Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chozha Mangai
Chozha Mangai
Chozha Mangai
Ebook328 pages1 hour

Chozha Mangai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினான். அதனால் சினங்கொண்ட சுந்தரபாண்டியன், சோழ நாட்டை தாக்கினான். அப்போது ஆட்சியாண்ட இராசராசன் செய்த செயல்கள் என்னென்ன? இறுதியில் சோழ நாட்டை மீட்டது யார்? வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateMay 18, 2024
ISBN6580158309059
Chozha Mangai

Read more from Madurai Ilankavin

Related to Chozha Mangai

Related ebooks

Related categories

Reviews for Chozha Mangai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chozha Mangai - Madurai Ilankavin

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சோழமங்கை

    Chozha Mangai

    Author:

    மதுரை இளங்கவின்

    Madurai Ilankavin

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madurai-ilankavin

    பொருளடக்கம்

    ஆசிரியர் பக்கம்...

    1. ஆலயத்திருப்பணி

    2. சோழர் பரம்பரை

    3. குழலியை விரட்டினான்

    4. ராஜகுருவின் சதித்திட்டம்

    5. கைதியானார் இராஜகுரு

    6. கார்கோடன் தந்த மோதிரம்

    7. இராசராசனின் ஆசை

    8. ஆள் மாறாட்டம்

    9. உறையூரில் படைவீரர்

    10. தளபதியின் மகிழ்ச்சி

    11. ரகசியப்பாதை

    12. போர் நடந்தது

    13. புதிய திட்டம்

    14. அரசியோடு குழலி

    15. நட்புக்குள் எதிரி

    16. தஞ்சை வீழ்ந்தது

    17. போசளன் உதவி

    18. பழையாறையில் படை

    19. குழப்பத்தில் குழலி

    20. முடிசூட்டுவிழா

    21. தெள்ளாற்றுப் போர்

    22. வேங்கை மார்பன் ஓர் விருந்தாளி

    23. போர் தொடர்ந்தது

    24. போரிலே பூத்த காதல்

    25. இராஜகுருவின் விபரீத ஆசை

    26. தியாகவல்லி

    27. சோழமங்கை குழலி

    28. தப்பிக்க இயலாத தளபதி

    29. சுந்தரனின் ஓட்டம்

    30. போசளனின் விருப்பம்

    31. காஞ்சித் தலைவன்

    32. நினைத்ததும் நடந்ததும்

    33. பொலிவிழந்த சோழபுரம்

    34. பூனைக்குப் பிறந்த புலி

    35. மகிழ்ச்சி விழா!

    ஆசிரியர் பக்கம்...

    மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியநாட்டின்மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றினான். தனது பகைவர்மீது அவன் அதிகக் கோபங்கொண்டு அவர்களது நாட்டைச் சீர்குலைத்தான். அவனது கொடுமைகளையெல்லாம் நேரில் கண்ட சிறுவன் சுந்தரபாண்டியன் அதிகமான வெறுப்பை சோழநாட்டின்மீது மனதில் தேக்கி இருந்தான். தான் ஆட்சிக்கு வந்ததும், இதற்குப்பழி தீர்க்க வேண்டுமென்று உறுதியோடு இளவரசனான அவன் வளர்ந்து வந்தான்.

    கி.பி. 1216-ல் சோழநாட்டின் ஆட்சியை மூன்றாம் இராசராசன் ஏற்றான். அப்பொழுது மதுரையில் ஆட்சிக்கு வந்த சுந்தரபாண்டியன் மூன்றாம் இராசராசனிடமிருந்து மதுரையை மீட்டான். மதுரையை மீட்டதோடல்லாமல் சோழநாட்டைச் சீர்குலைக்க வேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.

    சோழப்பேரரசின் கீழ்வாழ்ந்து வந்தவர்கள் காடவர்கள். அவர்களுக்கு மூன்றாம் இராசராசன் மேல் வெறுப்பும், கோபமும் இருந்து வந்தது. சோழநாட்டின் ஆட்சியிலிருந்து பிரிந்து, காடவர் காட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கான சதித்திட்டங்களைத் தீட்டிவந்தனர். அவர்கள் இரகசியமாய் பாண்டியன் சுந்தரனிடம் நட்புக்கொண்டு, அவனை சோழநாட்டின் மேல் போர்த்தொடுக்கத் தூண்டினர்.

    சுந்தரபாண்டியனின் கடுமையான தாக்குதலால் மூன்றாம் இராசராசன் நாட்டைவிட்டு ஓடி ஒளிந்தான். சுந்தரபாண்டியனை எதிர்த்தால், நாம் உயிர்வாழ முடியாததென்று பயந்தான். கடல்கடந்து ஆட்சி செய்த மாமன்னன் இராசராசன் வழிவந்த மூன்றாம் இராசராசன் மிகக் கோழையாக இருந்தான். அவனுக்குப் போர் என்றால் பயமும் கவலையுமாக இருந்தது.

    இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சோழநாட்டில் தளபதியாரின் மகள் குழலி வீரமுடன் தனது சோழநாட்டிற்காகத் திட்டமிடுகின்றாள். போசளமன்னனையும், குந்தள மன்னனையும் சந்தித்து, சோழநாட்டிற்கு அவர்களது படை உதவியைப் பெறுகின்றாள். அவளது இராஜ தந்திரத்தால் சோழப்படை மீண்டும் வீறுகொண்டு எழுகின்றது. சோழநாட்டில் புத்துணர்ச்சி பிறக்கின்றது.

    மூன்றாம் இராசராசனின் கோழைத்தனத்தை குழலி இகழ்ந்து பேசி, அவனுக்கு வீரத்தையும், துணிவையும் ஏற்படுத்துகின்றாள். நாட்டை மீட்பதற்காக அவள் தீட்டிய திட்டத்தின்படி மூன்றாம் இராசராசன் போரிடுகின்றான். அவளது திறமையால் சோழமண்டலம் அப்போரில் வெற்றிபெறுகின்றது.

    இத்தகைய வீரமங்கையான குழலி வெற்றிகாணும்போது, எதிரிகளால் கொல்லப்படுகின்றாள். சோழ மண்டலத்தை பாண்டிய மன்னனிடமிருந்து மீட்ட ஓர் வீர தமிழ்மங்கையின் தியாக வாழ்வுதான் சோழமங்கை என்னும் இந்நாவல்.

    தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல், நான் எளிய நடையில் இந்நாவலைப் படைத்துள்ளேன். இவ்வரலாற்று நாவல் படிப்போர் நெஞ்சில் அற்புதமான இடத்தைப் பெறும் என்பது உறுதி.

    அன்புடன்

    மதுரை இளங்கவின்

    26/14 விஸ்வநாதபுரம் 3 வது தெரு,

    கோடம்பாக்கம்,

    சென்னை - 24.

    (C)9894482497

    1. ஆலயத்திருப்பணி

    இராசராசன் தன்னுடைய அரியணையில் அமர்ந்தான். அரசவைப் புலவர்கள் இருமருங்கும் அமர்ந்திருந்தனர். அரசனருகே அமைச்சர் பெருந்தகை மும்முடியார், அவரை அடுத்துக் கீழே படைத்தளபதி குணவீரத் தேவரும் அமர்ந்திருந்தார். அவரைத் தாண்டி ராஜகுரு முத்தடியார் அமர்ந்திருந்தார். அரசவை நிறைந்திருந்தது. இருமருங்கும் போடப்பட்ட ஆசனங்களில் துறைத்தலைவர்களுடன், சோழநாட்டின் செல்வந்தர்களும் சமயத் தலைவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

    சோழநாட்டுக் குடிமக்கள் அவை முழுவதும் குழுமியிருந்தனர். சரியாக கோடை வெயில் அரண்மனையின் வெளியே கொளுத்தியதால், உள்ளும் ஒரே புழுக்கம்!

    இராசராசனுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தனர் இரண்டு பெண்கள்.

    சோழநாட்டின் அமைச்சர் பெருந்தகை மும்முடியார் எழுந்தார். அவர் எழுந்ததும் ஒரே அமைதி! எங்கும் ஓசையில்லை. அமைச்சர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆர்வத்தோடு அனைவரும் நின்றார்கள்.

    "சோழ மண்டலத்தின் பேரரசரான இராசராசரே! சோழநாட்டின் ராஜகுரு முத்தடியாரே! தளகர்த்தரான குணவீரத்தேவரே! அவையிலே அமர்ந்திருக்கும் அன்னைத் தமிழின் அருந்தவப் புலவர்களே! துறைத் தலைவர்களே! சோழநாட்டுப் பெருமக்களே! உங்களையெல்லாம் வருக வருகவென்று வரவேற்கிறேன்.

    இன்றைய நன்னாளில் அரசவையில் நாமெல்லாம் குழுமியிருப்பதன் நோக்கம்... கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நீராட்டுவதுதான். நமது மாமன்னரான இராசேந்திரரால் கட்டப்பெற்று, தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அடுத்ததென விளங்கும் இத்திருக்கோயிலை நாம் புனித நீராட்டுவது பெரும்பேறாகும்.

    கங்கை கொண்ட சோழேசுவரரை நாமெல்லாம் போற்றி பணிய வேண்டும் என்பதற்காக இன்று குழுமியுள்ளோம். அது பற்றிய விவரங்களை நமது ராஜகுரு முத்தடியார் எடுத்துரைப்பார்" என்று கூறிவிட்டு அமைச்சர் அமர்ந்தார். அவர் ராஜகுருவை பார்த்தபடி இருந்தார். அடுத்து ராஜகுரு முத்தடியார் எழுந்தார்.

    "சோழர் குலவிளக்கான அரசப் பெருமானே! அமைச்சரே! தளபதியே! புலவர் பெருமக்களே! துறைத்தலைவர்களே! என் அன்பிற்குப் பாத்திரமான சோழப் பெருமக்களே! நமது கங்கை கொண்ட சோழேசுவரர் கோயிலை எழுப்பி ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் முடியப் போகின்றது. ஆண்டவனை வழிபட்டு அனைத்தையும் வெற்றியாக முடிக்க வேண்டுமென்று நம்பியவர்கள் சோழர்கள். அந்த வகையில் நாம் சோழேசுவரர் கோயிலுக்குத் திருமுழுக்குச் செய்யும் திருப்பணியைச் செய்வது பெரும் பயன்தரும்.

    இராசேந்திரரால் தொடங்கப்பெற்ற அறக்கொடைகள் அனைத்தும் இன்று இயங்கவில்லை. நடனமாதுகளுக்கும், வேதியருக்கும், அந்தணர்க்கும் அளித்த கொடைகளை மீண்டும் நமது மன்னர் அளித்து கோயிலைப் பேணுதல் வேண்டும் என்பது அடியேனின் அவா" என்று கூறிவிட்டு அமர்ந்தார் இராஜகுரு...

    மும்முடியாரும், புலவர்களும், துறைத்தலைவர்களும் கையொலி எழுப்பி அதனை ஆமோதித்தனர். மக்கள் வெள்ளம் பேசாமல் இருந்தது.

    அரசன் அமைதியாக இருந்தான். அமைச்சரை அழைத்து ஏதோ கூறினான். பிறகு தனது ஆசனத்தை விட்டு எழுந்தான்.

    "அமைச்சரின் உரையையும், ராஜகுருவின் கருத்தையும் கேட்டோம். சோழேசுவரருக்கு வழிபாடு நடத்துவது பற்றி எனக்குக் கருத்து மாறுபாடில்லை. எனது முன்னோர்களில் மாமன்னனாக விளங்கிய இராசேந்திரன் கட்டிய அக்கோயிலை வழிபடுவது எனக்கு மகிழ்ச்சியே! ஆனால்... இன்றைய அரசியல் நிலை சீராக இல்லை என்பதுதான் எனக்கு கவலை என்றான் மூன்றாம் இராசராசன்.

    மக்களெல்லாம் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அரசர் என்ன சொல்கிறார். அரசியல் நிலை சீராக இல்லையா? அப்படியானால் ஏதும் போர் ஏற்படப் போகிறதா? சோழநாட்டில் குருதி வெள்ளம் ஓடப்போகிறதா? மக்களுக்கு ஒரே குழப்பம். புலவர்கள் பேசாமல் இருந்தார்கள். அவர்களுக்கு அரசர் சொன்ன நிலை ஓரளவு தெரியும்.

    புலவர்கள் பாண்டிய நாட்டிற்கும், சேர நாட்டிற்கும், மற்றைய சிறுநாடுகளுக்கும் அடிக்கடி சென்று வருபவர்களல்லவா? துறைத்தலைவர்களுக்கும் அந்த அரசியல் நிலை தெரியும். மக்களிலும் சிலருக்குத் தெரிந்திருக்கும். அனைவரும் அறிய வாய்ப்பில்லை. அரசனின் முகத்தில் இருந்த இருள் மற்றவர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருப்பினும் அதனைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவையில் அமர்ந்திருந்த தளபதி குணவீரத்தேவர் முகம் கடுகடுப்பாகத்தான் இருந்தது. இராஜகுரு எழுந்தார்.

    அரசர் சொல்வதையும் யோசிக்க வேண்டியதுதான் என்றாலும் நாம் நமது திருப்பணியைத் தொடர்வோம். சோழேசுவரர் எப்படி திருவுளம் கொள்கிறாரோ அப்படியே நடக்கட்டும் என்றார்.

    மூன்றாம் இராசராசன் பேசாமல் இருந்தான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    அமைச்சர் எழுந்தார்.

    அரசரின் கருத்தும், ராஜகுருவின் ஆலோசனையும் நமது மனதில் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. இந்த திருப்பணி செய்ய வேண்டியது தேவையான ஒன்றுதான் என்றாலும் நிலைமை சீராக இல்லை என்கிறார் மாமன்னர். நிலைமை சீராக இல்லாவிட்டாலும் திருப்பணி செய்துதான் தீரவேண்டும் என்கிறார் ராஜகுரு. இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது மக்களின் மன்றம்தான். மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்று நமது மன்னர் அடிக்கடி சொல்லுவார். எனவே இந்த மாமன்றத்தில் கூடியுள்ள மக்கள் தரும் தீர்ப்பின்படி நாம் நமது திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதுதான் என்றார்.

    அமைச்சர் சொன்ன விளக்கவுரை குழுமியிருந்த மக்கள் அனைவரையும் ஈர்த்தது.

    ஓரிரு வினாடிகள் கழிந்திருக்கும்...

    கூட்டத்திலிருந்து ஓர் இளவயது மங்கை முன்னால் வந்தாள். இந்த நாட்டின் நிலை சரியில்லை என்கிறார் மாமன்னர். அரசியல் நிலை சரியில்லாதபோது எப்படி திருப்பணி செய்ய முடியும்? என்றாள் அவள்.

    இராஜகுரு புருவத்தை நெறித்தார்.

    மாமன்னன் புன்னகைத்தபடி இருந்தான்.

    குணவீரத்தேவர் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.

    அதுவும் யோசிக்க வேண்டியதுதான் என்றார் அமைச்சர். திருப்பணியை விட்டுவிடலாமா? என்றார் இராஜகுரு.

    பெண்பிள்ளை சொல்வது ஆண்பிள்ளை சொல்வதைவிட நல்ல கருத்தாக இருக்கும்போது, ஏற்றுக்கொள்வதில் என்ன ஆட்சேபனை? என்றார் அமைச்சர்.

    இது தெய்வப்பணி! இதை நிறைவேற்றுவது ராஜகுருவின் ஆலோசனை தானன்றி, மக்கள் விருபத்தாலன்று! மக்களுக்கு இதுபற்றி என்ன தெரியும்? என்றார் இராஜகுரு.

    மக்களின்றி மன்னர் இல்லை என்பதை ராஜகுரு மறந்துவிட்டார் போலும் என்றார் அமைச்சர்.

    மக்கள் அனைவருக்கும் எதை எப்பொழுது செய்ய வேண்டுமென்று தெரிவதற்கு வழியில்லை. தெய்வ நிந்தனை என்பது பெரிய தீமையில் போய்முடியும் என்பதனை அமைச்சர் மறந்துவிட வேண்டாம் என்றார் ராஜகுரு. தெய்வம் குடிகொண்டிருக்கும் ஆலயத் திருப்பணியை சிறப்பாக நடத்தி முடிக்காவிட்டால் அதுவும் நிந்தனையாய்த் தானே முடியும்? என்று கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.

    அவன் கேட்டதும் மன்னன் இராசராசன் சிரித்துக் கொண்டான்.

    அமர்ந்திருந்த புலவர்கள் கூடச் சிரித்தார்கள். துறைத் தலைவர்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

    அமைச்சர் என்னை எதிர்ப்பதாக எண்ணி மாமன்னன் இராசேந்திரன் எழுப்பிய சோழேசுவரரை எதிர்ப்பது பெரிய பாவமாகும். அதை நமது மாமன்னரும் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது என்றார் ராஜகுரு.

    அப்பொழுதும் மன்னன் சிரித்துக்கொண்டான்.

    மன்னர் பெருமான் அவர்களே! இந்த வாதத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தால், அவை கலைவதற்கு வசதியாக இருக்கும் என்றார் ஓர் துறைத்தலைவர்.

    அவர் சொன்னது சரிதான்! ராஜகுருவும், அமைச்சரும் மன்னரை வைத்துக்கொண்டு விவாதம் செய்து கொண்டிருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? மன்னரைப் பற்றி என்ன முடிவு எடுப்பார்கள்? என்று அவர் நினைத்தார்.

    இதற்கு மக்களே முடிவு கூறட்டும். என்னால் ஒன்றும் சொல்ல இயலாது என்று கூறிவிட்டான் இராசராசன்.

    இப்பொது திருப்பணி வேண்டாம்! வேண்டாம் என்று மக்கள் உரத்தக் குரலில் கத்தினார்கள்.

    அவையில் அமைதி நிலவியது.

    அரசே! இன்றைய நிலைமையில் மக்களின் தீர்ப்பு மிகவும் பொருத்தமானதே. நிதி நிலைமையும் சரியாக இல்லை. எங்கு பார்த்தாலும் நம்மீது எதிர்ப்புள்ளம் கொண்டவர்களே சூழ்ந்துள்ளார்கள். இந்நிலையில் நாம் நம்மைக் காத்துக்கொள்ளவே இயலாதவர்களாக உள்ளோம். அத்தகைய காலகட்டத்தில் நாம் திருப்பணி செய்வது கைகூடுகின்ற காரியமாகாது என்று கூறினார் படைத்தளபதி குணவீரத்தேவர்.

    ராஜகுரு வேகமாக எழுந்தார். அவரது முகத்தில் கோபம் பொங்கியது. அதைத்தான் உமது மகள் பூங்குழலி அப்போதே சொல்லி விட்டாளே! நீர் வேறு திருப்பிச் சொல்ல வேண்டுமா? என்று கோபமாகக் கேட்டார்.

    மூன்றாம் இராசராசன் புருவத்தை சுழற்றிக் கூட்டத்தைக் கவனித்தான்.

    அங்கே அந்த பூங்குழலியைக் காணவில்லை.

    மக்களின் தீர்ப்பைக் கேட்டபிறகாவது ராஜகுரு தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் என்றான் இராசராசன். "எனக்கு அதனால் ஒன்றுமில்லை. நாட்டில் நலனைக் கருதியே இதனைக் கூறினேன். கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவி, அதனைப் பேணிக்காத்தவர் மாமன்னன் இராசேந்திரர். அந்த சோழேசுவரர் ஆலயம் பாழ்பட்டுப் போகக்கூடாதென்று நான் எண்ணுவது தங்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காவுமே தவிர எனக்காக அல்ல. எது எப்படிப் போனால் என்ன? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். முடிவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை உண்மையை மறைத்து மன்னரைப்போற்றியே காலத்தைக் கழிப்பது என் நோக்கமல்ல என்று தளபதியையும், அமைச்சரையும் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.

    ராஜகுரு அவர்களே! தாங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மன்னரைப் போற்றி வாழ்வதுதான் நம் போன்றவர்களின் கடமை என்பதை மறந்துவிட்டீர்களே என்றார் அமைச்சர்.

    மன்னர் இராசராசன் அதற்குமேல் தாமதிக்க விரும்பவில்லை. போதும் உங்கள் வாதம்! இதோட அவை கலையட்டும் என்றான்.

    அவை கலைந்தது.

    இந்த ராஜகுருவுக்கு வேறுவேலை இல்லை. கஞ்சிக்கே இங்கே பெரும்பாடாக இருக்கிறது? கடவுளை நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? என்றான் ஒருவன்.

    அவர் சும்மா இருக்க மாட்டார். புதுப்புது யோசனைகளையெல்லாம் கூறி மன்னரையும் குழப்புவார். மக்களையும் குழப்புவார். அவர் ஒரு பெரிய குழப்பவாதி என்றான் அடுத்தவன்.

    அவர்கள் பேசியதெல்லாம் ராஜகுருவின் காதிலும் கேட்கத்தான் செய்தது. கேட்டு என்ன செய்வது? அவருடைய வாயைத்தான் மன்னன் முதல் மக்கள் வரை மூடிவிட்டார்களே?

    அமைச்சர் மும்முடியார் மன்னனின் பின்னால் நடந்தார். அவரோடு தளபதியும் நடந்தார். மூவரும் மன்னனின் மந்திராலோசனை மண்டபத்துள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் மன்னன் ஓர் இருக்கையில் அமர்ந்தான்.

    அமைச்சரே! தளகர்த்தரே! இப்படி அமருங்கள் என்ற ஓர் நீண்ட இருக்கையைக் காட்டினான்.

    அமைச்சரும், தளபதியும் அமர்ந்தார்கள். மன்னன் சுற்றிலும் நோட்டமிட்டான். பிறகு தனது பேச்சை ஆரம்பித்தான்.

    இன்றைய அரசியல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. நம் சோழநாட்டின்மீது அனைவருடைய கவனமும் சுற்றி வந்து கொண்டுள்ளது. இச்சமயத்தில் நமது ராஜகுரு இந்த திருப்பணிபற்றி ஏன் கூறவேண்டும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை என்றான் இராசராசன்.

    இராசராசன் அரசன்தான். ஆனால், அவனுக்கு இன்னும் முப்பது வயது நிறையவில்லை. மனதிலே உள்ள கலக்கமும், செயலிலே உள்ள தயக்கமுமே அவனை ஓர் கோழையாக்கி வருகிறது என்பதை அமைச்சர் நன்கறிவார். இராசராசனின் கேள்விகேட்டு அமைச்சரோ, தளகர்த்தரோ வியப்படையவில்லை. இருவரும் வாய்மூடி உட்கார்ந்திருந்தார்கள்.

    ஏன் இருவரும் பேசாமல் இருக்கிறீர்கள்? உங்களுக்கு இதன் காரணம் தெரியாதா? என்று பலமாகச் சிரித்தான் இராசராசன். ஏன் சிரிக்கிறான்? இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

    இராசராசன் எப்பொழுதும் இப்படித்தான்! திடீரென்று சிரிப்பான்; உடனே உம்மென்று ஆகிவிடுவான். குழந்தை உள்ளம் கொண்டவன் இராசராசன்.

    அமைச்சர் பெருந்தகையே! இத்தனை ஆண்டு காலமாக சோழப்பேரரசின் அமைச்சராக இருந்தும், நமது ராஜகுருவின் எண்ணம் புரியவில்லையா? என்றான் இராசராசன்.

    அமைச்சர் பேசவில்லை. தளபதி குணவீரத்தேவர் மட்டும் பேசினார்.

    எங்களுக்கு அதிகமாகத் தெரிய நியாயமில்லை அரசே! துறைத்தலைவர்களும், ஒற்றர்களும் தங்களின் நேரடிப் பார்வையில் இருக்கும்போது, எங்களுக்கென்ன தெரியும்? என்றார்.

    இராசராசன் சிரித்துக் கொண்டான்.

    குணவீரரே! உங்களுக்குக் குணமும் இருக்கிறது; வீரமும் இருக்கிறது. அதனால்தான் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள். உங்கள் மகளுக்கு குணமும் இல்லை; வீரமும் இல்லை என்று சிரித்தான் இராசராசன்.

    இராசராசன் எதை எதையோ சுற்றிப்பேசுகிறானே? அமைச்சருக்கு ஒரே குழப்பம்!

    உங்கள் மகள் அந்த அவையிலே ராஜகுருவை எதிர்த்துச் சொன்னதைக் கேட்டு ராஜகுருவுக்கு வந்த கோபத்தைப் பார்த்தீர்களா? அதனால்தான் சொன்னேன்... ராஜகுருவின் எண்ணத்திற்கேற்ப அவள் நடந்து கொள்ளவில்லை என்று என்றான் இராசராசன். அவனே தொடர்ந்தான். பாவம் இராஜகுரு. அவரது எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது. ராஜகுரு என்பவர் ராஜதந்திரத்தை மன்னனிடம் காட்டுகிறார்? என்றான் இராசராசன்.

    என்ன அரசே சொல்கிறீர்கள்? என்றார் அமைச்சர் புரியாமல்.

    நமது கங்கை கொண்ட சோழேசுவரர் கோவில் திருப்பணியை ஆரம்பித்து விட்டு, நம்மை பாண்டியனிடம் பிடித்துக் கொடுக்கப் பார்க்கிறார் ராஜகுரு என்று பலமாகச் சிரித்தான் இராசராசன்.

    அப்படியா, அரசே? என்றார் அமைச்சர்.

    அடப்பாவி என்றார் தளபதி.

    கவலைப்படாதீர்கள். பாண்டியன் சுந்தரன் அவ்வளவு மோசமானவனல்ல. அவனைப்பற்றி நான் நன்கறிவேன். ராஜகுருவின் விசுவாசம் இப்பொழுது பாண்டியன் சுந்தரனின் பக்கம் திரும்பியிருப்பதாக ஒற்றர் படைத்தளபதி உடையார் நேற்று இரவு என்னிடம் தெரிவித்தார். அப்படி ராஜகுரு நடந்து கொண்டாலும் ராஜகுருவை சுந்தரன் நம்பவில்லையாம். சுந்தரனுக்கு எப்பொழுதும் தன் வாள்மீதுதான் அபாரமான நம்பிக்கை என்றான் இராசராசன்.

    பிறகு ஏன் அரசே! இந்த அவையைக் கூட்டி திருப்பணி பற்றிப் பேசினீர்கள்? ராஜகுருவை அப்படியே உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே? என்றார் தளபதி.

    பொறுங்கள் குணவீரத்தேவரே! அவரைச்சுற்றி ஓர் குழுவே இங்கு செயல்படுவதாக உள் விவகாரங்களின் துறைத்தலைவர் கூறுகிறார். அதையும் கொஞ்சம் கண்காணிக்க வேண்டாமா? என்றான் இராசராசன்.

    அப்படியா அரசே? என்றார் அமைச்சர்.

    அமைச்சருக்கு எதுவுமே தெரியாதுபோலத் தெரிகிறது என்றார் தளபதி.

    தளபதியின் நிலைதான் என் நிலை. எல்லாத் துறைகளையும் தன் நேரடிப் பார்வையிலேயே நமது அரசர் வைத்துக் கொண்டாரே! நான் என்ன செய்வது? என்றார் அமைச்சர்.

    அவர் சொன்னது உண்மைதான். இராசராசன் தன் உடலையும்கூட நம்பாதவன். அப்படியிருக்க அமைச்சரையோ, தளபதியையோ எப்படி நம்புவான்? எதிலும் அவன் அவநம்பிக்கை கொண்டவன். எல்லாவற்றையும், தானே கவனிக்க வேண்டும். தன்னை அன்றி யாரும் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று அவன் கருதினான். அவனுடைய எண்ணத்தால் பல்வேறு இடைஞ்சல்கள் அவனுக்கு மட்டுமல்ல, சோழப் பேரசிற்கும் வருவதை அவன் அறியவில்லை. தன்மீது நம்பிக்கை வேண்டும். அதே சமயம் அடுத்தவரையும் நம்ப வேண்டுமல்லவா?

    ராஜகுருவிற்காக ஏன் அவையைக் கூட்டினீர்கள்? என்று கேட்டார் அமைச்சர்.

    "ராஜகுருவின் நிலையை நான் மட்டுமல்ல, நீங்களும் அறியவேண்டும். இந்த சோழப்பேரரசின் மக்களும் அறிய வேண்டுமென்றுதான் இவ்வாறு

    Enjoying the preview?
    Page 1 of 1