Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kali Thogai
Kali Thogai
Kali Thogai
Ebook420 pages2 hours

Kali Thogai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இசைத் தமிழால் பாடுவதற்கேற்ப பழங்காலத்தில் எழுந்த நூல்களில் கலித்தொகையும் ஒன்றாக விளங்குகிறது. பரிபாடலும், கலித்தொகையும் இசைப்பாட்டின் தலைநகரங்கள் என்று உரையாசிரி யர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நூலில் நெய்தல் கலியைப் பாடிய ஆசிரியர் நல்லாந்துவனார். இந்த நூலில் மற்ற கலிகளையும் சேர்த்து கலித்தொகையைத் தொகுத்திருக்கின்றார் என்று உரையாசிரியரான நச்சினாகினியார் எடுத்துக் காட்டுகின்றார்.

இந்த நூல் கலி எனவும், கலிப்பா என்றும் கலிப்பாட்டு என்றும், நூற்றம்பது கலி என்றும் பழைய காலத்து உரையாசிரியர்களால் குறிக்கப்படுகின்றது.

ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலி என்று சொல்லப்படும் நான்கு வகை பா வகையுள் இது கலிப்பா என்னும் பாடல்வகையைச் சார்ந்தது.

மருத நில நாகனார் சொல்வதுபடி இந்த நூலை தொகுத்த நல்லந்துவனார் இவருடைய காலத்திலேயே வாழ்ந்தவர் எனவும், நெய்தல் கலியை இவர் தான் திருப்பரங்குன்றத்தில் சங்கப் பேரவையில் பாடி அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கருத முடியும்.

அகத்தையும் புறத்தையும் போல பல்வேறு புலவர்கள் பல சமயங்களில் செய்த நூல்களில் தொகுப்பு அல்ல இந்த நூல். கலிப்பாட்டின் இனிமையை தமிழ் சான்றோர்கள் உணர்வதற்காக ஐம்பெரும் புலவர்களும் ஐவகை திணைகளையும் தழுவிச் செம்மையுடன் பாடிய நூலாகவே இதை கருத வேண்டும்.

கலித்தொகையில் உள்ள செய்யுட்களில் துள்ளல் ஓசை நயமும், உவமைத் திறமும், அறங்களின் செறியும் எடுத்துக் காட்டும் அர்த்தங்களும், திணை சார்ந்த விலங்குகளையும், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்வையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

கலித்தொகை நூல்கள் முன்னிலைப் பேச்சாக அமைந்தவை. பேசக் கூடியவர்களின் பேச்சுடன் நம்மையும் சேர்த்துப் பிணைத்துக் கொள்வது. அவர்களின் உணர்வுடன் நம்மையும் ஒருங்கே இணைத்துக் கொள்வது. அருமையான கனிவையும், நிறைவையும் எழச் செய்பவை.

தமிழின் பெருமை அனைத்தும் கொண்டவை யாக விளங்குகின்றன. கலித் தொகை செய்யுட்கள் காவிய நாடகங்கள் போல நமக்கு முன்பு தோன்றி நம்முடைய மனத்திரையில் இன்ப மயக்கத்தை உண்டாக்குகின்றன.

மக்களின் இயல்பான வாழ்க்கையை விளக்கக் கூடியதாக கலித்தொகை செய்யுட்கள் அமைந் துள்ளன. சங்க காலத்தில் ஐந்து வகை நில மக்களின் வாழ்க்கை நிலைகளையும் சுவை குறையாமல் அழகுடன் சொல்லோவியமாக நிலை நிறுத்துகிறது.

மிகுந்த கற்பனைகளாக பாடாமல் இயற்கையாகத் தோன்றிய செவ்வியல்களை சொல்லோவியமாக காட்டி அமைத்துள்ளனர். கலித்தொகையில் உள்ள எல்லா செய்யுட்களும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை ஓவியமாக்கி காட்டுவதன் மூலம் பிற்காலத்தில் வாழ்பவர்கள் அதை அறிந்து புரிந்து கொள்ளவும் பயன்படும் உயிரோவியங்களாக உள்ளன.

இத் தொகையின் இன்னொரு சிறப்பாவது, இதன் பாலுள்ள ஐந்தில் இரண்டைப் பாடியவர் சேரரும், சோழருமான தமிழரசர் குடியிற் பிறந்தாராக விளங்குவதாகும்.

அவர்தாம் தம் செய்யுட்களில் பாண்டி நாட்டை மனங்கலந்து போற்றிப் பாடியிருப்பது, பாண்டியரின் பண்பு மேம்பாட்டிற்கு நல்ல சான்றாகும். அவர்தம் தமிழ்த் தலைமையின் செவ்வியை உணர்த்துவதுமாகும்.

தமிழறிந்தார் கற்றறிந்து இன்புறுதலின் பொருட்டாகத் தம்முடைய பெரும்புலமையால் இச் செய்யுள்களைச் செய்து வழங்கினோர். 1. பாலை பாடிய பெருங்கடுங்கோ, 2. கபிலர், 3. மருதனிள நாகனார், 4. சோழன் நல்லுருத்திரன், 5. ஆசிரியர் நல்லந்துவனார் என்போர் ஆவர்.

இவர்களின் சீர்த்த செய்யுட்களுக்கு முதலில் உரைகண்டவரோ, உச்சிமேற் புலவர் கொள்ளும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆவர்.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580144206866
Kali Thogai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Kali Thogai

Related ebooks

Reviews for Kali Thogai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kali Thogai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    கலித்தொகை

    Kali Thogai

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பாலைக் கலி

    குறிஞ்சி

    மருதக்கலி

    முல்லைக்கலி

    நெய்தற் கலி

    முன்னுரை

    இசைத் தமிழால் பாடுவதற்கேற்ப பழங்காலத்தில் எழுந்த நூல்களில் கலித்தொகையும் ஒன்றாக விளங்குகிறது. பரிபாடலும், கலித்தொகையும் இசைப்பாட்டின் தலைநகரங்கள் என்று உரையாசிரி யர்கள் கூறுகின்றார்கள்.

    இந்த நூலில் நெய்தல் கலியைப் பாடிய ஆசிரியர் நல்லாந்துவனார். இந்த நூலில் மற்ற கலிகளையும் சேர்த்து கலித்தொகையைத் தொகுத்திருக்கின்றார் என்று உரையாசிரியரான நச்சினாகினியார் எடுத்துக் காட்டுகின்றார்.

    இந்த நூல் கலி எனவும், கலிப்பா என்றும் கலிப்பாட்டு என்றும், நூற்றம்பது கலி என்றும் பழைய காலத்து உரையாசிரியர்களால் குறிக்கப்படு கின்றது.

    ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலி என்று சொல்லப்படும் நான்கு வகை பா வகையுள் இது கலிப்பா என்னும் பாடல்வகையைச் சார்ந்தது.

    மருத நில நாகனார் சொல்வதுபடி இந்த நூலை தொகுத்த நல்லந்துவனார் இவருடைய காலத்திலேயே வாழ்ந்தவர் எனவும், நெய்தல் கலியை இவர் தான் திருப்பரங்குன்றத்தில் சங்கப் பேரவையில் பாடி அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கருத முடியும்.

    அகத்தையும் புறத்தையும் போல பல்வேறு புலவர்கள் பல சமயங்களில் செய்த நூல்களில் தொகுப்பு அல்ல இந்த நூல். கலிப்பாட்டின் இனிமையை தமிழ் சான்றோர்கள் உணர்வதற்காக ஐம்பெரும் புலவர்களும் ஐவகை திணைகளையும் தழுவிச் செம்மையுடன் பாடிய நூலாகவே இதை கருத வேண்டும்.

    கலித்தொகையில் உள்ள செய்யுட்களில் துள்ளல் ஓசை நயமும், உவமைத் திறமும், அறங்களின் செறியும் எடுத்துக் காட்டும் அர்த்தங்களும், திணை சார்ந்த விலங்குகளையும், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்வையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

    கலித்தொகை நூல்கள் முன்னிலைப் பேச்சாக அமைந்தவை. பேசக் கூடியவர்களின் பேச்சுடன் நம்மையும் சேர்த்துப் பிணைத்துக் கொள்வது. அவர்களின் உணர்வுடன் நம்மையும் ஒருங்கே இணைத்துக் கொள்வது. அருமையான கனிவையும், நிறைவையும் எழச் செய்பவை.

    தமிழின் பெருமை அனைத்தும் கொண்டவை யாக விளங்குகின்றன. கலித் தொகை செய்யுட்கள் காவிய நாடகங்கள் போல நமக்கு முன்பு தோன்றி நம்முடைய மனத்திரையில் இன்ப மயக்கத்தை உண்டாக்குகின்றன.

    மக்களின் இயல்பான வாழ்க்கையை விளக்கக் கூடியதாக கலித்தொகை செய்யுட்கள் அமைந் துள்ளன. சங்க காலத்தில் ஐந்து வகை நில மக்களின் வாழ்க்கை நிலைகளையும் சுவை குறையாமல் அழகுடன் சொல்லோவியமாக நிலை நிறுத்துகிறது.

    மிகுந்த கற்பனைகளாக பாடாமல் இயற்கையாகத் தோன்றிய செவ்வியல்களை சொல்லோவியமாக காட்டி அமைத்துள்ளனர். கலித்தொகையில் உள்ள எல்லா செய்யுட்களும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை ஓவியமாக்கி காட்டுவதன் மூலம் பிற்காலத்தில் வாழ்பவர்கள் அதை அறிந்து புரிந்து கொள்ளவும் பயன்படும் உயிரோவியங்களாக உள்ளன.

    இத் தொகையின் இன்னொரு சிறப்பாவது, இதன் பாலுள்ள ஐந்தில் இரண்டைப் பாடியவர் சேரரும், சோழருமான தமிழரசர் குடியிற் பிறந்தாராக விளங்குவதாகும்.

    அவர்தாம் தம் செய்யுட்களில் பாண்டி நாட்டை மனங்கலந்து போற்றிப் பாடியிருப்பது, பாண்டியரின் பண்பு மேம்பாட்டிற்கு நல்ல சான்றாகும். அவர்தம் தமிழ்த் தலைமையின் செவ்வியை உணர்த்துவது மாகும்.

    தமிழறிந்தார் கற்றறிந்து இன்புறுதலின் பொருட்டாகத் தம்முடைய பெரும்புலமையால் இச் செய்யுள்களைச் செய்து வழங்கினோர். 1. பாலை பாடிய பெருங்கடுங்கோ, 2. கபிலர், 3. மருதனிள நாகனார், 4. சோழன் நல்லுருத்திரன், 5. ஆசிரியர் நல்லந்துவனார் என்போர் ஆவர்.

    இவர்களின் சீர்த்த செய்யுட்களுக்கு முதலில் உரைகண்டவரோ, உச்சிமேற் புலவர் கொள்ளும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆவர்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    பாலைக் கலி

    ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து,தேறு

    நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,

    கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி,

    மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள் இனி;

    படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ

    கொடுகொட்டி ஆடும்கால், கோடு உயர் அகல் அல்குல்

    கொடிபுரை நுசுப்பினாள், கொண்ட சீர் தருவாளோ?

    மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

    பண்டரங்கம் ஆடும்கால், பணை எழில் அணை

    மென்தோள்

    வண்டு அரற்றும் கூந்தலாள், வளர் தூக்கு தருவாளோ?

    கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத்தார் சுவல் புரளத்

    தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால்,

    முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

    என ஆங்கு,

    பாணியும் தூக்கும் சீரும் என்று இவை

    மாண் இழை அரிவை காப்ப,

    ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி

    ஒழுக்க நெறியில் நின்று வாழக் கூடிய அந்தணர்களுக்கு மறை நூல்களை கூறினாய். கங்கையை சடையில் தாங்கி முப்புரங்களை எரித்தவன். சொல்லிற்கும் மனதிற்கும் எட்டாதவனாக நின்றாய். நீல மணி போன்ற கழுத்தும் எட்டு கரங்களும் கொண்டவனே நான் சொல்வதை கேட்பாயாக. பறைகள் முழங்க கொட்டி கூத்து ஆடுபவனே அல்குலையும் கொடி இடையும் கொண்ட உமை நீ கூத்தாடும்போது உன் அருகில் நிற்பாளோ?

    பகைவர்களை வென்று அவர்கள் உடலை எரித்த சாம்பலை அணிந்து கொண்டு பாண்டரங்கம் என்ற கூத்தை ஆடும்போது மூங்கில் அழகும் அணை போன்ற தோளும் அழகு கூந்தலும் கொண்ட துர்க்கை தாளத்தை தருவாளோ?

    கொன்றை மாலை தோளில் கிடந்தாட காபாளம் என்ற கூத்தை ஆடுவாய். அப்போது முல்லை அரும்புகளை அணிந்தவள் உமை தாளத்திற்கான பாணியினை தருவாளோ?

    நீ அழித்தல் தொழில் செய்யும்போது உமா தேவி காத்து நிற்க ஆடுவாயோ? உன் வெப்பத்தை அடக்கி ஒரு வடிவம் எடுத்து அன்பற்ற எனக்கு வந்து அருள்புரியவேண்டும் பெருமாளே.

    தொடங்கல் கண் தோன்றிய முதியவன்

    முதலாகஅடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து

    இரத்தலின்,

    மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்

    கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்

    உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்

    சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்

    ஏறு பெற்று உதிர்வனபோல், வரை பிளந்து, இயங்குநர்

    ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை -

    மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,

    இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐய!

    தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு

    என

    மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -

    நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,

    முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;

    இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக்

    கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ

    தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்

    புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;

    இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு

    எனக்

    கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -

    வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்

    தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின்

    அல்லதை;

    என இவள்,

    புன்கண் கொண்டு இனையவும், பொருள் வயின்

    அகறல்

    அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்றுக்

    காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்

    யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்

    தொல்கவின் தொலைதல் அஞ்சி, என்

    சொல்வரைத் தங்கினர், காதலோரே.

    (தன் மனைவியை பிரிந்து பொருள் தேடிச் செல்ல நினைத்தான் ஒருவன். அதனை தோழி அறிந்தாள். அவ்வாறு செல்வதை விடச் செல்லாமல் இருப்பதே நல்லது என்று கூறுகின்றான். அதைக் கேட்ட தலைவன் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறான். அந்த தகவலை தன் மனைவியிடம் சென்று கூறுகின்றான்.)

    பிரம்ம தேவன் போன்ற தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முப்புரங்களையும் எரித்த சிவனின் முகம் போல கதிரவன் தீப்பிழம்பாகி சுடுகின்றான். அந்த சிவன் முக்கண்ணால் பார்க்கவும் முப்புரமும் அழிந்தது போல சூரியனின் வெப்பத்தால் மலைகள் வெடித்துச் சிதறி பாதைகளை அடைத்துக் கிடைக்கின்றன. அந்த வழியிலா நீ செல்ல நினைக்கின்றாய். அத்தகைய கொடிய வழியில் சென்று நீ சாக துணிந்து விட்டாய். நான் சொல்வதை கேட்பாயாக.

    தன்னிடம் இருந்த பொருளை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு நாம் பிறரிடம் சென்று இரந்து நிற்பவர் சிலர். அத்தகையவர்களுக்கு நாம் எதுவும் கொடுக்காமல் இருப்பது இழிவு என்று நினைத்து மலை கடந்து பொருள் தேட முயற்சிக்கின்றாய். அவ்வாறு தேடி வரும் பொருளால் உனக்கு நன்மை கிடைக்குமா? நீ பிரிந்து சென்றால் கற்புடைய உன் மனைவி உயிர் வாழாமல் இறந்து விடுவாள். எனவே, அவள் மார்பைத் தழுவியபடி பிரியாமல் வாழ்வதே உண்மையான செல்வமாகும்.

    நம்மிடம் எதுவும் இல்லை. ஏதேனும் தருக என்று வரக்கூடியவர்களுக்கு ஒன்றும் தராமல் இருந்தால் அது இழிவானது என்று நினைக்கிறாய். அதை விட உன்னை மணந்தவளைப் பிரிந்து இருப்பது இழிவானதாகும்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்து காடுகள் பல சென்று நீ தேடி வருவது ஒரு பொருளாகுமா? வடமீனைப் போல மற்றவர்கள் தொழுது வணங்கும் கற்பு மிக்கவள் உன் மனைவி. அவள் மார்பைத் தழுவி இருப்பதே உண்மையான செல்வம்.

    இவ்வாறு தலைவி கூறியதைக் கேட்டு தலைவன் துடிதுடித்தான். குத்துக்கோலின் ஆணைக்கு அடங்காமல் செல்லும் போர் யானையைப் போன்ற தலைவன் இனிய யாழ் போன்ற ஒலியைக் கேட்டதும் தலைகுனிந்து நின்றான். உன் இயற்கை அழகு அழிந்து விடுமோ? என்று அஞ்சி உன்னை பிரியாமல் நிற்கின்றான்.

    அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்வறன்

    நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் -

    இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்கப்,

    பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்

    விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள்

    இனி;

    'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல

    இடை கொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்,

    ஆயினை;

    கடைஇய ஆற்று இடை, நீர் நீத்த வறும் சுனை,

    அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன.

    'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என,

    ஒல்லாங்கு யாம் இரப்பவும், உணர்ந்து ஈயாய் ஆயினை;

    செல்லு நீள் ஆற்று இடைச், சேர்ந்து எழுந்த மரம் வாடப்,

    புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி - தகைப்பன.

    'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப்

    பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை;

    துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை, அம்மரத்து

    அணி செல, வாடிய அம் தளிர் - தகைப்பன.

    என ஆங்கு,

    யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை;

    ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி,

    மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்

    கானம் - தகைப்ப செலவு.

    (பொருள் தேடி செல்லும் தலைவனைத் தோழி தடுத்து நிறுத்த முயன்றாள். அவன் பிடிவாதமாக இருப்பதால் அவனிடம் தோழி சொல்வது போல அமைந்தது இந்த செய்யுள்.)

    அறம் இன்றி நீ பிரிந்து போவதை நினைத்து அவள் மனம் குன்றி போவாள். நீ செல்லும் பாதை நீண்டதாக இருப்பதால் அதை எண்ணி வருந்துவாய். வளையல் தளரும். கண்களில் நீர் பெருகும். நெற்றியின் ஒளி கெடும். அதையும் மீறி நீ செல்ல விரும்பினால் நான் சொல்வதைச் சற்று கேட்பாயாக.

    நீ அதை மீறிச் சென்றாள் அவள் உயிர் வாழாள். எனவே, என் சொற்களை நீ ஏற்பாயாக. நீ செல்லும் வழியில் நீரற்ற சுனையானது தழையோடு சேர்ந்து வாடிய களர் போல நிலம் வறண்டு கிடக்கும். எனவே, நீ பிரிந்தால் இவள் எழில் வாடும் என்று பலவாறு கூறினோம். நீ அதை அறிந்து அருள் செய்யவில்லை என்றால் நீ செல்லும் பாதையில் பற்றுக் போலாக உள்ள மரமானது பட்டுப்போக கீழே வாடிக் கிடக்கும் பூங்கொத்துக்களைக் காண்பாய். அதனைப் போல நீ பாலை வழியில் செல்வதால் இவள் இறந்து விடுவாள் என்று வேண்டினோம். நீ அதனை ஏற்கவில்லை.

    செல்வதற்கு வேண்டிய வழிமுறைகளை திட்டமிட்டே செய்கின்றாய். நீ செல்லும் வழியில் மரங்கள் அழகு கெட்டு அவற்றின் தளிர்கள் வாடிக் கிடப்பதை காண்பாய் என்று நான் பலவாறாக கூறி வேண்டுபவர்களை அவன் ஏற்கவில்லை.

    எனவே, உன் உறவினர்கள் உண்மையை விளக்கிக் கூற வேண்டும். அதனால் வாட்டமுற்ற இவள் நிலையில் அருள் செய்யக் கூடியவாறு உனக்கு பலவும் காட்டி காட்டு வழியில் நீ செல்வதைத் தடுத்து விடும்.

    வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் –

    சுற்றுஅமை வில்லர், சுரி வளர் பித்தையர்,

    அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர் தாம்

    கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர்,

    துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின்,

    புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,

    வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,

    உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி;

    'காழ் விரி கவை ஆரம் மீவரும் இளமுலை

    போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என்

    தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்

    சூழ்வதை எவன் கொல்? அறியேன்!' என்னும்;

    'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்

    கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார், என்

    ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர்

    உள்ளுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்;

    'நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம்

    கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார், என்

    ஒண் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்

    எண்ணுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்;

    என ஆங்கு,

    'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து!' என, என் தோழி

    அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒருநாள், நீர்,

    பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?

    ஒழிக இனிப் பெரும! நின் பொருள் பிணிச் செலவே.

    வலிமை மிக்க உடலும் சுருண்ட முடியினையும் புலி போன்ற பார்வையையும் மற்றவர்களுக்கு அச்சம் உண்டாக்கும் தோற்றத்தையும் கொண்டவர்கள் கொடுமையான தொழில் செய்யும் பாலை நிலத்தில் வாழும் மறவர்கள். அவர்கள் கையில் வில்லை ஏந்திக் கொண்டு அந்த வழியில் வருபவர்களை எல்லாம் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பர்.

    அந்த மறவர்கள் சற்றும் இரக்க மற்றவர்கள். வழியில் வருபவர்களிடம் பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவர்களையும் விடுவதில்லை. அவர்கள் மீது மனம் இலகுவதும் இல்லை. யாரையும் கொன்று முடிக்கக் கூடியவர்கள் அந்த மறவர்கள். அவர்களுக்கு பயந்து பறவைகள் கூட அந்த வழியில் பறப்பதில்லை. அந்த வழியிலா நீ செல்ல விரும்புகிறாய். அந்த வழி வெப்பக் கொடுமையும் மிக்கது. அப்படி வழியில் பொருள் தேடி வர நினைக்கின்றாய். இதனை என் தோழி அறிந்தாள். அதனால் அவள் நிலை என்னவாகும். பல அணிகலன்களும் முத்தாரமும் அணிந்து அவை மார்பில் அசைந்து ஆடிக் கொண்டிருக்கும்.

    பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரைமாஅல்

    யானையொடு மறவர் மயங்கித்

    தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்,

    இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்

    சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்,

    நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்

    ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,

    கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்?

    நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே;

    கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்,

    புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு,

    அமைவாளோ?

    ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல்,

    பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு,

    அமைவாளோ?

    ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்

    நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ?

    என ஆங்கு,

    பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,

    எந்நாளோ, நெடுந்தகாய்! நீ செல்வது,

    அந்நாள் கொண்டு இறக்கும், இவள் அரும்பெறல்

    உயிரே.

    நீ கடந்த செல்லும் பாலை நிலத்தை நினைத்தால் நெஞ்சம் நடுக்கம் அடைகிறது. அங்கு அகன்ற காலும் பருத்த கால்களும் கொண்ட யானைகள் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கும். தங்களுடைய நெறி தவறானது என்பதை அறியாதவர்கள் மறவர்கள்.

    தாங்கள் செய்வதே சரி என்று பிறருக்கு கொடுமை செய்யும் கொள்கையைக் கொண்டு திரிபவர்கள். யானைகளும் மறவர்களும் இவ்வாறு மனம் போன படி திரிவதால் அங்கு நேரான பாதைகளைக் காண்பது அரிது.

    புதர்கள் மறைத்தும் பாதைகளில் தடை தோன்றியும் கண்களை மயக்கும். எனவே, சரியான பாதையைக் கண்டறிந்து செல்வது எளிதானதல்ல. யானைகளும், மறவர்களும், செய்யக் கூடிய கொடுமைகளிலிருந்து ஒருவர் தப்பிப்பது அரிதாகும். அத்தகைய கொடிய வழியில் பொருள் தேடி செல்வதற்கு நினைக்கின்றாய்.

    அவ்வாறு நீ தேடிக் கொண்டு வரும் பொருளை விட நாங்கள் பல மடங்கு சிறந்தவர்கள் என்பதை நீ மறந்து விட்டாய். கடல் வழியே கப்பல் ஏறி செல்பவர்கள் சிலர். அவர்கள் இடையில் புயல் காற்றில் அகப்பட்டு அழிய நேர்ந்தால் அவர்கள் நிலைமை என்னவாகும். அதுபோன்ற நிலை தான் எமது நிலையாகும். உன்னுடைய செயலால் உண்டாகும் துயரத்திற்கும் அழிவுக்கும் அதுவே காரணமாகும்.

    எம்மை உனக்கு உறவாக்கிக் கொண்டவள் நீ. எனவே, எங்கள் நிலையை கெடாமல் காப்பது உன் கடமையாகும். எங்களின் இச்செயலை நீ கேட்காவிட்டால் நாளும், கோளும் தான் உன் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

    திருவிழா நாளில் மறுநாள் தோற்றங்கள் அழிந்து போகும் நிலையை நீ அறிவாய். அதுபோல கலகலப்புடன் விளங்கும் உன் மனைவி நீ சென்ற பின்பு என்ன ஆவாள்? உயிர் வாழாள்.

    ஆட்சியில் உள்ளவர்கள் நாட்டில் துன்பம் இல்லாமல் காக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு பாழ்பட்டு கதி இன்றி போகும். அதுபோல, நீ பாலை வழியில் சென்றால் அவள் துயரில் வாடுவதற்கு நீயே காரணம் ஆவாய். அதன் பின் அவள் உயிர் நிலைத்திராது.

    பகலில் அழகுடன் மின்னும் தாமரைக் குளத்தில் இரவோடு இரவாக அதன் நீரெல்லாம் வடிந்து போய் விட்டால் மறுநாள் காலையில் அந்த குளத்தில் நிலை எவ்வாறு இருக்கும். அதுபோலவே, நீ சென்ற பின்பு தலைவியின் நிலையும் வாடி அவள் உயிர் விடுவாள் என்பதை நீ அறிவாயாக.

    மரையா மரல் கவர மாரி வறப்ப -வரை ஓங்கு அரும்

    சுரத்து ஆர் இடைச் செல்வோர்,

    சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்

    உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் -

    தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம்

    கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,

    என் நீர் அறியாதீர் போல இவை கூறல்?

    நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்,

    அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு

    துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது

    இன்பமும் உண்டோ, எமக்கு?

    காட்டுப் பசுக்கள் பசியால் மெலிந்து அங்குள்ள கள்ளிச் செடிகளைத் திண்ணும். மழை இல்லாததால் நீர் நிலைகள் வற்றிப் போகும். அத்தகைய காட்டு வழி உயரமான பாறைகள் நிறைந்தது. அந்த வழியில் செல்பவர்களை ஆரலைக் கள்வர்கள் அம்புகளை எய்து கொள்வர்.

    அந்த கள்வர்களும் வெப்பத்தால் உடல் மெலிந்தும் உணவும் நீரும் கிடைக்காது வாடித் துடிப்பர். அந்த வழியில் செல்பவர்கள் படும் துன்பத்தால் விழும் கண்ணீர் தான் அந்த நிலத்தை நனைக்க இயலும்.

    இத்தகைய கொடிய காட்டு வழியை எடுத்துச் சொல்லியும் நீ அறியாதவன் போல செல்ல விரும்புகின்றாய். இது உனக்குத் தகுதியானது அன்று. அன்பின்றி எம்மை வாட்டமுற செய்யாதீர். நீ செல்லும் வழியில் எம்மை அழைத்து செல்வீராக.

    உமக்கு வரும் துன்பத்துடன் இணைந்திருப்பதை விட எமக்கு வேறு இன்பம் ஏதுமில்லை.

    வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறுவான் நீங்கு

    வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்

    கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று

    உசாவுகோ - ஐய! சிறிது;

    நீயே, செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழ நின்

    கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;

    இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பது போல்,

    மை இல் வாள் முகம் பசப்பு ஊருமே;

    நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப்

    புனை மாண் மரீஇய அம்பு தெரிதீயே;

    இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,

    இனை நோக்கு உண் கண் நீர் நில்லாவே;

    நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின்

    செலீஇய

    வலம் படு திகிரி வாய் நீவுதியே;

    இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல்

    இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே;

    என நின்,

    செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,

    தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்

    இன் உயிர் தருதலும் ஆற்றுமோ -

    முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

    வெப்பத்தால் பாலை நிலத்தில் கானல் காற்று பறக்கின்றது. அதனால் உடலும் உள்ளமும் மெலிந்த யானைகள் நீர் ஒட்டம் இன்றி கானல் நீரை நோக்கி ஓடுகின்றன.

    அந்த பாலை நிலத்தை கடந்து பொருள் தேடுகின்றேன் என்கிறாய். நான் ஒன்று சொல்லு கின்றேன். அதைக் கேட்பாயாக. செய்ய நினைத்த செயலை நோக்கி போக நினைத்தாய். வீட்டில் உன் கையால் செய்த வில்லை எடுத்து நாணைப் பூட்டி சரி பார்ப்பாயாக.

    முழு நிலவை மேகம் மறைத்தது போல மாசற்ற இவர் முகத்தில் பாலை பாய்ந்து விட அதன் ஒளி குறைந்து இருண்டு போய் விடும். கை சரட்டையை இறுக்கிக் கட்டிவயவராக படைக்கலன்களை ஆராய்ந்து பொறுக்கிக் கொள்வாயாக. மழையை எதிர்பார்த்து சுனையில் உள்ள நிலங்கள் நீர் சொரிவது போல இவள் கண்கள் நீர் சொரியும்.

    பிரிவை நினைககாமல் தனியாகச் செல்வதை நினைத்து வருந்தாது பொருள் தேடி வர நினைத்தாய். அதற்கான சக்கரப் படையினை நீ துடைப்பதைக் கண்டு காந்தள் மலர்கள் காம்பு அறுந்து விழுவது போல இவள் கை வளையல்கள் கழன்று விழுந்தன.

    உன்னுடைய ஏற்பாடுகளைக் கண்டே இவளுக்கு இவ்வளவு துயரம் என்றால் நீ பிரிந்தால் இவள் என்ன ஆவாள்? நீ போகும்போதே இவள் நலம் கெட்டு இறந்து விடுவாள். உயிரை விட நீ தேடும் பொருள் சிறந்ததா? சொல்வீராக.

    நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை

    வாங்கக்கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல,

    ஞாயிறு

    கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின்,

    உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய, எழில் வேழம்

    வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்ற, நிலம் சேர,

    விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்,

    சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு, ஒரு பொருள்

    சொல்லுவது உடையேன், கேள்மின், மற்று ஐஇய!

    வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும்

    கோல்

    ஏழும், தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம்

    யாழினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?

    மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,

    பிரியும்கால் பிறர் எள்ளப், பீடு இன்றி புறம் மாறும்

    திருவினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?

    புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை

    வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர்

    வௌவும்

    அரைசினும், நிலை இல்லாப் பொருளையும்

    நச்சுபவோ?

    என ஆங்கு,

    நச்சல் கூடாது பெரும இச்செலவு

    ஒழிதல் வேண்டுவல், சூழின் பழி இன்று;

    மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பித்,

    தன் நகர் விழையக் கூடின்,

    இன் உறல் வியன் மார்ப! அது மனும்

    Enjoying the preview?
    Page 1 of 1