Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pari Paadal
Pari Paadal
Pari Paadal
Ebook219 pages1 hour

Pari Paadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பரிபாடல் என்னும் இந்த தொகை நூலில் 1, 2, 3, 4, 13, 15 பாடல்கள் எட்டும் திருமாலைப் பற்றி பாடப்பட்டுள்ளது. செவ்வேளைப் பற்றி 5, 8, 9, 14, 17, 18, 19, 21 ஆகிய 8 பாடல்கள் பாடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 பாடல்களும் வையை நதியைப் பற்றி பாடப்பட்டிருக்கின்றது. கடைச் சங்க காலத்தை ஒட்டிய காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

மற்ற சங்க நூல்களைப் போல இல்லாமல் பரிபாடலில் வடமொழி புராண கதைகள் வழிபாட்டு மரபுகள் போன்றவை மிகுதியாக காணப்படுகிறது.

இது தமிழர்களுக்கும் வடமொழியைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ள தொடர்பு பல ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை காட்டும் விதமாக உள்ளது. தமிழகத்தில் பிற்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலை முன்னோடியாகவும் கூறலாம். இந்த நூல் தமிழர்களின் இசைத் திறத்தை பறைசாற்றும் விதமாக அமைந்த நூலாகும்.

இந்த நூலில் உள்ள பன்னிரு பாடல்களும் பாலை யாழ் என்னும் வகையைச் சேர்ந்தது. தொடர்ந்து வரும் 5 பாடல்களும் நோதிரம் என்னும் பண் வகையிலும் இறுதியாக வரக்கூடிய நான்கு பாடல்களும் காந்தாரம் என்னும் பண் வகையையும் சேர்ந்தது.

இறுதிப் பாடலில் பண் தெரியவில்லை. ஆயினும் இதுவும் காந்தாரம் என்னும் பண் வகைக்குக்கு உரியது என்றும் கூறுவர். இதுபோன்ற முத்தமிழும் மணக்கும் இந்த பரிபாடலில் படிப்பவர்கள் இலக்கிய இன்பம் பெறுவார்கள் என்பது திண்ணம்.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580144206869
Pari Paadal

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Pari Paadal

Related ebooks

Reviews for Pari Paadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pari Paadal - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    பரிபாடல்

    Pari Paadal

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan
    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திருமால் (1)

    திருமால் (2)

    திருமால் (3)

    திருமால் (4)

    செவ்வேள் (5)

    வையை(6)

    வையை(7)

    செவ்வேள்(8)

    செவ்வேள்(9)

    செவ்வேள்(10)

    வையை(11)

    வையை(12)

    திருமால் (13)

    செவ்வேள்(14)

    திருமால் (15)

    வையை (16)

    செவ்வேள்(17)

    செவ்வேள்(18)

    செவ்வேள்(19)

    வையை (20)

    செவ்வேள் வாழ்த்து(21)

    வையை (22)

    முன்னுரை

    பரிபாடல¢ என்னும் இந்த தொகை நூலில் 1, 2, 3, 4, 13, 15 பாடல்கள் எட்டும் திருமாலைப் பற்றி பாடப்பட்டுள்ளது. செவ்வேளைப் பற்றி 5, 8, 9, 14, 17, 18, 19, 21 ஆகிய 8 பாடல்கள் பாடப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 9 பாடல்களும் வையை நதியைப் பற்றி பாடப்பட்டிருக்கின்றது. கடைச் சங்க காலத்தை ஒட்டிய காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

    மற்ற சங்க நூல்களைப் போல இல்லாமல் பரிபாடலில் வடமொழி புராண கதைகள் வழிபாட்டு மரபுகள் போன்றவை மிகுதியாக காணப்படுகிறது.

    இது தமிழர்களுக்கும் வடமொழியைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ள தொடர்பு பல ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை காட்டும் விதமாக உள்ளது.

    தமிழகத்தில் பிற்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலை முன்னோடியாகவும் கூறலாம். இந்த நூல் தமிழர்களின் இசைத் திறத்தை பறைசாற்றும் விதமாக அமைந்த நூலாகும்.

    இந்த நூலில் உள்ள பன்னிரு பாடல்களும் பாலை யாழ் என்னும் வகையைச் சேர்ந்தது. தொடர்ந்து வரும் 5 பாடல்களும் நோதிரம் என்னும் பண் வகையிலும் இறுதியாக வரக்கூடிய நான்கு பாடல்களும் காந்தாரம் என்னும் பண் வகையையும் சேர்ந்தது.

    இறுதிப் பாடலில் பண் தெரியவில்லை. ஆயினும் இதுவும் காந்தாரம் என்னும் பண் வகைக்குக்கு உரியது என்றும் கூறுவர். இதுபோன்ற முத்தமிழும் மணக்கும் இந்த பரிபாடலில் படிப்பவர்கள் இலக்கிய இன்பம் பெறுவார்கள் என்பது திண்ணம்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    பரிபாடல்

    திருமால் (1)

    ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை

    தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

    மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்

    சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,

    வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

    எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

    விரிமலர் புரையும் மேனியை; மேனித்

    திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

    தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

    எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10

    சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

    ஏவல் உழந்தமை கூறும்,

    நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

    அமர் வென்ற கணை

    இணைபிரி அணி துணி பணி எரி புரை

    விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

    நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு

    கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி

    நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

    தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

    எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20

    றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு

    இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

    மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி

    மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

    உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25

    போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்

    சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்

    உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.

    'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,

    செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

    இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!

    தெருள நின் வரவு அறிதல்

    மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:

    அன்ன மரபின் அனையோய்! நின்னை

    இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35

    அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

    பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை

    மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்

    திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

    விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

    அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;

    திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்

    மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;

    அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்

    திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

    ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்

    மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;

    நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்

    புலமும், பூவனும், நாற்றமும், நீ;

    வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

    நிலனும், நீடிய இமயமும், நீ.

    அதனால்,

    'இன்னோர் அனையை; இனையையால்' என,

    அன்னோர் யாம் இவண் காணாமையின்,

    பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55

    மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

    நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!

    நின் ஒக்கும் புகழ் நிழலவை;

    பொன் ஒக்கும் உடையவை;

    புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

    எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;

    மண்ணுறு மணி பாய் உருவினவை;

    எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,

    ஆங்கு,

    காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை

    யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,

    ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-

    வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68

    திருப்பாற்கடலில் பாம்பை பாயாக விரித்து பள்ளி கொண்ட நிலையில் காணப்படுபவன் திருமால். ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷன், அவனுக்கு நிழலாகவும் விளங்குகின்றான்.

    இந்த ஆதிசேஷனின் சீற்றமுள்ள தலைகள் பார்ப்பவர்கள் கண்களுக்கு தீயை உமிழ்ந்தபடி சீறிக் கொண்டிருப்பது அச்சம் தரும்.

    ஆனால், திருமகள் உறையும் மார்பைக் கொண்ட இந்த திருமாலவன், சங்கைப் போன்ற மேனியும், யானைக் கொடியும், வளைந்த கலப்பை என்னும் படையும், ஒற்றை கொழையும் கொண்ட பல தேவனாக விளங்குகின்றான்.

    தாமரைப் பூ போன்ற கண்களையும் காயாம்பூவைப் போன்ற மேனியையும் திருமகள் விரும்பி குடிகொண்ட மார்பினையும் அந்த மார்பில் மணிகளால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து கொண்டு சிறப்புற்று இருக்கும் திருமாலை நீல மலை ஒன்று நெருப்பு சூழ்ந்து கொண்டது போன்ற தோற்றத்துடன் விளங்கும் தங்கத்தால் ஆன உடையும் அணிந்தவனாக கருடக் கொடியைக் கொண்டு திகழ்பவனே.

    இந்த உலகம் அனைத்தும் உன் ஆணையின் படியே இயங்குகின்றது. உனது நாவன்மை அந்தணர்களின் வேதங்களில் உண்மைப் பொருளாக விளங்குகிறது.

    அந்த மறைகள் உன் சிறப்புக்களையும் பெருமை களையும் எடுத்து இயம்புகின்றது. உன்னுடன் போர் புரிந்து வென்று விடலாம் என்று எண்ணி வந்தால், அவர்களின் ஆற்றல் கெட்டு அழியும்.

    காரணம். அவர்களுக்கும் ஆற்றல் தந்த ஆண்டவன் அல்லவா நீ. நான்முகனுக்கும் மன் மதனுக்கும் நீதானே தந்தை. நன்கு ஒளி வீசும் அணிகலன்களை சூடி மகிழ்ச்சி அடையும் ஆண்டவனே உன் வரலாற்றை முழுமையாக அறிந்தவர் யார் உள்ளார்.

    உன்னை யாரால் முழுமையாக ஆராய்ந்து விட முடியும். ஒப்பற்ற முனிவர்களுக்கும் அது முடியாத செயல் அல்லவா-? அப்படிப்பட்ட உன்னுடைய சொல்ல முடியாத சிறப்புகளை சொல்ல முயற்சிக்கும் எளியவனாகிய என்னால் எப்படி உன்னை முழுமையாக சொல்லி விட முடியும். தாமரைப் பூவில் தோன்றிய திருமகளை உன் மார்பில் நீ அணிந்து கொண்டவன்.

    உயர்வான ஆற்றல் அனைத்தும் உள்ளவன். உன் மீதுள்ள அளவற்ற அன்பால் உன் பெருமையை எடுத்துரைப்பதை பொருள் அற்றவை என்று நீ ஒதுக்கி விட வேண்டாம்.

    நல்ல ஒழுக்கத்தில் சிறந்துள்ள அந்தணர்களால் காத்து போற்றப்படுகின்ற சிறந்த அறம் உன்னு டையது. உன் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு நீயே பேரன்பாக விளங்குகின்றாய்.

    மக்கள் மீது உனக்கு உள்ள அன்பால், நீ பகைவர்களுக்கு மறக்கருணை புரிகின்றாய். அதனால் மண்ணுலக மக்களின் பகைவர்கள் அழிகின்றனர். அந்த அழகு மிக்க வானத்தில் நீயே சூரியனாகவும், குளிர்ந்த நிலவாகவும் விளங்கி இந்த உலகத்திற்க ஒளி தருகின்றாய். நீயே ஐந்து திருமுடி களைக் கொண்ட சிவபெருமானாகவும் ஆகி அழிக்கும் தொழிலை செய்கின்றாய். மக்களை மேன்மையுறச் செய்யும் வேதமாகவும் நீயே விளங்குகின்றாய்.

    உன் மகனாகிய நான்முகன் மூலம் படைப்புத் தொழிலையும் நீயே இயக்குகின்றாய். இந்த உலகம் வளம் பெறச் செய்யும் மேகமும் நீயே.

    மேலே பறந்த வானமும் நீயே. ஒப்பற்ற உலகமான நிலமும் நீயே. நீண்ட பெரிய இமய மலையாக விளங்குபவனும் நீயே.

    உன்னை சிறிய சிறிய பொருட்களை உவமையாக கூறி யாராலும் விளக்கி விட முடியாது. அப்படி உன்னை உவமையால் விளக்க தக்கவர்கள் யாரும் இல்லை.

    உன்னால் செய்யப்பட்ட அழகுமிக்க சக்கரப் படையை வலது கையில் தாங்கி இருப்பவனே, இந்த உலகத்து உயிர்களுக்கு முதன்மை பெற்றவனே. நீ பெரும் புகழுடன் சிறப்புற்று விளங்கி உனக்கு நிகராக நீயே இருக்கின்றாய்.

    உனது புகழும், உனது சிறப்பும் விளங்க உவமை கூற வேண்டுமென்றால் அதற்கு உவமையாக நீயே தான் இருப்பாய். பொன்னாடை அணிந்தவனே, கருடக் கொடியுடையவனே, சங்கையும், பகைவரையும் அழித் தொழிக்கும் ஆழி படையினையும் உடையவனாக நீயே உள்ளாய்.

    உனது மணி போன்ற ஒப்பற்ற நிலத்தையும் பெரும் புகழையும், அழகிய மார்பையும் கண்டு உலகம் எல்லாம் ஒளி வீசுகின்றது. உண்மையை கூறுகின்ற ஒப்பற்ற வேதங்களை கூறும் கவிஞனே. என்னுடைய பெரும் சுற்றத்தாருடன் உம்முடைய திருவடிகளை பணிந்து என்றும் சிறப்புற்று உன் திருவடிகள் விளங்குக என்று வணங்கி நிற்கின்றோம். எமக்கு அருள்புரிந்தருள்க.

    திருமால் (2)

    பாடியவர் : கீரந்தையார் பண் : பாலையாழ்

    தொல் முறை இயற்கையின் மதியொ

    ... ..... ... மரபிற்று ஆக,

    பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,

    விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,

    கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

    உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

    உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;

    செந் தீச்சுடரிய ஊழியும்; பனியொடு

    தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

    உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

    மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

    உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;

    நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,

    மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய

    செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

    கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

    ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு

    ஊழி யாவரும் உணரா;

    ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

    நீயே, 'வளையொடி புரையும் வாலியோற்கு அவன் 20

    Enjoying the preview?
    Page 1 of 1