Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naaladiyar
Naaladiyar
Naaladiyar
Ebook268 pages1 hour

Naaladiyar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்கள்தான் தற்சமயம் கிடைத்திருக்கின்றன. அதற்கு முன்னால் உள்ள நூல்கள் பெரும்பாலும் அழிந்து விட்டது போலவே தோன்றுகிறது.

இந்த கடைச்சங்க நூல்களை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்று இருவகையாக சொல்வார்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பதினெட்டு நூல்களும் மேற்கணக்கு நூல்களாகும். இவை சங்க இலக்கியங்கள் எனப்படும்.

கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய இலக்கியங்கள் எனப்படும். தமிழ் விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூல், ‘‘மூத்தோர்கள் பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கும்’’ என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்குகள் பழைமையானவை என்பதும், அவை சுமார் 13, 14ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் வந்துள்ளன என்பதும் தெரிய வருகின்றன.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியை அறியாத தமிழர்கள் இல்லை.

இதில் நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பத திருக்குறளையும் குறிக்கும். திருக்குறளைப் போல அறம், பொருள், இன்பம் என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்டது நாலடியார். நாலடியாரின் ஆசிரியர்கள் சமண முனிவர்கள் என்று கூறப்படுகின்றது. அதுபோலவே பாடல்களின் நடையிலும் சில வித்தியாசங்கள் தென்படத்தான் செய்கின்றது.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் முதலில் தோன்றியவை. சங்க இலக்கியங்களில் புலால் உண்ணுதல், கள் உண்ணல், பரத்தையர்களுடன் கூடி மகிழ்ச்சியாக வாழ்தல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

ஆனால், கீழ்க்கணக்கு நூல்கள் அந்த மூன்று செய்கையையும் மறுக்கின்றன. அவை கூடா ஒழுக்கம் என்று எடுத்துரைக்கின்றன. மற்றபடி சங்க இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்கள்தான் கீழ்க்கணக்கு நூல்களிலும் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா என்ற பாட்டு வகைகள் இருந்தாலும், வெண்பாக்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்தான் பெரும் வழக்கில் வந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் வளர்ச்சி தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். அதன் காரணத்தை உணரும¢ விதமாக சொல்லாட்சி, பொருள் வளம், இலக்கண மரபுகள் போன்றவற்றில் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்களில் இருந்து மாறுபட்டவை.

பொதுமக்களுக்கு சேவை செய்பவர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்ற பாடங்களைப் போல இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை படிப்பதன் மூலம் நியாய தர்மங்களை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ள முடியும்.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580144206852
Naaladiyar

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Naaladiyar

Related ebooks

Reviews for Naaladiyar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naaladiyar - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    நாலடியார்

    Naaladiyar

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அறத்துப்பால்

    முதல் அதிகாரம்

    இரண்டாம் அதிகாரம்

    மூன்றாவது அதிகாரம்

    நான்காம் அதிகாரம்

    ஐந்தாம் அதிகாரம்

    ஆறாம் அதிகாரம்

    ஏழாம் அதிகாரம்

    எட்டாம் அதிகாரம்

    ஒன்பதாவது அதிகாரம்

    பத்தாவது அதிகாரம்

    11வது அதிகாரம்

    12வது அதிகாரம்

    13வது அதிகாரம்

    14வது அதிகாரம்

    15வது அதிகாரம்

    16வது அதிகாரம்

    17வது அதிகாரம்

    18வது அதிகாரம்

    19வது அதிகாரம்

    20வது அதிகாரம்

    21ம் அதிகாரம்

    22வது அதிகாரம்

    23வது அதிகாரம்

    24வது அதிகாரம்

    25வது அதிகாரம்

    26வது அதிகாரம்

    27வது அதிகாரம்

    28வது அதிகாரம்

    29வது அதிகாரம்

    30வது அதிகாரம்

    31ம் அதிகாரம்

    32வது அதிகாரம்

    33வது அதிகாரம்

    34வது அதிகாரம்

    35வது அதிகாரம்

    36வது அதிகாரம்

    37வது அதிகாரம்

    38வது அதிகாரம்

    39ம் அதிகாரம்

    40வது அதிகாரம்

    முன்னுரை

    கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்கள்தான் தற்சமயம் கிடைத்திருக்கின்றன. அதற்கு முன்னால் உள்ள நூல்கள் பெரும்பாலும் அழிந்து விட்டது போலவே தோன்றுகிறது.

    இந்த கடைச்சங்க நூல்களை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்று இருவகையாக சொல்வார்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பதினெட்டு நூல்களும் மேற்கணக்கு நூல்களாகும். இவை சங்க இலக்கியங்கள் எனப்படும்.

    கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய இலக்கியங்கள் எனப்படும். தமிழ் விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூல்

    ‘‘மூத்தோர்கள்

    பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்

    கேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கும்’’

    என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்குகள் பழைமையானவை என்பதும், அவை சுமார் 13, 14ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் வந்துள்ளன என்பதும் தெரிய வருகின்றன.

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியை அறியாத தமிழர்கள் இல்லை.

    இதில் நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பத திருக்குறளையும் குறிக்கும். திருக்குறளைப் போல அறம், பொருள், இன்பம் என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்டது நாலடியார்.

    திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை என்பது உலகளவில் ஏற்றுக் கொண்ட உண்மை. திருக்குறளுக்கு சொல்லக் கூடிய பெருமைகள் எல்லாம் நாலடியாருக்கும் உண்டு.

    உண்மையை அடித்துச் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். திருவள்ளுவர் அதைத்தான் இரண்டு அடியிலும், நாலடியார் நான்கு அடியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

    மக்கள் மத்தியில் இரண்டு அடியில் சுருக்கமாக சொன்னது மனப்பாடம் செய்து கொள்வதற்கும், அடுத்தவர்களிடம் எளிதாக பேசுவதற்கும் கேட்பதற்கும் வாய்த்ததாக இருந்தது.

    நாலடியாரின் பாடல்கள் நான்கு அடி என்பதால் இது மக்கள் மத்தியில் அத்தகைய பிரபலமாகவில்லை என்றே தோன்றுகிறது.

    திருக்குறள் வானத்தில் சூரியன் என்றால் நாலடியார் சந்திரன் என்று சொல்லலாம். இதில் சூரியனின் வெளிச்சத்திற்கு முன்பு சந்திரனின் ஒளி மங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    நாலடியாரின் ஆசிரியர்கள் சமண முனிவர்கள் என்று கூறப்படுகின்றது. அதுபோலவே பாடல்களின் நடையிலும் சில வித்தியாசங்கள் தென்படத்தான் செய்கின்றது.

    எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் முதலில் தோன்றியவை. சங்க இலக்கியங்களில் புலால் உண்ணுதல், கள் உண்ணல், பரத்தையர்களுடன் கூடி மகிழ்ச்சியாக வாழ்தல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

    ஆனால், கீழ்க்கணக்கு நூல்கள் அந்த மூன்று செய்கையையும் மறுக்கின்றன. அவை கூடா ஒழுக்கம் என்று எடுத்துரைக்கின்றன. மற்றபடி சங்க இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்கள்தான் கீழ்க்கணக்கு நூல்களிலும் காணப்படுகின்றன.

    சங்க காலத்தில் வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா என்ற பாட்டு வகைகள் இருந்தாலும், வெண்பாக்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்தான் பெரும் வழக்கில் வந்துள்ளது.

    சங்க இலக்கியங்களில் வளர்ச்சி தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். அதன் காரணத்தை உணரும¢ விதமாக சொல்லாட்சி, பொருள் வளம், இலக்கண மரபுகள் போன்றவற்றில் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்களில் இருந்து மாறு பட்டவை.

    பொதுமக்களுக்கு சேவை செய்பவர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்ற பாடங்களைப் போல இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை படிப்பதன் மூலம் நியாய தர்மங்களை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ள முடியும்.

    அன்புடன்

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    அறத்துப்பால்

    கடவுள் வாழ்த்து

    வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்

    கானிலந் தோயாக் கடவுளை – யாம்நிலம்

    சென்னி யுறவணங்கிச் சேர்துமெல் உள்ளத்து

    முன்னி யவைமுடிக என்று.

    மேகத்தில் வானவில் தோன்றும். அந்த வானவில் ஏழு வர்ணங்களைக் கொண்டது. அதுபோல, மனிதனின் பிறப்புத் தன்மை பல வர்ணங்களைக் கொண்டு அமைந்தது.

    பிறந்த பிறகு தான் தான் எங்கு பிறந்தோம். தன்னுடைய எதிர்காலம் எதை நோக்கிச் செல்லு கின்றது என்கின்ற உண்மை தெரியும்.

    இந்தப் பிறப்பு போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் அமைகிறது. எனவே, வாழ்க்கையின் உண்மைத் தன்மை என்ன என்று உணர வேண்டும்.

    இறைவன் திருவடிகளை நிலத்தில் விழுந்து வணங்க வேண்டும். நான் என் உள்ளத்தில் நினைத்ததை எந்தவித துன்பமும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். இடைவிடாமல் தியானித்தால் இறைவன் நமக்கு அருள்வான்.

    துறவற இயல்

    முதல் அதிகாரம்

    செல்வம் நிலையாமை

    அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

    மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்

    சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வமொன்

    றுண்டாக வைக்கற்பாற் றன்று

    ஒருவன் அரும்பாடுபட்டு பொருள் சம்பாதித்து வருகின்றான். வீட்டில் இருக்கும் மனைவி அறுசுவையுடன் சமைக்கின்றாள். அந்த உணவின் முதல் கவளத்தை அன்புடன் கணவனுக்கு ஊட்டி விடுகின்றாள்.

    அந்த அன்பும் மகிழ்ச்சியும் அவன் பெரும் செல்வத்தை சம்பாதித்துக் கொண்டு வரும்போது நிகழ்கின்றது. ஒரு நாள் அவனுடைய வாழ்க்கை திசை மாறுகிறது.

    அவனுடைய வருவாய் படிப்படியாக குறைகிறது. அவன் வறுமை நிலையை அடைகின்றான். இந்த நிலையில் குடும்பத்துடன் உணவுக்கு வழியில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் சென்று அவர்கள் பிச்சை எடுத்து கூழாவது கிடைக்கின்றதா என்று பார்ப்பார்கள்.

    எனவே, செல்வம் என்பது நிலையான இன்பத்தைத் தரக்கூடியது இல்லை. அதனை மனதில் வைத்துக் கொண்டு நான் வசதியாக இருக்கின்றேன் என்று ஆடம்பரமாக வாழ்ந்து விட்டு வறுமை சூழ்ந்தபோது துன்பம் அடைதல் ஆகிய நிலைகளைத் தருவதுதான் செல்வத்தின் இயல்பு.

    துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டும்

    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்

    சகடக்கால் போல வரும்

    மனிதர்கள் செல்வம் கிடைத்து விட்டால் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    ஆனால், செல்வமே வாழ்க்கை அல்ல. செல்வத்தின் தன்மையை ஒருவன் புரிந்து கொண்டால் அவனுக்குத் தெளிவு உண்டாகும்.

    சாலையில் செல்லக் கூடிய ஒரு வண்டியின் சக்கரம் உருண்டு கொண்டு செல்லும். அப்போது அதன் மேல் பாகம் கீழேயும், கீழ் பாகம் மேலேயும் மாறி மாறிச் சுழன்றுச் செல்லும்.

    அதுபோலத்தான் செல்வத்தின் நிலையும், ஒரு முறை தன்னை மேலே தூக்கி விடுவதும், மறுமுறை கீழே தாழ்த்தி விடுவதும் செல்வத்தின் இயல்பு

    அதனால் எருமை கடாக்களைக் கொண்டு நிலத்தில் உழுவதால் கிடைத்த செல்வத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் உண்ண வேண்டும்.

    செல்வம் பெற்றதன் பலன் பிறருக்கு உணவளித்து தானும் உண்பதாகும். அவ்வாறு வாழும்போது நமக்கு இல்லாதபோது அடுத்தவர்களுக்கு உதவுவதும், பிறருக்கு இல்லாதபோது நாம் உதவுவதும் என்ற ஒரு உயர்ந்த தன்மை உண்டாகும்.

    யானை யெருத்தம் பொலியக் குடைநிழ ற்கீழ்ச்

    சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை

    வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட

    மனையாளை மாற்றார் கொள

    பழைய காலங்களில் மன்னராட்சி இருந்து வந்தது. மன்னர்கள் கடவுள்களைப் போல மக்களால் போற்றப்பட்டும் வணங்கப்பட்டும் வந்தார்கள்.

    ஆயிரக்கணக்கான மக்களுக்கு தலைவனாக இருந்து எந்த தடையும் இல்லாமல் அரசர்கள் செங்கோல் செலுத்தி வந்தார்கள்.

    அவ்வப்போது மன்னர்கள் யானையின் முதுகில் அமர்ந்து கொண்டு நகர் உலா வருவார்கள். அப்போது அவர்களுக்கு இரண்டு புறமும் வெண்சாமரம் வீசுவார்கள்.

    அவர்களுடைய தலை வெயில் பட்டோ, மழை பட்டோ வருத்தம் அடையக் கூடாது என்று வெண்குடை தாங்கி வருவார்கள்.

    நான்கு வகை படைகளும் அரசர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இவையெல்லாம் மன்னர்கள் செய்த நல்வினையின் காரணமாக அ¬ந்ததாகும்.

    அவர்களின் தீவினை எதிரி படையெடுத்து வரும்போது தெரியும். அப்போது அவர்கள் தங்களுடைய செல்வத்தை இழந்து திருமணம் செய்த மனைவியை பகைவரிடம் இழந்து தங்கள் சுக வாழ்க்கையை இழந்து நிலை குலைந்து வறுமை நிலையில் வாழ வழியில்லாமல் போய் விடுவார்கள்.

    நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து

    ஒன்றின வொன்றின வல்லே செயின் செய்க

    சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

    வந்தது வந்தது கூற்று

    உடம்பும் உயிரும் வெவ்வேறானவை. இதில் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருந்தால்தான் மனிதன் என்று சொல்வார்கள்.

    பிரிந்து விட்டால் உடலுக்கு வேறு பெயரும், உயிருக்கு வேறு பெயரும் வந்து விடும். இவை இரண்டும் கூடி வாழும்போது மனித வாழ்க்கை சமூகத்தில் நடைபெற்று வருகின்றது.

    ஒவ்வொரு நாளும் மனிதன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவோம் என்று நினைக்கின்றான்.

    அவ்வாறு நினைக்கக் கூடிய மனிதனுடைய நினைவுக்குத் தடை விதிக்க எமன் நினைக்கின்றான். அதனால் அவன் கோபத்துடன் இந்த மனிதனை நோக்கி வருகின்றான்.

    அவன் உடலையும் அவன் பூமியில் சம்பாதித்த உடமைகளையும் விட்டு உயிரை மட்டும் கைப்பற்றிக் கொண்டு மேலே செல்கின்றான்.

    அந்த நேரம் எமனிடம் தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும், தான் உழைத்த சம்பாதித்த சொத்தையும் எடுத்துக் கொண்டு வருகின்றேன் என்று சொன்னால் அதனை எமன் கேட்பதில்லை.

    அவனுக்கு வேண்டிய உயிரை மட்டும் பறித்துக் கொண்டு சென்று விடுவான். எனவே, செல்வத்தைக் கொண்டு பூமியிலேயே அறங்களை செய்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

    என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

    பின்னாவ தென்று பிடித்திரா – முன்னே

    கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்

    தொடுத்தாறு செல்லும் சுரம்

    பூமியில் வாழக் கூடிய அனைத்து உயிர்களும் உணவு தேடுவதற்காகவே வாழ்கின்றன. அவை கடமையாகவும் இருக்கின்றன.

    விலங்குகள் தனக்கு தேவையான உணவை உண்டு விட்டு தன் கடமையை முடித்துக் கொள்ளுகின்றன. ஆனால் மனிதன் தன்னுடைய வயதான காலத்தில் தனக்கு உதவும் என்று பொருட்களை சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொள்ளுகின்றான்.

    தான் சம்பாதித்த பொருள் எல்லாம் தன்னை விட்டு போய் விடக் கூடாது என்று இறுகப் பிடித்து வைத்துக் கொள்கின்றான்.

    இளமையில் கட்டுப்பாட்டுடன் இருந்து முதுமையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இடுகிறான்.

    உணவு உண்ண வழி இல்லாமல் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு உதவ மறுக்கின்றான். ஆனால், முதுமைக் காலம் வரை அவன் வாழ்க்கை நீடிக்குமா? என்று சொல்ல முடியாது.

    எமன் கொடுமையானவன். அவன் பாசக் கயிறை எடுத்துக் கொண்டு எப்போது எவரிடம் போவான் எவருக்கும் தெரியாது.

    ஆனால், மற்றவர்களுக்கு உதவி வாழ்பவன் இந்த மரணம் என்ற கொடும் பாலை நிலத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளுகின்றான்.

    இழைத்தநாள் எல்லை யிகவா பிழைத்தொரீஇக்

    கூற்றம் குதித்துயர்ந்தார் ஈங்கில்லை – ஆற்றப்

    பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்

    தழீஇம் தழீஇம் தண்ணம் படும்

    உலகில் வாழும் மனிதர்களுக்கு இடையே ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கிறது. இதில் பெரும் செல்வத்தை சேர்த்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக காட்சி தருகின்றனர்.

    ஏழைகளை அவர்களைப் பார்த்து தங்களால் இயலாதது அவர்களுக்கு கிடைத்துள்ளது என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்.

    உடலும் உயிரும் ஒன்றாக கூடியிருக்கும் வரை வாழ்க்கையின் அளவீடுகள் அந்த அளவு தான் அனைவரும் நினைக்கின்றார்கள்.

    காலக் கணக்கு என்னவென்றும் தான் சேர்த்து வைத்திருந்த பெரும் செல்வம் எமன் வரும்போது தனக்கு உதவுமா-? என்றும் யாருக்கும் தெரியாது.

    இன்று தவறு செய்பவர்கள் உயர் அதிகாரி களிடம் பணத்தைக் கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம்.

    ஆனால், எமன் வரும்போது அனைத்து செல்வத்தையும் கொடுத்து என்னை விட்டு விடு என்று சொன்னாலும் அவன் கேட்பதில்லை. அவனை மீறி இந்த உலகத்தில் உயிர் பிழைத்தவர் எவரும் இல்லை.

    அவன் வந்த மறுநாள் வீட்டில் இழவு வாத்தியம் அடிக்கப்படும். அவ்வளவுதான் வாழ்க்கை. எனவே, நிலையில்லாத வாழ்க்கையில் நிலையில்லாத செல்வத்தை அறம் செய்வதற்கு பயன்படுத்துங்கள்.

    தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

    கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் – ஆற்ற

    அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

    பிறந்தும் பிறவாதார் இல்

    எமன் ஒரு காலக் கணக்கை வகுத்துள்ளான். நாம் ஒவ்வொரு நாளும் நாட்காட்டியில் தேதிகளையும் கடிகாரத்தில் நேரத்தையும் பார்க்கின்றோம்.

    எமன் ஒவ்வொருடைய வாழ்நாளையும்

    Enjoying the preview?
    Page 1 of 1