Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marava Mannin Meetpar Punithar Arulanandar
Marava Mannin Meetpar Punithar Arulanandar
Marava Mannin Meetpar Punithar Arulanandar
Ebook209 pages1 hour

Marava Mannin Meetpar Punithar Arulanandar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் தி பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் மறவர் சாதி இளவரசர் தடியத் தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் தனது முதல் மனைவியை வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பி விட்டான். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருத்தியான காதலி என்பவள் தன் மாமாவான கிழவன் சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு, காரணம் கிறிஸ்தவம் என்றும், மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது. கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய ஓரியூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது... என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே. பெப்ரவரி 4, 1693 இராமநாதபுரம் மாவட்டம் ஓரியுரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். இன்னும் பல்வேறு தகவல்கள் இந்நூலில் உள்ளன. வாசித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580158309051
Marava Mannin Meetpar Punithar Arulanandar

Read more from Madurai Ilankavin

Related to Marava Mannin Meetpar Punithar Arulanandar

Related ebooks

Related categories

Reviews for Marava Mannin Meetpar Punithar Arulanandar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marava Mannin Meetpar Punithar Arulanandar - Madurai Ilankavin

    http://www.pustaka.co.in

    மறவ மண்ணின் மீட்பர் புனிதர் அருளானந்தர்

    (சரித்திர நாவல்)

    Marava Mannin Meetpar Punithar Arulanandar

    (Sarithira Novel)

    Author:

    மதுரை இளங்கவின்

    Madurai Ilankavin

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madurai-ilankavin

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சூழ்ச்சி வலை விரிகின்றது

    2. வெள்ளைக் குளத்தில் அருள் வெள்ளம்

    3. அரண்மனை அவசரத் திட்டம்!

    4. புரியாமல் விரிந்த புதிர்

    5. படை நடத்திய பாதகன்

    6. புனிதரின் கைகளில் பென்விலங்கு!

    7. ஒன்றும் புரியாத ஓலை

    8. தீர்க்கதரிசனத் திருமொழி

    9. புனிதப் புறா பறக்கின்றது

    10. சரித்திரம் படைத்த சமயப் புரட்சி

    11. தேவ மகன் வழியில் தேவர் மகன்

    12. முடிவுகள் நிச்சயிக்கப்பட்டன!

    13. இருதலைக் கொள்ளி எறும்பு

    14. மண் சிவக்கின்றது

    1. சூழ்ச்சி வலை விரிகின்றது

    மாமதுரைத் திருநகரை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம்.

    கி.பி. 1686.

    ஜூலைத் திங்கள் முதல் வாரத்தில் ஒரு நாள் இரவு. விடியல் தெள்ளி வானில் தோன்றிப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. இரவுக் கிளிகளின் இடைவிடாத ஓசையை மிதித்தவாறு இரண்டு குதிரைகள் சென்று கொண்டிருந்தன.

    தளவாய் குமாரப்பிள்ளை அவர்களே! நீங்கள் இப்போது எங்கே செல்லப் போகின்றீர்கள்? குதிரையிலிருந்த ஒருவன் கேட்டான்.

    ‘சூரிய சேதுபதி! நாம் நீண்ட தூரம் பயணமாகி வந்துவிட்டோம் அல்லவா? தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியே குறுக்குப் பாதையில் வந்ததால் ஓரளவு களைப்புத் தெரியவில்லை. நாம் இப்போது காளையார் கோவிலைக் கடந்துவிட்டோம். நான் அங்கிருந்து மேற்கே சென்றிருந்தால் என்னுடைய இருப்பிடமான பாசுனேரிக்குப் போயிருப்பேன். ஆனால் இப்போது நேராக இராமநாதபுரம் செல்லப் போகிறேன்’ என்று குமாரப்பிள்ளை விடை கொடுத்தான்.

    நீங்கள் அடுத்து எந்த ஊர்களின் வழியாக போவீர்கள். தளவாய் அவர்களே?

    அடுத்து விடிவதற்குள் மங்கலம், வெள்ளைக்குளம் சென்றுவிட வேண்டும். பிறகு சிறுபாளை செல்லாமல் குறுக்குப்பாதையில் போகநூர் சென்று இராமநாதபுரம் அடைவேன்!

    சிறுபாளை வழியே போகவில்லையா, தளவாய் அவர்களே?

    ‘ஆமாம் சூரியசேதுபதி! அதனால் என்ன?’

    ‘ஒன்றுமில்லை தளவாய் அவர்களே! சிறுபாளையில்தானே எங்கள் உறவினர் தடியத்தேவர் இருக்கின்றார். பரிதாபத்திற்குரியவர் இல்லையா, தளவாய் குமாரப்பிள்ளை அவர்களே?’

    ‘எப்படிச் செல்கின்றாய் சேதுபதி? சற்று விளக்கமாகத்தான் சொல் கேட்கலாம்! எனக்குத் தடியத்தேவரைப் பற்றி அதிகமாகத் தெரியாது!’ என்று தன்னுடைய சந்தேகத்தை முன் வைத்தான் குமாரப்பிள்ளை.

    ‘குமாரப்பிள்ளை அவர்களே! நீங்கள் இப்போது இராமநாதபுரத்தை ஆளுகின்ற இரங்கநாத சேதுபதியின் தளபதியாகத் திகழ்கின்றீர்கள். உங்களுடைய மன்னவரான இரங்கநாத சேதுபதிக்கு இராமநாதபுர இராச்சியத்தை ஆளக்கூடிய தகுதியோ மரபோ கிடையாது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால், என்னுடைய தந்தை இராசசூரிய சேதுபதி துரோகிகளின் செயலுக்குப் பலியானார். திருச்சியில் என் தந்தை மாண்டதும், இராமநாதபுரம், வாரிசு இல்லாமல் குழப்பமடைந்தது. முறைப்படி பட்டத்திற்கு வரவேண்டிய சிலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் தடியத்தேவர் அதனால்தான் பரிதாபத்திற்குரியவர் என்று சொன்னேன் தளவாய் அவர்களே!’

    ‘சூரிய சேதுபதி இப்போதுதான் ஓரளவு புரிகின்றது. என்னுடைய மன்னரான சேதுபதி சரியான சூழ்ச்சிக்காரன்தான்! அதனால் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல முடிவு செய்துவிட்டேன். முள்ளை முள்ளால் எடுப்பதுதான் அறிவுடைய செயலாக அமையும்!’

    ‘தளவாய் அவர்களே! நீங்கள் தலையிட்டால்தான் நேர்மை நிலைபெற முடியும். இப்போது இராமநாதபுரத்தை ஆண்டு வருகின்ற உங்கள் மன்னவர் இரங்கநாத சேதுபதி சூழ்ச்சியால்தான் அரியணையை அபகரித்தார். ஏணியால் ஏறியவன் அந்த ஏணியை உதைத்துத் தள்ளுவது போன்று ஓரிருவரைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஆட்சி பீடத்தை இரங்கநாத சேதுபதி கைப்பற்றினார். உரிமையுள்ளவர்களை உதறிக் கூடத் தள்ளவில்லை. உங்கள் சேதுபதி. அதற்கு மாறாக அவர்கள் உயிரையே கவர்ந்தார்! இரங்கநாத சேதுபதி அமர்ந்திருக்கின்ற ஆட்சிக்கு மாட்சி கிடையாது. மாறாகக் குருதிக் கறைதான் பின்னணியாக இருக்கின்றது. அந்தக் கறைபடிந்த காவியத்தின் உண்மைக் கதாநாயகர்களில் ஒருவர்தான் தடியத்தேவர். அவரையும் இரங்கநாத சேதுபதி ஒருவகையில் மயக்கி இருக்கின்றார் தளவாய் அவர்களே!’

    ‘அது எப்படி சூரிய சேதுபதி?’

    ‘இரத்த வெறிபிடித்த இரங்கநாத சேதுபதியின் மருமகள் ஒருத்தி இப்போது தடியத்தேவரின் மனைவியாக இருக்கின்றாள். ஏற்கெனவே நான்கு மனைவியருடன் வாழ்கின்ற தடியத்தேவருக்கு ஐந்தாவது மனைவியாக இரங்கநாத சேதுபதியின் மருமகள் வாழ்க்கைப்பட்டிருக்கின்றாள். அவள் தடியத்தேவரின் உண்மைக் காதலி என்றே சொல்லலாம். ஏனென்றால் அவளுடைய பெயரும் காதலிதான்! அந்தக் காதலி இருக்கின்றவரை இரங்கநாத சேதுபதிக்குத் தடியத்தேவரால் ஆபத்து இருக்காது! நான் இப்போது உரிமை கொண்டாடக் கூடியவனாக இருந்தாலும், காடுகளில் அலைந்து திரிகின்றேன்! ஆதரவற்றவனாகிவிட்டேன் இல்லையா?’

    ‘சூரிய சேதுபதி! கலங்காதே; நான் உனக்கு உறுதுணையாகிவிட்டேன். நேர்மையற்ற வகையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இரங்கநாத சேதுபதியிடம்தான் தளவாய்ப் பொறுப்பை ஏற்றுவிட்டேன். அதனால் பொறுப்புள்ள நற்பணி புரியக் கடமைப்பட்டிருக்கிறேன்!’ என்று சற்று அழுத்தத்துடன் குமாரப்பிள்ளை பேசினான்.

    ‘தளவாய் குமாரப்பிள்ளை அவர்களே! உங்களைப் பற்றி எனக்குப் பூரணமாகத் தெரியாது. இருந்தாலும் ஒரு புண்ணியவானாக நான் உங்களைப் பார்க்கிறேன். உங்களுடைய ஆதரவால் ஒரு புத்துணர்வு தோன்றி இருக்கின்றது. இத்தனை ஆண்டுகளாக அடங்கிக்கிடந்த என்னுடைய உரிமை உணர்வு பொங்கி எழுகின்றது. நீங்களும் தஞ்சை வேந்தரும் ஒன்று சேர்த்துவிட்டால் ஒரு நொடிகூட இரங்கநாத சேதுபதி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க முடியாது! இதை நான் நன்றாக அறிவேன்’ என்று சூரிய சேதுபதி குமாரப் பிள்ளையைப் பெருமைப்படுத்திப் பேசினான்.

    இரண்டு குதிரைகளும் ஓர் ஊரின் உள்ளே புகுந்தன. அந்த ஊர் மக்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை! விடியல் பொழுது நெருங்கிவிட்டது என்பதைக் கட்டியங்கூறிக் குரல் கொடுக்கின்ற காக்கைகள், கரையத் தொடங்கி விட்டன.

    ‘இதுதான் மங்கலம்!’ என்று குமாரப்பிள்ளை கூறினான்.

    ‘மங்கலமான நம்முடைய முடிவுகளுக்கு இந்த இடம் பொருத்தமாகத் திகழ்கின்றது தளவாய் அவர்களே!’

    ‘உண்மைதான் சூரிய சேதுபதி! நீ இப்போது நல்ல இளைஞனாக இருக்கின்றாய். உன்னுடைய உணர்ச்சிமிக்க எழுச்சியை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். மறவர்குல மாவீரனாக நீ விளங்குகின்றாய். உன்னுடைய வீரம் என்றுமே விலை போகாது அதற்கு நான் விளை செய்யத் தயாராகிவிட்டேன்.’

    ‘தளவாய் அவர்களே! நான் மறவர் குலத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய உடன் பிறப்புக்காகக் கள்ளரும் அகமுடையாரும் விளங்குகின்றனர். இரங்கநாத சேதுபதி மறவர், கள்ளர், அகமுடையார் ஆகிய மூன்று குலத்திலும் பெண்களை மணந்து கொண்டிருக்கின்றார். இதுவும் ஒரு சூழ்ச்சி என்றுதான் கொள்ள வேண்டும்!’

    ‘அப்படியா? சூழ்ச்சியின் மொத்த உருவமாகத்தான் என்னுடைய மன்னவர் திகழ்கின்றார் என்று நினைக்கின்றேன். ஆனால் ஒரு வகையில் நான் அவரையும் விட மிஞ்சியவன் என்பது உனக்குத் தெரியாது அல்லவா?

    ‘நீங்கள் சொல்வது சரிதான் தளவாய் அவர்களே, எனக்கு உங்களைப்பற்றியும் நன்றாகத் தெரியாது. நான் இதுநாள்வரை தஞ்சை மன்னரிடம் தஞ்சம் புகுந்திருந்தேன். இரங்கநாத சேதுபதி மன்னவருக்கு நான் ஒரு வகையில் மருமகன்தான். என்னுடைய நிலைமையை அறிந்த தஞ்சை மன்னர், உதவி செய்ய முன் வந்தபோது தாங்களும் அங்கு வந்தீர்கள். ஆகையால் என்னுடைய எண்ணத்திற்கு மேலும் வன்மை ஏற்பட்டிருக்கின்றது! தடியத்தேவர் வாரிசு உரிமையைப் பெற முயற்சி செய்யவே மாட்டார். ஏனென்றால், அவர் காதலியின் மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றார். நான் நேர்மையை நிலைநாட்டத் துடிக்கின்றேன், என்றாலும் துணையில்லை!’

    ‘அதனால் என்ன சூரிய சேதுபதி! நான் உற்ற துணையாகிவிட்டேன் அல்லவா? நான் எப்படிப்பட்டவன் என்பதை நீ அறிந்து கொண்டால்தான் என்னிடம் நீ நல்ல நம்பிக்கை கொள்ளமுடியும். எங்களுடைய முன்னோர்களைப்பற்றி உனக்கு நான் சொல்லி ஆக வேண்டும். குலசேகர பாண்டியன் என்ற மன்னவன் ஆட்சி செய்த காலத்தில் இராமநாதபுரத்தின் கீழ்ப்பகுதிகளை இலங்கை மன்னன் தண்டநாயக்கர் என்பவன் ஆட்சி புரிந்தான். அவனுடன் கொந்த வேளாளர் என்ற குலத்தினர் வந்தனர். அப்படி இராசசிங்க மங்கலத்திற்கு அருகிலுள்ள ஆறுமுகக் கோட்டையில் ஆட்சி புரிந்தவர்களுடைய மரபில் வந்தவனே நான்! என்னுடைய முன்னோர்களும் இராமநாதபுரத்தை ஆண்டவர்கள்தான்!’ என்று நெஞ்சை நிமிர்த்தித் தளவாய் குமாரப்பிள்ளை கூறினான். அதற்கு சூரிய சேதுபதி,

    ‘அப்படியா தளவாய் அவர்களே? நீங்கள் எப்படி இரங்கநாத சேதுபதிக்குப் படைத் தளபதியானீர்கள்?’ என்று கேட்டான்.

    ‘நான் அறிவாற்றலும் சூழ்ச்சியும் நிறைந்த குலத்தில் தோன்றியவன், எனவே என்னை மதுரை நாயக்கர் தன் படைக்குத் தளபதியாக்கினார்! நாயக்க மன்னர்கள் தன் படைத்தளபதிகளுக்குத் தளவாய் என்றே பெயரிட்டார்கள். ஒரு சமயம் நாயக்க மன்னருக்கு ஒரு வகையில் இரங்கநாத சேதுபதி உதவி செய்ததால் என்னைச் சேதுபதியுடன் நாயக்க மன்னர் அனுப்பி வைத்தார். நான் சிறந்த நிர்வாகி என்ற பெருமையுடன் சேதுபதியிடம் வந்து சேர்ந்தேன், ஆனால், என்னுடைய சிந்தனை எப்படிச் செயல்படுமென்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது!’ என்று குமாரப்பிள்ளை தன்னுடைய பெருமையை விளக்கினான்.

    அந்த விளக்கம் சூரிய சேதுபதிக்கும் ஒருவிதமான அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியது. எனவே,

    ‘தளவாய் அவர்களே! உங்களுடைய சிந்தனையில், இப்போது என்ன எண்ணம் தோன்றியிருக்கின்றது? அதைக் கொஞ்சம் விளக்கலாமா?’ என்று விநயமாகத் தன்னுடைய வார்த்தைகளைச் சூரிய சேதுபதி தெரிவித்தான்.

    ‘சூரிய சேதுபதி! சூரியன் உதயமாகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அப்போது சூரிய சேதுபதிக்கும் உதயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை. இருந்தாலும் இப்போது என்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியை உனக்குத் தெரிவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எப்போதுமே நாம் சிறியதைக் கைவிட்டாலும் பெரியதைப்பற்றியே குறிவைத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது இராமநாதபுரம் இராச்சியத்தை அடுத்த தொண்டியினை, டச்சுக்காரர்கள் ஆண்டு வருகின்றார்கள். அதுபோல் வடபகுதியைத் தஞ்சை மன்னர் ஆண்டு வருகின்றார்கள். மேலும் உட்பகுதியில் சிறுபாளையைத் தடியத்தேவர் ஆளுகின்றார். சிலாமிக நாட்டினை மொன்னி என்ற தலைநகரிலிருந்து சொக்குத் தேவர் ஆளுகின்றார். இந்த நிலையில் நாம் இராமநாதபுரத்தின் வடபகுதியைத் தஞ்சை மன்னருக்குத் தருவதாக வாக்களித்தால்தான் நல்லது!

    ‘அதனால் இராமநாதபுர இராச்சியத்தில் குறைவு ஏற்படும் அல்லவா தளவாய் அவர்களே?’

    ‘சிறிய மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும் சூரிய சேதுபதி! இல்லையென்றால் நீ இந்தக் காடுகளில் ஒளிந்து மறைந்து ஓடி அலைந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்! நல்ல முடிவை நாம் வெல்லவே முடியாது!’ என்று குமாரப்பிள்ளை எச்சரிக்கை கொடுத்தான்.

    ‘பரவாயில்லை தளவாய் அவர்களே! உங்களுடைய முயற்சிக்கு நான் எந்த வகையிலும் தடையாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும் என்னுடைய இரத்தத்தில் படிந்து கலந்துள்ள நாட்டுப்பற்று இப்படிப்

    Enjoying the preview?
    Page 1 of 1