கொண்ட உமையொரு பாகன் ஆவான். குற்றமில்லாத அந்த இறைவன் திருவடிகளின் திருவருளால் உலகம் துன்பமின்றி வாழ்கிறது.

    1. தலைவி கூற்று

    வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,

    உருவக் குதிரை மழவர் ஓட்டிய

    முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,

    அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,

    சிறு காரோடன் பயினொடு சேர்த்திய5

    கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்

    மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த

    வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்

    பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,

    அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,10

    நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,

    அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,

    உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்

    வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,

    சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை15

    நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்

    சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,

    உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்

    கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?

    தலைவன் நெடுநாள் வராததால் தலைவி தோழியிடம்

    கூறுவதாக அமைந்த பாடல் இது.

    வெகு தொலைவில் செல்வங்களைத் தேடி மூங்கில் போன்ற என் தோள்களைப் பிரிந்து சென்றான் தலைவன். அவன் சென்ற காடு கொடுமையானது. சூரிய வெப்பம் பூமியைப் பிளந்து பசுமையைக் கொன்றுவிட்டது. அங்கு நிழல் தராத மரங்களே உள்ளன. பாறைகள் கொதித்தன. சுனைகளில் நீரில்லை. அதனால் அவ்வழி செல்வோர் எவரும் இல்லை. அந்த காடு வழிப்பறி கள்வர்கள் நிறைந்து காணப்படுகிறது. சூறாவளிக் காற்றால் உலர்ந்து போன முருங்கை மரப் பூக்கள் நீர்த்துளிகளைப் போல உதிர்ந்து கடலுக்கு கரை அமைத்தது போல பரவிக் கிடக்கின்றது. அத்தகைய காட்டு வழியில் பொருள் தேடிச் சென்றவர் குதிரையைக் கொண்டவனும் தலையில் கண்ணி மாலையும் காலில் வீரக்கழலும் அணிந்த முருகனைப் போன்றபோர் வல்லமையுடன் மழவரை வென்ற வெற்றியுடன் வேள் ஆவி என்பவனின் யானைகள் நிறைந்த பொதிகை மலையில் சிறுவர்கள் அரக்குடன் சேர்த்து செய்த சாணைக்கல்லைப் போல உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சொல்லி அதை மறந்து விட்டாரே.

    2. தோழி கூற்று

    திணை - குறிஞ்சி

    கபிலர்

    கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை

    ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த

    சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு

    பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்

    அறியாது உண்ட கடுவன் அயலது5

    கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,

    நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்

    குறியா இன்பம், எளிதின், நின் மலைப்

    பல் வேறு விலங்கும், எய்தும் நாட!

    குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?10

    வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,

    நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,

    இவளும், இனையள்ஆயின், தந்தை

    அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,

    கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்15

    வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;

    நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.

    தலைவி தலைவனிடம் கூறுவது.

    வளமான வாழையின் கனிகளால் தம்மை உண்பவரை மற்றவற்றை உண்ண விடாமல் செய்யும் பலாப்பழத்தின் சுனைகளாலும் கிடைத்த சுவைச்சாறுகள் மலையிலிருந்து வடிந்து வரும் தேன் சாற்றுடன் கலந்தது. இந்த கலவையைத் தீஞ்சுவை கலவை என்று அறியாமல் நீர் என நினைத்து ஆண் குரங்கு இன்பம் அடைந்தது. அதனால் மயங்கிய குரங்கு சுனையின் அருகில் இருக்கும் மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற முடியாமல் அதன் அடியில் உதிர்ந்து கிடந்த பூக்கள் மீது படுத்து உறங்கியது. இவ்வாறு எவ்வித எதிர்பார்ப்பும் முயற்சியும் இல்லாமல் குரங்குகளும் மற்ற விலங்குகளும் திரிந்தன. இதையெல்லாம் அறியாமல் தலைவியை நாடும் தலைவனே கேட்பாயாக. தலைவி உன் மீது காதல் கொண்டவளாக உள்ளாள். அவள் தந்தையின் காவலர்கள் சோர்வுற்றிருக்கும் சமயம் இரவில் வந்து சந்திக்கலாம். இருப்பினும் இதையெல்லாம் தவிர்க்க வேங்கை மரம் பூத்துள்ளத்தையும் மிளகு காய்வதையும் கவனத்தில் கொள்வாயாக. விரைந்து வந்து மணமுடிப்பாயாக.

    3. தலைவன் கூற்று

    திணை - பாலை

    எயினந்தை மகனார் இளங்கீரனார்

    இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன

    கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்

    கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,

    கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,

    மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை5

    வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,

    துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,

    ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,

    புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,

    கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்10

    புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,

    கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,

    பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்

    வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா

    கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,15

    அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை

    கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்

    நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

    தலைவன் தன் நெஞ்சுக்கு கூறியது.

    முதலையின் தோள் போன்ற கருப்பான அடிப்பாகம் கொண்ட யாமை மரக் கிளையில் குஞ்சுகளை ஈன்ற பெண் பருந்துக்கு இரை தேட ஆண் பருந்துகள் பறந்து செல்லும் மழைச் சாரலில் மானை புலியானது வலப்பக்கமாக வீழ்த்தி அதன் ரத்தத்தை மட்டும் உண்டுவிட்டு போனதால் எஞ்சியுள்ள மானின் புலாலைக் கொள்ளையர்கள் போல கவர்ந்து செல்லும் பருந்துகள் உள்ளது அந்தக் காட்டைக் கடந்து பொருள் தேட முன்பு சென்றபோது சிவந்த வாயும் இனிய மொழியும் அணிகலன்களையும் கொண்ட தலைவியின் பார்வை காட்டைக் கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றது. எனவே, பொருளுக்காகப் பிரிய வேண்டாம் நெஞ்சே. பிரிந்தால் பழைய துன்பம் தான் வரும்.

    4. தோழி கூற்று

    திணை - முல்லை

    குறுங்குடி மருதனார்

    முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு

    பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,

    இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,

    பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,

    மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,5

    கருவி வானம் கதழ் உறை சிதறி,

    கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.

    குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,

    நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,

    பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த10

    தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,

    மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,

    உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,

    கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,

    நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்15

    போது அவிழ் அலரின் நாறும்

    ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.

    தலைவியிடம் தோழி கூறுவது

    நீரில்லாத காட்டில் மேகம் மின்னி மழைத் துளிகள் சிந்தியதால் முல்லை அரும்புகளும், தேற்றாமர கொன்றை மர அரும்புகளும் வளர்ந்தன. காற்றை அழகாக்கிய கார் பருவம் வந்ததால் நம் தலைவன் உறையூரின் மலைப்பகுதியில் காந்தளின் மலர்ச்சி போன்ற உன் அழகை எண்ணியபடி குதிரை பூட்டிய தேரில் வருகின்றான்.

    அவன் வரும் வழியில் உள்ள சோலையில் உள்ள பூக்களில் ஆணும் பெண்ணுமாக சேர்ந்து தேன் உண்ணும் வண்டுகள் தேனில் உள்ள மணியின் ஒளியால் பிரிந்து விடுமோ என்று அஞ்சி மணிகள் தங்கள் நாக்குகளை இழுத்து கட்டியவாறு ஓசை எழுப்பாமல் இருந்தன.

    5. தலைமகன் கூற்று

    திணை - பாலை

    பாலை பாடிய பெருங்கடுங்கோ

    அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்

    விளிநிலை கொளாள் தமியளன் மென்மெல

    நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்

    குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற

    வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் 5

    கண்ணிய துணரா வளவை யண்ணுதல்

    வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்

    முளிந்த வோமை முதையலங் காட்டுப்

    பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி

    மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப10

    வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்

    மாய்த்த போல மழுகுநுனை தோற்றி

    பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்

    விரனுதி சிதைக்கும் நிரைநிலை யதர

    பரன்முரம் பாகிய பயமில், கானம்15

    பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ

    டாகத்து தொடுக்கிய புதல்தன் புன்றலைத்

    தூநீர் பயந்த துணையமை பிணையன்

    மோயினள் உயிர்த்த காலை மாமலர்

    மணியுரு இழந்த வணியிழை தோற்றங்20

    கண்டே கடிந்தனஞ் செலவே யண்டொடி

    யுழைய மாகவு மினைவோள்

    பிழையலன் மாதோ பிரிதும்நா மெனினே.

    தலைவன் தன் நெஞ்சிற்கு கூறியது

    எப்போதும் இல்லாதபடி தலைவியை பாராட்டினேன். நான் பிரியப்போவதால் இவ்வாறு பாராட்டுவதாக உணர்ந்த தலைவி தன் வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக நாணத்தை விட்டு என்னிடம் வந்தாள். சூதாட்டக் காய்களைப் போல நெல்லிக்காய்கள் உதிர்ந்து கிடக்கும் யாமை மரங்கள் நிறைந்த காட்டில் உள்ள கூர்மையான கற்கள் வழி செல்வோரை காயப்படுத்தும்.

    வறண்ட காட்டை கடந்து பொருள் தேட சென்றால் அது அறநெறி அல்ல. பழமையான நூலில் சொல்லப்பட்ட பலமுடன் சொல்லாமல் சொல்பவனைப் போல வெறுப்பை முகத்தில் உணர்த்தி அசையாத ஓவியம் போல கண்ணீருடன் நின்றாள். தன் மார்புடன் அணைத்து¢¢கொண்டிருந்த மகனின் தலையில் உள்ள செங்கழுநீர் நிறம் மாறும்படி பெருமூச்சு விட்டாள். இவன் முன்பு நாம் பிரிந்தபோது செய்ததால் நாம் பிரியவில்லை. எனவே, இப்போதும் பிரிதல் கூடாது. பிரிந்தால் தலைவி உயிரை விடுவது உறுதி

    6. தலைவி கூற்று

    திணை - மருதம்

    பரணர்

    அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை

    அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,

    இழையணி பணைத்தோள், ஐயை தந்தை,

    மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்

    பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்- 5

    கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,

    குழைமாண் ஒள்ளிழை நீ வெய் யோளொடு,

    வேழ வெண்புணை தழீஇப், பூழியர்

    கயம்நாடு யானையின் முகனமர்ந் தாங்கு,

    ஏந்தெழில் ஆகத்து பூந்தார் குழைய, 10

    நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து

    'ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்,

    மாசில் கற்பின், புதல்வன் தாய்' என,

    மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்

    முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! 15

    சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து

    அம்தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி,

    வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்,

    முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்,

    பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் 20

    இளமை சென்று தவத்தொல் லஃதே;

    இனிமைஎவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

    தலைவி கூறுவது

    பரத்தையுடன் சேர்ந்து நீராடி விட்டு வந்த தலைவன் அதை மறைக்க முயன்றபோது அது தனக்கு தெரியும் என்று கூறுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது. வள்ளல் பித்தனுடைய உறையூரில் வாழும் காவிரி வெள்ளத்தில் தலைவனே! நீ நேற்று பரத்தையருடன் தெப்பத்தில் ஏறி பூமி நாட்டாரின் குளத்தில் இன்பமாக விளையாடும் ஆண், பெண் யானைகளைப் போல புனலாடினாய்.

    அதனை மறந்து விட்டு என்னிடம் வந்து நல்ல மகனின் தாயே என்று பொய் சொல்கிறாய். என் இளமையானது ஒரு காலத்தில் நீர் நிலையில் உள்ள வாலை மீனைதின்ற நீர் நாய் புதரில் நிம்மதியாக தங்கும் இடங்கள் பலவற்றை கொண்ட வேல்படை வீரர்களான மத்தி என்பவனின் கழால்அறு என்ற ஊரைப் போல அழகாக இருந்தது. இப்போது நீ என்னை விட்டு நீங்கி விட்டாய். இனி என்னைப் புகழ்வதால் உனக்கு என்ன இனிமை கிடைக்கும்?

    7. செவிலித்தாய் கூற்று

    திணை – பாலை

    கயமனார்

    முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;தலைமுடி

    சான்று; தண்தழை உடையை;

    அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;

    மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;

    காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 5

    பேதை அல்லை - மேதையம் குறுமகள்!

    பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,

    ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி,

    தன்சிதைவு அறிதல் அஞ்சி-இன்சிலை

    ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!- 10

    வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர்

    தொலைவில் வெள்வேல் விடலையொடு, என் மகள்

    இச் சுரம் படர்தந் தோளே; ஆயிடை,

    அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென,

    பிற்படு பூசலின் வழிவழி ஓடி 15

    மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை,

    நின்னொடு வினவல் கேளாய்;- பொன்னொடு

    புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி,

    ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்,

    ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த 20

    துய்த்தலை வெண்காழ் பெறூஉம்

    கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே

    உடன்போக்குசென்ற மகளைத் தேடிய செவிலித்தாய்

    ஒரு பெண் மானிடம் அவனைப் பற்றி விசாரிப்பதாக

    இந்த பாடல் அமைகிறது.

    ஆண் மானுடன் வரும் பெண் மானே என் மகளிடம் நீ பேதை பருவம் கடந்து பெரும்பை பருவம் அடைந்து விட்டாய். உன் தோழியுடன் சுற்றாதே. நம் ஊரில் வருத்தும் தெய்வங்கள் இருப்பதால் எங்கும் செல்லாதே என்று கூறினேன். அதைக் கேட்ட என் மகள் பலாச்சுலைகளைத் தின்ற குரங்கு அதன் கொட்டைகளை உதிர்த்து விடும். மலைகள் சூழ்ந்த சிறுகுடிக்குத் தலைவனான காலவன் என்பவனின் மகன் ஆவான். பிடிப்பதற்கு வைக்கப்பட்ட வலையை எண்ணி அதில் தப்பித்து செல்லும் பெண் மானைப் போல ஒரு ஆணுடன் அவள் வனத்தில் சென்று விட்டாள் பசுக்களைக் கவர்ந்து சென்ற வெட்சியாறைத் தேடிச் செல்லும் பரந்த யானையைப் போல நாம் அவளை காணவில்லை. மானே, நீ கண்டாயா? கண்டால் அவர்கள் சென்ற பாதையைச் சொல்வாயாக.

    8. தலைவி கூற்று

    திணை - குறிஞ்சி

    பெருங்குன்றூர் கிழார்

    ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்தகுரும்பி வல்சிப்

    பெருங்கை ஏற்றைக்

    தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின்,

    பாம்பு மதன்அழியும் பானாட் கங்குலும்,

    அரிய அல்ல-மன் இகுளை! 'பெரிய 5

    கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப்

    பலாவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்

    கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு

    வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்,

    படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப் 10

    பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்

    விண்தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,

    எண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது,

    மின்னுவிடச் சிறிய ஒதுங்கி, மென்மெலத்

    துளிதலைத் தலைஇய மணியேர் ஐம்பால் 15

    சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ

    நெறிகெட விலக்கிய, நீயிர், இச் சுரம்

    அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே

    தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்ததாக உள்ளது இப்பாடல்.

    பலா மரங்கள் உள்ள மலையில் ஆண் புலி ஆண் பன்றியைக் கொன்று இழுத்துச் செல்லும் மூங்கில்களின் ஓசை மிக்க இடமும் புன்னையுடன் வாழை மரங்கள் வளர்ந்த இடமாகிய மலையில் உள்ள நீர் உள்ள குழியில் ஆண் யானை அகப்பட்டுக் கொண்டது. அதைக் கண்டு பெண் யானை ஆண் யானையை மேலே கொண்டு வர படிகள் போல மரங்களை அமைக்க முயற்சித்தது.இந்த ஓசை எதிரொலிக்கும் நாட்டில் இருக்கின்றான் தலைவன். அவனிடம் புற்றில் சோறு எடுக்கும் கரடியின் கூரிய நகம் பட்டதால் பாம்பு வலிமை இழக்கும் இரவு நேரத்தில் கூந்தலை பிடரி மறைக்குமாறு பின்புறம் கோதிவிட்ட யாரும் செல்ல இயலாதவாறு வழிகள் இருக்கும் இந்த காட்டு வழிப்பாதையை நீங்கள் அறிவீர்களா என்று கேட்டால் அது நமக்கு எளிய காரியமா?

    9. தலைமகன் கூற்று

    திணை – பாலை

    கல்லாடனார்

    கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,வில்லோர்

    தூணி வீங்கப் பெய்த

    அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை

    செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,

    இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் 5

    உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு

    ஆலி வானிற் காலொடு பாறித்,

    துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,

    நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்

    அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்- 10

    கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய

    தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி

    நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்

    குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,

    ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 15

    துனைபரி துரக்கும் துஞ்சா செலவின்

    எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண்

    ஓங்கிய நல்லில் ஒரு சிறை நிலைஇ,

    பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்

    கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி, 20

    கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,

    பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,

    தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-

    நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,

    அம் தீம் கிளவிக் குறுமகள்

    மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே?

    தலைவன் தன் நெஞ்சுக்கு கூறுவதாக அமைந்தது.

    தேர்ப்பாகனே என்னை விட என் நெஞ்சம் தலைவியிடம் செல்ல வேகமாக முற்பட்டது. அவள் ஊர் எப்படி ஊர் என்றால் அம்பின் நுனியில் பொருந்தியிருக்கும் குப்பியைப் போல அரும்பிய இலுப்பை மரத்தின் பஞ்சு போன்ற துளையுள்ள பூக்கள் காம்பு கழன்று பனிக்கட்டி போல காற்றில் சிதறுண்டு ரத்தம் படிந்த கொழுப்பு என சொல்லும்படி இருக்கும் காட்டு வழியில் உள்ள குடிசைகளைக் கொண்ட சிற்றூராகும்.

    அந்த ஊரில் பெண்கள் உலக்கைகளை உயர்த்தி உரலை குற்றும்போது பாட்டுப் பாடுவர். அந்த பாட்டொலி ஆந்தை ஒலியுடன் மாறி மாறி கேட்கும். இந்த வழியில் சூரியன் மறைந்தாலும் மனம் தளராமல் விரைந்து வரும் தேர் குதிரைகளை உடைய என்னை காட்டிலும் என் நெஞ்சம் தலைவியிடம் சென்று விட்டது.

    என்னை எதிர்பார்க்குத் தலைவியோ வீட்டில் மாலையில் கேட்கும் பல்லியின் ஓசை கேட்டு தலைவன் வரும் நல்ல நிமித்தம் என்று எண்ணி அந்த பல்லியை வாழ்த்துவார்கள். அவளிடம் தான் என் கைகளால் அவள் கண்களைப் புதைத்துக் கூந்தலைத் தொட்டு வளையல் அணிந்த கைகளைத் தழுவும் நினைப்புடன் என் நெஞ்சம் அவளிடம் சென்று விட்டது.

    10. தோழி கூற்று

    திணை – நெய்தல

    அம்மூவனார்

    வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரியமீன்கண் டன்ன

    மெல்லரும்பு ஊழ்த்த,

    முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை,

    புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!

    நெய்தல் உண்கண் பைதல கலுழப் 5

    பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,

    அரிது துற்றனையால். பெரும!- உரிதினின்

    கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு

    குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்

    பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் 10

    மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,

    மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்

    வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே

    தலைவனிடம் விரைந்து மணம் முடிக்கும்படி தோழி கூறுவதாக அமைந்த பாடல் இது

    கடல் பரப்பில் விண்மீன்களைக் கண்டது போல அரும்புகள் பூத்த முல்லை மரத்தில் பறவைகள் தங்கியிருக்கும் கடற்கரைத் தலைவனே. நெய்தல் மலர் போன்ற கண்கள் அழும்படி தலைவியை கள ஒழுக்கத்தில் சந்தித்து பிரிந்து செல்ல நினைத்தாய். அறிய செயலைச் செய்ய நினைத்தவன் செய்ய முடியாமல் துன்பப் படுவதைப் போல உன் செயல் உள்ளது. எனவே பழைய படகுகளை சரி செய்து புதிய வலையால் பிணித்து கடற்கரையில் குவித்த மீன்களைப் பரதவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து தரும் பாக்களைக் கொண்டது தொண்டிப் பட்டணம். அதுபோல நீ அழகு மிக்க தலைவியை மணந்து கொண்டு உன் ஊருக்குச் செல்க.

    11. தலைமகள் கூற்று

    திணை – பாலை

    ஔவையார்

    வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்நெருப்பெனச்

    சிவந்த உருப்பவிர் அங்காட்டு,

    இலையில மலர்ந்த முகையில் இலவம்

    கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த

    அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, 5

    கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்

    எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,

    வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,

    படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,

    மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம் 10

    அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,

    நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து

    அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்

    அழுதல் மேவல வாகிப்

    பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!

    தலைவி கூறுவது

    வெப்பம் மிகுந்த காட்டில் இலவ மரப் பூக்கள் பெண்கள் கார்த்திகை மாதம் ஏற்றும் விளக்குகள் போல வரிசையாகத் தோன்றுகின்றன. குளங்கள் வறண்டுள்ளது. இந்த காட்டின் வழியே சென்ற தலைவன் நம்மையும் அழைத்துச் சென்றிருக்கலாம்.அவ்வாறு சென்றிருந்தால் மணல் மேட்டில் உடல்கள் ஒன்றில் ஒன்று புகுந்து கொள்வது போல சென்றிருப்பாள். என் கண்கள் நீரில்லாத குளத்தை நிறைக்கும் மடையைப் போல கண்ணீர் சிந்தாமல் நிம்மதியாக உறங்கி இருக்கும்

    12. தோழி கூற்று

    திணை - குறிஞ்சி

    கபிலர்

    யாயே கண்ணினும் கடுங் காதலளேஎந்தையும்,

    நிலன்உரப் பொறாஅன்; 'சீறுடி சிவப்ப,

    எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;'

    யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,

    இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; 5

    ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்

    கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை

    விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,

    குறவர் ஊன்றிய குரம்பை புதைய,

    வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் 10

    புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,

    மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்

    நல்வரை நாட! நீ வரின்,

    மெல்லியல் ஓரும் தான் வாழலளே

    தோழி கூறுவது

    வள நாட்டுத் தலைவனே என் தாயும் தந்தையும் தலைவியைக் கண்டிப்பாக வளர்த்து வருகின்றனர். இரு தலை பறவை போல உள்ள நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. நீயோ திணை காக்கும் பெண்களின் கிளியை விரட்டும் ஒசையை கிளியின் குரல் என்று கருதி அழைத்து வந்து அணில்கள் விளையாடும் பலாக் கிளையில் தொங்கும் பழத்தைப் பறிக்க வரும் குறவர்களின் குடிசைகள் மறையும்படி உள்ள வேங்கை மரப்பூக்களைப் புலி என்று பயந்து மூங்கிலை முறித்து உண்ணத் திரியும் யானை வரும் மலைப்பாதையில் தலைவியைச் சந்திக்க வருகிறாய் இரவு நேரத்தில். இதனால் உன் வரவை எண்ணி உயிர் வாழ முடியாமல் வருந்துகிறாள் தலைவி. எனவே விரைந்து அவளை மணந்து கொள்க.

    13. தோழி கூற்று

    திணை - பாலை

    பெருந்தலைச் சாத்தனார்

    தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்முனைதிரை

    கொடுக்கும் துப்பின், தன்மலைத்

    தெறல் அருமரபின் கடவுட் பேணிக்

    குறவர் தந்த சந்தின் ஆரமும்,

    இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் 5

    திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -

    குழியில் கொண்ட மராஅ யானை

    மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,

    வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,

    வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்- 10

    பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,

    விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,

    கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,

    சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,

    நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட 15

    மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,

    கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,

    அழல்நுதி அன்ன தோகை ஈன்ற

    கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்

    நிரம்புஅகன்செறுவில் வரம்புஅணையாத் துயல்வரப், 20

    புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,

    இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த

    வெண்குருகு நரல, வீசும்

    நுண்பல் துவலைய தண்பனி நாளே!

    தோழி சொல்வது

    தென் கடலில் கிடைத்த முத்து மாலையும் பொதிகை மலையில் முருகனை வணங்கிய குறவர்கள் தந்த சந்தன மாலையையும் அணிந்து கொள்பவன் பாண்டியன். அவனின் தளபதியான கோட்டுர் பண்ணி என்பவன் வெட்டப்பட்ட குழியில் பிடிபட்ட யானையைப் பழக்கப்படுத்தும் சிறு பொழுதைத் தவிர வேறு பொழுதை நினைக்காமல் இரவலர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல். அவனுக்கு களவேள்வி பெறும் பயனைத் தரும்.

    அதுபோல நீ தேடி வரும் பொருளும் பலன் தரலாம். அதை தேடுவதற்காகத் தீக்கொழுந்து போல நெற்கதிர்கள் வயலில் தலை அசைக்க கரும்பின் மீதுள்ள நாரை சப்தமாக வாளை வீசி மழைத்துளி சிந்தி தனிமையை உண்டாக்கும் பனி காலத்தில் தலைவியை பிரிந்து வேற்று நாட்டில் உள்ளாய். அதனால் உரிய காலத்தில் பெற வேண்டிய இன்பத்தை இழந்தாய்.

    14. பாணன் கூற்று

    திணை – முல்லை

    ஒக்கூர் மாசாத்தியார்

    அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழிகாயாஞ் செம்மல்

    தாஅய், பலஉடன்

    ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு

    மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய

    அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத், 5

    திரி மருப்பு இரலை புல்அருந்து உகள,

    முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்

    குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்

    பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்

    வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற 10

    கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்

    மாலையும் உள்ளார் ஆயின், காலை

    யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற

    மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,

    செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக் 15

    கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து,

    அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-

    விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்

    கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்

    கார்மழை முழக்குஇசை கடுக்கும்,

    முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே!

    பாணன் கூறியது

    குன்றுகள் சூழ்ந்த காட்டில் செவ்வரக்குப்போல சிவந்த நிலத்தில் காயாவின் பூக்கள் பரவியும் இந்திர கோபப்பூச்சிகள் ஊர்ந்தும் செல்லக்கூடிய காட்சிகள் கவனத்துடன் நீலமணியைக் கோர்த்தது போல இருக்கவும் பெண் மானைத் தழுவிய ஆண் மான் காத்திடவும், பசுக்களிடம் கன்றுகள் நினைத்து குரல் எழுப்பி தொழுவத்தில் புகவும் செய்யும் மாலைப் பொழுதில் தலைவன் வராததால் தலைவி ஏங்கினாள். அவர் வருவாய் எனக் கூறிய பாணனே. அவர் வராமல் நான் எப்படி வாழ்வேன் என தலைவி கேட்டதற்கு யாழை வாசித்து அவளை அழைத்து வரப் புறப்பட்டேன். அந்த சமயம் இடியோசை போல சக்கரங்கள் கற்களில் மோதுமாறு குதிரைகள் இழுத்து வரும் தேரில் தலைவன் வரக் கண்டேன்.

    15. நற்றாய் கூற்று

    திணை – பாலை

    மாமூலனார்

    எம்வெங் காமம் இயைவது ஆயின்மெய்ம்மலி

    பெரும்பூண், செம்மற் கோசர்

    கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த

    பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்

    தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5

    வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்

    செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,

    அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல-

    தோழி மாரும் யானும் புலம்பச்,

    சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் 10

    பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்

    செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி,

    அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்

    துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,

    கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி, 15

    வன்கை எண்கின் வயநிரை பரக்கும்-

    இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,

    குன்ற வேயின் திரண்ட என்

    மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே!

    நற்றாய் கூறியது

    வளர்த்த தாயையும் தோழியையும் தந்தையும் வீட்டையும் மறந்து சென்ற தலைவிக்காக வருந்தி நற்றாய் கூறுகிறாள். மூங்கில் போன்ற தோள் உடைய என் மகள், பாழி என்னும் ஊரை போன்று கட்டுக்காவல் மிக்க தந்தை வீட்டையும் மறந்து தலைவனுடன் புறப்பட்டாள். அவள் சென்ற வழியோ இலுப்பைப் பூவைத் தின்றதுடன் நிலத்தில் புகுதி பறக்க விரைவாக சென்று கொன்றையும் பழத்தை பறிக்கும் கையுடன் கரடிகள் திரியும் பாதையாகும். பயமூட்டும் அந்த பாதையில் சென்ற என் மகளுக்கு கோசர்கள் வாழ்வதும் பாகற்காயைத் தின்னும் தோகை மயில்கள் நிறைந்ததுமான பண்புடைய துளுவ நாட்டு மக்களைப் போல அங்குள்ள ஊர்களின் மக்கள் முகம் அறியாதவர்களா உதவுவார்கள்.

    16. தலைமகள் கூற்று

    திணை – மருதம்

    சாகலாசனார்

    நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்தாதின் அல்லி

    அவிர் இதழ் புரையும்,

    மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்

    நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,

    யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் 5

    தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே,

    கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்

    காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்

    பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,

    'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து 10

    கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,

    'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை?

    நீயும் தாயை இவற்கு?' என யான்தற்

    கரைய, வந்து விரைவனென் கவைஇ,

    களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா, 15

    நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்

    பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து

    அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்

    மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே!

    தலைவி கூறியது

    தாமரை இதழ் போன்ற உள்ளங்கையையும் பவளம் போன்ற வாயையும் மழலை பேச்சையும் கொண்ட நம் மகன் தெருவில் தேரோட்டி விளையாடினான். பொன்னணி அணிந்த கூரிய பற்களைக் கொண்ட ஒருத்தி தலைவனைப் போன்ற முகச்சாயல் கொண்ட யாரேனும் வருகின்றார்களா எனப் பார்த்து என் குழந்தையை நெருங்கி என் உயிரே வருக என மார்பைத் தழுவிக்கொன்று நின்றாள்.

    நான்அங்கே சென்று இவளும் உனக்கு தாய் அல்லவா என்றேன். அப்போது அவள் களவாட வந்த ஒருவன் களவாடிய பொருளுடன் அகப்பட்டு நிற்பது போல முகம் சாய்த்து நாணத்துடன் நின்றாள். அதனால் அவளே உன் பரத்தை என்று உணர்ந்து கூறினாள்.

    17. செவிலி கூற்று

    திணை - பாலை

    கயமனார்

    வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது

    எறியினும்இளந்துணை ஆயமொடு கழங்கு உடன்

    ஆடினும்,

    'உயங்கின்று, அன்னை! என்மெய்'

    Enjoying the preview?
    Page 1 of 1