Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Harshavardhanar – Part 2
Harshavardhanar – Part 2
Harshavardhanar – Part 2
Ebook498 pages3 hours

Harshavardhanar – Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வடபாரதத்தில் மெளரியர்கள், மற்றும் இந்தியாவின் பொற்காலம் என்றழைக்கப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்கு இணையாக; வர்த்தன மன்னர்களில் சிறப்பாகத் திகழ்ந்தவர் “பரமபத்தாரக மகாராஜாதி ராஜர் என்றழைக்கப்பட்ட “ஹர்ஷவர்த்தனர்” ஆவார். இவர் தான் வர்த்தனராஜ்யத்தை சாம்ராஜ்யமாக்கியவர். கி.பி.606 முதல் கி.பி.647 வரை “ஹர்ஷவர்த்தனர்” சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்ததாக சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது. இந்த வர்த்தன சாம்ராஜ்யத்தை “ஹர்ஷவர்த்தனர்” தன் பதினாறாவது வயதில் தவிர்க்க முடியாத அசாதாரண நிலையில் வர்த்தனராஜ்ய மன்னராக முடிசூட்டிக்கொண்டது முதல் ஆறு ஆண்டுகளிலே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் சிறப்பு - பெருமை எத்தன்மையுடையது என்பதை விவரிக்கும் முகமாக உருவானதுதான் இந்த சரித்திர நாவல்.

சரித்திர நாவல்களுக்கே உரிய இலக்கணங்கள் என்று உருவாக்கப்பட்டவைகளிலிருந்து இந்த சரித்திர நாவல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும். தேவையற்ற அதிகப்படியான வர்ணனைகள், சிருங்கார ரசங்கள் வார்த்தை ஜாலங்களுடன் கூடிய சலிப்படைய வைக்கும் உரையாடல்கள் என்று அதிகம் இருக்காது. கதையுடன் ஒட்டிய அளவிலே இருக்கும் என்பதுடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கதைப்போக்கு செல்லும். படிக்க சலிப்பாகி பக்கங்களைத் தள்ளிவிடும் நிலை ஏற்படாது. ஒருபக்கத்தைக்கூட தள்ளிவிட முடியாத அளவில் சம்பவங்களின் சேர்க்கை இருக்கும். வர்ணனைகள், சிருங்கார ரசம், வார்த்தை ஜாலங்களுடன் எனக்கு எழுதவராது என்பதல்ல.

“ஹர்ஷவர்த்தனர்” வாழ்க்கையே 16 வயது முதல் போராட்டம்தான். அடுத்தடுத்து வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்கள்; பெரும் போர்கள் என்று 16 வயதில் பட்டத்திற்கு வந்தது முதல் நிற்கவே நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்த நிலையால் சரச சல்லாபங்களை அதிகம் சேர்க்க என்மனம் ஒப்பவில்லை. இனிகதைக்குள் நுழையலாம்! வாருங்கள்.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580147407483
Harshavardhanar – Part 2

Read more from M. Madheswaran

Related to Harshavardhanar – Part 2

Related ebooks

Related categories

Reviews for Harshavardhanar – Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Harshavardhanar – Part 2 - M. Madheswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹர்ஷவர்த்தனர் - பாகம் 2

    Harshavardhanar – Part 2

    Author:

    மு. மாதேஸ்வரன்

    M. Madheswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-madheswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    அத்தியாயம் - 36

    அத்தியாயம் - 37

    அத்தியாயம் - 38

    அத்தியாயம் - 39

    அத்தியாயம் - 40

    அத்தியாயம் - 41

    அத்தியாயம் - 42

    அத்தியாயம் - 1

    கன்னோசி நகரம் அந்தக் காலை போதில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருந்தது. அடுத்து அடுத்து சோகமயமான சம்பவங்களைச் சந்தித்தும் மக்கள் கவலைகளை உள்ளடக்கிக் கொண்டு வளைய வந்தனர். கங்கை நதியிலே வழக்கம் போலப் படகுகள், தோணிகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தது. மக்களின் உள்ளத்தில் எப்போது வெற்றிச் செய்தி வரும் என்ற ஆவல் இருந்தது. மன்னவரைத்தான் இழந்தாயிற்று. மகாராணியாகிலும் வந்துவிட்டால் பரவாயில்லை. கன்னோசி மன்னருக்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. எனவே கன்னோசியின் நிலைமை என்னவாகும் என்பது புரியாமல் மக்கள் மருண்டார்கள்.

    ஹர்ஷனின் நிலை மக்களைவிடவும் குழப்பமாக இருந்தது. படைகள் சென்று ஒரு பட்சமாகப் போகின்றது. இன்னும் விவரம் என்னவென்று தெரியவில்லை. இராஜரீக விஷயங்களின் அவன் கவனம் செல்லவில்லை. ஏதோ ஒப்புக்கு அமைச்சர் கல்யாணவர்மருடன் சிறிது நேரம் ஆலோசனை செய்வான். மற்ற நேரங்களில் புரவியேறி கன்னோசி நகரைச் சுற்றுவான். கங்கை கரைக்கு வந்து அந்த கங்கை மங்கையின் எழிலிலே தன்னை மறந்து இலயித்து கரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பான். கங்கையில் படகுகளும், தோணிகளும் போவதையும் வருவதையும் பார்க்க அவனுக்குப் பரவசமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், சில பறவைகள் நதியிலுள்ள மீன்களை வேட்டையாடும் அழகினை இரசித்தவாறே நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்திருப்பான். மீன் பிடிக்கும் செம்படவர்கள் வலைகளை வீசி மீன்களைப் பிடிப்பதையும், சில நேரங்களில் கங்கையின் முதலைகள் ஒன்றோடொன்று சண்டை போடுவதையும், கவனித்தவாறே உட்கார்ந்திருப்பான். ஒருமுறை கல்யாணவர்மருடன் காசி மாநகருக்கும் சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு வந்தான்.

    இவ்வாறு பொழுதைப் போக்கி வந்த ஹர்ஷனுக்குத் தேவையான செய்தி காற்றினும் கடுகி வந்த இரு வீரர்கள் மூலம் தெரிந்தது. மாளவம் பிடிபட்டு இராஜ்யஸ்ரீ மீட்கப்பட்டு மாதவகுப்தனுக்கு முடிசூட்டியதும், மாதவகுப்தனின் வேண்டுகோளுக் கிணங்கி மாளவ தலைநகரிலே சில நாட்கள் மாமன்னர் இராஜ்யவர்த்தனரும் மற்றவர்களும் தங்க நேர்ந்ததால் கன்னோசிக்கும், தானேஸ்வரத்திற்கும் வெற்றிச் செய்தியை அறிவிக்க லிகிதங்களுடன் ஆட்களை அனுப்பிவிட்டார்.

    இவ்வாறு புறப்பட்டவர்கள் சம்பல் நதியைத் தாண்டியதும் தானேஸ்வரத்திற்கும் கன்னோசிக்கும் பிரிந்து பயணம் செய்தார்கள். கன்னோசியை அடைந்த வீரர்கள் வெற்றிச் செய்தியைச் சொன்னதும் மாமன்னரின் லிகிதத்தைக் கொடுத்தார்கள். வெற்றிச் செய்தியையும் தங்கை மீட்கப்பட்ட செய்தியும் ஹர்ஷனுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதலாக இருந்தது. லிகிதத்தை பிரித்துப் படித்தான் ஹர்ஷன்.

    ‘அன்பும் பாசமும் உள்ள தம்பி ஹர்ஷனுக்கு, அண்ணன் எழுதிக் கொண்டது. உன் விருப்பப்படியே நம் படைகள் மாளவத்தை வெற்றி கொண்டு தங்கை மீட்கப்பட்டாள். எனினும் தேவகுப்தன் தப்பிவிட்டார். இளையவர் மாதவகுப்தன் முடிசூட்டப்பட்டுவிட்டார். விரைவில் தங்கையுடனும் படைகளுடனும் கன்னோசி வந்துவிடுவேன்.’

    இங்கனம்

    அண்ணன் இராஜ்யவர்த்தன்.$

    லிகிதத்தைப் படித்ததும் ஹர்ஷன் மகிழ்ச்சியடைந்தான். தங்கையை காணப் போகின்றோம் என்ற உணர்வே அவனுக்கு மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

    அமைச்சரே! வெற்றியுடன் வருபவர்களுக்கு வரவேற்பளிக்க வேண்டும் என்று ஹர்ஷன் சொல்ல மன்னர் மறைந்ததையும் சற்று மறந்துவிட்டு மக்களுக்கு பறையறிவிப்போர் மூலம் செய்தி தெரிய ஏற்பாடு செய்தார் அமைச்சர் கல்யாணவர்மர்.

    கன்னோசி இவ்வாறு இருக்க அங்கே தானேஸ்வரத்திலும் வெற்றிச் செய்தியும் இராஜ்யஸ்ரீ சிறை மீட்கப்பட்ட செய்தியும் கிடைத்ததும் எல்லோரும் சோகத்தையும் மறந்து உற்சாகமாக இருந்தார்கள். மாமன்னர் கன்னோசி சென்றுவிட்டு தானேஸ்வரம் திரும்புவதாகவும் படைகள் தானேஸ்வரம் திரும்பியதும் முக்கிய ஆலோசனைக்காக தலைமை அமைச்சர் மல்லிகார்ஜுனரும் சிம்மேந்திரரும் கன்னோசிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    மக்களுக்கு வெற்றிச் செய்தி தெரிவிக்கப்பட்டதும் மாமன்னரையும் இளவரசியாரையும் உடனே பார்க்க முடியவில்லையே என்று மக்கள் வருத்தப்பட்டார்கள். வெற்றிச் செய்தி தூதுவன் மூலம் தட்சசீலத்துக்கும் அறிவிக்கப்பட்டது. தட்சசீலத்திலும் வெற்றிச் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. மன்னர் வீரமார்த்தாண்டருக்கு இருப்பே கொள்ளவில்லை. எனவே தகவல் கிடைத்ததும் அவரும் தானேஸ்வரத்திற்குப் புறப்பட்டுவிட்டார். இந்த வெற்றியில் அவருக்கும் பங்குண்டல்லவா? இப்படி இரு இடத்திலும் கவலையை மறந்து சற்று சந்தோஷமாக இருப்பவர்களுக்கு மறுபடியும் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சி ஏற்படப் போகின்றது.

    யமுனைக்கரையிலிருந்து அளவில்லாத சோகத்துடன் மாமன்னர் இராஜ்யவர்த்தனரின் உடலுடன் கன்னோசி புறப்படத் தயாரான தளபதி மிகிரகுலன் இரு வீரர்களின் மூலமாக தானேஸ்வர தலைமை அமைச்சர் மல்லிகார்ஜுனருக்கு நடந்த நிகழ்ச்சிகளை விளக்கமாக ஒரு லிகிதத்தில் எழுதி முத்திரையிட்டு உடன் அனுப்பி வைத்துவிட்டு கன்னோசி நோக்கி பயணத்தைத் துவக்கினான். மாமன்னர் உடல் இரதத்தில் வர படைகள் தாங்க முடியாத சோகத்துடன் புறப்பட்டது.

    ‘இளவரசர் ஹர்ஷவர்த்தனரிடம் இந்த சோகத்தை எப்படிக் கூறுவது? அவர் எப்படி இதைத் தாங்கப் போகின்றார்? மாவீரன் அட்சயன் உடனிருந்து படைகளுடன் தானும் இருந்தும் வங்க மன்னன் சூழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டானே? மகாராணி மற்றும் அட்சயனின் நிலை என்ன ஆயிற்றோ?’ என்று கலங்கியவாறே உணவையும் மறந்தவர்களாய் படைகள் பின் தொடர மிகிரகுலன் பல விதமான கலக்க சிந்தனைகளுடன் புரவியில் கன்னோசி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். மாமன்னர் உடலைச் சேர்த்தவுடன் கடமையிலிருந்து தான் தவறிவிட்டதற்காக தன்னை மாய்த்துக் கொள்வது என்று முடிவுடன் இருந்தான்.

    வெற்றியுடன் படைகளும் மாமன்னரும் மகாராணியாரும் வருவார்கள் என்று காத்திருந்த கன்னோசி மக்களுக்கு பேரிடி. வரும் வழியிலேயே சோகத்துடன் வரும் படைகளைக் கண்ட மக்கள் என்னவோ என்று பதறி மெதுவாகப் படை வீரர்கள் சொன்ன செய்தியைக் கேட்டதும் ஐயோவென்று கத்தி கதறிவிட்டார்கள்.

    இது என்ன சோதனை? இந்த இறைவனுக்கு கருணையே இல்லையா? எத்தனை பெரிய கொடுமை என்று அரற்றினார்கள். படைகளின் பின்னலேயே மக்கள் கூட்டம் தொடர்ந்தது. அவர்களைத் தடுக்க படை வீரர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    விஷயம் மெல்லப் பரவி படை வீரர்களைவிட அதிகமான மக்கள் கூட்டம் பின் தொடர்ந்து வந்தது. கன்னோசி கோட்டையை நெருங்கிவிட்டார்கள். கோட்டை மேலிருந்து படைகளையும் உடன் வரும் பெரும் மக்கள் கூட்டத்தை ஹர்ஷனும், அமைச்சரும் மற்றும் முக்கியஸ்தர்கள் கண்டார்கள். வெற்றிக் களிப்பில் ஆரவாரத்துடனும் எக்காளம் கொம்புகள் முழங்க வெற்றி முரசம் ஒலிக்க வரவேண்டிய படைகள் ஏன் இப்படி அமைதியாக வருகின்றது? கோட்டை மேல் நின்று பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எனினும் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பது மட்டும் தெரிந்ததால் கோட்டையிலிருந்து வெற்றி பெற்று வரும் படைகளை வரவேற்க முழங்கும் மங்கள முழக்கங்கள் முழங்கவில்லை.

    கோட்டைக் கதவு திறந்திருக்க படைகள் அமைதியாக கன்னோசி நகரில் நுழைய தொங்கிய தலையுடனும் கலக்கமான கண்களுடனும் தளபதி மிகிரகுலன் மாமன்னர் உடல் வைக்கப்பட்டிருந்த இரதத்தின் அருகிலேயே வந்தான். கோட்டை மதில் மேலிருந்து கீழே இறங்கி வந்த இளவரசரையும் அமைச்சர் மற்றும் பிரமுகர்களையும் கண்டதும் படைகள் சட்டென்று நின்றது.

    இரதத்தின் அருகில் வந்து ஹர்ஷனும் அமைச்சரும் இரதத்தின் உள்ளே நோக்கியதும் அண்ணா..! என்று ஹர்ஷன் அலற, மாமன்னரே..! என்று அமைச்சர் அலற, எல்லோருமே கதற ஆரம்பித்துவிட்டார்கள். ‘வெற்றியடைந்துவிட்டோம்.. தங்கையுடன் வருகின்றேன்’ என்று செய்தியனுப்பியவர் இன்று உயிரற்ற சடலமாக வந்தால் எப்படியிருக்கும்? தங்கையையும் காணவில்லை.

    சற்று நேரம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ஹர்ஷன் சட்டென்று சுயநிலை அடைந்து அரண்மனை நோக்கிச் செல்ல உத்தரவிட்டான். ஹர்ஷனைக் கண்டதும் புரவியின் மேலிருந்து கீழே இறங்கிய தளபதி மிகிரகுலன் அதற்கு மேல் தாங்க முடியாமல் ஹர்ஷனின் கால்களிலே விழுந்து கதறிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டான். தன் காலடியில் விழுந்த தளபதியைத் தூக்கிய ஹர்ஷன் ஆறுதலாக அவனைத் தட்டிக் கொடுத்தான்.

    எல்லோரும் நிலைகுலைந்த நிலையில் சற்றும் நிலைகுலையாதவன் ஹர்ஷன்தான். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும் நிலைமையை யூகித்துக் கொண்டு தன் பொறுப்பை உணர்ந்து உறுதியாகிவிட்டான். தளபதியை அணைத்தவாறே நடந்தே இரதத்துடன் அரண்மனை நோக்கிச் சென்றான். ஹர்ஷனுடன் அமைச்சரும் பிரதானிகளும் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் கண் கலங்கியவாறே சென்றார்கள். தானேஸ்வரத்திற்கும் கன்னோசிக்கும் ஏன் இத்தனை சோதனை? அடுத்தடுத்து எத்தனை சோகங்கள்!

    அரண்மனையை அடைந்ததும் மாமன்னரின் உடல் அரண்மனைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு கொலுமண்டபத்தில் மஞ்சம் ஒன்று போட்டு அதில் கிடத்தப்பட்டது. சுற்றி வீரர்கள் நிற்க சற்றுத் தள்ளி இருந்த ஆசனங்களில் ஹர்ஷன் தன்னருகே தளபதி மிகிரகுலனை அமர்த்திக் கொள்ள மற்றவர்களும் ஆசனங்களில் அமர்ந்தார்கள் ஹர்ஷனே பேசினான்.

    தளபதியாரே! சற்று சோகத்தை மறந்துவிட்டு என்ன நடந்தது என்பதை விவரமாகச் சொல்லுங்கள். நடந்தது நடந்துவிட்டது. அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டுமல்லவா? பதினாறு பிராயமே ஆனாலும் ஒரு பெரும் வீரனுக்குரிய மன உறுதியோடும் தெளிவோடும் ஹர்ஷன் பேசினான்.

    சட்டென்று பதில் சொல்ல தளபதியால் முடியவில்லை. சோகம் நெஞ்சை அடைக்க திணறித்தான் பேசலானான்.

    பிரபு! வங்க மன்னன் சசாங்கன் மோசம் செய்துவிட்டான். யமுனைக்கரையில் நல்லவன் போல் நடித்து இரவு வஞ்சகமாக மாமன்னரைக் கொன்றுவிட்டு மகாராணியாரைக் கடத்திக் கொண்டு சென்றுவிட்டான்.

    அட்சயர் இருந்தும் இது எப்படி சாத்தியமாயிற்று தளபதியாரே?

    நடந்த விவரங்களை தெளிவாக தளபதி சொன்னான். கேட்க கேட்க அனைவருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. தேவகுப்தனைவிடவும் மோசக்காரனாகவல்லவா சசாங்கன் மாறிவிட்டான். அவனாவது போரிட்டு கிரகவர்மரைக் கொன்று இராஜ்யஸ்ரீயைக் கடத்தினான். ஆனால் இவனோ நல்லவன் போல் நடித்து நயவஞ்சகம் புரிந்துவிட்டானே!

    அப்படியென்றால் அட்சயரின் நிலை என்னவாயிற்று என்று உறுதியாகத் தெரியவில்லையா தளபதியாரே?

    இல்லை பிரபு! என்னுடைய யூகம் அட்சயனையும் சேர்த்து கடத்தியிருந்தால் எப்படியும் மகாராணியாரைக் காப்பாற்றிவிடுவார் அட்சயர். அப்படி இல்லாமல் இரவே அட்சயரையும் கொன்று யமுனையில் போட்டிருந்தால் மகாராணியாரின் நிலையைப் பற்றித்தான் கவலை அதிகமாகிறது.

    தனக்கு ஏற்படும் ஆத்திரத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் ஹர்ஷன்.

    தானேஸ்வரத்திற்கு அங்கிருந்தே தகவல் அனுப்பிவிட்டீர்களா தளபதியாரே?

    ஆம் பிரபு! தகவல் மட்டும் அனுப்பிவிட்டேன். மாமன்னருடன் தானேஸ்வரம் செல்வதா கன்னோசி செல்வதா என்ற குழப்பம். முடிவில் கன்னோசி அருகில் இருப்பதாலும் தாங்களும் இருப்பதால் கன்னோசிக்கே புறப்பட்டுவிட்டோம். பிரபு! மாமன்னரையும் மகாராணியாரையும் காக்க முடியாமல் என்னுடைய கடமையில் இருந்து தவறிவிட்டேன். எனவே எனக்கு தாங்கள் தண்டனை அளிக்க வேண்டும். அல்லது நானே தண்டனை அளித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றான் மிகிரகுலன்.

    அவனுடைய கடமைப்பற்றை ஹர்ஷன் உணர்ந்து கொண்டு தளபதியவர்களே! இதில் உங்களுடைய தவறு எதுவுமில்லை. அட்சயர் மேல் வேண்டுமானால் சொல்லாம். அவர்தான் மாமன்னரின் மெய்க்காப்பாளர். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் அவர் மேல்கூட தவறு சொல்ல முடியாது. அனைவரையும் மீறி விதி விளையாடிவிட்டது. இதற்கு இறைவன்தான் பொறுப்பே தவிர யாருமே பொறுப்பில்லை. இந்த இரு இராஜ்யங்களுக்கும் இத்தனை சோதனைகளை அளிக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பத்துக்கு மாறாக நாம் என்ன செய்துவிட முடியும்?

    ஹர்ஷனின் தெளிவான பேச்சு அவன்பால் எல்லோருக்கும் மதிப்பை ஏற்படுத்தியது. சிறுவனாக இருந்தாலும் எத்தனை மனஉறுதி! எவ்வளவு தெளிவான சிந்தனை! பெரியவர்கள் அனைவருமே செயலிழந்துவிட்ட நிலையில் ஹர்ஷனின் உறுதியான நெஞ்சுரத்தைப் பற்றி நினைக்காமலிருக்க முடியவில்லை.

    தளபதியாரே! தங்களின் மனவோட்டத்தை நான் புரிந்து கொண்டேன். இந்த இக்கட்டான நிலைமையில் தங்களைப் போன்ற திறமையான கடமைப் பற்று கொண்ட வீரரின் துணையை நான் இழக்க முடியாது. தாங்கள் உண்மையிலேயே கடமைப் பற்றுக் கொண்டவராக இருப்பவரென்றால் உங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு எனக்கு துணையாக நில்லுங்கள். நெருக்கடியான நேரத்திலும் மனஉறுதியை இழக்காதவன்தான் நல்ல வீரன் என்று தந்தையார் அடிக்கடி சொல்வார். என்ன அமைச்சரே! நான் சொல்வது சரிதானே?

    முற்றிலும் சரியானது இளவரசரே! விதியின் செயலுக்கு தளபதி பொறுப்பாக முடியாது என்பதுதான் என்னுடைய கருத்தும். எனவே தளபதியவர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லை. இனிமேல்தான் நமக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது.

    உண்மைதான் அமைச்சரே! மாமன்னரின் உடலைப் பாதுகாக்க தக்க ஏற்பாடு செய்யுங்கள். எப்படியும் ஐந்து ஆறு நாட்களுக்குள் தானேஸ்வரத்திலிருந்து அனைவரும் வந்துவிடுவார்கள். அதற்குப் பின் மேற்கொண்டு ஆலோசனை செய்து கொள்ளலாம் என்றான் ஹர்ஷன் உள்ளத்து வேதனைகளை அடக்கிக் கொண்டு.

    அன்றைய பொழுதும் கழிந்து இரவும் கழிந்து மறுநாள் பொழுது விடிந்தது. மாமன்னரின் பாதுகாக்கப்பட்ட உடல் மக்களின் தரிசனத்திற்கு கிரகவர்மர் உடல் வைக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. காலை முதல் மாலை வரை மக்கள் சாரி சாரியாக மாமன்னருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது காற்றைவிட வேகமாக பிராக்திக்குப் பயங்கரன் அட்சயன் கோட்டையில் நுழைந்து அரண்மனை வாயிலுக்கு வந்து சேர்ந்தான்.

    அத்தியாயம் - 2

    சம்பல் நதிக்கரையில் மாமன்னரையும் இராஜ்யஸ்ரீ, அட்சயன், மிகிரகுலன் மற்றும் கன்னோசிப் படைகளை விட்டுவிட்டு தானேஸ்வரம் நோக்கி உபயதத்தன் மற்றும் தட்சசீல தளபதியுடன் மதுரா வழியாக தானேஸ்வரப் படைகள் புறப்பட்டன. வழியெங்கும் வெற்றியுடன் வரும் படைகளை மக்கள் கோலாகலமாக வரவேற்று மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். படைகள் கோலாகலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்திரபிரஸ்தம் அடைந்தது. மைந்தன் வெற்றியுடன் வந்தது விஷ்ணுதத்தருக்கும், மணவாளன் வெற்றிவாகை சூடி வந்தது பவளவல்லிக்கும் பெருமகிழ்ச்சி. உபயதத்தன் தானேஸ்வரத் தளபதியாகப் பொறுப்பேற்றவுடன் ஈடுபட்ட முதல் போரல்லவா! மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும். நீண்ட பயணமாதலால் படைகள் இந்திரபிரஸ்தத்திலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    அதிகம் சேதமில்லாமல் ஒரு போரை முடித்து வெற்றி பெற்றுத் திரும்பிய படை வீரர்கள் பயண அலுப்புத் தீர யமுனையில் நீராடி உணவு உண்டு கோட்டைக்கு வெளியே ஆங்காங்கே தங்கிக் கொண்டார்கள். படை வீரர்களுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்துவிட்டு உபயதத்தனும், தட்சசீல தளபதியும் அரண்மனை சென்றார்கள்.

    வல்லி பேராவலுடன் மணவாளனை முகத்தில் மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள். அத்துடன் தாயும் அவனை வரவேற்று அணைத்து உச்சி மோந்து ஆசி வழங்கினார்கள்.

    ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்.’$

    என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கொப்ப பெரிதும் உவகையடைந்தார்கள் உபயதத்தனின் பெற்றோர்கள்.

    பயண அலுப்புத் தீர இரு தளபதிகளும் நீராடி முடித்து வந்ததும் தாய் பரிமாற உணவு உண்டார்கள். மனைவி வந்து பரிமாறவில்லையே என்ற குறை உபயதத்தனுக்கு இருந்தாலும் பண்பாட்டின் காரணமாக அன்னையார் எதிரே வரக் கூடாது என்று வல்லி வந்து பரிமாறவில்லை. எனினும் உண்டு முடித்ததும் தட்சசீலத்து தளபதி ஓய்வெடுத்துக் கொள்ளச் சென்றதும் விஷ்ணுதத்தர் சிறிது நேரம் மகன் மருமகளுடன் பேசிக் களிக்கட்டும் என்று வெளியே போனார்.

    உபயதத்தன் வல்லியை அழைத்துக் கொண்டு நந்தவனத்திற்குச் சென்றவன் இத்தனை நாள் பிரிவையும் சேர்த்து தன் பேடையை மெய்சேர நொறுங்கும் படியாக அணைத்தான்.

    அப்பா! என்ன இவ்வளவு குறும்பு! என்று போலியாக ஊடல் கொண்டாள் வல்லி. அவளுக்கு மட்டும் அணைப்பு இனிமையாக இருக்காதா? தன் வலிய உதடுகளால் பாவையின் பேசிய உதடுகளை மூடிவிட்டான். சிறிது நேரம் தங்களை மறந்துவிட்டார்கள். இருவரும் இதழ் அமுதத்தைப் பருகிய போதையில் காளையவன் இருக்க சட்டென்று உணர்வு பெற்ற வல்லி அவன் அணைப்பிலிருந்து விலகிக் கொண்டு என்னதான் அப்படி அவசரமோ? நான் என்ன ஓடியா போய்விடுவேன்? உடம்பெல்லாம் வலிக்கின்றது என்றாள் பாவை.

    மறுபடியும் ஒருமுறை அணைத்தால் உடம்பு வலிக்கு இதமாக இருக்கும். அணைக்கட்டுமா? என்றான் காளை.

    ம்.. அதெல்லாம் இப்போது இல்லை. முறைப்படிதான். அத்தான் இளவரசியார் நலமா? என்று கேட்டாள். இப்படி கேட்டால்தான் அவன் ஆசை மாறும் என்று அறிந்தே கேட்டாள்.

    அவள் எண்ணியபடியே அவன் தன்னிலை அடைந்துவிட்டான். அவன் உற்சாகம் சட்டென்று அடங்கியது. தான் அவசரப்பட்டது குறித்து சற்றே வெட்கமடைந்தான். எத்தனை சாமர்த்தியமாக வல்லி தன்னுடைய ஆவலைக் கட்டுப்படுத்திவிட்டாள்.

    இளவரசியார் நலம்தான் வல்லி. எனினும் அந்தக் கயவன் தேவகுப்தன் மட்டும் தப்பிவிட்டான். பழிதீர்க்க முடியவில்லை என்று படையெடுப்பின் விவரம் முழுவதையும் தன் துணைவியிடம் சொன்னான்.

    அப்படியென்றால் மாமன்னர் இளவரசியாருடன் தங்கள் சகோதரரும் கன்னோசி சென்றுவிட்டாரா? பாவம் பத்மா அக்கா! மணாளனை சந்திக்க ஆவலாக இருந்தார்கள்.

    நாங்கள் மூவரும் எந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டோமோ.. கல்யாணம் செய்து கொண்டும் பிரும்மச்சாரியாகவே இருக்கின்றோம்.

    கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா அத்தான்? எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன. அதையெல்லாம் ஒழுங்குபடுத்திவிட்டுத்தானே நம்மைப் பற்றி நினைக்க முடியும்.

    உண்மைதான் வல்லி! மன்னரில்லாத இராஜ்யமாக கன்னோசி இருக்கின்றது. இளவரசியாரை நினைக்கும் போதே மனம் வேதனைப்படுகின்றது. இத்தனை சிறிய வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட துயரம் எவ்வளவு கொடுமையானது!

    இதை விடவும் கொடுமையான செய்தி இந்திரபிரஸ்தக் கோட்டை வாயிலே அடைந்துவிட்டதே. இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகின்றார்கள்?

    தானேஸ்வரப் படைகளைவிட ஒரு முழு நாள் பின் தங்கி யமுனைக்கரையிலிருந்து மிகிரகுலனால் தானேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்ட இரு வீரர்களும் புயல் போல விரைந்து வந்ததனால் தானேஸ்வரப் படைகள் வந்து சேர்ந்த இருபது நாழிகைக்குள். இந்திரபிரஸ்தக் கோட்டையில் நுழைந்தார்கள். படைகள் கோட்டைக்கு வெளியே தண்டு இறங்கியிருப்பதைப் பார்த்ததும் தானேஸ்வரத் தளபதி இன்னும் தானேஸ்வரம் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்ததும் அவரையே சந்தித்து விஷயத்தைச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து அரண்மனையை அடையவும் விஷ்ணுதத்தர் அவர்களை எதிர்கொண்டார்.

    அவசரமாக தானேஸ்வரத் தளபதியைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் சொன்ன உடனே விஷ்ணுதத்தர் தம் மைந்தனை விரைந்து சென்று அழைத்து வந்தார்.

    தானேஸ்வரத் தளபதியைப் பார்த்ததும் சம்பிரதாயப்படி வணங்கிவிட்டு லிகிதத்தைக் கொடுத்தார்கள். அவர்களால் தங்கள் வாயால் அந்த சோகத்தைச் சொல்ல முடியவில்லை. எனவே தலைமை அமைச்சருக்குத்தான் லிகிதம் என்றாலும் அவசரத்தை முன்னிட்டு தளபதியிடமே கொடுத்துவிட்டார்கள்.

    வாங்கி லிகிதத்தைப் பிரித்துப் படித்த உபயதத்தனின் கைகளிலிருந்து அவனையறியாமல் லிகிதம் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. பிரமைப் பிடித்துப் போன அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

    மைந்தனைப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுதத்தர் என்னவோ ஏதோவென்று குனிந்து லிகிதத்தை எடுத்துப் படித்தவர்

    ஐயோ ஈசுவரா! இது என்ன சோதனை? உனக்கு இரக்கமேயில்லையா? இந்தக் கொடுமையை எப்படித் தாங்குவது? என்று அலறினார்.

    அவரது அலறலைக் கேட்டு வல்லியும், உபயதத்தனின் தாயாரும் கூட என்னவோவென்று ஓடி வந்தார்கள். கையில் லிகிதத்துடன் கண்ணீர் வடிக்கும் மாமனாரையும் பிரம்மை பிடித்தவனைப் போல் நிற்கும் கணவனையும் பார்த்த வல்லி ஏதோ விபரீதம் என்று தெரிந்து கொண்டு விஷ்ணுதத்தரின் கையிலிருந்த லிகிதத்தை வாங்கிப் படித்தவள் அவர்கள் இருவரையும் விடவும் பெரிதாக அலறிவிட்டாள்.

    அதற்குள் காவலர்களும் வந்துவிட்டார்கள். படைகளின் வரவில் செளகரியங்கள் பற்றிக் கேட்கலாம் என்று துணை நிர்வாகி தேவலரும் வரவே அவரைக் கண்டதும் வல்லி லிகிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டுக் கீழே சாய்ந்துவிட்டாள்.

    மருமகள் கீழே மயக்கமாக விழுந்துவிட்டாள். கணவரும் மைந்தனும் கண்ணீர்விட்டு அழுகின்றார்கள். அந்தத் தாய்க்கு என்ன என்றே புரியவில்லை. லிகிதத்தைப் படித்த தேவலரும் அதிர்ச்சியடைந்துவிட்டார். மாமன்னர் மறைந்ததுடன் இளவரசியார் கடத்தப்பட்டு தம்முடைய மருமகரின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை என்பதையறிந்த அவர் மனம் என்ன பாடுபடும்?

    அதற்குள் விஷ்ணுதத்தர் தெளிவடைந்துவிட்டார். உடனே தட்சசீல தளபதியை அழைத்து அவரிடம் விவரம் சொல்லி லிகிதத்தையும் கொடுத்து உடன் வீரர்களையும் அழைத்துக் கொண்டு அவரையே தானேஸ்வரம் புறப்படச் செய்தார். மாமன்னர் மடிந்துவிட்டதும் இளவரசியார் மறுபடியும் கடத்தப்பட்டதும் இது வங்க மன்னன் செயல் என்பது தெரிந்ததும் படைகளுக்கும் மக்களுக்கும் செய்தியை அறிவிப்பது தம் கடமை என்று இரு நிர்வாகிகளும் அறிவிப்பு செய்துவிட்டார்கள்.

    கோலாகலமாக வந்த படைகளும், மகிழ்ச்சியுடன் அவமானம் துடைக்கப்பட்டு இளவரசியார் மீட்கப்பட்டார்கள் என்று மக்களும் கருதிய சிறிது நேரத்திலேயே பெரிய அதிர்ச்சி மிக்க செய்தியைக் கேள்விப்பட்டால் எப்படி இருக்கும்? படை வீரர்களிடையே ஆத்திரம் அதிகமாகி கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுவிட்டது. வங்கம் நோக்கிச் செல்ல துடித்தனர்.

    உபயதத்தனும் தன்நிலையடைந்து படை வீரர்களிடையே கொந்தளிப்பு ஏற்படும்.. தான் போனால்தான் அதைச் சமனப்படுத்த முடியும் என்ற கடமையையுணர்ந்து தன் துணைவி மயக்கமடைந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் கோட்டைக்கு வெளியே புரவியேறி சென்றான்.

    அவன் நினைத்ததைப் போலவே படை வீரர்கள் தங்கள் உபதலைவர்களையும் மீறி ஆக்ரோஷத்துடன் வங்கத்துக்குப் புறப்பட வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். உபயதத்தனைப் பார்த்ததும் கோஷங்கள் மட்டும் சட்டென்று நின்றது.

    படை வீரர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட உபயன் தானேஸ்வர வீரச்சிங்கங்களே! உங்களுடைய உணர்ச்சிகளை நான் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் இது அசாதாரணமான நிலை. மாமன்னர் மடிந்துவிட்ட நிலையில், இளவரசரும் கன்னோசியில் இருக்கும் நிலையில் நாமாக எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது. தானேஸ்வரத்திற்கு தகவல் போய்விட்டது. தலைமை அமைச்சர் வந்து கன்னோசி சென்று இளவரசருடன் ஆலோசனை செய்து தக்க முடிவெடுப்பார்கள். அதுவரை நீங்கள் துக்கத்தை அடக்கிக் கொண்டு அமைதியுடன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று மறைந்த மாமன்னரின் பேரில் ஆணையாக கேட்டுக் கொள்ளுகின்றேன் என்று உபயன் சொன்னதும் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் படை வீரர்கள் அமைதியாக இருப்பிடம் திரும்பினார்கள்.

    உபதளபதிகளை அழைத்தான் உபயன்.

    உபதளபதிகளே! இருக்கும் நிலைமையில் எப்படியும் மற்றுமொரு போர் ஏற்படக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. எனவே படைகள் இங்கேயே தங்க வேண்டியதுதான். அதற்குறிய ஏற்பாடுகள் செய்யுங்கள். தலைமை அமைச்சர் வந்த பின்புதான் மேற்கொண்டு முடிவுகள் செய்யப்படும் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

    எப்படியும் குறைந்தபட்சம் பதினைந்து நாட்களாவது தங்க வேண்டி வருமாதலால் வேகமாக கூடாரங்கள் நிர்மாணிக்கப்பட்டது.

    உபயதத்தன் திரும்பி வருவதற்குள் வல்லி மயக்கம் தெளிந்துவிட்டாள். எனினும் கண்களில் நீர் நிற்கவில்லை. விஷ்ணுதத்தர் மருமகளைத் தேற்றிக் கொண்டிருந்தார். தேவலர் தம்முடைய இல்லத்திற்கு கவலையுடன் சென்றுவிட்டார். அவருக்கு இவர்களையும்விட கூடுதலான கவலைதானே.

    உபயனைப் பார்த்ததும் விஷ்ணுதத்தர் உபயா! அட்சயனைப் பற்றிய நிலை என்னவென்று புரியவில்லையே. இவ்வளவு படைகள் இருந்தும் எப்படி இந்தப் பாதகம் நடந்திருக்கும் என்றே தெரியவில்லையே?

    ஆம் தந்தையே! எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கின்றது. அட்சயர் ஏமாறவேமாட்டார். அவரையும் வங்க மன்னன் ஏமாற்றியுள்ளான் என்றால் வெளிப்படையாக காரியம் நடந்திருக்க முடியாது. மிகவும் சாமர்த்தியமாக திட்டமிட்டுத்தான் செயல்பட்டிருக்க வேண்டும். கன்னோசியில் இளவரசர் எப்படி இந்தச் சோகத்தையும் தாங்குவாரோ. இத்தனை சிறிய வயதில் இவ்வளவு சோதனைகளா?

    நாம் என்ன செய்ய முடியும் உபயா! விதியின் முன் நாம் விளையாட்டுப் பொம்மைகள் தானே? தானேஸ்வரத்தின் நிலை தகவல் தெரிந்ததும் எப்படியோ?

    ஆம், தானேஸ்வரமும் கொந்தளித்துத்தான் போயிற்று. விரைந்து சென்ற தட்சசீல தளபதி தானேஸ்வர அரண்மனையை அடைந்ததும். வெற்றி பெற்று வரும் படைகளுக்கு சிரப்பான வரவேற்பளிப்பது பற்றி தட்சசீல மன்னர் வீரமார்த்தாண்டர், மல்லிகார்ஜுனர், சுபந்து, பாணர் பெருமான், சிம்மேந்திரர் ஆகியவர்கள் முக்கிய பிரதானிகளுடன் ஆலோசனை மண்டபத்தில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். தட்சசீல தளபதி வருவதாகக் காவலன் முன்னதாக செய்தி சொல்லிவிட்டான். படைகளுக்கு முன்னதாக தளபதி எதற்காக வருகின்றார் என்பது யாருக்கும் தெளிவாகவில்லை.

    காவலன் வழிகாட்ட ஆலோசனை மண்டபத்தில் நுழைந்த தளபதி நேராக அமைச்சரிடம் சென்று லிகிதத்தைக் கொடுத்துவிட்டு தலைகுனிந்து நின்றார். தட்சசீல மன்னர் நிற்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை.

    லிகிதத்தை வாங்கிப் படித்த மல்லிகார்ஜுனர் அதிர்ச்சியடைந்து லிகிதத்தை தட்சசீல மன்னரிடம் கொடுத்துவிட்டு உணர்ச்சிகள் உள்ளத்தில் கொப்பளிக்க கண்களில் கண்ணீர் வழிய தொண்டை கமற மெதுவான குரலில் தானேஸ்வர குலவிளக்கு அணைந்துவிட்டது என்றார்.

    ஐயோ..! என்ற குரல் எல்லோரிடமிருந்தும் ஒரே சமயத்தில் எழுந்தது. தட்சசீல அரசர் கற்சிலை போல் சமைந்துவிட்டார். அவரிடமிருந்து லிகிதத்தை வாங்கிப் படித்த சிம்மேந்திரர் முகம் கனலைக் கக்கியது. அடுத்து பாணர் பெருமானும், சுபந்துவும் படித்துவிட்டு செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

    ‘எப்படி மகாராணியாரிடம் இந்தச் செய்தியைச் சொல்வது? தாங்குவாரா? எத்தனை சோதனைகளைத்தான் தானேஸ்வரம் தாங்குவது? இறைவா! உனக்கு கருணையே இல்லையா?’ என்று பாணர் பெருமானின் உள்ளம் குமைந்தது.

    நிலைமை உணர்ந்து மல்லிகார்ஜுனர் தன்னை தேற்றிக் கொண்டு மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளைக் கவனிக்க முற்பட்டார். அவர் ஏற்கனவே இராஜ்யவர்த்தனரின் முடிவு பற்றி அறிந்தவர் தானே. கன்னோசி புறப்பட ஆயத்தங்கள் செய்யப்பட்டது. தட்சசீல அரசர் உடனிருந்தது ஆறுதலாக இருந்தது. மகாராணியாரிடம் செய்தி சொல்ல அவரைத் தவிர வேறு யாரால் முடியும்? வீரமார்த்தாண்டர் அந்தப்புரம் நோக்கிச் சென்றார் சோகச் செய்தியைச் சொல்ல. செய்தி கேட்டதும் புதிய மகாராணியும் பழைய மகாராணியும் ஐயோ..வென்று அலறிச் சாய்ந்தார்கள்.

    கன்னோசி உடனே புறப்பட்டாக வேண்டும். மாமன்னர் உடல் தகனத்திற்கு காத்திருப்பதோடு மன்னர் இல்லாமல் நாடு இருக்க முடியாது. பேரரசாயிற்றே! எனவே சம்பிரதாயத்தையெல்லாம் மீறி உடனடியாக ஹர்ஷனுக்கு முடிசூட்டியாக வேண்டும். மாமன்னராக ஹர்ஷன் முடிசூட்டிக் கொண்ட பின்தான் மற்றைய காரியங்களைப் பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று பாணருடனும் சுபந்து, சிம்மேந்திரர் ஆகியவர்களுடன் அவசர ஆலோசனை செய்து முடிவெடுத்துக் கொண்டு அதன்படி மணிமுடி, செங்கோல், வீரவாள் ஆகியவற்றுடன் கன்னோசி சென்று அங்கேயே முடிசூட்டுவிழா நிகழ்த்திவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

    எப்படியும் வங்க மன்னவனுடன் போர் வேறு இருப்பதால் ஹர்ஷன் முடிசூடியே ஆக

    Enjoying the preview?
    Page 1 of 1