Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnodu Irukkum Ponnaana Nimidangal
Unnodu Irukkum Ponnaana Nimidangal
Unnodu Irukkum Ponnaana Nimidangal
Ebook120 pages39 minutes

Unnodu Irukkum Ponnaana Nimidangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடப்பவன் லிங்கேஷ். இவனை தன்னோட காதல் வலையில் சிக்க வைத்தாள் ஆரண்யா. இவர்களின் காதலுக்கு தடை போடுகிறார் ஆரண்யாவின் தந்தை ஜெயப்பிரகாஷ். இருவரும் தற்கொலை பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து லிங்க அருவிச் செல்கிறார்கள். அங்கே நடந்த மர்மங்கள் என்ன? விறுவிறுப்பான பாணியில் காண்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580128310159
Unnodu Irukkum Ponnaana Nimidangal

Read more from Maheshwaran

Related to Unnodu Irukkum Ponnaana Nimidangal

Related ebooks

Related categories

Reviews for Unnodu Irukkum Ponnaana Nimidangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnodu Irukkum Ponnaana Nimidangal - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடங்கள்

    Unnodu Irukkum Ponnaana Nimidangal

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    விடியலுக்கு இன்னும் நேரம் இருந்தது.

    மேற்கு வானத்தில் இன்னமும் தகதகப்பாய் முகம் காட்டிக் கொண்டிருந்தது. முக்கால் நிலவு.

    விடியப் போகிற பயத்தில் விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேகக் கூட்டத்தினுள் பதுங்கத் தொடங்கியிருந்தன.

    யார் வீட்டு சேவலோ அலாரம் வைத்தது போல ‘கொக்கரக்கோ’ எனக் கூவியது.

    நீளமான தெரு.

    இருபுறமும் வரிசை வரிசையாய் வீடுகள்.

    தெருமுனையில் சிவன் கோவில்.

    ‘ஓம் நமச்சிவாய’ மந்திரம் சன்னமான ஒலியில் ஸ்பீக்கரில் இருந்து கசிந்து கொண்டிருக்க...

    அடுக்களைக்குள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் பாக்கியம்.

    சாம்பாரும், காரச்சட்னியும், தேங்காய் சாட்னியும் சுடச்சுட எவர்சில்வர் வாளிகளில் தயாராய் இருக்க...

    பெரியசைஸ் இட்லி பானையில், வெந்து கொண்டிருந்த இட்லிகளை வெள்ளைத் துணியிலிருந்து தனித்தனியே எடுத்து ஹாட்பாக்ஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

    பாக்கியம் தள்ளுவண்டியில் வைத்து இட்லி வியாபாரம் செய்பவள். எல்லாவற்றையும் வீட்டிலேயே தயார் செய்து விடுவாள். அவளுக்கு அதுதான் வசதியும் கூட.

    தினமும் அதிகாலையிலேயே கிளம்பிவிடுவாள்.

    புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்புவாள்.

    அத்தனை இட்லிகளும் விற்றுத் தீர்ந்து விடும்.

    பாக்கியத்தின் கைப்பக்குவம் தனி.

    சுவையும் அதிகம்.

    அவளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.

    உடம்பு முடியவில்லை என்றால் கூட வியாபாரத்தை நிறுத்த முடியாது.

    வயது ஐம்பதைக் கடந்து விட்டது.

    ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள் பாக்கியம்.

    இருபத்தி ஐந்து வயதிலேயே கணவனை இழந்து... தன் மூன்று பிள்ளைகளையும் வளர்க்க அவள் பட்டபாடு கொஞ்சமல்ல...

    உறவுகளின் ஆதரவு இல்லாமல்...

    தனி மனுஷியாய்... தைரியமாய்... தன்னம்பிக்கையோடு... வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுத்தான், ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கிறாள்.

    இட்லி வியாபாரம்தான் கை கொடுத்தது.

    மூத்தவன் லிங்கேஷ்...

    அடுத்ததாய் அபர்ணா…

    கடைக்குட்டி அட்சயா...

    அபர்ணாவும், அட்சயாவும் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    லிங்கேஷ் எம்.காம். முடித்துவிட்டு, தனியார் வங்கியில் வேலை பார்க்கிறான்.

    நீ இன்னமும் ஏம்மா கஷ்டப்படணும்? அதான் நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேனே...

    நீ சம்பாதிச்சுட்டா போதுமா? நம்ம குடும்ப கஷ்டம் தீர்ந்திடுமா? ரெண்டு தங்கச்சிங்களையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடமுடியுமா?

    அம்மா...

    பணத்துக்கு தேவைகளா இல்லே... நீ சம்பாதிக்கிற பத்தாயிரம்... பதினைந்தாயிரம் எல்லாம் எம்மாத்திரம்? என் உழைப்பும் இருந்தாதான் சிறுகச் சிறுக... கொஞ்சம் பணம் சேமிக்கலாம். காதுக்கு, கழுத்துக்குன்னு... உன் தங்கச்சிங்களுக்கு கொஞ்சம் தங்கம் வாங்கலாம்! கீழே விழறவரைக்கும் நா ஓடிக்கிட்டேதான் இருப்பேன்... என்னைத் தடுக்காதே... என்றாள் கணீர் குரலில்.

    அம்மா சொல்வதும் சரியென்றே பட்டது.

    அதன்பிறகு லிங்கேஷ் அந்தப் பேச்சையே எடுப்பதில்லை.

    லிங்கேஷ் நல்ல அழகன்...

    மாநிறம்தான் என்றாலும் லட்சணமான முகம்.

    எந்தப் பெண்ணையும் திரும்பிப் பார்க்க வைக்கிற வசீகரம்...

    உடற்பயிற்சி செய்த வாளிப்பான தேகம்...

    நிறைய வரன்கள் லிங்கேஷ்க்கு வலிய தேடி வந்து கொண்டிருந்தது.

    எம் பொண்ணுங்களோட படிப்பு முடியணும்... நல்ல எடத்துல கரை சேர்க்கணும். அப்புறம்தான் லிங்கேஷைப் பத்தி யோசிக்கவே போறேன்... தயவு செய்து அதுவரைக்கும் யாரும் லிங்கேஷோட கல்யாணத்தைப் பத்தி பேசிக்கிட்டு இந்த வீட்டுப் பக்கம் வராதீங்க...

    கறாராய் சொல்லி விட்டாள் பாக்கியம்…

    அம்மா... நீ பாட்டுக்கு உன் விருப்பம் போல பேசாதேம்மா... அண்ணன் மனசுல என்ன நெனைக்குதோ...? கல்யாண ஆசை இருந்துச்சுன்னா... தடுக்காதேம்மா...!

    அபர்ணா லிங்கேஷிக்காகப் பரிந்து பேசினாள்.

    டேய் லிங்கேஷ்...! அபர்ணா சொல்றதை கேட்டியா? ஏதாவது மனசுல இருக்கா? சொல்லிடு? கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையோ கற்பனையோ இருந்தா வெளிப்படையா சொல்லிடு! நா தாராளமா சம்மதிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிடு. சந்தோஷமா குடும்பம் பண்ணு!

    இல்லம்மா என் மனசுல எதுவும் இல்ல... அவசரமாய் மறுத்தான் லிங்கேஷ்.

    உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ எம்புள்ளையாச்சே? பெருமிதப்பட்டாள் பாக்கியம்.

    இளவயதினரின் இதயத்தில் இருப்பதை இறைவனால் கூட கண்டுபிடிக்க இயலாது.

    பெற்ற தாயால் இயலுமா என்ன?

    இன்னமும் லிங்கேஷை சிறு குழந்தையைப் போல பாவித்துதான் கரிசனத்தைக் காட்டினாள் பாக்கியம்.

    கால்களுக்கு ஒரு தலையணை.

    தலைக்கு ஒரு தலையணை.

    கழுத்து வரைக்கும் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் லிங்கேஷ்.

    தினமும் விடிந்து வெகுநேரம் கழித்துதான் எழுவான்.

    எப்படியும் காலை எட்டு மணியை நெருங்கிவிடும்.

    அரக்கப் பரக்க எழுந்து குளித்து டிரெஸ் பண்ணி, டிபன் சாப்பிட்டது பாதி, சாப்பிடாதது பாதி என ஓடிக் கொண்டேயிருப்பான்.

    இன்றைக்கு அப்படியில்லை.

    வித்தியாசமான விடியலாய் இருந்தது.

    தலையணைக்கு கீழே வைத்திருந்த செல்போன் சிணுங்கி அவனை எழுப்பி விட்டது.

    போர்வையை உதறியபடி எழுந்தவன்... கண்களைக் கசக்கியபடியே செல்போனைக் கையிலெடுத்தான்.

    செல்போன் திரையில்...

    ‘ஆரண்யா செல்லம்’ என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தது.

    சொல்லு ஆரண்யா...

    இன்னைக்காச்சும் சீக்கிரம் எழுந்திரிக்கக் கூடாதாடா...? மறுமுனையிலிருந்து சிணுங்கலாய் ஒலித்தது தித்திப்பாய் ஒருகுரல்.

    ஏன்... இன்னைக்கு என்ன விசேஷம்?

    நடிக்காதேடா...

    நா எதுக்கு நடிக்கணும்... நிஜமாவே தெரியலை...

    நேத்தைக்கு பேசினதை மறந்துட்டியா?

    ஏதேதோ பேசினோம்... நெறைய பேசினோம்... நீ எதைப்பத்தி சொல்றேன்னு புரியலை ஆரண்யா...

    பக்கத்துல இருந்தீங்கண்ணா... ஓங்கி தலையில ஒரு குட்டு வெச்சு... ஞாபகப்படுத்தியிருப்பேன்... இப்ப எட்டி தொலைவில் இருக்கீங்க! என்ன செய்ய? நானே சொல்லிடுறேன்டா தடியா...

    சொல்லு... சொல்லு... லிங்கேஷ் உற்சாகமானான்.

    "இன்னைக்கு நீயும் நானும் தற்கொலை பண்ணிக்கப் போறோம்டா

    Enjoying the preview?
    Page 1 of 1