Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Harshavardhanar – Part 1
Harshavardhanar – Part 1
Harshavardhanar – Part 1
Ebook474 pages3 hours

Harshavardhanar – Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வடபாரதத்தில் மெளரியர்கள், மற்றும் இந்தியாவின் பொற்காலம் என்றழைக்கப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்கு இணையாக; வர்த்தன மன்னர்களில் சிறப்பாகத் திகழ்ந்தவர் “பரமபத்தாரக மகாராஜாதி ராஜர் என்றழைக்கப்பட்ட “ஹர்ஷவர்த்தனர்” ஆவார். இவர் தான் வர்த்தனராஜ்யத்தை சாம்ராஜ்யமாக்கியவர். கி.பி.606 முதல் கி.பி.647 வரை “ஹர்ஷவர்த்தனர்” சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்ததாக சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது. இந்த வர்த்தன சாம்ராஜ்யத்தை “ஹர்ஷவர்த்தனர்” தன் பதினாறாவது வயதில் தவிர்க்க முடியாத அசாதாரண நிலையில் வர்த்தனராஜ்ய மன்னராக முடிசூட்டிக்கொண்டது முதல் ஆறு ஆண்டுகளிலே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் சிறப்பு - பெருமை எத்தன்மையுடையது என்பதை விவரிக்கும் முகமாக உருவானதுதான் இந்த சரித்திர நாவல்.

சரித்திர நாவல்களுக்கே உரிய இலக்கணங்கள் என்று உருவாக்கப்பட்டவைகளிலிருந்து இந்த சரித்திர நாவல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும். தேவையற்ற அதிகப்படியான வர்ணனைகள், சிருங்கார ரசங்கள் வார்த்தை ஜாலங்களுடன் கூடிய சலிப்படைய வைக்கும் உரையாடல்கள் என்று அதிகம் இருக்காது. கதையுடன் ஒட்டிய அளவிலே இருக்கும் என்பதுடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கதைப்போக்கு செல்லும். படிக்க சலிப்பாகி பக்கங்களைத் தள்ளிவிடும் நிலை ஏற்படாது. ஒருபக்கத்தைக்கூட தள்ளிவிட முடியாத அளவில் சம்பவங்களின் சேர்க்கை இருக்கும். வர்ணனைகள், சிருங்கார ரசம், வார்த்தை ஜாலங்களுடன் எனக்கு எழுதவராது என்பதல்ல. “ஹர்ஷவர்த்தனர்” வாழ்க்கையே 16 வயது முதல் போராட்டம்தான். அடுத்தடுத்து வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்கள்; பெரும் போர்கள் என்று 16 வயதில் பட்டத்திற்கு வந்தது முதல் நிற்கவே நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்த நிலையால் சரச சல்லாபங்களை அதிகம் சேர்க்க என்மனம் ஒப்பவில்லை. இனிகதைக்குள் நுழையலாம்! வாருங்கள்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580147407422
Harshavardhanar – Part 1

Read more from M. Madheswaran

Related to Harshavardhanar – Part 1

Related ebooks

Related categories

Reviews for Harshavardhanar – Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Harshavardhanar – Part 1 - M. Madheswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஹர்ஷவர்த்தனர் - பாகம் 1

    Harshavardhanar – Part 1

    Author:

    மு. மாதேஸ்வரன்

    M. Madheswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-madheswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    முடிவுரை

    முன்னுரை

    பொதுவாக நாவலுக்கு முன்னுரை அவசியமோ, இல்லையோ! ஆனால் ஒரு பேரரசரின் சரித்திரத்துக்கு முன்னுரை அவசியம் தேவைப்படுகின்றது என்பது உண்மையே. பண்டைய இந்தியாவில் பல மன்னர்கள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்திருந்தாலும், பெரிய சாம்ராஜ்யங்களை நிறுவி சக்கரவர்த்திகளாக ஆட்சி செய்தவர்களின் தொகை குறைவுதான். அதில் முதன்மையான இடம் ‘மௌரிய’ வம்சத்துக்குத்தான் கிடைத்துள்ளது. அத்துடன் பெரிய அளவிலான நிலப்பரப்பை ஆட்சி செய்த பேரரசர்கள் வடபாரதத்தில்தான் அதிகம். சாணக்கியரின் உதவியுடன் மகத்தின் ஆட்சியைப் பெற்ற சந்திரகுப்த மௌரியர் காலத்திலிருந்து மகதம் வலிமை அடைந்து சாம்ராஜ்யமாகி அசோகர் காலம் வரை மௌரிய வம்சம் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார்கள் என்பதற்கு வரலாறு இருக்கின்றது.

    கிறிஸ்துவின் தொடக்கத்திலேயே அசோகரின் பேரரசு இமயம் முதல் வேங்கடம் வரை கிட்டத்தட்ட பாரதத்தில் முக்கால் பகுதிக்கு சற்றுக் கூடுதலாகவே அவரின் ஆட்சியில் இருந்திருக்கின்றது. அவருக்கு அடுத்தபடியாக அந்த அளவுள்ள நிலப்பரப்பு ஆட்சி அமைப்பை முஸ்லிம் மன்னரான அலாவுதீன்கில்ஜி அடைந்து தன் படைத்தளபதியான மாலிக்காபூர் மூலம் மதுரை வரையிலும் கைப்பற்றியுள்ளார். எனினும் அவரால் சாம்ராஜ்யம் முழுவதையும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியவில்லை. அவருக்கு அடுத்தபடியாக மொகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீப் காலத்தில் தமிழகத்திலே திருச்சிராப்பள்ளி வரை அவரின் ஆதிக்கத்தில் இருந்ததற்கு சரித்திர சான்றுகள் உள்ளது.

    இவர்கள் மூவரைத் தவிர வேறு மன்னர்களுக்கு இந்த அளவு மாபெரும் நிலப்பரப்புக்கு சாம்ராஜ்யம் அமையவில்லை யென்றாலும், அசோகருக்குப் பிறகு வடபாரதத்தில் குஷான வம்ச மன்னர் கனிஷ்கர் ஒரு பேரரசை நிறுவி வடமேற்கு பாரதத்தை ஆட்சி செய்துள்ளார். அவருக்குப் பிறகு பாரதத்தில் பேரரசை நிறுவி சிறப்புடன் ஆட்சி செய்தவர்கள் குப்தர்கள்தான்.

    கி.பி.300 முதல் கி.பி 600 வரை 300 ஆண்டுகள் எனும் நீண்ட காலம் சிறப்பாக ஆட்சி செய்த குப்தர்களில் கடைசி அரசரான ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் தலைவன் தோரமானாவினால் தோற்கடிக்கப்பட்ட பின், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் வரை ஒரு வலுவான பேரரசு வடபாரத்தில் ஏற்படவில்லை. ‘பூஷ்யபூத’ வம்சத்தை சேர்ந்த வர்த்தன மன்னர்கள் மெதுவாகத் தலைதூக்கி கி.பி.580ல் ஆட்சிக்கு வந்த பிரபாகவர்த்தனர் காலம் முதல் வலுப்பெற்று வடமேற்கு பாரதத்தில் தானேஸ்வரத்தை தலைநகராகக் கொண்டு படிப்படியாக ஒரு பேரரசை அமைத்து கி.பி.647 வரை சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்கள் என்று சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது.

    வடபாரத்தில் மௌரியர்கள், மற்றும் இந்தியாவின் பொற்காலம் என்றழைக்கப்பட்ட குப்தர்களின் ஆட்சிக்கு இணையாக வர்த்தன மன்னர்களில் சிறப்பாகத் திகழ்ந்தவர் பரமபத்தராக மகா ராஜாதிராஜர் என்றழைக்கப்பட்ட ஹர்ஷவர்த்தனர் ஆவார். இவர்தான் வர்த்தன இராஜ்யத்தை சாம்ராஜ்யமாக்கியவர். கி.பி.606 முதல் கி.பி.647 வரை ஹர்ஷவர்த்தனர் சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்ததாக சரித்திர சான்றுகள் குறிப்பிடுகின்றது. இந்த வர்த்தன சாம்ராஜ்யத்தை ஹர்ஷவர்த்தனர் தன் பதினாறாவது வயதில் தவிர்க்க முடியாத அசாதாரண நிலையில் வர்த்தனர் இராஜ்ய மன்னராக முடிசூட்டிக் கொண்டது முதல் ஆறு ஆண்டுகளிலே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் சிறப்பு- பெருமை எத்தன்மையுடையது என்பதை விவரிக்கும் முகமாக உருவானதுதான் இந்த சரித்திர நாவல்.

    சரித்திர நாவல்களுக்கே உரிய இலக்கணங்கள் என்று உருவாக்கப்பட்டவைகளிலிருந்து இந்த சரித்திர நாவல் சற்று மாறுபட்டதாகத் தோன்றும். தேவையற்ற அதிகப்படியான வர்ணனைகள், சிருங்கார ரசங்கள், வார்த்தை ஜாலங்களுடன் கூடிய சலிப்படைய வைக்கும் உரையாடல்கள் என்று அதிகம் இருக்காது. கதையுடன் ஒட்டிய அளவிலே இருக்கும் என்பதுடன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கதைப் போக்கு செல்லும். படிக்க சலிப்பாகி பக்கங்களைத் தள்ளிவிடும் நிலை ஏற்படாது. ஒரு பக்கத்தைக்கூட தள்ளிவிட முடியாத அளவில் சம்பவங்களின் சேர்க்கை இருக்கும்.

    வர்ணனைகள், சிருங்கார ரசம், வார்த்தை ஜாலங்களுடன் எனக்கு எழுதவராது என்பதல்ல. ஹர்ஷவர்த்தனர் வாழ்க்கையே 16 வயது முதல் போராட்டம்தான்.

    அடுத்தடுத்து வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்கள்; பெரும் போர்கள் என்று 16 வயதில் பட்டத்திற்கு வந்தது முதல் நிற்கவே நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்த நிலையால் சரச சல்லாபங்களை அதிகம் சேர்க்க என் மனம் ஒப்பவில்லை. இனி கதைக்குள் நுழையலாம்! வாருங்கள்..

    அத்தியாயம் - 1

    மிக நீண்ட தொலைவு ஓடி வந்ததன் காரணமாக வாயில் சற்றே நுரை தள்ளியவாறு நின்றிருந்த உயர் ஜாதிப் புரவியின் மீது அமர்ந்தபடி ஆஜானுபாகுவான தோற்றத்துடன், கம்பீரமாக காட்சியளித்த ஒரு இளைஞன், சற்று மேடாக இருந்த அந்த இடத்திலிருந்து எதிரில் தெரியும் உயர்ந்த மதில்களையுடைய வர்த்தன இராஜ்யத்தின் தலைநகரமான தானேஸ்வரக் கோட்டையைக் கூர்மையான பார்வையுடன் நோக்கினான். கம்பீரமாக இருந்த அந்த இளைஞனைப் போலவே தானேஸ்வரக் கோட்டையும் கம்பீரமாகவே காட்சியளித்தது. அதன் சிறப்புக்களை நன்குணர்ந்திருந்த அவன் முகத்தில் பெருமையின் சாயல் நன்கு புலப்பட்டது. மேடான அந்த பகுதியிலிருந்து புரவியை மெல்ல செலுத்தி கோட்டையின் உள்ளே செல்லும் இராஜபாட்டையை அடைந்து கோட்டை வாயிலை நோக்கிச் சென்றான். நல்ல அகலமான அகழியையும் அதில் வாய் பிளந்து நிற்கும் முதலைகளையும் கொண்டிருந்த கோட்டையின் அகழிப் பாலம் தரையுடன் பொருந்தியே இருந்தது. வாயிலின் முன்னும், வாயிலின் மேல்புறம் கோட்டை கோபுரத்தின் மேலும் காவலர்களின் கண்காணிப்பு கவனமாகவே இருப்பதையும் பார்த்துக் கொண்டே புரவியில் சென்றான் அந்த இளைஞன்.

    கன்னோசியிலிருந்து புறப்பட்ட அந்த இளைஞன் பயணத்தின் இடையில் ஆங்காங்கே சிறிது நேரமே தங்கியவனாய், இந்திரபிரஸ்தத்தை அடைந்து அங்கே உள்ள தன் இல்லத்தில் ஒரு இரவுப்பொழுது மட்டுமே தங்கி, விடியலில் பயணப்பட்டவன் ஆதவன் மறைய ஏழு நாழிகை இருக்கும் போதே தானேஸ்வரத்தை அடைந்துவிட்டான். அவசரச் செய்தி என்பதால் வேகமாகவே வந்தும் கன்னோசியிலிருந்து தானேஸ்வரம் வந்தடைய மூன்று தினங்களாகிவிட்டது.

    கோட்டையின் அருகில் சென்றதும், கோட்டைக்கு வெளியில் வாசம் செய்யும் மக்கள் அந்த இளைஞனைப் பார்த்ததும் பெருத்த ஆரவாரம் செய்து வாழ்த்துக் கோஷங்களை முழக்கினார்கள். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டே அகழிப் பாலத்தைக் கடந்து கோட்டை வாயிலை அடைந்ததும் காவல் நின்ற வீரர்கள் தலைகுனிந்து வணக்கம் செய்தார்கள் என்றால், அந்த இளைஞன் மிகவும் முக்கியமானவனாகத்தானே இருக்க வேண்டும்! ஆம், அவன்தான் வர்த்தன இராஜ்யத்தின் உபதளபதியாகிய உபயதத்தன். மிகச்சிறந்த வாள் வீரன். இளம் பிராயத்திலேயே திறமையால் வர்த்தன இராஜ்ய உபதளபதி பொறுப்பை பெற்றுவிட்டவன்.

    தானேஸ்வரக் கோட்டை மிகவும் பலம் வாய்ந்தது. அதன் ஏழு வாயில்களையும் கடந்து, அரண்மனைக்கு அருகில் அவன் வருகையை மன்னர் பிரபாகவர்த்தனருக்கு அறிவிக்க விரைந்தான் ஒரு காவலன். அந்த இளைஞன் புரவியைவிட்டு இறங்கியதும், மற்றும் ஒரு காவலன் வந்து தலை தாழ்த்தி வணங்கி புரவியை அழைத்துச் சென்றான்.

    அரண்மனையில் உயரமான படிகளில் தன்னுடைய உறுதிமிக்க கால்களினால் வேகமாக ஏறிச்சென்று அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தை அடையவும், காவலன் மூலம் அந்த இளைஞன் வருகையின் தகவல் அறிந்த மாமன்னர் பிரபாகவர்த்தனர் வரவும் சரியாக இருந்தது.

    வா உபயதத்தா! சென்ற காரியம் வெற்றிதானே? என்று மாமன்னர் வினவினார்.

    முழு வெற்றி பிரபு! கன்னோசி மன்னர் தங்களின் லிகிதத்தைக் கண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தார். நான் சென்ற போது கொலுமண்டபத்திலேயே பிரதானிகள் சூழ்ந்திருக்க வரவேற்றார். லிகிதத்தை கூடியிருந்த அனைவரின் எதிரிலும் தாமே படித்தார். செய்தியறிந்த கன்னோசி பிரதானிகள் மகிழ்ச்சியடைந்து கரகோஷம் செய்தார்கள். கன்னோசி மன்னர் என்னிடம் இது எங்களுக்கு மிகவும் பெருமையளிக்கும் செய்தி; தானேஸ்வர இளவரசியை கன்னோசியின் மகாராணியாக்க வர்த்தன இராஜ்ய மாமன்னவர் முடிவெடுத்த பெருந்தன்மைக்கு எங்கள் பணிவான நன்றி என்று கூறி என்னைக் கட்டிப்பிடித்து திணறடித்துவிட்டார் என்று சொல்லியவாறே கன்னோசி மன்னரின் ஒப்புதல் லிகிதத்தை மன்னவரிடம் உபயதத்தன் கொடுத்தான். லிகிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார் மன்னர் பெருமான்.

    ‘தானேஸ்வரத்தின் வர்த்தன மன்னர் மன்னவர் அவர்களுக்கு, கன்னோசி மன்னன் கிரகவர்மன் பணிவன்புடன் எழுதிக் கொண்டது. அநேக வணக்கங்களை மன்னவருக்கு உரித்தாக்குகின்றேன். உங்கள் உபதளபதியார் உபயதத்தன் மூலம் தாங்கள் அனுப்பிய லிகிதம் கண்டு கன்னோசி இராஜ்யமே பெருமையும், பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளது. பெறுதற்கரியபெரும் பாக்கியத்தைத் தாங்கள் எங்களுக்கு அளித்துள்ளீர்கள். எங்களுக்கு அளித்துள்ள இந்த கௌரவத்திற்கு உங்களுக்கும், பட்டத்து இளவரசர் இராஜ்யவர்த்தனருக்கும் என்னுடைய, மற்றும் கன்னோசி மக்கள் அனைவரின் நன்றியையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வதுடன், தானேஸ்வரத்தின் பெருமை மிக்க இளவரசியாரை கன்னோசி இராஜ்யத்தின் மகாராணியாக, எம் பட்டமகிஷியாக ஏற்றுக் கொள்ள தக்க ஏற்பாடுகளுடன் பயணப்படுகின்றோம். வரும் பூர்வபட்சத்து சப்தமி திதியன்று திருமணத்துக்கு உகந்த நாள் என்று எங்கள் ஆஸ்தான ஜோதிடர் குறிப்பிட்டார். அது உகந்த நாளாக தாங்களும் உரியவர்களுடன் கலந்து முடிவெடுத்து திருமண ஏற்பாடுகளைத் துவக்கம் செய்துவிடுங்கள். நாங்கள் அதற்குள் தானேஸ்வரம் வந்தடைந்துவிடுகின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.’

    இங்கனம்,

    பணிவன்புடன்,

    கிரகவர்மன்.$

    லிகிதத்தைப் படித்து முடித்த மன்னர் பிபாகவர்த்தனர் பெருமகிழ்ச்சியடைந்து பெருவீரனாக இருந்தாலும் கிரகவர்மன் நல்ல குணசாலியாகவே இருப்பான் போல் தெரிகிறதே! நீ என்ன நினைக்கிறாய் உபயதத்தா?

    உண்மைதான் பிரபு! குணம், வீரம் ஆகியவற்றுடன் விவேகமும் நல்ல அளவில் உள்ளது. நம் இளவரசியாருக்கு முற்றிலும் பொருத்தமானவரே என்பதுடன் தானேஸ்வர மருமகராக வரும் அளவுக்கு கன்னோசி மன்னவர் பெருமையுடைவர்தான்.

    அதை அறிந்துதான் இராஜ்யவர்த்தனன் தன் நண்பனாகிய கிரகவர்மனுக்கே தங்கையை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மிகவும் விரும்பி எம்மிடம் தெரிவித்தான் போலும். கன்னோசி இராஜ்யம் இப்போது எப்படிஉள்ளது உபயா? எப்போதோ யானும் உன் மாமா சிம்மேந்திரரும் காசி சென்ற போது கன்னோசியைக் கண்டது. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்க கூடும் என்று மன்னவர் கூறினார்.

    கங்கை நதி பாயும் பிரதேசமாகையால் செழிப்பிற்கு குறைவே இல்லை பிரபு! மக்களும் நல்ல பொருளாதார வளத்துடன் மகிழ்ச்சியாகவே உள்ளதைக் கண்டே மன்னவர்பால் நல்ல இராஜபக்தி, விசுவாசம் கொண்ட பிரஜைகளாகவே உள்ளார்கள்.

    சுற்றுப்புறங்களில் உள்ள மற்ற இராஜ்யங்களின் உறவு நிலைகள் எப்படிஉள்ளது? பகைமை பாராட்டும் அளவுக்கு இராஜ்ய பகைகள் எதுவும் இல்லாமல் உறவு முறை நல்ல அளவில் உள்ளதுதானே?

    நான் உரியவர்களிடம் சாதுர்யமாக தகவல்களை அறிந்து கொண்டேன் பிரபு! கன்னோசி மன்னவருக்கு சுற்றுப்புறங்களில் கடும் பகை என்று எந்த நிலையும் என்னால் அறியப்படவில்லை பிரபு! நம் இளவரசியார் நிச்சிந்தையாக, கவலைகள் எதுவுமின்றி நல்லமுறையில் இருக்க அனைத்தும் ஏதுவாகவே உள்ளது பிரபு!

    மிக நல்லது உபயா. நீ சென்றால் எம் எண்ணங்களுக்கேற்ப அனைத்தையும் நல்லமுறையில் அறிந்து கொண்டு வந்துவிடுவாய் என்றுதான் உன்னை மட்டுமே லிகிதத்துடன் அனுப்பி வைத்தேன். எம் எண்ணங்களை யூகித்து நல்ல அளவில்லா விரும்பும் தகவல்களையும் அறிந்து கொண்டு வந்துவிட்டாய்.

    இருப்பினும் மகதம் மட்டும் கன்னோசியுடன் ஒட்டாமல் விலகியிருப்பதாகவும் தகவல் அறிந்தேன். சரியான காரணம் என்னவென்று அறிய முடியவில்லை பிரபு!

    அது பற்றிய விவரம் எமக்குத் தெரியும் உபயா! அது சற்றுப் பழமையான விஷயம். எனினும் மகதம் தேவையில்லாமல் கன்னோசி விவகாரங்களில் தலையிடாது. மகத மன்னர் பூர்ணவர்மர் பற்றியும் யாம் அறிவோம். மெத்தச்சரி. உபயா! நீ சென்று ஓய்வு கொள். நாளைய தினம் முதல் மற்ற ஏற்பாடுகளைச் செய்யத் துவங்க வேண்டும். முதலில் அரசவையைக் கூட்டி இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துவிட்டு அதன் பின் இராஜ்யம் முழுமைக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது யாம் சென்று மகாராணியாருக்கும், இளவரசர்களுக்கும் நற்செய்தியைத் தெரிவிக்க வேண்டும். அமைச்சர் பெருமான், சுபந்து, சிம்மேந்திரருக்கும் தகவல் அறிவிக்க ஏற்பாடு செய்துவிடு என்று கூறிய மன்னர் தமக்கு உபயன் பணிவான வணக்கம் செய்ததை ஏற்றுக் கொண்டு அந்தப்புரம் நோக்கி விரைந்தார்.

    அப்போதைய வர்த்தன இராஜ்ய நான்கு தூண்களில் முக்கியமான மூன்று தூண்களைப் போன்றுள்ள அமைச்சர் மல்லிகார்ஜுனர், தளபதி சிம்மேந்திரர், மற்றும் நகர நிர்வாகி சுபந்து அவர்களுக்கும் உரியவர்கள் மூலம் செய்தி அனுப்பிவிட்டு உபயதத்தனுக்கென்று அரண்மனைக்கருகிலேயே தனியாக இருந்த தன் சிறு மாளிகைக்கு கால் நடையாகவே புறப்பட்டான் உபயன்.

    தானேஸ்வர நான்கு தூண்களைப் போன்றவர்களில் மற்றொருவரான அரசவைக் கவிஞர், ஆசிரியர் பெருமகனார். பாணபட்டர் பெருமான் புருஷபுரம் சென்றிருந்ததால் அவருக்குத் தகவல் உடன் இல்லை. உபயன் திருமணமாகாத பிரம்மச்சாரி என்பதால் தனக்குறிய சிறு மாளிகையில் தனித்தே இருந்தான் என்றாலும் வேறு முக்கியமான பணிகள் இல்லாத அநேக சமயங்களில் படைவீரர்களுடன், மற்றும் துணைத் தளபதிகளுடன் பொழுதை வீரவிளையாட்டுகளிலேயே கழிப்பவன். சற்றும் சோம்பியிருக்காத கடமை வீரன் என்பதால்தான் இளம் பிராயத்திலேயே இராஜ்ய உபதளபதி பொறுப்பை மன்னர் பிரபாகவர்த்தனர் அளித்துவிட்டார்.

    மன்னவரின் லிகிதத்தை எடுத்துக் கொண்டு பயணப்பட்ட உபயதத்தன் கிட்டத்தட்ட பத்து தினங்கள் கழித்துத்தான் தானேஸ்வரம் திரும்ப முடிந்தது.

    மூன்று தினங்கள் வரை கன்னோசி மன்னவர் கிரகவர்மர் உபயனை தன்னுடனேயே இருத்திக் கொண்டார். அவருடைய அன்பிலும், உபசரிப்பிலும் திணறிப் போய்விட்டான் என்றே கூற வேண்டும். கன்னோசியில் மன்னருடன் அவன் சென்றாலும், தனித்து எங்கேனும் சென்றாலும் இராஜ்ய பிரதானிகள், மற்றும் மக்கள் யாவரும் அவனை மிக்க மதிப்பு, மரியாதையுடன் வரவேற்றார்கள்.

    மாமன்னவருக்காக, அவர் கேட்கக்கூடும் என்றே சில - பல தகவல்களை அறிந்து கொள்ளும் பொருட்டே சில சமயம் தனியாக புரவியிலும், கால் நடையாகவும் சென்றான். சென்றவிடமெல்லாம் உபயனுக்கு பெரும் சிறப்பே கிட்டியது. அந்த அளவுக்கு கன்னோசிக்காரர்கள் இந்த திருமண சம்பந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். தங்களின் கண்ணான மன்னவருக்கு தானேஸ்வரம் இந்த சம்பந்தம் மூலம் பெருமையளித்தது அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அதை தானேஸ்வர பிரதிநிதியான உபயன் மேல் காட்டவே செய்தார்கள்.

    தானேஸ்வரத்தை ஒப்பு நோக்கும் போது கன்னோசி சாதாரணம்தான் என்றாலும் கன்னோசிக் கோட்டையும், நகரமும் சிறப்பாகவே காணப்பட்டது. கங்கை நீரினால் செழிப்பாக உள்ள பிரதேசம். மக்களின் வாழ்க்கை நிலையும் நல்ல அளவில் இருந்தது. வீரம், விவேகம் நிறைந்த மன்னர், அன்பான குடி மக்கள். தானேஸ்வர இளவரசியார் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்தான் என்று எண்ணியவாறே தன் மாளிகையை அடைந்ததும், உடைகளைக் களைந்துவிட்டு, பயண அலுப்பு நீங்க நன்றாக ஆர அமர நிதானமாக நீராடிவிட்டு வந்தவன் பணியாட்கள் தயாராக வைத்திருந்த உணவு வகைகளை அவர்கள் பரிமாற உண்டுவிட்டு, தன் தனியறை மஞ்சத்தில் சாய்ந்தவனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

    எந்த நிலையில் தானேஸ்வரம் தான் வந்தது! இப்போது உள்ள நிலை என்ன என்பதை சிந்தனை அசை போட ஆரம்பித்தது.

    அத்தியாயம் - 2

    தானேஸ்வரத்தை தலைநகரமாகக் கொண்ட வர்த்தன இராஜ்யத்தின் இரண்டாம் தலைநகரமாகவும், முக்கிய வர்த்தக-யாத்ரிக கேந்திரமுமான இந்திரபிரஸ்தம் நகரின் நிர்வாகியாக உள்ள விஷ்ணுதத்தரின் ஒரே மைந்தன் தான் உபயதத்தன். தந்தை விஷ்ணுதத்தர் சிறந்த நகர நிர்வாகியாக இருந்தது மட்டுமல்ல, சிறந்த போர் வீரரும்கூட! ஆகவேதான் வர்த்தன இராஜ்ய மன்னர் பிரபாகவர்த்தனர் விஷ்ணுதத்தரை இந்திரபிரஸ்த நகரின் தலைமை நிர்வாகியாக நியமித்தார். அத்துடன் மேலும் ஒரு முக்கிய தகுதி விஷ்ணுதத்தருக்கு இருந்தது. வர்த்தன இராஜ்யத்தின் பிரதம தளபதியான சிம்மேந்திரரின் தங்கை கணவர் என்ற நிலையும் இந்திரபிரஸ்தம் தலைமை நிர்வாகியாக சாதகமாகி இருந்தது.

    விஷ்ணுதத்தருக்கோ தம்மைவிடவும் தம் மைந்தன் உபயதத்தன் சிறப்பாக வரவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக தம் வாழ்க்கைத் துணைவியின் சகோதரரான வர்த்தன இராஜ்ய பிரதம தளபதி சிம்மேந்திரரிடம் போர் பயிற்சி பெற பதினைந்தாவது பிராயத்திலேயே உபயதத்தனை அனுப்பிவிட்டார்.

    தாய்மாமன் வீட்டுக்கு வந்த உபயதத்தன் போர்ப்பயிற்சியுடன் வர்த்தன இராஜ்ய மூத்த இளவரசரும், அடுத்து பட்டத்துக்கு வரவேண்டியவரான இராஜ்யவர்த்தனனின் ஆத்மார்த்த ஆழ்ந்த நட்பையும் பெற்றுவிட்டான். மூத்த இளவரசர் இராஜ்யவர்த்தனனும் பிரதம தளபதி சிம்மேந்திரரிடம்தான் போர்ப் படைக்கலப் பயிற்சி பெற்றார். எனவே இளவரசர் இராஜ்யவர்த்தனர் தனக்கு இணையாகப் போர் பயிற்சி பெற்று வரும் உபயதத்தனை தன் நெருக்கமான நண்பனாக வரித்துக் கொண்டார்.

    தளபதி சிம்மேந்திரர் இருவருக்குமே கடுமையான போர்ப் பயிற்சிகள் அளிப்பார். எதிர்காலத்தில் வர்த்தன இராஜ்ய மன்னவராக பொறுப்பேற்க உள்ள இராஜ்யவர்த்தனனுக்கு துணையாக வர்த்தன இராஜ்ய தளபதியாக தனக்குப் பதிலாக தன் மருமகன் பொறுப்பேற்க வேண்டியே கடும் பயிற்சிகள் அளித்து தயார் செய்துவிட்டார். நல்ல வாட்பயிற்சியுடன் போர் நுணுக்கங்களையும் உபயனுக்கு சிம்மேந்திரன் கற்றுக்கொடுத்தார்.

    பிரதம தளபதி சிம்மேந்திரர் போரில் சிம்மம்தான். வாளெடுத்து போரிடும் அவரை வாள் வீச்சில் வெற்றி கொள்ள வர்த்தன இராஜ்யத்தில் எவரும் இல்லை. மைந்தனின் போர்ப் பயிற்சியைக் காணவரும் மன்னவர் பிரபாகவர்த்தனர் சமயத்தில் சிம்மேந்திரருடன் வாள்வீச்சு நடத்துவார். மன்னவரும்- தளபதியும் மோதும் போது இரு சிம்மங்கள் மோதுவது போன்று கம்பீரமான வாள்வீச்சாக இருக்கும். இருவரும் சம வயதுடையவர்கள் என்பதுடன் இருவரும் வாட்பயிற்சியை ஒருவரிடமேதான் பெற்றார்கள். போர்ப் பயிற்சியையும், நுணுக்கங்களையும் சிறப்பாகவே சிம்மேந்திரர் அறிந்திருந்ததால்தான் பிரபாகவர்த்தனர் பட்டத்துக்கு வந்ததும் வர்த்தன இராஜ்ய பிரதான தளபதியாக சிம்மேந்திரரை நியமித்துக் கொண்டார். மன்னவரின் அபிலாஷைகளுக்கேற்ப சிம்மேந்திரரும் சிறப்பாகவே செயல்பட்டார்.

    வர்த்தன இராஜ்யத்துக்கும், மன்னவர் பிரபாகவர்த்தனருக்கும் நற்சேவை புரிவதையே உயிர்மூச்சாக கொண்டார் சிம்மேந்திரர். இராஜ்யத்தை உருவாக்குவதில் மன்னவருக்கு உறுதுணையாக தளபதி செயல்பட்டு இராஜ்யத்தை ஸ்திரப்படுத்தினார். சிம்மேந்திரர் எனும் சிங்கத்திடம்தான் மூத்த இளவரசரும், உபயதத்தனும் போர்ப் பயிற்சி பெற்றார். இருவரும் வாளெடுத்து வீச்சில் ஈடுபட்டால் எளிதில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியாது. சளைக்காமல் இருவரும் போரிடுவார்கள். இதைக் கண்டு பெருமைப்படும் தளபதியார் தனக்குப் பிறகு வர்த்தன இராஜ்யத்தின் பிரதம தளபதியாக மருமகன் வளருமளவிற்கு உருவாக்கிவிட்டார்.

    அத்துடன் உபயதத்தனின் வாழ்க்கைத் துணைக்கும் ஒரே ஒரு மகளையும் ஈன்று வளர்த்து மணவினைக்கு தயாராக வைத்திருக்கின்றார். மணவினை செய்துவிடலாம் என்று எண்ணிய போது மன்னவர் உபயதத்தனின் திறமையை நன்கறிந்து அவனை உபதளபதியாக்கிவிட்டார். அது வரை உபதளபதியாகி இருந்தவர் உடல்நிலை காரணமாக விலகிவிடவே அந்த இடத்தில் உபயதத்தனை குறைவான பிராயத்திலேயே நியமித்துவிட்டார். உபதளபதி பொறுப்பு திடீரென்று வந்ததால் மாமன் மகளுடன் மணவினை தள்ளி வைக்கப்பட வேண்டியதாயிற்று. அதற்குள் இளவரசி இராஜ்யஸ்ரீயின் திருமண விஷயம் குறுக்கிட்டது. அது விஷயமாக கன்னோசி சென்று வெற்றிகரமாக திரும்பிவிட்டான் உபயன்.

    வர்த்தன இராஜ்ய இளவரசி இராஜ்யஸ்ரீக்கு பதினான்கு பிராயம்தான் என்றாலும் அவள் திருமணத்தில் சில சிக்கல்கள் காரணமாக சீக்கிரமே திருமணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. மாளவ தேசத்து அரசனான தேவகுப்தன் இராஜ்யஸ்ரீயின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவளை அடைய முயற்சிகள் செய்தான். மூத்த இளவரசர் இராஜ்யவர்த்தனர் தன் நண்பனும், கன்னோசி அரசருமான கிரகவர்மனே தன் தங்கை இராஜ்யஸ்ரீக்கு பொருத்தமான மணவாளன் என்று முடிவெடுத்து மன்னர் பிரபாகவர்த்தனரிடம் அதுபற்றி எடுத்துரைத்து, அது திருமண ஏற்பாடு வரை வந்துவிட்டது.

    அதுமட்டுமல்லாமல், மன்னர் பிரபாகவர்த்தனர் தம் மூத்த மைந்தன் இராஜ்யவர்த்தனுக்கு பட்டாபிஷேகம் செய்து இராஜ்யப் பொறுப்பை அளித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் விரும்பினார். பல போராட்டங்களுக்கு பிறகே வர்த்தன இராஜ்யம் தலைதூக்கியதால் போரை மன்னர் வெறுத்ததுடன் உடல்நல பாதிப்பும் ஓய்வை விரும்பக் காரணமாகியது. இராஜ்யவர்த்தனின் பட்டாபிஷேகம் நடைபெற வர்த்தன சம்பிரதாயப்படிஇளவரசருக்கு மணம் முடிக்க வேண்டும். சகோதரி பூப்பெய்துள்ளதால் கன்னி கழியாமல் சகோதரன் திருமணம் முடிக்க முடியாது என்ற சம்பிரதாயமும் இணைந்து இளவரசி இராஜ்யஸ்ரீயின் திருமணம் கன்னோசி மன்னர் கிரகவர்மருடன் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.

    திருமண விவரத்தை பட்டமகிஷியிடமும், தன் இரு மைந்தர்களான இராஜ்யவர்த்தனர் மற்றும் பதினைந்து பிராயம் முடியும் நிலையில் எப்போதும் துடிப்புடன் உள்ள ஹர்ஷவர்த்தனனிடமும் தெரிவித்தார். இராஜ்யவர்த்தனனுக்கும், பட்டமகிஷி யசோமதி தேவிக்கும் இந்த திருமணம் குறித்து வெகுமகிழ்ச்சியே! ஆனால் இளையவனான ஹர்ஷனுக்கு இந்த விரைவான திருமணம் மகிழ்ச்சியாக இல்லாமல் சங்கடத்தைக் கொடுத்து. காரணம் தங்கை மேல் அவன் கொண்டிருந்த அதீதமான பாசம்தான். இத்தனை இளவயதிலேயே தங்கையைப் பிரிய மனம் ஒப்பவில்லை.

    எனவே மன்னரிடம் தந்தையே! இவ்வளவு விரைவாக தங்கைக்கு திருமணம் செய்தே ஆக வேண்டுமா? இன்னும் காலம் தாழ்த்தி ஏற்பாடு செய்யக்கூடாதா? என்று கேட்ட ஹர்ஷனிடம்

    ஹர்ஷா! இது பற்றி உனக்குத் புரியாது, நீ சிறுவன். இதில் சில சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக மாளவ தேசத்து அரசன் தேவகுப்தன் இளவரசியை அடைய வெகுவான ஆசை கொண்டு தூது அனுப்பியுள்ளான். அதை யாம் மறுத்துவிட்டோம். வீணாக திருமணத்தை தள்ளிப் போடுவதால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகும். அத்துடன் இராஜ்யத்தை உன் அண்ணன் இராஜ்யவர்த்தனனிடம் ஒப்புவித்துவிட்டு ஓய்வு கொள்ளவும் எண்ணம் உள்ளது.

    தந்தையின் பதில் இளையவனுக்கு திருப்தியாக இல்லை. அவனுக்கு தங்கையைப் பிரிவதில் மனம் வேதனைப்பட்டது. சிறுவன்தானே! பிராயம் பதினாறு தொடங்க உள்ளது என்றாலும் ஹர்ஷன் இப்போதே வாள்வீச்சில் தன் அண்ணனுக்கு இணையாகவே இருந்தான். அவருக்கும் ஆரம்ப குரு தளபதி சிம்மேந்திரர்தான் என்றாலும் தற்போது அவன் போர்ப் பயிற்சி உபதளபதி உபயதத்தனிடம்தான். அரண்மனை நந்தவனத்தில் இராஜ்யஸ்ரீ மற்றும் அவருடைய நெருங்கிய தோழியும், தளபதி சிம்மேந்திரரின் திருக்குமாரியும், உபதளபதி உபயதத்தனின் வருங்கால துணைவியுமான பவளவல்லி ஆகிய இருவரின் எதிரிலும் பயிற்சி நடைபெறும்.

    சின்ன அண்ணனின் வாட்பயிற்சி திறமையை இராஜ்யஸ்ரீ இரசிக்க, தன் வருங்கால மணவாளரின் பயிற்றுவிக்கும் திறமையை பவளவல்லி இரசிக்க பயிற்சி நல்லமுறையில் நடைபெற்றுக் கொண்டு வந்தது.

    நாளுக்கு நாள் ஹர்ஷன் படைக்கல பயிற்சிகளை மிகச்சிறப்பாக கற்றுக் கொண்டு வருவதைக் கவனித்த உபயதத்தன் தன் மாணாக்கன் தன்னைவிடவும் மிஞ்சிவிடுவான் என்று திருப்தியுடன் கற்பித்தான்.

    மன்னவர் திருமண விஷயத்தை அந்தப்புரத்தில் தெரிவித்துவிட்டு அது சம்பந்தமான மேற்பணிகள் பொருட்டு சென்ற பின், ஹர்ஷனுக்கு மனம் சமாதானம் அடையவில்லை. மன்னவர் முடிவெடுத்து லிகிதம் அனுப்பி, சம்மதம் தெரிவித்து ஏற்றுக் கொள்ள, லிகிதம் வந்த பின் இனி மாற்றம் என்பதற்கு இடம் இல்லை. மனக்குழப்பம் தீர தங்கையிடமாவது பேசிக் கொண்டிருக்கலாம் என்றெண்ணி, இந்த நேரத்துக்கு தங்கை நந்தவனத்தில்தான் தோழிகளுடன் இருப்பாள் என்று நினைத்து வந்தவன், அங்கே நடந்து கொண்டிருந்த உரையாடல்களைக் கேட்டு சிரித்துக் கொண்டான்.

    நந்தவனத்திலே தோழிகள் இராஜ்யஸ்ரீயை கேலி செய்து பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் கேலியான பேச்சைக் கேட்டு இராஜ்யஸ்ரீ நாணத்துடன் முகம் சிவக்க உட்கார்ந்திருந்தாள்.

    கன்னோசி மன்னவர் பெரிய வீரராமே! உனக்கு தெரியுமா பவளவல்லி? என்று ஒருவள் கேட்க-

    எனக்கெப்படியம்மா தெரியும்? நானா லிகிதம் எடுத்துக் கொண்டு கன்னோசி சென்றேன்? என்று வல்லி மறுமொழி சொல்ல-

    உன் வருங்கால கணவர்தானே கன்னோசிக்கு லிகிதம் கொண்டு சென்று பதிலுடன் வந்தவர்.. உன்னிடம் சொல்லாமலா இருப்பார்? என்று ஒருவள் கூற-

    அடிப்போடீ! உபதளபதியே மாலையில்தான் கன்னோசியிலிருந்து திரும்பி வந்துள்ளார். இவளோ இங்கே நம்முடன்தானே இருக்கிறாள். ஒருக்கால் இரவு சொன்னாலும் சொல்வார் என்று மற்றொருவள் கூற-

    எது எப்படியோ! மாபெரும் வீரரின் துணைவியாகி, பெரிய இராஜ்யத்தின் மகாராணியான பிறகு, அங்கு சென்றதும் நம்மையெல்லாம் மறந்துவிடுவார் என்று ஒருவள் கூற-

    ஏய் நிறுத்தடீ! நமது இராஜ்யத்தைவிடவா அது பெரிய இராஜ்யம்? என்று ஒரு தோழி வினவ-

    ஏன்.. பெரிய இராஜ்யமில்லையா? நீதான் கண்டாயோ? என்று தன்னையறியாமல் இராஜ்யஸ்ரீ கேட்க-

    பார்த்தாயா.. இப்போதே இளவரசியாருக்கு தன் நாடாகப் போகும் கன்னோசி மேல் எவ்வளவு பற்று! அங்கே சென்றதும் எப்படி மாறிவிடுவாரோ என்று கூறினாள் வல்லி.

    இவர்களின் பரிகாச உரையாடலை அங்கு வந்த ஹர்ஷன் கேட்டதும், தங்கைக்கும் இந்த அவசர திருமணத்தில் விருப்பமான சம்மதம் இருப்பதை உணர்ந்து கொண்டவன், அவர்களின் கேலிகளுக் கிடையில் நுழைந்து தடை செய்ய எண்ணாமல் அரண்மனையைவிட்டு வெளியேறி நகரில் உலவி வரலாம் என்று புறப்பட்டான்.

    ஹர்ஷனின் வழக்கமே இப்படித்தான். தான் இளவரசன் என்று எண்ணாமல் சகஜமாக தானேஸ்வர நகரின் மூலை முடுக்குகள் என்று எங்கு வேண்டுமானாலும் சென்று வருவான். சாதாரண காவலர் முதல் பொதுமக்கள் வரை எவருடனும் சகஜமாகப் பேசுவான். அவர்களைப் பற்றிய விவரங்களை அக்கரையுடன் கேட்டறிவான். இப்படி ஹர்ஷன் அனைவரிடமும் சகஜமாகப் பேசுவதால் எல்லோருக்கும் அவன் மேல் பற்றும் மதிப்பும் விசுவாசமும் சற்றுக் கூடுதலாகவே இருந்தது. பிற்காலத்தில் ஹர்ஷவர்த்தனரான போது இந்த செளஜன்யம் அவனுக்கு பெரும் உதவியாக இருந்தது.

    அன்றைய தினமும் வெளியே புறப்பட்டவன் பலத்த சிந்தனையுடன் சென்றதில் காவலர்கள் தலைவணங்கி வணக்கம் செய்ததையும் கவனிக்காமல் சென்றவன் உபதளபதி உபயதத்தனின் மாளிகை அருகில் வந்ததும் சட்டென உணர்ந்து ஆசிரியரிடமாவது சற்று நேரம் உரையாடிக் கொண்டிருக்கலாம் என்று மாளிகையினுள் நுழைந்தான்.

    இளவரசர் வருவதைக் கவனித்த காவலன் வணங்கி வருகையை உபதளபதிக்கு தெரிவிக்கும் பொருட்டு உள்ளே விரைந்தான்.

    அப்போதுதான் பணியாட்கள் கொண்டு வந்து வைத்த உணவை உண்டு முடித்து பஞ்சணையில் சாய்ந்த உபயன் சிந்தனைகளை பின்னோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். காவலன் சொன்ன செய்தியைக் கேட்டதும் இளவரசரைச் சந்திக்க வெளியே வந்தான்.

    வரவேண்டும்! வரவேண்டும்! என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே! எளியேனின் இருப்பிடத்துக்கு தாங்களே வரவேண்டுமா?

    "எளியவரா! என்ன தளபதியவர்களே! உங்கள் மதிப்பைத் தாங்களே குறைத்துக் கொள்ளுகின்றீர்கள். ஒரு எளியவரையா என் தந்தையார் தானேஸ்வர தளபதியாகவும், என்

    Enjoying the preview?
    Page 1 of 1