Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Christhavam
Tamil Christhavam
Tamil Christhavam
Ebook238 pages1 hour

Tamil Christhavam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, திருச்சபை வரலாறு, கிறிஸ்தவ வரலாறு என்ற பன்முக வகைகளையும் ஒருசேர விளக்குகின்றது. இத்துடன் தமிழுக்காகத் தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த ஐந்து தமிழறிஞர்களையும், பத்து தமிழ்த் தொண்டர்களை பற்றி எடுத்துக்கூறுகின்றது. இதனையே இந்நூல் விவரிக்கிறது. ‘தமிழ்க் கிறிஸ்தவம்’ பற்றி முழுமையாக படித்து அறிவோம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580158309052
Tamil Christhavam

Read more from Madurai Ilankavin

Related to Tamil Christhavam

Related ebooks

Related categories

Reviews for Tamil Christhavam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Christhavam - Madurai Ilankavin

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ்க் கிறிஸ்தவம்

    Tamil Christhavam

    Author:

    மதுரை இளங்கவின்

    Madurai Ilankavin

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madurai-ilankavin

    பொருளடக்கம்

    (அ) முதல் பாகம்: தமிழகத்தில் கிறிஸ்தவம்

    1. சங்ககாலத் தமிழகம்

    2. தமிழகம் வந்த தோமா

    3. சிரியன் கிறிஸ்தவர்

    4. போர்த்துக்கீசியரின் விசுவாசம்

    5. பிரான்சிஸ் சவேரியார்

    6. என்றி என்றிக்கஸ்

    7. இராபர்ட் தே நொபிலி

    8. அருளானந்தர்

    9. வீரமாமுனிவர்

    10. தமிழக கத்தோலிக்க மையங்கள்

    (ஆ) இரண்டாம் பாகம்: தமிழாய் வாழ்ந்த கிறிஸ்தவர்

    11. சீகன் பால்கு

    12.வேதநாயக சாஸ்தியார்

    13. தனிநாயகம் அடிகள்

    14. வேதநாயகம் பிள்ளை

    15. தேவநேயப் பாவாணர்

    (இ) மூன்றாம் பாகம்: தமிழ்த் தொண்டின் கிறிஸ்தவர்

    16. ஜேம்ஸ் தேரோசி

    17. அந்தோணிக்குட்டி அண்ணாவியார்

    18. கால்டுவெல்

    19. ஜி.யு.போப்

    20. இன்பக் கவிராயர்

    21. முத்துசாமி பிள்ளை

    22.எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை

    23. திரிங்கால் அருளப்பர்

    24. அண்ணாவியார் இருதயம் பிள்ளை

    25. நல்லூர் ஞானப்பிரகாசர்

    உள்ளே புகுமுன்...

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் அவரது சீடர் தோமா இந்தியாவிற்கு வந்து காந்தாராவின் தட்சசீல நகரில் கிறிஸ்துவை அறிவித்தார். அதன்பின் தோமா கி.பி. 52-இல் தமிழகத்திற்கு சேரநாடான மலபாருக்கு வந்து சேர்ந்தார். இங்கு முசிறியில் இறங்கிய தோமா, மலபாரில் கிறிஸ்துவுக்கான பணியை ஆற்றி ஆலயங்களை நிறுவினார். இதனை அடுத்து தோமா தென்தமிழகம் வழியே சென்னை மைலாப்பூர் வந்து சேர்ந்தார். இங்கு வாழ்ந்த தோமா வட தமிழக மக்களிடம் கிறிஸ்துவை அறிவித்து மக்கள் மனமாற்றம் அடையச்செய்தார். இவரது உடல் சென்னை மைலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் மக்களால் தரிசிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றது.

    தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாட்டிலும் பல்லவநாடு, தொண்டை மண்டலம், சேதுபதி நாடு, மறவநாட்டிலும் குறிப்பாக இயேசு சபையார், பிரான்சிஸ்கன் சபையாரும் இடையறாத சமயப் பணியுடன் கல்விப்பணி, மருத்துவப்பணி, ஆதரவற்றோர் பாதுகாப்புப் பணியென்று சமுதாயப் பணிபுரிந்தனர். இதன்மூலம் தோமாவால் விதைக்கப்பட்ட கிறிஸ்தவம் தமிழகமெங்கும் ஆல்போல் தழைத்து பரந்து விரிந்து மக்களுக்கு நிழல் தந்தது. தொடர்ந்து மறைமாநிலக் குருக்களும், கன்னியர் சபைகளும் ஆன்மீகப் பணியோடு கல்வி, மருத்துவம், ஆதரவற்றோர் ஆதரவென்று சமுதாயப் பணியாற்றினர். தமிழகத்தில் கத்தோலிக்கத் திருச்சபையினர் செயல்பட்டனர் என்பதைத் தமிழ் உலகம் அறியும். தமிழகத்தில் இதற்கும் மேலாக தமிழ்ப்பணியைத் தலையாய பணியாக ஏற்று தென்னிந்திய திருச்சபையினரும், லுத்தரன் திருச்சபையினரும் ஆன்மீகப் பணியுடன் தமிழ்ப் பணியைச் சிறப்பாக ஆற்றினர்.

    தமிழுக்குச் சைவம், வைணவம், சமணம், புத்தம், இஸ்லாம் ஆற்றிய பணிகளுக்கு இணையாக கிறிஸ்தவம் தனது பங்களிப்பைத் தமிழுக்குச் சிறப்பாக ஆற்றியுள்ளதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது. தமிழகத்தில் புன்னைக் காயலில் வாழ்ந்த என்றி என்றிக்கஸ் அடிகளார் கி.பி. 1 542-இல் தமிழில் அச்சு நூல்களை முதன்முதலில் வெளியிட்டது முதல், தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அரிய, அற்புதமான தமிழ்ப்பணி புரிந்துள்ளனர். இதனை எடுத்துரைப்பதுதான் இந்தத் தமிழ் கிறிஸ்தவம் நூலாகும். இந்நூல் தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, திருச்சபை வரலாறு, கிறிஸ்தவ வரலாறு என்ற பன்முக வகைகளையும் ஒருசேர விளக்குகின்றது.

    இத்துடன் தமிழுக்காகத் தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த ஐந்து தமிழறிஞர்களையும், பத்து தமிழ்த் தொண்டர்களையும் பற்றி இந்நூல் எடுத்துக்கூறுகின்றது. இந்நூல் எழுதிட உறுதுணை புரிந்த எனது மக்கள் ஆ. மைக்கேல் மாறன், ஆ. ஆண்டனி அமிர்தராஜ், ஆ. விமலா ஆகியோருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    அன்புடன்

    மதுரை இளங்கவின்

    9894482497

    (அ) முதல் பாகம்: தமிழகத்தில் கிறிஸ்தவம்

    1. சங்ககாலத் தமிழகம்

    கடல் கொண்ட தமிழ்நிலம்

    இன்றைய தமிழகத்தின் தென்கோடியாக உள்ள குமரி முனைக்குத் தெற்கிலும், கிழக்கிலும் பெரிய நிலம் இருந்தது. அது கடல் கோளால் அழிந்தது என்று தொல்லியல் அறிஞர் கூறுகின்றனர். இவ்வாறு கடலால் மூழ்கடிக்கப்பட்டது இலெமூரியாக்கண்டம் என்று ஆய்வாளர்கள் ஹெக்கல், ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், ஹோல்டர்னஸ் தெளிவாய்த் தெரிவிக்கின்றனர். இவர்கள் இலெமூரியாக் கொள்கை ஒன்றையும் உருவாக்கினர். இதனை மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் தவறு என்கின்றார். கடல் கோளால் அழிந்தது குமரிக்கண்டம் என்றும் இலெமூரியாக் கண்டம் என்பது மேலைநாட்டாரின் தவறான கண்டுபிடிப்பு என்றும் பாவாணர் கூறுகின்றார். இங்கு பஃறுளியாறும் குமரிக்கோடு என்ற பன்மலையடுக்கத்து மலைத்தொடரும் இருந்தது. இதில் அகத்தியர், தொல்காப்பியர் வாழ்ந்தனர் என்பார் பலர். இந்த இலெமூரியாவில்தான் மக்கள் இனம் முதலில் தோன்றியது. இங்கு வாழ்ந்தவர்கள் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    முதல், இடை, கடை தமிழ்ச்சங்கம்

    சங்க காலத்தில் முதல், இடை, கடை என்று மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தன என்று பல ஆய்வாளரும், அவ்வாறு இருந்திருக்க முடியாதென்று சிலரும் கூறிவருகின்றனர். முதற்சங்கம் 4449 ஆண்டளவு இருந்ததாயும் இதில் 4449 புலவர்கள் இருந்ததாயும், இடைச்சங்கம் 3700 ஆண்டளவு இருந்ததாயும் புலவர்கள் 3700 பேர் இருந்ததாயும் பலர் தெரிவித்துள்ளனர். இதில் கடைச்சங்கம் மதுரையில் இருந்ததாய் அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு முச்சங்கம் இருந்தது உண்மை என்பதில் உ.வே. சாமிநாதைய்யர், கா. அப்பாத்துரை, கா. சுப்பிரமணியபிள்ளை, தேவநேயப்பாவாணர் உறுதியுடன் உள்ளனர். முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் இருந்தது என்றாலும் இத்தனை ஆண்டுகள் இருந்தனவா என்பது ஆராய்ச்சிக்குரியது என்கிறார் கே.கே. பிள்ளை.

    சங்கம் பற்றிய ஆதாரங்கள்

    கடல்கொண்ட தமிழ்ச்சங்கம் பற்றி இறையனார் களவியல் மூலம் அறிய முடிகின்றது. அப்பர் தேவாரம், சின்னமனூர்ச் செப்பேடு, தாலமி, பெரிபுளூஸ், பிளைனி குறிப்புகள், இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம், இராசாவளி, இராசரத்னாகிரி இவற்றில் குறிப்புக்கள் இதைப்பற்றிச் சொல்கின்றன. முதற்சங்கம் கி.மு. 10000 போல் தோன்றியதென்று பாவாணர் வரையறுத்துள்ளார். முதற்சங்கம் காய்சின வழுதியால் நிறுவப்பட்டது. இது கடல்கொண்ட தென் மதுரையில் அமைந்தது. இக்கால நூல்களில் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு குறிப்பிடத்தக்கவை. இரண்டாம் சங்கம் கபாடபுரத்தில் வெண்டேச்செழியனால் நிறுவப்பட்டது. இக்காலத்தில் பூதபுராணம், மாபுராணம், வெண்டாழி, பெங்கலி என்பவரை படைக்கப்பட்டன. மூன்றாம் சங்கம் வைகை நதி பாயும் மதுரையில் வன்முடத் திருமாறனால் நிறுவப்பட்டது. இதுவே தற்போதைய மதுரையாகும்.

    இக்கால நூல் அகத்தியம், தொல்காப்பியம், நற்றினை, புறநானூறு, கலித்தொகை போன்றவையாகும். இச்சங்கம் 1850 ஆண்டுகள் போல் இருந்ததென்று ஆய்வாளர் கூறுகின்றனர். கடைச்சங்கம் பற்றி இறையனார் களவியல் உரையாசிரியர் போல் திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி அடிகளும் குறிப்பிட்டுள்ளார். சங்கநூல்கள் என்பவை கி.பி. 400 முதல் 500-இல் எழுதப்பட்டவை என்று வையாபுரிப்பிள்ளை, கே.என். சிவராசபிள்ளை கூறுவர். வேறு சிலர் கி.பி. 600-இல் சங்கநூல்கள் படைக்கப்பட்டதென்பர். சிலப்பதிகாரம், பரிபாடல் காட்டும் வானியல் ஆதாரத்தின்படி சங்ககாலம் என்பது கி.பி. 300 முதல் கி.பி. 800 வரை என்கின்றனர் சிலர். இதேபோல் மூன்றாம் சங்கம் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை இருந்திருக்கலாம், சங்க இலக்கியங்கள் கி.பி. 200-இல் படைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாகும்.

    கி.மு. 1000 பற்றிய ஒப்புமை

    இந்தியாவின் தென்பகுதியில் குமரிக்கண்டம் இருந்து கடலால் அழிந்தது என்ற ஆய்வு மேலோங்கிய நிலையில் இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்தோர் திராவிடர் எனப்படுவோர் என்பது ஆய்வின் மூலம் தெளிவாக்கப்பட்டது. இதற்கு ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு புதைபொருள்கள் ஆதாரமாய் உள்ளன. தமிழர் யார் என்று ஆய்வு மேற்கொண்ட ஹீராஸ் பாதிரியார் சிந்துசமவெளி ஆய்வில் பல முடிவுகளைக் கண்டார். இங்கு வாழ்ந்தோர் திராவிடர் என்று தெரிவித்த இவரின் கருத்தின்படி சர். ஜான் மார்சலும் தனது ஆய்வினைக் கூறினார். இவ்வாறு தமிழர்களே திராவிடர் ஆயினர் என்கிறபோது தமிழின் தொன்மையும் தமிழ்நிலத்தின் பழமையும் குறிப்பிடத்தக்கது. பழைய ஏற்பாட்டில் கோவில் கட்டி வழிபட்டபோது மோசே ஏலக்காய் பயன்படுத்தியதாயும், கி.மு. 1000-இல் சாலமோனைக் காணச் சென்ற அரசி ஷோபா ஏலம், இலவங்கம் கொண்டு போனதாயும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்திற்கும் பிற நாட்டிற்கும் உள்ள வணிகத் தொடர்பைக் கூறினாலும், சாலமோனின் காலம் கி.மு. 1000 என்பதை ஏற்கமுடிகின்றது. அகத்தியம் படைத்த அகத்தியரின் காலம் இதுவாகும். அகத்தியர் காலத்தை பாவாணர் வேதவியாசர் காலமான கி.மு. 1000 என்றும் தொல்காப்பியர் காலத்தை கி.பி. 504 என்றும் இவர் குறிப்பிடுகின்றார்.

    பாபிலோன் தொடர்பு

    பழைய ஏற்பாட்டில் கூறப்படும் ஆபிரகாம், ஈசாக் போன்றோரின் காலம் அகத்தியர்க்கு முந்திய கி.மு. 2000 ஆகும். எகிப்திலிருந்து மோசே கி.மு. 1250-இல் இஸ்ரேயலரை கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். கி.மு. 587-இல் பாபிலோனுக்கு யூதர்கள் நாடு கடத்தப்பட்டதை பழைய ஏற்பாடு கூறுகின்றது. இந்த பாபிலோனுக்கும், தமிழகத்திற்கும் விரிந்த வணிகத்தொடர்பு இருந்ததாய் கே.கே. பிள்ளை குறிப்பிடுகின்றார். பாபிலோனில் நிப்பூர் என்ற இடத்தில் வாழ்ந்த வணிகர்கள் தங்கள் வாணிபம் செய்த பற்று வரவினை களிமண் ஏட்டில் பதிய வைத்திருந்தனர் என்று இவர் கூறுகின்றார்.

    தமிழரின் வணிகத் தொடர்பு

    சங்க காலந்தொட்டு அயல்நாட்டு கடல் வணிகத்தில் தமிழர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். கி.மு. 700-இல் அராபியர், பினிஷியர், எகிப்தியர் தமிழகத்திற்கு சரக்கு ஏற்றி வந்துள்ளனர். கடல்வழி வணிகத் தொடர்பு பற்றி சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளன. கிரீஸ், ரோம் வணிகம் பற்றி அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை தெரிவிக்கின்றது. இவை கிரேக்கரையும், ரோமரையும் யவணர் என்றே குறிப்பிடுகின்றது.

    சமண, புத்த சமய வருகை

    தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செய்வதை நாம் அறிவோம். சேர வம்சத்தின் தொடக்க மன்னனாக உதயனும், பாண்டிய வம்சத்தின் தொடக்க மன்னனாக பெரும் வழுதியும், சோழ வம்சத்தின் தொடக்க மன்னனாக மனுநீதிச் சோழனும் கூறப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் சமயம் என்பது-இல்லை என்றே ஆய்வாளர் கூறுகின்றனர். இவர்களை சமய வழிபாட்டாளர்களாக பின்னால் வந்த வடவர்களே மாற்றி குறிப்பிட்டனர் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். இக்காலகட்டத்தில் தான் கி.மு. 400-இல் சமணம் தமிழகம் வந்தது. மௌரிய அரசர் சந்திரகுப்தர் மூலம் தென்னிந்தியாவில் சமணம் பரவியது. சேர, சோழ, பாண்டிய நாட்டில் மட்டுமின்றி இலங்கைக்கும் சென்றது. சமணம் கி.மு. 400 முதல் 800 வரை தமிழகத்தில் செழித்தோங்கியது. இதேபோல் கி.மு. 300-இல் பௌத்தமும் தமிழகம் வந்தது. இது பூம்புகார், வஞ்சி, நாகப்பட்டணத்தில் நிலைபெற்றது. பௌத்த மடாலயங்களும், சமணப் பள்ளிகளும் நிறையத் தோன்றின. இவை கல்வி, கலை, இலக்கியத்திற்கு அடித்தளமிட்டன. களப்பிரர்கள் மதுரையைக் கைப்பற்றி சமணத்தையும், தமிழையும் வளர்த்தனர். களப்பிரர்கள் கர்நாடகாவிலிருந்து வந்தவர் என்கின்றனர் ஆய்வாளர்கள். சமணம், பௌத்தம் பரவியிருந்த போதுதான் கிறிஸ்துவின் சீடர் தோமா கி.பி. 52-இல் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேரன் செங்குட்டுவன் ஆட்சி

    கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் சங்க நூல்கள் எழுதப்பட்டன என்கிறார் வின்சென்ட் ஏ. ஸ்மித். அவை முதல் மூன்று நூற்றாண்டுகள் எனலாம் என்பது அவரின் கருத்து. இதையே கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளுக்கு உரியது சங்க இலக்கியம் என்கிறார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார். சேரன் இமயவரம்பனுக்கும் நற்சோணைக்கும் மகனான செங்குட்டுவன் (கி.பி. 135-190) சேரர்களில் முக்கியமான அரசன். இம்மன்னனின் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தவர். கி.பி. 52 முதல் 72 வரை தமிழகத்தில் வாழ்ந்தவர் தோமா. இவர் மலபார் எனப்படும் சேரநாட்டில்தான் கிறிஸ்துவை அறிவித்து மக்களை, கிறிஸ்துவை ஏற்கச் செய்துள்ளார். இச்சமயத்தில் தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் படைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது சிலரின் கருத்து. சேரன் செங்குட்டுவன் இச்சமயத்தில் ஆண்டிருக்கலாம் என்றும் சிலப்பதிகாரம் கி.பி. 150-இல் எழுதப்பட்டிருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

    மக்களோடு இணைந்த கிறிஸ்தவம்

    தோமையார் மலபார் பகுதியான சேர நாட்டிற்கு கி.பி. 52-இல் வந்துள்ளார். இக்காலம் சேர, சோழ, பாண்டியர் காலம். இக்காலத்தில் தோமையாரால் இன்று கேரளா எனப்படும் மலபாரிலும் தமிழகத்தின் வடபகுதிகளான சென்னை, மைலாப்பூர், நாகப்பட்டினம், பூம்புகார், திருவண்ணாமலை, தஞ்சைப் பகுதியிலும் கிறிஸ்தவம், மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தமிழக மக்களால் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவமே தொடர்ந்து வழிவழியாக நின்று நிலவி வருகின்றது. சேர, சோழ, பாண்டியர் காலத்திற்குப் பின் பல்லவர், நாயக்கர், களப்பிரர், சேதுபதிகள், இஸ்லாமியர் ஆட்சிக்காலத்திலும் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், இங்கிலாந்து ஆங்கிலேயர், டேனிஷியர்களின் போர், போராட்டங்களின் போதும் கிறிஸ்தவம் தழைத்து வந்துள்ளது. சைவம், வைணவம் மட்டுமின்றி சமணம், புத்தம், இஸ்லாம் ஆகியவை வலிமையோடு இருந்த காலத்திலும் கிறிஸ்தவம் தமிழ் மக்களின் வாழ்வோடு இணைந்து வளர்ந்து வந்துள்ளது. இயேசுவின் நற்செய்தி அறிவிப்போடு சேர்ந்த ஆன்மீகம் ஒருபுறமும் கல்வி, மருத்துவம், சமூக மாற்றத்திற்கான முன்னேற்றப் பணிகள் மறுபுறமும் வளர்ந்தோங்கி மக்களிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1