Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mangalathevan Magal
Mangalathevan Magal
Mangalathevan Magal
Ebook159 pages2 hours

Mangalathevan Magal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வரலாற்று அடிப்படையில் சிறுகதைகளோ, நாவலோ எழுதும் போது, உண்மைச் சம்பவ அடிப்படை இருந்தால், கடந்த காலச் சமூக வாழ்க்கை, நெறிமுறை, ஆட்சி ஆகியவற்றை எளிதில் அறிய முடியும்.

வரலாற்றுக் கதைகளில் பெரும்பாலும் அரச குடும்பத்தவர்களின் சொந்த வாழ்க்கையே சித்தரிக்கப்படுகின்றன; அந்தப்புர மகளிர், பட்டத்தரசி, இளவரசர், இளவரசி, அவர்கள் இதயத்தில் பூத்துப் பொலிந்த காதல்; பகைவர் மீது போர், ஒற்றர்கள் சூழ்ச்சி - என்று மன்னர்களைச் சுற்றியே சம்பவங்கள் கற்பனை செய்யப்படுகின்றன என்று விமர்சிப்பவர்கள் உளர்.

கடந்த காலச் சம்பவங்களைக் கருவாகக் கொண்டு கற்பனையும் சேர்த்து நாவல் புனையும் போது அரசர்களைத் தவிர அவர் ஆட்சிக் காலத்து மக்கள் வாழ்ந்த நிலை; அவர்கள் உணர்ச்சிகள் இவற்றையும் கருத்தில் கொண்டு எழுதினால் தொன்று நிகழ்ந்தனவற்றைப் படிப்போர் அறிய உதவியாக இருக்கும்.

அந்த வகையில் நான் எழுதும் வரலாற்றுப் புதினங்களில் நாட்டு மக்களையும் கதைப் பாத்திரங்களாகச் செய்து கதையில் அவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கத் தவறுவதில்லை.

வரலாற்று நாவல் எழுதச் சம்பவங்களைத் தேடிக் கல்வெட்டுகள், சாசனங்கள், ஆராய்ச்சியாளர் எழுதிய நூல்கள் இவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது கல்வெட்டுச் செய்தி ஒன்று என் மனத்தை ஈர்த்தது.

குலோத்துங்க சோழ மன்னரது ஆட்சிக் காலத்தில் பெண்கள் வறுமை நிலையால் தம்மை விற்றுக் கொண்ட செய்தி காணப்பட்டது.

அந்த அரசரது முப்பதாம் ஆட்சி ஆண்டில் வயிராதராயர் என்ற தலைவரும் அவர் மனைவியும் அடிமைகள் பலரை உடையவராயிருந்தனர் என்ற செய்தியும் கல்வெட்டிலிருந்து அறிய முடிந்த செய்தி.

என் மனத்தில் பல ஆண்டுகளாக இந்தச் செய்தி ஊறிக் கிடந்தது.

குலோத்துங்க சோழர், கோப்பெருஞ்சிங்கன், காஞ்சி மீது படையெடுத்த தெலுங்கு நாட்டுச் சிற்றரசன், குலோத்துங்கன் மகள் எல்லாரும் வரலாற்றுப் பாத்திரங்கள். வயிராதராயர் என்ற பெயர் கொண்ட தலைவரும் நிஜமே. அடிமைகளாகத் தங்களைத் தாங்களே பெண்கள் வறுமை காரணமாக விற்றுக் கொண்ட செய்தியும் உண்மை. பெண்கள் பெயர், அவர்களது கற்பனை. இந்த நான்கு கோட்டிற்குள் நிகழ்ந்த சம்பவங்கள் மட்டுமே என் கற்பனை.

- விக்கிரமன்

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580103205260
Mangalathevan Magal

Read more from Vikiraman

Related to Mangalathevan Magal

Related ebooks

Related categories

Reviews for Mangalathevan Magal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mangalathevan Magal - Vikiraman

    http://www.pustaka.co.in

    மங்கலத்தேவன் மகள்

    Mangalathevan Magal

    Author:

    விக்கிரமன்

    Vikiraman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vikiraman-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    முன்னுரை

    வரலாற்று அடிப்படையில் சிறுகதைகளோ, நாவலோ எழுதும் போது, உண்மைச் சம்பவ அடிப்படை இருந்தால், கடந்த காலச் சமூக வாழ்க்கை, நெறிமுறை, ஆட்சி ஆகியவற்றை எளிதில் அறிய முடியும்.

    வரலாற்றுக் கதைகளில் பெரும்பாலும் அரச குடும்பத்தவர்களின் சொந்த வாழ்க்கையே சித்தரிக்கப்படுகின்றன; அந்தப்புர மகளிர், பட்டத்தரசி, இளவரசர், இளவரசி, அவர்கள் இதயத்தில் பூத்துப் பொலிந்த காதல்; பகைவர் மீது போர், ஒற்றர்கள் சூழ்ச்சி - என்று மன்னர்களைச் சுற்றியே சம்பவங்கள் கற்பனை செய்யப்படுகின்றன என்று விமர்சிப்பவர்கள் உளர்.

    கடந்த காலச் சம்பவங்களைக் கருவாகக் கொண்டு கற்பனையும் சேர்த்து நாவல் புனையும் போது அரசர்களைத் தவிர அவர் ஆட்சிக் காலத்து மக்கள் வாழ்ந்த நிலை; அவர்கள் உணர்ச்சிகள் இவற்றையும் கருத்தில் கொண்டு எழுதினால் தொன்று நிகழ்ந்தனவற்றைப் படிப்போர் அறிய உதவியாக இருக்கும்.

    அந்த வகையில் நான் எழுதும் வரலாற்றுப் புதினங்களில் நாட்டு மக்களையும் கதைப் பாத்திரங்களாகச் செய்து கதையில் அவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கத் தவறுவதில்லை.

    வரலாற்று நாவல் எழுதச் சம்பவங்களைத் தேடிக் கல்வெட்டுகள், சாசனங்கள், ஆராய்ச்சியாளர் எழுதிய நூல்கள் இவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது கல்வெட்டுச் செய்தி ஒன்று என் மனத்தை ஈர்த்தது.

    குலோத்துங்க சோழ மன்னரது ஆட்சிக் காலத்தில் பெண்கள் வறுமை நிலையால் தம்மை விற்றுக் கொண்ட செய்தி காணப்பட்டது.

    அந்த அரசரது முப்பதாம் ஆட்சி ஆண்டில் வயிராதராயர் என்ற தலைவரும் அவர் மனைவியும் அடிமைகள் பலரை உடையவராயிருந்தனர் என்ற செய்தியும் கல்வெட்டிலிருந்து அறிய முடிந்த செய்தி.

    என் மனத்தில் பல ஆண்டுகளாக இந்தச் செய்தி ஊறிக் கிடந்தது.

    குலோத்துங்க சோழர், கோப்பெருஞ்சிங்கன், காஞ்சி மீது படையெடுத்த தெலுங்கு நாட்டுச் சிற்றரசன், குலோத்துங்கன் மகள் எல்லாரும் வரலாற்றுப் பாத்திரங்கள். வயிராதராயர் என்ற பெயர் கொண்ட தலைவரும் நிஜமே. அடிமைகளாகத் தங்களைத் தாங்களே பெண்கள் வறுமை காரணமாக விற்றுக் கொண்ட செய்தியும் உண்மை. பெண்கள் பெயர், அவர்களது கற்பனை. இந்த நான்கு கோட்டிற்குள் நிகழ்ந்த சம்பவங்கள் மட்டுமே என் கற்பனை.

    - விக்கிரமன்

    *****

    1

    அம்பலவாணன் திருக்கோயிலின் மணி ஓசை ‘டாண் டாண்' என்று ஒலித்துக் கொண்டிருந்தது. சந்தியா காலப் பூசையைக் காணக் கூத்தரசனின் சபை முன்பு மக்கள் கூடியிருந்தனர். பொன் விமானத்தின் மீது தன் கதிர்க் கரங்களை நீட்டித் தழுவிய கதிரவனின் பொன் ஒளியில் விமானம் மேலும் புத்தழகு பெற்று விளங்கியது.

    குமார நம்பியும் தீப ஒளி காணக் கோவிந்தராசர் சந்நிதி ஓரம் காத்திருந்தாலும், அவன் விழிகள் கீழைக் கோபுர வாயிலை நோக்கியே இருந்தன. தாளத்தின் ஓசையும், முழவொலியும், வீணையின் நாதமும், பதிகப் பாடலும் முடிந்து திருநீறு பெற்று மக்கள் மெல்லக் கலையத் தொடங்கிய பிறகும் தூண் அருகே நின்ற குமாரநம்பி நகரவில்லை.

    நம்பி! என்ற குரல் கேட்டவுடன் நம்பி திடுக்கிட்டுத் திரும்பினான்.

    மங்கலத்தேவன் நின்று கொண்டிருந்தார். அவருடைய அடர்ந்த புருவமும், முகத்தில் பாதியை மறைக்கும் மீசையில் பாதி நரைத்திருந்தாலும், அவருடைய முகத்தில் மூப்பின் சின்னங்கள் ரேகை விட்டிருந்தாலும் அவருடைய குரலில் கம்பீரம் மட்டும் குறையவில்லை.

    குமாரநம்பி முகத்தில் தேங்கியிருந்த ஏமாற்ற உணர்ச்சியை மாற்றிக் கொண்டு வணக்கங்க, நலமாயிருக்கிறீர்களா? என்று மெல்லிய நகையுடன் கேட்டான்.

    நலந்தான் தம்பி! தில்லை பொன்னம்பலவாணர் அருளாலும், குலோத்துங்க சோழ சக்கரவர்த்திகளின் ஆதரவாலும் சௌக்கியத்துக்கு ஒரு குறையும் இல்லை. நீ நலமாயிருக்கிறாயா? உன் தாயார் நலமாயிருக்கிறார்களா? என்று நலம் விசாரித்தார் மங்கலத்தேவன். மங்கலத் தேவனுக்குத் தெரியாத குடும்ப விஷயங்களே இராது எனலாம். சோழ நாட்டின் முக்கியப் புள்ளிகளைப் பற்றிய செய்தியைத் தெரிந்து வைத்திருப்பது அவரது இயற்கைக் குணம் மட்டும் இல்லை; அவரது வேலையுங்கூட.

    நம்பியின் முகம் மெல்ல மாறியது. அவனது விழிகளில் துக்கத்தின் சாயை இருந்தாலும், கோபுர வாயிலை எதிர்நோக்கிப் பார்க்கும் ஏக்கமும் இருந்தது.

    தாயார் காலமாகி ஆறு மாதங்களாகிவிட்டன. பாட்டா என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

    மங்கலத்தேவன் குரலில் சோகம் ஒலிக்க, அந்தத் துயரச் செய்தி காதில் விழுந்தது. ஆனால், உண்மை தானா என்று அறிந்து கொள்ள முடியவில்லை. உம்... என்று பெருமூச்சு விட்டவர், நீ இன்று இரவு இங்கேயே தங்கிவிடப் போகிறாயா? என்று கேட்டார்.

    சிதம்பரத்தில் இரவு தங்குவதா அல்லது ஊருக்குத் திரும்பி விடுவதா என்று அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து பல ஊர்களுக்கு விஜயம் செய்து வரும் குலோத்துங்க சோழ சக்கரவர்த்தியின் மெய்க்காவல் படை வீரர்களுள் குமாரநம்பியும் ஒருவன்.

    குலோத்துங்க சோழர், தில்லை அம்பலவாணரைத் தரிசித்து, நூற்றுக்கால் மண்டபத்தில் தங்கியிருந்து நாள்தோறும் சபையை நடத்தி அன்று தான் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டார். குமாரநம்பி மட்டும் உத்தரவு பெற்றுச் சிதம்பரத்திலேயே அன்று தங்கிவிட்டான். சொந்த ஊருக்குச் சென்று வருவதாக அவன் காரணம் கூறியிருந்தாலும் வேறு காரணம் அவன் இதயத்துக்கு மட்டுமே தெரிந்தது.

    அந்த மூன்று நாள்கள் பழக்கம் அவனிடம் எவ்வளவோ மாறுதலை ஏற்படுத்தி விட்டது.

    அந்த விழிகளுக்குத் தான் எவ்வளவு சக்தி! அவன் அந்த நாள்களின் அனுபவத்தைச் சற்று நினைவு படுத்திக் கொண்டான்.

    அவள் தந்தையின் பக்கமாக மிக அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தாலும் அந்த விழிகளுக்கு அச்சம் என்பதே கிடையாதோ? அவை சுழன்றன, துள்ளின, பாய்ந்தன, பாய்ந்து இதயத்துக்குள் நுழைந்தன.

    ஐயா! சக்கரவர்த்திகளை நான் சந்தித்துச் சமூகத்திடம் வேண்டுகோள் ஒன்று தெரிவிக்க வேண்டும் என்று அவளுடைய தந்தை மிகவும் பயபக்தியுடன் அவனிடம் கேட்டபோது, நம்பி உள்ளூர நகைத்துக் கொண்டான். சக்கரவர்த்திகளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்பதற்குக் கூட இவ்வளவு அச்சமா என்று வியந்தான்.

    பெரியவரே, உமது பெயர் என்ன? எந்த ஊர்? உம்மைச் சக்கரவர்த்திகளுக்கு முன்பே தெரியுமா? என்று நம்பி, தன் அதிகார தோரணையுடன் கேட்டுத் தன் பார்வையை அவரது பின்புறம் நின்றிருந்த விழி அழகியின் பக்கமும் செலுத்தினான்.

    என் பெயர் ஆதிரையன் மாதேவன். என்னைச் சக்கரவர்த்தி தெரிந்து கொண்டிருக்க முடியாது. வெள்ளாற்றங்கரை ஓரம் வீரப்பட்டினத்தில் சிறிது நிலங்களை வைத்துக் கொண்டு உழுது பயிரிட்டு வாழ்ந்து வருகிறேன். இவள் என்னுடைய மூத்த மகள் சிந்தாமணி என்று கூறித் தம் மகள் பக்கம் திரும்பினார்.

    இதுவரையில் கம்பீரமாக விழிக் கணைகளை வீரனான நம்பியின் மீது வீசிக் கொண்டிருந்த சிந்தாமணி தலையைக் குனிந்து கொண்டாள்.

    இவ்வளவு விவரமும் தனக்குத் தெரிய வேண்டுமா என்று நம்பி ஒரு கணம் யோசித்தான். அவர் கூறியவற்றைக் காதிலே போட்டுக் கொள்ளாதவன் போல், தாங்கள் சக்கரவர்த்திகளை எதற்காகச் சந்திக்க வேண்டும்? என்று ஒரு கேள்வியை வீசினான்.

    அதுவரை மிகவும் பணிவாகப் பேசிய மாதேவன், ஐயா, தங்களிடம் தெரிவிக்க வேண்டிய செய்தி இல்லை அது. எனக்குச் சக்கரவர்த்திகளைத் தான் பார்த்துப் பேச வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியது கேட்டு நம்பி ஒரு கணம் திகைத்தான். கோபம் கொண்டு விட்டாரோ?

    சக்கரவர்த்திகள் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்கள். இப்போது சந்திக்க முடியாது என்றான்.

    இப்போது அவன் விழிகளும் சிந்தாமணியின் விழிகளும் நேருக்கு நேர் சந்தித்தான். மட்டியூர், கழிக்கோட்டைப் போர்க்களங்களில் அவன் பாண்டியப் படைவீரர்களை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறான். அப்போது காணாத வேலின் வேகத்தை இப்போது இங்கு அதிகமாகவே உணர்ந்தான்.

    மாதேவன் பேசுவதற்கு முன்பே அவன் பேசினான்; அவசியம் பார்க்க வேண்டுமென்றால் இன்று மாலை ‘இராஜராஜ விஜயம்' நாடகத்துக்குப் பிறகு வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறேன் என்றான்.

    அவர் திரும்பித் தம் மகளைப் பார்த்தார். அந்தப் பார்வை நாடகத்தைக் காணத் தங்கியிருக்க வேண்டுமா என்று கேட்பது போல் தோன்றியது.

    வேண்டாம் அப்பா! நாம் ஊர் திரும்பி விடுவோம் என்று சிந்தாமணி மெல்லக் கூறினாள். அந்த மென்மையான சொற்களில் கடுமையும் அழுத்தமும் கலந்திருந்தன.

    ஏம்மா, உனக்கு நாடகம் பார்க்க ஆசையில்லையா? நேற்றுச் சொன்னாய், நாடகம், சித்திரக் கூடத்தில் நடக்கும் நடனம் எல்லாம் பார்க்க வேண்டுமென்றாய்...? என்று மகளைக் கேட்டார்

    Enjoying the preview?
    Page 1 of 1