Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muraipadi Kural Padi - XI Std
Muraipadi Kural Padi - XI Std
Muraipadi Kural Padi - XI Std
Ebook107 pages37 minutes

Muraipadi Kural Padi - XI Std

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாணவ மணிகளே!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, அருமையிலும் அருமையான 240 திருக்குறள்களைத் தெரிவு செய்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தமிழ் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளார்கள். ஆகவே தொடக்கத்திலிருந்தே குறள் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்வுக்காகப் படிப்பதோடு அல்லாமல் குறள் நெறிகளைக் கற்று அதன்படி நின்று ஒழுக முயலுங்கள். வாழ்க்கை சரியான பாதையை நோக்கிச் செல்லும். அதனால் உங்கள் வாழ்க்கை ஒளிரும்; உங்களைச் சுற்றியுள்ள சமுதாயம் ஓங்கி ஒளிரும்! அதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும் என உறுதியாக நம்புகிறேன்!

சீனி.வரதராஜன்

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580176710785
Muraipadi Kural Padi - XI Std

Read more from Srini.Varadarajan

Related to Muraipadi Kural Padi - XI Std

Related ebooks

Reviews for Muraipadi Kural Padi - XI Std

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muraipadi Kural Padi - XI Std - Srini.Varadarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முறைப்படி குறள் படி - மேல்நிலை முதலாம் ஆண்டு

    Muraipadi Kural Padi - XI Std

    Author:

    சீனி.வரதராஜன்

    Srini.Varadarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srini-varadarajan

    பொருளடக்கம்

    நூலாசிரியர் அறிமுகம்

    1. குறியீடு விளக்கம்

    2. திருக்குறள் பாடப் பகுதி விளக்கம்

    3. இலக்கணம்

    4. நூல் மதிப்பீடு

    நூலாசிரியர் அறிமுகம்

    சீனி.வரதராஜன் மின்னியல் பிரிவில், பொறியியல் இளையர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு நிலையில் பொறியாளராகப் பணியாற்றி, நிறைவாக மனிதவள மேம்பாடுப் பிரிவில், கூடுதல் தலைமைப் பொறியாளர் என்ற நிலையில் பிப்ரவரி 2008இல் பணி நிறைவு அடைந்தவர்.

    தம் பணிக்காலத்தில் அதிமின்அழுத்தத் துணைமின் நிலையங்களை நிறுவதிலும், மின்வாரியப் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் துறையிலும் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

    1993ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பயிற்சி பெற இந்திய அரசால் இவர் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மின்தொடர் அமைப்பு நிறுவனத்தில் சுமார் 2 மாத காலம் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.

    இந்திய அளவில் முதன்முதலில் 2002ஆம் ஆண்டு அனைத்து மின்அழுத்தத் துணைமின் நிலையங்களுக்கும் தரப்படுத்திய வரைபடம் தயாரித்துத் தொகுப்பு ஏடு வெளியிடவும், தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகம் வெளியிட்ட மின்பொறியாளர் கையேட்டிற்கு துணைமின் நிலைய அமைப்பு பற்றிய தரவுகள் வழங்கியும் பங்களிப்பு செய்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சீரிய முறையில் பணியாற்றியதற்காக வாரியத் தலைவரிடமிருந்து, சிறந்த பொறிஞர் சான்றிதழும், வெள்ளிப் பதக்கமும் பெற்றுப் பாராட்டு பெற்றவர்.

    ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ‘ஓமன் மின் தொடரமைப்புக் குழுமம்’ என்ற அரசு நிறுவனத்திற்கு அதிமின் அழுத்த தொடரமைப்பு மற்றும் துணைமின் நிலைய ஆலோசகராக 2008 முதல் 2012 வரை 4 ஆண்டு காலம் பணியாற்றியவர்.

    திருக்குறளின்பால் மிகுந்த ஈடுபாடு உடையவராதலால், எழுத்துப் பணியை மேற்கொண்டு, ஜூலை 2016இல் குறளை அடிப்படையாகக் கொண்டு பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு? என்ற நூலை எழுதி, வெளியிட்டார். ஏப்ரல் 10, 2019இல் உறவைக் காக்க உயில்! உயிரைக் காக்க உறுப்பு! என்ற நூலை எழுதி, சந்தியா பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

    முதல் நூல் பொருளீட்டும் இளைஞர்களிடத்தும் இரண்டாவது நூல் மூத்த குடிமக்களிடத்தும் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இப்போது மாணவர்களின் நலனைக் கருதி, இந்நூலை எழுதியுள்ளார். இந்த முயற்சியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறுவதோடல்லாமல் இளைய தலைமுறையாகிய மாணவர்களுக்கும், அரசுப்பணித் தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கும் இந்நூல் பயன்படும் என்பது அவரது நம்பிக்கை.

    1. குறியீடு விளக்கம்

    மூலம்: ‘மூலம்’ என்பது ஏழு சீர் மூலம்; முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டதாக அமையப்பெற்ற குறள் வெண்பா. அதாவது, மூல நூலில் உள்ளபடி.

    எடுத்துக்காட்டு:

    கற்க கசடறக் கற்பவை கற்றபி

    னிற்க வதற்குத் தக - 0391

    படிக்க: இது படிக்க; எளிதில் படிக்கவும் மனப்பாடம் செய்யவும் ஏற்ற வகையில் சீர் பிரித்து அமையப்பெற்ற குறள் வெண்பா.

    எடுத்துக்காட்டு:

    கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    மாணவ மணிகளே!

    வள்ளுவர் புணர்ச்சி விதிகளைக் கையாண்டு எழுதப்பட்ட குறட்பாவை பிரித்து எழுதுவது முறையன்று. ஆகவே மூலத்தில் உள்ளபடியே குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில் குறளைப் புரிந்து படித்து குறிப்பாக நீங்கள் மனப்பாடம் செய்வதற்கு வசதியாக சந்திப் பிரித்து எழுதுதல் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி புணர்ச்சிவிதிபடி சொற்கள் எப்படிச் சேர்க்கின்றன; எப்படிப் பிரிகின்றன என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். எனவே உங்களின் வசதிக்காகவே மேற்சொன்ன இரண்டு அமைப்பிலும் அனைத்து குறட்பாக்களும் எழுதப்பட்டுள்ளன.

    TRANSLITERATION: ‘Transliteration – ஒலிமாற்றம்’ என்பது ஒரு மொழியை இன்னொரு மொழியின் எழுத்துக்களில் எழுதுவது.

    மாணவ மணிகளே!

    உங்கள் தமிழ்ப் பெயரை ஆங்கில எழுத்துக்களில் எழுதி உச்சரிக்கிறீர்கள் அல்லவா? அதுபோல் குறளை ஆங்கில எழுத்துக்களில் எழுதி உச்சரிப்பது; ஏன் அப்படி எழுதவேண்டும்? இவ்வாறு எழுதுவதால் ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கும், குறளைக் கற்க விரும்பும் வெளிநாடுவாழ் குழந்தைகளுக்கும், குறள் ஆர்வலர்களுக்கும் ‘Transliteration’ குறளை உச்சரிப்பதற்கு ஓரளவு துணை செய்யும் என்ற நோக்கமே!

    பொருள் கொள்ளும் அமைப்பு: குறட்பொருளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குறளின் ஏழு சீர்கள் மாற்றி தொடுக்கப்பெற்றது.

    எடுத்துக்காட்டு: கற்பவை கசடுஅறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க

    பதவுரை: குறள் ஈரடி வெண்பாவின் சொற்றொடரைப் பதம் பிரித்துப் பொருள் கூறப்பெற்றது.

    புரிதல்: பதவுரையை ஒட்டி தெளிவடைந்து புரிதலாக அறியப்பட்டது; மற்றும் இலக்கிய ஒப்பீடு, குறள் சார்ந்த விளக்கம், முதலியவைகளோடு அமையப்பெற்றது.

    Understanding: ஆங்கிலப் புரிதல் உரை.

    2. திருக்குறள் பாடப் பகுதி விளக்கம்

    பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு

    தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய

    சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

    வல்லார்ஆர் வள்ளுவரல் லால்

    – திருவள்ளுவமாலை - அரசில் கிழார்கருத்துரை:

    பொருள்: விரிவு பட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களை எல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சொல்லி விளங்க வைத்தலில் வல்லவர் வள்ளுவர் அன்றி வேறு யார்?

    வாழ்வியல் – இயல் 3

    தமிழ் பாட நூல் பக்கம் 77 முதல் 80 முடிய

    Enjoying the preview?
    Page 1 of 1